ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 3,228 
 

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

ஒரு நல்ல முஹ¥ர்த்த நாள் அனறு ராமநாதன் மங்களம் கல்யாணத்தை நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள் குப்புசாமியின் குடும்பமும்,ராமசாமியின் குடும்பமும்.

கல்யாணம் நல்லபடியாய் முடிந்தவுடன்,மங்களத்தை ‘புக்ககத்தில்’ கொண்டு போய் விட்டு விட்டு,ராமசாமி இடமும்,விமலா இடமும் சொல்லிக் கொண்டு குப்புசாமியும்,மரகதமும் அவர்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் மரகதம் ”நீங்க மங்களத்து கல்யாணத்துக்கு ரொம்ப தான் செலவு பண்ணி இருக்கேள்.அவ்வளவு செலவு பண்ணி இருக்க வேணாம்ன்னு எனக்குத் தோணித்து.ஆனா நீங்க என்னே கேக்காம செலவு பண்ணீண்டு இருந்தேள்.செலவை இன்னும் கொஞ்சம் குறைச்சுண்டு வந்து இருக்கலாம்” என்று சொன்னாள்.

உடனே குப்புசாமி “எனக்கும் அப்படித்தான் தோணித்து மரகதம். மங்களத்துக்கு கல்யாணம் பண்ணும் போது தானே நாம செலவு பண்ணப் போறோம்.அப்புறமா வெறுமனே தீபாவளி செலவு ஒன் னு தானே பண்ணப் போறோம்.மங்களம் ‘பிள்ளை உண்டானா’ அவளுடைய ‘வளை காப்பே’ சிக்க னமா பண்ணா போறது.நம்ம கஷ்டம் நம்மோடு இருக்கட்டும்.மங்களத்துக்கு அவா ஆத்துலே தான் ‘பிள்ளை பெற’ செலவைப் பாத்துண்டு வறப் போறா.மங்களத்தை பிரசவத்துக்கு இங்கே அழைச்சுசுண் டு எல்லாம் வர முடியாதே.நம்ம கிராமத்லே மருத்துவ வசதி போறாதே.இதே எல்லாம் யோஜனைப் பண்ணீத் தான் நான் செலவு பண்ணேன்” என்று நிதானமாகச் சொன்னார்.

‘இதற்கு மேலே நாம அவரை கேட்டு கஷ்டப் பட வைக்க வேண்டாம்’ என்று நினைத்து மரகதம் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டாள்.

இத்தனை வருஷங்களாக  தங்களுடன் இருந்து வந்த மங்களம் அவர்கள் வீட்டில் இல்லாமல்  இருப்பது குப்புசாமிக்கும் மரகதத்துக்கும் மிகவும் கஷடமாக இருந்தது.மரகதம் தன் கணவனைப் பார்த்து ”இத்தனை வருஷமா மங்களம் என்னோட இருந்து வந்தா.அவ இல்லாதா இந்த ‘ஆம்’ ரொம்ப சூன்யமா இருக்கு” என்று கண்களில் கண்ணீர் முட்ட முட்ட சொன்னாள்.

உடனே குப்புசாமியும் “ஆமாம் மரகதம்,உனக்கு மட்டுமா அப்படி இருக்கு.எனக்கும் அப்படித் தான் இருக்கு.நம்ம பொண்ணு என்னிக்காவது ஒரு நாள் கல்யாணம் பண்ணிண்டு அவ ‘புக்ககம்’ போய் தானே ஆகணும்.நானும் என் சக்திக்கு மேலே அவ கல்யாணத்துக்கு செலவு பண்ணிட்டேன். இனிமே மங்களம் அவா ஆத்லே சந்தோஷமா இருந்துண்டு வருவா.நாம ரெண்டு பேரும் ரகுராமனை முன்னுக்கு கொண்டு வறதிலே மனசே செலுத்திண்டு வரணும்.மங்களத்தே பத்தி கவலைப் படாம இருந்து வரணும்.அவன் சமையல் வேலையை நன்னா கத்துண்டு முன்னுக்கு வந்து,வந்து நம்ப ரெண் டு பேரையும்,கடைசி காலம் வரை வச்சுண்டு காப்பாத்தணும்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் குப்புசாமி “மரகதம்,நான் ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்தையும்,ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்தையும் வித்து தான் மங்களதோட கல்யாணத்தை கல்யாணத்தே பண்ணினேன்னு உனக்கு நன்னா தொ¢யும்.இப்போ என் கையிலே இருக்கிறது வெறுமனே ஒரு ஏக்கர் நஞ்சை நிலமும், ஒரு ஏக்கர் புஞ்சை நிலமும் தான்.ரகுராமன் காலை ஊனிண்டு வர வறைக்கும் இதே வச்சுண்டு தான் வாழ்ந்துண்டு வரணும்” என்று சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டார்.

மங்களம் தன் ‘புக்ககத்தில்’ சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.

வழக்கம் போல அன்று ‘ஹிண்டு’ பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்தார் ராமசாமி.அன்றைய பேப்பரில் “கிராஜுவேட்களும்,’ஹைடெந்த்’மார்க் வாங்கி இருக்கும் ஆண்களும்,பெண்களும் ‘க்லார்க்’  வேலைக்கு மணு செய்யலாம்” என்று திருவண்ணாமலை மின்சார வாரியம் ஒரு விளம்பரம் கொடுத்து இருந்தது.அதைப் படித்த ராமசாமி மங்களத்தைக் கூப்பிட்டு “மங்களம்,நீ ‘டென்த்லே’ 90% மார்க் வாங்கி இருக்கே இல்லே.நீ இந்த வேலைக்கு இன்னைக்கே ஒரு ‘அப்லிகேஷன’ அணுப்பேன்” என்று சொன்னதும் ராமநாதனும்,விமலாவும் ராமசாமி சொன்ன விஷயத்தே அன்றைய ‘ஹிண்டு ‘பேப்பரில் படித்தார்கள்.

உடனே இருவரும் மங்களத்தை அந்த வேலைக்கு ஒரு ‘அப்லிகேஷன்’ போடச் சொன்னார்கள். மங்களமும் அந்த விளம்பரத்தை படித்து விட்டு தன் கணவன் உதவியுடன் அந்த வேலைக்கு ஒரு ‘அப்லிகேஷன்’ போட்டாள்.

‘நாம பத்தாவது ‘பாஸ்’ பண்ணீ ஆறு வருஷத்துக்கு மேலே ஆறது.அந்த பரிக்ஷக்கு போனா, அவா குடுக்கற கணக்கை எல்லாம் சரியாப் போடணுமே’ என்கிற கவலைப் வந்து மங்களம் அன்றைய இரவு தன் கணவனிடம் தன் சந்தேகத்தை சொல்லி “நாம இந்த ஞாயித்துக் கிழமை என் கிராமத்துக்கு ப் போய், நான் படிச்ச பத்தாவது கணக்கு புஸ்தகத்தையும்,நான் போட்டு பழகின நோட் புக்கையும் எடுத்துண்டு வரலாமா,ப்ளீஸ்.நான் திடீர்ன்னு காத்தாலே இதே சொன்னா,அம்மா அப்பாவும் ‘இவளு க்கு அவ அம்மா,அப்பா, தம்பி ஆசை வந்து இருக்கு,அதான் ஏதோ காரணம் சொல்றான்னு நினைச்சு க்குவா.நீங்க கொஞ்சம்..” என்று பயந்துக் கொண்டே சொன்னாள்
“மங்களம்,நான் என் அப்பா அம்மா கிட்டே நீ சொன்ன விஷயத்தே சொல்லிட்டு உன்னே உங் காத்துக்கு அழைச்சுண்டு போறேன்.இப்ப நீ நிம்மதியா தூங்கு”என்று சொன்னதும் மங்களம் ராமநா தன் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ உங்களுக்கு” என்று சொன்னாள் மங்களம்.

அடுத்த நாள் காலையிலே ராமநாதன் அம்மா கொடுத்த காபியைக் குடித்து விட்டு,தன் பெற்றோர்களிடம் மங்களம் ராத்திரி சொன்ன சமாசாரத்தை சொல்லி “அம்மா,அப்பா நான் மங்களத்தே அழைச்சுண்டு கிராமத்துக்கு அவா ஆத்துக்குப் போய்,அவ படிச்ச பத்தாவது கணக்கு புஸ்தகத்தை யும்,அவ கணக்கு போட்டு பழகின நோட் புஸ்தகத்தையும் கொண்டு வந்தா,இந்த ‘க்லார்க்’ பரி¨க்ஷக் கு போக ரொம்ப உதவியா இருக்கும்” என்று சொன்னதும் ராமசாமி “ஆமாண்டா,அவ போட்டு பழகின நோட் புக்கும்,கணக்கு புஸ்தகமும் அவ கிட்ட இருந்தா,அவ அந்த ‘ஆபீஸ்’ லே இருந்து ‘லெட்டர்’ வர வரைக்கும் அவ கணக்குகளை போட்டு பழகி வர சௌகரியமா இருக்கும்” என்று சொன்னார்.
விமலாவும்”அவ சொல்றது ரொம்ப சரி.நீ இந்த ஞாயித்துக் கிழமையே மங்களத்தே அழைச்சு ண்டு,அவா ஆத்துக்குப் போய் அவளுக்கு வேண்டிய எல்லா புஸ்தங்களையும்  எடுத்துண்டு வா” என்று சொன்னாள்

அந்த ஞாயிற்றுக் கிழமை ராமநாதன் மங்களத்தை அழைத்துக் கொண்டு மங்களம் இருந்த கிராமத்துக்குப் போனான்.

மங்களத்தையும்,மாப்பிள்ளையையும் ஒன்னா பார்த்த மரகதத்துக்கு ஆச்சரியமாக இருந்தது.

உடனே அவள் “வாங்கோ,வாங்கோ”என்று வீட்டுக்குள்ளே வரவேற்றார்கள். அப்போ து தான் வெளியே போய் இருந்த குப்புசாமி வீட்டுக்கு வந்தார்.வீட்டில் மாப்பிள்ளையும்,தன் பெண்ணும் உட் கார்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப் பட்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு ”என்ன சமாசாரம்.இப்படி திடீர்ன்னு ரெண்டு பேரும் வந்து இருக்கேளே.உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் சௌக்கியமா இருந்துண்டு வறாளா” என்று ஒரு வித பயத்துடன் கேட்டார்.

அப்பா முகத்திலே பயத்தைப் பார்த்ததும் ”என் மாமனார் ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘ஹிண்டு’ பேப்பர்லே ஒரு விளம்பரம் பாத்தார்.அந்த விளம்பரத்த்லே திருவண்ணாமலை மின்சார வாரியத்த்லே ‘க்லார்க்’ வேலைக்கு, கிராஜுவேட் படித்தவர்களும்,பத்தாவதிலே ‘ஹை பஸ்ட் க்லாஸ் மார்க்’ வாங்கி னவாளும் மனு போடலாம்ன்னு ஒரு அறிவிப்பு வந்து இருந்தது.எம் மாமனார் அந்த வேலைக்கு என் னை ‘அப்ளை’பண்ணச் சொன்னார்.நான் ‘இவரை’ வச்சுண்டு அந்த வேலைக்கு ‘அப்ளை’ பண்ணி இருக்கேன்.அந்த பரி¨க்ஷயிலே அவா கேக்கற கணக்குகளை எல்லாம் நான் சரியா போட்டா எனக்கு அந்த மின்சார வாரியத்த்லே வேலை கிடைக்க ‘சான்ஸ்’ இருக்கு.அதான் நான் நம்பாத்துக்கு வந்து, நான் பத்தாவது படிச்ச கணக்கு புஸ்தகத்தையும்,கணக்குப் போட்டு பழகின நோட் புஸ்தகத்தையும் எடுத்துண்டு போலாம்ன்னு,என் மாமனார், மாமியார் ‘பர்மிஷனோடு’ தான் வந்து இருக்கேன்.அப்பா, நீ பயப்பட ஒரு காரணமும் இல்லே” என்று சொன்ன பிற்பாடு தான் குப்புசாமிக்கும், மரகதத்துக்கும் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
அந்த நிம்மதி ஒரு நிமிஷம் கூட நிலைக்கவில்லை ரெண்டு பேருக்கும்.

உடனே குப்புசாமி “எங்களே மன்னிச்சிடும்மா.இந்த ரகுராமனுக்கு இந்த புஸ்தகங்கள் எல்லாம் தேவைப் படாதே.நீ தான் ‘புக்ககம்’ போய் சந்தோஷமா இருந்து வறேன்னு நினைச்சு,நானும் அம்மா வும் எல்லா புஸ்தகங்களையும் பழைய பேப்பர் காரன் கிட்டே ரெண்டு நாளைக்கு முன்னாடித் தாம்மா போட்டோம்” என்று கண்களில் கண்ணீர் முட்ட முட்டச் சொன்னார்.

மரகதமும் தன் கைகளை பிசைந்துக் கொண்டு “ஆமாம் மங்களம்,எங்களே மன்னிச்சிடும்மா” என்று சொன்னதும் மங்களத்திற்கு மிகவு ம் ஏமாற்றமாய் போய் விட்டது.
நிலமையை சாளிக்க ராமநாதன் “போனா போகட்டும்.நீங்க ரெண்டு பேரும் இதுக்காக கவலைப் பட வேணாம்.நான் மங்களத்துக்கு புது கணக்கு புஸ்தகத்தையும்,கணக்கு ‘கைடை’யும் வாங்கித் தறே ன்.அவ அவைகளை உபயோகப் படுத்தி கணக்கை பழகி வரட்டும்” என்று சொன்னதும் ”உங்களுக்கு ரொம்ப நன்றி.நானும் மரகதமும் இப்படி அவசரப் பட்டு எல்லா புஸ்தகங்க¨ளையும் பழைய பேப்பர்கா ரன் கிட்டே போட்டுட்டமேன்னு,ரொம்ப கவலைப் பட்டோம்” என்று பயத்துடன் சொன்னார்.

மரகதம் ரெண்டு பேருக்கும் சூடா ‘ஸ்ட்றாங்கா’ ‘காபி’ போட்டுக் கொடுத்தாள்.காபியைக் குடித்த ராமநாதன் “காபி ரொம்ப நன்னா இருந்தது மாமி” என்று சொல்லி மாமியாரை புகழ்ந்தான்.

குப்புசாமி “ரெண்டு பேரும் முதல் தடவையா கல்யாணம் ஆன் பிற்பாடு எங்காத்துக்கு வந்து இருக்கேள்.மத்தியானம் சாப்பிட்டுட்டு போகலாமே” என்று சொன்னதும் ராமநாதன் “சரி,நாங்க மத்தி யானம் சாப்பீட்டுப் போறோம்” என்று சொன்னதும் மங்களம் உடனே ஓடிப் போய் சமையல் வேலைக்கு உதவி பண்ண அம்மாவுடன் சமையல் கட்டுக்குப் போனாள்.

குப்புசாமி மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டு இருந்தார்.சாப்பாடு தயார் ஆனதும் மரகதம் மாப்பிள்ளை,பொண்ணு,குப்புசாமி மூனு பேருக்கும் வாழை இலையைப் போட்டு சமையலைப் பறி மாறினாள்.ராமநாதனும்,மங்களமும் சாப்பிட்டு விட்டு,குப்புசாமி இடமும்,மரகதம் இடமும் சொல்லிக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள்.
அடுத்த நாளே ராமநாதன் மங்களத்தை அழைத்துக் கொண்டு ஒரு ‘புக் ஷாப்பு’க்குப் போய், பத்தாவது கணக்கு புஸ்தகத்தையும்,அதற்கான ரெண்டு ‘கைடை’யும் வாங்கிக் கொடுத்தான்.மங்களம் அந்த கணக்கு புஸ்தகத்தில் இருந்த கணக்குகளை எல்லாம் அந்த ‘கைடை’ வைத்துக் கொண்டு போட்டு பழகிக் கொண்டு வந்தாள்.

ஒரு மாதம் போனதும் அந்த மின்சார வாரியத்தில் இருந்து,மங்களத்தை ‘க்லார்க்’ பரி¨க்ஷக்கு வரச் சொல்லி ஒரு ‘லெட்டர்’ அனுப்பி இருந்தார்கள்.

குறிப்பிட்ட அன்று ராமசமியும்,விமலாவும் சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு மங்களத் தை ராமநாதன் கூட அனுப்பி வைத்தார்கள்.ராமநாதன் மங்களத்தை மின்சார வாரியத்தில் விட்டு விட்டு அவளைப் பார்த்து “மங்களம்,நீ அவா குடுக்கற பரி¨க்ஷயை நன்னா எழுது.கூட எழுதுறவா ‘கிராஜுவேட்டாச்சே’ன்னு பயப் படாதே.நீ பரி¨க்ஷயை ரொம்ப நன்னா எழுதினா உனக்கு இந்த வேலை நிச்சியமா கிடைக்கும்.’பெஸ்ட் ஆப் லக்’ “என்று சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்து சொன்னான்.

மங்களம் வீட்டுக்கு வந்து தன் மாமனார் மாமியார் இடம் “அம்மா,அப்பா, நான் அவா குடுத்த பரி¨க்ஷயை ரொம்ப நன்னா எழுதி இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.சாயங்காலம் வீட்டுக்கு வந்த கணவனிடமும் மங்களம்” நான் அவா குடுத்த பரி¨க்ஷயை ரொம்ப நன்னா எழுதி இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.
ரெண்டு மாசம் போனதும் அந்த மின்சார வாரியத்தில் இருந்து  மங்களத்துக்கு ஒரு ‘ரிஜிஸ்தர்’ ‘லெட்டர்’ வந்து இருந்தது. கை எழுத்துப் போட்டு விட்டு அந்த ‘லெட்டரை’ பிரித்து படித்தாள்.அவ ளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அவள் உடனே “அம்மா,அப்பா,நான் அவா வச்ச பரி¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.அவா எனக்கு அவா ‘ஆபிஸ்லே ஒரு ‘க்லார்க்’ வேலை குடுத்து இருக்கா” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.

ராமசாமிக்கும் விமலாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.

உடனே ராமசாமி “பரவாயில்லையே, நீ நிறைய ‘கிராஜுவேட்’ பசங்களோட அந்த பரி¨க்ஷயை எழுதி இருக்கே.நீ வெறும் பத்தாவது படிச்சு இருந்தும்,அந்த பரி¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணி வேலை யை வாங்கி இருக்கயே.நீ உண்மையிலே ரொம்ப ‘இன்டெலிஜெண்ட்டா’ தான் இருக்கணும்”என்று சொல்லி மங்களத்தை புகழ்ந்தார்.விமலாவும் “ஆமாம்,‘இன்டெலிஜெண்ட்டா’ இல்லாட்டா,அவா மங்க ளத்துக்கு வேலே குடுத்து இருக்க மாட்டா”என்று அவள் பங்குக்கு மாட்டுப் பெண்ணைப் புகழந்தாள்.

மங்களத்துக்கு தன் மாமனாரும்,மாமியாரும் புகழந்தது மிகவும் பிடித்து இருந்தது.

உடனே மங்களம் மாமனார் மாமியாரைப் பார்த்து “உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப “தாங்க்ஸ்”” என்று சொன்னாள்.

‘எப்படா சாயங்காலம் வரும்.அவர் கிட்டே இந்த சந்தோஷ சமாரத்தே சொல்லப் போறோம்’ என்று காத்துக் கொண்டு இருந்தாள் மங்களம்.

ராமநாதன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ராமசமியும் விமலாவும் முந்திக் கொண்டு “ராம நாதா,நம்ப மங்களம் அந்த மின்சார வாரியம் வச்ச பரிஷையை ‘பாஸ்’ பண்ணி இருக்கா.அவளுக்கு ‘க்லார்க்’ வேலைலே சேர இன்னைக்கு ஒரு ‘ரிஜிஸ்தர் ‘லெட்டர் வந்து இருக்கு” என்று கோரஸாகச் சொன்னார்கள்.

ராமநாதனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.உடனே அவன் “’கங்கிராஜுலேஷன்ஸ்’ மங்களம். நிறைய ‘கிராஜுவேட்ஸ்’ பரி¨க்ஷ எழுதி இருந்தும்,அவர்களுக்கு வேலை குடுக்காம,உனக்கு வேலை குடுத்து இருக்காளே” என்று சொல்லி மங்களத்தின் கைகளைப் பிடித்து குலுக்கினான்.

வாத்தியார் பார்த்து சொன்ன ஒரு நல்ல நாளில் மங்களம் அந்த மின்சார வாரியத்தில் ‘க்லார்க்’ வேலைக்கு சேர்ந்தாள்.அந்த ஞாயித்துக் கிழமையே ராமநாதனும்,மங்களமும் குப்புசாமி இருந்து வந்த கிராமத்திற்குப் போய் இந்த சந்தோஷ சமாசாரத்தை சொல்லி விட்டு,அவர்கள் வீட்டில் மத்தியானம் சாப்பிட்டு விட்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அடுத்த வருஷமே மங்களம் ‘பிள்ளை’ உண்டானாள்

இந்த சந்தோஷ சமாசாரத்தை ராமசாமியும்,விமலாவும் குப்புசாமிக்கும் மரகத்துக்கும் ‘டெலி போனில்’ தொ¢வித்தார்கள்.

விஷயம் கேள்விப் பட்டு குப்புசாமியும்,மரகதமும் மங்களத்தை தங்களுடன் ஒரு ஞாயிற்று கிழமை அழைத்து போய்,அவளுக்கு வாய்க்கு பிடித்த ‘பக்ஷணத்தை’ பண்ணி கொடுத்து,சாப்பாடு போட்டு மறுபடியும் திருவண்ணாமலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

மங்களத்தை கிராமத்துக்கு அழைத்து வந்து, அவளுக்கு ‘எட்டாவது மாசம்’ ‘வளைகாப்பு’ விழாவை செய்தார்கள் குப்புசாமியும் மரகதமும்.அந்த விழாவுக்கு ராமசமியும்,விமலாவும், ராமநாதனும் வந்து கலந்துக் கொண்டார்கள்.

ராமசமியும் விமலாவும் ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் ஆத்து வாத்தியாரை வைத்து ‘சீமந்த’ விழாவைக் கொண்டாடினார்கள்.குப்புசாமியும் மரகதமும் அதில் கலந்துக் கொண்டு பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஆசீர்வாதம் பண்ணி விட்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

மங்களத்துக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இந்த சந்தோஷ் சமாரத்தை ராமசாமி குப்புசாமிக்கு ‘டெலிபோன்’ மூலம் தொ¢வித்தார்.

விஷயம் கேள்விப் பட்டு,குப்புசாமியும் மரகதமும் பத்தாவது நாள் ‘தொட்டில் போடும்’ விழா வுக்கும்,அடுத்த நாள் நடந்த ‘புண்யாசவன’ விழாவுக்கும்,குழந்தைக்கு  ‘சுதா’ என்கிற ‘நாமகரண’ விழாவுக்கும் இருந்து விட்டு சாப்பிட்டு விட்டு,மாப்பிள்ளையையும்,பெண்ணையும்,பேத்தியையும் ஆசீர்வாதம் பண்ணி விட்டு,ராமசாமி இடமும்,விமலா இடமும் சொல்லிக் கொண்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

குப்புசாமியின் கிராமத்தில் அடுத்து அடுத்து ரெண்டு வருஷமா மழையே பெய்யவில்லை. வீட்டு செலவு பணம் போதாததால் அவர் தன் மணைவியைப் பார்த்து “மரகதம் ரெண்டு வருஷமா மழையே பெய்யலே.விவசாயம் பண்ணாம நான் இருந்து வந்துண்டு இருக்கேன்.கையிலெ இருக்கிற பணம் எல்லாம் தீந்துண்டு வறது.அதனால்,நான் அந்த ஒரு புஞ்சை ஏக்கரை விட்டுட்டு, அதிலே வந்த பணத்தை வச்சுண்டு தான் ஆத்து செலவை பண்ணி வரணும்.நான் அந்த ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்தை விக்க ஏற்படு பண்ணப் போறேன்” என்று வருத்ததுடன் சொன்னார்.

“நானும் ஆத்து செலவை கவனிச்சுண்டு தானே வறேன்.நீங்கோ என்ன பண்ணுவேள்.நீங்கோ சொன்னபடியே.பண்ணுங்கோ.பாக்கலாம் இந்த வருஷமாவது மழை பெஞ்சு,நம்ம நஞ்சை நிலத்திலே நெல் சாகுபடி ஆறதான்னு பாப்போம்” என்று சொல்லி சுவாமி படத்தைப் பார்த்து “அம்மா தாயே, நீ தான் அனுக்கிரஹம் பண்ணி,ரகுராமன் காலை ஊனி வர வறைக்கும் எங்களுக்கு கஷ்டம் இல்லாம வர கண்ணே தொறக்கணும்” என்று சொல்லி தன் கன்னங்களில் போட்டுக் கொண்டாள்.

குப்புசாமி சொன்னது போல ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்தை வந்த விலைக்கு விற்று விட்டு வீட்டு செலவை கவனித்து வந்தார்.ராகுராமன் மாசத்தில் பத்து நாள் பாலு மாமா வீட்டுக்குப் போய்,சமையல் வேலை பண்ணி விட்டு,மீதி இருபது நாட்கள் வீட்டிலேயே இருந்து வந்தான்.

சுதாவுக்கு மூனு வயது ஆனதும் ராமநாதனும்,மங்களமும் அவளை பக்கத்திலே இருந்து ஒரு ‘நர்ஸா¢’ பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார்கள்.ராமசாமி தினமும் பேத்தியை ஒன்பது மணி க்கு அந்த ‘நர்ஸா¢ ‘பளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு விட்டு விட்டு,வீட்டுக்கு வேண்டிய காய் கறீகளை வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.மறுபடியும் பன்னண்டு மணிக்கு அந்த ‘நர்ஸா¢’ பள்ளி கூடத்திற்குப் போய் சுதாவை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

“எல்லா தாத்தாக்களும் பண்ணி வர வேலைக்கு இப்போ எனக்கும் வந்துட்டது” என்று சொன் னதும் விமலா அவர் வாயை கிளற நினைத்து “நீங்க இப்படி பண்ணி வருவதை பிடிச்சி பண்ணி வறே ளா,இல்லே பிடிக்காம பண்ணீ வறேளா” என்று கேட்டதும்”விமலா,இதிலே பிடிக்கறதுக்கும், பிடிக்காம இருக்கிறதுக்கும் என்ன இருக்கு.எல்லா தாத்தாக்களும் இந்த வேலையே தானே,காலம் காலமா பண் ணிண்டு வறா.நான் மட்டும் இதுக்கு விதி விலக்கா என்ன” என்று சொன்னாரே ஒழிய தான் கேட்ட  கேள்விக்கு அவர் சரியான பதில் சொன்னதாக விமலாவுக்கு தோன்றவில்லை.’நாம இதுக்கு மேலே  கேட்டு அவரை கஷ்டப் படுத்த வேண்டாம்’ என்று நினைத்து விமலா அதற்கு மேலே ஒன்றும் கேட் காமல் சமையல் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.

அவள் உள் மனம் மட்டும் ‘அவருக்கு காத்தாலே ஒரு வரி விடாம அந்த ஹிண்டு பேப்பரை முழுக்கப் படிக்கணும்.அதுக்கு எந்த ஒரு வேலையும் தடையா வரக் கூடாது.சுதாவை பள்ளீக் கூடம் அழைச்சுண்டு போறது,அப்புறமா பன்னண்டு மணிக்குப் போய் அழைச்சுண்டு வறது எல்லாம் அவர் பேப்பர் படிக்கறதுக்கு  ஒரு தடை தானே.அதான் அவர் அப்படி சொல்லி இருக்கார்’ என்று யூகித்துக் கொண்டாள் விமலா.

வீட்டில் சும்மா இருந்த நேரங்களில் விமலா தன் கணவனைப் பாத்து “ஏன்னா,நமக்கு ராம நாதனுக்கு அப்புறமா ஒரு குழந்தைப் பொறக்கணும்ம்ன்னு எல்லா தெய்வத்தையும் வேண்டி வந்தோம் நிறைய பூஜைகள் எல்லாம் பண்ணி வந்தோம்.உங்க அப்பாவும் அம்மாவும் நிறைய சுவமிகளை எல் லாம் வேண்டி வந்தா.நானும் நிறைய விரதங்கள் இருந்து வந்தேன்.ஆனா அந்த பகவான் கண்ணேத் தொறக்கலே.ராமநாதனுக்கு அப்புறமா நமக்கு குழந்தையே பொறக்கலே.இப்போ ராமநாதனுக் கு சுதா பொறந்து பேருக்கு நாலாவது வருஷம் வறப் போறது.அவனுக்கு இன்னும் ஒரு குழந்தை பொறக்கலை யே இது வரைக்கும்.அவா ரெண்டு பேரும் ‘நமக்கு இந்த ஒரு குழந்தையே போறும்ன்னு’ இருந்து வறாளா.எனக்கு என்னவோ அவாளுக்கு இன்னும் ஒரு குழந்தை பொறக்கனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.நீங்க இதெ பத்தி யோஜனைப் பண்ணேளா.இல்லே, நான் மட்டும் தான் வெறுமனெ யோஜ னைப் பண்ணீண்டு இருக்கேனா” என்று கேட்டு தன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.

“ஏன் விமலா அப்படிக் கேக்கறே.நான் அதைப் பத்தி யோஜனை பண்ணாம இருப்பேனா. எனக்கு மட்டும் அந்த கவலை இல்லாம இருக்குமா.நம்ப ராமநாதனுக்கு ஒரு பொண்ணு பொறந்துட் டா.நம்ப ‘வம்ச விருத்தி’ ஆக அவனுக்கு ஒரு பிள்ளை குழந்தை பொறக்கணும்ன்னு எனக்கும் ஆசை இருக்காதா.சொல்லு பாக்கலாம்.அதுக்கு என்ன,நீ ஒரு பொம்மனாட்டி.என் கிட்டே கேட்டுட்டே. நான் உன் கிட்டே கேக்காம இருக்கேன். அதான் வித்தியாசம்” என்று விரக்தியுடன் சொன்னார்.

கொஞ்ச நேரம் கழித்து “நீ கவலைப் படாதே விமலா.இந்த ஞாயித்துக் கிழமை நான் ராமநாத னை தனியா அழைச்சுண்டு போய்,உன் ஆசையையும்,என் ஆசையையும் நாசூக்கா சொல்றேன். அவன் புரிஞ்சுண்டு,நம்ம ரெண்டு பேருடைய ஆசையையும் பூர்த்தி பண்ணட்டுமே” என்று சொன் னதும் விமலா கொஞ்சம் நிம்மதி அடைந்தவளாய் “நீங்க சொல்றது தான் சரியான வழி.நீங்க சொன் னா ராமநாதன் நிச்சியமா புரிஞ்சுப்பான்” என்று சந்தோஷத்துடன் சொல்லி விட்டு சமையல் வேலை யை கவனிக்கப் போனாள்.

சொன்னது போல ராமசாமி தன் பிள்ளை ராமநாதனை சாயங்கால ‘வாக்’ போய் வர’சாக்கில், தன் ஆசையை சொன்னார்.

உடனே “எனக்கும் மங்களத்துக்கும்,இந்த ஆசை இருக்குப்பா.எங்களுக்கு நிச்சியமா இன்னொ ரு குழந்தை பொறக்கும்ன்னு நம்பிக்கை இருக்குப்பா” என்று சொன்னதும் ராமசாமிக்கு நிம்மதியாக இருந்தது.அன்று இரவே ராமசாமி விமலாவிடம் அவர் ராமநாதன் இடம் சொன்னதையும்,அதற்கு ராமநாதன் சொன்ன பதிலையும் சொன்னார்.விலமா மிகவும் சந்தோஷப் பட்டு “நான் என்ன பண்றது ன்னு தொ¢யாம வெறுமனே புலம்பிண்டு இருந்தேன்.ஆனா நீங்க அதை நாசூக்கா,நமம பையன் கிட் டேயே சொல்லி ஒரு நல்ல பதிலை வாங்கிண்டு வந்து இருக்கேள்.இது தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்” என்று சொல்லி கணவனை புகழ்ந்தாள்.

உடனே “அட அசடே.யார் சொன்னா என்ன.எப்படியோ அந்த பகவான் அனுகிரஹத்தாலே, ராமநாதனுக்கு சீக்கீரமா ஒரு பிள்ளை குழந்தை பொறக்கணும்.அப்படி பொறந்தா தான் நம்ம ‘வம்சம் விருத்தி’ ஆகும்” என்று சொன்னார்.

”நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்.அப்படி பொறந்தாத் தான் நம்ம வம்சம் விருத்தி ஆகும்” என்று சொல்லி தன் கண்களை மூடிக் கொண்டு பகவானை வேண்டிக் கொண்டு வந்தாள் விமலா.

அன்று இரவே ராமநாதன் மங்களத்திடம் தன் அப்பா படும் ஆசையை சொன்னான்.உடனே “நம்ப ரெண்டு பேருக்கும் அந்த ஆசை இருக்கே.’ஆஸ்தி’க்கும்,’வம்ச விருத்தி’க்கும் ஒரு பிள்ளை வேணும்ன்னு எல்லா பிள்ளையை பெத்த அம்மா அப்பா ஆசை படுவது ரொம்ப சகஜம்.எங்க அம்மா அப்பாவும் நான் பொறந்த பிறகு,தங்களுக்கு ஒரு பிள்ளை குழந்தை வேணும்ன்னு நிறைய சுவாமியே வேண்டிண்டு வந்ததை நான் பாத்து இருக்கேன்.நான் தினமும் அந்த அம்பாளை நன்னா வேண்டி ண்டு வறேன்.நீங்களும் நன்னா வேண்டிண்டு வாங்கோ.நமக்கும் ஒரு பிள்ளை பொறக்க ‘ப்ராப்தம்’ இருக்கணும்” என்று சொல்லி மங்களம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

உடனே ராமநாதன் “மங்களம்,நீ சொல்றதுக்கு முன்னாடிலே இருந்தே தினமும் அந்த பகவா னை வேண்டிண்டு தான் இருக்கேன்.நீ சொல்றா மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ‘ப்ராப்தம்’ இருக்கணும்” என்று சொல்லி விட்டு பகவானை மனதில் வேண்டிக் கொண்டான்.

‘ஒரு பிள்ளை குழந்தை தான் அந்தி காலத்திலே அப்பா அம்மாவை காப்பாத்திண் வருவான். அந்த பிள்ளையாலே தான் அவர்கள் ‘வம்சம்’ விருத்தி ஆகும் என்கிற ஒரு எண்ணம் இருந்து வந்தது அந்த காலத்தில்.

அந்த காலத்தில் எல்லா அம்மா அப்பாவும் ‘ஒரு’பிள்ளை குழந்தை வேண்டும்’ என்று ஏங்கி வந்துக் கொண்டு இருந்தது ரொம்ப சகஜம்.

இதற்கு ராமநாதனும், மங்களமும் விதி விலக்கு இல்லையே!.

ரெண்டு வருஷம் ஆனதும் மங்களம் மறுபடியும் ‘பிள்ளை உண்டானாள்’.

ராமசாமிக்கும் விமலாவுக்கும் மிகவும் சந்தோஷம்.விமலா தனியாக இருந்து வந்த போது தன் கணவனிடம் “நம்ம பிரார்த்தணை வீண் போகலே அந்த அம்பாள் கண்ணேத் தோறந்துட்டா.அவ ‘அனுக்கிரஹத்தாலே’ பொறக்கறது ஒரு பிள்ளைக் குழந்தையா இருக்கணும்” என்று சொல்லி சந்தோ ஷப் பட்டாள்.

ராமசாமி இந்த சந்தோஷ சமாரத்தை குப்புசாமிக்கு டெலிபோனில் தொ¢வித்தார்.உடனே குப்புசாமியும் மரகதமும் திருவண்ணாமலைக்கு வந்து மங்களத்தைப் பார்த்து “சீக்கிரமா ஒரு பிள்ளை குழந்தையை பெத்துக் குடுத்து, உங்க ஆத்துக்காரரையும்,மாமனாரையும், மாமனாரையும் சந்தோஷப் படுத்து மங்களம்” என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணீனார்கள்.

அன்று மத்தியானம் சாப்பிட்டு விட்டு குப்புசாமியும்,மரகதமும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

அந்த கடவுள் நாம் வேண்டி வருவதை எல்லாம் கொடுத்து விடுகிறாறா என்ன!.

அவரவர் ‘விதிப்படி’த் தானே எல்லாம் நடக்கிறது.

பிரசவ வலி எடுத்ததும் ராமநாதன் மங்களத்தை பக்கத்திலே இருந்த ஒரு ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தான்.ராமசாமியும்,விமலாவும் ‘நர்ஸிங்க் ஹோமில்’ இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு ‘பொறக்கப் போற குழந்தை ஒரு பிள்ளைக் குழந்தையா இருக்கணுமே பகவானே’ என்று பிராத்தனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.
மங்களத்தை ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்து ஆறு மணி நேரம் ஆனதும் ‘லேபர் வார்ட்டில்’ இரு ந்து வெளீயே வந்த ஒரு நர்ஸ் “அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்து இருக்கு.நீங்க இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு அவங்களையும்,குழந்தையையும் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு ‘கிடு’, ‘கிடு’,என்று ‘லேபர் வார்ட்ட்க்குள்’ போய் விட்டாள்.
விமலாவும்,ராமசாமியும், ராமநாதனும் ‘இதுவும் ஒரு பெண் குழந்தையா.ஒரு ஆண் குழந்தை பொறக்க வேணும்ன்னு ஆசைப் பட்டோமே.அது நடக்கலையே ’என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்கள்.

‘லேபர் வார்ட்டில்’ பிரசவம் ஆனவுடன் பிறந்து இருப்பது ஒரு பெண் குழந்தை என்று தொ¢ந் ததும் மங்களம் ‘என் மாமனாரும்.மாமியாரும்,ஆத்துக்காரரும் ‘வம்ச விருத்தி’க்கு ஒரு ஆண் குழந்தை வேணுன்னு ரொம்ப ஆசை பட்டாளே.ஆனா இப்ப பொறந்து இருக்கும் குழந்தையும்  ஒரு பெண் குழந்தையா இருக்கே.அவா ஆசையை என்னால் பூர்த்தி பண்ண முடியலையே.நான் என்ன பண்ண ட்டும்.பிள்ளை குழந்தை பொறக்கறதும்,பெண் குழந்தை பொறக்கறதும் நம்ம கையிலா இருக்கு. பகவான் தானே அதே நிர்ணயிக்கறார்’ என்று நினைத்து, மங்களம் தன் மனதில் அழுதுக் கொண்டு இருந்தாள்.

ரெண்டு நாள் கழித்து ராமநாதன் ‘நர்ஸிங்க் ஹோமில்’ இருந்து மங்களத்தையும்,குழந்தையை  வீட்டுக்கு அழைத்து வந்தான்.

மங்ககம் குழந்தையுடன் வீட்டுக்கு வந்ததும் ராமசாமி குப்புசாமிக்கு ‘டெலிபோன்’ செய்து விஷயத்தை சொன்னார்.விஷயம் கேள்விப் பட்டு குப்புசாமியும்,மரகதமும் திருவண்ணாமலைக்கு வந்து மங்களத்துக்குப் பிறந்து இருந்த குழந்தையைப் பார்த்தார்கள்.

அவர்கள் மனதிலும் ‘இந்த குழந்தையும் ஒரு பொண் குழந்தையா பொறந்து இருக்கே.ஒரு ஆண் குழந்தையா பொறந்து இருக்கக் கூடாதா.அவா சம்மந்தி ‘வம்சம் விருத்தி’யாக மங்களத்துக்கு ஒரு பிள்ளை குழந்தை பொறந்து இருக்கணுமே’ என்கிற எண்ணம் தொன்றியது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *