(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தலைக்கும் வாலுக்குமோ, ராகுவுக்கும் கேது வுக்குமோ பரஸ்பர விரோதம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது ஹால்தார் குடுப்பத்துச் சங்கதியும். புராதனமான அந்தக் குடும்பம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. பாகம் பிரித்துக்கொண்டு, தங்கள் பெரிய வீட்டுக்கு நடுவே ஒரு சுவர் எழுப்பீக் கொண்டார்கள்; முகாவலோகனம் இல்லை.
நவகோபாலனுடைய பிள்ளை நளினனும், நனீ கோபாலன் மகன் நந்தனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள்; ஒரே வயசு; ஒரே பள்ளிக்கூடத்தில் படிப் பவர்கள்; குடும்பத் தகராறு விஷயத்திலும் சரி, போட்டி பொறாமையிலும் சரி, இரண்டுபேரும் ஒருவருக் கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
நளினனுடைய தந்தை முரட்டு ஆசாமி. பிள்ளைக்கு மூச்சுவிடக்கூட அவகாசம் தரமாட்டான்; பையன் சதா படித்துக்கொண்டே இருக்கவேண்டும்; வீளையாடுவது, சாப்பிடுவது, நல்ல ஆடை உடுத்துவது இவையெல்லாம் முக்கியமல்ல; பாட புஸ்தகமும் கையுமாகப் பையன் கிடக்கவேண்டும்.
நந்தனுடைய தகப்பனோ இந்த விஷயத்தில் மிகவும் தாராள மனசுள்ளவன். தாய் ஒழுங்காக ஆடை உடுத்து அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவாள். மத்தி யான்னம் சிற்றுண்டிக்கும் ஒரு மூன்றணாக் கொடுப்பாள்.
நந்தன் வறுதத பொரி, ஐஸ் கிரீம், பம்பரம், கோலிக்- குண்டு இவைகளை வாங்கித் தாராளமாக விநியோகம் செய்து பெயரெடுத்தான்.
‘அவனுக்கு நாம் தாழ்ந்துவீட்டோமே !’ என்று மன சுக்குள்ளே நளினன் குமுறுவான். ‘நந்தனுடைய அப்பா நம் அப்பாவாகவும், நம் அப்பா நளினன் அப்பாவாகவும். இருக்கக் கூடாதா ? அப்போது இந்த நந்தனுக்கு ஆட்டம் காட்டுவேனே !’ என்று எண்ணுவான்.
ஆனால் அப்படிப்பட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கு முன்னரே நந்தன் வருஷந்தோறும் பள்ளிக்கூடத்தில் பரிசு வாங்க ஆரம்பித்து வீட்டான்; நளினன் வெறுங் கையோடு வீட்டுக்கு வந்து பள்ளிக்கூட அதிகாரிகள் பேரில் குறை கூறுவான். இதனால் நளினன் தந்தை அவனை வேறு ஒரு பள்ளிக்கூடத்தில் கொண்டு சேர்த்தான்; வீட்டில் புது உபாத்தியாயர் ஒருவரைப் பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தான். தான் தூங்குகிற நேரத்தைக் குறைத்துக் கொண்டு, அந்த ஒரு மணி காலம் பையன் படிக்கும்போது அவனை மேற்பார்வை இடுவான். அப்படி இருந்தும் ஒரு பலனும் காணவில்லை. நந்தன் பரீக்ஷைகளில் தேறிக் கொண்டே பி.ஏ.,க்கு வந்து விட்டான்; ஆனால் நளினனோ அடிக்கடி தேறாமல் பிரவேச வகுப்பு வரையில் வந்து பொறியில் அகப்பட்டு மீள முடியாமல் தத்தளிக்கும் எலிபோல அதிலேயே நின்றுவிட்டான்.
இந்தச் சமயத்தில் அவன் தகப்பன் பையன் விஷயத்தில் மனம் இளகியோ என்னவோ சட்டென்று இறந்து விட்டான். மூன்று வருஷகாலம் தப்ப வழியின்றி இருந்து வீட்டு ஒருவிதமாகப் பிரவேச வகுப்பிலிருந்து விடுபட்டான் நளினன். இப்போது அவன் யதேச்சையாக மோதிரம், பித்தான், கடிகாரச் சங்கிலி எல்லாம் மேனியில் ஒளிர, நந்தனை எல்லார் கண்ணெதிரிலும் மங்கும்படிச் செய்ய வேண்டுமென்று பார்த்தான். பிரவேச வகுப்பில் பல்டி, குண்டாகர்ணம் எல்லாம் போட்டுவிட்டு இப்போது பி. ஏ., வகுப்பு என்ற ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டியில் நிதானமாகச் சவாரி பண்ணிக் கொண் டிருந்தான்; ஆனாலும் சர்வகலாசாலைப் பட்டத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
இதற்குள் நளினன், நந்தன் இவர்கள் இரண்டு பேருக்கும் வீட்டில் பெண் தேடிக்கொண் டிருந்தார்கள். தான் கல்யாணம் செய்துகொள்ளும் பெண் அபூர்வ ரம்பையாக இருக்க வேண்டும், அந்த ஸம்பந்தத்தையும் அவள் அழகையும் பார்த்து நந்தன் தலை குனிய வேண்டும் என்று நளினன் தீர்மானித்துக்கொண்டான்.
அதிகமாய் நூற்று நூற்றுப் பார்த்தால் ஒன்றும் கிட்டாது போய்விடுவது உலகத்தில் சகஜந்தானே! ! சட்டுப்பட்டென்று ஏதோ ஒரு பெண்ணைப் பீடித்து முடிபோட்டுக் கொள்ள நளினன் விரும்பவில்லை. பின்னால் ஒரு வேளை இன்னும் நல்ல இடமாக வந்து தான் ஏமாந்து நிற்க, வேறு எவனுக்காவது அந்த அதிருஷ்டம் அடித்து வீட்டால் என்ன செய்வது?
கடைசியாக ராவல்பிண்டியில் வசிக்கும் ஒரு வங்காளி பாபுவுக்கு அதிரூபவதிபான பெண் ஒருத்தி இருக்கிறாள் என்ற செய்தி கிடைத்தது. கிட்ட இருக்கும் அரம்பையரை விடத் தூரத்து அணங்குகள்மேல்தான் எப்போதும் நாட்டம் அதிகம் செல்லும். நளினன் உடனே பெண் வீட்டாருக்கு வழிச் செலவுக்குப் பணம் அனுப்பினான். பெண்ணைக் கல்கத்தாவிற்கு அழைத்து வந்தார்கள். அவள் நல்ல அழகிதான்.
“இருந்தாலும் இப்படிக் கூப்பிட்ட நாழிகைக்கு ராவல்பிண்டியை வீட்டு வந்துவிடுவதென்றால் ஸமாசாரம் எனக்கு விளங்கவில்லை…அதோடு முன் பின் பார்த்தவர்கள் யாராவது, ‘நாங்கள் அப்போதே பார்த்த பெண்தான் இவள் ; சரிப்படவில்லை என்று ஸம்பந்தம் பண்ணவில்லை’ என்று சொல்வார்களோ என்னவோ ?” இப்படித் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான் நளினன்.
கல்யாணப் பேச்சு ஒருவாறு தீர்ந்தது. லக்கின பத்திரிகை வைக்க ஏற்பாடு நடந்துகொண் டிருந்தது. இப்படி இருக்கும் போது, ஒரு நாள் காலை நனீ கோபாலன் வீட்டிலிருந்து பூவேலை செய்த தட்டில் பலவீத வரிசைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் எங்கோ புறப்பட்டுப் போனார்கள்.
நளினன் : (ஆள்காரனைப் பார்த்து) அடேடே! இதோ வந்து பாருடா ! அவர்கள் வீட்டில் என்னடா விசேஷம்?
நந்தனுக்கு நிச்சயம் செய்திருந்த பெண் வீட்டிற்கு லக்கின பத்திரிகை வைக்கத்தான் இந்தத் தடபுட லெல்லாம் என்று தெரிய வந்தது.
இதைக் கேட்டவுடன் நளினன் திகைத்துப் போய் ஹுக்காப் பிடிப்பதை நிறுத்தி, “போய் முழு ஸமாசாரத் தையும் அறிந்து கொண்டு வா!” என்று ஆளை அனுப்பினான்.
விபின் என்ற அந்த ஆளும் அப்போதே ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மட மட வென்று அவர்கள் பின்னால் புறப்பட்டு வீட்டான். திரும்பீ வந்து, “கல்கத்தா பெண்தான். ஆனாலும் ஜோரான பெண்” என்றான்.
நளினனுக்கு இருதயம் நின்று விடும்போல் ஆகி விட்டது. அவன், “என்ன? என்ன சொன்னாய்?” என்றான்.
ஆள், “ஜோரான பெண்” என்று மட்டும் சொன்னான்.
நளினன்: அப்படியானால் இந்தப் பெண்ணைத்தான் பார்க்கவேண்டும்.
“இது இல்லாது நடக்குமா ?” என்று சொல்லிச் சுட்டு வீரலையும் கட்டைவீரலையும் சேர்த்து ரூபாயைத். தட்டுவதுபோல் அபிநயித்து, கற்பனையாக ஒரு தொகையைக் குறித்தான் ஆள்
ஒரு சுப வேளையில் நளினன் இந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்தான். ‘நந்தனுக்கு இவளை நிச்சயித்திருக் கிறார்கள்’ என்று எண்ண எண்ண ‘ராவல்பிண்டிப் பெண்ணைவிட இவள் அதிக அழகாயிருக்கிறாள்’ என்று பட்டது நளினனுக்கு. இப்படித் தர்மசங்கடத்தில், அகப்பட்டுக்கொண்டு, அவன் ஆளைப் பார்த்து, “எப்படி?” என்றான்.
ஆள்: சாமி : எங்கள் கண்ணுக்கு நல்லாத்தான் இருக்கிறது.
நளினன்: அவள் நன்றாயிருக்கிறாளா? இவள் நன்றாயிருக்கிறாளா ? அதைச் சொல்லடா.
ஆள்: இந்த இடந்தான் நல்லது.
நளினனுக்கு இந்தப் பெண்ணின் கண்ணிதழ் அந்தப் பெண்ணினுடையதைவிடப் பின்னும் நேர்த்தியாக இருப்பதாக அப்போது தோன்றிற்று. ‘அவள் இவளைவிட அதிக வெளுப்புத்தான்; என்றாலும் சற்றுப் பசுமை’ கலந்த பொன்மேனி இவளுடையது. இவளைக் கை நழுவ விடக் கூடாது’ என்று எண்ணினான்.
இன்னது செய்வது என்று தெரியாமல் தத்தளித்தான் நளினன். ஹுக்காப் புகையை இழுத்துக் கொண்டே, “ஏண்டா, என்ன பண்ணுவது? சொல்லேன்” என்றான்.
ஆள், “இது இல்லாது முடியுமா?” என்று சொல்லி மறுபடியும் சுட்டு வீரலையும் கட்டை வீரலையும் சேர்த்து ரூபாயைத் தட்டுவதுபோல் அபிநயித்துக் கற்பனையாக ஒரு தொகையைக் குறித்தான்.
வாஸ்தவமாகவே அவ்வளவு தொகையும் டங்டங் என்று கையில் ஏறியதும் எண்ணிய காரியம் சித்தி யாவதற்கு அதிகநேரம் பீடிக்கவில்லை. பெண்ணின் தகப்பன் ஏதோ அநாவசியமான ஒரு சாக்கைக்கொண்டு வரனுடைய தந்தையோடு சண்டைபோட ஆரம்பித்து விட்டான். நந்தனுடைய தந்தை, “உன் பெண்ணுக்கு என் பீள்ளையைக் கொடுத்தேனானால் பார்; நான் – என்று என்னவெல்லாமோ எடுத்தான்.
பெண்ணின் தந்தை அதற்குமேல் உரத்த குரலில், “உன் பிள்ளைக்கு என் பெண்ணைக் கொடுத்தேனானால் பார்; நான் என்று பதிலுக்கு ஏதோ சொன்னான்.
அப்புறம் சிறிதுகூட நாழிகையாக்காமல் நளினன் நந்தனுக்குப் பூச்சி காட்டிவிட்டுச் சுப லக்கினத்தில் விவாகத்தை முடித்துக்கொண்டான். சிரித்துக்கொண்டே அவன் தன் ஆளைப் பார்த்து, ‘இதுதான் பி.ஏ., பாஸ் பண்ணின லக்ஷணம்! என்னடா சொல்கிறாய்? இந்தப் பரீக்ஷையிலே அந்த வீட்டு எஜமான் தவறிவிட்டார் பார்த்தாயா ?” என்று சொல்லிக்கொண்டான்.
சில தினங்களுக்குள்ளாகவே ஒரு நாள் நனீ கோபாலன் வீட்டிலும் மேள சப்தம் கேட்டது. நந்தனுக்குக் கல்யாணம்.
நளினன், “அடே! பெண் யார் என்று பார்த்து வா ?” என்று ஆளை அனுப்பினான்.
அவன் போய்வந்து, “அந்த ராவல்பிண்டிப் பெண் தான்” என்று தெரிவித்தான்.
“ராவல் பிண்டிப் பெண்ணா ! ஹா ஹா ஹா ” என்று நளினன் உரக்கச் சிரித்தான்; “அந்த வீட்டு ஐயாவுக்கு வேறு பெண் கிடைக்கவில்லைபோல் இருக். கிறது! நாம் வேண்டாமென்று கழித்துவிட்ட பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான்!” என்றான். ஆள்காரனும்கூட நகைத்தான்.
ஆனால் அதற்குமேல் நளினனுக்குச் சிரிக்க உற்சாகம் இல்லை. ஏதோ ஒன்று புழுவைப்போல் அவன் மனசைத் துளைக்கத் தொடங்கியது. ஒரு சிறிய சந்தேகம் தோன்றி அவன் காதோடு காதாக, “ஆஹா! கைதவறிப் போயிற்றே! கடைசியாக நந்தனுக்கு அந்த அதிருஷ்டம் வாய்த்ததே!” என்று அவனை இடித்துக் காட்டியது. அது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் உறிஞ்சும் அட்டை போல் பெரிதாகிக்கொண்டே வந்து இன்னும் உரக்க, “இனி எந்த வீதத்திலும் இவளை அடைய உன்னால் முடியாது. உண்மையில் இவளே அழகி. நன்றாக ஏமாந்துபோனாய்!” என்று கூறுவதுபோல் இருந்தது.
பின்கட்டிற்கு நளினன் சாப்பிடப்போனான். அப்போது அவன் மனைவியிடம் காணப்பட்ட சிறு குறைகள் கூடப் பெருந்தவறுகளாக அவனுக்குத் தோன்றின. தனக்கு வாய்த்தது பொருத்தமற்ற விபரீதமான சம்பந்தம் என்று அவனுக்குப் பட்டது. ராவல்பிண்டிப் பெண்ணோடு சம்பந்தம் செய்து கொள்ளப் பேச்சு நடந்தபோது அவனுக்கு அவள் போட்டோ ஒன்று கிடைத்திருந்தது. அதை அவன் இப்போது வெளியில் எடுத்துப் பார்த்தான். “ஆஹா! என்ன அபூர்வ ரூபலாவண்யம்! இப்படிப்பட்ட லக்ஷ்மி வலிய வந்தும் உதறித் தள்ளினேனே! நான் எப்பேர்ப் பட்ட கழுதை!” என்று தன்னையே நொந்து கொண்டான்.
முகூர்த்த தினத்தன்று அஸ்தமனமானதும், விளக்கு வெளிச்சத்தில் வாத்தியங்கள் முழங்க, கோச்சு வண்டியில் ஏறி மணமகன் நந்தன் புறப்பட்டான். நளினன் படுத்தபடி ஹுக்கா குடித்துக்கொண் டிருந்தான். இதனால் மனக் கவலை ஒருவாறு நீங்குமென்று பார்த்தும். பிரயோஜனம் இல்லை. அப்போது ஆள்காரன் விபின் மலர்ந்த முகத்துடன் அங்கே வந்து, மணமகனைப் பார்த்து ஏதோ விளையாட்டாகச் சொல்ல வாயெடுத்தான்.
அதே சமயம் நளினன், “தர்வான்!” என்று வாயிற் காப்போனை அழைத்தான்.
அவன் குரலைக் கேட்டு வீபினுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் காவலாளைக் கூப்பிட்டான். நளினன் அவனுக்கு விபினைக் காட்டி ஹிந்துஸ்தானியில்,”இப் போதே காதைத் திருகி இவனை வெளியே பிடித்துத். தள்ளு” என்று உத்தரவிட்டான்.
– காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.