காலத்தின் மாற்றங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 4,261 
 

கொடிமலர் அழகாக தான் இருந்தாள்,பெயருக்கேற்ற அழகு,சாதாரணமான உயரம்,அடர்த்தியான முடி நீளமாக வளர்ந்து இடுப்புக்கு கீழ் தொங்கியது,உடல் வளைவு நெளிவுகளுடன் அழகாக இருந்தது,உடல் எடையை சிக்கென்று வைத்து இருந்தாள்,அதிகமான நிறம்,புருவங்கள் வளைந்து,கண்கள் கொஞ்சம் பெரிதாகவும் இருந்தது,கடவுள் சிலருக்கு மட்டும் மொத்த அழகையும் சேர்த்து படைத்து விடுகிறான்,அப்படி படைக்கப் பட்டவள் தான் கொடிமலர் என்று சொன்னால் தப்பில்லை,பார்க்கும் பெண்களுக்கு பொறாமையும்,ஆண்களைக்கு ஆசையும் ஏற்படும் அளவிற்கு தான் இருந்தாள்,அவள் கூடப் பிறந்தவர்கள் அண்ணா,அக்கா,தம்பி தங்கை இவளுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பிள்ளைகள் குடும்பத்தில்,அம்மா பார்வதி,அப்பா சுந்தரேஷன் இருவரும் அழகானவர்கள்,பிள்ளைகளுக்கும் அதே அழகு,பிள்ளைகள் அழகாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அதுவும் பிரச்சினை தான்,வீட்டின் அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்பினாலும் பிள்ளைகள் வீட்டுக்கு வரும் மட்டும் பயந்து இருக்க வேண்டிய காலம் இது,அப்படி பார்த்து பார்த்து வளர்த்தாலும் அதையும் மீறி காதல் கடிதங்கள்,போன் என்று சில பிரச்சினைகள் தலை தூக்கியது என்னமோ உண்மை தான்.

அண்ணன்,தம்பி இருக்கும் போதே கொடிமலருக்கு காதல் கடிதம் கொடுத்து,அடிதடி சண்டையிலும் முடிந்து இருக்கு,உயர்தரம் மட்டும் படித்த கொடிமலர் படிப்பை முடித்துக் கொண்டு சங்கீதம் படிக்கத் தொடங்கினாள்,அப்போது அவளின் அக்கா பனிமலருக்கு திருமணம் முடிந்தது,அண்ணன் மரகதன் பட்டப்படிப்பை முடித்து விட்டு வேலைக்கு போக ஆரம்பித்து விட்டான்,திருமலரும்,யாழனும் தமது படிப்பை தொடர்ந்தார்கள்,மரகதன் ஆபிஸ் நண்பர்களை எப்போதாவது வீட்டுக்கு அழைப்பது வழக்கம் அப்படி வந்தவர்களில் ஒருவன் தான் சிவகுகன் முதல் தடவை கொடிமலரை பார்க்கும் போது பேரழகு என்று மட்டுமே தோன்றியது அவனுக்கு,நண்பனின் தங்கை என்பதால் வேறு எதுவும் தோன்றவில்லை அவனுக்கு,கொடிமலருக்கு அவனை பார்த்தவுடன் பிடித்தது,பலர் வந்து இருந்தாலும் சிவகுகனை மட்டும் அவளுக்கு மறுப்படியும் பார்க்கத் தோன்றியது அவனின் கலகலப்பான பேச்சி,பொது நிறம்,கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி,அழகு என்று எதுவும் இல்லை அவனிடம்,நிறைய அழகானவர்களும் வந்து இருந்தார்கள்,அப்படி இருந்தும் அவனை பார்க்கும் போது கொடிமலர் தன்னை அறியாமல் அவன் பக்கம் ஈர்க்கப் படுவதை உணர்ந்தாள்,அவர்கள் போகும் போது கொடிமலரிடம் கூறிவிட்டுப் போனார்கள்,சிவகுகன் வந்து கொடிமலரிடம் விடைப்பெறும் போது என்னவோ போல் இருந்தது அவளுக்கு.

அவன் சென்றப் பிறகும் அவன் நினைவாகவே இருந்தது அவளுக்கு,நாட்கள் ஓடியது,ஒரு நாள் பனிமலர் அவள் கணவன் ரவீந்தரனுடன் வீட்டுக்கு வந்து இருந்தாள்,அனைவருக்கும் ஆனந்தம்,அடிக்கடி வந்து போகும் தூரத்தில் அவர்கள் இல்லை,நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் வந்து இருந்ததால், அனைவரும் பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு போவதற்கு முடிவெடுத்தார்கள்,அநேகமாய் குடும்பமாக சேர்ந்து கோயில் போவது குறைவு,கொடிமலர் தனியாக எங்கும் போக மாட்டாள்,ஏதாவது பிரச்சினை வந்து விட்டால்,அண்ணன்,தம்பி சண்டைக்கு போய் விடுவார்கள் என்ற பயம் அவளுக்கு,அன்று அனைவரும் கோயில் போனார்கள்,எப்போது கோயில் போனாலும் கொடிமலரும் அவள் தங்கை திருமலரும் தேவாரங்கள் பாடுவது வழக்கம்,அன்று திருமலருக்கு தொண்டை வலி என்று அவள் பாடவில்லை,கொடிமலர் மட்டும் அன்று பாட ஆரம்பித்தாள்,அவளின் இனிமையான குரலில் தேவாரங்களை கேட்கும் போது அவ்வளவு இனிமாயாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை சிவகுகன் கோயில் வந்து இருந்தான்,அவன் நண்பனுடைய பிறந்த நாள் அவன் வற்புருத்தி அழைத்துக் கொண்டு வந்திருந்தான்,அப்போது மறுப்படியும் கொடிமலரை கண்டதும்,அவள் பாடியதை கேட்டதும் மெய்மறந்து நின்ற சிவகுகனின் தோலை மரகதன் வந்து தட்டியதும் திடிக்கிட்டுப் போனான் அவன்,நீ கோயில் வந்திருப்பது அதிசியமாக இருக்கு என்றான் மரகதன்,என் நண்பன் சதீஷ் பிறந்த நாள் என்று அவனையும் அறிமுகம் படுத்தி வைத்தான் சிவகுகன்,அனைவரும் சாமி கும்பிட்டு,சற்று நேரம் உட்கார்ந்தார்கள்,கொடிமலர் சந்தன கலர் சேலையில்,தலை நிறைய மல்லிகை பூவுடன் அழகாகவே இருந்தாள்,கோயிலில் இரவு உணவு கொடுத்தார்கள் அனைவரும் சாப்பிட்டு புறப்பட்டு விட்டார்கள்,கொடிமலர் சிவகுகனிடம் தலையை மட்டும் அசைத்து விட்டு சென்று விட்டாள்,இதை கவனித்த சதீஷ்,சிவகுகனிடம் அழகான பொண்ணு உன்னிடம் மட்டும் சைகையில் தலையை ஆட்டிவிட்டுப் போகிறாள் என்றான் அவன்,ஆமாடா அவளை எனக்கு முன்னதாகவே தெரியும் மரகதன் தங்கை என்றான்,நான் பக்கத்தில் அழகானவன் நிற்கின்றேன் அவளுக்கு என்னை கண்ணில் படவில்லை என்று சிரித்தான் சதீஷ்.

கொடிமலருக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக ஆபிஸ்லில் மரகதன் ஒரு நாள் கூறிக் கொண்டு இருந்தான்,சிவகுகனுக்கு நாங்கள் ஏன் கேட்டு பார்க்க கூடாது என்று தோன்றியது,மரகதனிடம் போய் கேட்டே விட்டான்,உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து தருவீயா என்று,அவன் எனக்கு பிரச்சினை இல்லை,கொடிமலருக்கு பிடிக்கனும் அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும்,எனக்கு இதைப் பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாது வீட்டில் பேசியப் பிறகு உனக்கு பதில் சொல்கிறேன் என்றான் அவன்,வீட்டில் இந்த பேச்சி அடிப்பட்டது,அவன் அவ்வளவு பெரிய அழகு எல்லாம் இல்லை,நன்றாக படித்து வேலையில் இருக்கான்,கொடிமலர் இருக்கும் அழகிற்கு அவன் ஏத்தவனா இருப்பான் என்று எனக்கு தோன்றவில்லை என்றார் அப்பா சுந்தரேஷன்,அம்மா பார்வதி ஏன் அழகை மட்டும் யோசிக்கனும்,அவன் நல்ல உத்தியோகத்தில் இருக்கான்,எதிர் காலத்தில் நன்றாக சம்பாதிப்பான்,கொடிமலரை நன்றாக பார்த்துக் கொள்வான் என்றாள் அவள்,தங்கை திருமலர் அக்கா உள்ள நிறத்திற்கு அவன் பக்கத்தில் நின்றால் கறுப்பாக தெரிவான் எனக்கு அவனை மாமா என்றெல்லாம் கூப்பிட முடியாது என்றாள் அவள்,உனக்கு மாப்பிள்ளை பார்க்கவில்லை அக்காவிற்கு என்றான் யாளன்

அவன் அவ்வளவு அழகு இல்லை என்றாலும் நல்ல புத்திசாலி,எதிர்காலத்தில் உழைத்து முன்னுக்கு வந்து விடுவான் என்றான் மரகதன்,நாங்கள் முடிவு எடுப்பதற்கு முன்பு கொடிமலரிடம் அவள் விருப்பத்தை கேட்ப்போம் என்றார் சுந்தரேஷன்,கொடிமலரிடம் பார்வதி உனக்கு சிவகுருவை தெரியும் தானே என்றாள்,ஆமாம் என்றாள் அவள்,அவன் உன்னை கட்டிக்க விரும்புவதாக உன் அண்ணனிடம் கூறியிருக்கான்,உனக்கு சம்மதமா என்றாள் பார்வதி,அவள் கொஞ்சம் தடுமாறிப் போனாள்,உடனே சம்மதம் என்று எப்படி சொல்வது,அமைதியாக நின்றாள்,அக்கா நீ யோசித்து முடிவு எடு,அவன் கறுப்பு என்றாள் திருமலர்,நீ என்னிடம் உதைப்படுவ,எந்த நேரமும் கறுப்பு வெள்ளை என்று பார்த்துக் கொண்டு இருந்தால்,உனக்கு கறுகறு என்று ஒருவன் தான் வந்து அமைவான் என்றாள் பார்வதி,அதை அப்போது பார்க்கலாம் நீ சொல்லம்மா என்றார் அப்பா சுந்தரேஷன்,உங்கள் விருப்பம் அப்பா என்றாள் கொடிமலர்,நீ வாழப் போகிறவள்,நீ தான் முடிவு எடுக்கனும் என்றார் அவர்,சரியப்பா எனக்கு சம்மதம் தான் என்றாள் அவள்,அதன் பிறகு சிவகுகன் குடும்பத்தை முறைப்படி பெண் கேட்டு வரும்படி கூறுவோம் என்று தீர்மானித்தார்கள்.

சிவகுருவிற்கு போன் பன்னி மரகதன் விஷயத்தை சொன்னதும்,அவனுக்கு அளவில்லாத சந்தோஷம்,அவன் முதல் அவன் அண்ணனிடம் இந்த விடயத்தை சொன்னான் அவனுக்கு அப்பா இல்லை அண்ணன் இரண்டு பேரும் தான் குடும்பத்தை கவனித்துக் கொண்டார்கள்,அவன் குடும்பம் பெரிய குடும்பம்,அக்கா நான்கு பேர்,தங்கை இரண்டு,தம்பி ஒன்று என்று பெரிய குடும்பம்,இவனும் இவனது தம்பியும் மட்டுமே இன்னும் திருமணம் செய்யவில்லை,மற்றவர்கள் அனைவரும் திருமணம் செய்து குழந்தைகளுடன் இருக்கின்றார்கள்,அம்மா அமராவதிக்கு சற்று வயது என்றாலும் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டாள்,எல்லோருக்கும் அம்மா என்றால் சற்று பயம்,அதனால் தான் சிவகுகன் அண்ணனிடம் இதைப் பற்றி சொன்னதிற்கு காரணம்,உனக்கு பிடித்திருந்தால் செய்து விடலாம்,நீ ஒன்றும் யோசிக்காதே என்ற அண்ணனின் வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலாக இருந்தது,அண்ணன் அம்மாவிடம் விடயத்தை கூறியப் போது,அவள் எதுவும் மறுப்பு கூறவில்லை,அனைவருக்கும் வசதியான ஒரு நாளில் கொடிமலர் வீட்டுக்கு பெண் கேட்கப் போனார்கள்,அவர்கள் குடும்பத்திற்கும்,இவர்கள் குடும்பத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தது,அவர்களின் சாங்கிய சம்பிரதாயங்கள் முதற் கொண்டு அனைத்தும் வித்தியாசமாக இருந்தது,அது அமராவதிக்கு அவ்வளவு விருப்பம் இல்லை என்றாலும்,மகனுக்கு விருப்பம் என்று தெரிந்தப் பிறகு வாய்திறந்து எதுவும் கூறவில்லை.

சிவகுகனின் திருமணம் சில பல குழப்பங்களுடன் தான் முடிந்தது,எவ்வளவு குழப்பங்கள் வந்தாலும் சமாளித்து,மனதிற்கு பிடித்தவளையே கட்டி விடவேண்டும் என்று உறுதியாக அவன் இருந்ததால் ஓரளவிற்கு சுமுகமாக முடிந்தது அவர்கள் திருமணம்,அவள் கழுத்தில் தாலி கட்டி,அவள் கரங்களை பிடித்தப் பிறகு தான் இருவருக்கும் நிம்மதியாக மூச்சி விட முடிந்தது,இருவருக்கும் முதல் இரவை சிவகுகன் வீட்டில் ஏற்பாடு பன்னி இருந்தார்கள் கொடிமலர் பாலுடன் உள்ளே வந்தாள்,சிவகுகன் அசந்து தான் போனான்,என் மனைவி இவ்வளவு அழகா என்று அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது,அவள் வந்து பாலை அவனிடம் கொடுத்து விட்டு,காலில் விழப்போனவளை இதுவெல்லாம் வேண்டாம் என்று அவளை அருகில் உட்கார வைத்தான்,அவள் முகம் சிவந்து போனது,கண்ணங்கள் இரண்டும் விரல் பட்டால்,இரத்தம் வந்து விடும் போல் இருந்தது அவளுக்கு,என்னை உனக்கு பிடித்திருக்கா என்றான் அவன்,ஆமாம் என்றாள் அவள்,உன் அளவிற்கு நான் அழகில்லை என்றான் அவன்,நான் எப்போதும் அழகானவள் என்று நினைத்தது இல்லை என்றாள் அவள்,அப்படி நினைத்திருந்தால் என்னை கட்டியிருக்க மாட்ட என்றான் அவன்.

மற்றவர்களுக்கு நான் அழகாக தெரிகிறேன்,அவ்வளவு தான்,நீங்கள் எனக்கு அழகாக தெரியிறீங்கள் என்றாள் அவள்,நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்றான் சிவகுரு,அதை திருமணத்தின் போதே தெரிந்துக் கொண்டேன் என்று அவள் சிரித்தாள்,இல்லை என்றால் நம் திருமணம் இலகுவாக முடிந்திருக்காது என்று அவனும் சிரித்தான்.

உன்னிடம் அப்படி நடந்துக்க மாட்டேன் என்றான் அவன்,அவள் அமைதியாக இருந்தாள் உனக்கு எதற்கும் அவசரம் இல்லை தானே என்றான் அவன்,அவளுக்கு எதுவும் புரியாமல் எதற்கு என்றாள்,இல்லை அவசரமாக குழந்தை பெத்துக்கனுமா என்றான் அவன்,அவள் முகம் சிவந்துப் போனாள் உங்களுக்கு என்றாள் அவள்,எனக்கு அவசரம் எல்லாம் இல்லை கொஞ்சம் ஆறுதலாக பெத்துக்குவோம் என்றான்,அவள் அமைதியாக தலையை ஆட்டினாள் அவன் மெதுவாக அவள் கைகளை பிடித்தான்,வேண்டாம் என்று சொன்னீங்கள் என்றாள் அவள் பாவமாக,நான் அதை மட்டும் தான் சொன்னேன்,மற்றயது எல்லாம் நடக்கும் என்றான் அவன்,கொடிமலருக்கு இவன் என்ன சொல்கிறான் என்று குழப்பமாகவே இருந்தது,இது எதுவும் உனக்கு தெரியாதோ என்றான் அவன்,அவள் இல்லை என்றாள், உனக்கு வகுப்பே நடத்தனும் போல் இருக்கே என்றான் அவன்,பிறகு சிலவற்றை கூறி புரியவைத்தான்,இது எல்லாம் தெரியாமலே இவ்வளவு நாட்களும் இருந்து இருக்கோமே என்று அவள் நினைத்துக் கொண்டாள்,கொன்டம் என்ற பெயர் எல்லாம் அவள் கேள்விப் பட்டதே கிடையாது,நீங்கள் நிறைய படித்தவர் உங்களுக்கு நிறைய விடயம் தெரிந்திருக்கு என்றாள் அவள்,இதற்கு படிப்பு எல்லாம் அவசியமில்லை என்று அவளை கட்டிப் பிடித்தான் அவன்,சிவகுரு சட்டென்று விலகி,உனக்கு கஷ்டமாக இருக்கா என்றான்,ஏன் என்றாள் அவள், நீ பஞ்சி மாதிரி இருக்க,உனக்கு நான் கரடுமுரடாக தெரிகிறதா என்றான் அவன் அப்படி எதுவும் இல்லை என்று சிரித்தாள் அவள்

இப்படி இருவரினது வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரம்பித்தது,சிவகுகன் வேலை செய்யும் இடத்தில் அவனுக்கு வீடு கொடுத்திருந்தார்கள்,இருவரும் அங்கு சென்று விட்டார்கள் அடிக்கடி சொந்தங்களை வந்து பார்த்து விட்டுப் போவார்கள்,வரும் போது எல்லாம் கொடிமலரிடம்,ஏன் இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்க என்பார்கள் யாராவது,இந்த கேள்வியே சிவகுகனுக்கு பிடிக்காது,எங்களுக்கு விருப்பமான நேரத்தில் பெத்துக்குவோம் என்று பட்டென்று பதில் சொல்வான் அவன்,அது மற்றவர்களுக்கு பிடிக்காது,இவன் இப்படி தான் கதைப்பான் என்று அதற்கு மேல் வேறு எதுவும் கேட்க்க மாட்டார்கள்,கொடிமலர் வீட்டில் சிவகுகனைப் பற்றி தெரியும்,அவர்கள் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்க்க மாட்டார்கள்,கொடிமலர் கணவன் குணங்களை ஓரளவிற்கு பெற்றோர்கள் காதில் போட்டு வைத்திருந்தாள்,நீ சந்தோஷமாக இருக்க தானே என்று கேள்வி மட்டும் வரும்,ஆமாம் நான் சந்தோஷமாக தான் இருக்கேன் என்பாள்,கிளியை வளர்த்து பூனையிடம் கொடுத்த கதையாகி விடாமல் என்று அவர்களும் கொஞ்சம் கவலைப் படுவார்கள்,சிவகுகன் மற்றவரகளுக்காக சமாளித்து நல்ல பெயர் வாங்கும் ஆள் எல்லாம் இல்லை,எது அவனுக்கு சரியென்று தோன்றுதோ அதையே செய்வான் அதையே சொல்வான்,அதனால் மற்றவர்களிடம் அவனுக்கு சரியான பிடிவாதக்காரன் என்ற பெயரும் கிடைக்கின்றது அதற்காக அவன் ஒருபோதும் கவலை பட்டதும் இல்லை.

அவன் வேலை செய்யும் கம்பனியில் சில பிரச்சினைகளும் எழும்பியது,மரகதனும் அதே கம்பனியில் வேலை என்பதால் அவன் தடுமாறிப் போவான் சிவகுகனிடம் நீ அஜெஸ்ட் பன்னி போ என்று சொல்ல முடியாது,என் மீது பிழை இல்லாதப் போது,எனக்கு அப்படி போக முடியாது என்று அவன் அடித்து சொல்வான் என்பது அவனுக்கு தெரியும்,அதனால் அவன் அமைதியாக இருந்து விடுவான்,இன்ஜினியரிங் படித்து இருந்தால் மட்டும் போதாது,வேலை செய்யும் போது மூளையை பயன்படுத்த வேண்டும் என்பான் சிவகுகன்,மரகதன் அவர்கள் சொல்லும் வேலையை செய்பவன்,சிவகுகன் அவர்கள் சொல்லும் வேலையை ஆராய்பவன்,இதை இப்படி செய்தால் பிழை வரும் என்று தெரிந்துக் கொண்டு அந்த வேலையை செய்ய போகமாட்டான்,சம்பளம் கொடுக்கின்றார் என்பதற்காக வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டான்,அவர்களிடம் போய் எடுத்து சொல்வான் அப்போது பல பிரச்சினைகள் ஏற்படும்,இவன் சொல்வதை சில நேரம் அவர்கள் பிழை என்பார்கள்,இது தான் சரியென்பான் இவன்,இப்படி பல பிரச்சினைகள் மத்தியில் அந்த வேலை முடியும்,அப்படி வேலை பழகியவன் சிவகுகன்.

கொடிமலரிடம் கம்பனியில் நடப்பவைகளை போய் சொல்வான்,அண்ணா எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யும் போது,உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் என்பாள் அவள்,நான் சம்பளத்திற்காக வேலை செய்பவன் இல்லை என்ற பதில் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக இருந்து விடுவாள்,நாட்கள் சென்றது கொடிமலர் தாய்மை அடைந்தாள்,அனைவருக்கும் அளவில்லாத ஆனந்தம் திருமணம் முடிந்து ஒருவருடத்திற்கு மேலாகிவிட்டது,சிவகுகனிற்கு சந்தோஷமாக இருந்தது,தலைசுற்றல்,வாந்தி என்று கொஞ்சம் கொடிமலருக்கு இருக்கவே செய்தது ஆனால் இதை எதையும் பெரிது படுத்திக் கொள்ளமாட்டான் சிவகுகன்,இது சாதாரணம் என்று போய்விடுவான்,அப்போது கொடிமலருக்கு கோபம் வரும்,மனைவி உண்டாகி இருக்கும் போது கணவன் எப்படி தாங்கனும்,அவனுக்கு அதுவெல்லாம் கணக்கில்லை பெரிய குடும்பத்தில் பிறந்தவன்,அக்கா அண்ணி எல்லோரும் கர்ப்பகாலத்தில் கஷ்டப் பட்டதை கண்ணால் பார்த்தவன்,அதனால் அவனுக்கு இது சாதாரனமாக பட்டத்தில் ஆச்சிரியம் இல்லை,ஆனால் கொடிமலருக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்,கணவன் நம்மை தாங்கனும்,ஆதரவாக இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்று அவள் நினைப்பாள் என்பதை மறந்து போனான் அவன்.

கொடிமலரை அவள் அம்மா வந்து கவனித்துக் கொண்டாள்,டாக்டரிடம் அழைத்துப் போவது,பார்த்து பார்த்து சமையல் செய்து கொடுப்பது முதல் அனைத்தும் அவள் செய்தாள் வளைகாப்பு செய்வதாக பேச்சி அடிப்பட்டது,அது நம் வழக்கத்தில் இல்லை என்றார்கள் கொடிமலர் குடும்பம்,கட்டாயமாக செய்ய வேண்டும் என்றார்கள் சிவகுகன் குடும்பம்,வளைகாப்பு என்பது நல்ல விடயம் தானே அதை செய்து விடுவோம் என்று சிவகுகன் முடிவுப் பன்னி செய்து விட்டான்,கொடிமலருக்கு அது சந்தோஷமாக இருந்தது,கணவன் எல்லாவற்றையும் முன் நின்று செய்தது,அவளுக்கு கொடுத்த திகதியில் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்,சிவகுகன் ஆஸ்பிடல் போய் தன் குழந்தையை கையில் வாங்கும் போது கண்கலங்கி நின்றான்,சின்னதொரு உருவமாக தன் கையில் தன் மகன் என்பது அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது,நெற்றியில் முத்தம் வைக்கும் போது மெய்சிலிர்த்துப் போனது,கொடிமலரிடம் சற்று நேரம் ஆறுதலாக பேசிக் கொண்டு இருந்து விட்டு,மகனை கட்டி அணைத்து முத்தத்தை கொடுத்து விட்டு,உடம்பை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டான் சிவகுகன்,முதல் குழந்தை என்பதால்,கொடிமலர் அவள் தாய் வீட்டில் இருப்பதற்கு ஏற்பாட்டை செய்தார்கள்,அது அவ்வளவாக சிவகுகனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை.

மகன் பிறந்து பெயர் வைக்கும் போதும் சில குழப்பங்கள்,முப்பது செய்யும் போது சில குழப்பங்கள் சாங்கியம் செய்ய வந்த ஐயர் புது நகை போடவேண்டும் என்று கூற சிவகுகனுக்கு கோபம் வந்து விட்டது,இது எல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா கடைசி நேரம் சொன்னால் இப்போது எப்படி நகை வாங்குவது என்று கொடிமலரிடம் பாய்ந்தான் அவன்,அவள் எதுவும் கூறவில்லை, கொடிமலர் தாயிடம் இருந்த புது நகையை கொண்டுப் போட்டு சமாளித்து விட்டார்கள் அப்போதைக்கு,மூன்று மாதம் சென்றப் பின் கொடிமலர் குழந்தை மாதேஷ்வரனுடன் வந்து சேர்ந்தாள்,சிவகுகன் வேலை என்று ஓடிக் கொண்டு இருந்தான்,கொடிமலருக்கு தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ளவதற்கு கொஞ்சம் சிரம்மமாக இருந்தது,கணவனிடம் சொன்னால்,உனக்கு வேறு எதுவும் வேலை இல்லை தானே,குழந்தையை மட்டும் தானே பார்க்க வேண்டும் எனக்கு கம்பனியில் எவ்வளவு வேலை என்பான்,அவளுக்கு அவனின் பேச்சி சிலநேரம் கோபத்தை உண்டு பன்னும்,வீட்டில் உள்ளவர்களுக்கு தான் அதிகமான வேலை,ஏதோ நாங்கள் வேலை செய்யாமல் இருப்பதுப் போல் சிவகுகன் சொல்வது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் ஆமாம் இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் தான் அதிசியமாக கம்பனிக்கு வேலைக்கு போகும் நினைப்பு என்று மனதில் நினைத்துக் கொள்வாள் அவள்.

கொடிமலர் இரண்டாவதும் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்,இத்துடன் குழந்தைகள் போதும் என்று அவள் நினைத்தாள்,சிவகுகன் எங்களுக்கு பெண்குழந்தையொன்று வேண்டும் என்று ஆசைப் பட்டான்,தனியாக கம்பனி ஆரம்பிக்கப் போவதாக கொடிமலரிடம் சொன்னான்,ஏன் இப்போது,நல்ல சம்பளம் வீடு கொடுத்திருக்கார்கள்,பிறகு ஏன் இந்த நேரத்தில் தனியாக தொடங்கி அது சரிவருமா என்றாள் அவள் சந்தேகத்துடன் அதுவெல்லாம் சரிவரும் என்றான் அவன்,அதை தாண்டி அவனிடம் எதுவும் கூற முடியாது என்று அவளுக்கு தெரியும்,சிவகுகன் தனியாக கம்பனி ஆரம்பித்தான்,ஆரம்பத்தில் வேலைகள் எடுப்பதுவே கஷ்டமாக இருந்தது,அறிமுகம் இல்லாத ஒருத்தனிடம் எப்படி தான் நம்பி வேலை கொடுப்பார்கள் மற்றவர்கள்,முன்பு அவன் வேலை செய்த கம்பனிக்கு வேலை கொடுப்பவர்களுக்கு சிவகுகனைப் பற்றி ஓரளவிற்கு தெரியும்,அவர்கள் அவனிடம் இயந்திர உதிரிபாகங்களை திருத்தி கொடுப்பதற்கு கொடுத்தார்கள்,அவனின் வேலையில் எந்த குறையும் கண்டு பிடிக்க முடியாத அந்தளவிற்கு தரமாக இருக்கும்,அதனால் அவனின் கம்பனி வேகமாக வளர்ச்சியடைந்தது.

பத்து வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொண்டு,அவனும் ஓடி வேலை செய்தான்,பிள்ளைகளும் வளர்ந்தார்கள்,வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டார்கள்,மூன்றாவது பெண்குழந்தை வேண்டும் என்று பிடிவாதத்தில் சிவகுகன் இருந்ததால்,கொடிமலருக்கு அதில் அவ்வளவு விருப்பம் இல்லை என்றாலும் கர்ப்பமானாள் அவர்கள் நேரம் அதுவும் ஆண்குழந்தையாக பிறந்தது,அதில் கொஞ்சம் வருத்தம் இருவருக்கும்,சசிதரன் என்று பெயர் வைத்தார்கள்,குழந்தைகள் வேகமாக வளர்ந்தார்கள்,சிவகுகனின் கம்பனியும் வேகமாக வளர்ந்தது,சொந்தமாக வாகனம் வாங்கினான் சிவகுகன்,கொடிமலர் சொந்தமாக வீடு வாங்க விருப்ப பட்டாள்,சிவகுகன் தற்போதைக்கு வீடு வேண்டாம்,பிறகு வாங்கலாம் என்றான் அவன்,பசங்க வாலு பசங்கள்,அதனால் சிவகுகனுக்கு வாடகைக்கு அதிகமான நாட்கள் வீடு கொடுப்பதற்கு தயங்கினார்கள் வீட்டு உரிமையாளர்கள்,அடிக்கடி வாடகை வீட்டை மாற்றிக் கொண்டு இருந்தார்கள் சிவகுகன் குடும்பம்.

சிலநேரம் கொடிமலர் ஏதாவது வாய்திறந்து சொன்னால்,அதுவும் சிவகுகனுக்கு பிடிக்காது உனக்கு எதுவும் தெரியாது என்பான்,பிள்ளைகளும் வளர்ந்து நின்றார்கள்,மாதேஷ்வரன் உயர்தரம் படித்துக் கொண்டு இருந்தான்,கிரிதரன் பத்தாவதும்,சசிதரன் எட்டாவது படித்துக் கொண்டு இருந்தார்கள்,சிவகுகனின் கம்பனி கொஞ்சம் ஆட்டம் கண்டது,நினைத்தளவிற்கு கம்பனியில் வருமானம் தற்போது இல்லை,உள்ளதை வைத்து சமாளித்து கம்பனியை நடத்திக் கொண்டு வந்தான் சிவகுகன்,மூத்த மகன் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை,அவனை தனியார் காலேஜில் படிக்க வைப்பதற்கு முடிவு செய்தான் சிவகுகன்,அதற்கு பணம்,மற்றவர்கள் படிப்பு செலவு,வீட்டுச்செலவு,கம்பனி நடத்த பணம் என்று அதிகமாகவே பணம் தேவைப் பட்டது சிவகுகனுக்கு,அதனால் அதிகமான கடன் வாங்கிவிட்டான் அவன்,அதை திருப்பி தரமுடியாத சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டது,அதை நினைத்தே அவனுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது,ஒருவருடம் சிவகுகன் அவனாகவே இல்லை,என்ன செய்றோம் என்று அவனுக்கு தெரியவில்லை,டாக்டர்களை போய் பார்த்தான்,அவர்கள் சொன்னது எல்லாம் எதையும் கூடுதலாக யோசிக்க வேண்டாம் என்று தான்,அது எப்படி முடியும்,கம்பனி நஷ்டத்தில் போகின்றது,பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்,தற்போது கம்பனியில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை,எல்லாம் சேர்த்து தலை குழம்பி நின்றான் அவன்,கொடிமலர் கோயில் கோயிலாக ஏறி இறங்கினாள் அவர்கள் வீட்டில் முதல் கொண்டு அனைவரும் கம்பனி தொடங்கியிருக்க கூடாது என்று முனுமுனுத்தார்கள்.

ஒரு வருடகாலமாக சிவகுகன் நன்றாக இல்லை,மறுப்படியும் அவன் ஓரளவிற்கு நன்றாகிவிட்டான்,கம்பனியை மூடிவிடவில்லை,தானும் ஒரு வேலையாளும்,மகன்மார்கள் உதவியிலும் கம்பனியை நடத்த ஆரம்பித்தான்,வட்டிக்கு பணம் வாங்கி அந்த பணத்தில் ஓரளவிற்கு வேலைகள் நடந்தது கொண்டிருந்தது,கொடிமலருக்கு சிவகுகன் மீது கோபம் இருப்பதற்கு ஒரு வீடு கூட வாங்கி வைக்கவில்லை,இருக்கும் நகைகள் அனைத்தும் வங்கியில் ஈடுவைத்திருப்பது எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை,அவள் வாய்திறந்தால் அதுவும் அவனுக்கு பிடிக்காது,அடிக்கடி அவன் கோபத்தை கொடிமலரிடம் காட்ட ஆரம்பித்தான்,அவளும் எதிர்த்துப் கதைத்து விடுவாள்,கொடிமலரின் குடும்பத்தில் அனைவரும் திருமணம் செய்து குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டுருந்தார்கள்,கொடிமலர் மட்டும் கஷ்டப்படுவது அவர்களுக்கும் வருத்தமாக தான் இருந்தது,சிவகுகன் பிடிவாதக்காரன் அவனிடம் எதுவும் கேட்டால் அவனுக்கு கோபம் வரும் என்று தெரிந்து வாயை மூடிக் கொண்டார்கள் கொடிமலர் குடும்பம்,நாட்கள் ஓடியது மகன்மார்கள் படிப்பை முடித்து விட்டான்,மூத்தவன் வேலைக்கு போவதற்கு ஆரம்பித்தான் மற்ற இரண்டு மகன்களும் அப்பா கம்பனியை கவனித்துக் கொண்டார்கள்,சிவகுகன் ஓரளவிற்கு கடன்களை கட்டி முடித்தான்,மாதேஷ்வரன் காதல் என்று வந்து நின்றான் கொடிமலருக்கு அதில் அவ்வளவு விருப்பம் இல்லை,சிவகுகன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை நல்ல இடம் நம் குடும்பத்திற்கு ஏற்ற இடம் என்று அவனுக்கு தோன்றியது.

கொடிமலர் மனதளவில் சந்தோஷமாக இல்லை,சிவகுகனின் கடுகடுப்பான பேச்சி,தான் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்ப்பது இல்லை,தங்குவதற்கு ஒரு சொந்த வீடு இல்லை,நகைகள் இல்லை,பிள்ளைகளுக்கு தனக்கு விருப்பம் இல்லாத சம்பந்தம் இப்படி பலவற்றையும் யோசித்து யோசித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது,கொடிமலர் தாய் வந்திருந்தாள்,மகளை சிறிது நாட்கள் அவளுடன் அழைத்துப் போய் விட்டாள்,மகளை பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருந்தாள்,தற்போது உடல் கொஞ்சம் குண்டாகி,முடியின் அடர்த்தி,நீளம் எல்லாம் குறைந்து,நிறம் குறைந்து பார்க்கவே கொஞ்சம் அழகு குறைந்த மாதிரி இருந்தது,காலத்தின் மாற்றங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறி போய் விடுகிறது,எப்படி இருக்க வேண்டியவள்,இப்போது இப்படி இருக்கின்றாள் என்பதை நினைத்து கொடிமலரின் பெற்றோர்கள் கவலைப் பட்டார்கள்,எதுவும் நம் கையில் இல்லை கடவுளின் அமைப்பு என்று ஆறுதல் அடைந்துக் கொண்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *