கலைமகள் கைப் பொருளே..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 6,047 
 
 

தேடல் ஆண்டு விழாக் கூட்டத்தில்,எதிர்பாராமல் அவனோடு படித்த சந்திரனை பல வருசங்களுக்குப் பிறகுச் சந்தித்தான். மனம் உவகை கொள்கிறது.”எப்படியப்பா இருக்கிறாய்?”இந்த இடைவெளியில், இலக்கியவாதியாய் மாறியிருக்கிறான்.பத்திரிகைகளில் அவன் கட்டுரைகளை …வாசிக்கிறவன் தான்.வானொலிகளில் கூட சில்லையூர் செல்வராசன் போன்ற குரலுடன் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறான். கோபாலுடைய அம்மா அவனுடைய ரசிகை.இதைப் போல குலத்திட அம்மாவும் தன்னுடைய ‘ரசிகை”என்று சொன்னதாகச் சொன்னான். ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு பாலம் கட்டப்படுறதில் ஒரு பெருமிதம் தெரிந்தது. புலம்பெயர் நாடுகளில் எல்லாரையும் எல்லாரும் சந்தித்துக் கொண்டா… இருக்கிறார்கள். இதற்கும் ஒரு நேரம் வர வேண்டியிருக்கிறது.

“உனக்குத் தெரியுமா?எங்கட வகுப்புத் தோழர்கள் …வருசா வருசம் ஒரு நாள் சந்திக்கிறவர்கள்.இந்த முறை குணா தீடீரென கார்ட்டடாக் வந்து செத்துப் போனதால் சந்திப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள் “என்றான். ‘

கோபால், ‘சந்திக்கிறதை’ செல்லமுத்து மூலமாக கேள்விப் பட்டேயிருக்கிறான் அவனோட போன் தொடர்பு இருக்கிறது.செல்ல விருப்பம் தான், ஆனால் ‌நடைமுறை சாத்தியமாகிறதாக இல்லை.

ஒருமுறை, பழைய மாணவர் சந்திப்பில் சிலரை சந்தித்தோடு …இப்படியே …தான் தொடர்கிறது.

இந்த முறை விட்டு விடக் கூடாது. பேச்சு,மற்ற தோழர்களை பற்றித் திரும்பியது.

அதில், அவன் இவனை விட சிமார்ட்டாவே இருக்கிறான்.அதிகமானவர்களின் பெயர்களை விரல் நுனியிலே வைத்திருக்கிறான்.”எல்லோருடனும் எனக்கு போன் தொடர்பு இருக்கிறது.இப்ப நீயும் சேர்கிறாய்.போன் நம்பரைச் சொல்லு ” என குறித்துக் கொள்கிறான்.

சந்திரன், கொஸ்டலிலிருந்து படித்தவன்.யாழ்ப்பாணத்திலிருந்த தோழர்கள் வீட்டில் ஒரு கப் தேனீராவது கடைசி குடித்திருக்கிறவன் .கோபால் நிலமை அப்படியா இருந்தது ?. கிராமத்திலிருந்து பஸ்ஸைப் பிடிக்க வேர்க்க‌ பரபரக்க வந்தவன்.

அவனுக்கு தோழர்களின் அருமையை அறியவே நேரம் இருந்ததில்லை..

கணபதியைப் பற்றி… கதை செல்கிறது. “எப்படி இருக்க வேண்டியவன்..?” சொல்லுற சந்திரனுக்கு குரல் வேறு அடைக்கிறது.

வகுப்பில் ‘ஹிரோ’வான கணபதி, வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் ஓட்டங்களில் எல்லாம் முதலாவதாக வந்து கலக்கிறவன். குறும்தூர ஓட்ட வீரர்கள் பொதுவாக நீள ஓட்டத்தில் பிரகாசிப்பதில்லை,.அதற்கான பயிற்சிகளும். வேறுபட்டவை.இரண்டிலும் இவன் திகழ்ந்தது தான் ஒரு அதிசயம்!

.”15, இருபது வருசங்களிற்கு முதல்,ஒஸ்மானியாக் கல்லூரி வருவதற்கு முதல், இந்த கல்லூரியில் படித்த படித்த ஜமால் தான் அப்படி எல்லாம்கலக்கியவன் என்று சொன்னார்கள் . கணபதிக்கு ஜமாலைத் தெரியுமா..?என்று தெரியாது.’ அவனுக்கு ராஜன்’ தான் ‘ரோல்மொடலா’க இருந்திருக்கிறான்; இருக்கிறான்.ராஜன்,

கல்லூரியில் மெய்வல்லுனர் போட்டிகளில் கலக்கியவனில்லை.பின்னேரங்களில் மைதானத்தில் கடுமையாக பயிற்சி எடுப்பான்.அவனோடு சேர்ந்து சிலவேளை சிறுவனான கணபதியும் ஓடுவான்.ராஜன் அவனுடைய அண்ணன் தான்.அண்ணனுக்கும் அவனுக்கும் ஆறு,ஏழு வயசு வித்தியாசமாவது இருக்கும்.இருந்தாலும் … அவன் உற்சாகமாக சொல்லி கணபதியைஉருவேற்ற தவறவில்லை.ராஜன்,கிரிக்கெட் குழுவில் பரிமளித்து தலைவனாக உயர்ந்தவன்.கால்பந்தாட்டக் குழுவிலும் நல்ல ஆட்டக்காரன் என்ற பெயர் எடுத்தவன்.விளையாட்டும்,படிப்பும் நேர் எதிரானவை.அதிலும் தேறிய ,ராஜன் கொழும்பில் , கட்டுபெத்தைக் கம்பஸில் கடைசி வருசத்தில் பொறியியலில் படித்துக் கொண்டிருக்கிறான்.

அவனைப் போல நீ, கணிதப் பிரிவை தெரியாது உயிரியலை தெரிந்தது முட்டாள்தனம்”என்று அதே வகுப்பில் கணிதப் பிரிவில் படிக்கிற அவனுடைய மச்சான்,நடேசன் ,வகுப்புக்கு வார போது நெடுகஅவனை திட்டி தீர்த்திருக்கிறான். “எதையுமே சவாலாக எடுக்க வேண்டும்.”என்று கணபதிக்கு,அண்ணன் சொன்னதையே வகுப்பிலே சொல்லியே மற்றவர்களுக்கும் உயிரியல் ‘படிக்கிறதில் விருப்பத்’தை …ஏற்படுத்தி விட்ட கர்ம வீரன்.”உன்னோட எதையும் கதைக்கேலாது”என்று அந்தப் பேச்சை எடுப்பதையே நடேசன் பிறகு விட்டு விட்டான்.

“டியூற்றரிகளை…….”.,

தரப்படுத்தலுக்குள்ளானவர்களும், டிகிரி முடித்ததும் வேலைவாய்ப்பு கிடைக்காது மனம் வெந்து கொண்டிருந்தவர்களுமே …..பட்டி தொட்டியெல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள் !

வகுப்பிற்கு வராவிட்டாலும், அதில் சேர்ந்து சமாளிக்கலாம் தான் என்ற நிலை யாழில் இருந்தது.

ஆனால், கிராமத்தானால் அதற்கு செலவளிக்க முடியாது. என்பது தான் நிலமை ! நாட்டில், இலவசக்கல்வி முறை இருந்தாலும் அரசின் சிங்களச் சார்ப்புக் கொள்கைகளி’னால் வடக்கு,கிழக்கில்… பலர் பாதிக்கப்படவே செய்கிறார்கள்.

அண்ணன் சம்பாதிக்கிறான்,வீட்டு நிலமையும் கொஞ்சம் பராவாய்யில்லை. கணபதி, டியூசன் போறதுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. படிப்பில் ஒரு சராசரியாக அவனால் படிக்க‌ முடிந்தது.

கோபால் என்ன…, எல்லோருமே இல்ல விளையாட்டுப் போட்டிகளில் கணபதி ஓடுறதை நேரிலே பார்த்திருக்கிறார்கள். ரசிகர்கள் தான்.ஓடுறதில் ஹீரோ என்றால் சினிமாவில் மட்டுமில்லை,… நிஜத்திலும் ஒரு வில்லன் முளைத்து விடுவான் போல இருக்கிறது.

“.வேலு, அவனை ஒரு தடவையாவது விலத்தி விட வேண்டும் என்ற வெறியோடு நல்லூர் கந்தசாமி கோவிலில் 25 முறைக்கு மேலாக உருள்கிறவன்” என்று சொல்கிறார்கள்.

ஆனால், முருகனின் அருள் எப்பவும் அண்ணன் கணபதிக்குத் தான்..

குறும் ஓட்டக்காரர்கள் இவனுடன் போட்டியிட்டு விலத்த முடியாது தவித்தார்கள். ஒரு விதத்தில் பொறாமை கொண்டார்கள் எனச் சொல்லலாம்.அப்ப விழுந்திருக்க வேண்டும் முதல் கண்ணூறு. அதில்.பல வில்லன்கள்.அதை விடுவோம்.

நீள ஓட்டத்தில் பல வளையங்கள் சுற்ற வேண்டும்.

கணபதிக்கு பிடித்த நடிகர் நாகேக்ஷ்.வகுப்பில்,சினிமாவில் நாகேக்ஷுடைய பகிடிகளை பார்த்து விட்டு வந்து, ஆசிரியர் வராத,இடைவேளை நேரத்தில், வகுப்பில் வெளுத்து வாங்குவான்.அவனுடைய பேச்சைக் கேட்பதற்கென்றே எப்பவும் சூழ நாலைந்து பேர்கள் இருப்பார்கள், நாகேக்ஷீன் உடல்மொழியையும்,நேரத்துடன் பேசுற பேச்சையும் ஒன்று கூட விடாமல்,உன்னிப்பாக கவனித்தை தோடு மட்டுமில்லாது நடித்துக் காட்டி கெக்கலிட்டுச் சிரிக்க வைப்பான்.அப்படியே. நாகேக்ஷின் குணம் இவனுக்கும் தொற்றி விட்டது போல.. இருக்கும். .

ஓட்டத்தில் வேலுவோட ஓடிக் கொண்டிருப்பான்.அவனோட கதைத்துக்கொண்டு ஓடுவது போல சமயத்தில் தோன்றும். .விலத்த…. ‘ம்’… விலத்த விடவே மாட்டான். ஆனால், விலத்த விடுவது போல ஓட்டம் குறைந்து பக்கில் அடிப்பது போல போக்கு காட்டுவான் இப்படியே கடைசி இரண்டு வளையம் வரையில் ஓடி களைக்க வைப்பான். .அதற்குப் பிறகே வேகம் எடுப்பான்.

ஒருத்தன் மட்டுமே ஓடிக் கொண்டிருக்க மற்றவர்கள் நின்று கொண்டிருப்பது போன்ற கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் !, இடைவெளி கூடிக் கொண்டிருக்கும் தவிர… , வேலுக்கு… வாழ்க்கையே வெறுத்துப் போற கணங்கள் அவையாவே இருக்கலாம் !

“அந்த ஜமால் ஓடுறது போல ஓடுறான்”என பார்த்தவர்களில் ஒரிருவர் சொல்லக் கேட்டே கோபால்,, பிறகு யார் அந்த ஜமால் என்று விசாரித்து, அறிந்து கொண்டிருக்கிறான். அவன் 65,67 இல் அந்த பள்ளிக்கூடத்தைக் கலக்கிய ஓட்ட வீரன்

அங்கே,பொலிஸ்,ஆமி கடேஸ்,சாரணர் என‌ வேறு இயக்கங்களும்இயங்கின.வருடாந்த இல்லப் போட்டிகளை விட, இவையும் கல்லூரிகளில், தேசிய மட்டங்களிலும் போட்டியட்டன அவையும் ஒரு வி.ஐ.பி யாக இவனை அவற்றிற்கு எல்லாம் கூட்டிச் சென்றன. எப்படியும் கல்லூரியின் பெயரை காப்பாற்றி விடுவான். ஓரிரு தடவைகள்தான் அவனால் கால் தசையில் பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் போனதாக கேள்வி. அந்த பிடிப்பு ஒரு போதும் அழைத்துப் போறதை தடை செய்யவில்லை.

‘ஓடுறது” ஒரு கொடையாய் கிடைத்திருந்தாலும் அதற்கான பயிற்சிகள் வலியுடனும் நிறைய நேரத்தையும் விழுங்கவும் கூடியளவு கடுமையானவை.விளையாட்டு ஆசிரியர்களின் அனுசரனையுடன் தான் உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றினான்.

இந்த நாடும் ஒரு நேர்மையான நாடாக இருந் திருந்தால்..?, எல்லாம் மெய்பட, கால்கள் நடை பயிழ…கனவுகள் எவ்வளவு சுகமாக விரிந்திருக்கும்

இங்கே, “சிங்களச் சர்வாதிகாரம்’ கைவிடப்பட்டு, மனிதம் எழும் நாளுக்காக‌ பிராத்திப்போம்!

இவனைப் போலவே சகோதரிக் கல்லூரியிலிருந்து ரேவதியும் மாவட்டப்போட்டிகளிற்கு ஓட வந்தாள்.கற்றவர்,கற்றவரைப் பார்ப்பார்கள்.அதைப் போலவே விளையாட்டுக்காரர்களும் …..ஒருவரை ஒருவர் பார்ப்பவர்கள். பார்வையாலே நேசத்தை பரிமாறிக் கொண்டிருந்தார்கள் போல இருக்கிறது..

இவனோ பெண்கள் அற்ற கல்லூரியில் படிகிறவன்.அவளும் அதைப் போல படிகிறவள். இவனுக்கு பெண்களோட சரிவர பழகத் தெரியாது என்ற பிரச்சனை கிடக்கிறது. அவளுக்கு, ஆண்களை புரிந்து கொள்கிற சிரமம் இருக்கிறது. புரிந்தும் புரியாத

காதலை வெல்ல புரிந்துணர்வு மட்டுமில்லை அறிவியலும் வேண்டும் கல்லூரிகளில், ‘பாலியல் கல்வி’ கற்பிக்க வேண்டிய தர்ணங்கள். இவை . ஆனால், வெற்றிகரமாக‌ ,பாலியல் கல்வி கற்பிக்கப் படுற வெளி நாடுகளில் பாலியல் குற்றங்களும் இங்கேயிருப்பதை விட அதிகமாய் காணப்படுகின்றன என்றதும் நெருடுகின்றன.

’ இப்படிப் போனால் அப்படி!,அப்படிப் போனால் இப்படியா. ..?

எதும் சரியாய்யும் இல்லையா?

மொத்தத்தில், இதுவும் ஒரு போர் !

கோபால், தன்ர கல்லூரியில் ஒரு ஆசிரியைக் …கூட பார்த்ததிருக்கவில்லை.அதிபருடைய ஒபிசில் கூட . ஒரு அம்மா,அக்கா வை பார்த்திருப்பானா? ம் !,கிடையாது, காணப்படவில்லை. ஏன்,ஏன்? ஏன் உயர் ஆண் பள்ளிக்கூடங்களில் பெண் ஆசிரியைகளைச் சேர்ப்பதில்லை.

பெண்,குழப்பி விடுறவள்’ என்று தான் தவிர்த்து விட்டார்களோ..?,எல்லா ஆண்களுமே பிரச்சனைக்காரர்கள் எனக் கருதித் தான் அங்கையும் அப்படி வைத்திருந்தார்களோ…?,’ இருவருக்குமிடையில், காதல்,அன்பு,பாசம் …எல்லாம் வளர்க்கப்பட வேண்டிய விசயங்களாச்சே!

காதல் என்றுமே மனித வாழ்க்கைக் குற்றமில்லையே.

சினிமாவில் ,இந்த நிலமைகளால் தானா முக்காலத்திற்கும் ‘காதலையே மையமாக வைத்து கதையைப் பின்னி பிச்சு எடுக்கிறார்களோ?.

உயர் வகுப்பில் விளையாடுறதே வரவேற்கப் படுவதில்லை.காதல், அதை விட டபிள் டேஞ்சர் என வெறுக்கப்படுகிறது !தரப்படுத்தலுடன் வாரப் பரீட்சையின் காலையையே வாரி விடக் கூடியது என்பதாலும் பயப்படுகிறார்கள் போல இருக்கிறது.

மெச்சுவர்ட்டி இல்லாத சமூகம் !

முதலில் அப்பா,அம்மாவுக்குத் தான் . .முதியோர் கல்வியாக கற்பிக்க வேண்டும் போல இருக்கிறது.இந்த உணர்வுகளுக்கு எல்லாம் நல்லபடி பாத்தி கட்டி விட வேண்டியதும் அவசியம்… அதற்கு, இவர்களை இலக்கியத்தின் பக்கமும் கூட்டிச் செல்ல வேண்டும்.ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளவும்,இழக்காமல் இருக்கவும்,தேவதாசாகமல் போகவும் இலக்கியத்தால் மட்டுமே முடியும்.படிப்பு முடியுற வரைக்கும் இலக்கியமும் படிக்க தமிழ்ப் பாடத்தை அவசியப் பிரிவில் இல்லாமலாவது சேர்த்து வைப்பது நல்லது என்றே படுகிறது. அதுவும், ஒரு பாடமாய் இருந்து விட்டுப் போகட்டுமே !

உயிர்ப்பான மாகாண அரசுகள் தமிழர் பகுதியில் செயல்பட்டாலன்றி இவை எல்லாம் சாத்தியமாகப் போவதில்லை.

. ‘ரேவதியும்,கணபதியும் விரும்புறது’அந்த சகோதரிக் கல்லூரியில் கூட தெரிந்திருக்கிறது.அங்கே படிக்கிற கோபாலின் தங்கச்சி வாசுகி ஒரு நாள் வந்து அதைப் பற்றி அவனிடம் கேட்டாள்.

“கணபதி என்ற விளையாட்டு நட்சத்திரம் உன்ர கல்லூரியில் படிக்கிறானா?” வாசுகி.

“என்ர வகுப்பில் தான் படிக்கிறான்” கோபால்.

“அவனை எங்கட பட்ஜ்ஜிலே படிக்கிற ரேவதி விரும்புகிறாள்.இருவருக்கும் காதல் இருப்பதாக கதைக்கிறார்கள்” என்று சொல்லிச் சிரித்தாள்.

தொடர்ந்து..

,”யார் இந்த ரேவதி என்று உனக்குத் தெரியுமா?” கேட்டாள். .

விடுப்புக்காரியாய் இருக்கிறாள்!!

“சொல்லன்”என்றான் கோபால்.

“அம்மாட சினேகிதி சுந்தரி அன்ரியை தெரியுமில்லெ,அவட 2வது மகள் தான் இந்த‌ ரேவதி”என்றாள் கண்களில் சந்தோசம் பொங்க.

கோபாலிட அம்மாவும் அந்த கல்லூரியின் பழைய மாணவிதான். அவருடைய நாலு,ஐந்து சினேகிதிகளில் சுந்தரி அன்ரி முக்கியமானவர்.அம்மாவோடு அக்காவும் தங்கச்சிமாரும் தான் நெடுக போய் வாரவர்கள். அவனும் அவர் வீட்ட ஒரு தடவை போய்யிருக்கிறான்.அவருடைய மூத்த மகள் வாசுகியின் பெயரைத் தான் அம்மாவும் இவளுக்கு வைத்திருக்கிறார்.

தெரிந்த போது அவனுக்கும் கணபதிக்கும் இடையில் பாலம் எழுவது போல இருந்தது.சொந்தக்காரர் பிரிவிற்குள் அவனும் வந்து விட்டான்.’சொந்தம்’ ரத்த சம்பத்தால் மட்டும் எற்படுறதில்லை,நட்பு வலையாலும் எற்படுறதுதான்!

எதிர் பார்த்த பூதமும் வந்து சேர்ந்தது. .உயர்தரப் பரிட்சையில்…பல டி.வி சீரீயல்களே ஓடின. பரிட்சைற்குப் பிறகு பலரும் பல வித மனநிலையில்… சிகரட்டும் கையுமாக ரஜனிகளாகவும்,கள்ளுக் கொட்டில்களில் கதை சொல்லிகளாகவும் வலம் வந்தார்கள்.மாகாண அரசிற்கு என்று சொந்தமாக ஒரு வானொலியும்,தொலைக்காட்சிச் சேவையும் இருந்திருந்தால்…எல்லா மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்திருப்பார்கள். அதில்,ஒருவித ஆறுதலாவது கிடைத்திருக்கும். இப்ப, தான் இணையத் தளம் இருக்கிறதே.. என இருந்து விடவும் முடியாமல் இருக்கிறது.பெரிய நாடுகளின் செயற்பாடுகள் அவற்றின் நம்பகத் தன்மையையே அழித்து விட்டிருக்கிறது பழையபடி….. ‘உயிர்ப்பானதென்றால் வானொலி,தொலைக்காட்சி’க்கே வர வேண்டியிருக்கிறது.

பழையனவும் பாவனையில் வைத்திருக்கவும் வேண்டி வருக்கிறது.

“ஆயுதம்(கருவிகள்) செய்வோம்”என்ற பாரதியின் பழைய புரட்சிக் குரலும் வேஸ்ட் இல்லை தான்

மாகாண அரசிடம் ‘மீடியா சேவை இல்லாதது’ ஒரு பலவீனம். இங்கே இந்த பலவீனத்திற்கு சிங்கள அரசே முழுக் காரணம், இல்லை,. எங்களின் பலம்,பலவீனம் எ ன்ன என்ன என்று எங்களுக்கே தெரிய வேண்டும், பிறகு அறிய பெரிய அட்டவணையையே தயாரித்து,அதில் உள்ள‌ பலவீனங்களை கழித்தும் பலங்களை கூட்டியும் வர வேண்டும்.

நம்மவர்களில், யார் தான் பரீட்சையில் பாஸாகி இருக்கிறார்கள்?

அரசாங்கத்திடமிருந்து பலத்தைப் பெறுகிற பலப்பரிட்சையில் தொய்வு விழாமலும் பார்க்க வேண்டும்.

இங்கே கணபதி உயரம் தாண்டும் போட்டியில் தடியை தட் டாமல்…அந்த பரீட்சையிலும் தேறி விட்டான்.

பல்கலைக்கழகத்தில், பி.எஸ்சி படிக்க …கிடைத்திருந்தது.விளையாட்டு தொடர ஒரு களம் இருக்கிறது, அதற்காவது அவன் அதை ஏற்றுக் கொண்டு போய்யிருக்கலாம். அண்ணன் பொறியியலாளனாகப் போறவன்,அக்கா ஒரு மருத்துவர், என்பதால் கெளரவக் குறைச்சலாக நின்று திரும்பவும் படித்து பரீட்சை எழுத நினைத்தது அவன் மாபெரும் தவறு.

கை விரல்கள் ஐந்தும் ஒரே மாதிரியாய்வா இருக்கின்றன. மேலே ஒருத்தன் வேறு இருக்கிறானே!

ராஜன்,வீட்ட வந்து,ஒரு கிழமை போல திரிந்து விட்டு, ஊர்ப் பெண்களையும் பார்த்து சைட் அடித்து விட்டு,பனங்கள்ளும் ஆசை தீர குடித்து விட்டு…பிரிய மனமில்லாமல் திரும்புகிறான். வழக்கமாக பகலிலே, செந்திலுடன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பஸ் ஏறுகிறவன்.நேற்று பின்னேரம் போல வந்த இரண்டாம் ஆண்டில் படிக்கிற பாபு விடைபெறுகிற போது ரகசியமாய் அவன் காதில் ஒரு குண்டை அல்லவா போட்டு விட்டுச் சென்றிருக்கிறான்..

உடனடியாய் தனக்குள் “பதற்றப் படாதே”என்று சொல்லிக் கொண்டான்.

வீட் டை கலவரப் படுத்த விரும்பவில்லைஎப்படியும் சொல்லி விடுவான் என்பதால்.பிறகு, வந்த‌ செந்திலுக்குக் கூட சொல்லவில்லை. தம்பிக்கு மோட்டார் சைக்கிள் ஓடத் தெரியும். என்பது தெரியும். செந்திலிடமிருந்து சைக்கிளை மட்டும் இரவலாக‌ வாங்கிக் கொண்டு, இரவு போல தம்பியுடன் புங்கம்குளத்தில் ரயில் எடுக்க போய்க் கொண்டிருக்கிறான். புங்கம்குளம் சாவற்சேரிக்கு கிட்ட இருந்த ஒரு ரயில் நிலையம்

அந்த நேரம் புங்கம்குளம் வரைக்கும் தான் ரயிலச் சேவை இருந்தது .

சிறிலங்கா அரசு வஞ்சகமாக தமிழ் மாணவர்களிற்கெதிராக கல்வியில் தரப்படுத்தலை . கொண்டு வரவில்லை. அதோடு பயங்கரவாத தடைச் சட்டம்,அவசரகாலச் சட்டம் இரண்டையும் ஏற்படுத்தியும் வைத்திருந்தது.இவற்றின் கீழ் ‘பயங்கரவாதி எனச் சந்தேகிக்கிறவரை பிடித்து எவ்வளவு காலமும் சித்திரவதைச் செய்து விசாரிக்கலாம். கொன்றும் புதைக்கலாம். என்ற நீதியையும் கொண்டிருந்தது. தமிழர்க்கு நீதி கிடைக்காது. பதில் சொல்லவும் தேவையில்லை’. என்ற மமதைப் பிடித்த‌ அதிகாரத்தையும் படையினருக்கு வழங்கி இருந்தது

.1983ம் ஆண்டு தமிழர்களை கொன்றுத் தள்ளி பெரியளவில் கலவரத்தை நிகழ்த்திய போது,உலகநாடுகளிடமிருந்து அவ்வளவாக எதிர்ப்புகள் கிளம்பாததால் அதற்கு குளிர் விட்டே போய்யிருந்தது.

கம்பஸில் படிக்கிற தமிழ்பெடியள்களின் லிஸ்டை எடுத்துக் கொண்டு பொலிஸின் புலனாய்வுப் பிரிவினரோ,ரணுவத்தைச் சேர்ந்தவரோ…அவர்கள் தங்கியிருக்கிற அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். வீட்டுக்காரர்களை,அயலவர்களை,கூட திரிந்தவர்கள். எல்லோரும் சந்தேகக் கண்ணோடு விசாரிக்கப்படுகிறார்கள்.அறைகளை கிளறிக் கலைக்கப்படுகின்றன.

இனப்பிரச்சனையால் …பெடியள்கள் விளங்கிக் கொள்ள தடை செய்யப்பட்ட‌, பேப்பர்களையோ,பிரசுரமான புத்தகங்களையோ எதையாவது வாங்கி வாசிப்பவர்கள்.அறையில் அலட்சியமாக போட்டும் இருப்பார்கள்.சிலர் மார்சிசச் சம்பந்தமான புத்தகங்களைக் கூட வைத்திருப்பார்கள்.இவர்கள் எல்லோரையும் படையினர் ‘ சந்தேகத்திற்குரியவர்கள்’ என அழைத்துச் சென்று,ஈராக்கியர்களை அமெரிக்க ராணுவம் விசாரித்தது மாதிரியே விசாரணையை நடத்துகிறார்கள். இப்படியாக நயவஞ்கமான தரப்பபடுத்தல் முறைகள் நிறைய இருக்கின்றன “உன்ர அறையை கிளறி விட்டுச் சென்றிருக்கிறார்கள்”என்ற செய்தியை தான் அந்த நண்பன் சொல்லிக் குழப்பியிரு ந்தான். முதலில், பெர்ணான்டோட்ட(அவனுடைய சிங்கள நண்பன்) போய் இருந்து மிச்ச அலுவல்களைக் கவனிப்போம் எனச் செல்கிறான். சிங்களவர் எல்லோரும் கொடூரச் சிந்தனை உடையவரில்லை.அதற்கென சார்ப்பான குழுக்கள் இருக்கின்றன. அவைற்கு அரசின் பூரண ஆதரவும் இருக்கின்றது. கலவரத்தின் போது பெனான்ட்டோவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல மாணவர்களைக் காப்பாற்றி அனுப்பியவர்கள். அவனை பயம் பற்றி விட்டிருந்ததால் இருளில் மோட்டார் சைக்கிளின் லைட்டையும் வேறு நோத்துப் போட்டு ராஜன் ஓடிக் கொண்டிருந்தான்..பின்னுக்கு இருந்த கணபதிக்கு இவன் ஏன் லைட்டை நோத்திருக்கிறான் என சொல்லவில்லை விளங்கவுமில்லை.

யாழ்ப்பாண மண்ணுக்கே நிலமை தெரியும். எனவே, ஏன் என்று கணபதியும் கேட்கவில்லை. தம்பி எப்ப சீரியஸாக மாறினான் என்று அவனும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.

திரும்பி வார போது கணபதியும் அதே மாதிரி லைட்டை போடாமலே ஓடி வந்தான்.இருளுக்கு கண்கள் பழக்கப் பட்டிருந்தாலும் வீதியிலிருந்த பள்ளம் குழிகளை அவனால் சரிவர அனுமானிக்க‌. முடியவில்லை.தவிர புதுப்பாதை, ஒரு பள்ளத்தில் துள்ளிய போது பக்கத்திலிருந்த வயல்ச் சரிவில் இறக்கி விட்டான். கண நேரத்தில் அந்த விபத்து நிகழ்ந்து விட்டது தொடையில் பாரம் அழுத்த வலி ஏறிக் கொண்டே போனது.

“ஐயோ அம்மா”என்று கத்தினான். கத்திக் கொண்டேயிருந்தான்.

அந்த கத்தலைக் கேட்டு இரண்டொரு இளைஞர்கள் ஓடி வந்தார்கள் ஒருத்தன் போய்.பரியாரியை கூட்டி வர, அவர் அப் பெடியள்களின் உதவியுடன் காலில் தடி வைத்து கட்டினார். அன்னிரவு கணபதி பரியாரி வீட்டிலே தங்க வைக்கப்பட்டான். காலையில், அதே இளைஞர்களே அவனை யாழ் ஆஸ்பத்திரிக்குச் கூட்டிச் சென்று வார்ட்டிலே அனுமதித்து விட்டு, அவன் வீட்டுக்கும் சென்றும் அறிவித்தார்கள்.

ராஜனுக்கு , இப்படி ஒரு பயம் ஏற்பட்டிருக்கா விட்டால் அவன் பகலிலே சென்றிருப்பான்.இந்த விபத்தும் நடந்திருக்காது.’இந்த மாதிரியான பயமுறுத்தல்களால் ‘பலர், படிப்பைக் குழப்பிக் கொண்டு களவாக வள்ளம் ஏறி இந்தியாவிற்கும் ஓடியிருக்கிறார்கள்.கொழும்பிற்குப் போய் வேலைப் பார்த்த இளைஞர்கள் கூட இப்படி துரத்தப் பட்டிருக்கிறார்கள்.

இங்கேயும் பாரபட்சமாக சட்டங்களால் செயல்படுவதாலே இந்த வகை ஓட்டங்கள்.”சிறிலங்கா முழுதையும் தமிழர் கைப்பற்றி விடுவார்களோ” என்ற பயத்தால் துரத்துகிறார்களாம். கதை விடுகிறார்கள்.

மனிதனாக பிறந்தவருக்கு வேண்டியது என்ன?, அமைதியான இருப்பும் வாழ்வும் அமைதியான சாவுமே தானே, இங்கே, எதுவுமே இல்லை.சர்வாதிகார கொடியே பறக்கின்றது !

கணபதி, “கம்பி வைத்தே சத்திரச் சிகிச்சை செய்ய வேண்டும்”என்று மருத்துவர்கள் தெரிவித்த. நிமிடமே அவன் நடை பிணமாகி விட்டான்.ஏற்கனவே அவனுடைய ஓட்ட அத்தியாயம் முடிந்து தான் விட்டிருந்தது.இப்ப, நிரந்தரமாக முற்றுப் புள்ளியே வைக்கப்பட்டு விட்டது.அவனுடைய ஆழ்மனதில் முதல் இடத்தில் எப்பவும் படிப்பு இருந்ததில்லை இல்லை, ஓட்டம் தான் இருந்தது.

சத்திரச் சிகிச்சை முடிந்த பிறகும் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்த அவனை “வலியை மறக்க விஸ்கியைக் குடி தம்பி”என்று பெரியப்பா களவாய்க் கொண்டு வந்துக் கொடுத்தார்.அவன் எந்த வலியையும் தாங்க வல்லவன் அவனுக்கு.’எல்லாத்தையும் இழந்து விட்டது போன்ற சோர்வு ஏற்பட்டு விட்டது. .இனி ரேவதி கூட தனக்கு கிடைக்க மாட்டாள்’என்று மனம் கன்னாபின்னா என வேறு நினைக்கத் தலைப்பட மூளை ஓரேயடியாய் குழப்பியது.தாழ்வுச் சிக்கலுக்குள் முற்றாகவே அகப்பட்டு விட்டான்.

தன்னையே மறக்க குடித்தான்.

ரேவதிக்குத் தெரிய ஓடோடி வந்தாள்.

வீட்டாருக்கு அப்ப தான் அவன் காதல் விசயம் தெரிய வந்தது.

ஒவ்வொருநாளும் தவறாமல் வருகிறாள்.அவளுடைய அன்பான ஆதரவான பேச்சால் ஆறுதல் அடைகிறான்.பெரியப்பா தெரியாமல் குடியை பழக்கி விட்டிருந்தார்.அதுவரையில் அவன் ‘ஓட்டத்திற்காக குடியை தொடக் கூடாது’ என குடித்திருக்கவில்லை.இப்ப கவலையை மறக்க ‘குடி’ தான் சரியான மருந்து என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.பிறகு பெரியப்பா கொண்டு வந்து கொடுக்கவில்லை தான்.ஆனால் இந்த எண்ணத்தை தொடர அவனுக்கு தெரியாமலா இருக்கப் போகிறது.

ரேவதியும் பரீட்சையில் தேறி இருக்கவில்லை.மாகாணவரசு இப்பதானே வருகிறது.அப்ப, வெளிய ஓட்டத்தை வளர்க்கிற அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. இப்ப ஏற்படுத்தி இருந்தாலும்..சிறிலங்கா அரசிலும் தொடர்ச்சி இருக்க வேண்டுமல்லவா.அதுவோ குறுகிய புத்தியுடன் கல்விற்கே . ஆப்பு வைக்கிறது தொழில்,விளையாட்டுக்களை குறுக்கத்திப் போக தடைகள் போடுமே தவிர வளர்க்கவா போகிறது?.

அவளுடைய ஓட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.ஆம்பிள்ளைகளை விட பெண்களிற்குத் தான் நிறைய பிரச்சனைகள் காத்திருக்கின்றன.தொழில் வாய்ப்புப் பெற்று சொந்தக் காலில் இருக்கிற போது தான் பெடியளுற்கே மெச்சுரட்டி வருகிறது..அதற்கு முதல் ஏட்டிக்குப் போட்டி மனநிலையே நிலவுகிறது.. இப்ப ,அவளுக்கு ஓட்டம் பிளஸ்! இவனுக்கு மைனஸ்…என முட்டாள் தனமாக யோசிக்கிறதையும் அவனால் கைவிட முடியவில்லை.தவிர அவள் பெண்.ஆணுக்குச் சாதகமாக கிடக்கிற சமூக அரசியல் பெண்களுக்கு அப்படியே இல்லையா? என்பது அவனுக்கு புரிந்திருக்குமா? என்று தெரிந்திருக்கவில்லை.

அவள் எப்படியோ அவனை புரிந்து கொண்டு “கணபதியை பதிவுத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்” என்று ஒற்றைக் காலில் நின்றாள். வீட்டாருக்கும் அவளை பிடித்திருந்தது.”அவன் ஆஸ்பத்திரிலேயிருந்து வீட்ட வாரப் போது செய்யலாம்”என்றார்கள்.

ராஜனுக்கு சிங்கள நண்பர்கள் சிலர் ஆதரவாக நின்றதால் அவன் பயப்பட்டது போல அங்கே எதுவும் நடக்கவில்லை.ஊர் ஆட்கள் மூலமாக விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அடுத்த கிழமையே திரும்பி வந்தான்.

“”இந்த விபத்து நல்லதுக்குத் தான் நடந்திருக்கிறது.பார் எனக்கு முதல் உனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது” என்று பகிடியும் கூட‌ விட்டான்.ரேவதி வீட்டாரும் வந்து பார்த்தார்கள்.ரேவதி பிடிவாதமாக இருக்கவே அவர்களும் கல்யாணத்திற்குச் ‘சரி’ என சம்மதித்தார்கள்.

ஆடம்பரமில்லாமல் பதிவுத் திருமணம் நடைப் பெற்றது. பாலும் பழமும் சிவாஜி போல,அவளும் கூட வர,ஊரிலே கோயில்,குளம்,துரவு,வயல் வெளி,கடற்கரை பாலம் என எதிர்படுறவர்களின் வாஞ்சையான விசாரிப்புக்கள் மத்தியில் …. வீல்ச் செயாரில் திரிந்தார்கள். கைக்கு வைக்கும் தடிகளையும் வைத்திருந்தார்கள்.

அன்பான மனைவி,, காதலி! அவனை விட உலகில் அதிருஸ்டசாலி , யார் இருக்கப் போறார்.

மனம் பேருவகை கொண்டது !

ஆனால், மனித மனத்திலும் இருண்ட பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றனவே, அதிலும் ஆண்களிற்கு எல்லாம் கிடைத்தாலும் கூட திருப்தி அடையாத ஒரு குரங்கு மனமும் இருக்கிறதே, சில ஆண்கள் வாழ்க்கையில் ‘இரண்டு,மூன்று மனைவிகளைத் தேடுற ‘ஈன’ ஜென்மங்’களாக கூட இருக்கிறார்களே !

வேலு, வந்து பார்த்து விட்டுச் சென்றதிலிருந்து, அவனுள் ‘போனால் போகட்டும்…..’என்ற விரக்தியும் மெல்லிய இழையாக வளர ஆரம்பித்திருந்தது.

இழந்தது, இழந்தது தா னே, இனிமேல் பழைய மாதிரி ஓட வே முடியாது.வேலுவை …’அப்படி எல்லாம் கேலி பண்ணி இருக்கக் கூடாதோ? வெளியில் சொல்லாட்டியும் உள்ளுக்க பார்த்திருக்கிறான் அல்லவா. என்ன என்னவோவெல்லாம் தோன்றுகிறது அதே மாதிரி திரும்பி,திரும்பிப் பார்த்துக் கொண்டு வேலு முந்திக் கொண்டு ஓடுறது போல ‘ ஒரு காட்சி’ யும் ஓடிக்கொண் டிருக்கிறது.

சே!இந்த விபத்து நடந்தே இருக்கக் கூடாது !

குயிலுக்கு குரலை பறித்தது போல , புலியை புல்லை மேய விட்டதைப் போல..

கடவுளும் தண்டிக்கிறாரே !

ஏறுதலொன்று இருந்தால் விழுதலொன்றையும் கட்டாயம் வைத்திருக்கத் தான் வேண்டுமா?, என்ன விதியோ…?கடவுள் எல்லாரையும் சமமாகவே படைக்கிறார்;சமமாகவே அழவும்,சிரிக்கவும் வைக்கிறார் போலவும் கிடக்கிறது . அரசு, யாழ்ப்பாண நிலமையை சட்டங்கள் மூலம் மேலும் மோசமாகி கொண்டு வர, நின்று பிடிக்க முடியாது போலப் பட்டது கல்யாணம் கட்டி விட்டார்களே, இனி என்ன படிப்பு வேண்டி இருக்கிறது?, கால் ஓரளவிற்கு சரியாக…. இருவரும் வெளிநாடு ஒன்றிற்கு பறந்து புலம் பெயர்ந்தார்கள். ரேவதியை அவனும் ஆழமாக நேசிக்கிறான் தான்.இயல்பான கம்பீரமான நிலையில் எல்லாம் அமைந்திருக்கக் கூடாதா? என்பதே பெரும்குறை.அவன் பொறுப்பாய் எரிபொருள் நிலையம் கவனிப்பாளர் ,பாதுகாவலர் உத்தியோகம் ..என இரண்டு வேலைகளிற்குப் போகிறான்.ரேவதியும் தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்குப் போகிறாள்.வாழ்க்கைத்தோணி சீராய் மிதக்கிறது. இங்கே அங்கே போல வாங்க முடியாத விலையில் மது வகைகளை வைத்திருக்கவில்லை. அதனால், யார் வீட்டிலும் பிறந்த நாள்…போல ‘பார்டிகள்’ வந்தால் குடுக்கிறார்கள், ரேவதியால் தடுக்க முடியவில்லை.கூடுதலாகவே குடித்து விடுகிறான்.

” இப்படி குடியாதே?”எனச் சண்டைகள் வீட்டில் சிறுக எழுகின்றன.மனதில் …?,ஓட்டத் தொடர்ச்சி அறுபட்ட காயம் இன்னமும் அவனுக்குவலிக்கிறது.. அவனுக்கும் உயிர் போகும் வரைக்கும் மாறும் போலவும் இல்லை.இதாலே, அப்பப்ப சந்தோசமும் பறிபோய் விடுகின்றன.

அவர்களிற்கு சுதாக்குட்டி பிறந்த போது அங்கே,ராஜனுக்கு நீர்பாசன பிரிவில் பொறியியலாளர் வேலை கிடைத்திருந்தது.”சுதா பிறந்த அதிருஸ்டம், தான் பெரியப்பாவிற்கு வேலை கிடைத்தது” என அம்மா சந்தோசமாக எழுதியிருந்தார். அக்காவிற்கும் (சாந்திக்கும்) கல்யாணம் சரி வந்திருக்கிறது.ஏலுமென்றால் …வரக் கேட்டிருந்தார். .அவர்களால் போக முடியும் போலப் படவில்லை.’சுதாக்குட்டியின் அதிர்ஷ்டம்’ என எழுதியிருப்பதால் “நான் கடிதத்தை வைத்துக் கொள்கிறேன்” என ரேவதி அதைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டாள். ‘இவர்கள் இருவருக்குமாவது குடிக்கிறதை குறைக்கவே வேண்டும்!’ என கணபதியும் நினைப்பான்.ஆனால் முடியிறதில்லை.

‘இப்படி குடிகாரனாய் மாறி விட்டானே’என்று நண்பன் சந்திரனுக்கும் கவலை.. எங்கையும் குடிக்கிறது நல்ல விசயம் இல்லை தான். வெளிநாட்டில் பலரை அற்ப ஆயுசிலே…. போக வைக்கிறது. வாழ்க்கையில், புத்திசாலியாக முன்னேற திறமைகள் இருந்தாலும்… இப்படியான பலவீனங்களும் தடைப் படுத்தி விடுகின்றன‌.

தடைகளை எல்லாம் வென்று வாழ வேண்டியவன் தான் மனிதன் !,தமிழனா ? , எல்லாமே ஒரு கனவாய்…,என்ன விதியோ..?

அந்த கவலையை சந்திரன் கோபாலுக்கும் தொற்ற வைத்து விட்டான்.

கோபால், ஒரு ‘பியரை’ கையில் வைத்துக் கொண்டு சந்திரன் தந்த நம்பரை எடுத்து,கணபதிக்கு போன் செய்கிறான். குடித்தால் தான் நியாயம் பிழங்கவே வருகிறது இவனும் இன்னொரு வித கோணங்கி தான்.

சுதாக்குட்டியே போனை எடுக்கிறது.

“அப்பா இருக்கிறாரா?”என்று கேட்கிறான்.

“அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறார்கள் மாமா”என்று அந்த பிஞ்சு முறையிடுகிறது.

“ஏய் வாலு இப்படியாய் சொல்றது,இது சண்டை இல்லையடி” என்று விட்டு “உங்க மகளுக்கு கொழுப்பு மெத்திப் போச்சுது,இதை கவனிக்க மாட்டீர்களா?”என்று சொல்றதும் போனில் கேட்கிறது.

போனை வாங்க கணபதி வாரான் போல இருக்கிறது.

போனிற்குள்ளாலே, அங்குள்ள தமிழ் வானொலியிலிருந்து,

“கலைமகள் கைப் பொருளே, ,…
சொர்க்கமும் நரகமும் நம் வசமே,
நான், சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே!
சத்தியம்,தர்மங்கள் வாழட்டுமே,
அது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே!” ………
என்ற பாடலும் தவழ்ந்து வருகிறது

நல்ல வேளை, மனைவியின் குரலாய் ஒலிக்கட்டுமே! என்று பாடவில்லை இவன் தனக்குள் முணுமுணுக்கிறான் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *