(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை)
“வள்ளி, என் மகள் தாமரையைப் பாத்தியா” என்ற கேள்வி கேட்டப்படியே தாமரையைத் தேடி செல்கிறாள் சித்தி துளசியம்மாள்.
இவள் யாரு எதற்கு தாமரையைத் தேடிகிறாள். தாமரை யாரு? அவளுக்கு என்ன ஆச்சு? என்பதைக் இக்கதையில் காண்போம்.
துளசியம்மாள், கூலி வேலைக்காரி, அன்றாட தினக்கூலிக்கு செல்பவள். தாமரை தன் அக்கா மகள். அவள் அக்கா யாரையோ காதல் செய்து வயிற்றில் உண்டான குழந்தையை, அழிக்க முடியாமல் பெற்று எடுத்துவிட்டு இறந்து விட்டாள். சொந்தபந்தம்ன்னு சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அதனால் அவர்களின் தொந்த ஊரை விட்டு விட்டு வேறு ஊருக்கு தன் அக்கா மகளை, எடுத்துக் கொண்டு வந்தாள் துளசியம்மாள்.
அம்மா இறந்து விட்டாள், என்பதைத் தவிற தாமரைக்கு வேறு எதுவும் தெரியாமலே வளர்ந்து வந்தாள். தாமரைக்காக, துளசி வேறு கல்யாணம் கூட செய்து கொள்ளவில்லை.
அவள் பள்ளிப் படிப்பை ஒரு வழியாக முடித்தாள்.
தாமரைக்கு எல்லோர் மாறியும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை, ஆனால் அவள் சித்தியால் அவளை அனுப்புவதற்கு பணம் வசதி இல்லாதால் அவளை அனுப்ப யோசித்தால், இருப்பினும் “அம்மா இல்லாத புள்ள நாம தா பாத்துக்கணும், எல்லா புள்ளையும் போறாங்க சரி இவளும் போகட்டும் என்று நினைத்து, கடன் வாங்கி அவளைக் கல்லூரிக்கு அனுப்பினாள்.
நாட்கள் சென்றது, இரண்டு வருடங்கள் ஆனது.
ஒருநாள் வள்ளியும் துளசியும் வேலைக்கு செல்லும் போது, வள்ளி துளசியிடம், உண்மையைச் சொல்லாமா? வேண்டாமா? என்று யோசித்து உண்மையைச் சொல்கிறாள்.
அப்போது வள்ளி, துளசி நா சொல்லறன்னு தப்பா நினைச்சுக்காத, நா என் கொலுந்தியா வீட்டுக்கு, நேத்து போன அப்போ, உன் மக தாமரை ஒரு பையன் கூட மோட்டார் பைக்கில போறதப் பாத்தா, என்று மெதுவாக கூறிகிறாள்.
துளசி, “நீ வேற யாரையாது பாத்து இருப்ப, என் மக அப்படி இல்ல டி” என்று பயத்துடன் கூறினாள்.
வள்ளி, “ஏண்டி நா தாமரைய சின்ன வயதுசுல இருந்து பாக்கற, எனக்கு தெரியாத, நா என்ன வேணும்னேவா சொல்ல போற”
துளசி யோசிக்கிறாள்.
துளசி, “சில நாட்களாக தாமரையின் போக்கு சரி இல்ல தா, ப்பிரண்டுகிட்ட பேசுறன்னு சொல்லி எப்பா பாத்தாளும் போனையே வச்சுக்கற ஒரே குழப்பமாக தா இருக்குன்னு” என்று சொல்லி யோசிக்கிறாள்.
வள்ளி, “எனக்கு என்னமோ அவ கூட படிக்கற பையன்னாத இருப்பான் போல, பாத்த பணக்கார பையன் மாறி தா தெரியுது, அவன் கூட நம்ம தாமரை ரொம்ப சந்தோஷமா போறா, நீ அவ கிட்ட போய் விசாரி!” என்று உண்மையைக் கூறி விட்டு சென்று விடுகிறாள்.
துளசி வீட்டிற்கு சென்று தாமரைக்காக காத்து இருக்கிறாள்.
மாலையில் கல்லூரி முடிந்து வந்ததும், அவளை உற்று நோக்கினாள். மெதுவாக அவளை கேள்விக் கேட்கத் தொடங்கிறாள்.
வள்ளி சொல்லுகிறாள், “நீ யார்கூடவோ மோட்டார் பைக்கல போன ன்னு சொல்லுற உண்மையா? என்று துளசி மொரைத்துப் பார்த்து கேள்விக் கேட்கிறாள்.
தாமரை உண்மையை மறைக்க முயற்சி செய்கிறாள்.
ஆனால் துளசியின் கேள்வினால், உண்மைச் சொல்லி விடுகிறாள்.
“ஆமா சித்தி, நாங்க லவ் பண்ணுறோம், வாழ்ந்த அவன் கூட தா வாழ்வ, இல்ல செத்துறவ,” என்று சொல்லி ரூம்க்குள் சென்று விடுகிறாள்.
“அவள் அம்மா மாறியே தைரியம், ஆனால் இவள் சொல்வதைப் பார்த்தால், அவன் மீது எந்த அளவு நம்பிக்கை வைத்து இருக்கிறாள் என்று தெரிகிறது. இருந்தாலும் தன் அம்மா மாறி இவளும் ஏமாந்து விடக் கூடாது என்று கவலைப் பட்டாள்” அதனால், அவளிடம் ஏதும் கேள்விக் கேட்காமல், ஒன்றும் சொல்லாமல், தாமரையை விட்டு விட்டாள்.
இரவு வரை துளசி யோசித்துக் கொண்டே படுத்தாள்.
சூரியன் உதித்து, கோழிக் கூவி, பொழுது விடிந்தது.
தாமரையை எழுப்ப அவள் ரூம்க்கு சென்றுப் பார்த்தாள்.
அவள் அங்கு இல்லை, வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள், அவள் வீட்டிற்குள் இல்லை என்று தெரிந்தது, பயந்து போனாள். குழம்பினாள், பதறினாள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள்.
நீங்கள் நினைப்பது சரி தான், அவள் ஓடிப் போய் விட்டாள். அதனால் தான் துளசியம்மாள் தாமரைத் தேடிகிறாள்.
அவளை தேடி வெளியே அழைகிறாள், கால்கள் நடந்து நடந்து ஓய்ந்து போனது, அவள் கண்கள் பிறரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்து விட்டன. அனைவரிடமும் கேட்கிறாள். (இந்த உலகத்தில் அகண்ட, இருண்ட வானத்தில் இருக்கும் விண்மீன்களை விட அதிகப் போர் உள்ளனர். (தலைவனும் தலைவியும் அல்லாத பிறர்) என்று நினைத்துக் கொண்டு, அவளைத் தேடி அழைகிறாள் துளசியம்மாள்.
கரு: இதில் துளசியம்மாள் செவிலித் தாய் ஆகிறாள். தலைவி உடன் போக்கில் சென்று விட்டால், அவளை எங்கு சென்று தேடுவது என்று தவிக்கும் காட்சிப் படலம் விளங்குகிறது.
குறுந்தொகை 44 வெள்ளிவீதியார்
காலே பரி தப்பினவே, கண்ணே
நோக்கி நோக்கி வாள்
இழந்தனவே,
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப்
பிறரே.