சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 5,892 
 
 

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

“சா¢,நீங்க உங்க பொண்ணைப் பத்தி ஒரு புகார் குடுத்துட்டுப் போங்க.அவ குடிசையை விட்டு ஓடிப் போகும் போது அவ என்ன கலர் ‘டிரஸ்’ போட்டுக் கிட்டு இருந்தா.அவ பாக்க எப்படி இருப்பா, அவ உடம்பு கலர் என்ன,என்கிற எல்லா விவரத்தையும் விவரமா எழுதுக் குடுங்க.சமீபத்திலே எடுத்த அவ போட்டோ ஒன்னையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு குடுங்க.நாங்க அவளைத் தேடி பாக்க சௌக ரியமா இருக்கும்” என்று சொல்லி அங்கு உட்கார்ந்துக் கொண்டு இருந்த ஏட்டைப் பாத்து “ஏட் 804, இவங்க பொண்ணு செந்தாமரைன்னு பேரு.அந்தப் பொண்ணு அவங்க குடிசையை விட்டு இன்னை க்கு சாயங்காலம் ஆறு மணிக்கு அப்புறமா காணோம்மா.நீங்க அவங்க அந்தப் பொண்ணைப் பத்தி அவங்க சொல்ற எல்லா விவரங்களையும் ஒரு ‘ரிப்போட்டிலே’ எழுதிக்குங்க” என்று சொன்னதும் அந்த ஏட் தேவியும் ராஜ்ஜும் சொன்ன எல்லா விவரங்களையும் ஒரு ‘ரிப்போட்டாக’ எழுதிக் கொண் டார். ‘ரிப்போர்ட்’ எழுதி முடிஞ்சதும் தேவி அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டே வந்து ”சார்,நான் குடிசைக்குப் போய் அவ போட்டோ ஏதாச்சும் இருந்தா கொண்டு வந்து தாறேன்.எனக்கு ஞாபகம் இருக்கிற வரைக்கும் அவ இப்ப சமீபத்திலெ எடுத்த போட்டோ எதுவும் இல்லீங்க.நாங்க ரொம்ப எழை ங்க.தினக் கூலி செஞ்சு வந்து வாழக்கை நடத்தி வரோமுங்க”என்று சொன்னாள் தேவி.உடனே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவியைப் பார்த்து “ஏம்மா,அவ போட்டோ இருந்தாத் தான் எங்க ‘பீட்’ கான் ஸ்டபிள்களுக்கு அவங்க ரோந்து வரும் போது உங்க பொண்ணை அடையாளம் கண்டு பிடிக்க சௌ கா¢யமா இருக்கும்.நீங்க என்னடான்னா அவ சமீபத்திலெ எடுத்த போட்டோ இல்லேன்னு சொல்றீங் ளேங்க.போட்டோ இல்லாமல் எங்களால் உங்க அடையாளம் பொண்ணை கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டமா இருக்குமேங்க” என்று சொல்லி வெறுத்துக் கொண்டு,”நீங்க தினமும் இந்த நேரத்துக்கு இங்கே வந்து விசாரிச்சுக்கிட்டுப் போங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் அந்த இன் ஸ்பெக்டர்.வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த ரத்தினம் ராஜ்ஜையும் தேவியையும் வருவ தைப் பார்த்ததும் “என்ன ராஜ்,செந்தாமரை கிடைக்கலையா.எங்கே போய் விட்டாடா அவ.மணி ஒன்பதுக்கு மேலே ஆவப் போவுதே” என்று ‘ஓ’ என்று கத்திக் கொண்டே கேட்டாள்.“எங்கே தேடியும் செந்தாமு கிடைக்கலே.நாங்க ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டெஷனுக்குப் போய் ஒரு புகார் குடுத்து விட்டு வந்து இருக்கோம்.அந்த இன்ஸ்பெக்டர் நம்ம செந்தாமுவைப் பத்தி எல்லா விவரமும் சொல்லச் சொன்னார். அங்கு இருந்த ‘ஏட்’ ஐயா நானும் தேவியும் சொன்ன எல்லா விவரங்களையும் ஒரு காகிதத்திலே எழுதி கிட்டாரும்மா.அந்த இன்ஸ்பெக்டர் சீக்கிரமா நம்ம செந்தாமுவை தேடி கண்டு பிடிச்சுக் குடுக் கிறதா சொல்லி இருக்காரு”என்று அழுதுக் கொண்டே சொன்னான்.அடுத்த நாள் காலையிலே இருவரும் வேலைக்கு கிளம்பின பிறகு ரத்தினம் கிளம்பிப் போய் கமலாவை பார்த்து விட்டு செந்தாமரை மேலே படிக்கிறேன்னு சொன்னதையும்,அதுக்கு தேவி வேணா¡ன்னு சொன்னதையும் சொல்லி,அதனால்லே அவ குடிசையை விட்டு ஓடிப் போன சமாசாரத்தையும் சொல்லி, ராஜ்ஜும் தேவியும் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு ‘ரிப்போர்ட்’ குடுத்து விட்டு வந்து இருக்கும் விவரத்தையும் சொல்லி அழுதாள்.உடனே கமலா ”ஐயையோ,நீங்க என்ன சொல்றீங்க ஆயா.நம்ம செந்தாமு குடிசையை விட்டு ஓடிப் போயிட்டாளா.நம்மை எல்லாம் விட்டு விட்டு ஓடிப் போக அவளுக்கு எப்படி மனசு வந்தது ஆயா.அம்மாவும் அப்பாவும் அவ பேர்லெ எவ்வளவு ஆசையா இருந்தாங்க.அவ எங்கே போயிருப்பா.அவ வயசுப் பொண்ணாச்சே ஆயா.பாக்க வேறே செந்தாமு நல்ல கலரா,ரொம்ப அழகா, வேறே இருப்பாளே ஆயா.எவனையாவது நம்பி ஏமாந்து போயிடப்போறா..எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லிக் கவலைப் பட்டாள் கமலா.

கால் டாக்சியில் மதுரைக்கு வந்து சேர்ந்த கணபதி,டிரைவருக்கு பணத்தை கொடுத்து விட்டு, தன் மணைவி சாந்தாவையும், செந்தாமரையையும் அழைத்து கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்தார். செந்தாமரை அந்த வீட்டைப் பார்த்தாள்.வீடு சின்னதாய் இருந்தாலும் வீடு பூராவும் பல அலமாரி களில் பல வித கணக்குப் புஸ்தகங்ககளும்,பல இங்கிலிஷ் நாவல்களும் ‘சயன்ஸ்’ சம்மந்தமான புஸ்தங்களும் அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது.அவைகளைப் பார்த்த செந்தாமரைக்கு சந்தோஷம் தாங்கவில்லை.வீட்டுக்குள்ளே வந்த செந்தாமரை கணபதியின் கால்க¨ளையும், சாந்தாவின் கால்க ளையும் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு “எனக்கு இந்த நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்து இருக்கிற நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு கடவுளுங்க.நான் தினமும் வேண்டி வரும் பிள்ளியார் பேரைத் தான் நீங்களும் வச்சு இருக்கீங்க.கடவுள் தான் அப்பா அம்மாமாதிரிங்க.அதனால் லே இன்னியில் இருந்து நான் உங்க ரெண்டு பேரையும் அப்பா அம்மான்னு கூப் பிடட்டுமா” என்று என்று கேட்டு விட்டு அவர்கள் பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.உடனே சாந்தா ”செந்தாம ரை,நீ எங்களை உன் இஷ்டம் போல ‘அம்மா’ ‘அப்பா’ ன்னே கூப்பிடும்மா.எனக்கும் அவருக்கும் அப்படி நீ கூப்பிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்று சொன்னதும் செந்தாமரை உடனே “சா¢ம் மா” என்று சொன்னாள்.கணபதி ஒன்னும் சொல்லாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தார். செந்தாமரை உடனே “அப்பா,நம்ம வீட்டிலே நீங்க இவ்வளவு புஸ்தங்க¨ளை வச்சு இருக்கீங்க ளே.இந்த மாதிரி புஸ்தங்களை எல்லாம் நான் என் பள்ளிக் கூட ‘லைப்ரா¢யிலெ’ தான் பார்த்து இருக் கேன்”என்று ஆச்சா¢யத்தோடு சொன்னாள்.உடனே கணபதி ”ஆமாம் செந்தாமரை,எனக்கு நான் படிச்ச புஸ்தங்களை கடையிலெ போட்டு பணம் ஆக்கணும் என்கிற எண்ணமே கிடையாது.புஸ்தங்கள் எல்லாம் சரஸ்வதிக்கு சமானம்.நான் அவைகளை என் கண்கள் போல பாவித்து வந்து அப்படியே அலமாரியிலே வச்சு இருக்கேன்.உனக்கு நேரம் கிடைக்கும் போது உனக்கு எந்த புஸ்தகம் பிடிக்கு தோ அதை எடுத்து நீ நிதானமா படிச்சு வரலாம்”என்று சொன்னார்.கொஞ்ச நேரம் ஆனதும் சாந்தா செந்தாமரையைப் பார்த்து “நீ இந்த ரூம்லெ தங்கிக்க செந்தாமரை.இந்த ரூம் காலியாத் தான் இருக்கு” என்று சொல்லி விட்டு காலியாக இருந்த ஒரு பெட் ரூமைக் காட்டினாள்.உடனே செந்தாமரை “ரொம்ப நன்றிம்மா உங்களுக்கு.நான் இந்த ரூமிலெ இருந்து வறேம்மா” என்று சொல்லி விட்டு அந்த ரூமுக்கு போய் தன் பெட்டியை வைத்தாள்.சாந்தா காட்டின ரூமில் தன் பெட்டியை வைத்து விட்டு, அதில் இருந்த பிள்ளையார் படத்தை எடுத்து அந்த ரூம்லே இருந்த ஒரு ஆணியிலே மாட்டி விட்டு பிள்ளையாரை வேண்டிக் கொண்டு,அந்த ரூமை விட்டு வெளியே வந்தாள் செந்தாமரை.

சாயங்காலம் கணபதி டீயையும் பிஸ்கெட்டையும் சாப்பிட்ட பிறகு சாந்தாவைப் பார்த்து “சாந் தா,செந்தாமரை போட்டு இருக்கிற ‘டிரஸ்’ எல்லாம் சாயம் போய் ரொம்ப பழசா இருக்கு.நாம அவளு க்கு ஒரு நாலு நல்ல ‘டிரஸ்ஸா’ வாங்கித் தரலாம் னு நினைக்கிறேன்.நாம கடைக்குப் போய் வரலாமா சாந்தா” என்று கேட்டதும் சாந்தா “நிச்சியமாக நாம் செந்தாமரைக்கு நல்ல புதுசா நாலு ‘டிரஸ்’ வாங்கித் தரலாங்க.கூடவே எனக்கும் கொஞ்சம் நம்ம வீட்டுக்கு சில துணிகள் வாங்கி வரணும் செந்தாமரைக்கு ‘டூத் ப்ரஷ்’, ‘பேஸ்ட்’, உடம்பு துடைச்சுக்க கொள்ள டவல்,சீப்பு எல்லாம் வாங்கிக் கொண்டு வரணுங்க.நான் பத்து நிமிஷத்திலே ‘டிரஸ்’ மாத்திக் கிட்டு வறேனுங்க.நாம மூனு பேரும் கடைக்குப் போய் வரலாங்க”என்று சொல்லி விட்டு சாந்தா பெட் ரூமுக்குப் போய் தன் டிரஸ்ஸை மாத்திக் கொண்டு வந்தாள்.மூனு பேரும் கிளம்பிப் ஒரு பெரிய துணிக் கடைக்குப் போய் செந்தாமரை க்கு பிடிச்சா மாதிரி நாலு புது டிரஸ்களையும்,சாந்தாவுக்கு வேண்டிய மத்த துணிகளையும்,செந்தாம ரைக்கு சாந்தா சொன்ன எல்லா ‘ஐட்டங்களையும்’ வாங்கிக் கொண்டு அப்படியே வரும் வழியில் ஒரு ஹோட்டலில் ராத்திரி சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

கணபதி மதுரையிலேயே வசித்து வரும் தன் அப்பா,அம்மாவுக்கும், மாமனார், மாமியாருக்கும், சென்னையிலே நடந்த எல்லா விஷயங்களைச் சொல்லி, தான் ஒரு ஏழைப் பெண் செந்தாமரையை படிக்க வைக்க தங்களுடன் அழைத்து வந்து இருக்கும் சமாசாரத்தை சொன்னான்.அவர்களும் உடனே கணபதியின் வீட்டுக்கு வந்து செந்தாமரையை பார்த்து அவ கூடகொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு அவளைப் பார்த்து “செந்தாமரை, நீ நல்லாப் படிச்சு வந்து கணக்கிலே ஒரு
பட்டதாரியாக ஆகணும்மா” என்று வாழ்த்தி விட்டுப் போனார்கள்.

சாயங்காலம் குடிசைக்கு வந்ததும் தேவியும், ராஜ்ஜும், போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இன்ஸ் பெக்டரை பார்க்கப் போனார்கள்.ராஜ்ஜையும் தேவியையும் பார்த்த இன்ஸ்பெக்டர் அவர்களை பார்த்து “எங்க ‘பீட்’ காண்டபிள்கள் எல்லாம் நிறைய இன்னைக்கு சென்னை பூராவும் தேடிப் பாத்தாங்க. அவங்க கண்லே உங்க பொண்ணு தென்படவே இல்லேன்னு வந்து சொல்லிட்டாங்க.இன்னும் ரெண்டு நாள் பாக்கலாம்.நீங்க தினமும் இந்த மாதிரி ஸ்டேஷனுக்கு வந்து விசாரிச்சு கிட்டு போங்க. நான் ஸ்டேஷன்லே இல்லாகாட்டியும் பரவாயில்லை.’ஏட்’ ஐயா எப்பவும் இங்கே இருப்பாரு அவர் உங்களுக்கு பதில் சொல்லுவாரு.எனக்கு கொஞ்சம் வெளியிலே வேலை இருக்கு.நான் போய் வறேன்” என்று சொல்லி விட்டு தன் தொப்பியை எடுத்துப் போட்டுக் கொண்டு ஸ்டேஷன் வாசலில் காத்துக் கொண்டு இருந்த ஜீப்பில் ஏறிக் கொண்டு போய் விட்டார்.ராஜ்ஜுக்கும் தேவிக்கும் ரொம்ப ஏமாற்ற மாய் போய் விட்டது.கொஞ்ச நேரம் ஆனதும் அந்த ஏட் ”ஏங்க, உங்க மக எந்த பள்ளீகூடத்துலே மேலே படிக்கணும்ன்னு ஆசைப்பட்டா” என்று கேட்டதும் ”அவ நுங்கம்பாக்கம் ‘ஹை ஸ்கூல்லே மேலே படிச்சு ‘பாஸ்’ ஆசை பட்டாங்க.நாங்க வேணாம்ன்னு சொல்லிட்டோம்ங்க” என்று அழுதுக் கொண்டே சொன்னாள் தேவி.தேவி சொன்னதைக் கேட்ட அந்த ‘ஏட்’ ”சா¢ங்க, நாங்க அந்தப் பள்ளிக் கூடத்துக்கு போய் விசாரிச்சு பாக்கறோம்.அவங்க உங்க பொண்ணு செந்தாமரையை பத்தி ஏதாச்சும் சொன்னாங்கன்னா,நாங்க உங்களுக்கு அந்த தகவலை சொல்கிறோம்.அது வரை நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையாத் தான் இருந்து வர வேணும்”என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.உடனே ராஜ்ஜும் தேவியும் அந்த ஏட்டுக்கு “நாங்க ரெண்டு பேரும் அவ பேர்லே உசிரையே வச்சு இருக்கோமுங்க.கொஞ்சம் நல்ல சேதியா சொல்லுங்க.உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுங்க” என்று தங்கள் கையைக் கூப்பி சொல்லி விட்டு போலீஸ் ஸ்டேஷனை விட்டு குடிசைக்கு வந்தார்கள்.அடுத்த நாள் காலையிலே அந்த ‘ஏட்’ நுங்கம்பாக்கம் ஹைஸ்கூலுக்கு போய் செந்தாமரையை பத்தி ஒரு புகார் எழுதி பிரின்சிபால் கிட்டே கொடுத்து விட்டு வந்தார்.

நிறைய வீடுகள் விலை போகாததால் வீடுகள் ரொம்ப தேக்கமாக இருந்து வந்தது.வீட்டுக்கு ‘அடவான்ஸ்’ கொடுத்தவங்க அடுத்த ‘பேமண்ட்டை’ பண்ணாம இருந்து வந்ததால், ராஜ்ஜுக்கு அந்த ‘கன்ட்ராக்டர்’ தச்ச வேலையே தராமல் இருந்து வந்தார்.ராஜ் தினமும் ‘சைட்டுக்கு’ப் போய் வெறுமனே குடிசைக்குத் திரும்பி வந்துக் கொண்டு இருந்தான்.அவனுக்கு நாளுக்கு நாள் வெறுப்பு தான் அதிகம் ஆகி வந்துக் கொண்டு இருந்தது. இதே போல் சேகருக்கும் அந்த கன்ட்ராக்டர் ‘டைல்ஸ்’ வேலையே தாராமல் இருந்து வந்தார்.இதனால் ராஜ்ஜும் சேகரும் ‘சைட்டிலெ’ வெறுமனெ ஆடு புலி ஆட்டம்,ஆடி வந்துக் கொண்டு,மாமனார்,மாப்பிள்ளை என்கிற உறவு போதாதேன்று இப்போ ரொம்ப நெருங்கின நண்பர்கள் ஆகி விட்டாங்க.ஒருவருக்கு கொஞ்சம் பணம் கிடைச்சா, அவங்க மனசிலே இருந்து வந்த வெறுப்பை மறக்க ரெண்டு பேரும் குடிக்க ஆரம்பித்தார்கள்.‘ரெண்டு நாள் ஆகி விட்டதே நாம போலீஸ் ஸ்டேஷனக்குப் போய் விசாரிச்சு விட்டு வரலாம்’ என்று நினைத்து குடிசைக்கு வந்த தேவி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரிச்சு வர தன்னைத் தயாராக்கிக் கொ ண்டு குடிசை வாசலிலே காத்துக் கொண்டு இருந்தாள்.ராஜ்ஜும் சேகரும் குடித்து விட்டு,தள்ளா டிக்கொண்டே வந்து கொண்டு இருந்தார்கள்.குடிசை வாசலில் தேவி நின்று கொண்டு இருப்பதைப் தூரத்திலேயே பார்த்து விட்ட சேகர் “மேஸ்திரி,நான் இப்படியே என் குடிசைக்குப் போறேன் நீங்க பாத்து மெதுவா உங்க குடிசைக்கு போங்க”என்று சொல்லி விட்டு நழுவ பார்த்தான்.ஆனால் தேவி யைக் கவனிக்காத ராஜ் சேகர் கையைப் பிடித்து இழுத்து “வா சேகர்,என் குடிசை வரைக்கும் நீ வா. அப்புறமா நீ உன் குடிசைக்கு போ” என்று சொல்லி சேகர் கையைப் பிடித்து இழுத்தான்.ஆனால் சேகர் ”எனக்கு வேறே வேலை இருக்கு மேஸ்திரி,நான் நாளைக்கு வறேன்” என்று சொல்லி விட்டு வேறு வழியாக அவன் குடிசைக்குப் போனான்.ராஜ் கொஞ்சம் அதிகமா குடித்து இருந்ததினால் அவன் மயக்கத்தில் நடந்து வந்து கால் தடுக்கி அவன் குடிசை வாசலிலேயே விழுந்து விட்டான்.உடனே தேவி ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து ராஜ் மேலே ஊத்தினாள்.குடிசைக்குள் இருந்து இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ரத்தினம் வெளியே ஓடி வந்துப் பார்த்தாள்.அவளுக்கு கோவம் கோவமாக வந்தது.கோவத்தில் ரத்தினம் தேவியைப் பார்த்து “ஏன் என் பிள்ளை மேலே இப்படி ஒரு வாளித் தண்ணியேக் கொட்டினே.உனக்கு என்ன பயித்தியமா பிடிச்சு இருக்கு” என்று கத்தினாள். “பாருங்க உங்க அருமைப் பிள்ளையை.குடிச்சு விட்டு குடிசை வாசலிலே எப்படி விழுந்துக் கிடக்க றாருன்னு.என் தலை விதியைத் தான் நான் நொந்துக்கணும்.செந்தாமரை குடிசையை விட்டு ஒடிப் போய் இருக்காளே,ரெண்டு நாள் ஆச்சே,அவளை பத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விசாரிச்சு வரணும்ன்னு கவலை ஏதாச்சும் இருக்கா உங்க பிள்ளைக்கு.அந்த சேகரோடு சேந்து குடிச்சி விட்டு இப்படி குடிசை வாசலிலே விழுந்து கிடக்கறாரு.அவர் மேலே தண்ணியை ஊத்தாம அவருக்கு என்ன ஆர்த்தி எடுக்க சொல்றீங்களா.பணக் கஷ்டத்தால் என் அம்மா உங்க பிள்ளையை என் தலையிலே கட்டினாங்க.வேறு வழி இல்லாம நான் என் தலையை நீட்டினேன்.இன்னைக்கு இப்படி திண்டாட றேன்”என்று சொல்லி விட்டு தன் தலையில் அடித்துக் கொண்டு தேவி தனியே போலீஸ் ஸ்டேஷனு க்குப் புறப்பட்டாள்.ரத்தினம் ராஜ்ஜை மெல்ல எழுப்பி குடிசைக்குள் அழைத்து வந்து அவன் மயக்கம் தெளிஞ்சதும் அவனுக்குத் தட்டைப் போட்டு சாப்பாடு போட்டாள்.சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ரத்தினமும் ராஜ்ஜும் படுக்கப் போய் விட்டார்கள்.

போலீஸ் ஸ்டேஷேஷனுக்கு போன தேவியைப் பார்த்து ”அம்மா, உங்களைப் பாத்தா ரொம்ப பரிதாபமா இருக்கும்மா.நான் நீங்க சொன்னா மாதிரி அந்த நுங்கம்பாக்கம் ‘ஹை ஸ்கூலுக்கு’ப் போய் ஒரு ‘கம்ப்லெயிண்ட்’குடுத்து இருக்கேன்ம்மா.பாக்கலாங்க.நீங்க உங்க குடிசையிலேயே இருந்து வாங்க.உங்க பொண்ணைப் பத்தி ஏதாச்சும் விஷயம் தொ¢ஞ்சா நாங்களே உங்க குடிசைக்கு வந்து சொல் றோம்.உங்க குடிசை ‘அட்ரஸ்’ தான் நீங்க எழுதி எங்க கிட்டே கொடுத்து இருக்கீங்களேங்க” என்று சொல்லி தேவியை அனுப்பி விட்டார் அந்த ‘ஏட்’.தேவிக்கு வருத்தத்துடன் தன் குடிசைக்கு வந்து சேர்ந்தாள்.

ஒரு வாரம் ஆயிற்று.ராஜ் இனிமே தனக்கு அந்த ‘கன்ட்ராக்டர்’ வேலை தருவார் என்கிற நம்பிக்கையே இல்லை.சகர் வேலைக்குப் போய் சம்பாதித்து வராததால் கமலா குடிசையில் வறுமை தாண்டவமாடத் தொடங்கியது.மூனு பேரும் வெறுமனே ஒரே ஒரு வேளை கேழ்வரகு கஞ்சியை மட்டும் குடித்து வந்தார்கள்.குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்கக் கூட அவர்களிடம் பணம் இல்லாமல் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு வந்து கொண்டு இருந்தார்கள்.கமலா யோஜனைப் பண்ணி னாள்.அவள் தன் குழந்தைக்கு பணம் வேண்டி இருந்ததால் ஒரு சித்தாள் வேலைக்குப் போய் வர நினைத்தாள்.தன் புருஷனிடமும்,தன்அத்தையிடமும் ஒரு நாள் கமலா “இதோ பாருங்க.நாம தின மும் இந்த மாதிரி ஒரு வேளை கேழ்வரகு கஞ்சியைக் குடிச்சிக் கிட்டு வரலாம்.ஆனா குழந்தை பால் குடுக்காம இருக்க முடியாது.குழந்தைக்கு பால் வாங்க நம்ம கையிலே பணம் இல்லே.அதனாலே நான் நாளைலே இருந்து எங்க அம்மா கூட ஒரு சித்தாள் வேலைக்கு போய் வரலாம்ன்னு இருக்கேன்” என்று சொல்லி வாயை மூடவில்லை,உடனே சேகர் “அதெல்லாம் வேணாம் புள்ளே.நீ வேலை செஞ்சு வர ‘சைட்டிலே’ இருக்கிற எந்த மேஸ்திரியாவது உன்னை ‘சின்ன வீடா’ ‘செட் அப்’ பண்ணிக்கிடு வான்.இப்போ எனக்கு வேலை மட்டும் தான் இல்லே.பொண்ஜாதியும் இல்லாம ஆயிடும்.நீ சித்தாள் வேலைக்குப் போவ வேணாம்.நான் சொல்றதே கொஞ்சம் கேளு” என்று கத்தினான்.உடனே செங்கம லம் ”சேகர், அவ சொல்றது ரொம்ப சா¢டா.நானே அதை அவ கிட்டே சொல்லலாம்ன்னு இருந்தேன்.நீ இன்னும் எத்தினி நாளைக்கு வேலை இல்லாம வந்துக் கிட்டு இருப்பியோ தொ¢யாதேடா.அது வரைக்கும் அவ கொஞ்சம் பணம் சம்பாதிச்சு வந்தா குடும்பத்துக்கு உபயோகமா இருக்குமேடா.அவ சித்தாள் வேலை க்குப் போய் வரட்டும்டா” என்று ஒரு எதிர் கத்தல் போட்டாள்.ஒரு ஐஞ்சு நிமிஷம் கழித்து சேகர் ”அம்மா அவ சித்தாள் வேலைக்குப் போனா கமலா வேறே ஆள் கிட்டே “கை மாறி விட்டா” நான் என்ன செய்வேம்மா.என் வாழ்க்கையே வீணாகி விடுமேம்மா” என்று அமமா கையைப் பிடிச்சி கெஞ்சினான்.சேகர் சொன்னதைக் கேட்டதும் கமலாவுக்கு ரொம்ப கோவம் வந்தது.உடனே கமலா “வாயை மூடுங்க.நான் உங்கே குழந்தைக்கு பால் வாங்கவே பணம் இல்லென்னு சொல்லி சித்தாள் வேலைக்கு போயாறேன்னு சொல்றேன்.நீங்க என்னடான்னா அந்த மேஸ்திரி என்னை ‘சின்ன வீடா’ ‘செட் அப்’ பண்ணிக்கிடுவான்னு நினைச்சி பயப்படறீங்க.அந்த மேஸ்திரி என்னை ‘சின்ன வீடா’ ‘செட் அப்’ பண்ண நான் ஒன்னும் ஒரு ஆம்பளைக்காக ஏங்கிக் கிட்டு இல்லீங்க. நானும் உங்க கூட வாழ்ந்து வந்து இந்தக் குழந்தையைப் பெத்துக் கிட்டு இருக்கேங்க.எனக்கு இப்போ குழந்தை தினமும் பால் வாங்கி குடுக்க பணம் தாங்க வேணும்.ஒரு ஆமபளே இல்லீங்க.இதை நீங்க நல்லா புரிஞ்சிகுங்க.நான் நிச்சியமா ஒரு சித்தாள் வேலைக்கு போய் வருவேங்க” என்று எதிர் கத்தல் போட்டாள்.கமலா இப்படி கத்திப் பேசவே சேகர் பயந்து விட்டான்.

அன்று ஞாயித்துக் கிழமை.”நான் என் அம்மா குடிசைக்குப் போய் நான் அவங்க கிட்ட நாளை யிலே இருந்து சித்தாள் வேலைக்கு வறேன்னு சொல்லிட்டு வறேன்” என்று சொன்னாள் கமலா.கமலா அவ அம்மா குடிசைக்கு வந்தாள். கமலா குடிசைக்கு வருவதை பார்த்த ராஜ் “வாம்மா கமலா” என்று சொல்லி கமலாவை குடிசைக்குள் வரவேற்றான்.உள்ளே வந்த கமலா கண்கள் கலங்கி இருந்தது. கமலா கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்த தேவி “ஏம்மா,கமலா நீ அழுதுக் கிட்டு இருந்தியா.உன் கண் ரெண்டும் இப்படி கலங்கி கெடக்கு.அந்த சேகர் பய உன்னே அடிச்சானா” என்று பதறிப் போய் கேட்டாள்.“இல்லேம்மா,அவரு என்னை அடிக்கலேம்மா.ஆனா அவருக்கு இப்ப கொஞ்ச நாளா வே லையே இல்லேம்மா.வூட்டிலே பணமே இல்லேம்மா.நாங்க மூனு பேரும் ஒரு வாரமா வெறும் கேழ் வரகு கஞ்சியைத் தான் குடிச்சிக் கிட்டு வறோம்.அது பரவாயில்லலேம்மா.ஆனா குழந்தை ராணிக்கு பால் வாங்கிக் குடுக்கக் கூட கையிலே பணம் இல்லாம கஷ்டப் பட்டு வரோம்மா” என்று சொல்லும் போது கமலா கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தரையிலெ விழுந்தது. இதை கவனிச்ச தேவீ கமலாவைப் பார்த்து ”அழாதே கமலா.நான் உனக்கு இப்ப கொஞ்சம் பணம் தறேன்.அதெ இப்பத்து க்கு வச்சுக்க.நான் உனக்கு அப்புறமா இன்னும் கொஞ்சம் பணம் தறேன்”என்று சொல்லி தேவி கம லாவுக்கு இருபது ரூபாயைக் கொடுத்தாள்.இதை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ரத்தினமும் ராஜ்ஜும்.அவர்களுக்கு கமலா கஷ்டப் படுவதை பார்த்ததும் மிகவும் வருத்தமாய் இருந்தது. “அம்மா, நீ இந்த ஒரு தடவை பணம் கொடுத்தா போதுமாம்மா.அவருக்கு வேலே கிடைக்கற வரைக்கும் செலவுக்கு எங்களுக்கு வூட்டு செலவுக்கு பணம் வேணுமேம்மா.அதனால்லே நாங்க மூனு பேரும் நல்லா யோசிச்சி,அவருக்கு வேலை கிடைக்கிற வரைக்கும்,நான் உன் கூட ஒரு சித்தாள் வேலைக்குப் போய் வறதுன்னு முடிவு பண்ணி இருக்கேம்மா.அதனாலே நான் உன் கூட நாளைக்குக் காத்தாலே வேலைக்கு வறேன்ம்மா.நீ உங்க மேஸ்திரி கிட்டே சொல்லி எனக்கு ஒரு சித்தாள் வேலை வாங்கிக் குடும்மா”என்று சொல்லி தேவியின் கையைப் பிடித்து சொன்னாள் கமலா.

தூக்கி வாரிப் போட்டது கமலாவுக்கும் ராஜ்ஜுக்கும் ரத்தினத்துக்கும்.மூவரும் ஒரே சமயத்தில் ”நீ என்ன சொல்றே கமலா.நீ சித்தாள் வேலைக்குப் போய் வறப் போறயா.அப்ப வூட்லே சின்ன குழந்தை ராணியை யாரு பாத்து ப்பாங்க” என்று கேட்டார்கள்.கமலா பொறுமையாக ”எங்க அத்தே ராணியை பாத்துக்கிறேன்னு சொல்லி இருக்காங்க.எங்களுக்கு வேறே வழி ஒன்னும் தொ¢யலே யே.நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க” என்று கேட்டாள் கமலா.அவள் கண்களில் இன்னும் கண் ணீர் லேசாக வந்து கொண்டு இருந்ததை கவனித்தாள் தேவி.அவள் உடனே ”நான் நிச்சியமா பண்றேன் கமலா..நீ நாளைக்குக் காத்தாலே என் குடிசைக்கு எட்டு மணிக்கு எல்லாம் வந்துடு.நான் உன்னே இட்டுக் கிட்டுப் போய் உனக்கு என் மேஸ்திரிக் கிட்டே சொல்லி உன க்கு ஒரு சித்தாள் வேலை வாங்கி தறேம்மா.நீ இப்போ போய் ராணிக்கு பாலே வாங்கி குடும்மா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.சொன்னது போல கமலா அடுத்த நாள் காத்தாலே எட்டு மணிக்கெல்லாம் தேவியின் குடிசைக்கு வந்தாள்.தேவி கமலாவை அழைத்து கொண்டு அவ வேலை செஞ்சு வந்த ‘சைட்டுக்கு’ போய் அவ மேஸ்திரியைப் பார்த்து கமலா பட்டு வரும் கஷ்டத்தை எல்லாம் சொல்லி அவளுக்கு ஒரு சித்தாள் வேலையை வாங்கிக் கொடுத்தாள்.

முத்து மளிகை கடை வேலைகளை எல்லாம் நன்றாக கற்று வந்தான்.சரவணன் கடைக்கு மளிகை சரக்குகள் போட்டுக் கொண்டு வந்த ஒரு ‘ஹோல் ஸேல்’ முதலாளி கொஞ்சம் கொஞ்சமாக பூச்சி வந்து இருந்த சாமான்களை சரவணன் கடைக்குப் போட்டு வர ஆரம்பித்தார்.நாளாக நாளாக அவர் அப்படி போட்டு வந்த மளிகை சாமான்கள் மிகவும் மட்டமாக ஆகிக் கொண்டு வந்தது. புளி,பருப்புகள்,பச்சா¢, புழங்கல் அரிசி இவற்றில் எல்லாம் நிறைய பூச்சிகள் இருந்து வந்தது.மளிகைக் கடைக்கு வந்து சாமான்கள் வாங்கிக் கொண்டு போய் கொண்டு இருந்த வாடிக்கைகாரர்கள் சரவண னுக்கு புகார் கொடுத்து விட்டு அவர்கள் வாங்கிப் போன சாமான்களை எல்லாம் திருப்பித் தர ஆரம்பி த்தார்கள்.சரவணனுக்கு என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.வேறு வழி தொ¢யாமல் அவர்கள் திருப்பித் தந்த சாமான்களை எல்லாம் வாங்கி கடையில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வந்தார்.கடையில் மளிகை சாமான்கள் குறைந்துக் கொண்டு வரவே சரவணன் முத்துவை கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவரே ‘ஹோல் ஸேல்’ மார்கெட்டுக்குப் போய் சாமான்கள் வாங்கிக் கொண்டு வர முடிவு பண்ணினார்.முத்துவும் அவர் சொன்ன ‘ஐடியாவை’ ‘சரி’ என்று சொல்லவே சரவணனுக்குத் திருப்தியாக இருந்தது.‘ஹோல் ஸேல்’ மார்கெட்டில் இருந்து சரவணன் முத்துவுக்கு போன் பண்ணி “முத்து, நான் ‘ஹோல் ஸேல்’ மார்க்கெட்டில் இருந்து பேசறேன்.இங்கே ரொம்ப நல்ல மளிகை சாமான்கள் எல்லாம் நல்லதாகவும்,நம்மை ஏமாத்தின பழைய முதலாளிப் போட்ட விலையை விட இன்னும் கம்மியாகவும் இருக்குப்பா.நான் இனிமே இங்கே வந்து நம்ம கடைக்கு வேண்டிய மளிகை சாமான்களை எல்லாம் வாங்கியாறலாம்ன்னு இருக்கேன்.‘ஹோல் ஸேல்’ கடைக்குப் போய் நல்ல சரக்குகள் எல்லாம் வாங்கி வந்து வியாபாரம் பண்ணி வந்து நமக்கு இப்போ ஏற்பட்டு வந்து இருக்கும் கெட்டப் பேரை போக்கிக் கொள்ளனும்.நாம இனிமே நம்ம கடையிலே நல்ல மளிகை சாமான்களை வச்சு கிட்டு வந்து கடையி லே வியாபாரம் பண்ணி லாபம் சம்பாதிச்சு வரணும்.நீ என்ன சொல்றே” என்று கேட்டார்.உடனே முத்துவும் ”ஆமாம்ப்பா.நீங்க சொல்றது ரொம்ப சா¢ப்பா.நீங்க நல்ல சரக்கா வாங்கிக் கிட்டு வாங்க.நீங்க சொன்னது போலவே நாம செஞ்சு வரலாம்ப்ப்பா” என்று சொல்லி விட்டு போனைக் ‘கட்’ பண்ணி னான்.சரவணன் கடைக்கு வேண்டிய மளிகை சாமான்களை எல்லாம் வாங்கிக் கொண்டு தன் கடைக்கு வந்தார்.

வீட்டுக்கு வந்த சரஸ்வதியிடம் “நம்ம கடையிலே மளிகை சாமான்கள் வாங்கிக் கிட்டுப் போன ‘கஸ்டமர்கள்’ நீங்க குடுத்த மளிகை சாமான்களிலே பூச்சி இருக்குன்னு சொல்லி அந்த மளிகை சாமான்களை எல்லாம் ‘ரிட்டரன்’ பண்ணீ விட்டு என் கிட்டே பணத்தை திருப்பிக் கேட்டாங்க.நான் ‘கஸ்டமரகள்’ திருப்பிக் குடுத்த அந்த பூச்சி வந்த சாமான்களை எல்லாம் கடையிலே வாங்கி வச்சுக் கிட்டு அவங்களுக்கு பணத்தைத் திருப்பி குடுத்தேன்.நான் உடனே அந்த முதலாளிக்கு போன் பண்ணி இந்த சாமான்களை எல்லாம் திருப்பி எடுத்துக் கிட்டு போய் என் பணத்தைத் திருப்பிக் குடுங்கன்னு கேட்டேன்.ஆனா அவர் நிர்தாட்சன்யமா நான் உங்களுக்கு பணம் திருப்பி தர முடியா துன்னு சொல்லிட்டார்.அப்புறமா நான் இன்னைக்கு ‘ஹோல் ஸேல்’ மார்கெட்டுக்கு போய் பார்த்த பிறகு தான் எனக்கு உண்மை தொ¢ஞ்சிச்சு.அதானால்லே நான் இனிமே நம்ப முத்துவே கடையை கவனிச்சு வர சொல்லி விட்டு நானே அந்த ‘ஹோல் ஸேல்’ மார்கெட்டுக்கு போய் நம்ப கடைக்கு நல்ல சரக்கா,கம்மி விலை க்கு வாங்கி வந்து வியாபாரம் பண்ணப் போறேன்”என்று சந்தோஷமாக சொன்னார் சரவணன்.முத்து ஞாயித்துக் கிழமைகளில் காலையில் நாஷ்டா பண்ணி விட்டு வெளியே போனான் என்றால்,அவன் ‘·ப்ரெண்ட்ஸ்களுடன்’ நன்றாக ஊரை சுத்தி விட்டு ‘ஹோட்டலில்’ சாப்பிட்டு விட்டு,சினிமா,பீச்சு என்று எல்லாம் போய் விட்டு இரவு பத்து மனிக்கு வீட்டுக்குப் படுக்க வந்துக் கொண்டு இருந்தான்.ஆரம்பத்தில் சரஸ்வதியும் சரவணனும் ‘சரி போகட்டும்.அவன் வயசுப் பையன் தானே.அவன் வாரத்திலெ ஆறு நாளும் பாவம் கடையிலே காலையிலெ எட்டு மணியில் இருந்து ராத்திரி ஒன்பது மணிவரை உக்காந்து வியாபாரத்தை கவனிச்சுக் கிட்டு வறான்.ஞாயித்துக் கிழமை ஒரு நாள் தானே அவனுக்கு ‘ரெஸ்ட்’.அவன் இஷ்டப் படி இருந்து வரட்டும்’ என்று ஒன்னும் சொல் லாமல் இருந்து வந்தார்கள்.கடையில் நல்ல லாபம் வர ஆரம்பிக்கவே முத்து நல்ல ‘பாஷன் டிரஸ்க¨ளை’ வாங்கி போட்டு வர ஆரம்பித்தான்.கண்ணுக்குப் போட்டுக் கொள்ள ஒரு பெரிய ‘கூலிங்க் க்லாஸ்’ வேறே வாங்கிக் கொண்டு ஒரு பெரிய பணக்காரன் வீட்டுப் பையனை போல் மளிகைக் கடைக்குப் போய் வந்தான்.சரவணனுக்கு முத்துவின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

கையில் நல்ல பண நடமாட்டம்,’·ப்ரென்ட்ஸ்கள்’ சகவாசம், நல்ல ஹோட்டல் சாப்பாடு,வாரம் தவறாம சினிமா பார்ப்பது எல்லாம் இருந்து வந்ததால் முத்து சந்தோஷத்தால் நல்ல வாளிப்பாக ஆகி வந்தான்.ஒரு நாள் மதியம் சரவணன் தூங்கி எழுத்து தன் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்தார்.அவர் நிதானமாக சரஸ்வதியைப் பார்த்து “சரசூ,நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துக்காதே.என்ன தான் முத்து மளிகைக் கடையிலே வார ஆறு நாளும் உக்காந்துக் கிட்டு சம்பா திச்சு வந்தாலும்,அவன் இப்படி ஊதாரித்தனமாக பணத்தை செலவு பன்ணிக் கிட்டு வறது நல்லது இல்லேன்னு எனக்கு படுது.இதை நாசூக்காக அவன் கிட்டே நாம சொல்லலாமா.உனக்கு என்ன தோணுது” என்று கேட்டு சரஸ்வதி என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்.உடனே சரஸ்வதி “நீங்க அப்படி எல்லாம் ‘பட்டு’ன்னு சொல்லி அவன் மனசை நோகடிச்சு விடாதீங்க.அவன் வயசுப் பையங்க.அவன் இப்போ இந்த மாதிரி எல்லாம் ‘டிரஸ்’ பண்ணீக் கிட்டு வராம கிழவன் ஆனப்புறமாங்க ‘டிரஸ்’ பண்ணிக்க முடியும்..உங்களுக்கு வயசாகிகிட்டு வருது. இனிமே உங்களால் அந்த மளிகைக் கடையை முத்து கவனிச்சு வறதுப் போல கவனிச்சிக் கிட்டு வர முடியாதுங்க.நமக்கு இருக்கிறது இந்த ஒரு பையன் தானேங்க.சந்தோஷமா இருந்து வரட்டுங்க அவனை நீங்க ஒன்னும் சொல்லாதீங்க” என்று சொல்லி சரவணன் வாயை அடைத்து விட்டாள்.
முத்து திடீரென்று ஒரு நாள் தன் அப்பா அம்மாவைப் பார்த்து “அப்பா.என் ‘ப்ரென்ட்ஸ்கள்’ எல்லாம் ‘பைக்’ வச்சுக் கிட்டு இருக்காங்க.எனக்கும் ஒரு ‘பைக்’ வாங்கணும் ரொம்ப ஆசையா இரு க்கு.நான் ஒரு ‘பைக்’ வாங்கிடட்டுமா” என்று கேட்டான்.உடனே சரவணன் “வேண்டாம்ப்பா முத்து. நான் சொல்றதே கொஞ்சம் கேளு.நம்ப மளிகைக் கடை நம்ப வூட்டுக்கு ரொம்ப கிட்டே தான் இருக்கு. நீ கடைக்குப் போய் வர உனக்கு ‘பைக்’ வேண்டி இருக்காதேப்பா.அதைத் தவிர பெட்ரோல் செலவு வேறே ஆகும்பா.இதை எல்லாம் நீ யோஜனை செஞ்சியாப்பா” என்று ரொம்ப கணீவா¡க கேட் டார்.“ஏங்க, முத்து தான் இத்தனை விளாவா¢யா அவன் வாங்கப் போற புது ‘பைக்’ கைப் பத்தி சொல் றாகளேங்க.அவன் ஆசைப் பட்டா மாதிரி அவன் ஒரு புது ‘பைக்’ கையே வாங்கி கிடட்டுங்க.நீங்க ‘சா¢’ன்னு ஒரு வார்த்தை சந்தோஷமா சொல்லுங்க” என்று சொல்லி தன் கணவனை உலுக்கினாள். ”சரஸ்வதி என் மனசுக்குப் பட்டதை நான் சொன்னேன்.ஆனா நீங்க ரெண்டு பேரும் அதுக்கு எதிர் மாறா பதில் சொல்றீங்க.இதுக்கு மேலே நான் சொல்ல என்ன இருக்கு.முத்து அவன் ஆசைப்பட்டா மாதிரியே புது ‘பைக்’கை வாங்கி கிடட்டும்” என்று சொல்லி விட்டு தன் துண்டை தோளில் போட்டு கொண்டு வெளியே போனார் சரவணன்.

சரவணன் மளிகைக் கடைக்கு தினமும் மளிகை சாமான்கள் வாங்க பக்கத்தில் இருந்த ஒரு சேரியில் இருந்து சரளா என்கிற ஒரு இளம் பெண் வந்துக் கொண்டு இருந்தாள்.சரளா பார்பத்தற்கு மிகவும் அழகாகவும்,பூரிப்பாகவும் இருந்தாள்அவ அழகிலே தன்னைப் பறி கொடுத்தான் முத்து ஆரம் பத்தில் அவள் கடைக்கு வந்தால் வெறுமனே மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு உடனே போய்க் கொண்டு இருந்தாள்.முத்துவுக்கு சரளாவைப் பார்த்ததும் அவளோடு பேச வேண்டும் என்று ஆசை வந்தது.அதனால் முத்து சரளா கிட்டே நிறைய பேச்சுக் குடுத்து பேசி வந்தான்.ஆரமபத்தில் முத்து கேட்ட கேள்விக்கு மட்டும் வெறுமே பதில் சொல்லி விட்டு சரளா தன் குடிசைக்கு போய்க் கொண்டு இருந்தாள்.நாளாக நாளாக முத்து சரளாவிடம் நிறைய பேச்சுக் குடுக்கவே,சரளாவும் கொஞ்ச நேரம் கடையில் நின்று கொண்டு அவனிடம் பேசி விட்டு, தன் குடிசைக்கு போய்க் கொண்டு இருந்தாள். ஆரம்பத்தில் வெறும் பேச்சாய் இருந்த அவர்கள் உறவு நாளாக நாளாக காதலாக மாறியது.முத்து சரளாவுக்கு ‘காதல் பா¢சாக’ ஒரு ‘செல் போன்’ வாங்கிக் கொடுத்தான்.முத்து அவன் வாங்கிக் கொடு த்த ‘செல் போனி’ ல் சரளாவுக்கு எப்படி போன் பண்ணுவது,எப்படி மத்தவங்களுக்கு போன் பண்ணு வது,அவங்க கிட்டே பேசுவது,அவங்க கூப்பிட்டா எப்படி ‘செல் போனை’ ‘ஆன்’ பண்ணுவது என்று எல்லாம் விவரமும் சொல்லிக் கொடுத்தான். ‘செல்’ போனை ஆசையாக வாங்கிக் கொண்டு அதில் முத்துவின் படத்தைப் போட்டுக் கொண்டாள்.முத்துவும் அவன் ‘செல்’ போனில் சரளாவின் படத்தை போட்டுக் கொண்டான்.முத்துவுக்கு “ரொம்ப தாங்க்ஸ்” என்று சொல்லி கடையை விட்டு வேகமாக வெளியே வந்து தன் குடிசைக்குக் கிளம்பினாள் சரளா.அம்மா வேலைக்குப் போய் இருக்கும் போது சரளா முத்துவிடம் நிறைய நேரம் அவன் வாங்கிக் கொடுத்த செல் போனில் பேசி கொண்டு வந்தாள். முத்துவும் சரளாவும் செல் போனில் பேசி வந்தான்.இருவரும் மிகவும் சந்தோஷப் பட்டு வந்தார்கள்.

வீட்டுக்கு வந்த சரளா கையிலே ஒரு செல் போன் இருப்பதைப் பார்த்த அவள் அம்மா சரளா வைப் பார்த்து “சரளா, என்ன உன் கையிலே ஒரு ‘செல் போன்’ இருக்குதே.யார் போன்டீ அது.எங்கா ச்சும் அந்த ‘செல் போனை’ திருடிக்கீட்டு வந்தியா“ என்று கத்திக் கேக்கவே சரளா ரொம்ப பயந்துப் போனான்.சரளா உடனே ”நான் எங்கேயும் இந்த போனைத் திருடலேம்மா.வர வழியிலே என் சினே கிதி ஒருத்தியைப் பார்த்தேம்மா.அவ கையிலே ரெண்டு செல் போன் இருந்திச்சிம்மா.நான் அவளைப் பார்த்து உஷா ‘எனக்கு ஒரு போனை கொஞ்ச நாள் நீ தர முடியுமா’ன்னு கேட்டேன்ம்மா.அவ அதுக் கென்ன சரளா இந்த போனை நீ வச்சுக்கன்னு குடுத்தாம்மா.கூடவே இந்த ‘செல் போனில்’ எப்படி போன் பண்ணுவது,எப்படி மத்தவங்களுக்கு போன் பண்ணுவது,அவங்க கிட்டே பேசுவது,அவங்க திருப்பி என்னைக் கூப்பிட்டா எப்படி ‘செல்போனை’ ‘ஆன்’ பண்ணுவது எல்லா விவரமும் எனக்குச் சொல்லிக் குடுத்து இருக்காம்மா.நான் கொஞ்ச நாள் ஆனதும் இந்த் போனை அவ கீட்டே திருப்பிக் குடுத்து விடுவேம்மா” என்று ¨தா¢யமாக ஒரு பொய்யைச் சொன்னாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.கமலா தன் அம்மா அப்பா வீட்டுக்கு வந்து அம்மாவை தனியா அழைச்சு ”அம்மா,நாம் மறுபடியும் முழுகாம இருக்கேம்மா” என்று வெக்கப் பட்டுக் கொண்டே மெது வாக சொன்னாள்.உடனே தேவி கமலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டே”ரொம்ப சந்தோஷமா இருக் கும்மா.இனிமெ உன் உடம்பை ரொம்ப ஜாக்கிறதையா கவனிச்சு வா” என்று சொன்னாள்” எங்களு க்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்று ‘கோரஸாக’ சொன்னார்கள் ரத்தினமும் ராஜ்ஜும்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *