காதல் யுத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 8,050 
 
 

கண்களில் இருந்து பெருகி வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மனமற்று அமர்ந்திருந்தாள் மஞ்சு. புதுமணத் தம்பதியரான கார்த்திக்-மஞ்சு தம்பதிக்கிடையில் முதல் சண்டை. வருத்தம் இருக் கத்தானே செய்யும்.

திருமணமாகி இந்த இரண்டு மாதங்களும் குறும்பும், விளை யாட்டுமாய் குதூகலமாய் சென்றது. கார்த்திக்

பெங்களூரில் வேலை செய்து வந்ததால் திருமணமான இரண்டு தினங்களிலேயே தனிக்குடித்தனம் இனிதே துவங்கினர்.

இன்று மஞ்சுவை பார்க்க அவளது தந்தை சந்திரன், சென்னையிலிருந்து வரவிருக்கிறார். தொலைபேசியில் பேசிய தங்கையும், தம்பியும் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அவளுக்கும் அவர்களை உடனே பார்த்து பேச மனம் ஏங்கியது. தன் காதல் கணவனிடம் அவள் கேட்டதும் தான் தாமதம் அவன் வெடித்து விட்டான்.

‘இப்போ எனக்கு விடுமுறை எடுக்க முடியாதென்று தெரியும்தானே?’

அவனது கோபமான குரலில் அவள் தொண்டை உலர்ந்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு,

‘இல்லைங்க ….. வந்து……. கவியும், கண்ணனும் ரொம ்ப கேஞ்சினாங்களா……’

அவள் சொல்லிமுடிக்கும் முன் அவன் வெடித்தான்,

‘அப்போ உனக்கு அவங்க தான் முக்கியம். அப்படித்தானே?’

‘ஐயோ இல்லைங்க … நான்…’

‘நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்’ முகம் சிவக்க உருமியவன் காலை உணவை விடுத்து அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

முதன்முதலாய் வெளிப்பட்ட கணவனின் கோபம் மஞ்சுவை பாடாய் படுத்தியது. கண்களில் கண்ணீர் பெருகி வழிய சிலையென அமர்ந்திருந்தாள் மஞ்சு. மனைவியை கடிந்து பேசி அலுவலகம் சென்ற கார்த்திக், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

மாலையில் வீடு வந்தவனை வரவேற்றார் மாமனார் சந்திரன்,

‘வாங்க மாப்பிள்ளை….. வாங்க’

அவனும் ஒருவாறு முறுவலை உதட்டுக்கு கொண்டு வந்து,

‘வாங்க மாமா …. எப்படி இருக்கீங்க? அத்தை, கவி, கண ்ணன் நலம்தானே? ‘

என்று நலம் விசாரிதவனின் பார்வை உள்ளே சென்று மீண்ட து.

‘நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம் மாப்பிள்ளை. நீங்க தான் சோர்வா தெரியறீங்க. உடம்புக்கு ஒன்னும் இல்லையே?’ அவரது குரலில் உண்மையான அக்கறை இருந்தது.

‘இல்லை மாமா…. இன்று வேலை கொஞ்சம் அதிகம். அதான்.. ‘ ஒருவாறு சமாளித்து முடித்தான்.

மருமகனின் பேச்சை நம்பிய மாமனாரும், மஞ்சுவை அழைத்து மாப்பிள்ளைக்கு காப்பியும்,

பலகாரமும் கொண்டுவர சொன்னார்.

பளிச்சென்ற முகமும், புன்னகையுமா ய் வந்த மஞ்சுவை பார்த்த கார்த்திக் மனமும் புத்துணர ்வு கொண்டது.

சிறிது நேரம் கலகலப்பாய் உரையாடிய சந்திரன் வேலை நிமித்தமாய் உடனே செல்ல வேண்டி

இருப்பதை தெரிவித்தார்.

‘மாப்பிள்ளை, மஞ்சுவை கட்டாயம் கூட்டி வர வேண்டும் என்று வீட்டில் எல்லோரும் சொல்லி அனுப்பினர். ஆனால்….’

‘என்ன மாமா?’ புரியாமல் வினவினான் கார்த்திக்.

‘மஞ்சு மறுத்திட்டா மாப்பிள்ளை. உங்களை தனியே விட்டுவிட்டு வரதும் சரி இல்லை தான். விடுமுறை கிடைக்கும்போது கண்டிப்பாக இருவரும் வர வேண்டும்’ என்றார்.

கார்த்திக் அருகில் இருந்த மனைவியை பார்க்க சற்றும் சலனம் இன்றி புன்னகையுடன் அவனை பார்த்தாள் மஞ்சு. ‘நீங்க தான் எனக்கு முக்கியம். உங்க சந்தோசமே என் சந்தோசம்’ என்ற அவளின் மனதிலிருந்த வார்த்தைகளை அவள் விழியில் படித்தான். உடனே முடிவெடுத்து மாமனாரிடம்,

‘மாமா, எனக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் விடுமுறை கிடைக்கும். நீங்க மஞ்சுவை கூட்டிட்டு போங்க. நான் ஞாயிறு வந்து கூட்டிச்செல்கிறேன்’.

ஆச்சர்யமும், சந்தோசமுமாய் கணவனை நோக்கிய மஞ்சுவை. அதே சலனமற்ற புன்னகையுடன் எதிர் கொண்டான் கார்த்திக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *