கணவனா ஏத்துகிவீங்கலா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 10,628 
 

ப்ரியா இன்னைக்கு நீ ஆப்டே லீவாமே! எங்கயாசும் வெளியில போரயா?

வெளியில எங்கயும் இல்லப்பா, இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க வாராங்க.

பொண்ணு பாக்கவா சொல்லவே இல்ல!

எங்கிட்டயே யாரும் சொல்லல.

என்னடி சொல்ற?

அம்மா இப்பதா போன் பண்ணி விஷயத்த சொன்னாங்க.

ஓ அதா ரோமியோ ஆபிசுக்கு வரலயா,

ரோமியோவா! யாருடி அது?

என்னடி தெரியாத மாதிரி கேக்குற உன்னோட ரோமியோதா.

என்னடி சொல்ற.

நம்ம ரமேசதாபா சொல்றே. அவனும் உனக்கு ரெண்டு வரு~சமா நூல் விட்டுக்கிட்டு இருக்கா, ஆனா நீ இதுவரைக்கு அவன ஏறெடுத்து பாக்கல. பாவம் ரமேஷ் இந்நேரம் எந்த பார்ல உட்காந்து இருக்கானோ!

கண்டதையும் உளறிக்கிட்டு இருக்காத நா கௌம்புறேன். ஆபீஸ் முடிஞ்சதும் நீயும் சாயாங்காலம் வீட்டுக்கு வந்துடு.

என்னடி இது இவ்வளவு லேட்டா வர்றே கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்ல?

ஏம்மா இப்டி கால்ல ரெக்கைய கட்டிக்கிட்டு பறக்குற எப்டியும் மாப்ள வீட்டுக்காரங்க வரதுக்கு ஆறு மணியாயிடும். மணி இப்போ நாலுதானே ஆகுது. நா அவுங்க வரதுகுள்ள ரெடியாகிறேன் போதுமா?

சரிசரி பேசிக்கிட்டே இருக்காத இந்தா இந்த பொடவைய கட்டிட்டு சீக்கிரம் ரெடியாகு.

ஏதுமா இந்த ஸாரி! எப்ப எடுத்த?

நா எடுக்கல இப்ப உன்ன பொண்ணு பாக்க வர்ராரே மாப்ள அவர் எடுத்தது.

என்னது மாப்ள எடுத்ததா! ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு ப்ரியா கேட்டாள்.

மகளின் கேள்விக்கு சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அம்மா காமாட்சி அடுப்படியை நோக்கி நடந்தாள்.

மணி ஐந்தரை ஆனதை காட்டிய கடிக்காரத்தை பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடியை பார்த்து தன் சேலையை ப்ரியா சரிசெய்துக்கொண்டு திரும்பினாள்.

பின்னால் தீபா நின்றிருந்தாள். “வாவ்” ப்ரியா இந்த ஸாரி சூப்பரா இருக்குடி. யாரோட செலக்சன்?

மாப்பிள்ளையோட செலக்சன்.

என்னது மாப்பிள்ளையோட செலக்சனா! அப்பனா பொண்ணுப் பாக்குறதுக்கு முன்னாயே மாப்ள உன்னோட போட்டோவ பார்த்து உன் அழகுல மயக்கிட்டாரா?

தோழிகள் இருவரின் சுவாரஸ்ய பேச்சுக்கிடையயே காமாட்சி குறுக்கிட்டாள்.

ப்ரியா ரெடியா? மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.

உன்னோட அழகுல மயங்கி சொக்கிப்போன மாப்பிள்ளையோட அழக நா பாக்கவேண்டாமா, இரு நான் போய் மொதல்ல மாப்பிள்ள எப்படி இருக்காருன்னு பாத்துட்டு வந்துரேன் .

தீபா கதவுக்கு இடுக்கில் ஒளிந்துக் கொண்டு வந்திருந்த கூட்டத்தின் மீது பார்வையை மேயவிட்டாள். தும்பைப் பூ நிறத்தில் மல்லுவேட்டிக் கட்டிக்கொண்டு ஜோராக சோபாவில் உட்காந்திருந்த மாப்பிள்ளையை பார்த்தவுடன் தீபா அதிர்ச்சியடைந்தாள்.

எல்லோரும் அமைதியாய் இருக்க கூட்டதிலிருந்து ஒரு குரல் வந்தது. நல்ல நேரம் போரதுக்குள்ள பொண்ண பாத்துரலாமேன்னு.

ப்ரியாவின் கையில் காபி டம்ளரை கொடுத்து அவளை முன்னால் அனுப்பிவிட்டு அம்மா காமாட்சி மகளை பின்தொடர்ந்தாள். ப்ரியாவின் காதில் காமாட்சி ஏதோ கிசுக்கிசுத்தால், ப்ரியா காபி குடுக்கும் போது அப்டியே மாப்ளயோட மொகத்த பாத்துக்கோ.

ப்ரியா அவருதாமா மாப்ள பாத்துக்கோ அப்பா சண்முகம் சொன்னார்.

மாப்பிளையை நிமிர்ந்து பார்த்த ப்ரியாவுக்கு பேரதிர்ச்சி.

என்ன ப்ரியா அதிர்ச்சியா இருக்கா ! நீங்க என்னை இங்க எதிர்ப்பார்கலேல? இரண்டு வருஷம் இல்லீங்க, இன்னும் பத்து வருஷம் ஆனாலக் கூட நீங்க என்னோட காதல ஏத்துக்க மாடடேங்கறத நா புருஞ்சுக்கிட்டேன், அதாங்க வேற வழியே தெரியாம நா இந்த ரூட்ல வந்தேன் . நீங்க என்னை காதலனாதா ஏத்துக்கல, கணவனா ஏத்துகிருவீங்கலா?

வழக்கம் போல் பொண்ணு வெட்கப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ள ஓடிருச்சு. அப்பறம் என்ன டும்டும்டும்…………..தான்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *