கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 5,273 
 
 

அத்தியாயம்-13 | அத்தியாயம் -14 | அத்தியாயம் -15

”இந்த ப்ராப்லெத்தை சால்வ் பண்ண என்ன பண்ணலாம்ன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்”என்ரான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “நான் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கிட்டா என்னங்க,நான் அதிலே சௌகரியமா ஆ·பீஸ் நேரத்திற்கு நான் போய் வர முடியு மாங்க” என்று கேட்டாள் கமலா.உடனே “நானே உனக்கு இந்த ‘ஐடியாவை’ச் சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.ஆனா உனக்கு ‘டூ. வீலர்’ ஓட்ட பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு தெரியாததாலே நான் உனக்கு சொல்லலே கமலா.நீ சொல்றது நல்ல ஐடியா” என்றான் நடராஜன்.“சரிங்க நான் டூ.வீலர் ஒன்னு வாங்கி அதில் ஆ·பீஸ் போய் வரேணுங்க” என்றாள் கமலா.

அருகில் இருந்த ‘டிரைவிங்க ஸ்கூலுக்கு’ப் போய் கமலா அங்கு இருந்த ‘மாஸ்டர்’ சொல்லிக் கொடுத்தது போல் நன்றாக ஓட்டி வந்து ஒரு வாரத்திலேயே ‘டிரைவிங்க லைசன்ஸ்’ வாங்கி விட்டாள்.அடுத்த நாளைக்கே நடராஜன் கமலாவை அழைத்துக் கொண்டு போய் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கொடுத்தான்.அடுத்த நாளில் இருந்து கமலா ஆ·பீஸ்க்கு ‘டூ வீலரை’ எடுத்துப் போக ஆரம்பித்தாள்.

அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டு மூன்று வருஷங்கள் ஆகி விட்டது.இருவரும் நாம் பார்த்த இடங்கள் எல்லாம் போதும்,வாழ்க்கையை ‘எஞ்சாய்’ பண்ணினது போதும் என்று எண்ணி பொ¢யவர்கள் சொன்னது போல் ஒரு குழந்தை பெத்து கொள்வதில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

நான்கு வருஷங்கள் ஓடி விட்டது.அவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இருவரும் மிகவும் கவலைப் பட ஆரம்பிதார்கள்.இருவரும் இரு நல்ல டாக்டர் இடம் போய் ‘ செக் அப்’ பண்ணிக் கொண்டார்கள். இருவரையும் பரிசோதித்த டாக்டர் ‘உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு குறையும் இல்லை. குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது ‘என்று சொல்லி விட்டார்.இருவரும் நிம்மதி அடைந்தார்கள்.நண்பர்கள் ‘ஐடியா’ சொல்லவே இருவரும் ஆயிர் வேத மருத்து சாப்பிட்டு வந்தார்கள்.

சிவலிங்கத்தின் கண் பார்வை மங்க ஆரம்பிக்கவே அவர் தன் கண்களுக்கு ‘காட்ராக்ட்’ ஆபரேஷன் செய்து கொண்டார்.ஆப்ரேஷன் செய்த கண் டாகடர் ஆப்ரேஷனை சரியாக செய்யாததால் சிவலிங்கத்தில் கண் பார்வை சரியாகவில்லை.அதனால் அவர் ஆ·பிஸ் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்,

ஒரு வருஷம் ஆயுர் வேத மருந்துகளை எல்லாம் சாப்பிட்டு வந்தும் கமலாவுக்கு குழந்தை பிறக்கும் எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.இருவரும் இன்னும் பல கோவில்களுக்கு எல்லாம் பூஜை,அபிஷேகம், எல்லாம் செய்து வந்தார்கள். கமலா காலையில் எழுந்து குளித்து விட்டு காலை டிபன், மதியம் சாப்பாடு, எல்லாம் பண்ணி வைத்து விட்டு, தானும் டிபன் சாப்பிட்டு விட்டு, மதியம் சாப்பாடு கையில் எடுத்துக் கொண்டு ஆ·பீஸ¤க்கு போனாள். ‘ஈவினிங்க் டியூட்டி’ இருந்தால் நடராஜன் மெதுவாக எழுந்து காலை டிபனை சாப்பிடுவான்.பிறகு நிறைய உடல் பயிற்சிகள் எல்லாம் பண்ணி விட்டு,காலை பேப்பர்,அந்த வாரத்து கதை புஸ்தகங்களை எல்லாம் படித்து முடித்து விட்டு நிதானமாக மதிய உணவு சாப்பிடுவான்.

கமலாவுக்கு ஆபீஸில் பிழிய பிழிய வேலை இருந்து வந்தது. ஒரு நிமிஷம் கூட அவளுக்கு ஓய்வு இல்லை. காலையில் சமையல் வேலை,செய்த பிறகு ஆ·பீஸில் பிழிய பிழிய வேலை,அதன் பிறகு வீட்டுக்கு வந்தால் மறுபடியும் சமையல் வேலை,பிறகு வீட்டு வேலைகள்,பாத்திரம் கழுவர வேலைகள் இப்படி நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்ததால் கமலா மாலையில் மிகவும் சோர்ந்து போனாள்.அவள் மிகவும் கஷ்டப்பட்டாள்.ஒரு நாள் கணவன் சந்தோஷமாக இருக்கும் போது “ஏங்க,எனக்கு எல்லா வீட்டு வேலைங்களையும் செஞ்சு விட்டு,பிறகு ஆ·பீஸ் வேலையும் செஞ்சு விட்டு,அப்புறமா வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் வீட்டு எல்லா வேலைங்களையும் செஞ்சு முடிக்கறதுகுள்ளார எனக்கு ரொம்ப களைப்பா இருக்குங்க.அதனாலே இந்த மாசத்திலே இருந்து நான் வீட்டு வேலைக்கு ஒரு வேலைகாரியை ஏற்பாடு பண்ணலான்னு இருக்கேங்க. நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டாள். “இதை நானும் கவனிச்சு வரேன் கமல்.ஒரு வேலைக்காரியை வீட்டு வேலைக்குப் போட்டுக்கோ கமல்” என்று சொல்லி அவள் ‘ஐடியாவை’ ஆமோதித்தான் நடராஜன்.

சேகர் ஆட்டோ வேலையில் காலை நன்றாக உன்றிக் கொண்டு நன்றாக சம்பாதித்து வந்தான்.அவனுக்கு ஆட்டோ ஓட்டும் நண்பர்கள் அதிகமானார்கள்.சேகர் நண்பர்களில் சிலர் ‘கஞ்சா’க் கடத்தி வந்து நல்ல பணம் சம்பாதி த்து வந்தார்கள்.சேகருக்கு ‘நாமும் இந்த மாதிரி கஞ்சா கடத்திப் போய் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்’ என்கிற ஆசை வந்தது.இந்த ஆசை வரவே அவனும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு கஞ்சா கடத்தி நிறைய பணம் சம்பா தித்து வந்தான்.கஞ்சா கடத்தும் ‘தொழில்’ நிறைய ஆட்டோ டிரைவர்களுக்கு கிடைக்கவில்லை.ஒரு சிலருக்குத் தான் கிடைத்தது.இதனால் அவர்கள் மத்தியில் பொறாமை வளர்ந்து வர ஆரம்பித்தது.ஆத்திரம் அடைத்த யாரோ ஒரு ஆட்டோ டிரைவர் சேகரைப் பத்தி போலீஸ்க்கு கஞ்சா கடத்தும் தகவலைக் கொடுத்து விட்டான்.

ஒரு நாள் சேகர் ஆட்டோவில் ‘கஞ்சா’ பாக்கெட்டுகள் இருந்ததால் போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து ‘கஞ்சா கடத்தும் கேஸில்” புக் பண்ணி விட்டார்கள்.அன்று பூராவும் சேகர் வீட்டுக்கு வரவில்லை.மறு நாள் சாயங்காலம் வரை சேகர் வீட்டுக்கு வராம போகவே ஜோதி பயந்துப் போய் சேகர் அண்ணன் லக்ஷ்மணனை போய்க் கேட்டாள். லக்ஷ்மணன். உடனே தன் நண்பர்களிடம் போய் கேட்டான்.அப்போது லக்ஷ்மணனுக்கு ஒரு போன் வந்தது. “அண்ணே,உங்க தம்பி சேகர் ஒரு ‘கஞ்சா கேஸ்’ லே மாட்டிக் கிட்டு தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன் ‘லாக் அப்பில்’ இருக்கிறராம்.இப்ப தான் கண்ணன் போன் பண்ணி எனக்கு இந்த விஷயத்தே சொன்னான்” என்று சொன்னான் . லக்ஷ்மணன் ஜோதியிடம் இந்த விஷயத்தை சொல்லி “நீ வீட்டுக்கு போய் இரும்மா.நான் தாம்பரம் போய் எல்லா விவரமும் கேட்டுக் கிட்டு வந்து உனக்கு பூரா விவரமும் சொல்றேன்..நீ கவலைப் படாம இருஜோதி ” என்று சொல்லி விட்டு உடனே தாம்பரம் கிளம்பிப் போனார் லக்ஷமனன்.ஜோதி அழுதுக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.எல்லா விவரமும் ராணீயிடம் சொன்னாள்.மிகவும் கவலைப் பட்டாள் ராணீ.

இரண்டு நாள் போனதும் ஜோதி மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டாள்.“இனி மேலே நாம நம்ம வாழ்க்கை யை கவனிச்சு வாழ்ந்து வர வேணும்”என்று ராணீயிடம் சொன்னாள் ஜோதி.அவள் தான் வாழ்ந்து வர பணம் வேண்டு மே என்று நினைத்து என்ன பண்ணலாம் என்று யோஜனைப் பண்ணினான்..ரெண்டோ, மூனோ வீட்டு வேலைங்க செஞ்சு வர முடிவு பண்ணினாள்.அடுத்த நாளில் இருந்து மெல்ல தேடி ஒரு வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தாள். அவள் கையில் கொஞ்சம் பணம் வர ஆரம்பித்தது.

ஒரு வாரம் கழித்து ஜோதி ராணீயைப் பார்த்து “ராணீ நீ எத்தனை நாளைக்கு இப்படி சும்மா சமையல் வேலை மட்டும் செஞ்சி கிட்டு வருவே.உங்க அம்மா சொன்னது போல நீயும் என்னே மாதிரி ஒரு வீடு வேலைக்குப் பிடிச்சிக் கிட்டு வேலை செஞ்சி வரயா”என்று கேட்டாள்..“ஆமாம் சித்தி, நானே உங்க கிட்டே இதைப் பத்தி கேக்கலாம்ன்னு தான் இருந்தேன்”என்று சொன்னாள் ராணீ.உடனே ஜோதி” இந்த கிருத்திகைலே,ஞாயித்துக் கிழமை,வெள்ளிகிழமை, அன்னைக்கு எல்லாம் நீ பக்கத்திலே இருக்கிற பிள்ளையார் கோவிலுக்குப் போய்,அங்கே வரவங்க கிட்டே ‘அம்மா, நான் வீட்டு பண்ணுவேன்.யாருக்காச்சும் தேவை இருந்திச்சின்னா எனக்கு சொல்லுங்க’ன்னு கேளு.உனக்கு நிச்சியம் வேலை கிடைக்கும் ராணீ” என்று சொல்லி விட்டு அவள் வேலைக்குப் போனாள்.

கிருத்திகை தினமாக இருந்ததால் கமலா முருகருக்கு அர்ச்சனை பண்ணி வரலாம் என்று எண்ணி பிள்ளை யார் கோவிலுக்குப் போனாள்.முருகருக்கு அர்ச்சனை பண்ணி விட்டு ‘முறுக்குப் ப்ராசதத்தை’ வாங்கிக் கொண்டு வந்து மண்டபத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.ராணீ மெல்ல கமலா பக்கத்திலே வந்து நின்னு “அம்மா நான் வீட்டு வேலை செய்வேணுங்க.உங்களுக்கு யாராச்சும் தெரிஞ்சா எனக்கு தயவு செஞ்சி சொல் லுங்க” என்று சொல்லி பயத்துடன் நின்றுக் கொண்டு இருந்தாள்.தனக்கு வீட்டு வேலைக்கு ஒரு வேலைகாரி தேவைப் பட்டதால் கமலா “சரி நான் விலாசம் தரேன்.நீ நாளை காலையிலே என்னை வந்து பாரு.இந்த ரோடு நேரே போய் வலது பக்கம் முதல் சந்துலே திரும்பினா மூணாவது ‘·ப்ளாட்’ வரும்.அதுலே ரெண்டாம் மாடி வீடு தான் என் வீடு” என்று சொல்லி தன் விலாசத்தை எழுதிக் கொடுத்தாள் கமலா.விலாசத்தை வாங்கிக் கொண்ட ராணீ “ரொமப நன்றிங்க.நான் நாளைக்கு காலையிலே உங்க வீட்டுக்கு வரேணுங்க” என்று சொல்லி விட்டுப் போனாள் ராணீ. வீட்டுக்கு வந்த ராணீ தன் சித்தியிடம் “ சித்தி நான் ஒரு அம்மாவைப் பார்த்து கேட்டேன். அவங்க விலாசத்தைக் கொடுத்து என்னை அவங்க வீட்டுக்கு நாளைக்கு காலையிலே வந்து பார்க்கச் சொன்னாங்க” என்றாள் சந்தோஷத்தில். தன் சித்தி சொன்னது போல நாம் நல்ல விதமாக வேலை செஞ்சி வந்து இந்த வேலையை நிரந்தரம் ஆக்கிக்கணும் என்று நினைத்தாள் ராணி.

அடுத்த நாள் ஞாயித்துக்கிழமை.கமலாவுக்கும் நடராஜனுக்கும் லீவு. இருவரும் காப்பியை ரசித்துக் குடித்துக் கொண்டு இருந்தார்கள். ‘காலிங்க் பெல்’ அடித்தது.கதவை திறந்தாள் கமலா.”உள்ளே வாம்மா” என்று சொல்லி கமலா அவளை உள்ளே அழைத்தாள்.நடராஜன் எழுந்து தன் ரூமுக்குப் போய் விட்டான். உள்ளே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்து” உன் பேர் என்னம்மா” என்று கேட்டாள் கமலா. ”என் பேர் ராணீங்க” என்றாள் வந்த பெண்.“இதுக்கு முன்னா லே எங்கே வேலை பண்ணிக்கிட்டு இருந்தே” என்று கேட்டாள் கமலா.”நான் என் வீட்டுலே தான் வேலை பண்ணி இருக்கேன்.எங்க ஊர் திண்டிவனம் ங்க.எனக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க.அப்பா இப்போ சமீபத்திலே தாங்க இறந்துப் போனாறு.என் அப்பா சாவுக்கு எங்க சித்தி ஜோதி என் அம்மாவை பார்க்க திண்டிவனம் வந்து இருந்தாங்க. அப்போ என் அம்மா என் சித்தியெப் பார்த்து “ஜோதி,ராணீயை உன்னோடு சென்னைக்கு அழைச்சுக் கிட்டுப் போய் நீ செய்யறாப் போல ஏதாவது வீட்டு வேலை கிடைச்சா அவளுக்கும் ஏற்பாடு பண்ணி விடேன்னு கெஞ்சினாங்க. எங்க சித்தியும் என்னை சென்னைக்கு இட்டுகிட்டு வந்தாங்க. நான் இப்பொ என் சித்தி கூட தான் த்ங்கி இருக்கேனுங்க” என்ரு சொன்னாள் ராணி. ’பொண்ணும் சின்ன வயசா இருக்கா.முத முதல்லே வேலை க்கு வேறு சேரப் போறா. அதான்லே அதிக பணம் எதிர் பார்க்க மாட்டா.கிராமத்து பொண்ணு வேறே’ என்று மனசில் கணக்குப் போட்டு இவளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தாள் கமலா.“உன்னை நான் வேலைக்கு வச்சுக்கிறேன். .எங்க வீட்லே வீடு பெருக்கி துடைச்சி,துணி தோச்சி,பாத்திரம் கழுவி வைக்கணும்.இந்த மூணு வேலைக்கும் எவ்வளவு சம்பளம் நீ கேப்பே” என்று கேட்டாள் கமலா.”நீங்க கொடுதததை கொடுங்க” என்றாள் ராணீ.“மூணு வேலைக்கும் நான் முன்னூறு ருபாய் இப்போ தறேன்.அப்புறமா போவப் போவ நீ வேலை செய்ற¨தே பார்த்து எனக்கு பிடிச்சு இருந்தா மேலே போட்டுத் தரேன் என்ன” என்றாள் கமலா கண்டிப்பாக.உடனே ராணி “சரிங்க” என்று சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.“ஏதாச்சும் திருட்டு வேலை பண்ணினே,உன்னை போலீஸில் பிடிச்சு குடுத்திடு வேன்.நீ இங்கே திருடக் கூடாது தெரிதா”என்று எச்சரித்தாள் கமலா.“நான் நிச்சியமா திருடமாட்டேங்க.இது சத்திய ங்க” சொல்லும் போதே அவள் கண்களீல் நீர் துளித்தது.கொஞ்ச நேரம் போனதும் ”நான் நாளையிலெ இருந்து வேலைக்கு வறேனுங்க” என்று ராணீ சொல்லி விட்டு தன் வீட்டுக்குப் போனாள்.

அடுத்த நாள்.காலை மணி ஏழு இருக்கும்.காலிங்க் பெல் அடித்தது.கதவைத் திறந்தாள் கமலா.நேற்று கட்டி இருந்த புடவையுடன் வாசலில் நின்றுக் கொண்டு இருந்தாள் ராணீ.“வா உள்ளே வா” என்று சொல்லி விட்டு ”கொஞ்சம் இரு நான் பல் துலக்கி விட்டு வரேன்” என்று சொல்லி விட்டு பல் துலக்கி விட்டு வந்தாள்.நிதானமாக ராணீக்கு தன் வீட்டு வேலைகளை எல்லாம் விவரமாகச் சொன்னாள் கமலா. “நான் எல்லா வேலையும் செயறேணுங்க” என்று சொல்லி விட்டு துடைப்பம் எடுத்து முதலில் வீடு கூட்டப் போனாள் ராணீ.ராணீ வேலை பண்ணும் விதம் கமலாவுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

கமலா ராணீயைப் பாத்து “நேத்து கட்டிகிட்டு வந்த புடவையோடு வந்து இருக்கியே,உன் கிட்டே வேறே புடவைங்க இல்லையா” என்று கேட்டாள் கமலா.”என் கிட்ட ரெண்டு புடவை தாங்க இருக்கு.ஒரு புடவையை நான் மூனு நாள் கட்டின பிறவு தாங்க தோய்ப்பேனுங்க.அப்புறம் அடுத்த புடவையை கட்டுவேன்.அதை மூனு நாள் கட்டுவேங்க” என்றாள் ராணீ.“அடப் பாவமே.சரி,நான் என் பழைய புடவை ரெண்டை உனக்குத் தரேன். நீ தினமும் தோச்சு கட்டின புடவை கட்டிக்கிட்டு என் வீட்டு வேலைக்கு வரணும் புரியறதா” என்று சொல்லி தன்னிடம் இருந்த பழைய புடவை ரெண்டை கொண்டு வந்து ராணீயிடம் கொடுத்தாள் கமலா.நன்றி கலந்த முகத்தோடு அவற்றை வாங்கிக் கொண்டாள் ராணீ.

வேலைகளை பண்ணிக் கொண்டு இருந்த ராணீயிடம் பேச்சு கொடுத்தாள் கமலா.“நீ என்ன படிச்சு இருக்கே ராணீ” என்று கேட்டாள் கமலா.நான் பத்தாவது படிச்சு இருக்கேங்க” என்றாள் ராணீ.“உன் கூட பிறந்தவங்க எவ்வளவு பேர்”.“நான் ஒரு பொண்ணு தாங்க என் அம்மாவுக்கு” என்றாள் ராணீ.கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாளே ஒழிய அதிகமாக ஒன்றும் பேசவில்லை ராணீ.கமலா விடாமல் “உனக்கு இப்போ என்ன வயசாகுது” “இந்த ஜனவரி 26ம் தேதி வந்தா எனக்கு சரியா இருபது வயசாகுங்க.நான் குடியரசு தினத்தன்னிக்கித் தாங்க பொறந்தேன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.என் பொறந்த நாளைக்கு என் ஸ்கூல்லே எல்லா வருஷமும் லீவு விடுவாங்க .அதனால்லே எனக்கு என் பிறந்த நாளே மறக்காதுங்க”என்றாள் சிரித்துக் கொண்டே.அவள் சிரிப்பில் ஒரு தனி அழகு தெரிந்தது. பேசிக் கொண்டே எல்லா வேலைகளையும்’ பளிச்’சென்று பண்ணிக் கொண்டு இருந்தாள் ராணீ. ‘டீ’ போட்டுக் கொடுத்து விட்டு “ராணீ இந்த ‘பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு,இந்த ‘டீயையும்’ குடிச்சு விட்டு மீதி வேலைகளை எல்லாம் அப்புறமா பண்ணு ராணீ” என்று சொல்லி ‘பிஸ்கட்டையும்’ ‘டீயையும்’ கொடுத்தாள் கமலா.

“ராணீ,நம்ம விட்டு ஐயா வாரத்திலே ரெண்டு நாள் காலையிலேயே வேலைக்குப் போய் விடுவாரு.ரெண்டு நாளைக்கு மதியம் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போவாரு.ரெண்டு நாளைக்கு இரவு வேலைக்குப் போவாரு.நான் தினமும் காலை ஒன்பதரை மணிக்கு எல்லாம் வேலைக்குப் போய் விடுவேன்.சாயங்காலம் ஆறு மனிக்குத் தான் நான் வீட்டுக்கு வருவேன்.நான் நம்ப விட்டு வேலைகளை எல்லாம் உனக்கு சொல்லி விட்டேன்.நீ இன்னைகு வந்தாப் போல தினமும் காலையிலேயே சீக்கிரமா வந்து எல்லா வேலைகளை முடிச்சு விட்டுப் போ,என்ன” என்றாள் கமலா.“சரிங்க,நான் இன்னைக்கு காலையில் சீக்கிரமாவே வரேங்க” என்று சொன்னாள் ராணீ.

அடுத்த நாள் கமலா சொன்னது போல தோச்ச புடவையை கட்டிக் கொண்டு பளிச்சென்று வேலைக்கு வந்தாள் ராணீ.கமலாவின் நல்ல புடவையில் ராணீ இன்னும் அழகாகவே இருந்தாள்.எல்லா வீட்டு வேலைகளையும் பளிச்ச்சென்று சென்று செய்து விட்டு தன் வீட்டுக்குப் போனாள் ராணீ.கமலாவுகு ராணீ வேலை செஞ்சது ரொம்ப பிடித்து இருந்தது.

மூன்று மாதம் ஆகி விட்டது ராணீ வேலைக்கு வந்து. ராணிக்கு திருடுகிற புத்தி இருகிறதா என்று சோதித்து பார்க்க எண்ணினாள் கமலா. கமலா தனக்கு ஞாபகம் இல்லாத மாதிரி தன் மோதிரத்தை கழட்டி ராணீக்கு தெரியற இடத்தில் வைத்து விட்டுப் ஆ·பீஸ்க்குப் போனாள்.ஆனால் ராணீ அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வந்து “ஐயா,அம்மா அவசரத்தில் இந்த மோதிரத்தை வச்சுட்டுப் போயிட்டாங்க போல் இருக்கு” என்று சொல்லி நடராஜ னிடம் கொடுத்து விட்டு வீட்டு வேலைகளை செய்யப் போனாள்.இந்த விஷயத்தை நடராஜன் உடனே கமலாவுக்கு போன் பண்ணி சொன்னான்.போனில் கமலா ரகசியமாக “நான் வேணும்ன்னு தாங்க மோதிரத்தே கழட்டி வச்சுட்டு ஆ·பீஸ்கு போய் இருக்கேன்.வேலைகாரி கம்லாவுக்கு திருடற புத்தி இருக்கான்னு கண்டு பிடிக்க தாங்க”என்று சொன்னாள்.உடனே நடராஜன் “அந்த பொண்ணேப் பாத்தா அவளுக்கு திருடற புத்தி இருகிற மாதிரி எனக்கு தோணலே” என்று சொன்னான். கமலா இதே மாதிரி மூனு தடவை செய்து பார்த்தாள்.ஆனால் ராணி ஒரு தடவை கூட அந்த மோதிரத்தை திருடவில்லை.அப்புறம் தான் கமலாவுக்கு ராணீயின் போ¢ல் நம்பிக்கை வந்தது.

ராணீ தனக்கு வரும் சம்பளத்தில் தனக்கு என்று ஒரு ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு,தன் அம்மாவுக்கு ஒரு நூத்தி ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் பண்ணி வந்தாள்.தனக்கு தங்க இடம் கொடுத்து,இரவு சாப்பாடும் கொடுத்து வரும் தன் சித்திக்கு நூறு ரூபாயை ராணீ கொடுத்து வந்தாள்.தன் அம்மாவுக்கு தவறாமல் வாரம் ஒரு லெட்டர் போட்டு வந்தாள் ராணீ.

ராணீ கமலா வீட்டில் கமலா சொல்லாத பல வேலைகளை எல்லாம் பண்ணி வந்தாள்.தோச்ச துணிகளை எல்லாம் அவள் மடித்து வைப்பது, ஜன்னல் மேஜை,பீரோ,கதவு,எல்லாம் தூசு போக தட்டி சுத்தம் பண்ணினாள். ஒற்றடைகளை எல்லாம் உடனுக்குடன் அப்புறப் படுத்துவது,மேஜை மேல் ஏறி ‘பேன்’களை எல்லாம் சுத்தம் பண்ணுவது போன்ற பல வேலைகளை எல்லம் செய்து வந்தாள் ராணீ.கமலாவைக் கேட்டு மிஷினுக்கு போய் அவளுக்கு வேண்டியதை அரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் ராணீ.தோசை இட்டிலிக்கு ‘க்ரைண்டரில்’ அரைத்துக் கொடுத்தாள் ராணீ.இவ்வளவு வேலைகளை ராணீ முன்னூறு ரூபாய்க்கு செய்து வந்ததை எண்ணி சந்தோஷப் பட்டாள் கமலா.கணவனிடம் சொல்லி கமலாவுக்கு அந்த மாதாமே இன்னும் நூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றி கொடுத்தாள் கமலா.ராணீக்கு மிகவும் சந்தோஷம்.

சந்தோஷ மிகுதியால் இப்போதெல்லாம் ராணீ வேலை செய்து வரும் போது வாயிலே பழைய சினிமா பாட்டு களை முணு முணுத்தபடி பாடி வந்தாள்.அவள் முணு முணுத்து பாடுவதை நடராஜன் வீட்டில் இருக்கும் போது கவனமாகக் கேட்டு வந்தான். அவனுக்கு அவள் பாடுவது மிகவும் பிடித்து இருந்தது.சினிமாவில் வருவதைப்போலவே அவள் வரி மாறாமல் பாட்டுகளை பாடி, கூடவே ‘ஹம்மிங்’ செய்ய வேண்டிய இடத்தில் ‘ஹம்மிங்கும்’ செய்து வந்தாள்.அவள் குரலும் மிகவும் நல்லா இருந்தது.அவள் குனிந்து பெருக்கும் போதும், இப்படி ,அப்படி,போகும் போதும் அவள் இளமை அழகு அவனுக்கு விருந்தாய் இருந்தது.அவள் வேலைக்காரி என்பதும்,அவன் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் என்கிற எண்ணத்தை அவன் மறந்து வந்தான்.நடராஜன் வீட்டில் இருக்கும் போது அவனுக்கு ராணீயிடம் பேச வேண்டும் என்று ஆசை வந்தது.அவன் மெல்ல அவளிடம் பேச்சு குடுக்க ஆரம்பித் தான்.”நீ,இவ்வளவு நல்லா பாடறயே.எப்படி இவ்வளவு பாட்டு உனக்கு வருது ராணீ”என்று கேட்டான் நடராஜன் “நான் ஊரில் இருந்தப்ப முழு நாளும் சினிமா பாட்டு தாங்க கேட்டு வருவேன்.அதனால்லே தான் எனக்கு எல்லா பாட்டும் முழுக்க முழுக்கத் தெரியும்” என்று சொல்லி விட்டு அவள் வேலையை கவனிக்கப் போய் விட்டாள். அவள் குரலும் மிக இனிமையாக இருந்தது.“நீ இந்த சினிமா பாட்டுகளை எல்லாம் எதிலே கேப்பே ராணீ, டீ.வி.யிலா, இல்லை ரேடியோப் பெட்டியிலா” என்று கேட்டான் நடராஜன்.கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள் ராணீ.அவர் கேக்கறத்துக்கு நாம பதில் சொல்லலேன்னா அவர் தப்பா எடுத்துகப் போறார்ன்னு பயந்து ராணீ “நான் டீ.வி.லே ‘தேண் கிண்னம்’ ‘பழைய பாட்டுங்க’ வரும் போது கேப்பேன்.ரேடியோவிலே ‘விவித் பாரதி’ ‘தவறாம கேப்பேன்” என்று ராணீ£ சொல்லி விட்டு ‘கல’ ‘கல’ வென்று சிரித்தாள்.அவள் சிரிப்பில் ஒரு மயக்கத்தை உணர்ந்தான் நடராஜன்.வேலைகளை எல்லாம் முடித்து விட்டு “எல்லா வேலைங்களும் முடிச்சுட்டேங்க.நான் வீட்டுக்குப் போய் வறேனுங்க” என்று சொல்லி விட்டு ராணீ கிளம்பி போய் விட்டாள்.‘அவள் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க மாட்டாளா. நாம் அவளுடன் பேசிக் கொண்டு இருக்க மாட்டோமா,அவள் பாடும் சினிமா பாட்டுகளை இன்னும் கேக்க மாட்டோமா’ என்று நடராஜன் மனம் ஏங்கியது நெடு நேரம் அவள் பேசின பேச்சையும் பாடின சினிமா பாட்டையும் நினைத்து நினைத்து ரசித்துக் கொண்டு இருந்தான் நடராஜன்.தனக்குள் சந்தோஷப் பட்டான் நடராஜன்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *