பெருமாள் துணிகள் தைக்கும் ‘பாக்டரியில்’ ‘மெக்கானிக்காக’ வேலைப் பார்த்து வந்தான். அவனுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பிரேமா ப்ளஸ் 2 முடித்து விட்டு,கொஞ்சம் ‘கம்ப்யூட்டர் கோர்ஸ்ஸ¤ம்’ படித்து விட்டு ஒரு சின்ன கம்பனியில் வேலை பார்த்து வந்தாள்.சின்னவவள் சுகன்யா ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள்.
வீட்டிலேயே பெருமாளின் மணைவி செண்பகம்,அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஜாக்கெட்,’நைட்டி’, ’சூரிதார்,கமீஸ்’ போன்ற பெண்களின் ஆடைகளை தைத்துக் கொடுத்து கொஞ்ச ம் பணம் சம்பாத்தித்து வந்தாள்.
இந்த மூன்று வரும்படி வந்தும் பெருமாள் குடும்பத்திற்கு கைக்கும் வாய்க்கும் தான் இருந்தது.
செண்பகம் இங்கே அங்கே சீட்டு கட்டி,வீட்டு செலவில் கொஞ்சம் மீதம் பிடித்து தங்க சீட்டு கட்டி தன் பெரிய பெண்ணுக்கு கல்யாணத்திற்கு வேண்டிய முக்கியமான சாமான்களும்,கொஞ்சம் நகையும் செய்து வைத்திருந்தாள்.
பெருமாளுக்கு ‘ஹெல்பர்’ ஆக ஒரு ITI படித்து முடித்த பையன் மோகனை வேலைக்கு அமர்த்தியது கம்பனி.பெருமாள் மோகனுக்கு தனக்கு தெரிந்த வேலைகளை மெல்ல கற்று கொடுக்க ஆரம் பித்தான்.மோகன் மிகவும் புத்திசாலியாகஇருந்ததால்,பெருமாள் சொல்லிக் கொடுத்த எல்லா வேலை களையும் சீக்கிரமே கற்றுக் கொண்டு வந்து பெருமாளுக்கு மிகவும் உதவியாய் இருந்தான்.
மோகனின் அடக்கமும்,பெரியவர்களிடம் அவன் காட்டும் மா¢யாதையும்,பெருமாளை மிகவும் கவர்ந்தது.தவிர மோகன் நல்ல கலருடன்,உயரமாயும்,அழகாயும் இருந்தான்.பெருமாள் மெல்ல அவ னிட ம் பேச்சு கொடுத்து இவன் குடும்ப நிலவரத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டான்.
அன்று ஞாயிற்றுக் கிழமை.பெண்கள் இருவரும் கோவிலுக்குப் போய் இருக்கவே பெருமாள் செண்பகத்திடம் தன்னிடம் வேலை செய்யும் மோகனை பற்றி எல்லா விவரமும் சொல்லி, பிரேமாவை மோகனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்கலாமா என்று கேட்டான்.
செண்பகம் ‘சரி’ என்று சொல்லவே,பெருமாள் பிரேமா கோவிலில் இருந்து வந்தவுடன் விஷயத் தைச் சொல்லி அவள் சம்மதத்தையும் கேட்டான்.பிரேமா கல்யாணம் பண்ணிக் கொள்ள ‘சம்மதம்’ தெரிவிக்கவே,பெருமாள் தம்பதிகள்,மோகன் பெற்றோர்களை நோ¢ல் சந்தித்து,கல்யாண விஷயம் பேசி மோகன் பிரேமா கல்யாணத்தை நிச்சியம் பண்ணினார்கள்.
ஒரு நல்ல முஹூர்த்த்தில் மோகன் பிரேமா கல்யாணம் முடிந்தது.
ஒரு நாள் பெருமாளும்,செண்பகமும் ஆட்டோவில் போய் கொண்டிருக்கும் போது ஒரு விபத் து நடந்து,பெருமாள் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டான்.செண்பகம் பலத்த அடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தாள்.
மோகனும்,பிரேமாவும்,சுகன்யாவும் செண்பகம் படுத்துக் கொண்டு இருந்த ‘பெட்டின்’ பக்கத்தி லேயே உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.
செண்பகத்துக்கு ‘இனி தான் உயிர் பிழைப்பது கஷ்டம்’ என்று தெரிந்ததும்,பிரேமா கையைப் பிடித்துக் கொண்டு “இதோ பார் பிரேமா,உன் கையிலே நான் சுகன்யாவை ஒப்படைச்சுட்டு போறேன். அவளை நல்லா படிக்க வச்சு,ஒரு நல்ல இடத்திலே கல்லாணம் கட்டிக் கொடுக்கணும்மா.இதை நீயும் உன் புருஷனும் தவறாம செய்யனும்….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவள் உயிர் பிரிந்து விட்டது.அம்மாவின் ‘காரியங்களை’ எல்லாவற்றையும் முடித்து விட்டு,பிரேமா தங்கை சுகன் யாவை தன்னுடன் வைத்து கொண்டு வந்தாள்.
சுகன்யா ஏழாவது படித்து வந்தாள்.அவள் எப்போதும் பக்கத்து வீட்டு எஸ்தரோடு பள்ளிகூடம் போய் வந்து கொண்டு இருந்தாள்.இருவரும்ஆறுயிர் தோழிகள்.
அன்று சனிகிழமை.ஐந்தரை மணி வரை பள்ளிகூடத்தில் ‘வாலிபால்’ ஆடி விட்டு சுகன்யாவும், எஸ்தரும், சரசாவும் ஒன்றாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்கள்.சரஸா சுகன்யா,எஸ்தரை விட ரெண்டு வயது பெரியவள்.
இவர்கள் வசித்து வந்த தெரு முனையில் கொஞ்சம் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டை கட்டையாக ரெண்டு வாலிபர்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
சரஸாவும், எஸ்தரும்,சுகன்யாவும் அவர்களைக் கடக்கும் போது திடீரென்று அந்த வாலிபர்கள் மூனு பேரையும் அங்கே ‘பார்க்’ பண்ணி இருந்த காருக்குள் தள்ளி,அவர்களை கடத்தி கொண்டு ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்து கொண்டு போனார்கள்.
அந்த வீடு காலியாக இருந்தது.
அந்த இரண்டு வாலிபர்களும் சுகன்யாவையும்,எஸ்தரையும் ரெண்டு சேரில் நன்றாக கட்டிப் போட்டு விட்டார்கள்.
பிறகு சரசாவின் தாவணியை கிழித்து, அவள் வாயில் கொஞ்சம் துணியை அடைத்து விட்டு, மீதி துணியில் அவள் கையை பின் பக்கம் கட்டிவார்கள். பிறகு சரசாவை நிர்வாணமாக்கி, அந்த ரெண்டு வாலிபர்களும் சரஸாவை சுற்றி வந்து,பாட்டு பாடி,டான்ஸ்ஆடி,மாறி,மாறி சரசாவிடம் ‘உடல் உறவு’ வைத்து கொண்டு சந்தோஷப்பட்டார்கள்.
சுகன்யாவுக்கும் எஸ்தருக்கும் இந்த ‘கோர சம்பவத்தை’ பார்க்கப் பிடிக்காமல் அவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த வாலிபர்கள் சரசாவை எழுப்ப நினைத்து அவளை உலுக்கினார்கள். ஆனால் சரசா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள்.
உடனே அவர்கள் சுகன்யா,எஸ்தர்,இருவர் கையையும் அவிழித்து விட்டு,மூனு பேரையும் வந்த காரிலே எற்றிக் கொண்டு ஊருக்கு சற்று வெளியே இருக்கும் ஆற்றில் சரசாவின் பிணத்தை எறிந்து விட்டார்கள்.
பிறகு சுகன்யாவையும்,எஸ்தரையும் பார்த்து “இதோ பாரு பொண்ணுங்களா. நீங்க ரெண்டு பேரும் இப்போ சின்ன பொண்ணுங்க. இந்த வூட்லெ நடந்த விஷயத்தைப் பத்தி நீங்க ரெண்டு பேரும் யாரு கிட்டேயாவது சொன்னீங்கன்னா, நடக்கிற கதையே வேறே.எங்க ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தன், விஷயதே வெளியே சொன்ன பொண்ணே ‘கெடுத்துட்டு’ அந்த பொண்ணே ஆத்திலெ ஏறிஞ்சது போல எறிஞ்சுடுவான். ஜாக்கிறதே. உடம்பிலே பயம் இருக்கட்டும். பேசாம வூட்டுக்கு போய் ஒன்னும் தெரியாதவங்க போல இருந்து வாங்க” என்று பயமுறுத்தி விட்டு,சுகன்யாவையும்,எஸ்தரையும் ஊர் கோடியில் இறக்கி விட்டு விட்டு, வந்த காரிலெ போய் விட்டார்கள் அந்த இரண்டு வாலிபர்கள்.
சுகன்யா,எஸ்தர்,ரெண்டு பேருடைய உடம்பும் பயத்தால் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவர்களுக்கு வேர்த்து வேர்த்து கொட்டியது.அந்த வாலிபர்கள் காரில் போன பிறகு இருவரும்நிம்மதியாக மூச்சு விட்டார்கள்.
சுகன்யா எஸ்தரிடம் “எஸ்தர்,இப்படியா இந்த ஆம்பிளைங்க ஒரு பொண்ணு கிட்ட மோசமா நட ந்துக்குவாங்க.நினைச்சாலே எனக்கு மயக்கம் வருது.நாம வூட்டுக்கு போனவுடன் ஒருத்தர் கிட்டே யும் இந்த விஷயத்தை பத்தி மூச்சு விடக் கூடாது.அவங்க சொன்னாப் போல ஒன்னும் தெரியாதவங்க போல இருந்து வரலாம்.அந்த ‘கயவாளி பயங்களுக்கு’ நம்மை நல்லா அடையாளம் தெரியும்.இந்த விஷயத்தே யார் கிட்டேயும் சொலலாம் இருந்து வரலாம்.நீ என்ன சொல்றே”என்று பயத்தால் நடுங்கி கொண்டே கேட்டாள்.
உடனே எஸ்தரும் “ஆமா,சுகன் அவங்க சரஸா கிட்டே நடந்து கிட்டதை நினைச்சா எனக்கு கூட ரொம்ப பயமா இருக்கு.நீ சொல்றது ரொம்ப சரி.நாம அங்கே நடந்த விஷயத்தே யார் கிட்டேயும் சொலலாம இருந்து வரலாம்” என்று பயத்துடன் சொன்னாள்.
இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
எட்டாவது வருஷாந்திர லீவில் சுக்னயாவும் எஸ்தரும் பருவம் அடைந்தார்கள்.
எஸ்தர் சுகன்யாவிடம் “சுகன்,நான் மேலே படிக்க போறதில்லே.என் அம்மாவும்,அப்பாவும் ரொம்ப ஆசை படறதாலே, நான் மாதா கோவில்லே ஒரு ‘கன்னிஸ்திரி’ ஆக சேர்ந்து விடப் போறேன். அப்படி சேர்ந்துட்டா,என்னை எந்த ஆணும் தொடாம நான் வாழ்ந்து வருவேன்.இது தான் என் முடிவு” என்று சொன்னாள்
உடனே சுகன்யா எஸ்தரிடம் “பரவாயில்லே எஸ்தர்,உங்க மதத்லே அந்த வழி இருக்கு.ஆனா எங்க மதத்லே அந்த மாதிரி வழி இல்லே.அதனால்லே நான் இனிமே தனியா பள்ளிக் கூடம் போவாம எங்க அக்கா,மாமா,கூடவும்,அவங்களுக்கு பொறக்கும் குழந்தைங்க கூட இருந்து வரப் போறேன். அவங்க என்ன வற்புருத்தினாலும், நான் கல்யாணமே கட்டிக்க போறதில்லே.இது நிச்சியம் எஸ்தர்” என்று தன் முடிவை தீர்மானமாக சொன்னாள்.
உடனே எஸ்தர் “இது உன்னால் முடியுமா சுகன்.படிக்காம,கல்யாணமும் கட்டிக்காம,,எப்படி நீ இந்த உலகத்லே வாழ்ந்து வர முடியும்” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் எஸ்தர்.”என்னால் நிச்சியமா முடியும்.நானும் என்னே எந்த ஆடவனும் தொடாம பாத்துக் கிட்டு வறப் போறேன் எஸ்தர்” என்று சவ சவால் விட்டு தன் வீட்டு வந்து விட்டாள் சுகன்யா.
எட்டாவது வருடாந்திர விடுமுறை முடிந்ததும்,சுகன்யா ‘தனக்கு மேலே படிக்க பிடிக்கலெ, தன்னை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்’ன்னு பிடிவாதமாக சொல்லி விட்டாள்.
அக்கா பிரேமாவும்,மாமாவும் எவ்வளவோ சொல்லியும் சுகன்யா தான் வீட்டிலேயே இருக்கப் போவதாயும் ‘தனக்கு பள்ளிக்கூடம் போக வேணாம்’ என்று சொல்லி விடவே,பிரேமா சுகன்யாவை வீட்டிலேயே இருந்துக் கொண்டு வரச் சொல்லி விட்டு, ஒன்பதாவது பாட புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படித்து வரச் சொன்னாள்.
சுகன்யா வீட்டில் இருந்துக் கொண்டு எல்லோருக்கும் சமைத்து வீட்டு,எல்லா வேலைகளும் செய்து விட்டு,அவள் தன் பாடங்களை படித்து வந்தும்,பிரேமாவுக்கு பிறந்த குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொண்டும் தன் பொழுதை கழித்து வந்தாள்.
‘தான் மேலே படிக்கலையே’ என்று சுகன்யா துளிக் கூட கவலை படவில்லை. அவள் சந்தோஷமாக இருந்து வந்தாள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுகன்யாவும்,எஸ்தரும் சந்தித்து பேசிக், கொ ண்டு வந்தார்கள்.
ஐந்து வருஷங்கள் ஓடி விட்டது.வீட்டு வேலைகள் செய்த மீதி நேரத்தில் சுகன்யா பிரேமாவின் ரெண்டு குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு அவர்களுடன் ஆசையாக இருந்து வந்தாள்.
இறக்கும் போது தன் அம்மாவிடம் செய்துக் கொடுத்த சத்தியம் பிரேமாவுக்கு அடிக்கடி ஞாபகம் வந்துக் கொண்டு இருந்தது.’‘அம்மா சாவும் போது நம்ம கிட்ட சுகன்யாவை நல்லா படிக்க வக்க சொ ல்லி சத்தியம் வாங்கிக் கிட்டாங்களே.நம்மாலே அதை பண்ண முடியலையே’ என்று அடிக்கடி கவலை பட்டு வந்தாள்.
‘சுகன்யா இப்போ நல்லா வளந்து ஒரு அழகு சிலையாலயா ஜொலிக்கிறாளே,இவளுக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வச்சி,நாம அம்மாவுக்கு பண்ணிக் கொடுத்த ரெண்டாவது சத்தியத்தையாவது காப்பாத்தலாமே’ என்று தினமும் ஆசை பட்டு வந்தாள்.
நிறைய நேரம் யோஜனை பண்ண பிரேமா தன் கணவனுடன் கலந்துப் பேசி ,சுகன்யாவுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணினாள்.
மாப்பிள்ளை விட்டார் வந்து சுகன்யாவை ‘பெண் பார்த்து’ விட்டு ‘எங்களுக்கு உங்க பெண் சுகன்யாவே பிடிச்சு இருக்கு’ என்று சொல்லி விட்டுப் போனார்கள்.பிரேமாவும் மோகனும் ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.
இரண்டு நாள் கூட ஆகி இருக்காது பெண் பார்த்து விட்ட போன வீட்டில் இருந்து ‘போன்’ வந்தது.பிரேமா தான் ‘போனை’ எடுத்தாள்.’எங்களுக்கு உங்கள் பொண்ணு வேணாம்,நீங்க வேறு மாப்பிள்ளையைப் பார்த்துக்குங்க” என்று சொல்லி விட்டு ‘போனை’ வைத்து விட்டார்கள்.
மிகவும் வருத்தப் பட்டாள் பிரேமா.உடனே மோகன் ”கவலைப் படாதே பிரேமா.இந்த மாப்பிள்ளை இல்லேன்னா என்ன, வேறு நல்ல பையனாப் பாத்து நாம சுகன்யா கல்யாணத்தை ‘ஜாம்’ ‘ஜாம்’ ன்னு செஞ்சு முடிக்கலாம்.நீ இப்போ நிம்மதியா இருந்து வா” என்று சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்கப் போய் விட்டான்.
அந்த வாரம் சுகன்யாவும் எஸ்தரும் சந்தித்து கொண்ட போது சுகன்யா எஸ்தர் இடம் ரகசிய மாக “இந்த வாரம் என்னை பொன்னு பார்த்துட்டு போனவங்க விலாசத்துக்கு ‘நான் எற்கெனவே ஒரு வரை மனசார காதலிக்கிறேன்.வாழ்ந்தா அவர் கூட தான் வாழுவேன்.அதனாலே உங்க பையனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சி, என் வாழ்க்கையையும், உங்க பையன் வாழ்க்கையையும் வீணடிச்சு விடாதீங்க” ன்னு ஒரு மொட்டை கடிதம் போட்டுடேன். அவங்களும் உடனே எங்க அக்கா மாமாவுக்கு ‘உங்க பொண்ணை எங்களுக்கு பிடிக்கலே’ ன்னு போன் பண்ணிட்டாங்க” என்று சொல்லி சிரித்தாள்.
இரண்டு மாதம் கழித்து தன் தங்கைக்கு தெரிந்த ஒரு தோழியின் உறவுக்கார பையனை ‘பெண் பார்க்க’ ஏற்பாடு பண்ணினான் மோகன்.
பிள்ளை வீட்டார் ஒரு நாள் வந்து பெண் பார்த்தார்கள்.இவர்களும் பெண்ணைப் ‘பிடித்து இருக்கிறது’ என்று சொல்லி விட்டு பிரேமவையும்,மோகனையும் மற்ற விஷயங்களை பற்றி பேச அவர்கள் வீட்டுக்கு வரச் சொல்லி விட்டு போனார்கள்
பிரேமா மோகனை அழைத்து கொண்டு,பிள்ளை வீட்டுக்கு புறப்பட தயார் ஆகி கொண்டு இருக்கும் போது ‘போன்’ வந்தது.
‘போனை’ எடுத்த மோகன் “யார் பேசறது” என்று கேட்டான்.
மறு பக்கம் இருந்து “நீங்க பேச எல்லாம் ஒன்னும் எங்க வூட்டுக்கு வர வேணாம்,எங்க பையனுக்கு உங்க பெண்ணைப் பிடிக்கலே” என்று சொல்லி விட்டு ‘போனை’ வைத்து விட்டார்கள்.
மோகன் பிள்ளை வீட்டார் ‘போனில்’ சொன்ன விஷயத்தை பிரேமாவிடம் சொன்னதும், அவள் ஆடிப் போய் விட்டாள்.
“என்னங்க இது.இவங்க பொண்ணு பிடிச்சு இருக்கு,நீங்க பேச வாங்கன்னு சொல்லிட்டுத் தா னே போனாங்க.இப்போ ஏங்க திடீர்ன்னு ‘எங்க பையனுக்கு உங்க பெண்ணை பிடிக்கலே’ன்னு மொட்டையா சொல்றாங்க. இதுக்கு என்னங்க அர்த்தம்”என்று அழாக் குறையாகக் கேட்டாள்
“எனக்கும் புரியலையே பிரேமா.யாராச்சும் சுகன்யாவை பத்தி அவங்க கிட்டே ‘தப்பா’ச் சொல்லி இருப்பாங்களோ” என்று சொல்லி மோகனும் வருத்தப்பட்டான்.
அடுத்த சந்திப்பில் சுகன்யா எஸ்தர் இடம் ‘தன்னை பெண் பாத்துட்டு போனவங்களே ‘உங்க பொண்னை எங்களுக்கு பிடிக்கலீங்கன்னு’ சொல்ல வச்ச விவரத்தையும் சொல்லி சிரித்தாள்.
‘இந்த அமர்க்களம் எல்லாம் அடங்கட்டும்’ என்று பிரேமா ஒரு மூனு மாசம் சும்மா இருந்தாள்.
”சுகன்யாவுக்கு வயசு ஏறிக் கிட்டே போவுதுங்க.உங்களுக்கு தெரிஞ்ச யாராவது ஒரு நல்ல பை யனை சுகன்யாவுக்கு பாருங்க” என்று அழாமாட்டாத குரலில் சொல்லி மோகனை சுகன்யாவுக்கு ஒரு நல்ல பையனை பார்க்கச் சொன்னாள் பிரேமா.
உடனே மோகனும் தன் நண்பர்களிடம் சொல்லி ஒரு நல்ல பையனை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டாரை வந்து பெண் பார்க்க அழைத்தான்.
அவர்களும் அந்த வாரமே வந்து சுகன்யாவைப் ‘பெண்’பார்த்து’ விட்டு,’எங்களுக்கு உங்க பொண்ணேப் பிடிச்சு இருக்கு. எங்க வீட்டுக்கு மத்ததே பேச வாங்க’ என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
இவர்களும் அவர்கள் வீட்டுக்குப் போன அடுத்த நாளே ‘எங்களுக்கு உங்கப் பெண் பிடிக்கலே’ என்று ‘போனி’ல் சொல்லி விட்டார்கள்.
அன்று சாயத்திரம் சுகன்யா எஸ்தர் இடம் “என்னை பெண் பாக்க வந்த பையன் வீட்டாரையும் ‘எங்களுக்கு உங்க பொண்ணு பிடிக்கலீங்க’ சொல்ல வச்சேன்” என்று சொல்லி சிரித்தாள்.உடனே எஸ் தர் “சுகன்,உனக்கு ஆனாலும் ரொம்ப ¨தரியம்.ஜாக்கிறதையா செஞ்சு வா.எங்காச்சும் வம்ப்லே மாட்டி க்க போறே” என்று எச்சரித்தாள்.
“என்னங்க இது,பொண்ணு பாத்து பிடிச்சு இருக்குதுன்னு சொல்லிட்டு,வூட்டுக்கு போன அடு த்த நாளைக்கெல்லாம் பொண்ணு பிடிக்கலே’ ன்னு சொல்றாங்களேங்க.இதிலே ஏதோ மர்மம் இருக் குதுங்க.யாரோ நம்ப சுகன்யாவைப் பத்தி விடாம ‘தப்பா புரளி’க் கிளப்பி விட்டு கிட்டே இருக்காங்க போல இருக்குதேங்க.இப்போ என்னங்க பண்றது. எனக்கு ரொம்ப கவலையா இருக்குதுங்க” என்று அழுது கொண்டே கேட்டாள் பிரேமா.
“எனக்கும் இது புரியாத புதிரா தான் இருக்குது பிரேமா.ஆனா யாரோ செய்ற ‘விஷமத்தனம்’ தான் இது.யார் அந்த நபர் என்று கண்டு பிடிக்காம நாம சுகன்யாவுக்கு பையனைத் தேடுவது பிரயோ ஜனமில்லே” என்று சொல்லி மிகவும் கவலை பட்டான் மோகன்.
அக்கா,மாமா ரெண்டு பேரும் தன் கல்யாணத்தைப் பத்தி மிகவும் கவலைப் படுவதைப் பார்த்து சுகன்யா “ஏன்கா,யாரோ இப்படி பண்றாங்க.நமக்கு விரோதிங்கன்னு யாரும் இல்லையே.சரி விடுங்க. நாம போவ போவ பார்த்துக்கலாம்.இப்போ நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்து வாங்க”என் று சொல்லி அக்காவுக்கும் மாமாவுக்கும் ஆறுதல் சொன்னாள்.
பிரேமா நெடு நேரம் யோஜனைப் பண்ணினாள்.அவளுக்கு தன் கணவன் பேரில் சிறிதளவு சந்தேகம் விழுந்தது.
‘ஒருவேளை சுகன்யா கல்யாணம் பண்ணிக் கிட்டுப் போயிட்டா தங்களுக்கு சமையல் செய்ய, தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாம போய் விடுவாங்க’ன்னு நினைச்சு, ஒரு வேளை இவர் பொண்ணு பாக்க வந்தவங்க கிட்டே எல்லாம்,அப்புறமா தனியா போன்லே பேசி, வந்தவங்க மனசை ஏதோ சொல்லி கலைச்சு விடறாரா’ என்று சந்தேகப் பட்டாள்.
பிரேமா இந்த ‘சந்தேகத்தை’ தீர்த்து கொள்ள தன் கணவன் கிட்ட ‘இலை மறைவா காய் மறை வா’ பல கேள்விகளை எல்லாம் கேட்டுப் பார்த்தாள்.அவள் சந்தேகங்களுக்கு மோகன் பதில் அளிச்சது ஓரளவுக்கு திருப்தி அளிச்சாலும்,அவள் இன்னும் மோகனை பூரணமாக நம்பலே.
ரெண்டாவது சந்தேகம் மனதில் எழுந்தது பிரேமாவுக்கு.‘ஒரு வேளை சுகன்யாவின் அழகிலே தன் கணவன் மயங்கி,அவ நம்மை விட்டுப் போய் விடக் கூடாதே’ன்னு எதோ விஷமம் பண்ணி வரா ரா.இந்த சந்தேகத்தை அவளால் நினைத்துக் கூட பாக்க முடியலே.அவள் மனம் சந்தேகத்தீயில் வெந் துக் கொண்டு இருந்தது.
கூடவே மூணாவதா இன்னொரு சந்தேகமும் அவள் மனதில் எழுந்தது.
‘ஒரு வேளை சுகன்யா வாளிப்பாகவும்,அழகாகவும் இருக்கும் மோகனை விரும்புவதால் அவ ரை விட்டுட்டு போவாம இருக்க சுகன்யா தான் ஏதாவது ‘விஷமத் தனம்’ செஞ்சி வந்து மாப்பிள்ளை வீட்டாரிடம் தன்னை பத்தி ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லி வறாளா.பிரேமாவுக்கு தலையே சுற்றியது.அம்மா படத்தின் முன் உட்கார்ந்துக் கொண்டு அழுதாள்.
‘கடவுளே,இந்த மூன்று சந்தேகத்தில் ஒன்னு கூட சரியா இருக்கக் கூடாது.வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கட்டும்.உண்மை காரணம் என்னன்னு எனக்கு தயவு செஞ்சி தெரியவையேன் கடவு ளே’ என்று தினமும் கடவுளை வேண்டி வந்தாள்.தினமும் கழுகு மாதிரி தன் கணவனையும், சுகன்யா வையும் கவனித்து வந்தாள்.கூடிய வரைகும் சுகன்யாவும், மோகனும் தனியாக இல்லாமல் பாத்து வந் தாள்.
மோகன் சுகன்யாவிடன் சகஜமாகப் பேசி வருவதையும், அவளை அடிக்கடி வம்பு பண்ணுவதை யும்,அதே போல் சுகன்யாவும் மோகனுடன் பழகுவதையும் அவனுடன் சிரித்துப் பேசுவதையும், பிரேமா கவனித்துக் கொண்டு வந்தாள்.
சில சமயம் பிரேமாவுக்கு சந்தேகம் வலுக்கிறது.சில சமயம் பிரேமாவுக்கு அவர்கள் இருவரும் சகஜமாக இருப்பது போலவும் தெரிகிறது.மனம் குழம்பினாள் அவள்.அடிக்கடி தனக்கு ‘தலை வலிக்கு து’ என்று சொல்லி விட்டு பிரேமா மோகனுடன் படுத்துக் கொள்ளாமல்,சுகன்யாவுடனும் குழந்தை களுடனும் வெளியே ‘ஹாலில்’ படுத்து வந்தாள்.
சுகன்யாவுக்கு ‘ஏன் இப்படி கல்யாணம் தட்டுப் படுது.என்ன தோஷம் இருக்கு சுகன்யா ஜாதகத்திலே.அதுக்கு என்ன பா¢காரம் பண்ணா சுகன்யா கல்யாணம் நடக்கும்’ என்று கேட்டு வர ஒரு ஜோஸ்யரை ‘போன்’ பண்ணிக் கேட்டாள் பிரேமா.அவர் வர சொன்னதும் சுகன்யாவை அழைத்துக் கொண்டு பிரேமா போய் அந்த ஜோஸ்யா¢டம் சென்று சுகன்யா ஜாதகத்தைக் காட்டினாள்.ஜோஸ்யர் தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு நிறைய நேரம் ஏதோ கணக்கு எல்லாம் போட்டு விட்டு அந்த ஜோஸ்யர் “அம்மா,இந்த பெண்ணுக்கு இனிமே கல்யாணம் ஆவாதும்மா.இந்த பொண் ணுக்கு நீங்க கல்யாணம் மூனு வருஷம் முன்னமே செஞ்சி இருக்கனும்.இப்போ அவளுக்கு குரு பலன் போய் விட்டதேம்மா.ஜாதகப் பிரகாரம் இனிமே இந்த பொண்ணு கன்னியா தான் இருக்கணும் இந்த ஜென்மத்திலே” என்று சொல்லி தன் கண்ணாடியை கழற்றினார்.
உலகமே இடிந்து விழுந்தது போல் இருந்தது பிரேமாவுக்கு.ஜோஸ்யருக்கு பணத்தைக் கொடுக்கப் போன பிரேமாவை “எனக்கு பணம் வேணாங்க.எனக்கே ரொம்ப வருத்தமா இருக்கு” என் று சொல்லி ஜோஸ்யர் பணம் வாங்க மறுத்து விட்டார்.
நடை பிணம் போல் பிரேமா சுகன்யா அழைத்துக் கொண்டு ஜோஸ்யர் வீட்டை விட்டு வெளீயே வந்தாள்.வீட்டுக்கு வந்த பிரேமா ‘தொப்’பென்று கட்டிலில் போய் விழுந்தாள்.குலுங்கி குலு ங்கி அழுது கொண்டு இருந்தாள்.
மோகன் ஆபிஸிலிருந்து வந்தவுடன் சுகன்யா நடந்ததை எல்லாம் மோகனிடம் சொன்னாள். மோகன் உடனே ஓடிப் போய் பிரேமாவை எழுப்பி அவளுக்கு ஆறுதல் சொல்லி மெல்ல அவளை சாப்பிட வைத்தான்.தன்னால் தானே அக்காவுக்கு இவ்வளவு மன வேதனை என்று நினைச்சி “எனக்கு கல்யாணம் நடக்கா விட்டா போவட்டுமே அக்கா,நீஏன் இத்தனை மன வேதனை பட்டு உன் உடம்பை கெடுத்துக்குறே.நான் போன ஜென்மத்தில் பண்ண பாவத்தை அனுபவிச்சு தானே ஆவ ணும்.நீ கவலைப் படாம இரு அக்கா” என்று கெஞ்சினாள் சுகன்யா.
அன்று சாயந்திரமே சுகன்யா எஸ்தர் இடம் தான் ஜோஸ்யர் கிட்டே தன் பயத்தை சொல்லி அவருக்கு பணம் குடுத்து பொய் சொல்ல வந்த விஷயத்தையும்,ஜோஸ்யர் சம்சாரம் என் கதையை கேட்டு விட்டு ஜோஸ்யரை பனம் வாங்காம பொய் சொல்ல வைத்த விவரத்தையும் சொன்னாள்.
“சுகன்யா, நம்ம அம்மா செத்து போறதுக்கு முன்னாலே அவங்களுக்கு நான் ரெண்டு சத்தியம் பண்ணிக் கொடுத்தேன்.முதல் சத்தியத்தில் உன்னை நல்லா படிக்க வைக்க சொன்னாங்க. ஆனா ’நீ நான் மேலே படிக்க மாட்டேன்’ன்னு சொல்லி விட்டதாலே,என்னால் உன்னை நல்லா படிக்க வச்சு அந்த சத்தியத்தை காப்பாத்த முடியாமப் போச்சு.நான் பண்ணிக் கொடுத்த ரெண்டாவது சத்தியம். உன்னை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுக்க சொன்னாங்க.எவ்வளவு முயற்சி பண்ணி யும் என்னால் உனக்கு கல்யாணம் பண்ணி வக்க முடியலே.என்னால் இப்போ அந்த சத்தியத்தையும் காப்பாத்த முடியலேன்னு நினைச்சா எனக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது. நான் என்ன செய்ய ட்டும் சொல்லு” என்று சொல்லி விட்டு தங்கை சுகன்யாவை கட்டிக் கொண்டு விக்கி விக்கி அழுதாள் பிரேமா.சுகன்யாவால் அக்காவை சமாதானமே படுத்த முடியவில்லை.
ஒரு வருஷம் ஆகி விட்டது.
சுகன்யாவுக்கு கொஞ்ச நாட்களாய் உணவு சாப்பிட கஷடப்பட்டு வந்தாள்.கூடவே மூச்சு விடுவதிலும் கஷடம் இருந்து வந்தது.மோகனும்,பிரேமாவும் சுகன்யாவை அழைத்து கொண்டு போய் ஒரு டாகடா¢டம் காட்டினார்கள்.சுகன்யாவை நன்றாக பா¢சோதனை பண்ணி விட்டு டாக்டர் சுகன்யா வுக்கு மூச்சு குழாய்க்கும்,உணவு குழாய்க்கும் இடையில் புற்று நோய் இருப்பதாயும்,அது மிகவும் வளர்ந்து இருப்பாதயும் சொல்லி மருந்துகள் எழுதி கொடுத்து விட்டு மோகனை தனியாய் அழைத்து “மிஸ்டர் மோகன்,சுகன்யாவுக்கு புற்று நோய் அதிகம் வளந்து இருக்கு.அவ இன்னும் இரண்டு மாசம் தான் உயிரோட இருப்பா”என்று தீர்மானமாக சொல்லி விட்டு மருத்துகள் எழுதிக் கொடுத்தார்.
கலங்கி போனான் மோகன்.மெல்ல ¨தரியத்தை வரவழைத்துக் கொண்டு பிரேமாவிடம் டாக்டர் சொன்ன விவரத்தை சொன்னான் மோகன்.பிரேமாவுக்கு மயக்கமே வந்து விட்டது.அவள் தன் சுய நினைவுக்கு வரவே நான்கு மணி நேரம் பிடித்தது.
சுகன்யாவுக்கு உடம்பு சரி இல்லை என்று கேள்வி பட்ட எஸ்தர் சுகன்யாவை ஹாஸ்பிடலில் வந்து பார்த்தாள்.
அப்போது சுகனயா தனியாக இருந்தாள்.சுகன்யா எஸ்தர் இடம் ரகசியமாக “எஸ்தர், நீ ஒரு ‘கன்னி ஸ்திரியாக’ மாறி,உன்னை காப்பாத்தி கிட்டே.ஆனா எங்க மதத்து கடவுள் எனக்கு ‘இந்த உடமபே’ கொடுத்து என்னை காப்பாதி இருக்கார்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் கூடிய சீக்கிரம் இந்த உலகத்தே விட்டு போவ போறேன்.நீ எனக்கு ஒரு உதவியே செய்யணும்.செய்வியா எஸ் தர்”என்று திக்கி திக்கி கேட்டாள்.
எஸ்தர் உடனே “சொல்லு சுகன், நான் நிச்சியமா செய்யறேன்” என்று சுகன்யாவின் கைகளை பிடித்து கொண்டு அழுது கொண்டே சொன்னாள்.
சுகன்யா மேலே பேச முடியாம திக்கினாள்.மெல்ல கொஞ்சம் தெம்பை வரவழைத்து கொண்டு “எஸ்தர்,என் அக்காவும் மாமாவும் ‘எனக்கு கல்யாணம் ஆவலே’ன்னு ரொம்ப கவலைப் பட்டு வராங்க.. என் மூச்சு நின்னவுடனே,நீ எங்க அக்கா,மாமா, கிட்டே நாம பாத்த எல்லா ‘விஷயத்தையும்’ சொல்லி …..என்னை பொண்ணு பாத்தவங்களுக்கு நான் போன் பண்ணி.. அவங்களெ ‘என்னை பிடிக்கலெ ன்னு’ சொல்ல வச்ச சமாசாததையும்,…ஜோஸ்யரை நான் பொய் சொல்ல வைத்த விவரத்தையும் …..தயவு செஞ்சி சொல்ல முடியுமா…..” என்று திக்கி திக்கி சொல்லிக் கொண்டு இருக்கும் கண்களை மூடிக் கொண்டாள்.
தன் ஆருயிர் தோழி சுகன்யாவுக்கு ‘நான் நிச்சியமா செய்றேன் சுகன்’ என்று சொல்ல நினை க்கும் போது டாக்டர்களும்,மோகனும்,பிரேமாவும்,சுகன்யா கட்டில் கிட்டே வந்தார்கள்.
‘தன் தோழி சொன்னதே அவ அக்கா,மாமா கிட்டே சொல்ல முடியலையே’ என்று கவலைப் பட்டுக் கொண்டு எஸ்தர் வீட்டுக்குப் போய் விட்டாள்.
சுகன்யா உடல் நிலை ரொம்ப மோசமாகி அவளால் பேசவே முடியலே.அவள் வெறும் சைகை மட்டும் காட்டி வந்தாள்.அவளுக்கு கொஞ்சம் ஆகாரம் கொடுக்க முயன்ற போது அந்த உணவு கூட உள்ளேயே போகவில்லை.அவள் பசியால் துடித்தாள்.பிறகு டாகடர்கள் உணவை ஊசி மூலமாகத் தான் சுகன்யாவுக்கு செலுத்தி வந்தார்கள்.ஆனால் அந்த உணவும் அவள் உடம்பில் செல்லவில்லை.
மூன்று நிமிஷத்துக்கு எல்லாம் சுகன்யா மூச்சு நிரந்தரமாக நின்று விட்டது.பிரேமா அவள் உடல் மீது விழுந்து கதறி கதறி அழுதாள்.கொஞ்ச நேரம் ஆனதும் பிரேமா மெல்ல தன் நிலைக்கு வந்தாள்.மோகன் ஹாஸ்பிடலுக்கு பணம் கட்டி விட்டு சுகன்யா பூத உடலை ‘மார்ச்சுவா¢யில்’ வாங்கிக் கொண்டு போய் அடக்கம் பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தான்.சுகன்யா இல்லாத வீடு இருவருக்கும் மயானம் போல இருந்தது.மிகவும் கவலை பட்டுக் கொண்டு வந்தார்கள்.
எஸ்தர் தன் ஆறுயிர் தோழி சுகன்யா சொன்னதை அவ அக்கா,மாமா கிட்டே சொல்ல அவ வீட்டுக்கு வந்தாள்.எஸ்தரை பார்த்த பிரேமா கண்களில் கண்ணிரோடு “வா எஸ்தர் சுகன்யா நம்மை எல்லாம் விட்டுட்டு போயிட்டாம்மா” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.தன் ஆருயிர் தோழி இறந்து விட்டாள் என்கிற செய்தியை கேட்டதும் எஸ்தரும் அழுதாள்.
எஸ்தருக்கு சுகன்யா சொன்ன விஷயத்தை எப்படி அவர்களுக்கு சொல்வது என்று யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தாள்.
நல்ல வேளையாக மோகன் எஸ்தரைப் பார்த்து “எஸ்தர்,சுகன்யா தனக்கு கல்யாணம் ஆகலை யேன்னு எப்போதாவது உன் கிட்டே கவலைப் பட்டு.ஏதாச்சும் சொல்லி வருத்தப் பட்டாளா” என்று கேட்டதும் எஸ்தருக்கு கொஞ்சம் ¨தரியம் வந்து தன் தொண்டையை கனைத்து கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
முதலில் அவளும் சுகன்யாவும் ஒரு நாள் சாயங்காலம் பள்ளிக்கூடத்தில் வாலிபால் ஆடி விட்டு வீட்டுக்கு வரும் வழியிலே ரெண்டு ‘கயவாளி பயங்கள்’ அவர்கள் தோழி சரஸாவுக்கு நடந்தின ‘கோர சம்பவத்தை’ பற்றி சொல்லி எஸ்தர் அழுதாள்.
பிறகு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “ஆன்டி,அங்கிள்,அந்த ‘கயவாளி பயங்க’ செஞ்ச ‘கோர சம்பவத்தை’ பாத்த பிறகு எங்க ரெண்டு பேருக்கும் எங்களுக்கு பருவம் வந்தவுடன் எங்க பேர் மேலே எந்த ஆண் வாடையே விழக்கூடாதுன்னு நாங்க முடிவு எடுத்து கிட்டோம்.எங்க மத வழக்கம் படி நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாம ஒரு ‘கன்னி ஸ்திரியாக’ மாறி என்னை காப்பத்தி கிட் டேன்.ஆனா பாவம் சுகன்யாவுக்கு ஒரு வழியும் தெரியாம தவிச்சு வந்தா.இந்த விஷயத்தே உங்க கிட்டே சொல்ல அவளுக்கு ¨தரியம் இல்லே.அதனால் தான் அவளை பொண்ணு பாத்தவங்க கிட்டே எல்லாம் போன் பண்ணி அவங்க மனசை கலைச்சா.நீங்க பாத்த ஜோஸ்யர் கிட்டே பொய் சொல்ல சொன்னா.என்னை பாத்து ‘எஸ்தர்,உங்க மத்திலே நீ ஒரு ‘கன்னி ஸ்திரியாக’ மாறி,உன்னை காப்பா த்தி கிட்டே.ஆனா எங்க மதத்து கடவுள் எனக்கு இந்த ‘உடமபே’ கொடுத்து,என் மேலே எந்த ஆண் வாடையும் படாம காப்பாதி இருக்கார்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் கூடிய சீக்கிரம் இந்த உலகத்தே விட்டு போவ போறேன்.எஸ்தர்,நான் செத்து போன பிறவு,நீ என் அக்கா, மாமா, கிட்டே நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி,நான் செஞ்சதையும் கொஞ்சம் சொல்ல முடியுமா’ன்னு திக்கி திக்கி கேட்டா.அந்த நேரம் பாத்து நீங்க ரெண்டு பேரும் டாகடரும் சுகன்யா ‘பெட்’ கிட்டே வந் தீங்க.நான் உங்க கிட்டே சொல்ல முடியாம வீட்டுக்குப் போயிட்டேன்”என்று சொன்னாள் எஸ்தர்.
கொஞ்ச நேரம் ஆனதும் எஸ்தர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “சுகன்யா சொல்ல சொ ன்னதே நான் உங்க கிட்டே சொல்லிட்டேன்.இனிமே அவ ஆத்மா நிச்சியமா நிம்மதி அடையும்” என் று சொல்லி விட்டு தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த வெள்ளீ சிலுவையை எடுத்து தன் கண்களில் எடுத்து ஒத்தி கொண்டு ‘ஜீஸஸை’ வேண்டிக் கொண்டாள்.
எஸ்தர் சொன்னதை கேட்ட பிரேமாவுக்கும்,மோகனுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
தங்கள் கண்களில் வழிந்து கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டு சுகன்யா ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டிக் கொண்டர்கள் பிரேமாவும் மோகனும்..