சுட்டவடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 7,616 
 

வாங்கியபிறகுதான்தெரிந்தது,இவன்கடந்த ஓரிருகடைகளில் வடைஇருந்தது என/இதற்காய்புது பஸ்டாண்ட வரை போயிருக்க வேண்டாம்.

சிவகாசி ரோட்டின் நீட்சியில் பாலம் கடந்து அமைந்திருக்கிற புது பஸ்டாண்டிற்கு எதிர்தாற் போல் இருக்கிற கடையில்தான் வடை வாங்கினான்.

இப்படிஒருகடைஇங்கு இருப்பதாய் இத்தனை நாட்களாய்தெரியாது இவனுக் கு, நண்பர்மூலமாகத்தான் அறிமுகம்,என்றோ எப்பொழுதோ அந்தப் பக்கமாய் போய் வந்த பொழுது என்பதாய்நினைவு.இருசக்கரவாகனத்தில் போய்வந்தது மூளை அலுப்பும் உடல் அலுப்புமாய் ஒன்று சேர்ந்து கொள்ள ஒருஇளம் டீ சாப்பிட்டால்நன்றாகஇருக்கும்,கூடவேவடை,பிஸ்கட் அல்லதுவாழைப் பழம் என ஏதாவது சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம்நன்றாக இருக்கும்,மதியம் சரி யாக சாப்பிடமுடியவில்லை, சிறிதுநாட்களாகவேஅப்படித்தான் இருக்கிறது, ஏன் எனத்தெரியவில்லை.

வழக்கமாய் காண்பிக்கும் டாக்டரிடம் போனபோது தங்களது பழக்க வழக்கங் களைஅடியோடுமாற்றிக்கொள்ளுங்கள்இல்லையெனில்இப்படித்தான் இருக் கும்.பின்என்னையோஎன்மருத்துவத்தையோவருத்தப்படுவதில்பிரயோஜனமில்லை என்றார்.இப்பொழுது அவர் சொல்வதில் எதை விடுவது எதை எடுப்பது எனத் தெரியவில்லை.அதிகமாய் குடிக்கக்கூடாது இன்று டீ என நினைக்கிற நாளில்தான்இன்னும்கொஞ்சம்கூடிப்போகிறதாய்.அதுஏன் அப்படிஎனத் தெரிய வில்லை, அதற்குமாய்சேர்த்து அதே டாக்டர்தான் சொன்னார், எல்லாம் மனோ நிலையின் வினை என./வாஸ்தவமாய் இருக்கலாமோ அவர் சொன்னது என சீரியஸாய் நினைக்கத்தோணுகிற வேளை ஏதாவது ஒரு கடையில் நின்று டீக் குடித்துக்கொண்டே அதைப்பற்றி நினைக்கிறநிலையினனாய்ஆகிப்போகிறான்.

இன்று எப்படி ஆனாலும் பரவாயில்லை அல்லது டாக்டரின் அறிவுரையை மீறியதாகவே இருக்கட்டும்,பரவாயில்லை,அசரீயாய் அவரிடம்போய் ஏதாவ து ஒரு குரல்அவரிடம்போய்கூறினாலும்கூட பரவாயில்லை. இன்றுகுடித்தே ஆக வேண்டும் ஒருடீஎனநினைத்துக்கொண்டேவந்த வேளையில் கண்ணுக்கு தென் பட்டதாய் அந்தசாலையோர டீக்கடை.

டீக்கடைகள்எப்பொழுதும்டீசுமந்து மட்டும் இருப்பதில்லைஎன்பதற்கு அந்தக் கடைவிதிவிலக்காய்இருக்கவில்லை,டீஇருந்தது, வடை இருந்தது, நான்கை ந்துரகங்களில்,இதுபோகபஜ்ஜி,சுண்டல்,தட்டாம்பயறு,பாசிப்பருப்பு,,,,எனவைத்தி ருந்தார்கள்.இவைகள் அனைத்தின்பக்கத்திலேயே கலர் காட்டிக் கொண் டு இருந்த தாய்இரண்டுவகை சட்னிகள்,ஒன்று தேங்காய்ச் சட்னி,இன்னொன்று தக்காளிச் சட்னி என கலர் காட்டி இருந்ததாய் தெரிந்தது,

செவ்வகமாய்அடைபட்டிருந்த கண்ணாடிப்பெட்டிக்குள்ளாய் இருந்த இத்தனை யும் என்னை பார்,எடுத்துச்சாப்பிடு என கோரிக்கை வைக்கிற நேரமாய்த்தான் ஆகிப்போகிறது ஒவ்வொரு கடைக்குச்சென்றும் டீ சாப்பிட நேர்கையில்/

பரவாயில்லை என சிலரும் அதெல்லாம்வேண்டாம் வெறும் டீ மட்டுமே இவ்வுடலுக்குஏற்றதுஎனசிலருமாய்டீமற்றும்வடையுடன் சேர்ந்த டீயுமாய் சாப்பிட்டு ப் போவது வழக்கமாகிப்போகிற வேளையின் நகர்வொன்றில்தான் இவனது வருகை அங்கு நிகழ்வதாய்/

அன்றொரு நாளின் மாலை என்பதாய் நினைவு.இவனும் நண்பனுமாய் கம்ப் யூட்டரில் கதை ஒன்றை அவருக்காய் டைப்ப்பண்ணிமுடித்து விட்டு இங்கு வந்து தான் டீக்குடிக்க வந்தார்கள்.அவர்தான் வேண்டாம்வேண்டாம் எனச் சொல்ல உளுந்த வடை ஒன்றையும்,பஜ்ஜி ஒன்றையுமாய் வாங்கி இரண்டு சட்னிகள் ஊற்றிய பிளாஸ்டிக் தட்டில் வைத்துக் கொடுத்தார்.

சட்னியில்மிதந்தவடைகளைப்பிய்த்துச்சாப்பிடுகையில்அதுவும்நன்றாகத்தான்இருந்தது,இதுநாள்வரைஇப்படியாய்ச்சாப்பிட்டுஇவனுக்குப்பழக்க
மில்லை.மிகவும்ஆசையாக இருந்துநாவின் சுவையறும்புகள் ஏதாவது வடை அல்லது பஜ்ஜி எனசாப்பிட்டால்நன்றாயிருக்கும்எனபறையறிவித்தால்
வலது கையின் நுனிவிரல்கள்ஐந்தையும்கூட்டி ஒற்றையாய் வடை ஒன்றை எடுத்துசாப்பிட்டு விட்டுஅதற்கு பரிகாரமாய் இரண்டுஅல்லது ஒன்றரை டம்ளர் தண்ணீரைக் குடித்து விட்டு டீ சாப்பிட்டுவிட்டு வருவதுதான் இவனது வழக்கமாய் இருந் தது இதுநாள் வரை.அதிலிருந்து விதிவிலக்காய் இந்த நாளின் நிகழ்வு பஜ்ஜி வடைப்ளஸ் சட்னிதாங்கியபிளாஸ்டிக் தட்டுடனாய் அமைந்து போனதில் கொஞ்சம்சந்தோஷமும்,கொஞ்சம் வருத்த முமாய்.

எண்ணைப்பலகாரமும்காரமானசட்னியும்இவ்வளவுஎனஅளவுகொள்ளாமல்உடலினுள்ளேபோய்க்கொண்டிருந்தால்,,,,?இப்பொழுதுஎதற்குஅன்றைய நாளின்சிந்த னையெல்லாம்அனாவசியமாக,,,,,,/என்ற முடிவோடு டீக்கடை முன்பாய் இரு சக்கர வாகனத்தில்பிரேக்கிட்டு நின்ற வேளை மாலை ஐந்து அல்லது ஐந்தரை இருக்கலாம்.அந்நேரத்திற்கேதெருவிளக்குகள்எரிந்துகொண்டிருந்தன, பிரகாசமாய்/ அப்பொழுதான் போட்டிருக்கலாம் ஒருவேளை/

டீக்கடைக்குஎதிர்த்தாற்போலிருந்தபெட்ரோல்பங்கின்நுழைவாயிலாய்த்தெரிந் த இடத்திலும் வெளிவாயிலாய் வாகனங்கள் வெளியேறும் இடத்திலு மாய் இரண்டுநியான்விளக்குகம்பங்கள்உயரமாய் நின்று ஒளியை உமிழ்ந்து கொண் டிருந்தன, பங்க்கின் மேற்க்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றில்கலந்து வந்த பாடல்களும் ,டீக்கடையில் ஒலித்தப்பாடலும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டைவையாக/

ஆனாலும் நன்றாகவே இருந்தது.இரண்டுமாய்/ இரண்டு வருடங்களுக்கு முன்பாய்எனத்தான்நினைவு,அப்பொழுதெல்லாம்டவுன்பஸ்களில்எப்,எம் ரேடியோ க்கள் ஒலித்துக்கொண்டிருந்த நேரமாய் இருந்தது. ஏதாவது மன அலுப்புடன் பஸ்ஏறினால் அலுப்பை ஆற்றிவிடுகிற மருந்தாய் பாடல்கள் அமைந்து போன துண்டு பஸ்ஸேறிச்சென்ற பல நாட்களில்/மாறாக மனஅலுப்பையும், சோர் வையும்கூட்டி விடுகிற பாடல்களுடன் விடை பெற்றுப் போன சிலநாட்களும் அமைந்துபோவதுண்டு.அப்படியாய்பஸ்ஸேறிப்போனஒருநாளன்றின் காலை வேளையில்இரண்டுபஸ்கள்மாறிஅலுவலகத்தி ற்கு போக வேண்டிய கட்டாய த்திற்குஉள்ளானவனாய்/முதலில்ஏறியபஸ்சில்ஒலித்துக்கொண்டிருந்தக்கொண்டிருந்தபாடலைக் கேட்டவாறே இறங்க வேண்டிய இடம் வந்து இறங்கியதும் ஏறிய பஸ் டவுன் பஸ்ஸாய் இருக்க கேட்டவாறே வந்திறங்கிய பாடலின் தொடர்ச்சியை கொஞ்சம் இடைவெளி விட்டுக்கேட்க நேர்ந்தது தற்செயலான ஆச்சரியமாய்பட்டுத்தெரிந்ததுஅன்றுமுழுவதுமாய்/

அதுபோலதான்இப்பொழுதுமாய்நினைத்துப்பார்க்கத்தோணியது,காரணம்இரண்டு இடங்களிலுமாய் பாடியது எப்.எம் ரேடியோதான்/ இரண்டிலுமாய் மிதந்து வந்த பாடலைக்கேட்டுவாறு டீக்குடித்துக்கொண்டிருந்த வேளையில்தான் மகனி டமிருந்து போன் வந்தது.எங்கிருக்கிறீர்கள் என.அவன் அப்படித்தான் முதலில் எங்கிருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள் எனக்கேட்டு விட்டுதான் பேசுவான். அன்றும்அப்படித்தான் பேசினான். சொன்னதும் தோதாகிப்போச்சி,வரும் போது வடை வாங்கிவாருங்கள்என/

இது நடந்து ஒருவாரம் ஆனபின் இன்றுதான் இங்கு வந்திருக்கிறான்.வீட்டை விட்டு கிளம்பும்போதே மணி பதினொன்று ஐம்பது ஆகிப்போனது. பதினென்றைக்குத்தான்காலைடிபன்சாப்பிட்டிருந்தான்.வயிறுஇன்னும்திம்மென்றுதான் இருந்தது.

முதல்நாள்இரவுவெகுநேரம்வரைவிழித்தது.காலையில்சாப்பிடமுடியவில்லை. மீறிச்சாப்பிட்டால் நெஞ்சுக் கரிக்கிறது.சரிஅதுபாட்டுக்கு கரிக்கட்டு ம் என நினைத்து விட்டுவிட முடியவில்லை.நிதானமாய் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினான் பாஜருக்கு.

பாலம்வழியாய் ஏறித்தான்போனான்.முதலாவது கேட்வழியாகப்போவதாய்த் தான்நினைத்துக்கிளம்பினானவீட்டிலிருந்து. ஆனால்கௌவர் மெண்ட் ஆஸ்பத்திரிபோனதும் எண்ணம் மாறியவனாய் அப்படியே நேரே விட்டுவிட்டான் இரு சக்கரவாகனத்தை.

அல்லம்பட்டி முக்குரோடுபோய் அப்படியே பாலம் ஏறி இறங்கினால் சமீபித்து விடுகிற பஜாரில் போய் காய்கறி மற்றும் மற்றுமானவைகளை வாங்கி வந்து விடலாம்தான்,முதலாவதாய்போகவேண்டியதுஎம்,என்.ஆர்ஜவுளிக்கடைக்குத் தான். ஜவுளி எடுத்த தவணைப்பாக்கியை கட்ட வேண்டும், உடனடியாய் கட்டா விட்டாலும் கூட கடைக்காரர் போன் கேட்டுவிடப்போவதில்லைதான். ஆனா லும் இவனுக்கு அப்படியேப்பழகிப்போனது.கஞ்சிக்கு இல்லையென்றாலும் கூடசரி,ஆஸ்பத்திரி ஜோலி கிடந்தாலும் சரி,மிகக்கறாராய் வாங்கிய கடனை சம்பளம் வாங்கியதும் கட்டி விடுவது அல்லது கையில் பணம் இருக்கும் போது கட்டி முடித்து விடுவது அல்லது கொஞ்சமாகவேனுமாய் கொடுத்து விடுவதுஎன்பது இவனதுபழக்கத்தில் இருக்கிற ஒன்றாய்,அதுஎப்படிஎனத்தெரியவில்லை.அதுவாய்இவனில்வந்து ஒட்டிக்கொண்ட பழக்கமா இல்லை இவனா ய் வலியச் ஏற்படுத்திக்கொண்ட பழக்கமா தெரியவில்லை.

கடன் வாங்கினால் ஏன் திரும்பக்கொடுக்க வேண்டும் இல்லை கொடுக்கும்போதுமுகத்தைசுண்டவைத்துக்கொண்டுகொடுப்பது என்கிறபழக்கத்தை பத்திரமாய்பாதுகாத்துவைத்திருப்பவர்களுடன்பழகியபோதும்கூடஇவனில் அப்படியானஒருதாக்கம்ஒருபோதும்ஏற்பட்டதில்லை இன்றுவரை. அதைஒருபெருமை யாகவும் எப்போதுமேநினைத்ததில்லைஇவன்.இவனைப் போல நிறையப்பேர் இருப்பதையும் பார்த்திருக்கிறான்.

பாலம்இறங்கிகருமாதிமடம் முக்கு திரும்புகையில் ரோடு கிடந்தது காலியாக. காலியாக என்றால் முற்றிலும் துடைத்து எடுத்த மாதிரி இல்லை.மற்ற நாட்க ளை விட இன்று கொஞ்சம் நடமாட்டம் சற்றே குறைச்சலாக இருந்தது அவ்வளவே/

அதற்காகசாத்தூர்ரோட்டை போலெல்லாம் கிடையாது, அதென்னது மனம் பல வீன மானவர்கள் ஞாயிற்றுக்கிழமைஅறியாமல்தெரியாமல்போய் விட்டால் பயந்து போக வேண்டும் போலிருக்கிறதே.என எண்ணத் தோணும் விதமாய் ஒரு சின்னடீக்கடை கூட திறந்திருக்காமல் இருப்பது வியப்பிலும் வியப்பாக வே/ அது போல் இல்லாமல் இங்கு ஓரளவிற்கு நடமாட்டம் இருந்தாலும் கூட மனித நடமாட்டம் அதிகமாய் இருந்த அந்த பொலிவு இல்லை.

இருசக்கரவாகனத்தைஓரம் கட்டிவிட்டு சனி ஞாயிறுகளில் சைக்கிளை ஓட் டித் திரிய வேண்டும் என்கிற முடிவைஅமல்ப்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம்இவனதுசோம்பேறித்தனமாஅல்லதுஉடல்மிதப்பாஎனத்தெரியவில்லை.இன்றும் சைக்கிள் ஓட்டுவது என்கிற முடிவை அமல் செய்ய முடியவில்லை.

பெரிய பேட்டையை நெருங்கி வரும் போதுதான் கவனிக்கிறான், சார்லஸ் வணக்கம் சொன்னதை.இவனுமாய்அவசரஅவசரமாய் வணக்கம்சொல்லி விட்டு ஏறிட்டபோதுதான்கவனிக்கிறான்..பேட்டையின் வாசலைஒட்டிஇருந்த முடங்கி போலான சிறிய இடத்தில் கடை போட்டிருந்தார்,அதே வாழை இலை, வெங் காயம்,தேங்காய் வியாபாரமே/

அவருக்குத்தெரிந்ததுஅதுதானேபின்வேறெதுபண்ணிகைச்சுட்டுக்கொள்வானே ன் எனஅதையேதொடர்ந்திருக்கலாம்,

இவன் வழக்கமாய் வெங்காயம் வாங்குகிற கடையில்தான் முன்பு சார்லஸ் வேலை பார்த்தார்.அதுவும் இது போலாய் வெங்காயம் மட்டும் விற்கும் கடை யாய் இருந்திருக்கவில்லை,வாழை இலை தேங்காய்,வாழைப் பழத்தார் என எல்லாம் கலந்து கட்டி விற்றது,சமயத்தில் வெள்ளைப் பூடெல்லாம்கூட விற்றார்கள்.தேங்காய்,வெங்காயம்,வாழை இலை இதில் ஏதாவது ஒன்றை வாங்க வருகிறவர்கள் கண்டிப்பாகஇல்லாவிட்டாலும் கூட கண்டிப்பற்றாவது வெள்ளைப்பூடுவாங்கமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பில்வைத்தவியாபாரம் தான் என்பார் கடைக்காரர்.

அப்படியான வியாபாரத்தை வாங்க வருகிறவர்கள் சார்லஸ்ஸைத்தைதான் நம்பிவந்தார்கள்எனச்சொல்கிறஅளவிற்கு சார்லஸின் நடவடிக்கை இருக்கும். அந்த அளவிற்குஅவர்கடைக்கு வருகிறவர்களிடம் நன்மதிப்பை சம்பாதித்து வைத்திருந்தார்.அந்தக்கடையில் வேலை பார்த்த நாட்களில். அவர் அங்கு எத்த னை வருடங்கள் வேலை பார்த்தார் என்பது இவனுக்கு சரியாக ஞாபகமில் லை.இவன் போய் அந்தக் கடையில் சரக்கு வாங்கிய அந்தஒன்னறை வருட மும் அவர்தான்இருந்தார்,அப்புறமாய்தான் அவரைப் பார்க்க முடியவில்லை, மழை நின்று போன ஒரு நாளின்மாலைப் பொழுதில் வெங்காயம் வாங்கப் போன பொழுதுஅவர் இல்லை .கேட்டதற்கு கடையில் இருந்துநின்றுவிட்டார் என்றார்கள்.

ஏதாவதுஇருக்கலாம்அவர்களுக்குள்ளாய்.கேட்டால்சொல்வார்கள்தான்,இவன் தான்கேட்கவில்லை,கேட்கவும்தோணவில்லை.அவரவர்களுக்கென ஒரு ஞாயம் சொல்வார்கள்.இது எதற்கென ஒதுங்கி நின்ற வேளை திடீரென ஒருபொழுதில்இப்படியாய்கடைக்கு முதலாளியாய்அவரைப்பார்க்கத் தோணிவிட்டதில் மிக்க சந்தோஷமே/

இருக்காதேபின்னே,அத்தனைநாட்களாய்கடைக்குப்போனபொழுதிலெல்லாம் ஆள்ப்பார்த்துதரம் பார்த்தும் சரக்குக்கொடுத்தவர் ஆயிற்றே ,அவரைப் பார்த்து விட்டு வெறுமனே கடந்து போகமுடியவில்லை.சற்று தூரம் போய் விட்டவன் வண்டியை திருப்பிவந்து பதில் வணக்கம் சொல்லி விட்டு இப்பொழுது இங்கு தான்கடைபோட்டிருக்கிறீர்களாஎனஆரம்பித்துஅவரதுநலன்விசாரித்து விட்டு இதோ காய்கறி வாங்கிவிட்டு வருகிறேன், போகும் போது கண்டிப்பாக எனச் சொல்லிவிட்டுச்சென்றான்,

சென்றவன் ஜவுளிக்கடைக்குள் நுழையும் போது அங்கு கண்ணன் அண்ணன் மட்டுமே இருந்தார்.எப்பொழுது போனாலும்சார் வாங்க வணக்கம் என வரவேற் பவராய் அவராகத்தான் இருக்கிறார்.அன்று ஒருநாள் கண்ணன் இல்லாத நான்றின்பொழுதுகடைக்குபோயிருந்தபொழுதுகடையின் முதலாளிதான் சொன்னார், என்னசார்கண்ணணையா தேடுறீங்க.அவன் போயிருக்கான் கடைக்கு டீ வாங்க,அவந்தான் சார்,நல்ல கடையாப்பாத்து டீ வாங்கீட்டு வருவான்,அவன விட்டாலும்பூராம்பொம்பளப்புள்ளைங்க,எல்லாம் நண்டும் சிண்டுமான வயசுப் புள்ளைங்க,இன்னொருத்தன் இன்னைக்கி லீவு/,அதான் அவன,,,,/

இம்புட்டுப்புள்ளையில கடைக்கிக்குவேலைக்கு வந்தான் சார் அவன் என அவர்கைவைத்துஉயரம்காட்டியபோதுஒருபதினைந்துஎனமதிப்பிட முடிந்தது. கடைமுதலாளியும்அதையே சொன்னார் ”கரெக்ட் சார் நீங்க நினைக் கிறது,பதினைஞ்சி வயசுதான் அவனுக்கு அப்ப,அப்பயெல்லாம் எங்களுக்கு கடையிலசரக்குஎடுத்துக்குடுக்க நேரம் இருக்காது,ஹோல் சேல்தான் மெயின் எங்களுக்கு.அப்ப இவன் கடையில நெழஞ்சது கரெக்டான டயம் பாத்துக் கங்க,தொழில் கத்துக்க,இப்பயும் கடையில வேலைக்கு இருக்குற இத்தன பேர்லஅவனப்போலபார்சல்போட யாரும் இல்ல சார், முன்னயெல்லாம் வியா பாரம் மும்பரமா நடந்துக்கிடிருந்த நேரம் அடிக்கடி வெளியூருக்கு பார்சல் போகும்,லாரியிலதான் அனுப்புவோம். அவந்தான் பார்சல் போடுவான் சரக்கு இங்கயிருந்து வடக்க வரைக்கும் போனாலும் ஒண்ணும் டேமேஜ் ஆகாது பார்சலுக்கு,அவ்வளவு கெட்டியா இருக்கும், ஒருதடவ கடைக்கி வந்திருந்த வடக்கத்திக்காரருரெண்டு சூட்கேஸ்லமாடல் கொண்டு வந்துருந்தாரு, மாடல யெல்லாம்பாத்து முடிஞ்ச பெறகு சூட்கேஸ்க்குள்ளதிரும்பவுமாஅவராலபொடவைகளையும்,மத்ததுணிகளையும்அடுக்கமுடியல, அடுக்கிஅடுக்கிப்பாக்குறாரு எதாவது கொஞ்சம் துணி மிச்சம் விழுகுது,சூட்கேஸ்குள்ள அடங் காம.அப்பத் தான்கண்ணன் வந்து கை வச்சான் பாருங்க,கிளினாஒருசூட்கேஸ்குள்ளயே எல்லாத் தையும் அடுக்கி முடிச்சிட்டான். இதபாத்துக் கிட்டிருந்த அவருக்கு ஒரே சந்தோஷமாப் போயிருச்சி, படக்குன்னு பையில இருந்து ஒருநூறு ரூபாத் தாளமுழுசாஎடுத்துஅவன்ட்டக் குடுத்துட்டு அப்பிடியேகையோடஹோட்டலுக்குக் கூட்டீட்டுப் போயிட்டாரு, அவனுக்கு டிபன் வாங்கிக்குடுக்க.

அந்தமாதிரிகெட்டிக்காரப்பையன்சார்அவன்,அன்னியில இருந்து அவனத்தான் லயனுக்குப்போகும்போதுகூட்டிக்கிட்டுப்போவோம்.இப்ப அவனுக்கு வயசாகிப் போச்சி,நமக்கும் யேவாரம்அப்படியேகொஞ்சம் படுத்துருச்சி, ஓடிட்டே திரிஞ்ச அவனும்இப்பஉக்காந்துக்கிட்டுஎங்ககூடயேவாரம் பாக்குறான். ஆமாம்”என கடை முதலாளி சொன்ன போது இப்படியாய் கடைக்கு ஒரு கண்ணன் இருப்பது தெரியவந்தது.

ஜவுளிக்கடையைவிட்டுஇறங்கும்போதேமதியம்மணிஒண்ணரைஆகியிருந்தது, இந்நேரம் காய்கறிக் கடை இருக்கும்தான்.ஆனால் காய்கள் நன்றாக இருக்கு மா என்பதுகேள்விக் குறியாக இருந்தது.போய்ப்பார்க்கலாம்,என போய்நின்ற போது காய்கள் அப்படி ஒன்றும் மோசமாய் இருக்கவில்லை.

அவ்வளவாய் கூட்டமுமில்லை கடையில் கடைக்காரரையும் சேர்த்து மூன்று பேர்தான் இருந்தார்கள்,இவன் கேட்ட காயெல்லாம் போட்டவர்,ஒரு காயை காண்பித்து இது சமயத்தில் கிலோ நானூறு,ஐநூறு ரூபாய் வரைப்போகும் என்றார்,அப்படி என்னதான் இருக்கிறது அதில்எனத் தெரியவில் லை.ஆனாலும் எவ்வளவு விலைக்கு விற்றாலும் இதை விரும்பி வாங்கிச்சாப்பிடுபவர்கள் எனஒருதனிக்கூட்டமே இருக்கிறார்கள் என்றார், அப்படியா என ஆத்த மாட்டா தவனாய் கேட்டுவிட்டு காய்கறியை வாங்கிகொண்டு வருகிற பொழுது தான் மனைவி போன் பண்ணுகிறாள் மதியம் சாப்பாட்டிற்கென எதுவும் காய்கறி செய்யவில்லை. ஏதாவது வாங்கி வாருங்கள் என/

அப்பொழுது படக்கென இவனுக்கு ஞாபகம் வந்தது வடை ஒன்று மட்டுமே, அதையன்றிமனதில்வேறொன்றும்உருகொள்ளவில்லை. என்னதான் எண்ணைப் பலகாரம் அதன் நன்மை தீமை என பலது பேசினாலும் சமயா சமயங்களில் அதை சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப் பட்டவனாய் இவனும் இவனது குடும்பமும்.

சுற்றிலும் எங்கும் டீக்கடை இல்லை,கடைகள் எல்லாம் மூட ஆரம்பித்திருந்த நேரம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியத்திற்கு மேல் கடை இருக்காது. வாரம்முழுமைக்குமாய்ஓடுபவர்கள் அன்று கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால்தான் அடுத்தடுத்த நாட்களில் ஓட முடியும்என்கிறநினைப்பே முடிவாய்இருக்கலாம் இப்படியாய் கடை மூடுவதற்கு/

இப்பொழுது எங்குபோக வடை வாங்க என யோசித்தவாறே சென்று கொண்டிருந்தபொழுதுபுதுபஸ்டாண்ட்அருகில்இருந்தடீக்கடைஞாபகத்திற்குவர நேராக போய் விட்டான் அங்கு.

இவன்அங்குபோனபோதுநிலைமைகொஞ்சம்மோசமாகவேஇருந்தது,வழக்கமாய் கண்ணாடிப் பெட்டிக்குள்ளாய் நிறைந்திருக்கும் வடைகளும் ஈஸ்ட்மென் கலர்ச்சட்னியும்இல்லை.மாறாகபோனால்ப்போகிறதுஎனகண்ணாடிப்பெட்டிக் குள்ளாய்ஒட்டிக்கொண்டு கிடந்த ஐந்தாறில் நான்கு வடைகளை மட்டுமாய் வாங்கிக்கொண்டு வரும் போதுதான் தெரிந்தது., இவன் கடந்த வந்த ஓரிருடீக் கடைகளில் வடை இருந்தது என/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *