சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 6,574 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

“ஏங்க,என்னங்க சொல்றீங்க நீங்க.வேறே மாசா மாசம் நிரந்திர வருமானம் பர பையனா நாம பாத்தா அவங்க அம்மா,அப்பா நம்மை பார்த்து, உங்க பொண்ணுக்கு இன்னும் ‘இதைப் போடுங்க’, ‘அதைப் போடுங்க’,’எங்கப் பையனுக்கு இதை வாங்கிக் குடுங்க’,’அதை வாங்கி குடுங்கன்னு’ கேட்டா, உங்களால் அதை எல்லாம் வாங்கிப் போட முடியுமாங்க.நீங்க என்ன அவ்வளவு பணத்தை பாங்கிலே சேர்த்து வச்சு இருக்கீங்களாங்க என்ன.உங்க கிட்டே எவ்வளவு பணம் பாங்கிலே இருக்குது ன்னு நான் நேத்து தானேங்க பாத்தேங்க.தேவிக்கு ஏதாவது காதிலே,மூக்கிலே,கழுத்திலே வாங்கிப் போட்டு கல்யாணத்தை சுமாரா பண்ணவே, நீங்க ஒரு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேலேயே கடன் வாங்க வேணுமேங்க.இதை நீங்க யோஜனைப் பண்ணீங்களாங்க.என்னமோ ஆகாச கோட்டை கட்டறீ ங்களேங்க.பேசாம இந்த இடத்தை நீங்க பேசி தேவி கல்யாணத்தை முடிச்சாலே,அந்த முருகப் பெருமானை சுத்தி வந்து நாம கும்பிடணுங்க.விரலுக்குத் தக்க வீக்கம் தாங்க நாம வீங்கணுங்க.பேசாம இந்த இடத்தை பேசி கல்யாணத்தே முடிங்க” என்று சொல்லி சரவணனின் வாயை அடைத்தாள் சரஸ்வதி.“சரி,சரஸ¤,நீ சொல்றதும் சரி தான்.தேவிக்கு வயசாகிகிட்டு வருது.வேறே நல்ல இடம் கிடை க்கிற வரைக்கும் நாம காத்து இருந்து அப்புறமா தேவிக்கு கல்யாணம் பண்ணினா,இப்போ இருக்கிற விலை வாசியை விட,விலை வாசி ஏறிகிட்டு தான் போவும்.கல்யாண செலவும் அதிகமாகத் தான் போ வும்.நாம நம்ம கிட்டே இருக்கிற பணத்திலே தான் தேவிக்குக் கல்யாணத்தை பண்ணி முடிக்கணும். பெரிய இடத்திலெ ஒரு பையனைப் பார்த்து விட்டு,அப்புறமா அவங்க கேக்கறதை எல்லாம் நம்மால் செய்ய முடியாதே. கல்யாணத்தை செஞ்சு முடிக்க அப்புறமா வெளயிலே நிறைய கடன் தான் வாங்க வேண்டி இருக்கும்.நீ சொன்னா மாதிரியே அந்த இடத்தியே மெல்ல பேசி முடி சரஸ¤” என்று சொல்லி விட்டு வருத்தப் பட்டுக் கொண்டே வெளியே போனார் சரவணன்.தேவிக்கு அவ அம்மா சொன்ன ஒரு தச்சனைக் கல்யாணம் பண்ணிக்க கொள்ளவே பிடிக்கவில்லை. ‘அவள் அப்பா சொன்னது போல ஒரு நிரந்தர வேலை செய்து வர ஒரு பையனை நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப் பட்டாள். .தன் தலை விதியை நினைத்து வருத்தப்பட்டாள் தேவி.சரஸ்வதி மெல்ல ராஜ் அப்பா அம்மா கிட்டே பேசி ராஜை தேவியை ‘பெண்’ பார்க்கச் சொல்லி,தேவியை அவங்களுக்குப் பிடித்ததும் தேவிக்கு கல்யாண ஏற்பாட்டைப் பண்ணினாள் சரஸ்வதி.சரவணன் தன் ‘பாங்கில்’ இருந்த ‘பாலன்ஸ்’ பணத்தை எல்லாம் ‘ட்ரா’ பண்ணிக் கொண்டு வந்து,தங்களால் முடிந்த நகைகளை எல்லாம் தேவிக்கு பண்ணிப் போட்டு தேவியின் கல்யாணத்தை ‘சிம்பிளாக’ செய்து முடித்தார்கள்.
வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் தேவிக்கு தன் நினைவு கலைந்தது.எழுந்துப் போய் வாசல் கதவைத் திறந்தாள்.வாசலில் கமலா நின்றுக் கொண்டு இருந்தாள்.அவளைப் பார்த்ததும் தேவிக்குக் கோவம் கோவமாக வந்தது.கமலாவைப் பார்த்து “ஏண்டீ, பள்ளிகூடத்திலே வருஷாந்திர பரீட்சைக்கு லீவு விட்டு இருக்காங்க.நீ உன் பாடங்களை படிக்காம எங்கேடி சுத்தி விட்டு வந்து இருக் கே.மணி ஒன்னடிச்சுச்சு.இப்போ சோறு கொட்டிக்க இங்கே வந்து கதவைத் தட்டயறாடீ.செந்தாம ரையை பாருடி.அவ எவ்வளவு அக்கறையா அவ பாடத்தை எல்லாம் படிச்சி,மனப் பாடம் பண்ணி அதை எழுதி பாத்து வறா.நீ என்னடான்னா உன் புஸ்தகத்தை கையீலே கூட தொடாம மூனாவது வீட்டுக்குப் போய் டீ.வீ. பார்த்துட்டு வரயே.வருஷாந்திர பரிக்ஷயை எப்படிடீ எழுதி பாஸ் பண்ணுவே” என்று கோவத்தில் கத்தி விட்டு,அங்கு இருந்த துடைப்பக் கட்டையை எடுத்து கமலாவை நன்றாக அடித்தாள் தேவி.வலி தாங்காமல் துடித்து கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள் கமலா.அப்போது தான் வெளியே போய் இருந்த ரத்தினம் குடிசைக்கு வந்தாள்.கமலாவை அடித்து விட்டு கோவம் தீராமல் தேவி ”இனிமே அந்த மூனாவது வீட்டு குடிசைக்கு போய் நீ டீ.வீ. பார்க்கப் போனா, அங்கேயே இருந்து விடு.இந்த வூட்டுக்கு வரவே வராதே” என்று கத்தினாள்.உடனே ரத்தினம் ஓடிப் போய் ”என்ன ஆச்சு கமலா,ஏன் அழுவறே” என்று கேட்டாள்.ஆயா தனக்கு எப்பவுமே செல்லம் என்று தெரிஞ்சு வைத்து இருந்த கமலா “ஆயா,அம்மா என்னை துடைப்பத்திலேயே உடம்பு பூராவும் அடிச்சு ட்டாங்க.எனக்கு ரொம்ப வலிக்குது ஆயா” என்று சொல்லி தன் ஆயா கிட்டே போனாள்.“ஏன் தேவி, கமலாவை இந்த அடி அடிச்சு இருக்கே.அவ வளர்ந்த பொண்ணு.உன் அடி தாங்காம அவ எங்காவது ஓடிப் போயிட்ட நாம என்ன செய்யறது.அவளை இப்படி இனிமே அப்படி அவளை அடிக்காதே.சும்மா வாயால் சொல்லி வா.அதுவே போதும்” என்று சொன்னதைக் கேட்டு தேவிக்கு இன்னும் கோவம் அதி கம் ஆகியது.தேவி உடனே “என்ன அத்தே,நீங்க விவரம் தெரியாம கமலாவுக்கு சிபாரிசு பண்ண வந்துட்டீங்க.பள்ளிக் கூடத்திலே வருஷாந்திர பரீட்சைக்கு லீவு விட்டு இருக்காங்க.லீவு வுட்டதிலே இருந்து இன்னி வரைக்கும் இவ பாட புஸ்தகத்தை கையிலேயே எடுக்காம,ரேடியோவிலே சினிமா பாட்டு கேட்டு வறா.மிச்ச நேரத்துக்கு அந்த மூனாவது குடிசைக்கு போய் டீ,வி.பார்த்துட்டு சோறு தின்ற சமயத்துக்கு குடிசைக்கு வறா.இப்படி ஊரை சுத்தி கிட்டு இருந்தா இவ எப்படி எட்டாவது பரீட்சையிலே ‘பாஸ்’ பண்ணுவா”என்று கத்தினாள்.’இதுக்காகவா கமலாவை இப்படி துடைப்ப கட்டை யிலே பின்னி இருக்கே.அவ ‘பாஸ்’ பண்ணாட்டா என்ன.அவ பரீட்சையிலே பாஸ் பண்ணி என்ன பண்ணப் போறா.அவ பொட்டைப் புள்ளே தானே.’பாஸ்’ பண்ணாவிட்டா ஒன்னும் ஆவாது.இனிமே அவளை இப்படி எல்லாம் நீ அடிக்காதே”என்று சொல்லி விட்டு கமலாவுக்கு தட்டு போட்டு சோறு போட்டாள் ரத்தினம்.“அத்தே, செந்தாமரையைப் பாருங்க.அவ எவ்வளவு அக்கறையா தன் பாடங்க ளை எல்லாம் படிச்சு வறா.அவ வகுப்பிலே அவ தான் எப்பவும் முதல் மார்க் வாங்கறா. அதே போல கமலாவும் நல்லா படிச்சு வரணும்.நீங்க இப்படி செல்லம் கொடுத்து அவளைக் கெடுக்காதீங்க” என்று மறுபடியும் கத்தினாள்.“சரி தான் போ தேவி.அவ இப்படியே அவளுக்கு பிடிச்சா மாதிரி இருந்து வரட் டும்.அவ படிக்காட்டா ஒன்னும் கெட்டு போவாது.நீ சும்மா இரு.இனிமே அவ ஜோலிக்கு நீ வராதே” என்று எதிர் கூச்சல் போட்டாள் ரத்தினம்.இந்த கூச்சலே கொஞ்ச நேரம் ஆன பிறகு சண்டையாக மாறி விட்டது.

கோவத்தில் தேவி ரத்தினத்தை பார்த்து “உங்க குடும்பத்திலே யாருக்கும் படிப்பு வாசனையே கிடையாது.நீங்களும் படிக்கலே,உங்க பிள்ளையும் படிக்கலே.கமலாவையும் படிப்பே இல்லாத பொண் ணா இருந்து வரட்டும்.அப்படித் தான் அவ தலையிலே அந்த கடவுள் எழுதி இருந்தா அதை யாரால் மாத்த முடியும்” என்று கத்தி விட்டு துடைப்ப கட்டையை தூர எறிந்தாள்.தேவி ‘நாம் மேலே படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டோம் ஆனா நம் அம்மா பிடிவாதமா நம்மை மேலே படிக்க வை க்க ஒத்துக்காம பிடிவாதமா இருந்து வந்து,நம்மை இந்த குடிசை வாழக்கைக்கு தள்ளி விட்டாங்க. இந்த கமலாவாவது நல்லா படிச்சு ஒரு நல்ல வாழ்கையைத் தேடிக் கொள்ளக்கூடாதா.ஏன் கமலா இப்படி படிக்காம தன்னுடைய வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு வறா’ என்று நினைத்து மிகவும் வேதனைப் பட்டாள்.தேவி ‘உங்க குடும்பத்திலே யாருக்கும் படிப்பு வாசனையே கிடையாது’ என்று சொன்னதை வைத்து ரத்தினம் நாள் பூரா தேவியிடம் சண்டைப் போட்டு வந்தாள்.’இந்த குடிசையில் இருப்பவர்கள் ஏன் இப்படி சண்டை போட்டு வறாங்க.நம்ம அம்மா நல்லதைத் தானே சொன்னாங்க. கமலா வருஷாந்திர லீவு விட்டதில் இருந்து இன்னி வரைக்கும் அவ பாடங்களை படிக்காம வெறும னே ரேடியோ கேட்டும் டீ.வி. பார்த்தும் தானே வறா.வருஷாந்திர பரீட்சைக்கு படிக்க வேணாமா.நம்ம அம்மா சொன்னதில் என்ன தப்பு.இந்த ஆயா கமலா அக்காவுக்கு ஏன் இப்படி செல்லம் குடுத்து வறா ங்க.இது தப்புன்னு அவங்களுக்கு தெரியலையே’ என்று நினைத்து மிகவும் வருத்த பட்டாள் செந்தா மரை.தேவி ரத்தினம் போட்ட சண்டை ராத்திரி வரைக்கும் தொடர்ந்து கொண்டு இருந்தது.ராஜ் குடிசைக்கு வந்ததும் ராஜ்ஜிடம் ரத்தினம் தேவி தன் குடுமபத்தைப் பத்தி சொன்னதை சொல்லி அவனையும் உசுப்பி விட்டாள்.அன்றில் இருந்து தேவியும்,ரத்தினமும்,ராஜ்ஜும் ஒருத்தர் மற்றோருவரு டன் பேசாமல் அவர்கள் வேலையை கவனித்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

வருடாந்திர பரீட்சைகள் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது.அன்று ஞாயிற்றுக் கிழமை.சரவணனுக்கு உடம்பு கொஞ்சம் சரி இல்லாமல் இருந்ததால் அவர் கடைக்கு போகாமல் வீட்டிலெயே இருந்து வந்தார்.உடனே அவர் முத்துவைக் கூப்பிட்டு ”ஏண்டா முத்து, இன்னும் வரு ஷாந்திர பரீட்சைக்கு ஒரு வாரம் தானே இருக்கு.நீ என்னமோ பெரிய கிரிக்கெட் வீரன் போல விடாம தினமும் காத்தாலேயும் சாயர¨க்ஷயும் போய் ஆடிகிட்டு வரே.இந்த வருஷம் நீ எட்டாவதில் இருந்து ஒன்பதாவதுக்கு போவணும்.பரீட்சைகள் ரொம்ப கஷ்டமா இருக்கும்டா.நீ இப்படி உன் பாடங்களே ஒன்னுமே படிக்காம போனா எப்படிடா பரீட்சையலே ‘பாஸ்’ பண்ணுவே.அரை ஆண்டு பரீட்சையிலே நீ எல்லா ‘சப்ஜெக்டிலும்’ ‘பாஸ்’ மார்க்கே வாங்கலையேடா.நீ இன்னைக்கு கிரிகெட் விளையாட போவாதே. வீட்டிலேயே குந்திகிட்டு,நீ உன் பாடங்களை படிடா.நான் உன் கூட உக் காந்து கிட்டு, நீ படிச்சு வரதைக் கவனிக்கப் போறேன்.கொண்டு வா உன் ‘பேட்டை’ “என்று கேட்டு முத்து வைத்து இருந்த கிரிகெட் ‘பேட்டை’ பிடுங்கி தூர எறிந்தார் சரவணன்.‘என்னடா இந்த அப்பா இன்னைக்குப் பாத்து என் கிரிக்கெட் ‘பேட்டை’ இப்படி என் கையில் இருந்து பிடுங்கக்¢ தூர எறிஞ்சிட்டாரே..இன்னைக்கு தானே நம்ம ‘டீமுக்கும்’ அந்த நுங்கம்பாக்கம் டீமுக்கும் ·பைனல் ஆட்டம். என்ன பண்ணுவது’ என்று புரியாமல் தவித்தான் முத்து.மெல்ல தன் அம்மாவிடம் போய் “அம்மா,இன்னைக்கு தான் எங்க ‘டீமுக்கும்’ அந்த நுங்கம்பாக்கம் ‘டீமுக்கும்’ ‘·பைனல்’ ஆட்டம்மா. இன்னைக்கு பாத்து அப்பா என் கிரிக்கெட் ‘பேட்டை’ பிடுங்கி தூர ஏறிங்சுட்டா¡ர்ம்மா.நீங்க கொஞ்சம் மெல்ல அப்பா கிட்டே சொல்லி என்னே இன்னிக்கு மட்டும் அந்த கிரிக்கெட் ஆட்டத் துக்கு அனுப்பும்மா.என் ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லாம் காத்துக்கிட்டு இருப்பாங்கம்மா.ப்ளீஸ்ம்மா” என்று அம்மாவின் கையை பிடிச்சு கெஞ்சினான்.‘பையன் இப்படி கெஞ்சுகிறானே,அவனை அந்த கிரிக் கெட் ஆட்டத்துக்கு அனுப்பலாமே’ என்று நினைத்து சரஸ்வதி ஹாலுக்கு வந்து “ஏங்க இன்னைக்கு என்னமோ இவங்க ‘டீமுக்கும்’,அந்த நுங்கம்பாக்கம் ‘டீமுக்கும்’ ·பைனல் ஆட்டமாங்க.முத்துவின் ‘·ப்ரெண்ட்ஸ்’எல்லாம் அவனுக்காக காத்துக்கிட்டு இருப்பாங்களாங்க.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவன் போய் கிரிக்கெட் ஆடி விட்டு வரட்டுமேங்க” என்று சொல்லி பையன் முத்துவுக்காக சிபாரிசு பண்ணினாள் சரஸ்வதி.“சரஸ¤,நீ என்ன சொல்றேன்னு உனக்கு தெரிஞ்சுத் தான் நீ சொல்றயா. அவன் எட்டாவது வருஷாந்திர பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை.இவன் ஏற்கெனவே அரை ஆண்டு பரீட்சையிலே அவன் எல்லா ‘சப்ஜெக்டிலும்’ ‘பாஸ்’ மார்க்கே வாங்கலே.இப்படி தினந் தோறும் அவன் வெறுமனே ‘கிரிக்கெட்டே’ஆடிகிட்டு இருந்தான்னா,அவன் எப்படி ‘·பைனல்’ பரீட்சையிலே ‘பாஸ்’ பண்ணுவான்.அவன் இன்னைக்குக் கிரிகெட் விளையாட போக வேணாம். வீட்டிலே இருந்து படிச்சு வரட்டும்”என்று சொன்னார் சரவணன்.“இன்னைக்கு ஒரு நாள் போய் கிரிக்கெட் ஆடி வரட்டுங்க.அவனை போக விடுங்க.அவன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் அவன் பாடங்களே படிப்பாங்க”என்று சொல்லி பிடிவாதம் பிடித்தாள் சரஸ்வதி.சரவணனுக்கு என்ன பண்ணு வது என்றே தெரியவில்லை.”சரி,நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் சரஸ¤.அப்புறமா நீயா ச்சு,உன் பிள்ளையாச்சு.என்னவோ பண்ணிக் கிட்டுப் போங்க” என்று சொல்லி விட்டு ஒரு தலைய ணைப் போட்டுக் கொண்டு படுக்கப் போனார் சரவணன்.சரஸ்வதி முத்துவை பார்த்து ”முத்து, நான் உங்க அப்பா கிட்டே ரொம்ப சொல்லி உன்னை இன்னைக்கு விளையாட அனுப்பி இருக்கேன். இன்னைக்கு விளையாடி விட்டு வந்து இன்னைக்கு சாயங்காலத்தில் இருந்து நீ உன் வருஷாந்திர பரி ¨க்ஷக்கு நல்லா படிச்சு வந்து எட்டாவது ‘பாஸ்’ பண்ணனும் தெரியுதா.பெயில் ஆகி வந்து என் மானத்தை வாங்கி விடாதே” என்று எச்சரித்து முத்துவை விளையாட அனுப்பினாள். “சரிம்மா,நான் நிச்சியமா படிச்சு ‘பாஸ்’ பண்ணி விடுவேம்மா.நீ கவலை படா தேம்மா” என்று சொல்லி விட்டு அப்பா தூர ஏறிந்த கிரிக்கெட் ‘பேட்டை’ எடுத்து கொண்டு கார்பரேஷன் மைதானத்திற்கு ஓடினான் முத்து.

படிப்பு.இது நாலு வார்த்தை எழுத்து தான்.ஆனால் இந்த ‘படிப்பு’ என்னும் அறிவு எத்தனை மாணவர்களுக்கு வாத்தியார் சொல்லிக் கொடுக்கும்போது,நன்றாக புரிந்து அவர்கள் மண்டையில் நிரந்தரமாக பதிவு ஆகி, அவசியம் ஏற்படும் போது மண்டையில் இருந்து அந்த ‘அறிவை’ வெளி கொண்டு வந்து வாத்தியார் சொல்லிக் கொடுத்ததைப் போல் பரீட்சைகளை எழுத முடிகிறது. சொல்லு ங்கள் பார்க்கலாம்.பத்தில் ஒருவனுக்கு வாத்தியார் ஒரு கணக்கைச் சொல்லிக் கொடுத்தவுடனே ஒரு பசு மரத்தில் ஆணி அடித்தால் அது எப்படி ஒரு கஷ்டமும் இல்லாமல் நுழைகிறதோ அப்படி நுழைந்து விடுகிறது.அவன் பரீட்சை எழுதினால் வாத்தியார் அந்த கணக்குக்கு முழு மார்க்கைப் போடுகிறார். பத்தில் ரெண்டு பேருக்கு வாத்தியார் சொல்லிக் கொடுக்கும் போது அப்போது எல்லாம் புரிந்தால் போல் தோன்றினாலும்,அவன் பரீட்சை எழுதும் போது வாத்தியார் சொல்லிக் கொடுத்ததில் முக்கால் வாசி கணக்கையாவது ஞாபக படுத்தி எழுதி முதல் ‘க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணி விடுகிறான்.இன்னும் ரெண்டு பேர் வாத்தியார் சொல்லிக் கொடுத்த கணக்கை சுமாராக ஞாபகப் படுத்திப் படுத்தி பரீட்சை எழுதும் போது எழுதி ‘ஜஸ்ட்’ ‘பாஸ்’ மார்க்கை வாங்கி விடுகிறார்கள்.பத்தில் மத்த ஐந்து பேருக்கு வாத்தியார் சொல்லிக் கொடுப்பது ஒன்றுமே புரியாமல் வெறுமனே அவர் சொலவதைக் காதில் கேட்டு விட்டு பரீட்சை எழுதும் போது கணக்குகளை எல்லாம் சரிவர போடாமல் ‘பெயில்’ ஆகி விடுகிறார் கள்.அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடவுள் அவர்களுக்கு அந்த ‘அறிவை’க் கொடுக்காத தால், அவர்கள் எவ்வளவு கஷ்ட பட்டு படித்து வந்தாலும் மறுபடியும் மறுபடியும் பரீட்சையில் பெயில் ஆகி விடுகிறார்கள்.இதனால் அவர்கள் படிப்பை வெறுக்க ஆரம்பித்து,படிக்காமல் இருந்து விடுகிறார் கள்.இதனால் அவர்கள் கவனம் வேறே எதிலாவது போய்,அவர்கள் தங்களுக்குப் பிடித்ததை செய்து வந்து பொழுதை வீணாக்கி வருவதை நான் அன்றாடம் பார்த்து வருகிறோமே.அவர்களை பார்த்து நாம் இவன் ஒரு ‘படிக்காத முட்டாள்’ என்கிற பெயரை சுலபமாக கட்டி விடுகிறோம் இல்லையா.தவறு படிக்கும் பையன் பேரிலே இல்லையேங்க.எய்தவன் இருக்க நாம் அம்பை நொந்துக் கொள்கிறோம். இது சரியாங்க.

முத்துவின் எட்டாவது வருஷாந்திர பரீட்சை ஆரம்பம் ஆகியது.முத்து சரியாகப் படிக்கா ததால்,அவன் எல்லா பரீட்சைகளை ரொம்பவும் சுமாராக தான் எழுதினான்.ஒவ்வொரு நாள் பரீட்சை எழுதி விட்டு வீட்டுக்கு வந்ததும் சரவணன் முத்துவைப் பார்த்து “இன்னைக்கு பரீட்சை எழுதி இருக்கே,முத்து”என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.முத்துவும் ”ரொம்ப நல்லா எழுதி இருக் கேன்ப்பா.நிச்சியமா எனக்குப் ‘பாஸ்’ மார்க் வரும்ப்பா” என்று சொல்லி விட்டு வந்து கொண்டு இருந் தான்.முத்து சொன்னானே ஒழிய சரவணனுக்கு நம்பிக்கையே இல்லை.‘விழுந்து விழிந்து ஒருத்தன் படிச்சாலே ‘பாஸ்’ மார்க் வாங்குவது ரொம்ப கஷ்டம்,அப்படி இருக்கும் போது முத்து கொஞ்சம் கூட படிக்காம வெறுமனே கிரிக்கெட் விளையாடி வந்து இருக்கான்.இவன் எப்படி எட்டாவது ‘பாஸ்’ பண்ணப் போறான்.என்னை ஏமாத்த போறான்’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு வருத்தப் பட்டுக் கொண்டு வந்தார் சரவணன்.எட்டாவது ‘ரிஸல்ட்’ வந்தது.பரீட்சைகளை நன்றாக எழுதி இருந்தாத்தானே முத்து ‘பாஸ்’ பண்ணுவான்.அவன் பரீட்சையில் ‘பெயில்’ ஆகி இருந்தான்.அவன் எல்லா ‘சப்ஜெக்ட்டிலும் ‘பெயில்’ மார்க் தான் வாங்கி இருந்தான்.வெறுமனே முப்பதும்,இருபதும், தான் மார்க் வாங்கி இருந்தான்.முத்து ‘மார்க் ஷீட்டை’ப் வாங்கிப் பார்த்த சரவணனுக்கு முத்து மேலே கோவம் கோவமாக வந்தது.உடனே சரவணன் முத்துவை மிகவும் கோபித்துக் கொண்டு “நான் உனக்கு படிச்சு படிச்சு சொன்னே முத்து.நீ கேட்டியாடா.எட்டாவது பரீட்சைகள் எல்லாம் ரொம்ப கஷ்டமாய் இருக்கும்ன்னு உனக்கு நான் பல தடவை சொன்னேனே.நீ அதை காதில் வாங்கிக்காம தினமும் பரீட்சைக்கு விட்ட ‘லீவிலே’ கூட கிரிக்கெட் ஆடி வந்து உன் பொண்ணான நேரத்தே வீணாக்கி விட்டே.இப்போ உன் வாழக்கைலே ஒரு வருஷம் வீணாப் போயிடுச்சேடா.இப்ப என்ன டாப் பண்ண போறே”என்று கத்தினார்.அப்பா கத்தல் ஓயட்டும் என்று காத்து கொண்டு இருந்த முத்து நிதானமாக தன் அப்பாவைப் பார்த்து ”அப்பா நீங்க சொன்னது நிஜம் தான் அப்பா.நான் என் பாடங்களே சரிவர படிக்கலேப்பா.என்னை மன்னிச்சிடுங்கப்பா.நான் மறுபடியும் எட்டாவது சேர்ந்து படிச்சு நிச்சியமா ‘பாஸ்’ பண்றேன்ப்பா.என்னை மறுபடியும் எட்டாவது படிக்க வையுங்கப்பா” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் முத்து.“வேணாம்ப்பா.எனக்கு என்னவோ நீ இன்னும் ஒரு வருஷம் எட்டாவது சேர்ந்து படிச்சாலும் ‘பாஸ்’ பண்ணுவே என்கிற நம்பிக்கை எனக்கு இல்லே.பேசாம ஏதாவது ஒரு வேலையிலே சேர்ந்து, அந்த வேலையை நல்லா கத்துக் கிட்டு வந்து,அப்புறமா அந்த வேலையிலே சேந்து அதை செஞ்சி வா” என்று கோபத்தில் கத்தினார் சரவணன்.ஆனால் முத்துவோ விடாமல் ”அப்பா, நான் எந்த வேலைக்கும் போய் சேர மாட்டேன்.எந்த வேலையையும் நான் கத்துக்க மாட்டேன்ப்பா.நான் எட்டாவது படிக்கணும்ப்பா.என்னை மறுபடியும் எட்டாவது படித்து வர ‘சரி’ன்னு சொல்லுங்கப்பா” என்று மறுபடியும் மறுபடியும் சொல்லி வந்தான்.சரஸ்வதி இது வரை அப்பா பிள்ளை பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு கோவம் வந்தது.

“ஏங்க, இந்த சின்ன வயசிலே அவன் எந்த வேலைக்குப் போய் கத்துப்பான்.அவனுக்கு யாரு ங்க வேலைக் கத்துக் கொடுப்பாங்க.அவன் தான் நான் மறுபடியும் எட்டாவது சேர்ந்து படிக்கிறேன்னு கதறி வரானேங்க.அவன் சின்ன பையன் தானேங்க.அவன் மறுபடியும் எட்டாவது சேர்ந்து படிக்கட்டு ங்க”என்று முத்து சொன்னதையே சொன்னாள்.உடனே முத்துவும் “ஆமாம்ப்பா,நான் எட்டாவது சேர்ந்து படிக்கிறேன்ப்பா” என்று மறுபடியும் சொன்னான் சரஸ்வதி .சரவணன் வேறு வழி இல்லாமல் முத்துவை மறுபடியும் எட்டாவது படிக்க அதே பள்ளியில் சேர்த்தார்.முத்துவும் சந்தோஷமாய் பள்ளிக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தான்.முத்து தன்னால் முடிந்தவரை கஷ்டப் பட்டு படித்து வந்தான்.நிறைய பாடங்களில் அவனுக்கு சந்தேகங்கள் இருந்துக் கொண்டு தான் இருந்தது. பாடங்களில் சந்தேகம் வரும் போது அந்த சந்தேகங்களை அவன் நண்பர்களிடம் கேட்டு வந்தான். நன்றாய் படித்து வரும் நண்பர்கள் முத்து கேட்ட சந்தேகங்களை விளக்கி சொல்லும் போது அவனு க்கு சரியாகவே புரியவில்லை.வெறுமனே தன் தலையை ஆட்டி விட்டு புரிந்தது போல இருந்து வந்தான்.முத்து வருடாந்ந்திர பரீட்சைகள் ஆரம்பித்தது.அவன் பரீட்சைகளை ரொம்ப சுமாராகத் தான் எழுதி இருந்தான்.

பள்ளிக் கூடத்தில் எட்டாவது பரீட்சை ‘ரிசல்ட்டுகள்’ வந்தது.முத்து இந்த வருஷமும் பெயில் ஆகி இருந்தான்.முத்துவுக்கு அவன் அப்பா அம்மா முகத்தைப் பார்க்க வெக்கமாக இருந்தது.அவன் வெறுமனே “அப்பா,அம்மா நான் உங்களை ஏமாத்தி விட்டேன்ப்பா.நான் என்னால் முடிஞ்ச வரை யில் ரொம்ப கஷ்டப் பட்டுத் தான் நான் படிச்சு வந்தேன்.என்னால் எல்லா பரீட்சையிலும் ‘பாஸ்’ மார்க் வாங்க முடியலே.என்னை மன்னிச்சு விடுங்க”என்று சொல்லி விட்டு தன் முகத்தை கையில் புதை த்துக் கொண்டு அழுதான்.சரவணன் முத்துவுக்குத் தேத்தறவு சொல்லி “போனால் போகட்டும். பரீட்சை ‘பாஸ்’ பண்ண ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சு வரணும்.நல்ல மூளையும் வேணும்ப்பா.தவிர அந்த கடவுள் அனுக்கிரஹமும் இருக்கணும்ப்பா.இந்த மூனும் உனக்கு இல்லியே முத்து. என்ன பண்ணுவது.எழுந்திரி.இப்ப அழுவறதாலே என்ன பிரயோஜனம் சொல்லுப்பா” என்று சொல்லி முத்து வை எழுப்பினார் சரவணன்.சரஸ்வதி ஒன்னும் சொல்லாமல் முத்து இப்படி ‘பெயில்’ ஆகி விட்டு இருக் கானே என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.ஒரு பத்து நிமிஷம் கழித்து சரவணன் “முத்து, நீ எங்கேயும் வேலை கத்துக்க எல்லாம் போகவே வேணாம்.பேசாம என் கூட தினமும் என் மளிகைக் கடைக்கு வா.நான் உனக்கு என் மளீகைக் கடை சமாசாரங்களை எல்லாம் விவரமா கத்துக் குடுக்க றேன்.அதை நீ நல்லா கத்துக்க.எனக்கு உபயோகமா இருக்கும்”என்று வருத்தப் பட்டு கொண்டே சொன்னார்.சரஸ்வதிக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் தன் கணவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.தன் கணவனை ‘முத்துவை இன்னும் ஒரு தரம் எட்டாவது சேர்த்து படிக்க வைக்கலாமா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

திடீரென்று முத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ”அப்பா கடைசியாக ஒரு தடவை இந்த வருஷம் என்னை மறுபடியும் எட்டாவது சேத்து படிக்க வையுங்க.நான் எப்படியாவது கஷ்டப் பட்டு படிச்சு எட்டாவதை ‘பாஸ்’ பண்ணி விடறேன்”என்று கெஞ்சினான்.உடனே சரஸ்வதி தன் கணவனை பார்த்து “எனக்கும் அது தான் சரின்னு படுதுங்க.முத்துவை இந்த ஒரு தடவை நீங்க மறு படியும் எட்டாவது சேத்து படிக்க வையுங்க.அவன் நிச்சியமா இந்த தடவை எட்டாவது ‘பாஸ்’ பண்ணி விடுவாங்க.இப்போப் பிடிச்சு அவன் உங்க மளிகைக் கடைக்கு எல்லாம் உங்க கூட வந்து ஒரு வேலை யும் கத்துக்க வேணாங்க.அவன் ஒரு புருஷப் பையனுங்க.அவன் பள்ளிக் கூடத்துக்குப் போய் படிச்சு வரட்டுங்க.அவனுடன் நீங்க கொஞ்சம் போய் அவன் வாத்தியார்களிடம் விவரமா சொல்லி அவனை எட்டாவது சேர்த்து விட்டு வாங்க” என்று கண்டிப்பாய் சொன்னாள்.சரஸ்வதி சொன்னதைக் கேட்ட சரவணனுக்கு என்னப் பண்ணுவது என்றே தெரியவில்லை.’ஏன் இந்த சரஸ்வதிக்கு இது விளங்க லே.இப்படி பிள்ளையும் மணைவியும் விடாம பிடிவாதம் பிடிச்சுக் கிட்டு வராங்களே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டார் சரவணன்.அவர் மெதுவாக ”நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் கொஞ் சம் கவனமா கேளுங்க. ஏற்கெனவே முத்து அவன் வாழ்க்கையிலே ரெண்டு பொண்ணன வருஷங் களை எட்டாவது படிச்சே வீணாக்கி விட்டான்.சின்ன வயசிலே ஐஞ்சாவது படிக்கும் போது பரீட்சை நேரத்திலே டைபாயிட், பரீட்சை எழுதாம ஒரு வருஷம் வீணாகிப் போனது,உங்களுக்கு ஞாபகம் இல்லையா.இப்பவே முத்துவுக்கு வயசு பதெனெட்டு ஆவுது.அவன் எட்டாவது படிச்சு ‘பாஸ்’ பண்ணி முடிக்கிற வேளைக்கு அவன் வயசு பத்தொன்பதை தாண்டி விடும்.இப்ப பிடிச்சே அவன் என் மளிகை கடைக்கு வந்து மளிகை கடை விவரங்களை எல்லாம் கத்துகிட்டு வர மூனு வருஷமாவது ஆகும் அப்படி அவன் மளிகைக் கடை நுணுக்கங்களை எல்லாம் கத்து கிட்டா, நான் பாங்கிலே கடன் வாங்கி அவனுக்கு ஒரு சின்ன மளிகைக் கடையை வச்சுக் கொடுக்கலாம்ன்னு ஆசைப் பட்டேன்.ஆனா நீங்க ரெண்டு பேரும் சொல்றதைப் பாத்தா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே”என்று சொல்லி வருத்தப் பட்டார்.முத்து அவன் வாயைத் திறந்து பேசுவதற்கு முன்னால் சரஸ்வதி தன் கணவனைப் பார்த்து “வேணாங்க.அவன் மளிகைக் கடைக்கு போய் ஒன்னும் கத்துக்க வேணாங்க.அவன் எட்டா வது சேர்ந்து படிச்சு ‘பாஸ்’ பண்ணட்டுங்க.புருஷப் பையனுக்கு வயசு ஒன்னும் முக்கியம் இல்லீங்க. அவன் கூட நீங்க கொஞ்சம் போய் அவன் வாத்தியார்ங்க கிட்டே விவரமா சொல்லி அவனை எட்டாவது சேர்த்து விட்டு வாங்க”என்று சொல்லி விட்டு முத்துவைப் பார்த்து “முத்து,நீ இந்த வருஷம் கஷ்டப் பட்டு படிச்சு வந்தா, நிச்சியமா எட்டாவது ‘பாஸ்’ பண்ணி விடுவே.உனக்கு நான் அப்பாவை எல்லா பாடங்களுக்கும் ‘ட்யூஷன்’ வாத்தியாரை வக்கச் சொல்றேன்.’டியூஷன்’ வாத்தியார் சொல்லிக் கொடுக்கிறதை நீ நல்லாக கவனிச்சு வந்து,நல்லா படிச்சு வந்தா நீ ‘பாஸ்’ பண்ணி விடுவே” என்று முத்துவை பார்த்து சொன்னாள் சரஸ்வதி.ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிச்சு வரவே,வேறே வழி இல்லாமல் சரவணன் முத்துவை மறுபடியும் எட்டாவது சேர்த்து படிக்க வைத்தார்.

அன்று காலையில் எழுந்ததும் கமலா அவ அம்மா கிட்டே தனியாக் கூப்பிட்டு தன் உடம்பைப் பத்தி ரகசியகாக ஏதோ சொன்னாள்.உடனே தேவி கமலாவை தனியாக உட்கார வைத்து அவள் ‘வயசுக்கு’ வந்து விட்டு இருக்கா என்கிற விஷயதை மெதுவாகச் சொல்லி இனிமே அவ எப்படி இருந்து வரணும்,அவ உடம்பை அவ எப்படிப் பார்த்துக் கொள்ளணும் என்கிற விவரத்தை எல்லாம் ரக சியமாகச் சொன்னாள்.பிறகு தன் அத்தையை அழைத்து இந்த நல்ல சமாசாரத்தை சொன்னாள் தேவி.உடனே ரத்தினம் ராஜ்,தேவி மூவரும் தங்கள் சண்டையை மறந்து விட்டு கமலாவுக்கு ‘மஞ்சள் நீராட்டு விழாவுக்கு’ ஏற்பாடு பண்ண ஆரம்பித்தார்கள்.குடிசை வாசலில் ஒரு பெரிய ‘டெண்ட்’ போட் டார்கள்.கமலாவை தனியாக ஒரு இடத்தில் தேங்காய் இலை,மாவிலை,வேப்பம் இலை எல்லாம் போ ட்டு அவ¨ளை உட்கார வைத்து விட்டு உறவினர்கள்,அந்த குடிசை பகுதியில் இருக்கும் அனை வருக்கும் கமலா ‘வயசுக்கு’ வந்த சேதியை தேவியும்,ரத்தினமும், ராஜ்ஜும் சொல்ல ஆரம்பித்தார்கள். விஷயம் கேள்விப் பட்டவுடன் ‘திபு’ ‘திபு’ என்று அந்தக் குடிசைப் பகுதி பெண்களும்,குழந்தைகளும் தேவியுன் குடிசைக்கு வர ஆரமபித்தார்கள்.ராஜ் மதியம் ஆட்டுப் பிரியாணி போட எல்லா ஏற்பாடு களும் பண்ணி விட்டு ஒரு பெரிய ஆட்டை வாங்கி வந்து கட்டி போட்டான்.ஆட்டு பிரியாணி பண்ண ரெண்டு பிரியாணி பண்ணும் சமையல்காரர்களை வரவழைத்தான்.குடிசையில் கால் வைக்க இடம் இல்லை.அத்தனை கூட்டம் வந்தது.அப்பா,அம்மா, பாட்டி மூவரும் செய்து வரும் ஆடம்பர செலவை நினைத்து வருத்தப் பட்டு வந்தாள் செந்தாமரை.கமலா ‘மஞ்சள் நீராட்டு விழாவை’ ராஜ்ஜும் தேவியும், ரத்தினமும் மூன்று நாட்களுக்கு தங்கள் கையில் இருந்த பணத்தையும்,கடன் வாங்கி வந்த பணத்தையும் வாரி இறைத்து செலவு பண்ணி கொண்டாடினார்கள்.பள்ளிக்கூடம் விட்ட பத்து நாட்கள் லீவில்,செந்தாமரைக்கு நான்கு நாட்கள் கமலா ‘மஞ்சள் நீராட்டு விழா’வுக்கு போய் விட்டது. நான்கு நாட்கள் ஆனதும்,’விழாவுக்கு’ வந்து இருந்த எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்ட பிறகு செந்தாமரை தன் புஸ்தகங்களை எடுத்து மறுபடியும் படிக்க ஆரம்பித்தாள்.

பள்ளிக்கூடத்தில் வருஷாந்திர பரீட்சைகள் ஆரம்பம் ஆகியது.வழக்கம் போல் செந்தாமரை எல்லா பரீட்சைகளையும் மிகவும் நன்றாக எழுதி இருந்தாள்.ஆனால் கமலாவோ எல்லா பரீட்சை களையும் ரொம்பவே சுமாராக தான் எழுதி இருந்தாள்.தேவி சித்தாள் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்ததால் அவள் கையில் கொஞ்சம் பண நடமாட்டம் இருந்து வந்தது.அந்த பணத்தை தேவி சேமித்து வைத்து வந்தாள்.வீட்டில் ராஜ்ஜுக்கு வருமானம் இல்லாத போது அதை செலவழித்து வந்தாள்.பள்ளியில் ‘ரிஸல்ட்’ போட்டார்கள்.கமலா எல்லா பாடங்களிலும் ‘பெயில்’ ஆகி இருந்தாள் ஆனால் செந்தாமரை வழக்கம் போல நல்ல மார்க் வாங்கி எட்டாவது ’க்லாசிலும்’ பள்ளிகூடத்தில் முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி இருந்தாள்.பள்ளிக் கூடத்தில் எல்லா வாத்தியார்களும் செந்தா மரையை கூப்பிட்டு அவள் வகுப்பில் முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணினதற்கு அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.செந்தாமரை தன் குடிசைக்கு வந்து தன் அம்மா,அப்பா பாட்டிக்கும் தான் வகுப்பிலே முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி இருக்கும் சந்தோஷ சமாசாரத்தைச் சொன்னாள்.தேவிக்கு ரொம்ப சந்தோஷம்.தேவி செந்தாமரையைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.கமலா ‘பெயில்’ ஆகி விட்டு இருந்ததாலும்,அவளுக்கு படிப்பில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாது இருந்ததாலும் தேவி கமலாவை பள்ளிக் கூடம் அனுப்பாமல் வெறுமனே வீட்டிலேயே இருந்து வரச் சொன்னாள்.

பள்ளிக்கூடத்திற்கு தன்னுடைய எட்டாவது மார்க் ‘ஷீட்டை’ வாங்கப் போனாள் செந்தாமரை. அப்போது செந்தாமரைக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் சுந்தரம் பிள்ளை செந் தாமரையை தன் ரூமுக்கு கூப்பிட்டு “செந்தாமரை,நான் உனக்கு இந்த மூனு வருஷமா சொல்லிக் குடுத்து வறேன்.இது வரைக்கும் என் கிட்டே படிச்ச எந்த மாணவணும், மாணவியும் சரி உன்னைப் போல இவ்வளவு புத்திசாலியாக இருந்ததே இல்லை.உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெரு மையா இருக்கு உனக்கு மேலே படிக்க ஆசை இருக்கா” என்று கேட்டதும் செந்தாமரைக்கு தான் காண்பது கனவா இல்லை நனவா என்று புரியாமல் விழித்தாள்.சிறுது நேரம் கழித்து செந்தாமரை அந்த கணக்கு வாத்தியாரைப் பார்த்து “எனக்கு மேலே படிக்க ரொம்ப ஆசை சார்.ஆனா நான் ஒரு சேத்துப்பட்டு குடிசைப் பகுதியிலே இருந்து வரப் பொண்னு.நாங்க ரொம்ப ஏழைங்க சார். தினமும் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப் பட்டு வறோம்.நான் பள்ளிக் கூடத்துக்கு எப்படி பணம் கட்டி ஒன்பதா வது படிக்க முடியும்” என்று சொல்லும் போது செந்தாமைரை கண்ணில் கண்ணீர் வழிந்தது.உடனே அந்த கணக்கு வாத்தியார் “எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும் செந்தாமரை.நீ கவலையே படாதே. எனக்குக் குழந்தைங்க கிடையாது.எனக்கு ரொம்ப தெரிஞ்ச என் குடும்ப நண்பர் ஒருவர் நுங்கம்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் ஒரு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சி வறார்.நான் அவர் கிட்டே பேசி,என் செலவிலே உன்னை அந்தப் பள்ளிக் கூடத்திலே சேத்து விடறேன்.உனக்கு பன்னா டவது வரைக்கும் நான் பள்ளிக் கூட பீஸ் கட்டி வரேன். நீ அந்தப் பள்ளிக் கூடத்திலே பன்னாடா வது வரை படிச்சு வா.இப்போ ‘க்லாஸிலெ’ முதல் மாணவியா வருவது போல,நீ அந்தப் பள்ளியிலும் எல்லா வருஷமும் முதல் மாணவியாக வரணும்.உங்க வீட்டிலே உன்னை மேலே படிக்க அனுப்புவா ங்க இல்லே செந்தாமரை” என்று கேட்டார்.தன் கணக்கு வாத்தியார் சொன்னதைக் கேட்ட செந்தாம ரைக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.உடனே செந்தாமரை அவர் காலைத் தொட்டு ”சார்,நீங்க எனக்கு வெறுமனே ஒரு கணக்கு வாத்தியார் மட்டும் இல்லே சார்.என்னை வாழ வச்ச தெய்வம். .நான் நிச்சியமா எங்க அப்பா அம்மா கிட்டே ‘பர்மிஷன்’ வாங்கி மேலே படிக்கிறேன் சார்.உங்களுக்கு நான் எப்படி என் நன் றியை தெரிவிக்கறது என்று தெரியாம திண்டாடறேன்..நீங்க பண்ற இந்த உதவியை நான் என் காலம் பூராவும் நான் மறக்க மாட்டேன்.நீங்க ஆசைப் பட்டது போல நான் எல்லா வருஷமும் நல்லா படிச்சி, வகுப்பிலே முதல் மாணவியாக நிச்சியமா வருவேன்.உங்க ஆசையை நான் நிச்சிய மா பூர்த்தி பண்ணுவேன் சார்”என்றாள் சந்தோஷப் பட்டுக் கொண்டே.அவள் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

“ரொம்ப சந்தோஷம் செந்தாமரை.உன்னைப் போல ஒரு புத்திசாலிப் பொண்ணு படிப்பு செலவுக்கு நான் பணம் கொடுத்து உதவுவதை பெருமையாக நினைக்கிறேன்.நீ மேலே அந்த நுங்கம் பாக்கம் பள்ளிக்கூடத்திலே படிக்க உன் அப்பா அம்மா ‘பர்மிஷன்’ வாங்கி வச்சுக்க.நான் இன்னும் மூனு நாளைக்குள் அவர் கிட்டே பேசி,உனக்கு ஒன்பதாவதுக்கு ஒரு ‘சீட்’ வாங்கி உன்னை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடறேன்.நீ நாலு நாளைக்கு அப்புறமா வந்து என்னை பார்” என்று சொன் னார் அந்த கணக்கு வாத்தியார்.“நான் நிச்சியமா என் அப்பா அம்மா ‘பர்மிஷன்’ வாங்கிக் கிட்டு, உங்களை நாலு நாள் கழிச்சு பள்ளிக்கூடத்தில் வந்து பாக்கறேன் சார்” என்று சொல்லி விட்டு பள்ளிக் கூடத்தை விட்டு வெளியே வந்தாள் செந்தாமரை.

வழி நெடுக செந்தாமரை ‘நாம் நிறைய மேலே படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம். ஆனால் இந்த இலவச பள்ளிகூடத்திலே எட்டாவது படிச்சு முடிச்ச அப்புறமா மேலே படிக்க பணம் கட்டித் தானே நாம் உயர் நிலைப் பள்ளியில் படிக்க வேணும்.நம் குடும்பம் இருக்கிற ஏழமையான சூழ் நிலையில் இது முடியாதே,நம் படிப்பை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமே என்கிற எண்ண த்தில் இருந்து வந்தோமே.நம் அம்மா ஒருத்தி தானே நம்ம வீட்டில் பெண்கள் படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப் படுறாங்க.பாட்டியும் சரி,அப்பாவும் சரி,படிப்பே வேணாம்ன்னு தானே நினைக் கறாங்க.என் ஆசை ஒரு நிறைவேறாத ஆசையாகத் தான் போய் விடப் போவுதுன்னு தானே நாம நினைச்சு வந்தோம்.இந்த நேரம் பாத்து நாம் தினமும் வேண்டி வரும் விநாயகப் பெருமான்,நம்ம கணக்கு வாத்தியார் ரூபத்திலே வந்து, நம்மை ஒரு உயர் நிலைப் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைக் கிறேன்னு சொல்லிஇருக்காரே.குடிசைக்குப் போய் அப்பா அம்மா ஆயா ‘பர்மிஷன்’ வாங்கி,நாம இந்த சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்தி வந்து நல்லாப் படிச்சு வாழக்கையிலே முன்னுக்கு வர வேணும். அப்பா அம்மா ஆயா ‘பர்மிஷன்’ குடுத்த பிறகு, அந்த வாத்தியார் கிட்டே நம் நன்றியை சொல்லணும்’ என்று தன் மனதில் சொல்லி கொண்டாள்.தன் குடிசைக்கு வந்தாள் செந்தாமரை.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *