கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 4,522 
 
 

ஒரு பல்சர்..பைக்..

டெனிம் புது ஷூ.. நல்லா ஸ்டைலா நண்பன் கூட பைக்ல வந்து இறங்குறான்..அந்த பையன்..

அவன் நடையில் ஒரு உத்வேகம் எதையோ ஒன்ன சாதிச்ச வெறி அவன் கண்ணுல மின்னுது..

பின்னுக்கே ஆட்டோல அந்த தங்கச்சி.. பையனின் சித்திகூட வந்து இறங்குது.. ஒரு டொப் டெனிம்..தலைய ஒரு விதமா சீவி ஒருவிதமா கிளிப் அடிச்சிருக்கு..

சேர்ந்து உள்ள போறாங்க..

வழக்கம் போல அந்த பொலிஸ் நிலையமும் ஏதேதோ விசயங்கள், விசாரனைகளுக்காக கொஞ்சம் பரபரப்பா தான் இயங்கிகிட்டு இருக்கு..

சினிமாவுல பார்க்கும் பொலிஸ் நிலையத்தை போலவே காகிதாகி மேசையில் குனிந்த தலை நிமிராமல் எழுதி கொண்டே இருக்கும் பெண் பொலிஸ்..

இடையில் வேகமாகவும் மெதுவாகவும் ஓர் அறையில் இருந்து இன்னொரு அறைக்கி சென்று கொண்டிருக்கும் வேற வேற போலிஸ் காரர்கள்..

அதுல ஒருத்தர் கிட்ட ஏதோ விசாரிச்சிட்டு இவுங்க நாலு பேரும் உள்ள நடந்து போறாங்க..

“நீ பயப்புடாம பேசு சரியா…

வீட்ல அடிச்சாங்கனு சொல்லுனு”

அப்பறம் வேற எதும் கேட்ட சொதப்பிறாம பதில் சொல்லு”

அப்டினு ஏதேதோ சொல்லி குடுத்துகிட்டே

பையன் பொண்ண முன்னால வேகமா கூட்டிட்டு போக..

பின்னால பையனோட நண்பனும் சித்தியும் வாறாங்க..

பையன் சில வருசமா இந்த பொண்ணோட பழக்கம்.. விசயம் பொண்ணு வீட்ல தெரிஞ்சி..

ஏசிருக்காங்க கண்டிசிருக்காங்க.. கேக்கல..

அடிச்சும் பாத்துட்டாங்க.. சரி வரல..

தங்கச்சி வந்துருச்சி பையனோட..

ஒரே பிரச்சினை..

வெட்டாம விடமாட்டேனு..

தங்கச்சி வீட்டு சொந்தகாரங்க கிளம்ப..

பையன்..நல்லா விசயம் தெரிஞ்சதால நிறைய ஐடியா போட்டு தங்கச்சி மூலமா அவுங்க அப்பா மேலயே என்றி ஒன்னு போட வச்சிட்டாரு..

பதினெட்டு வயசு தாண்டினதால எந்த பிரச்சினையும் இல்லன்றதையும் சட்டத்தகயும் புரிய வச்சி..

ஒரேடியா பொலிஸ வச்சே முடிச்சிக்க பாத்துதான்..

இப்போ பொலிஸ்க்கு வந்திருக்காங்க.. நேரத்துக்கு போய் ஒரு பொலிஸ் அதிகாரியோட கதைச்சிட்டு அங்க போட பட்டிருந்த நாற்காலிகள்ல உட்காந்திருக்காங்க..

பொண்ணு பக்கம் வீட்ல அவுங்க அப்பாவையும் அம்மாவையும் வர சொல்லி இருக்கு..அவங்க வர வரைக்கும் உட்கார சொல்லிருக்காங்க..

பையன்..எந்த பயமும் பதற்றமும் இல்லாம மீசைய லேசா முறுக்கிக்கிட்டே ரொம்ப மரியாதையோட பொண்ணுக்கு பக்கத்துல உக்காந்திருக்காரு

இடைல அந்த பொலிஸ்காரர்.”கொஞ்சம் இருங்க புள்ள வீட்ல இருந்து வந்துறட்டும்னு சொல்லிட்டு ஏதோ எழுதிகிட்டு இருக்காரு..

பையன் எழுந்து மரியாதையா சரிங்க சேர்னு சொல்லிட்டு உக்காருறாரு..

அது ஒரு பெரிய அறை.. தூர தூர தனி தனி மேசைகள்.. போடபட்டு அது அதுல சில இளம் பொலிஸ்கார்ர்கள் அப்பறம் ஒரு மூத்த கொஞ்சம் வயதான பொலிஸ்காரர் , சில பெண் பொலிஸ்காரங்கனு ஒவ்வொருத்தரும் ஏதேதோ வேலைகளில் மும்மரமா இருக்காங்க..

அடிக்கடி ஒலிக்கிற டெலிபோன் சத்தம்..

டொக் டொக்னு நடந்து போற சப்பாத்து சத்தத்துக்கு நடுவுல..

ஏதேதோ முறைபாடுகளுக்காக வந்திருக்க நம்ம ஆட்களின் கிசு கிசு பாசைகளும் ஒரு சில அழுகை சத்தமும் அடிபட்டு சிதறி போகுது..

தன்னோட எதிர்கால துணைவியோட கிசுகிசுத்துக்கொண்டிருந்த பையனை அவனோட நண்பன் தட்டி கூப்பிட்டு சொல்றான்..

“மச்சா அந்த ஆளு வன்டது..”

சின்னதா ஒரு பதற்றதோட லேசா திரும்பி பாக்குறாங்க அத்தன பேரும்..

ஒரு 45 வயசுக்கு குறைவாதான் இருக்கும்… விரைப்பான முகத்தோட வந்து நிக்கிறாரு..ஒருத்தர்..

முகத்துல வடிந்தோடுற வியர்வைய கையாலயே தொடச்சகிட்டு நிக்கிறாரு..

அடக்கமுடியாத கோபம் அவர் முகத்துல தெரிஞ்சாலும் சலனமே இல்லாம வந்து நிக்கிறாரு..

அப்பாவ கண்ட அடுத்த நிமிசமே

பையன்.. ஓடி போய்..

இந்தா பாருங்க சேர் புள்ளயோட அப்பா வந்திருக்காரு..

புள்ளைக்கி என்கூட வர தா சேர் விருப்பம். நீங்களே விசாரிச்சிகிங்க சேர்..

அப்டி இப்டினு நிறைய நிறைய பேசுறான் பையன்..

அது எல்லாத்தையும் கீழ குனிஞ்சபடி கேட்டுகிட்டே நிக்கிறாரு புள்ளையோட அப்பா..

புள்ளையும் பேசாம நிக்கிது..

என்னா பேசாம நிக்கிறீங்க ஏதாச்சம் பதில் சொல்லுங்கனு பொலிஸ் அப்பாவ பாத்து கேக்க..

இவரு கோபத்தோட விரைப்பா நா என்ன சொல்றதுங்க சேர்..

எனக்கு எனக்கு..

அவர் மொழியும் குரலும் நடுங்குது..ஏதோ பேச நினைச்சாலும் அவரால வந்த அழுகைய அடக்க முடில..

ஐயோ சேர் படிக்கிற புள்ள சேர்..

மூத்த புள்ள சேர்..

இன்னும் ரெண்டு புள்ளைங்க ஸ்கூல்க்கு போவுதுங்க சேர்..

ஐயோ சேர்.. கேக்குறதெல்லாம் செஞ்சி படிக்கதான் சேர் அனுப்புனோம்..

இந்த பயலோட பழகாதனு கெஞ்சினோ சேர்..

இவ அம்மாவுக்கு நெஞ்சி வலி வந்து வீட்ல 2 நாளா படுக்கைல சேர்..

தன்னோட மானம் தன்பானம் மரியாதை எல்லாத்தையும் மறந்து தேம்பி தேம்பி அழுறாரு..அந்த அப்பா..

அந்த சத்ததுல அந்த இடமே ஒரு நிமிசம்.. நிதப்சமா ஆகி கிடக்கு..

சுத்தி நின்ன அத்தன பொலிஸ் அதிகாரிகளும் தன்னுட்டு வேலைகள நிறுத்திட்டு அந்த அப்பாவின் அழுகைய பாத்து கரையிறாங்க..

அவரால மேல ஏதுமே பேச முடியாம வெட்கி குனிஞ்சி ஒரு குழந்தைய போல அழுறாரு..

ஒரு பக்கம் ஏதுமே தெரியாத மாதிரி விளங்காத மாதிரி பையன் மீசைய முறுக்கி கிட்டு திரும்பி நிக்கிறாரு..

தங்கச்சி மறுபக்கம் தல குனிஞ்சி நிக்கிது..

அதை விசாரிக்கும் பொலிஸ் ஏதுமே செய்ய முடியாம

ஏதோ பேச எடுக்கும் பொது..

கிடு கிடுனு ஓடி வந்த அந்த ஒரு கொஞ்சம் வயதான பொலிஸ்.அந்த பையனுக்கு இழுத்து ஒரு அறையும் ஒரு எத்தும் விடுறாரு..

கூட நிக்கிறவங்களாம் பயந்து ஓடுறாங்க..

இவன் பதிலுக்கு லேசா முறைக்க

திரும்பையும் ஒரு அரை அறஞ்சி அவன தள்ளி விட்டுட்டு..

அந்த புள்ளைய புடிச்சி இழுத்து அவுங்க அப்பா கிட்ட தள்ளி விடுறாரு..

அங்க நிக்கிற அத்தன பேரும் பேரமைதியோட ஆ னு வாய் பிளந்து பாத்துகிட்டு நிக்க..

அந்த பையன் புடனிய பிடிச்சி..

வெளிய போடா நாயே..

வர ஆத்துரத்துக்கு ஒன்ன தூக்கி நச்சி உட்றுவேன்..

நாயே..னு ஒரு படபடப்போட ஒரு வெறியோட ஏச அவனும் பயந்தடிச்சி வெளில ஓடுறான்..

கூடவே அவனோட வந்தவங்களும் ஓடுறாங்க..

நீங்க இந்த சனியன கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்கய்யா சட்டம் என்னானு நா பாத்துகிறேனு சொல்லிட்டு..

ஒரு நடுக்கத்தோட தடுமாறி போய் அவரோட இடத்துல உட்காருறாரு..

மத்த பொலிஸ்லாம் அவரையே பாத்துகிட்டு இருக்காங்க…

புள்ளையோட அப்பா கண்ல ஒரு பெருத்த நிம்மதி..

மூச்சி கொஞ்சம் கொஞ்சமா சிறுசாக..

புள்ளைய கூட்டிட்டு போற அந்த அப்பாவ பாத்துகிட்டே உட்காந்திருக்காரு.. அந்த பொலிஸ் அதிகாரி..!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *