குடும்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 2,409 
 

ஹரி-ஹரினி கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் புறப்படத்தயார் ஆனாரகள். புது ஜோடிகள் காரிலும் மற்றவர்கள் வேனிலும் ஏறுவதற்கு முன்பு ஹரினி,

அவளது தம்பி, தங்கை, பாட்டியிடம் தேம்பி தேம்பி அழுதாள். சீக்கிரமா என் கொள்ளு பேரன பாக்கனும் ஹரினி இந்த பாட்டி கண் மூடறதுக்குள்ள.

அம்மா அதெல்லாம் நடக்கும் நீ ஏன் இதெல்லாம் சொல்ற சரவணன் அம்மாவை செல்லமாக கடிந்து கொள்ள, மீனாட்சியும் ஆமாம் அத்தை அடுத்த வருஷமே நம்ம ஹரினியோட குழந்தைய கொஞ்சத்தான் போறீங்க. நாங்க கொண்டுபோய் விட்டுட்டு வந்திட்றோம்.

ஹரி-ஹரினி பாட்டியிடம் ஆசி வாங்கிக் கொண்டனர். வேனும் காரும் புறப்பட்டன. ஹரி .. ரெண்டு வண்டியும் ஒண்ணாவே போகட்டும். டிரைவர்கிட்ட பேச்சு குடுத்திட்டே வா. தூங்கிடாத. ஹரினி பாத்துக்கோம்மா என்றார் ஹரியின் அப்பா.

ஹரி-ஹரினி அனைவரும் சென்னை வீட்டுக்கு வந்தடைந்தனர். பெரிய விசாலமான வீடு. ஹரினி குடுத்துவெச்சவ இல்லீங்க. மீனாட்சி பெருமிதம் அடைந்தாள். இரண்டு நாள் இருந்துவிட்டு சரவணன்-மீனாட்சி இருவரும் புறப்பட்டனர்.

சம்மந்தி போய்டு வறோம். நீங்க எதுக்கும் கவலபடாதீங்க. உங்க பொண்ணு எங்க பொண்ணு மாதிரி. அடிக்கடி வாங்க இங்க இருக்கு திருச்சி. மாப்ள ஹரினிய பாத்துக்கோங்க. கண்டிப்பா அத்தை don’t worry மாமா.

ஹரினி வரேம்மா. கண்கலங்கினார் அப்பா. அவளுக்கும் துக்கம் தொண்டயை அடைத்தது. அம்மா கட்டி அணைத்தவாறு காதிலே சொன்னாள் பாட்டி சொன்னது ஞாபகம் வெச்சிக்கோ. போங்கம்மா வெட்கப்பட்டாள். செல்லமாக தலையில் குட்டிவிட்டு முத்தமிட்டாள் மீனாட்சி. லேசாக விழியோரம் கண்ணீர். மீனாட்சிக்கும்தான்.

பிரியாவிடை பெற்றனர். இரண்டு மாதம் கழித்து ஒருநாள். அம்மா ஒரு good news. ……….. அப்படியா congrats ஹரினி. Take care டி. கொஞ்சநாள் பைக்ல எங்கேயும் போகாத. மாப்ளய கேட்டதா சொல்லு. சரிம்மா. வெக்கறேன்.

சீமந்த பத்திரிக்கை வந்தது. சரவணன், மீனாட்சி, பாட்டி, மகன் மற்றும் சில உறவினர்கள் ஆஜர். ஹரினி அவள் மாமனார் மாமியார் மைத்துனர் எல்லாரிடமும் மிகவும் சகஜமாக பழகுவதை பார்க்கமுடிந்தது.

ஹரினி கூப்பிட்டாள். தம்பி இங்க வா. இதோ வரேன்கா. உன்ன இல்லடா. உன்ன என்னிக்கி தம்பின்னு கூப்டிருக்கேன். அண்ணி என்னதான் கூப்பிட்றாங்க என்று எழுந்து ஓடினான் மைத்துனன். ஹரினியின் தம்பி செல்லமாக முறைத்தான் அவளை. அவளும் ஒழுங்கு காட்டினாள்.

அம்மா.. ஹரினி என்ன இவ்ளோ மாறிட்டா. எதுக்கெடுத்தாலும் எங்க வீட்ல, எங்க மாமனார் எங்க மாமியார் னு ஒரே எங்க வீடு எங்க வீடு புராணமா இருக்கு. தம்பினு கூப்டா.. நான் போனேன். உன்ன இல்ல னு சொல்லி கிண்டல் பண்றா.

25 வயசு வரைக்கும் எங்க வீடுன்னு நம்ம வீட்டத்தானம்மா சொல்லிட்டிருந்தா. இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. Function முடிஞ்சி கிளம்ப தயாராயினர்.

ஹரினி பேச ஆரம்பித்தாள்.். அத்தை..மாமா.. நான் ஒண்ணு சொல்லட்டா முதல் பிரசவம் அம்மா வீட்டுக்குதான் போகனுமா. சொல்லுங்க ஹரி. ப்ளீஸ் நான் இங்கேயே பாத்துக்குறேனே.

நாங்க ரெடிடா கண்ணு. உங்க வீட்ல விடுவாங்களா. மாமியார் ஆரத் தழுவினாள். சாஸ்திரம் சம்ரதாயம்னு ஒண்ணு இருக்குடி ஹரினி.. பாட்டி சொன்னாள். மாமானார் மாப்பிள்ளை மைத்துனர் அனைவரது கண்களும் குளமாயின.

அன்று எவ்வாறு எங்களை விட்டு பிரியாவிடை பெற்றாளோ அதுவே ரிபீட் இன்று.

மீனாட்சி தன் மகனிடம் கூறினாள் எனக்கு ரொம்ம சந்தோஷமா இருக்குடா. எந்த ஒரு பொண்ணு புகுந்த வீட்ட விட்டு… 25 வருஷமா வாழ்ந்த பிறந்த வீட்டுக்கு வர அழுகிறாளோ அதுலியே தெரியல அவ இங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கான்னு.

நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா நீயும் இதேமாரி நடந்துகணும். இது தான் என் ஆசை. செய்வியா..

கண்டிப்பாம்மா…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *