கச்சத்தீவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 6,218 
 
 

1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் ;அமைந்த 285 ஏக்கர் பரப்புள்ள மக்கள் வாழாத தீவு. இத்தீவைச் சுற்றி நல்ல மீன்வளமும,; தீவில் கனிவளமும் உள்ளது. பெட்ரல் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. கச்சை என அழைக்கப்பட்ட பச்சை நிற ஆமைகள் அதிகம் இத்தீவில் சுற்றியுள்ள கடலில் காணப்படுவதால்; பச்சை தீவு என அழைக்கப்பட்டு, பின்னர் கச்சைத்தீவேன பெயர் மருவியதாக ஒரு சாரார் கருத்து. மீனவர்கள்; தம் வலைகளை அத்தீவில் உளரவைப்பதால் வலையைக் கச்சை எனக் குறிப்பதாலும் அப்பெயர் அத்தீவுக்கு வந்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் இராமேஸ்வரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ தூரத்தில் இத்தீவு அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்புக்கு உகந்த தீவென கருதப்படுகிறது. இத்தீவில் தம் மரபு வழி வந்த தொழில் புரிவதற்காகச் சென்று, தன் உயிரைப் பலிகொடுத்த ஒரு மீனவ இளைஞனைக் கருவாக வைத்துப் புனையப்பட்ட கதை.

இராமேஸ்வரத்தில் வாழும் சூசைதாசன், பரம்பரை பரம்பரையாக ஆழ் கடலுக்குப் போய் மீன் படிப்பதை தொழிலாகக் கொண்டவன். 1964 நடந்த சூறாவளியின் போது பல மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவனைச் சாரும். சூசைதாசன் மீனவர் சங்கத்தின் உபதலைவர். மீனவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேலான, கச்சைத்தீவு மீன் பிடிக்கும் பகுதிக்கான பிரச்சனையை தமிழ்நாட்டு அரசின் கவனத்துக்கு அடிக்கடி கொண்டு சென்றுஇ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுப் பணம் கிடைக்க வழிவகுத்தவன்.; அவனை அரசியலில் ஈடுபடும் படி பலர் கேட்டுமஇ; தனது சமூகத்துக்காக செய்யும்; சேவையில் ஊழல் புகுந்து விடுமோ என்ற பயத்தால் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தான்.

சூசைதாசனின் ஒரே மகன் அந்தனிமுத்து. தகப்பனாரைப் போல் சமூக சேவையில் ஈடுபட்டவன். தந்தைக்கு உதவியாகக் கடலுக்கு போய் வருவான். கடலுக்கு அந்தனிமுத்து தந்தைக்கு துணையாகப் போய் வரும் போது மீன்கள்; அதிகம் பிடிபடுவதை பலர் அவதானித்தனர். தீவுக்குப் போகும் போது அத்தீவில் உள்ள அந்தோனியார் தேவாலயத்துக்குச்ச சிலசமயம்; சென்று வணங்கி வருவது அவன் வழக்கம். இதை இலங்கை கடற்படை கவனிப்பதில்லை. ஏதோ அந்தோனியாரின் கிருபை அவனுக்கு இருக்கிறது என்று சக மீனவர்கள் பேசிக்கொண்டனர்.

தொழிலுக்குப் போகாத நாட்களில் பாதர் பீட்டரிடம் ஆங்கிலம் கற்றுவநதான் அதனால் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கூடியவன். தமிழும் ஆங்கிலமும் பேசும் திறமை உள்ள அவனை தங்கள் சங்கத்தின் செயலாளராக இராமேஸ்வரம் மீனவர் சங்கம் ஏகமானதாக தேர்ந்தெடுத்தது.

இலங்கை இந்தியா கச்சை தீவு ஒப்பந்தம்இ கச்சைத் தீவின் வரலாறு. மன்னார் வளைகுடாவுமஇ; அதில் உள்ள கனிவளமும் பற்றி அந்தனிமுத்து அறிந்து வைத்திருந்தான். தன் அறிவை மற்றைய மீனவர்களோடும்இ அரசியல்வாதிகளோடும் பகிர்ந்து கொள்வான். அவனது இளமையையும்இ திடகாத்திரமான உடலையும் கண்டு மோகித்த மீனவப் பெண்கள் அனேகர். ஆனால் அந்தனிமுத்துவின் மனதில் இடம் படித்தவள் பிலோமினா என்ற மீனவப்பெண். அவள் மேல் அந்தனிமுத்துவுக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம் பிலோமினாவின எளிமையான தோற்றமும்இ அமைதியான போக்கும். அதுவுமல்லாமல் சுறாவளியில் தாயையும் தந்தையையும் இழந்த அனாதைபெண் பிலோமினா. தன் பாட்டி நேசமணியின் கவனிப்பில் வாழ்பவள். கடும் உழைப்பாளி. பல மைல்கள் நடந்து சென்று மீன் வியாபாரம் செய்து வருவாள். குறைந்த விலையில் பேரம், பேசி மீன் பிடித்து வரும் மீனவர்களிடம் மீன் வாங்கும் திறமை படைத்தவள்.

“ என்ன பிலோமினா இண்டைக்கு உன் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான சுறாவும், அறுக்குளா, கயல் மீனும் , ஓராவும் கிடைத்திருக்கு உனக்காக வைத்திருக்கிறன” என்றான் அந்தனிமுத்து.

“ நான் கேட்கும் விலைக்குத் தந்தால் உன்னிடம் வாங்குவன்” சிரித்படி பதில் சொன்னாள் பிலோமினா. அவளுக்குப் பிரமாதமான முக அழகு இல்லாவிட்டாலும்இ பொது நிறம். நீண்ட கரும் கூந்தல். சிரிப்பழகி. எதோ ஒரு வித கவர்ச்சியை பல மீனவர்கள் கண்டார்கள். ஆதனால்தானோ என்னவோ போட்டி போட்டுக்கொண்டு அவளுக்கு மீன் விற்க முன்வந்தனர்.

மீன் பிடித்துவரும் மீனவர்களில் முதலில் தேடிப் போய் மீன வாங்குவது அநதனிமுத்துவிடம். அவனோடு தர்க்கம் புரிந்து மீன் வாங்குவதில் அவளுக்கு ஒரு தனி சந்தோஷம். அவர்கள் பேச்சில் ஊடலுமஇ; கிண்டலும் இருந்தது. அதுவே காதலாக மாறியது. ஒரு தடவை கடலில் மீன பிடித்து வரும்; போது வலையில் சிக்கிய முத்துச் சிப்பியில் இருந்து கிடைத்த முத்தை பிலோமினாவுக்கு அந்தனிமுத்து கொடுத்த போதுஇ

“ என்ன அந்தனி இந்த விலையுயர்ந்த முத்து எனக்கா? நம்பமுடியவில்லையே” என்றாள் பிலோமினா.

“ நீ எனக்கு ஒரு முத்துபோல. இது உன் சிரிப்புக்கு பொருத்தமானது.

அதுதான் இது உனக்கு என் பரிசு” என்றான் அந்தனி.

அந்தனியின் வார்த்தைகளால் அவள் வெட்கித் குனிந்தாள்.

“நீ நல்ல சமையல்காரி என்று உன் சினேகிதி திரேசா எனக்குச் சொன்னாள். உன் மீன் சமையலை சுவைக்கவேண்டும் போல இருக்கு. நீ செய்து தந்தால் ரசித்து சாப்பிடுவேன்.” புதில சொன்னான் அந்தனி.

“ நீ கேட்டாள் முடியாது என்று சொல்லுவேனா? என்ன மீன சமையல் உனக்கு விருப்பம்”?

“ சுறாமீன் பிட்டு, இறால் பொரியல், ஓரா மீன் தீயல், அறுககுளா மீன் குளம்பு.” என்றான் அந்தனி.

“ அடேயப்பா நீண்ட பட்டியல். அவ்வளவும் நான் சமைத்து தந்தால் சாப்பிடுவாயா”?

“ நீயும் சேர்ந்து என்னோடு சாப்பிட்டால் நிட்சயம் சாப்பிடுவேன்”.

“ அப்போ வருகிற ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சுக்குப்;போய் நீ திரும்பும் போது என் வீpட்டில் தான் உனக்குப் பகல் சாப்பாடு உன் விருப்பப்படி எல்லாம் செய்து வைக்கிறன” என்றாள் பிலோமினா.

“உன் சித்தம். என் பாக்கியம்” என்றான் சிரித்தபடி அந்தனி.

சூசைதாசனுக்கு பிலோமினாவின் தந்தை மாரியம்பிள்ளை தூரத்துச் சொந்தம். பிலோமினாவுக்கும் மகன் அந்தனி முத்துக்கும் இடையே வளர்ந்து வரும் காதலைப் பற்றி பலர் சூசைதாசனுக்கு சொன்னார்கள்.

“ எனக்குத் தெரியும் அந்தனிக்கு பிலோமினாவை தன் துணைவியாக்க நல்ல விருப்பம் என்று. நான் இதைப்பற்றி பிலோமினாவின் பாட்டி நேசமணியிடம்; பேசிவிட்டேன். அவவுக்கும் சம்மதம். பிலோமனாவின் தன்தை எனக்குத் தூரத்துச் சொந்தம் வேறு. வருகிற நத்தாரோடு திருமணம் செய்துவைக்க இருக்கிறன. திருமண செலவுக்கு தேவையான பணத்தை தானே மீன பிடித்து சேர்ப்பதாக அந்தனி எனக்குச் சொன்னான்.” என்றான் சூசைதாசன் தன் நண்பன் சேவியரிடம்.

அடிக்கடி மீன்வளம் அதிகமாக உள்ள பகுதியான கச்சைத் தீவுக்கு அருகே சென்று தன் சக தொழிலாளியான பிச்சைமுத்துவோடு போய் வரத்தொடங்கினான் அந்தனி. தனக்கு வரப்போகும் கணவன்இ சொந்த உழைப்பில் தனக்குத் தேவையான நகைகள்இ சேலைகள்இ வீட்டு சாமான்கள் வாங்கக் கடுமையாக உழைக்கிறான் என்பதைக் கண்டு பிலோமினா பெருமைப் பட்டாள். அவனுக்கு வாயுக்கு ருசியாக சமைத்துப் போட்டாள்.

நத்தாருக்கு இரு கிழமைகளுக்கு முன்னரே அந்தனிமுத்து பிலேமினா திருமணம் நடக்க இருந்தது. அதற்கு முன் அந்த சம்பவம் நடக்கும் என்று இராமேஸ்வர மீனவ மக்கள் எதர்பார்த்;திருக்வில்லை.

திருமணத்துக்கு முன் ஒருநாள் அந்தனிமுத்து, பிசசைமுத்துவோடு கச்சைத்தீவுக்கு அருகாமையில் உள்ள கடல் பகுதிக்கு மீன பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையின் பார்வைக் பட்டான். அவர்கள் அவனது விசைப்படகை நிறுத்தும்படி கட்டளையிட்டும்;; அவர்களின் கட்டளையை அவன் மதிக்கவில்லை. எங்கே கடற்படை தன்னைக் கைது செய்து சித்திரவதை செய்வார்களோ என்ற பயம் வேறு. எனக்கு கச்சைதீவை சுற்றி உள்ள பகுதியில் மீன பிடிக்கவுமஇ; வலையைத் தீவில் உலர வைக்கவும் ஒப்பந்தத்தின்படி உரிமை உண்டு. நான் ஏன் அவர்கள் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டு; என்று கடற்படையின் தாக்குதலுக்குப் பலியாக முன் தனக்கு அந்தனி சொன்னதாக உயிர்தப்பிவந்த பிச்சைமுத்து சூசைதாசனுக்கும் இராமேஸ்வர மீனவர் சங்கத்துக்கும் சொன்னான்.

தனனை மணமுடிக்க இருந்தவனுக்கு இப்படி வீர மரணம் ஏற்படும் என பிலோமினா எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் தொழில் செய்து திரும்போது உண்பதற்காக அவனுக்குச் சுறபுட்டும், இறால் பொரியலும், அறுக்குளா மீன் குளம்பும் செய்து வைத்திருந்தாள். அந்தனிமுத்துவின் மரணம் இராமேஸ்வர மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவனின் மரணத்தை மனித உரிமை மிறலாக ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதியது. தமிழ்நாட்டு அரசு இம்மரணத்தைப்பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்து, இலங்கை அரசிடம் அந்தனிமுத்துவின் காரணமற்ற மரணத்துக்காக நஷ்ட ஈடு கொடுக்கும்படி கேட்டது. அரசியல் அழுத்தம் காரணமாக பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடாக அந்தனிமுத்து பெற்றோருக்கு கிடைத்தது. அப்பனம் பிலோமினாவுக்குகே போய்ச் சேர வேண்டும் என சூசைதாசன் முடிவெடுத்தான். அந்தனிமுத்துவின் பெற்றோர் பெலோமினா வீட்டுக்கு அவளைச் சந்தித்து பணம் கொடுக்கப் போன போது இன்னொரு அதிர்ச்சியும் அவர்களுக்குக் காத்திருந்தது.

“என் பேத்தி இப்போது இங்கை இல்லை. அந்தனியின் மரணம் அவள் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது” என்றாள் பாட்டி நேசமணி.

“ அந்தனி மரணத்துக்கு இழப்பீடாக பத்து இலட்சம் பணம் அரசு கொடுத்திருக்கிறது. அப் பணம் அவளைப் போய் சேர வேண்டும். அதை அவளுக்குக் கொடுக்கவே வந்திருக்கிறோம் என்றார்கள் சூசைதாசனும் மீனவர்கள் சங்கத் தலைவர்களும்.

“நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவள் வாங்கும் நிலமையில் இப்போது இல்லை” நேசமணி பாட்டி சொன்னாள்.

“ ஏன் பாட்டி அப்படிச் சொல்லுகிறீர்கள்”? சூசைதாசன் கேட்டான்.

“ பிலோமினா இப்போது கன்னிகாஸ்தீரியாக மாறிவிட்டாள். பயிற்சிக்காக திருச்சிக்குப் போய்விட்டாள். தனக்கு இனி திருமணமே வேண்டாம் என்று விட்டாள்”, என்றாள் நேசமணி பாட்டி

எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றனர். பிலோமினா தினமும் மீன் விற்கச் சுமந்து செல்லும் மீன் கூடை ஓரமாகக் கிடந்தது.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *