உறவுகள் உருவாகின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 6,021 
 
 

ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கா¢டம் “தம்பி” உனக்கு என் பொண்ணு கமலாவை கட்டிக்க விருப்பமா? நான் உன் விருப்பத்தை கேட்ட பின்னாடிதான் உங்க அப்பா அம்மாவை போய் கேக்கனும்னு நினைக்கிறேன்,என்றவரை சங்கடத்துடன் பார்த்தான் பாஸ்கர் சார் உங்க பெண்ணை எனக்கு கட்டித்தரனும்னு நினைச்சிங்களே அதுக்கே நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன், ஆனா இப்ப நம்ம கம்பெனிய இன்னும் முன்னுக்கு கொண்டுவர்றதுதான் எனக்கு முக்கியமான வேலை, அதனால இப்ப அதைப்பத்தி பேசவேண்டாமே, பதில் சொன்னவனிடம் ஏதோ பேசுவதற்கு வாயைத்திறக்கப்போகும்போது ஐயா என்ற குரல் அவர்கள் கவனத்தை கவர மேற்கொண்டு வந்திருந்தவர்க்கு பதில் சொல்ல இந்த பேச்சு இத்தோடு நின்று போயிற்று.

பாஸ்கர் மதுரையில் டிப்ளமோ படித்து கோயமுத்தூர் புலியகுளத்திலுள்ள இந்த கம்பெனியில் சேர்ந்தபொழுது ராமசாமி இரண்டு லேத் இயந்திரங்களையும் ஒரு ட்ரில்லிங் இயந்திரத்தையும், வைத்து ஆர்டர் எடுத்து செய்து கொண்டிருந்தார், அப்பொழுது அவருக்கு தெரிந்தவர் பாஸ்கரை இவா¢டம் கொண்டு வந்து வேலைக்கு வைத்துக்கொள், பையன் சூட்டிப்பானவன், என்று சொல்லி ஒப்படைத்தார்.அதன் பின் பாஸ்கா¢ன் சுறு சுறுப்பும் பணிவும் அவரை மட்டுமல்ல அந்த கம்பெனியையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்தது, அவர்கள் ஆர்டர் எடுத்து செய்தது போக அங்குள்ள மில்களுக்கு சின்ன சின்ன ஸ்பேர் பார்ட்ஸ்களை சொந்தமாக செய்து கொடுக்கும் அளவுக்கு கம்பெனியை உயர்த்தினான். அவனுடைய சுபாவம் அவருக்கு பிடித்துப்போக தாயில்லாமல் வளர்த்த தன் ஒரே பெண்ணை அவனுக்கே கட்டி கொடுத்து தன்னுடனே வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார், அதைப்பற்றி அவனுடன் பேசினாலும் அவன் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக்கொள்வதை பார்த்த அவர் மனம் சஞ்சலமானது, ஒரு வேளை இவனுக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்குமோ? மூன்று மாதம் விட்டுப்பிடிப்போம் என்று முடிவு செய்தார்.

மூன்று மாதங்கள் கழிந்து ஒரு நாள் அவன் தனிமையில் கிடைத்தபொழுது தம்பி நான் சொன்ன ஏற்பாட்டைபத்தி யோசிச்சயா? முடியாதுன்னு சொன்னா கூட ஒண்ணும் வருத்தப்படமாட்டேன், ¨தரியமா சொல்லு, என்று கேட்டார். பாஸ்கர் நீங்க இவ்வளவு தூரம் கேக்கறதுனால நான் சொல்றேன் சார், எனக்கு அப்பா அம்மா கிடையாது, என்னோட சின்ன வயசுலயே அவங்க இறந்துட்டாங்க, சொந்தக்காரங்க என்னை ஒரு அனாதை ஆஸ்ரமத்துல கொண்டு போய் சேர்த்துட்டாங்க, அங்கிருந்துதான் நான் டிப்ள்மோ வரைக்கும் படிச்சேன், அப்பறம் தெரிஞ்சவங்க மூலமா உங்ககிட்ட வந்து சேர்ந்தேன், இந்த மாதிரி சூழ்நிலையிலையில இருக்கற நான் எப்படி உங்க பொண்ணை கட்டிக்கமுடியும்? உங்க பொண்ணுக்கு அம்மா இல்லையே தவிர உங்களை சுத்தி அததை மாமான்னு நிறைய பேரு இருக்கறாங்க, நான் தனியாளா இருக்கறது எனக்கு எப்படியோ இருக்கு சார். இவ்வளவுதானா ! நான் கூட என்னமோ ஏதோண்ணு பயந்துட்டேன், தம்பி உங்க அப்பா அம்மா ஸ்தானத்துல் இருந்து நான் இந்த கல்யாணத்த நடத்தி வைக்கிறேன், என்றவர் கல்யாணவேலைகளுக்கான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

கல்யாணம் முடிந்து அவர்களுக்கு மலர்விழி என்ற பெண்குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் ராமசாமி ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்.ஏற்கனவே தாயில்லாமல், தவித்த கமலா, தந்தையும் இறந்ததால் மிகுந்த வேதனைப்பட்டாள். பாஸ்கர், நானும், மலரும் உனக்கு இருக்கிறோம் என்று கூறி அவள் மனதை தேற்றினான். மலர் இப்பொழுது மூன்றாவது வகுப்பு வந்துவிட்டாள்,இவர்களுக்கு திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன.பாஸ்கரன் வியாபார சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்வான்,அப்படி போகும்போது அருகில குடியிருக்கும் கமலாவின் அத்தை இவர்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்வாள், இதனால் பாஸ்கர் நிம்மதியாக வெளியூர் சென்று வியாபார விசங்களை பார்த்துக்கொள்ள முடிகிறது.ஒரு முறை வியாபார விசயமாக பாஸ்கர் கிளம்பி சென்றவன் அங்கிருந்து வீட்டுக்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என போன் செய்தான், இவளுக்கும் குழந்தைக்கும் அவன் இல்லாமல் கஷ்டமாக இருந்தது.அப்பொழுது அவள் அததை, நம்ம சொந்தக்காரங்க எல்லோரும் மதுரை, திருச்சி ராமேஸ்வரம் கோயிலுக்கு கிளம்பி போறாங்க, நான் போலாம்னு இருக்கேன், நீயும் வர்றீயா என்று கேட்டாள், அவர் வெளியூருக்கு போயிருக்கறாரே என்று இழுக்க அட போன்லதான் உங்க வீட்டுக்காரர்கிட்ட கேளேன் என்று அத்தை சொல்ல இவளும் பாஸ்கருக்கு போன் செய்து விவரங்களை தெரிவித்தாள், அவனும் தாராளமாக போய் வா,நானும் வர இரண்டு நாளாகும் அதுவரைக்கும் நீ அங்க என்ன பண்ணுவ, போய்ட்டு வா.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனம் முடித்துவிட்டு கோயில் வீதியில் வண்டி திரும்பும்பொழுது உள்ளிருந்த கமலாவின் கண்களுக்கு பாதையில் நின்று கொண்டிருப்பவன் தன் கணவன் போல தோற்றமளிப்பதாக தோன்ற நன்கு உற்று கவனித்தாள், ஆம் தன் கணவன் பாஸ்கரேதான் இவள் ஜன்னல் வழியாக அவனை கூப்பிட எத்தனித்தவள் அவன் அருகே ஒரு பதினைந்து மதிக்கத்தக்க பெண் ஒன்று அவனை ஒட்டி உரசி பேசிக்கொண்டிருக்க, அந்தப்பெண் அருகில் அவள் அம்மாவாயிருக்கவேண்டும் உடன் ஒரு அறுபது வயது மதிக்கத்தகுந்த பெண்ணும் காணப்பட்டனர்.யார் இவர்கள்? மனதில் கேள்வி தொக்கி நிற்க அதன் பின் சென்ற இடமெல்லாம் இதைப்பற்றியே சிந்தனையாயிருந்த்து. நல்ல வேலை அவளைத்தவிர வேறு யாரும் பாஸ்கரை பார்க்கவில்லை.

அந்தப்பெண் தன் கணவன் அருகில் வெகு உரிமையுடன் நிற்கிறாள் என்றால் கண்டிப்பாக அவனுக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருக்க வேண்டும். இந்த ஒன்பது வருட குடும்ப வாழ்க்கையில் இப்படி மதுரையில் தெரிந்தவ்ர் குடும்பம் இருப்பதாக இதுவரை தன்னிடம் சொன்னதேயில்லையே, யோசிக்க யோசிக்க அவளுக்கு மண்டையே வெடித்துவிடும்போல் இருந்த்து.

வீடு வந்து சேர்ந்தபொழுது பாஸ்கர் வீட்டில் இருந்தான். அவர்களை நன்கு வரவேற்றான், அவனை பார்த்தவுடன் முதலில் அவளுக்கு கோபம் வர பின் யோசித்தவள் இத்தனை வருட வாழ்க்கையில் அவன் தப்பானவன் என்று ஒரு முறை கூட சொல்லும்படி அவன் செய்கைகள் இருந்ததில்லை, இப்படியிருக்க யாரோ ஒருத்தியுடன் இருந்தான் என்று அவனிடம் சண்டைக்கு போவது அநாவசியம் என்று அவள் அறிவுக்கு பட்டது, ஆகவே நேரம் வரும்போது கேட்போம் என முடிவு செய்தாள்.குழந்தை தூங்கிவிட்டாள், பாஸ்கர் கம்பெனி கணக்கு பதிவேட்டை பார்த்துக்கொண்டிருந்தான், இவள் மெல்ல அவனருகில் சென்று ஆமா இந்த முறை எந்தெந்த ஊருக்கு போயிருந்தீங்க என்று கேட்டாள். இவன் ஆச்சர்யத்துடன் தன்னுடைய கண்களில் இருந்து பதிவேட்டை நகர்த்தி அதிசயமாயிருக்கு நீ இப்படி கேக்கறது, என்றவன் திருச்சி, அப்புறம் மதுரை, தூத்துக்குடி, போயிட்டு அப்படியே இங்க வந்துட்டேன், ஆமா ஏன் கேக்கறே? இவள் உங்களை மதுரையில பார்த்தேன் என்று இழுத்து அவன் கண்களை பார்க்க அவன் கண்களில் எந்த சலனமில்லாமல் கூப்பிட்டிடுக்கலாம்ல என்றான். இல்ல.. உங்களோட ஒரு சின்னப்பொண்ணும், அப்புறம் கொஞ்சம் வயசானவங்க இரண்டுபேரும் இருந்தாங்க..என்று இழுத்து அவனை கவனித்தாள்.

அவன் கண்களில் மெல்லிய சலனம் காட்டினான் இரூந்தாலும் அதே வார்த்தையை திரும்ப சொன்னான்,அவங்க இருந்தா என்ன? என்ன கூப்பிட்டிருக்கலாம்ல? என்று பதில் சொல்லவும் கமலாவுக்கு மனசு திருப்தியாயிற்று, அவர்கள் தப்பானவர்கள் இல்லை, இவனும் தப்பானவனுமில்லை, இல்ல நீங்க அவங்களோட ரொம்ப அந்நியோன்யமா இருந்தீங்களா, உங்களை ஏன் தொந்தரவு பண்ணனும்னு கூப்பிடாம விட்டுட்டேன்.இப்ப புரியுது இவன் அனாதயின்னு சொன்னானே,அப்புறம் எப்படி இவங்களோட இருக்கான்னுதானே உனக்கு சந்தேகம்? இல்லே அவங்க யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாம்ல.

பாஸ்கர் பெருமூச்சுடன் அவங்க பேர் ராணி அவங்களும் என்னை மாதிரி நான் வளர்ந்த அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவங்கதான், நான் சின்ன வயசுல எனக்குன்னு யாருமில்லையே அப்படீன்னு அழுதுகிட்டிருக்கும்போது அவங்கதான் எனக்கு ஆறுதலா இருப்பாங்க, நான் சின்னப்பையங்கறதால என்னை என் தமபி என் தம்பி அப்படீன்னு எல்லார்கிட்டேயும் சொல்லுவாங்க. நான் மனசளவிலே அநாதயில்ல எனக்கு ஒரு அக்கா இருக்கா அப்படீன்னு மனசை தேத்திக்குவேன், அதே மாதிரி அவங்க எனக்கு ஒரு தம்பி இருக்கான் அப்படீன்னு மனசை தேத்திக்குவாங்க, அந்த அக்கா நல்லா படிப்பாங்க, அங்கேயே எம்.பில் வரைக்கும் படிச்சு ஒரு காலேஜ்ல வேலைக்கும் சேர்ந்துட்டாங்க, அப்புறம் எங்க ஆஸ்ரமத்திலேயே இருக்கற ஒருத்தர கல்யாணம் பண்ணி வச்சு அவங்களை வெளி உலகத்துல தனிக்குடித்தனமா வாழவச்சோம், ஆனா எங்க தலை விதி ராணி அக்காவோட வீட்டுக்காரர் சுபா பிறந்து நாலு வருசத்துல்யே இறந்துட்டாரு, அக்கா மறுபடி தனியாளாயிட்டாங்க,.. என்ன இப்ப அவங்க பொண்ணு அநாதையில்ல, ஏண்ணா அந்தக்குழந்தைக்குத்தான் அம்மா ராணி அக்கா இருக்காங்களே, அவங்க மறுபடி ஆஸ்ரமம் வரலே அதுக்கு பதிலா என்னை கூப்பிட்டு துணைக்கு வச்சுட்டாங்க, அங்க அந்த குழந்தைக்கு நான் தாய் மாமனா இருந்தேன், அவங்க தான் என்னை டிப்ளமோ முடிக்க வச்சு தெரிஞ்சவங்க மூலமா கோயமுத்தூர்ல உங்கப்பாகிட்ட என்னை சேர்த்துவிட்டாங்க. நான் கோயமுத்தூர் வந்துட்டதாலே அக்காவுக்கு துணையா எங்களை மாதிரியே ஆஸ்ரமத்துல இருந்த ஒரு ஆத்தாவ அக்காவுக்கு துணையா வரவழைச்சுகிட்டோம்,அவங்களுக்கும் எங்க இரண்டு பேரையும் சின்ன வயசுல இருந்தே தெரியுமுங்கறதாலே அவங்க அக்கா கூடவே வந்து இருந்துட்டாங்க, இப்ப சுபாவுக்கு பாட்டியும் கிடைச்சுட்டாங்க, நான் மட்டும் அப்ப அப்ப போய் பார்த்துட்டு வருவேன்.

இவங்களை ஏன் கல்யாணத்துல கூட்டிட்டு வரலைன்னு சொன்னாக்க எங்க குடும்பம்னு இவங்களை காண்பிச்சா மத்தவங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு நினைச்சோம், அது மட்டுமில்லாம அக்கா நான் கல்யாணத்துக்கு வந்தா என்னை மாதிரி உனக்கும் ஆயிடும்னு வரமாட்டேன்னுட்டாங்க.நீங்க எல்லாம் உங்க சொந்தம் அப்படீன்னு சந்தோசமாயிருக்கும்போது நான் மனசுக்குள்ள என்னுடைய அக்கா,சுபா, அப்புறம் அந்த ஆத்தா அவங்களை நினைச்சு சந்தோசப்பட்டுக்குவேன்.

மறு நாள் பொழுது விடிந்தது, கண் விழித்த பாஸ்கரன் எதிரில் எங்கேயோ கிளம்புகிற மாதிரி அலங்காரத்துடன் கமலாவும். குழந்தை மலரும் நின்றிருந்தனர். இவன் இவர்களை வியப்புடன் பார்க்க மலர் அப்பா சீக்கிரம் கிளம்பு, நாம எல்லோரும் மதுரை போகணும், அங்கே எனக்கு அத்தை, பாட்டி, அக்கா எல்லாம் இருக்காங்க அவங்களை பார்க்க போகணும் சீக்கிரம் சீக்கிரம் என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *