கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,109 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

கமலா எல்லா சர்விஸ் கமிஷன் பா¢¨க்ஷகளையும் எழுதி வந்தாள்.சிலவற்றில் ‘பாஸும்’ பண்ணினாள்.ஆனால் நேர்முக தேர்வில் கமலா அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லியும் இவள் ‘மூனாம் க்ளாஸ்’ பாஸ் என்பதால் இவளை தேர்வு பண்ணவில்லை.எல்லா நேர்முக தேர்வுகளிலும் இதையே சொல்லி இவளை நிராகரித்து விட்டார்கள். சரோஜாவுக்கும் சிவலிங்கத்துக்கும் மிகவும் கவலையாகி விட்டது.

ஆறு மாதம் ஆகி விட்டது.கமலாவுக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.அவளும் எல்லா தேர்வுகளுக்கும் போய் வந்தாள்.

“சரோஜா நம்ம கமலாவுக்கு இது வரைக்கும் வேலை ஒண்ணும் கிடைத்தபாடு இல்லையே. அவளுக்கும் வயசாகிகிட்டு போவுது.அவ மூனாம் க்ளாஸில் பாஸ் பண்ணதால் அவளை எந்த கம்பனிகாரனும் வேலைக்கு எடுக்க மாட்டேன் என்கிறான்.எனக்கு ‘ரிடையர்’ ஆக இன்னும் மூனு வருஷம் தான் பாக்கி இருக்கு..எங்க ஆஸ்பீஸில் இப்போ V.R.S.திட்டம் கொண்டு வந்து இருக்காங்க. இந்த திட்டத்தில் நாம ‘வாலிண்டரி ரிடைர்மெண்ட்’ வாங்கிக்கிகிட்டா அந்த மூனு வருஷ சம்பளத்தையும் உடனே கையிலே குடுத்து விடுவாங்க.நம்ம கிராஜுவுட்டியும், P.F.பணமும் நம்ம கைக்கு வரும்.சரோஜா.என் மானேஜர் ரொம்ப நல்லவரு.அந்த நல்ல மனுஷன் உதவியை உபயோகப் படுத்திக் கிட்டு என் மானேஜரிடம் ‘சார் நான் V.R.S. திட்டத்துலே ‘வாலிண்டரி ரிடைர்மெண்ட்டுக்கு’ ‘அப்ளை’ப் பண்ணலாம்ன்னு இருக்கேன்.நீங்க என் விண்ணப்பத்தில் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்காக்’ சிபாரிசு பண்ணி,என் வேலையை என் பெண் கமலாவுக்கு தயவு செஞ்சு வாங்கி தர முடியுமா’ என்று கேக்கலாம்ன்னு இருக்கேன்.இப்படி செஞ்சாத் தான் நம்ம கமலாவுக்கு ஒரு வேலை கிடைக்கும்.இல்லாவிட்டா இந்த ஜென்மத்தில் எங்கேயும் அவளுக்கு வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம்” என்று சொல்லி என்று சொல்லி கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினார்.பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள் சரோஜா.சிறிது நேரம் ஆனதும் “இதெல்லாம் கேக்க நல்லாத் தான் இருக்கு.ஆனா எல்லாம் நீங்க நினைக்கிகிற படி எல்லாம் நல்ல விதமாக நடக்குனுமே. நினைச்சா ரொம்ப பயமா இருக்குதுங்க” என்று தன் பயத்தை சொன்னான் சரோஜா.”பாக்கலாம் சரோஜா” என்று சொன்னார் சிவலிங்கம்.

சிவலிங்கம் தான் எடுத்து இருக்கும் ‘ப்லானை’ப் பத்தி V.R.S. செக்ஷனில் போய் விசாரித்தார்.அவர்கள் “உங்க மானேஜரின் சிபாரிசு ரொம்ப முக்கியம்.அவர் ‘ஸ்ட்ராங்காக’ சிபாரிசு செஞ்சி,அதை ‘மானேஜ் மென்ட்டும்’ ஒத்துக் கொண்டா,உங்க பொண்ணுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்குது” என்று சொல்லவே சிவலிங்கம் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்.

அடுதத நாள் சிவலிங்கம் தன் ‘ப்ளானை’ நினைத்துக் கொண்டே ஆஸ்பீஸ் வந்தார்.ஞாபகமாக மானேஜரைப் பார்த்து அவர் உடல் நிலை விசாரிக்கணும் என்று எண்ணிக் கொண்டார்.பதினோறு மணி இருக்கும்.மானேஜர் சிவலிங்கத்தை தன் ரூமுக்குக் கூப்பிடுவதாய் பியூன் வந்து சொன்னான். கையெழுத்து போட வேண்டிய பைல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு அவர் ரூமுக்கு போனார் சிவலிலிங்கம்.“வாங்க சிவலிங்கம்” என்று மரியாதையாக சொன்னது சிவலிங்கத்திற்கு இவர் பேரில் ஒரு தனியான மரியாதயை உண்டு பண்ணியது.

சிவலிங்கம் உடனே “சார் இன்னிக்கு உங்க உடம்பு தேவலாமா.நேத்து சுகம் இல்லேன்னு கேள்விப் பட்டேன்” என்று கேட்டார். உடனே மானேஜர் “இன்னைக்கு என் உடம்பு கொஞ்சம் தேவலை சிவா.நேத்திக்கு எனக்கு ரொம்ப ஜுரமாக இருந்துச்சி” என்று சொன்னார்.

சற்று நேரம் கழித்து சிவலிங்கம் மானேஜர் ரூமுக்குப் போனார்.அப்போது மானேஜர் காப்பி குடித்துக் கொண்டு இருந்தார்.‘சரி இது நல்ல சமயமா இருக்கும் நம்ம சமாசாரத்தை சொல்லலாம்’ என்று மனதில் எண்ணினார் சிவலிங்கம்.

“வாங்க சிவலிங்கம், போன் பண்ணி சொல்லி விட்டீங்களா.கொஞ்சம் காப்பி சாப்பிடறீங்களா “ என்று கேட்டார் விசாரித்தார்.“வேண்டாம் சார்,நான் இப்பத் தான் காப்பி குடிச்சேன் சார்.சார் நான் உங்க கிட்டே தனியாப் பேசணும்,,,,,” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “சொல்லுங்க நான் இப்ப ‘ஸ்ப்¡£ ‘ஆகத் தான் இருக்கேன்” என்றார் மானேஜர்.தன்னை சுதாரித்துக் கொண்டு தன் எண் ஜாண் உடம்பை ஒரு ஜாணாக குறுக்கி கொண்டு சிவலிங்கம் மெதுவாக “சார் நான் இப்போ புதுசாக வந்து இருக்கும் V.R.S.க்கு அப்ளை பண்ணலாம் ன்னு இருக்கேன்.எனக்கு இன்னும் மூனு வருஷம் தான் ‘சர்விஸ்’ பாக்கி இருக்கு.V.R.Sக்கு அப்ளை பண்ணிட்டு கூடவே என் பொண்ணு கமலாவுக்கு ஏதாவது ஒரு வேலை தரும் படி ‘மானேஜ் மெண்ட்டை’ ரொம்ப தாழ்மையோடு கேக்கலாம்ன்னு இருக்கேன் சார்.நீங்க தான் என் ‘கேஸை’ கொஞ்சம் ‘ஸ்ட்றா¡ங்கா ‘ரெகமண்ட்’ பண்ணி எழுதணும் சார்.’ப்ளீஸ்’. நீங்க அப்படி எழுதினாத் தான் என் பொண்ணுக்கு ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு சார் ப்ளீஸ்…..” சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிவலிங்கம் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பியது.“உங்க கஷ்டம் எனக்கு நல்லா புரியுது சிவலிங்கம்.நான் என்னால் முடிஞ்ச வரை உங்க ‘கேஸை ஸ்ட்றாங்கா ரெகமண்ட்’ பண்றேன். மீதி கடவுள் விட்ட வழி.உங்க பொண்ணுக்கு அதிர்ஷ்டம் இருந்தா நிச்சியம் நம்ப கம்பனியில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு சிவலிங்கம்” என்றார் அவர் பொறுமையாக.“ரொம்ப நன்றி சார்.நீங்க எனக்கு தெய்வம் மாதிரி சார்” என்று எழுந்து நின்றுக் கொண்டு சொன்னார் சிவலிங்கம். மீண்டும் தன் நன்றியைச் சொல்லி விட்டு தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்தார் சிவலிங்கம்.அவர் மனம் கனவுலகில் மிதந்தது. தன் அப்ளிகேஷன் ‘அப்ரூவ்’ ஆகி கமலாவுக்கும் வேலை கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று மனக் கோட்டை கட்டினார் சிவலிங்கம்.

சோபாவில் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்த சிவலிங்கம் “சரோஜா உன் வாக்கு பலிக்கட்டும்.எப்படியோ நம்ப கமலாவுக்கு என் கம்பனியில் ஒரு வேலை கிடைச்சாப் போதும்.அவளுக்கு அந்த வேலையை வாங்கிக் குடுத்துட்டு நான் ‘ஹாய்யா ரிடையர்’ ஆகி விடுவேன்.அப்புறமா நாம் ‘ப்லான்’ பண்ணபடி ஒரு மளிகைக் கடையோ, புரொவிஷன் கடையோ நாம் போட்டு வியாபாரம் பண்ணி வரலாம்” என்று சொன்னார்.“அந்த முருகப் பெருமான் அருளால் எல்லாம் உங்க இஷ்டப் படியே நடக்குங்க. சந்தோஷமாய் இருந்து வாங்க” என்று சொன்னாள் சரோஜா.

அன்று வெள்ளி கிழமை.அன்று நல்ல முஹ¥ர்த்த நாள்.பன்னிரண்டு மணிக்கு ராகு காலம் போனதும் சிவலிங்கம் தன் தயார் பண்ணி வைத்து இருந்த V.R.S.’ அப்லிகேஷனை மானேஜரிடம் எடுத்துப் போனார் சிவலிங்கம். மானேஜர் ரூமில் நுழைந்த சிவலிங்கம் மானேஜரைப் பார்த்து “ சார்,குட் மார்னிங்க சார்” என்று பணிவோடு மெல்ல சொன்னார்.சிவலிங்கத்தைப் பார்த்த மானேஜர் தான் பார்த்துக் கொண்டு இருந்த ஸ்பைலில் இருந்து தன் கண்களை வெளியே எடுத்து சிவலிங்கத்தைப் பார்த்து “ வாங்க சிவா” என்று சொல்லி விட்டு சிவலிங்கத்தைப் பார்த்தார். சிவலிங்கம் தன் எண் ஜான் உடம்பை ஒரு ஜானாக குறைத்துக் கொண்டு மெல்ல தயங்கி தயங்கி மானேஜரைப் பார்த்து “சார் நான் என் V.R.S. அப்ப்ளிகேஷனை ரெடி பண்ணி இருக்கேன்.நீங்க தயவு செஞ்சி….” என்று சொல்லி முடிக்கும் முன்பே மானேஜர் “ சரி குடுங்க மிஸ்டர் சிவலிங்கம்.நான் நான் நிதானமாக என் ‘ரெகமெண் டேஷனை’ எழுதறேன்” என்று சொல்லி சிவலிங்கம் குடுத்த ‘அப்லிகேஷனை’ வாங்கிக் கொண்டார் மானேஜர்.உடனே சிவலிங்கம் “சார் உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வதுன்னே தொ¢யலே சார். ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று தன் கையைக் கூப்பி தன் நன்றியை சொல்லி விட்டு சிவலிங்கம் தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டார்.

மானேஜர் ரூமுக்கு மெல்ல போய் அவர் ரூமைத்தை திறந்து “சார், கூப்பிட்டீங்களா” கவலையுடன் கேட்டார்.அவர் மனம் ‘திக்’ ‘திக்’ என்று அடித்துக் கொண்டு இருந்தது.“வாங்க மிஸ்டர் சிவலிங்கம். நான் உங்க ‘அப்லிகேஷனில்’ என் ‘ரெகமெண்டேஷனை’ எழுதி மேலிடத்துக்கு அனுப்பிஇருக்கேன்” என்று சொன்னார். மானேஜருக்கு நன்றியை தொ¢வித்து விட்டு தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டார்.

ஆறு மாதம் ஓடி விட்டது.

அன்று மாலை நாலு மணி இருக்கும்.மானேஜர் கூப்பிடுவதாக வந்து சொன்னான் ஆஸ்பீஸ் பியூன் ஆறுமுகம்.சிவலிங்கம் தன் சீட்டை விட்டு எழுந்து பயந்துக் கொண்டே மெல்ல மானேஜர் ரூமுக்குள் நுழைந்தார். மானேஜர் ரூமுக்குள் போய் “ சார் கூப்பிட்டீங்களா சார்” என்று பயந்துக் கொண்டே கேட்டார் சிவலிங்கம்.அவரைப் பார்த்ததும் “ ‘கண்கிராஜுலேஷன்ஸ்’ மிஸ்டர் சிவலிங்கம்.இப்ப தான் எனக்கு போன் வந்தது. உங்களுக்கு V.R.S. குடுக்க’ மானேஜ்மெண்ட்’ ஒத்துக் கொண்டு விட்டதாயும் உங்க வேலையை உங்க பொண்ணுக்கு இந்த ஆஸ்பீஸில் ஒரு கீழ் நிலைக் கணக்கராக வேலை குடுக்க முடிவு பண்ணி இருப்பதாயும் சொன்னாங்க.நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி சிவலிங்கம்” என்று சொல்லி எழுந்து நின்று சிவலிங்கம் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுக்கினார் மானேஜர். சிவலிங்கதிற்கு அவர் கேட்பது கனவா இல்¨¨ நிஜமான்னு புரியவில்லை..மானேஜர் சிவலிங்கத்தின் கையை பலமாக குலுக்கிய பின் தான் சிவலிங்கதிற்கு ‘இது கனவு இல்லை நிஜம் தான்’ என்று புரிந்தது. தன் கண்ணில் கண்ணீர் மல்க “சார்,நீங்க தான் எனக்கு தெய்வம்.நீங்க மட்டும் அவ்வளவு ‘ஸ்ட்¡ங்காக’ என் ‘அப்லிகேஷனில்’ எழுதாம இருந்தா என் பொண்ணுக்கு இந்த ஆஸ்பீஸில் வேலை கிடைச்சு இருக்காது சார்” தன் கால்களைத் தொடப் போன சிவலிங்கத்தின் தோளைத் தொட்டு எழுப்பினார் மானேஜர்.“எழுந்திரிங்க சிவலிங்கம்.நீங்க என் கால்களை எல்லாம் தொட வேணாம். ரிடையர் ஆவதுக்கு முன்னால் ஆக செய்ய வேண்டிய மீதி வேலைகள் எல்லா செய்ய ஆரம்பிங்க. என்று சொல்லி சிவலிங்கத்தை அனுப்பினார் மானேஜர். சரி சார் நான் என் கிட்டே இருக்கிற எல்லா வேலைகளையும் முடிச்சி விட்டு என் ‘டிராயர்’ சாவியை என் ‘அஸிஸ்டெண்ட்’ கிட்டே கொடுத்து வக்கிறேன்.நீங்க கவலைப் பட வேணாம் சார்” என்று சந்தோஷத்துடன் சொல்லி விடு மறுபடியும் அவரை ரொம்ப ‘தாங்க்’ பண்ணி விடு தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டார் .அவர் மனம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டு இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் வராதததும் அவர் ”சரோஜா, சரோஜா” என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். பயந்துப் போய் சமையல் கட்டில் சரோஜா போட்டதை போட்டபடி போட்டு விட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள். வீட்டுக்கு வந்த சிவலிங்கம் தன் காலில் போட்டுக் கொண்டு இருந்த செருப்பைக் கழட்டி ஒரு ஓரமாக வைத்து விட்டு மெல்ல சோபாவில் உட்கார்ந்துக் கொண்டார்.“ஏங்க கூப்பிடீங்களா.என்னங்க விஷயம் சாதாரணமா நீங்க இப்படி என்னை உரக்கவே கூப்பிடமாட்டீங்களே ங்க” என்று கேட்டாள் சரோஜா பயந்துக் கொண்டே. ‘சரோஜா,ஒன்னும் பயப் படற விஷயம் இல்லே.ரொம்ப சந்தோஷமான விஷயம் தான் சரோஜா” என்று சிரித்துக் கொண்டெ சொல்லி விட்டு ஆஸ்பீஸில் நடந்த எல்லா விஷயத்தையும் விவரமாக சந்தோஷத்துடன் சரோஜாவிடம் சொன்னார் சிவலிங்கம். சரோஜாவுக்கும் கமலாவுக்கும் சந்தோஷம் தலை கால் புரியவில்லை.“என்னங்க சொல்றீங்க.என்னால் நம்பவே முடியலையேங்க. உண்மையாவா சொல்றீங்க” என்று கேட்டாள் சரோஜா. கமலாவும் ”அப்படியாப்பா. நீங்க உண்மையாவாப்பா சொல்றீங்க.எனக்கு உங்க கம்பனியிலே வேலை கொடுத்து இருக்காங்களாப்பா.நீங்க ரொம்ப ‘க்றேட்ப்பா’ “என்று சொல்லி ஓடி வந்து அப்பாவின் தோளைக் கட்டிக் கொண்டாள்.”ஒரு வழியா அந்த முருகப் பெருமான் இன்னைக்குத் தான் கண்ணைத் தொறந்து நமக்கு அருள் புரிஞ்சி இருக்காருங்க.” என்று சந்தோஷ மிகுதியால் சொன்னாள் சரோஜா.

பல நாட்களுக்கு பிறகு அன்று இரவு தான் மூவரும் நிம்மதியாக சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள்.

அந்த மாச இறுதியிலேயே சிவலிங்கம் ரிடையர் ஆவதற்கு உண்டான கம்பனி V,R,S,லெட்டர் வந்து விட்டது.கூடவே அவர் பெண் கமலாவுக்கும் அந்த கம்பனியில் ஒரு கீழ் நிலை கணக்கர் வேலைக்கும் ஆர்டர் வந்தது.இரண்டு கடிதங்களையும் மானேஜர் சிவலிங்கத்தை தன் ரூமுக்குக் கூப்பிட்டு அவா¢டம் கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு இரண்டு கடிதங்க¨ளையும் பெற்றுக் கொண்டு தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டார் சிவலிங்கம்.தன் சீட்டுக்கு வந்த சிவலிங்கம் தன் சக ஊழியர்களிடம் இரண்டு ‘லெட்டர்களையும்’ காட்டி சந்தோஷப் பட்டார்.வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சிவலிங்கம் தனக்கு மானேஜர் கொடுத்த ரெண்டு லெட்டர்களலயும் காட்டி சந்தோஷத்தில் குதித்தார் சின்னப் பையனைப் போல.சரோஜாவுக்கும் கமலாவுக்கும் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம். சிவலிங்கம் சரோஜாவைக் கூட்டிக் கொண்டு தங்கள் குடும்ப ஜோஸ்யரிடம் போய் கமலா வேலைக்கு சேர ஒரு நல்ல நாள் குறித்து வந்தார்.ஜோஸ்யர் சொன்ன நல்ல நாளில் தன் மகள் கமலாவை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்துப் போய் சாமிக்கு ஒரு அர்ச்சனைப் பண்ணி விட்டு,சுவாமியைக் கும்பிட்டு விட்டு,பிறகு தன் ஆஸ்பீஸ்க்கு அழைத்துப் போய் ஆஸ்பீசில் கீழ் நிலை கணக்கராக வேலைக்கு சேர்த்து விட்டார்.

கடைசி வாரம் சிவலிங்கம் ஆஸ்பீஸில் வேலை செய்து முடித்தார்.அந்த வார முடிவிலே சிவலிங்கம் தன் வாழ் நாள் சேமிப்பான P.F. பணம், கிராஜுவிட்டி பணம்,லீவு சம்பளம்,மூனு வருஷ வேலைக்கு மானேஜ்மெண்ட் கொடுத்த குறைஞ்ச சம்பளம், எல்லாவற்றையும் கம்பனி கொடுத்த ‘செக்கை’ இருந்து வாங்கிக் கொண்டார்.

அன்று சாயந்திரம் மானேஜர் சிவலிங்கத்திக்கு ‘ஒரு பொ¢ய எவர் சில்வர் டின்னர் செட்டை’ பா¢சாக வழங்கி அவரை புகழ்ந்து பேசினார்.மற்ற சக ஊழியர் களும் சிவலிங்கத்தை புகழ்ந்து பேசினார்கள்.விழாவுக்கு வந்த அனைவா¢டமும் சிவலிங்கம் கையை குலுக்கி விட்டு விழாவில் கொடுத்த ‘டின்னர் செட்டை’ யும்,தனக்குப் போர்த்தின சால்வையையும், மாலைகளையும் எடுத்துக் கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தார்.

‘அப்பாடா’ என்று சோபாவில் சாய்ந்த்தார் சிவலிங்கம்.அவர் மனம் அவர் அந்த ஆஸ்பீஸில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை நடந்த எல்லா சம்பவங்களையும் கண்ணை மூடிக் கொண்டு அசை போட்டுக் கொண்டு இருந்தது. ஒரு கப்பல் மாலுமியை போல் அவர் மனம் அமைதியாகவும் பெருமிதமாகவும் இருந்தது.அவர் மனதில் ஒரு நிம்மதி யானஅமைதி நிலவியது.

சிவலிங்கம் சரோஜாவைக் கூப்பிட்டு “சரோஜா, இப்போ தான் நம்ம கமலாவுக்கு ஒரு வேலை கிடைச்சிடிச்சி.அவ வேலைக்குப் போய் சம்பாதிக்கட்டும்.அவ சம்பளத்தை அவ கல்யாணத்துக்கு அவ சேத்து வச்சுக்கட்டும்.நீ முன்னம் ஒரு தடவை சொன்னா மாதிரி கமலாவுக்கு ஒரு வருஷமோ ரெண்டு வருஷம் போன அப்புறமா அவ கல்யாணத்தை நல்லபடியா செஞ்சு முடிச்சிடலாம். நாம முன்னே ‘ப்ளான்’ பண்ணின படி என் ‘ரிடைர்மெண்ட் ‘வந்த பணத்தில் நாம ஒரு மளிகை கடையோ போடலாம்ன்னு எனக்குத் தோணுது. இப்படி நான் வெறுமனே குந்தி கிட்டு இருந்தேனா என் ‘ரிடையர்மென்ட்’ பணம் எல்லாம் சீக்கிரமே கரைஞ்சிடும் ரெண்டாவதாக இன்னும் நாள் கடத்தினோம்ன்னா எனக்கும் இன்னும் வயசாகிட்டுப் போவும் இல்லையா. கடையிலே நல்ல லாபமும் வரும்” என்று தன் அபிப்பிராயத்தைச் சொன்னார் சிவலிங்கம்.“அது சரிங்க.நான் இல்லேன்னு சொல்லலே. நாம ஒரு மளிகைக் கடை வச்சோம்ம்ன்னா நம்ம வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்கள் அவசரம்ன்னா அந்தக் கடையிலே இருந்து நாம எடுத்துக்க முடியும்ங்க.முடிஞ்ச போது நானும் கடையிலே கொஞ்ச நேரம் உக்காரலாமேங்க இல்லையா” என்று தன் மனதில் பட்டதைச் சொன்னாள் சரோஜா.

அன்று திங்கக் கிழமை.நாஷ்டா சாபிட்டுவிட்டு சிவலிங்கம் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார். சரோஜா மெல்ல அவர் கிட்டே வந்து “என்னங்க யோஜனை பண்ணிகிட்டு இருக்கீங்க” என்று கேட்டாள் சரோஜா. “ஒன்னும் இல்லே சரோஜா.நம்ப ஏரியாவிலே ஒரு மளிகைப் கடை போட ஒரு நல்ல இடமா கிடைக்குதன்னு நான் போய் பாத்துட்டு வரலாமான்னு யோசிச்சுக் கிட்டு இருந்தேன் சரோஜா.உடனே “நீங்க போய் பாத்து விட்டு வாங்க” என்று கிண்டலாகச் சொன்னாள் சரோஜா.

வெகு நேரம் சுத்திப் பாத்த அவருக்கு கடைசியாக ஒரு புது கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு கடை வாடகை க்கு விடுவதாக அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டு இருக்கவே சந்தோஷம் அடைந்த சிவலிங்கம் அந்த இடத்தை வாடகைக்கு தான் எடுக்கலாம் என்று முடிவு பண்ணி அந்த இடத்தின் ஓனரை போய் சந்தித்தார் சிவலிங்கம். அந்த கடை ஓனரைப் பாத்து “நான் இந்த கடையை வாடகைக்கு எடுக்கலாம்ன்னு இருக்கேங்க,என்னங்க வாடகை,எவ்வளவு அட்வான்ஸ் தரணுங்க” என்று கேட்டார் சிவலிங்கம். “என்ன கடை போடப் போறீங்க நீங்க” என்று கேட்டார் அந்த ஓனர்.“நான் ஒரு மளிகை கடை போடலாம்ன்னு இருக்கேங்க” என்று பதில் சொன்னார் சிவலிங்கம் .“சரி நீங்க கடை போடுங்க.வாடகை மாசம் பத்தாயிரம் ரூபாய்,‘அட்வான்ஸ்’ ஒரு லக்ஷம்ங்க” என்றார் அந்த ஒனர். ஓனர் சொன்ன வாடகைப் பணத்தையும் ‘அட்வான்ஸ்’ பணத்தையும் கேட்ட சிவலிங்கத்திற்கு முதலில் கொஞ்சம் ‘ஷாக்காக’ இருந்தது.‘இவ்வளவு பணத்தை நாம முதல் போட்டு விட்டு பிறகு சரக்கு எல்லாம் வாங்கி வியாபாரம் செஞ்சி அதிலே லாபம் எடுக்கணுமே’ என்று பயந்தார் சிவலிங்கம்.

சற்று யோசித்த சிவலிங்கம் “சார் நான் மாச வாடகை பத்தாயிரத்துக்கு ஒத்துக்கறேன். இந்த ‘அட்வான்ஸ்ஸை’ கொஞ்சம் குறைச்சுக்க முடியுங்களா” என்று கொஞ்சம் கெஞ்சலாகக் கேட்டார் சிவலிங்கம்.அதற்கு அந்த ஓனர் உடனே ”அதெல்லாம் முடியாதுங்க.வேணும்ம்னா எடுத்துக்கங்க.இல்லாட்டி விடுங்க.இந்த இடத்தையே உங்களுக்கு முன்னாடி நாலு பார்ட்டி வந்துப் பாத்துட்டுப் போய் இருக்காங்க.யார் முதல்லே வராங்களோ அவங்களுக்கு இந்த இடத்தை நான் வாடகைக்கு விட போறேங்க.உடனே எடுத்துக்கறதுன்னா சொல்லுங்க” என்று அவசரப் படுத்தினார் அந்த ஓனர். “சரிங்க,நான் இப்போ வீட்டுக்குப் போய் என் சம்சாரத்துக் கிட்டே கலந்து பேசி சாயங்காலம் வந்து வாடகை பணமும் ‘அடவான்ஸ்’ பணமும் எடுத்து வரேங்க” என்று சொல்லி விட்டு வீட்டை நோக்கி நடந்தார் சிவலிங்கம்.

அந்த கடை ஓனர் எல்லா விவரங்களையும் நிதானமாகச் சொன்னர் சிவலிங்கம்.”ஏங்க இவ்வளவு ‘அட்வா ன்ஸ¤ம்’ குடுத்து,இவ்வளவு மாச வாடகையும் குடுத்து நாம கடைக்கு வேண்டிய சாமான்களையும் வாங்கி வந்து அதை வித்து லாபம் பண்ண வேண்டுமேங்க முடியுமாங்க.எனக்கு நினைச்சாலே ரொம்ப பயமா இருக்குங்க” என்று தன் பயத்தைச் சொன்னாள் சரோஜா.”எனக்கும் அந்த பயம் இருக்கு சரோஜா.முதலில் நானும் நீ பயப் படறாப் போலத் தான் பயந்தேன்.அக்கம் பக்கத்தில் நிறைய வூடுங்க எல்லாம் இருக்கு.நாம் முயற்சி செஞ்சிப் பாக்கல்லாம் சரோஜா. வீணா நாம பயப் படக்க்கூடாது” என்றார் சிவலிங்கம் ¨தா¢யத்தை வரவழைத்து கொண்டு.கொஞ்ச நேரம் ஆனதும் “வா நாம அந்த இடத்தை சாயங்காலம் போய் பாத்து விட்டு வரலாம்.உனக்கு அந்த இடம் பிடிச்சி இருந்தா நாம அந்த ஓனரிடம் ‘அட்வான்ஸ்’ குடுத்து விட்டு நாங்க இந்த இடத்தை எடுத்துக்கிறோம்ன்னு சொல்லிட்டு வரலாம்” என்று சொன்னார் சிவலிங்கம்.“சரிங்க நான் வரேனுங்க.நாம சாயங்காலம் அந்த கடையை பாத்து விட்டு வரலாம்” என்று சொன்னாள் சரோஜா.அன்று சாயங்காலமே சிவலிங்கம் சரோஜாவை அழைத்துக் கொண்டு போய் தான் பார்த்து இருக்கும் கடையைக் காட்டினார்.சரோஜாவுக்குஅந்த கடை மிகவும் பிடித்து இருந்தது.உடனே அவள் தன் கணவனப் பார்த்து எனக்கு இந்த கடை ரொம்ப பிடிச்சி இருக்குங்க”என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.

புதன் கிழமை காலையிலே சரோஜா கமலாவுக்கு நாஷ்டா கொடுத்து அவளை வே¨க்கு அனுப்பினாள். குளித்து விட்டு பூஜைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு நாஷ்டா செய்து விட்டு சிவலிங்கம் சரோஜாவையும் அழைத்துக் கொண்டு தன் ‘செக்’ புக்கையும் எடுத்துக் கொண்டு போய் அந்த கடைக்குப் போய் கடை ஓனரை பார்த்து “நான் அட்வான்ஸ்ஸ¤க்கு ஒரு லக்ஷ ரூபாய்க்கு உங்களுக்கு ஒரு ‘செக்’ தரேன்.நீங்க ஒரு ‘அக்ரிமெண்டை’ப் போட்டுத் தரீங்களா” என்று பணிவுடன் கேட்டார் சிவலிங்கம்.“சரி உங்க ‘செக்கை’ கை எழுத்துப் போட்டு குடுத்துட்டுப் போங்க.நீங்க சாயங்காலமா மறுபடியும் வாங்க.நான் என் வக்கில் கிட்டே நீங்க சொன்னது போல ஒரு ‘அக்ரிமெண் டை’ப் போட்டு வக்கிறேன்.நீங்க வந்து வாங்கி கிட்டுப் போங்க.சரியா” என்றார் அந்த ஓனர்.“சரிங்க” என்று சொல்லி விட்டு ஒரு லக்ஷ ரூபாய்க்கு ஒரு செக்கைப் போட்டு அந்த ஓனரிடம் கொடுத்து விட்டு “நான் சாயங்காலம் வரேனுங்க.நீங்க ‘அக்ரிமென்ட் டை’ தயார் பண்ணி வையுங்க” என்று சொல்லி விட்டு ஒரு லக்ஷ ரூபாய்க்கு செக்கை அந்த ஓனரிடம் கொடுத்தார் சிவலிங்கம்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *