ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 3,408 
 
 

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

கொஞ்ச நேரம் ஆனதும் விமலா தம்பி குப்புசாமியே பார்த்து “என்ன குப்பு, ரகுராமனை எட்டாவது சேக்கற சாக்கிலே நீ திருவண்ணாமலைக்கு வந்தே.அப்புறமா உன் கிட்டே இருந்து ஒரு சமாசா ரமும் இல்லே.ரகுராமன் எட்டாவது ‘பாஸ்’ பண்ணி மேலே படிச்சுன்டு வறானா.என் ஆம் அத்தே ஆம் தானே.ஒரு தடவை அவன் எங்காத்துக்கு வந்து என்னையும் அத்திம்பேரையும் பாத்துட்டு ஒரு ‘கப்’ காபி சாப்பிட்டு விட்டுப் போகக் கூடாதோ.நீயும் மரகதமும் அவனுக்கு இதே சொல்லி அனுப்பக் கூடாதோ. எனக்கும், அத்திம்பேருக்கும் உங்க ரெண்டு பேர் மேலேயும் கொஞ்சம் கோவம் தான்.போக ட்டும் விடு.மங்களம் ‘டெந்த்’க்கு அப்புறமா ‘இண்டர்மீடியட் சேரலையா.வெறுமனே ஆத்லே தான் இருந்துண்டு வராளா” என்று சுவாதீனமாக விடாமல் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

விமலா நல்ல ஒரு சாதாரண புடவையைக் கட்டிக் கொண்டு இருந்தாள்.அவள் காதுகளில் வெறுமனே ரெண்டு சாதாரண ‘ஸ்டட்’ போட்டுக் கொண்டு இருந்தாள்.கழுத்திலே வேறுமனே ஒரு தாலிச் சரடு மட்டும் இருந்தது,கைகளில் கண்ணாடி வளையல்கள் போட்டுக் கொண்டு இருந்தாள். முன்னே போட்டுக் கொண்டு இருந்த மோதிரங்கள் அவள் கைகளில் இல்லை.

குப்புசமிக்கும்,மரகதத்துக்கும் விமலாவை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.

குப்புசாமிக்கும், மரகதத்துக்கும் விமலாவிடம் எதை சொல்வது,எதை சொல்லாமல் இருப்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்கள்.
“நான் கேக்கறேன்,நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துண்டு சும்மா நிண்ண்டு இருக்கேளே.எங்கே ரகுராமனை காணோம்.அவன் இப்போ எந்த ‘க்லாஸ்லே’ படிச்சுண்டு வறான். அவன் ஏதாவது ‘ட்யூஷன்’ ‘கலாஸ்’க்குப் போய் இருக்கானா என்ன” என்று விடாமல் கேட்டாள்.

குப்புசாமி ‘வந்து இருப்பது என் சொந்த அக்கா வாச்சே.இவ்வளவு சுவாதீனமா வேறே கேக்க றாளே’,நாம அவ கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி விடுவது தான் நல்லது.இப்போ சொல்லா விட்டா,அப்புறமா தெரிய வந்தா என்னையும்,மரகதத்தையும் தானே தப்பா புரிஞ்சுப்பா.’அவா ஆத்து க்கு நான் போய் இருந்தேன்.அப்ப குப்புவும், மரகதமும் இந்த ‘உண்மையை’ என் கிட்டே சொல்ல லையே’ ன்னு அக்கா நினைச்சி ரொம்ப வருத்தப்படுவாளே.அத்திம்பேரும் வருத்தப் பட்டாரே’ என்று யோஜனைப் பண்ணினார்.

பிறகு ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு “அக்கா,உங்க ஆத்துக்கு நாங்க ரகுராமனை போகக் கூடாதுன்னு சொல்லலே.அவ எட்டாவது ‘பாஸ்’ பண்ணலே.மறுபடியும் நான் பணம் கட்டி அவனை எட்டாவதிலே சேத்தேன்.ஆனா அவனுக்கு இந்த பாழாப் போன கணக்கும்,இங்கிலிஷூம் வரவே இல்லே.அந்த வருஷமும் அவன் எட்டாவது ‘பாஸ்’ பண்ணலே.அவன் உடனே ‘அப்பா,அம்மா எனக்கு கணக்கும்,இங்கிலிஷூம், மண்டையிலே ஏறலே’ன்னு உண்மையே சொல்லிட்டு அழுதான். அதனால் நானும்,மரகதமும் ரொம்ப யோஜனைப் பண்ணிட்டு,வேறே வழி ஒன்னும் தெரியாம, ரகுராம னை எனக்கு ரொம்ப தெரிஞ்ச சமையல் கார ‘ப்ரெண்ட்’ ஒருத்தர் கிட்டே சமையை வேலே கத்துண் டு வர சேத்து இருக்கோம்.ரகுராமனும் அவர் கிட்டே சமையல் வேலேயே கத்துண்டு வறான்” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழிந்த கண்ணீர்ரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “மங்களம் ‘டெந்த்’லே எல்லா ‘சப்ஜெகட்டிலும்’ 90%க்கு மேலே மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கா.அவ படிச்சது போதும்ன்னு நானும் மரகதமும் அவளை ஆத்லேயே வச்சுண்டு வறோம்.சீக்கிரமா அவளுக்கு ஒரு நல்ல இடத்லே ஒரு கல்யானத்தே பண்ணி முடிக்கலாம்ன்னு இருக்கோம்” என்று சொன்னார்.

குப்புசாமி சொன்னத்தை கேட்ட விமலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அவள் விமலா “என்ன சொல்றே குப்பு.ரகுராமன் இப்போ சமையல் கார வேலேயே கத்துண்டு வறானா.எனக்கு கேக்கவெ ரொம்ப கஷ்டமா இருக்கு”என்று சொல்லி அவள் கண்களில் வழிந்த கண் ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் விமலா ”எங்களுக்கு விஷயமே தெரியாது.ஆமாம் நம்ம ரெண்டு குடு ம்பமும் அடிக்கடி வந்து போயிண்டு இருந்தா எல்ல விஷயமும் தெரிய வரும். நாங்களும் இங்கே வறது இல்லே.எங்களுக்கு ரொம்ப பணக் கஷ்டம்.உங்களுக்கு ரொம்ப மனக் கஷ்டம்.கேக்கவே ரொம்ப வரு த்தமா இருக்கு.நீங்களும் திருவண்ணாமலைக்கு வறதே இல்லே” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

கொஞ்ச நேரம் போனதும் விமலா குப்புசாமியையும்,மரகத்தையும் பார்த்து “ ராமு B.Com.பாஸ் பண்ணிட்டு ‘பாங்க்’ பரி¨க்ஷ எழுதி பாஸ் பண்ணிட்டு,ஒரு வருஷ,’ட்ரெயினிங்க்’,முடிச்சுட்டு,போன வாரத்தில் இருந்து அந்த ‘பாங்கி’லே ஒரு ‘க்லார்க்கா’ வேலை பண்ணீண்டு வர ஆரம்பிச்சு இருக்கான் இந்த சந்தோஷ சமாசாரத்தே உங்க எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு உங்க எல்லாரையும்,இந்த வாரம் ஞாயித்துக் கிழமை மத்தியானம் சாப்பிட கூப்பிடலாம்ன்னு தான் நான் வந்து இருக்கேன்” என்று சொன்னாள்.
உடனே குப்புசாமி சந்தோஷத்திலே “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா. ராமநாதனு க்கு ‘பாங்கி’லே வேலை கிடைச்சு இருக்கா.அவனை நானும்,மரகதமும் ரொம்ப கேட்டேன்னு சொல்லு க்கா.நாங்க நாலு பேரும் நிச்சியமா இந்த ஞாயித்துக் கிழமை உங்க ஆத்துக்கு மத்தியானம் சாப்பிட வறோம்” என்று சொன்னார்.

விமலா கொஞ்ச நேரம் மரகதத்திடமும்,மங்களத்திடமும் பேசிக் கொண்டு இருந்து விட்டு, மரகதம் கொடுத்த குங்குமத்தை இட்டுக் கொண்டு திருவண்ணாமலைக்குக் கிளம்பிப் போனாள்.

ரகுராமன் வீட்டுக்கு வந்ததும்,குப்புசாமி தன் அக்கா விமலா வந்து இருந்ததையும்,அவ சொன்ன சமாசரத்தையும் சொன்னார்.

உடனே ரகுராமன் ”அம்மா,அப்பா,அவா ஆத்துக்கு எல்லாம் நான் உங்களோட இந்த ஞாயித் துக் கிழமை மத்தியானம் சாப்பிட வறலே.என்னைக்கு நான் ‘சம்பாதிச்சு’ என் கால்லே நிக்க ஆரம்பிக் கறேனோ,அன்னைக்கு நான் அவா எல்லாரையும் பாக்க வறேன்.அது வரைக்கும் நீங்கோ மூனு பேரும் மட்டும் அவா ஆத்துக்கு போய் வாங்கோ” என்று தீர்மானமாக சொல்லி விட்டான்.

ரகுராமன் சொன்னதை கேட்டு குப்புசாமியும்,மரகதமும்,மங்களமும் மிகவும் வருத்தப் பட்டா ர்கள்.

விமலா ‘பஸ் ஸ்டாண்ட் ‘வந்து,ஒரு பஸ்ஸைப் பிடித்து திருவண்ணாமலைக்கு வந்து தன் வீட் டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் வராதுமாய் விமலா தன் கணவா¢டமும்,ராமநாதன் இடம் “குப்புவும் ரகுரா மனை ரெண்டு தடவை பணம் கட்டி எட்டாவது படிக்க வச்சானாம்.பாவம் அந்த பையனுக்கு இந்த பாழாப் போன கணக்கும்,இங்கிலிஷூம் வரவே இல்லேயாம்.அவன் ரெண்டு தடவையும் எட்டாவது ‘பாஸ்’ பண்ணலேயாம்.அப்புறமா குப்புவும், மரகதமும் நன்னா யோஜனைப் பண்ணிட்டு, ரகுராமனை அவாளுக்கு ரொம்ப நன்னா தெரிஞ்ச ஒரு சமையல் கார ‘ப்ரெண்ட்’ கிட்டே சமையல் வேலை கத்து க்க அனுப்பிண்டு இருக்காளாம்” என்று சொல்லி விமலாவும் வருத்தப் பட்டாள்.

உடனே ராமசாமி “அப்படியா சமாச்சாரம்.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே.பாவம் ரகுராமன் எட்டாவதிலே மூனு தடவை ‘பெயிலா’யிட்டானா.ரகுராமன் ஒரு சமையல் காரர் கிட்டேயா சமையல் வேலை கத்துண்டு வறானா.அந்த சமையல் வேலையே ரகுராமன் நன்னா கத்துண்டு அவன் ஒரு சமையல் காரனா ஆயி,அவன் வாழக்கையிலே ‘செட்டில்’ ஆன பிற்பாடு தான் என் தங்கையும்,உன் தம்பியும் சந்தோஷப் படுவா.அப்புறமா தான் அவா கஷ்டம் விடியும்.அது வரைக்கும் அவா ரெண்டு பேரும் ‘எல்லாம் நல்லபடியா ஆகணுமே’ ன்னு அந்த பகவானை வேண்டிண்டு வந்துண்டு இருப்பா” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமநாதன் ”சில பேருக்கு இந்த கணக்கே நன்னா போட வறதில்லே. எப்படி சொல்லிக் குடுத்தாலும்,கணக்கை போடும் போது தப்பு தப்பா தான் போடுவா.பாவம் ரகுராம னுக்கு கணக்கே வறலேன்னு கேக்க எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு பையன் எட்டாவது ‘பாஸ்’ பண்ணாட்டா,அவனை வேறே எந்த ‘டெக்னிக்கல் கோர்ஸ்சிலும்’ சேக்க முடியாது.எல்லாத்துக் கும் ஒரு பையன் எட்டாவது ‘பாஸ்’பண்ணீ இருக்கணும்” என்று சொல்லி அவனும் ரொம்ப வருத்தப் பட்டான்.
மரகதம் மங்களத்துக்கு தன்னிடம் இருந்த ஒரு நல்ல பட்டுப் புடவை கட்டி விட்டு,அவள் ஒரு சாதாரண புடவையை கட்டிக் கொண்டு ரெடி ஆனாள்.

ரகுராமன் வீட்டிலேயே இருந்தான்.

சொன்னது போல குப்புசாமியும்,மரகதமும்,மங்களமும் அந்த ஞாயிற்றுக் கிழமை திருவண் ணாமலைக்கு கிளம்பிப் விமலா ராமசாமி வீட்டுக்குப் போனார்கள்.

தங்கை மரகத்தையும்,அவர் கணவர் குப்புசாமியையும் பார்த்ததும் விமலாவும் ராமசாமியும் சந்தோஷத்துடன் அவர்கள் வீட்டுக்கு உள்ளே வரவேற்றார்கள்.விமலா எல்லோரையும் தன்னுடன் வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.

விமலாவும் ராமசாமியும் குப்புசாமியைப் பார்த்து “என்ன குப்பு,நீங்கோ மூனு பேர் மட்டும் தான் சாப்பிட வந்து இருக்கே.ஏன் ரகுராமனை அழைச்சுண்டு வறலே”என்று ‘கோரஸாக’க் கேட்டார்கள்.

உடனே குப்புசாமி “நீங்கோ ரெண்டு பேரும் என்னையும் மரகதத்தையும் தப்பா எடுத்தாதீங் கோ.ரகுராமன் ‘அம்மா,அப்பா,அவா ஆத்துக்கு எல்லாம் நான் உங்களோட இந்த ஞாயித்துக் கிழமை மத்தியானம் சாப்பிட வறலே.என்னைக்கு நான் ‘சம்பாதிச்சு’ என் கால்லே நிக்க ஆரம்பிக்கறேனோ, அன்னைக்கு நான் அவா எல்லாரையும் பாக்க வறேன்.அது வரைக்கும் நீங்கோ மூனு பேரும் மட்டும் அவா ஆத்துக்கு போய் வாங்கோ’ன்னு தீர்மானமா சொல்லிட்டான்.அதான் நாங்க அவனை அழைச் சுண்டு வறலே” என்று வருத்தப் பட்டுக் கொண்டு சொன்னார்.

விமலா தன் கணவரையும் ராமநாதனையும் பார்த்து “நான் அன்னைக்கு உங்க கிட்டே சொல்ல மறத்துட்டேன்.கிராமத்துக்கு இவாளை சாப்பிட அழைக்கப் போனப்ப குப்பு என் கிட்டே ‘மங்களம் ‘டென்ந்த்’லெ எல்லா சப்ஜெக்ட்டிலும் 90%க்கு மேலே வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கா’ன்னு சொன் னான்.

உடனே ராமசாமி “டெந்த்’லே எல்லா சப்ஜெக்ட்டிலும் 90% வாங்கறது ரொம்ப கஷ்டம்.ரொம்ப ‘இன்டெலிஜெண்ட்டா’ இருந்தாத் தான் அப்படி மார்க் வாங்க முடியும்” என்று சொல்லி சந்தோஷப் பட்டார்.

ராமசாமி தன் தங்கை மரகதத்தையும்,குப்புசாமியையும் பார்த்து “விமலா எனக்கு உங்க ஆத்து எல்லா விஷயத்தையும் சொன்னா.ரகுராமனை மூனு தடவை எட்டாவது சேத்தும் அவன் ‘பாஸ் பண் ணலேன்னு கேக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.என்ன பண்ணுவது.சில குழந்தைகளுக்கு படிப்பு ஏற மாட்டேங்கறது.பாவம் ரகுராமன் அந்த சமையல் காரர் கிட்டே வேலையை நன்னா கத்துண் டு மூன்னுக்கு வரணும்” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

உடனே குப்புசாமி “என்ன பண்றது அத்திம்பேர்.அவனுக்கு கணக்கும் இங்கிகிஷூம் சுத்தமா வறலே.அவன் மூனு தடவை நான் எட்டாவது சேந்து படிச்சான்.அவனாலே ’பாஸ்’ பண்ண முடியலே. அதனால் தான் நானும் மரகதமும் நன்னா யோஜனைப் பண்ணி அவனை இந்த சமையல் கார வேலைக்கு சேத்து இருக்கோம்.நீங்க சொன்னா மாதிரி ரகுராமன் அந்த சமையல் கார வேலையை நன்னா கத்துண்டு மூன்னுக்கு வரணும்.உங்க வாய் முஹ¥ர்த்தம் சீக்கிரமா பலிக்கணும்” என்று சொல்லி வருத்த ப்பட்டார்.

மரகதம் ஒன்னும் சொல்லாமல் அவர்கள் இருந்து வந்த சின்ன வீட்டையே பார்த்து வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தாள்.

குப்புசாமி குடும்பம் அவர்கள் வீட்டுக்கு வந்ததில் இருந்து ராமநாதன் வைத்த கண் வாங்காமல் மங்களத்தையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.மங்களத்தின் அழகிலே தன்னை பறி கொடுத்தான் ராமநாதன்.அவள் அழகு அவனை மயங்க வைத்துக் கொண்டு இருந்தது.மங்களமும் அம்மா கட்டி விட்டு இருந்த பட்டுப் புடவையில் தள,தள,என்று,ஒரு அழகு தேவதைப் போல இருந்தாள்.

கொஞ்ச நேரம் ‘லோகா பிராமமாக’ பேசிக் கொண்டு இருந்தார்கள்.

மணீ பன்னண்டு அடிக்கவே விமலா ஆண்கள் மூனு பேருக்கும் நுனி வாழை இலையைப் போட்டு அவள் சமைத்து வைத்து இருந்த சாப்பாட்டைப் போட்டாள்.
அவர்கள் சாப்பிட்டு எழுந்ததும் விமலாவும்,மரகதமும்,மங்களமும் சாப்பிட்டு விட்டு எழுந்துக் கொண்டார்கள்.

எல்லோரும் கொஞ்ச நேரம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டார்கள்.

மணி நாலடித்ததும் குப்புசாமியும்,மரகதமும் மங்களமும் விமலா போட்டுக் கொடுத்த ‘காபி’ யைக் குடித்து விட்டு ‘பஸ்’ ‘ஸ்டாண்டு’க்கு வந்து பஸ் ஏறி கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

‘அவர்கள் எப்போ போவார்கள்’ என்று காத்துக் கொண்டு இருந்த ராமநாதன் தன் அம்மா அப்பாவைப் பார்த்து “அம்மா,அப்பா எனக்கு மங்களத்தே ரொம்ப பிடிச்சு இருக்கு.நீங்க ரெண்டு பேரும்,அவா கிட்டே பேசி எனக்கு மங்களத்தே எனக்கு கல்யாணத்தை பண்ணி வக்க முடியுமா” என் று வெட்கப் பட்டுக் கொண்டே கேட்டான் ராமநாதன்.
ராமசாமிக்கும்,விமலாவுக்கும் ராமநாதன் கேட்டதைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்கள்.

உடனே ராமசாமி “ஏண்டா ராமநாதா,உனக்கு அந்த பொண்ணே அவ்வளவு பிடிச்சு இருக்கா. நீயே வெக்கத்தே விட்டு ‘அந்த பொண்ணே எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கோ’ன்னு கேக்க றே.அந்த பொண்ணு மங்களம் ஒன்னே மயக்கிட்டாப் போல இருக்கே” என்று கிண்டலாகக் கேட்டார்.

“அவனை கிண்டல் பண்ணாதீங்கோ.நாம ரெண்டு பேரும் அவனைப் பெத்தவா தானேன்னு அவன் நம்ம கிட்டே சுவாதீனமா கேட்டு இருக்கான்” என்று பிள்ளைக்கு ‘சப்போர்ட்டாக’ சொன்னாள் விமலா.

”நானும் தமாஷூக்காகத் தான் சொன்னேன் விமலா.நான் யாரோ இல்லையே.அவன் அப்பா இல்லையா” என்று சொல்லி அசடு வழிந்தார் ராமசாமி.
உடனே விமலா “நான் அவா கிராமத்துக்குப் போனப்ப ‘மங்களம் இப்போ நன்னா வளந்து இரு க்காளே.அவ பாக்க ரொம்ப அழகா இருக்கா.மரகதம் நீ அவளுக்கு சுத்திப் போடு.என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு’ன்னு சொன்னேன்.அந்தப் பொண்ணு உண்மையாவே ரொம்ப அழகாவே இருக் கா” என்று பையன் சொன்னதை ஆமோதித்தாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் மங்களத்தே ரொம்ப பிடிச்சி இருந்தா,எனக்கு மட்டும் பிடிக்காம இரு க்குமா என்ன.ஒரு நல்ல நாள் பாத்து நாம ரெண்டு பேரும் குப்பு ஆத்துக்குப் போய் ராமநாதன் ஆசை யை சொல்லிட்டு,குப்பு,மரகதம் சம்மதத்தையும்,மங்களத்தின் சம்மதத்தையும் கேட்டுட்டு,அவாளுக்கு ம் இந்த கல்யாணத்திலே சம்மதம்ன்னா,’ஜாதகப் பரிவர்த்தணை’ பண்ணிக்க, ராமநாதன் ஜாதகத்தை குடுத்துட்டு, மங்களத்தின் ஜாதகத்தையும் வாங்கிண்டு வரலாம்”என்று சொன்னார் ராமசாமி.

விமலாவும் “நேக்கும் நீங்க சொல்றது சரினு படறது.வெறுமனே நம்ம மூனு பேருக்கும் மட்டும் சம்மதம் இருந்தாப் போறாது.அவா மூனு பேருக்கும் இந்த கல்யாணத்திலே சம்மதம் இருக்கணுமே” என்று சொல்லி விட்டு ராமநாதனைப் பார்த்து “ராமநாதா,எங்களுக்கு கொஞ்ச மாசம் அவகாசம் குடு. கல்யாணம் என்கிறது எல்லார் சம்மதத்தையும் பொருத்துத் தான் இருக்கு” என்று சொன்னதும் ராம நாதன் “ஆமாம்மா,நீங்க சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’” என்று சொல்லி விட்டு அவன் வேலையைக் கவனிக்கப் வெளீயே போய் விட்டான்.

ராமநாதன் வெளியே கிளம்பிப் போனவுடன் விமலா “நம்ம காலத்திலே தான் நாம உறவிலே கல்யாணம் பண்ணிண்டோம்னா,இப்போ ராமநாதன் காலத்திலேயும் அந்த வழக்கம் விட்டுப் போகாம இருக்க இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு அந்த பகவான் நினைச்சுண்டு இருக்காரோ என்னவோ. உங்களுக்கு என்ன தோன்றது” என்று கேட்டு தன் கணவா¢ன் வாயை கிளறினாள்.

உடனே ராமசாமி “அப்படி உறவிலே கல்யாணம் பண்ணீண்டு வந்து நாம ஒன்னும் கஷ்டப் படலே.ராமநாதனும் மங்களத்தே கல்யாணம் பண்ணீண்டா ஒரு கஷ்டப் படமாட்டான்னு எனக்குப் படறது.எதுக்கும் நாம ரொம்ப அவசரப் படக் கூடாது.அவா மூனு பேருக்கும் இந்த கல்யாணத்திலே பூரண சம்மதம் இருக்கணும்.ஜாதகங்கள் நன்னா ஒத்து இருக்கணும்.எல்லாத்துக்கும் மேலா அந்த பகவான் அனுக்கிரஹமும் இருக்கணும்” என்று வேதாந்தமாகச் சொன்னார்.

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்.இந்த கல்யாணத்திலே அந்த பகவான் அனுக்கிரஹம் நிச்சியமா இருக்கணும்” என்று சொல்லி விட்டு தன் கன்னங்களில் போட்டுக் கொண்டாள் விமலா.

ஆத்து வாத்தியாரைக் கேட்டு ஒரு நல்ல நாள் பார்த்து ராமசமியும் விமலாவும் ராமநாதன் ஜாத கத்தை எடுத்துக் கொண்டு குப்புசாமி இருந்த கிராமத்திற்கு ‘பஸ்’ ஏறி வந்தார்கள்.
வாசலிலே நின்றுக் கொண்டு இருந்த குப்புசாமி அவர் அத்திம்பேரும், அக்காவும் வருவதைப் பார்த்து “வாங்கோ அத்திம்பேர்,வாங்கோ அக்கா.ராமநாதன் சந்தோஷமா அந்த ‘பாங்க்’ வேலேக்கு போயிண்டு வறானா.அவனுக்கு அந்த வேலே பிடிச்சு இருக்கா” என்று கேட்டு விட்டு இருவரையும் தன் வீட்டிற்குள்ளே அழைத்துப் போனார்.

உடனே மரகதமும் அவர்களைப் பார்த்து “வாங்கோ,நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா வந்து இருக்கேளே.இன்னைக்கு ஞாயித்திக் கிழமையா இருக்கே.ராமநாதனை உங்க கூட அழைச்சுண்டு வந்து இருக்கக் கூடாதோ” என்று விசாரித்தாள்.

மங்களம் “வாங்கோ அத்தே,வாங்கோ அத்திம்பேர்” என்று வரவேற்று ரெண்டு பேருக்கும் சே ரைப் போட்டாள்.

விமலா தான் வாங்கி வந்த பூ,வெத்திலை, பாக்கு,பழங்களை எல்லாவற்றையும் மரகதத்திடம் கொடுத்தாள்.

ராமசாமியும் விமலாவும் மங்களம் போட்ட சேர்களில் உர்கார்ந்துக் கொண்டார்கள்.

“நாங்க அவனை அழைச்சுண்டு வரலாம்ன்னு இருந்தோம்.ஆனா அவன் ‘ப்ரெண்டோடு’ எங்கோ ஒரு சினிமாவுக்குப் போறானாம்.அவன் நான் வறலேன்னு சொல்லிட்டான்.இன்னைக்கு ஞாயித்துக் கிழமை.நாள் ரொம்ப நன்னா இருக்குன்னு வாத்தியார் சொன்னார்.அதான் நானும் அவ ரும் வந்து இருக்கோம்” என்று மொட்டையாக சொல்லி விட்டு ‘கம்’மென்று இருந்தாள் விமலா.

விமலா சொன்னதைக் கேட்டு குப்புசாமியும் மரகதமும் ‘என்ன இது. இன்னிக்கு நாள் ரொம்ப நன்னா இருக்கு.அதான் நானும் அவரும் வந்து இருக்கோம்ன்னு சொல்றாளே’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

ராமசாமி அவர்கள் இருவரையும் பார்த்து “ரொம்ப யோஜனைப் பண்ணாதே குப்பு,மரகதம்.நீங்க எங்க ஆத்துக்கு அன்னைக்கு மத்தியானம் சாப்பிட வந்துட்டுப் போன பிற்பாடு ராமநாதன் மங்களத் தின் அழகிலே மயங்கிப் போயிட்டான்.அவனுக்கு மங்களத்தே ரொம்ப பிடிச்சி இருக்குன்னு எங்க கிட்டே சொன்னான்.அதான் நானும் விமலாவும் வாத்தியாரைப் பாத்து ஒரு நல்ல நாள் கேட்டுண்டு அவன் ஜாதகத்தை எடுத்துண்டு வந்து இருக்கோம்.நீங்க ரெண்டு பேருக்கும் மங்களத்தின் கல்யாண த்தே இப்போ பண்ணலாம்ன்னு இருக்கேளா.இல்லே இன்னும் கொஞ்ச வருஷம் தள்ளிப் பண்ணலாம் ன்னு இருக்கேளா.நீங்க எங்க ஆத்துக்கு வந்தேளே, ராமநாதனை உங்களுக்குப் பிடிச்சி இருக்கா.முக் கியமா மங்களத்துக்கு ராமநாதனை பிடிச்சி இருக்கா”என்று கேட்டு விட்டு குப்புசாமி,மரகதம் மங்களம் மூனு பேரையும் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அங்கே நின்றுக் கொண்டு இருந்த மங்களம் வெட்கப் பட்டு தன் ‘ரூமு’க்குப் போய் விட்டாள்.

‘ரூமு’க்குள்ளே போய் ‘என் மேலே ரொம்ப ஆசைப் பட்டு,அவர் அப்பா அம்மாவை நம்மாத்து க்கு அனுப்பி இருக்காரே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தாள் மங்களம்.

உடனே குப்புசாமி “நாங்க ரெண்டு பேரும் இன்னும் அவ கல்யாணத்தே பத்தி யோஜனையே பண்ணலே.நாங்க ரெண்டு பேரும் ரகுராமனைப் பத்தி தான் காலைப் பட்டுண்டு இருக்கோம்”என்று சொல்லி முடிக்கவில்லை உடனே விமலா “குப்பு,மங்களம் இப்போ பாக்க ரொம்ப நன்னா இருக்கா.அவ ளுக்கும் கல்யாண வயசு ஆறதே.நீ மங்களத்தே சித்தே கூப்பிடு. நானே அவ கிட்டே கேக்கறேன்” என்று சொன்னதும் குப்புசாமி மங்களத்தை கூப்பிட்டார்.

மங்களம் ரூமை விட்டு வெளியே வந்ததும்” இதோ பார்,மங்களம்,நான் உன் அத்தே கேக்க றேன்.நீ என் பையன் ராமநாதனை அன்னைக்கு சாப்பிட வந்த போது நீ அவனே பாத்தே இல்லே. உனக்கு அவனே பிடிச்சி இருக்கா.நீ அவனை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறயா,உனக்கு அவனை பிடிச்சு இருந்தா தான்,நான் உன் அம்மா அப்பா கிட்டே மேலே பேச முடியும்” என்று நோ¢டையாகவே கேட்டு விட்டு ம்ங்களத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் விமலா.

மங்களம் வெட்கப் பட்டுக் கொண்டே”நீங்க பொ¢யவா எல்லாம் எதே பணறேளோ, அதிலே எனக்கு பூரண சம்மதம் அத்தே” என்று சொல்லி விட்டு தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

உடனே “சரி,மங்களம் அவ சம்மதத்தே சொல்லாம சொல்லிட்டா.குப்பு, உனக்கும் மரகதத்துக் கும் இந்த சம்மந்தம் பிடிச்சி இருக்கா.ரகுராமன் முன்னுக்கு வர இன்னும் ஒரு ஆறு ஏழு வருஷமாவது ஆகும்.அதே வெறுமனே நினைச்சுண்டு இருக்கிறது சரி இல்லே நேக்குப் படறது.நீங்க ரெண்டு பேரும் நன்னா யோஜனைப் பண்ணிட்டு சொல்லுங்கோ” என்று சொல்லி குப்புசாமியையும், மரகதத் தையும் அவசரப் படுத்தினாள் விமலா.

உடனே “அக்கா சொல்றது சரி.மங்களத்துக்கும் வயசாயிண்டு வறது.நாம அவ கல்யாணத்தே பத்தி யோசிக்கணும்”என்று சொன்னாள்.

குப்புசாமி “அவா ரெண்டு பேரும் அவா அபிப்பிராயத்தெ சொல்லிட்டா.நேக்கும் இந்த கல்யா ணத்லே சம்மதம் தான்.நாங்க அன்னைக்கு சாப்பிட வந்தப்ப,எதேச்சையா பொண்ணும் பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் கிட்டத்திலே பாத்துண்டுட்டா.இனிமே அவா ரெண்டு பேர் ஜாதகப் பொருத்தம் தான் பாக்கணும்….” என்று சொல்லி முடிக்கவில்லை ராமசாமி “குப்பு,உங்க மூனு பேர் சம்மதத்தே தெரிஞ்சுண்ட பிறகு ஜாதகப் பரிவத்தணை பண்ணிக்கலாம்ன்னு நினைச்சுத் தான், வாத்தியார் இன்னைக்கு நாள் நன்னா இருக்குன்னு சொன்னதாலே நானும்,விமலாவும் ராமநாதன் ஜாதகத்தே எடுத்துண்டு வந்து இருக்கோம்” என்று சொல்லி நிறுத்தினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமி” குப்பு,இந்தா ராமநாதன் ஜாதகம்.நீ இந்த ஜாதகத்தே உங்கா த்து வாத்தியார் கிட்டே காட்டி ஜாதகப் பொருத்தம் இருக்கான்னு பாக்கச் சொல்லு.நீ மங்களத் தோட ஜாதகத்தே என் கிட்டே குடு.நானும் எங்க ஆத்து வாத்தியார் கிட்டே காட்டி அவா ரெண்டு பேருடை ய ஜாதகங்கள் நன்னா பொருந்தி இருக்கான்னு பாக்கறேன்.ஜாதகங்கள் நன்னா பொருந்தி இருந்து, அந்த பகவான் அனுக்கிரஹம் இருந்தா இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்.இந்தா ராமநாதனோட ஜாதகம்” என்று சொல்லி அவர் கொண்டு வந்து இருந்த ஜாதகத்தைக் கொடுத்தார்.

ஜாதகத்தை அத்திம்பேர் கையில் இருந்து வாங்கிக் கொண்டு “மரகதம்,பீரோலே இருந்து சித்தே மங்களத்தோட ஜாதகத்தை எடுத்துண்டு வறயா” என்று சொன்னதும் மரகதம் உள்ளே போய் மங்களத் தின் ஜாதகத்தை கொண்டு வந்து தன் கணவனிடம் கொடுத்தாள்.

குப்புசாமி “இந்தாங்கோ அத்திம் பேர் மங்களத்தோட ஜாதகம்.நீங்களும் ஜாதகப் பொருத்தம் பாருங்கோ.நானும் எங்க ஆத்து வாத்தியார் கிட்டே ஜாதகப் பொருத்தம் பாக்கறேன்” என்று பவ்யமாக சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனதும் மரகதம் விமலா,ராமசாமி,தன் கணவர் மூனு பேருக்கும் தட்டில் ‘டிப னை’ கொண்டு வந்து கொடுத்தாள்.அவர்கள் ‘டிபனை’ சாப்பிட்டு முடிந்ததும் மூனு பேருக்கும் அவ ள் வழக்கமாக போடும் ‘ஸ்ட்ராங்கான’ ‘காபி’யை ஆவி பறக்க கொண்டு வந்து கொடுத்தாள்.

‘காபி’யை குடித்து முடித்த பிறகு விமலாவும் ராமசமியும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இரு ந்து விட்டு,மூன்று போ¢டமும் சொல்லிக் கொண்டு திருவண்ணாமலைக்கு கிளம்பிப் போனார்கள்.

அவர்கள் போனவுடன் “ஏன்னா,அவா ரெண்டு பேரும் இப்படி ‘திடு’ ‘திடு’ப்புன்னு நம்மாத்து க்கு வந்து ‘ராமநாதன் மங்களத்தே கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப் படறான்னு’ சொல்லிட்டு அவா பையன் ஜாதகத்தே கொடுத்துட்டு,மங்களத்தோட ஜாதகத்தே வாங்கிண்டு போய் இருக்காளே நம்ம ஆத்து வாத்தியார் ஜாதகம் ரெண்டும் நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னா,நாம மங்களத் தோட கல்யாணத்தே ராமநாதனுக்கு பண்ணிக் குடுக்கலாமா. உங்க அபிபிராயம் என்ன” என்று கேட்டாள் மரகதம்.

உடனே குப்புசாமி “எனக்கு இந்த கல்யாண சமாசாரம் பேச்சு ரொம்ப பிடிச்சி இருக்கு.ராமநா தன் நன்னா படிச்சு இருக்கான்.நல்ல ‘பாங்க்’ உத்யோகத்திலே இருக்கான்.பாக்க ரொம்ப நன்னாவும் இருக்கான்.மங்களமும் அவ அபிப்பிராயத்தே நாசூக்கா சொல்லிட்டா.மரகதம்,மங்களத்தே ராமநாதனு க்கு கல்யாணம் பண்ணி குடுக்கறதிலே உனக்கு பூரண சம்மதம் இருக்கா.உனக்கு இந்த சம்மந்தம் பிடிக்கலேன்னா இப்பவே சொல்லு.நான் வேணாம்ன்னு சொல்லிடறேன்” என்று கேட்டு மணைவி யின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

“உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்ன்னா,எனக்கு மட்டும் சம்மதம் இல்லாம இருக்கப் போறதா என்ன.எனக்கும் இந்த் கல்யாணத்லே பூரண சம்மதம் தான்” என்று மரகதம் சொன்னதும்,’ ரூமு’க்குள் இருந்த மங்களம் சந்தோஷப் பட்டாள்.

அடுத்த நாளே குப்புசாமியும் மரகதமும் ரெண்டு பேர் ஜாதகத்தையும் ஆத்து வாத்தியார் கிட்டே காட்டினார்கள்.

ரெண்டு ஜாதகத்தையும் வாங்கிப் பார்த்த வாத்தியார் ஒரு பதினைஞ்சு நிமிஷம் பார்த்து விட்டு “ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்கு.நீங்க இவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணீ வச்சா,அவா ரெண்டு பேரும் ரொம்ப அமோகமா வாழ்ந்து வருவா” என்று சொல்லி ரெண்டு ஜாதகங்ககையும் குப்புசாமியின் கையிலே கொடுத்து விட்டு,தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி, கண் ணாடி கூடுக்குள் போட்டு மூடினார்.

குப்புசாமியும், மரகதமமும் ரெண்டு ஜாதங்ககளையும் வாங்கிக் கொண்டு வாத்தியாருக்குத் தர வேண்டிய தக்ஷனையைக் கொடுத்து விட்டு சந்தோஷமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஒரு வாரம் கழித்து ராமசமியும் குப்புசாமியை ‘டெலிபோனில்’ கூப்பிட்டு “குப்பு,எங்க ஆத்து வாத்தியார் ரெண்டு ஜாதகங்களும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்.உங்க ஆத்து வாத்தியார் என்ன சொன்னார்” என்று கேட்டதும் குப்புசாமி “அத்திம்பேர், எங்க ஆத்து வாத்தியாரும் ரெண்டு ஜாதகங்களும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்.நான் கூடிய சீக்கிரம் எல் லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘டெலிபோனை’ வைத்தார்.

குப்புசாமி ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்தையும்,ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்தையும் விற்றார்.

நிலம் விற்று வந்த பணத்தை எடுத்துக் கொண்டு,மரகதத்தையும்,மங்களத்தையும் திருவண் ண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்,மங்களத்தின் காதுகளுக்கு வைரத்தோடு,மூக்குக்கு வைர மூக்குத்தி,கழுத்துக்கு செயின்,கைகளுக்கு வளையல்கள்,மங்களத்துக்கும், மரகதத்துக்கும் ரெண்டு பட்டு புடவைகள்,’மாட்சிங்க் ப்ளவுஸ்’,தனக்கும் ரகுராமனுக்கும் நல்ல ‘ஷ்ர்ட்டுகள்’ வேஷ்டி கள் எல்லாம் வாங்கிக் கொண்டு,தன் மணைவியையும்,மகளையும் அழைத்துக் கொண்டு தன் கிரா மத்திற்கு வந்து சேர்ந்தார் குப்புசாமி.

விமலாவும் ராமசாமியும் ராமநாதனுக்கு நல்ல கல்யாண ‘டிரஸ்ஸ¤ம்’, மங்களத்துக்கு கூரைப் புடவையும்,தாலியும் வாங்கினார்கள்.ராமசாமி விமலாவுக்கு ரெண்டு பட்டு புடவைகளும் ’மாட்சிங்க் ப்ளவுஸூம்’,வாங்கி விட்டு,தனக்கு ரெண்டு நல்ல ‘ஷர்ட்டும்’ வேஷ்டியும் வாங்கிக் கொண்டார்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *