கண்ணோட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 5,529 
 
 

“அண்ணா, அண்ணா” ஸ்கூலுக்கு டைம் ஆச்சு போலய்யா? என்று கனிமொழி அண்ணாவை எழுப்பினாள்.

அன்பான தங்கை நன்றாகப் படிப்பவள், பத்தாவது படிக்கிறாள். அமைதியான பெண். அண்ணன் மீது பயமும் அன்பும் வைத்திருப்பாள். ஒழுக்கமான பெண்.

ஆனால், அண்ணன் கதிர் அப்படி இல்லை, அவளுக்கு நேர்மாறாக இருப்பவன். எல்லா கெட்ட விஷயங்களையும் தெரிந்து வைத்து இருப்பவன். பன்னிரண்டாது தான் படிக்கிறான். திருட்டு, மது, தீய நட்பு என வீட்டிற்க்கு தெரியாமல் ஆனந்தமாக வாழ்பவன்.

ஒருநாள் பள்ளி முடிந்ததும், வரும் வழியில் அவன் நண்பனைப் பார்த்தான். அவன் சாராயக்கடைக்கு வேலைக்கு செல்பவன், அதனால் அவனுக்கு சரக்கு எளிதில் கிடைக்கும். அவனுடன் சேர்ந்து இவனும் வீட்டிற்க்கு தெரியாமல் சரக்கு அடிப்பான்.

“டேய் இப்பதா ஸ்கூல் முடிஞ்சுசா, சரி எங்க வீட்டுக்கு வா உனக்கு ஒன்னு காட்டற” என்று கூறி, அவனை வீட்டிற்க்குள் அழைத்துச்சென்றான்.

வீட்டிற்க்குள் சென்று, கதவைச் சாத்திக்கொண்டனர்.

அவன் போன் ஒன்று வைத்திருந்தான், அதில் தவறான புகைப்படமும், வீடியோவும் இருந்தது. அதை இவரும் பார்த்தனர்.

கதிர், “சரி டா நா போய்ட்டு நாளைக்கு வரன்னு” என்று சொல்லி, கிளம்புகிறான்.

“சரி டா, நீ வேணா இன்னைக்கு போன் எடுத்துட்டு போய்ட்டு, நாளைக்கு கொண்டு வந்து தா ன்னு” என்று சொல்லி அவனிடம் தருகிறான்.

அவன் தன் பேக்கில் மறைத்து வைத்து வீட்டிற்க்கு தெரியாமல் கொண்டுச் செல்கிறான்.

அடுத்தநாள், அப்பா,அம்மா இருவரும் வேளைக்கு சென்று விட்டனர். கனிமொழியும் பள்ளிக்கு சென்று விட்டாள்.

அவன் தனக்கு காய்ச்சல் என்று கூறி, வீட்டில் இருந்து அந்த விடியோக்களைப் பார்த்து ரசிக்கிறான். அவனுக்கு அதே ஞாபகமாக இருக்கிறது.

மாலையில் அம்மா வருகிறாள். அவள் முகத்தைக்கூட பார்க்காமல் கிழே குனிந்துக் கொள்கிறான்.

கனிமொழி வருகிறாள், அப்போதும் கீழே குனிகிறான். அவள் ஸ்கூல் யூனிபார்ம்யை மாற்ற, தன் அறைக்கு செல்கிறாள். அப்போது அவன் எண்ணம் தவறாக நினைத்து பார்த்தது.

இப்படியே அவன் பார்ப்பவர்களை எல்லாம் தவறாக நினைத்துப் பார்த்தான்.

ஒருவாரம் கழிந்தது,

கதிர் வீட்டில் இருப்பவர் எல்லோரும் கல்யாணத்திற்க்கு சென்று விட்டனர். கனிமொழியும் சென்று விட்டாள்.

அன்று கதிர் வீட்டில் யாரும் இல்லை, அவன் தனியாக இருந்தான். அவனுக்கு அந்த எண்ணமாக இருந்தது.

அப்போது பக்கத்து வீட்டு அக்கா குளிக்கச் சென்று இருந்தார்கள்.

இவன் தீய குணத்தால், அவர்கள் வீட்டு பின்புறம் சென்று அவர்கள் வீட்டு குளியல் அறையை எட்டிப்பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டு இருப்பது தெரியாமல் அந்த பக்கத்து வீட்டு அக்கா குளித்துக்கொண்டு இருந்தார்கள்.

திடிரென்று அந்த அக்கா திரும்பும் போது அவனைப் பார்த்து விட்டார்கள். அவன் அங்கு இருந்து வெளியே ஓடி விட்டான். அந்த அக்கா தூணி மாற்றிக்கொண்டு அவள் கணவனை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்க்கு வந்தார்கள்.

“டேய் நீ குளிக்கறதா பாத்தியா இல்லையா” என்று மிரட்டுனார்கள்.

“நா இல்லன்னு, நா இல்லன்னு” சாதித்து விட்டான்.

அப்போது கதிரின் குடும்பம் வீட்டிற்க்கு வந்தனர்.

அவனை அடித்து, கொண்டு இருந்தார்கள். சத்தம் கேட்டு ஊர்க்கார்கள் அனைவரும் அவன் வீட்டிற்க்கு வந்து விட்டனர்.

நடந்ததைக் கேட்ட அம்மா, எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டாள். கேக்க கூடாத வார்த்தைகள் எல்லாம் கேட்டனர்.

“பைனா இவன், நல்ல பையன பெத்து வைச்சு இருக்க போ, உன்னையும் உன் மகளையும் இப்படி தா பார்த்தானா? என்று கேட்டு விட்டார்கள்.

அப்போது கனிமொழிக்கு திக்கு என்றாயிற்று.

இவ்வாறு சண்டையிலும், அழுகையிலும் அந்த நாள் முடிந்தது.

அடுத்தநாள், கனிமொழி பள்ளிக்கு சென்றாள். மதியம் வரை அழுது கொண்டே இருந்தாள். சாப்பிடவும் இல்லை. வகுப்பில் அனைவரும் அவளையும் தவறான கண்ணோட்டதிலேப் பார்த்தனர்.

மாலையில் வீட்டிற்க்கு செல்லும் போது, ஒரு பையன் கனிமொழியிடம் வந்தான்.

அவன், “அவளைப் பார்த்து, உன்ன உங்க அண்ணா பாத்துட்டானமா? நானும் கொஞ்சம் பாக்கலமா?” என்று தவறாக கேட்டான்.

கனிமொழி, “செருப்பு பிய்யும்” என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினாள்.

இனி வாழக்கூடாது என்று முடிவு எடுத்து, அங்கு வேகமாக வந்துகொண்டிருந்த லாரி மேல் மோதி அவள் உயிர் விட்டாள்.

பாவம் கனிமொழி…….

கரு: இதில் பெற்றோர்கள் கவனிக்க படாத, ஒவ்வொரு குழந்தைளும், தவறான நட்பாலும், தீய வழிகளிலும் சென்று விடுகின்றன.

தவறான கண்ணோட்டம், அவள் அண்ணனுக்கு மற்றப் பெண்கள் மீது வந்ததால், அவன் குடும்பத்தின் மரியாதையும், அவன் தங்கையின் உயிரும் போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *