உன் சமயலறையில்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 10,423 
 
 

அப்போது தான் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கழிந்திருந்தது, கல்யாண வீட்டில் மிஞ்சிய சாப்பாடு பலகாரம் என்டு இரண்டு மூன்று நாள் கொறித்து விட்டோம் பிறகு சொந்தகாரர் வீட்டில் விருந்து பக்கத்து வீட்டுகார்ர் வீட்டில் விருந்து என்டு சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை, ஒரு வழியாக தூரத்து எங்கள் சொந்தம் அவள் வீட்டு தூரத்து சொந்தம் என்று ஒவ்வொரு வேளை சாப்பாட்டையும் ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டு களைத்தே விட்டோம், நேற்று இரவும் கடையில் கொத்து கட்டி கொண்டே குடுத்தேன் ஒரு கதையும் இல்லை எந்த கடையில கட்டினீங்க எங்கப்பா ஆரியகுள சந்தியடியல கட்டிட்டு வாறவர் செமயா இருக்கும் இது ஒரே காஞ்சு போய் கிடக்கு என்றாள் , அவளை மேலும் கீழும் பாத்துவிட்டு என்பாட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்

அவளோட சரியா இன்னும் பழகவே இல்லை எப்பிடி வாய் விட்டு சமைக்க சொல்லி கேப்பது , தயக்கமாக இருந்தது , பொண்ணுங்க என்டா சமைக்க தான் வேண்டுமா அடுப்பங்கரையில் என் கனவுகளை தொலைக்க வேண்டுமா என்று பாரதி கண்ட புதுமை பெண்ணாக வசனங்கள் ஏதும் பேசிவிடுவாளோ என்ற பயம் வேறு

உன் சமயலறையில் நா உப்பா சக்கரையா சன் மியூசிக்கில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு தாளம் போட்டபடி பாட்டை ரசித்து கொண்டிருத்தாள் என் ராசாத்தி , மெதுவாக கதை குடுத்தேன்

என்னோட வேலை செய்யுற சேர் ஒரால் நேத்து சாப்பாடு கட்டி கொண்டுவந்து எனக்கும் தந்தார் அவர் வைப் சமச்சதாம் சொல்லி வேலை இல்ல செமயா இருந்திச்சு தெரியுமா

ஓ அப்பிடியா சரிங்க

அவளவு தான் திரும்ப டீவிக்குள் புகுந்து விட்டாள்…… இவள……

மதியம் இரண்டு மணி இருக்கும் அவளிடம் இருந்து வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஞ் நைட் சாப்பாடு வாங்க வேணாம் நான் சமச்சு வைக்கிறேன்

அவளவு தான் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல , ஒரே குலுகுலுனு ஆயிட்டன், மனிசி சமைச்சு அத அவ முன்னாடியே சாப்பிட்டு இஞ்சா வாடினு அவள கூப்பிடுட்டு அவ கைக்கு முத்தம் குடுத்து எப்பிடிடீ இவளவு ருசியா சமைக்கிறா என்டு சொல்ல அவ வெக்கத்தில சிவந்து போக புருசன் பொண்டாட்டிக்குள்ள இத விட வேற என்ன சந்தோசம் இருந்திட போகுது ,

எப்படா வேல முடியும் வீட்ட போகலாம் என்கிற போல இருந்திச்சு என்ன சமைச்சு வச்சிருப்பாள் என்ட யோசனைவேற , ஒரு மாதிரி சூரியனை மேற்க மறைய பண்ணுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிட்டு ……

காரை பார்க் பண்ணிட்டு லப்பையும் காரிலையே விட்டுட்டு ஒவ்வொரு படியா ஏறுற நான் அனைக்கு ரண்டு ரண்டு படியா தவி குதிச்சு உள்ள போனன் , கொடியில காஞ்ச உடுப்புக்களை அடுக்கி வச்சுட்டு இருந்தாள் , என் பார்வையே நா அலையிறத காட்டி குடுத்திருக்கும் போல குளிச்சுட்டு வாங்க சாப்பிடுவம் என்டாள் , குளிக்க வேணுமா என்கிற போலயே பார்த்தேன் ஒன்னும் பேசாமல் அவள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டாள்

ஷவரில் போய் நின்றுவிட்டு டக் டக் என்டு சோப்பையும் போட்டு விட்டு ஓடி வந்து விட்டேன் , அதுகுள்ள குளிச்சிட்டிங்களா என்று கேப்பாளோ என்டு நினைத்தேன் , கேக்கவில்லை புரிந்து கொண்டாள் போல நான் குளிப்பதில் இப்பிடி தான் போல என்று …

டைனிங் டேபிளில் இவளவு உற்சாகமாக இதுவரை நாள் இருந்ததில்லை , முதன் முதலாக என் மனைவி சமைத்ததை சாப்பிட போகிறேன் அல்லவா , முதல் தாய்ப்பால் குடித்த தருணம் போல் இதுவும் சிறந்த தருணம் அல்லவா

இப்பிடி தான் என் மனம் எங்கோ ஓடிக்கொண்டிருக்க தட்டில் இரண்டு ரொட்டிகளை வைத்தாள் , தொட்டுக்க சட்னீ சாம்பார் … என்ன என்ன ரொட்டிக்கு சட்னீ ஆ?? ஏதும் வெரட்டியாக பண்ணியிருப்பாள் போல … எனக்கு சாப்பாடை வைத்து விட்டு முன்னுக்கே நின்டுகொண்டிருந்தாள் … முகத்தில் ஏதோ பெரிதாய் சாதித்ததாய் ஒரு மலர்ச்சி அவளுக்கு …. ஒரு கையால் ரொட்டியை சிறுதுண்டு பியித்து எடுத்து….. எடுத்து….. பியித்து …….

ஐயோ வரவில்லையே இப்போது இரண்டு கைகளாலும் முயற்சி செய்தே…… அதுவரும் பாடில்லை அப்போது தான் அந்த ரொட்டியை உத்து பார்த்தேன் இவளவு மொத்தத்தில் ஒரு ரொட்டியா ….. என்ர முருகா இப்போது சாப்பிட்டே ஆக வேண்டும் என்ன செய்ய … தண்ணி எடுத்து வர சொல்லி அவளை உள்ளே அனுப்பிவிட்டு ஒரு வழியாக நாலு துண்டாக்கி அதை சாம்பாறில் போட்டு வாயில் வைத்தால் ….. அது கைக்கிறதா புளிக்கிறதா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு ரகம் , விழுங்கியே விட்டேன் , சின்ன வயதில் அம்மா முன்னாடி தடியோடு நின்டு பனடோல் குடுக்க அதை ஒரே மடக்கில் முழுங்கிய ஞாபகம் தான் வந்தது …. நேற்று அவளை முத்தமிட்டு செல்லும் வழியிலும் இப்பிடிதான் , ஒரே கைப்பு , ஒரு வழியாக அந்த ரொட்டியை (?) காலி செய்துவிட்டு கண்ணெல்லாம் கலங்கிய படி அவளை பார்க்க…. கேட்டாளே ஒரு கேள்வி !!

ஏங்க … இன்னொரு தோசை வெக்கவா ??

Print Friendly, PDF & Email

1 thought on “உன் சமயலறையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *