பரமேஸ்வரனும்,பார்வதியும் நங்க நல்லுரில் ஒரு சின்ன வாடகை வீட்டிலே வசித்து வந்தார்கள்.அவர்களுக்கு குழந்தைகளே பிறக்கவில்லை.கொஞ்ச வருடங்கள் மனம் உடைந்த இருவரும்,வருடங்கள் ஆக,ஆக அந்தத் துக்கத்தை மறந்து வாழ்ந்து வந்தர்கள்.
பரமேஸ்வரன் ஒரு தனியார் கம்பனியிலே ஒரு ‘ஆபீஸரா’க வேலை செய்து வந்தார்.
பரமேஸ்வரனின் ஒரே தம்பி ராமசமி,அவர் குடும்பத்துடன் மாம்பலத்தில் வசித்து வந்தார் ராமசாமியின் ஒரே பிள்ளை மணி கல்யாணம் பண்ணிக் கொண்டு, மனைவி சாந்தாவுடன் அப்பா,அம்மாவுடன் ஒன்றாக மாம்பலத்தில் வாழ்ந்து வந்தான்.
ராமசாமியும்,அவர் மணைவியும் மாதத்திற்கு ஒரு தடவை நங்க நல்லுருக்குப் போய் அண்ணாவையும்,அண்ணியையும் பார்த்து விட்டு வந்துக் கொண்டு இருந்தார்கள். அதேப் போல பரமேஸ்வரனும்,பார்வதியும் மாதம் ஒரு தடவை மாம்பலத்திற்குப் போய், தன் தம்பியின் குடுமபத்தை பார்த்து விட்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.
ராமசாமியும் அவன் மணைவியும் ‘டெங்கு’ காய்ச்சல் வந்து வைத்தியம் பலிக்காமல் திடீர் என்று இறந்து விட்டார்கள்.உடனே பரமேஸ்வரனும்,பார்வதியும் மாம்பலத்திற்கு வந்து,இரண்டு பேருடைய ‘இறுதி சடங்கில்’ கலந்துக் கொண்டு,ரெண்டு நாள் அங்கே இருந்து விட்டு மணி க்கும்,அவன் மணைவிக்கும் அறுதல் சொல்லி விட்டு நங்க நல்லுருக்கு வந்தார்கள்.
பரமேஸ்வரன் ‘ஆபீஸ்’ போய் வந்துக் கொண்டு இருந்த நாட்களில் பார்வதி தனியாகப் போய் வீட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களையும்,காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வந்துக்கொண்டு இருந்தாள்
முப்பது வருடங்கள் ஓடி விட்டது.
தனக்கு கமபனி கொடுத்த ‘ரிடையர்மண்ட்’ பணத்தை அருகில் இருந்த ‘பாங்கில்’ போ ட்டு விட்டு,அந்த பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாசா மாசம் ‘வித்ட்ரா’ பண்ணிக் கொண்டு வந்து குடும்பம் நடத்தி வந்தார் பரமேஸ்வரன்.
‘ரிடையர்’ ஆன மறுதினத்தில் இருந்து,எல்லா இடங்களுக்கும் பரமேஸ்வரனும், பார்வதியும் ஒன்றாகப் போய்,வீட்டுக்கு வேண்டிய சாமான்களையும் காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வந்து குடித்தனம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.
மணியின் பிள்ளை சிவராமன் நன்றாகப் படித்து விட்டு,மும்பையிலே ஒரு பெரிய கம்பனியிலே வேலை பார்த்து வந்தான்.உறவிலேயே ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணீ வைத்தார்கள் மணியும்,அவன் மணைவியும்.அந்த கல்யாணத்திற்கு பரமே ஸ்வரனும்,பார்வதியும் போய் மண மக்களை ஆசிர்வாதம் பண்ணி விட்டுப் போனார்கள்.
ஒரு சினிமாவுக்கு போவது என்றாலோ,ஒரு ஹோட்டலுக்குப் போவது என்றாலோ, வெள் ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போவது என்றாலோ,திங்கட் கிழமைகளில் சிவன் கோ விலுக்கு போவது என்றாலோ பரமேஸ்வரணும் பார்வதியும் ஒன்றாகத் தான் போய் வந்துக் கொ ண்டு இருந்தார்கள்.எல்லா இடத்துக்கும் ஒன்றாகத் தான் போய் வந்துக் கொண்டு இருந்தார் கள் இருவரும்.
அவர்கள் வசித்து வந்த தெருவில் இருந்த அனைவரும் அவர்கள் இருவரும் எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய் வருவதைப் பார்த்து நிறைய தடவை “பேருக்கு ஏத்தார் போல ‘ரிடையர்’ ஆன பிற்பாடு நீங்க ரெண்டு பேரும் எல்லா இடத்துக்கும் ஒன்னா போய் வறீங்களே. உங்க ரெண்டு பேருக்கும் உங்க பெரியவங்க எப்படி இப்படி சரியான,பொருத்தமான ஒரு பேரை வச்சாங்க” என்று கிண்டலாகக் கேட்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.
சாந்தா ஒரு நாள் திடீர் என்று மாரடைப்பால இறந்து விட்டாள்.பரமேஸ்வரனும் பார்வதியும் மாம்பலத்திற்குப் போய் சாந்தா இறுதி சடங்கில் கலந்துக் கொண்டு விட்டு,மணிக்கு ஆறு தல் சொல்லி விட்டு நங்க நல்லுருக்கு வந்தார்கள்.அன்றில் இருந்து மணி தனியாக இருந்து வந்தான்.
மணி மாதம் தவறாமல் ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நங்க நல்லுருக்கு வந்து அவன் வயதான பெரியப்பாவையும் பெரியம்மாவையும் பார்த்து விட்டுப் போய்க் கொண்டு இருந்தான்.மணி வந்ததும் பார்வதி மணிக்கு ‘டிபன்’ காபிப் போட்டுக் கொடுத்து விட்டு அவனுக்கு இரவு சாப்பாடும் தயார் பண்ணீ அவனை சாப்பிட்டுப் போக சொல்லுவாள்.மணியும் பெரியம்மா பண்ண இரவு சாப்பாட்டைசாப்பிட்டு விட்டு மாம்பலம போவான்.
பரமேஸ்வரனும், பார்வதியும் காலையில் படுக்கை விட்டு எழுந்தரிக்கும் போது ஒருவர் மற்றோருவருக்கு குரல் கொடுத்து விட்டுத் தான் எழுந்துக் கொள்வார்கள்.
மதியம் பண்ணிரண்டு மணிக்கு,இருவரும் ‘டைனிங்க் டேபிளி’ல் ஒன்றாக உடகார்ந்துக் கொண்டு சாப்பிட்டு வந்தார்கள்.
வெளியே எங்கேயும் போகாத நாட்களில் சாயங்காலத்தில் ‘டீயை’க் குடித்து விட்டு, இரு வரும் ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டு,‘டீவீ’யிலே வரும் சினிமா,செய்திகள்,’சீரியல்கள்’ எல் லாம் பார்த்து விட்டு,இரவு சாப்பாடை இருவரும் ஒன்றாக ‘டைனிங்க் டேபிளி’ல் உட்கார்ந்துக் கொண்டுச் சாப்பிட்டு விட்டு,இருவரும் ஒன்றாகப் படுக்கப் போவார்கள்.
பரமேஸ்வரனுக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகி இருந்தது.அவருக்கு தள்ளாமை அதிக மாக இருந்தது.பார்வதிக்கு வயது எழுபத்தி ரெண்டு ஆகி இருந்தது.பார்வதிக்கு முதுகு வலியும் கால் முட்டி வலியும் இருந்து வந்தது.வீட்டை பெருக்கி, துடைக்க ஒரு வேலைக்காரி மட்டும் இருந்து வந்தாள்.இருவரும் நிறைய யோஜனைப் பண்ணி விட்டு சமையலுக்கு ஒரு சமையல் கார அம்மாவை ஏற்பாடு பண்ணீனார்கள்.அந்த சமையல் கார அம்மாவை சமையல் வேலைக்கு வரும் போது காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள் பார்வதி.
தினமும் அதிக நேரம் நின்றுக் கொண்டு காய்கறிகள் எல்லாம் நறுக்கி விட்டு,சமையல் வேலைப் பண்ணிக் கொண்டு வந்த பார்வதிக்கு,இப்போது சமையல்கார அம்மா எல்லா வேலை களையும் செய்து வந்ததால், நிறைய நேரம் ‘ரெஸ்ட்’ கிடைத்து வந்தது.தினமும் கடைக்குப் போய் காய்கறிகள் வாங்கிக் கொண்டு வரும் வேலை பரமேஸ்வரனுக்கு இல்லாததால் அவரும் நிறைய ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்த நேரம் பார்த்து இந்தியாவில் ‘கரோனா வியாதி’ பரவி வரவே சென்னையிலே இரு ந்த ஆளும் கட்சி ‘லாக் டவுன்’ அமுலுக்குக் கொண்டு வந்தார்கள்.
சென்னையிலே பஸ்கள் ஓடாமல் இருந்ததால் மணிக்கு நங்க நல்லூருக்குப் போய் பெரி யப்பாவையும் பெரியம்மாவையும் பார்க்க முடியவில்லை.அவன் வெறுமனே ‘போனில்’ அவர்கள் சௌக்கியத்தைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.
‘லக் டவுன்’அமுலில் இருந்ததால் பரமேஸ்வரனும் பார்வதியும் எங்கேயும் வெளியே போகாமல்,அவர்கள் வழக்கமாக வாங்கும் கடைகளுக்கு போன் பண்ணி,அவர்களுக்கு வேண்டிய சாமான்கள் காய்கறீகள் எல்லாம் ‘ஆர்டர்’ பண்ணீனார்கள்.
சாமான்களை கொண்டு வந்த ஆள் வாசலுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அடித்ததும், பார்வதி “நீங்க போவாதீங்க.நான் போய் வாங்கிக் கிட்டு வறேன்”என்று சொல்லி விட்டு தன் முகத்திலே அரசாங்கம் சொன்ன முகக் கவசதை அணிந்துக் கொண்டு,’அவள் ‘ஆரடர்’ பண் ணி இருந்த சாமான்கள் சரியாக வந்து இருக்கிறதா’ என்று ‘செக்’ பண்ணி விட்டு,சாமான்களை எல்லாம் வாங்கிக் கொண்டு கடைக்கார ஆளுக்கு அவன் சொன்ன பணத்தைக் கொடுத்து விட்டு கதவை மூடி விட்டு வந்துக் கொண்டு இருந்தாள்.
அடுத்து காய்கறிகாரன் வந்து ‘காலிங்க் பெல்லை’ அடித்ததும் பார்வதி முகக் கவசம் அணிந்துக் கொண்டு ‘அவள் ‘ஆர்டர்’ பண்ணி இருந்த காய்கறிகள் எல்லாம் கொண்டு வந்து இருக்கிறானா என்று ‘செக்’ பண்ணி விட்டு’ கொண்டு வந்த காய்கள் முத்தலாகவோ,அழுகலா கவோ இருந்தால் அவைகளை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டு,நல்ல காய்கறிகள் மட்டும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு கதவை மூடி விட்டு வந்துக் கொண்டு இருந்தாள்.
வேலைக்காரி வேலைக்கு வராததால்,வீட்டை தினமும் பெருக்கி துடைக்கு வேலையை இருவர்கள் செய்ய வேண்டியதாய் ஆயிற்று.அதே போல சமையல் கார அம்மா வேலைக்கு வராததால்,காய் கறிகள் நுறுக்கும் வேலை சமையல் வேலை இவர்கள் தலையில் விழுந்தது.
பரமேஸ்வரன் தினமும் முடியாமல் வீட்டைப் பெருக்கி,துடைத்து வந்தார்.
பரமேஸ்வரன் பல தடவை பார்வதி இடம் “பார்வதி, நீயே தினமும் எல்லாம் வாங்கிக் கிட்டு,அவனுக்கு பணத்தை குடுத்துட்டு வறே.இன்னேக்கு நான் வாங்கியாறேனே” என்று கேட்டால் உடனே பார்வதி “வேணாங்க,உங்களுக்கு ரொம்ப வயசு ஆவுது.இந்த ‘கரோனா வியாதி’ ரொம்ப பொல்லாத வியாதியாங்க.கடைலே வர பையன் கிட்டே உங்களுக்கு தொத்திக் கிட்டா ரொம்ப கஷ்டங்க.தவிர இந்த வியாதி ஆம்பளைங்களுக்கு சீக்கிரமா வறதுங்களாங்க” என்று சொல்லி விட்டு பார்வதி பரமேஸ்வரனை எந்த சாமானையும் வாங்க விடாமல் அவளே கதவைத் திறந்து வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.
முடியாமல் பார்வதி மறுபடியும் காய்கறிகளை நறுக்கி,ரெண்டு வேளையும் சமையல் வேலையை செய்து வர ஆரம்பித்தாள்.இதனால் பரமேஸ்வரனுக்கு தள்ளாமை அதிகம் ஆகிக் கொண்டு வந்தது.பார்வதிக்கு கொஞ்சம் குறைந்து வந்த முட்டி வலியும்,முதுகு வலியும் அதிகம் ஆகத் தொடங்கியது.
பரமேஸ்வரனுக்கு என்பது வயது ஆகி,பார்வதிக்கு எழுபத்தி ஏழு வயது ஆகியது.
அன்று ஞாயிற்றுக் கிழமை.மணி பெரியப்பாவுக்கு ‘போன்’ பண்ணினான்.’போனை’ எடுத்துப் பேசினார் பரமேஸ்வரன் ”மணி,எனக்கு இந்த மாசம் என்பது வயசு முடிது.பெரியம்மா வுக்கு எழுபத்தி ஏழு வயசு முடிது.நாங்க ரெண்டு பேரும் ‘ஜோடிப் பறவை’ போல,இந்த வீட்லே வாழ்ந்துக் கிட்டு வரோம்.வெளிலே எங்கேயும் போவ முடியறதில்லே.’லக் டவுன்’ இருக்கிறதா லே வேலைக்காரி வீட்டு வேலைக்கு வறதில்லே.அவ செஞ்சுக் கிட்டு இருந்த வேலேயே நான் முடியாம இப்போ செஞ்சுக் கிட்டு வறேன்.சமையல்கார அம்மாவும் வேலேக்கு வறதில்லே.அவ வேலேயே பெரியம்மா முடியாம செஞ்சுக் கிட்டு வறா.ஒருத்தருக்கு ஒருத்தர் முடிஞ்ச உதவியே பண்ணி கிட்டு காலத்தை ஓட்டிக் கிட்டு வறோம்.ரெண்டு பேருக்கும் ரொம்ப முடியலே.ஏதோபிரியாம ஒன்னா வாழ்ந்துக் கிட்டு வரோம்.ஆனா அந்த கடவுள் எங்க ரெண்டு பேர்லே ஒருத்த ரே இட்டுக் கிட்டார்னா,உயிரோடு இருக்கிற ஒருததர் தனிமைலே வாடி வரணும்” என்று கண்க ளில் கண்ணீர் முட்டச் சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார்.
பெரியப்பா சொன்னதைக் கேட்ட மணி மிகவும் வருத்தப் பட்டான்.
சற்று நேரம் கழித்து பார்வதி “ஆமாங்க,எனக்கும் அப்படி தாங்க படுது.அந்த கடவுள் தான் ஒரு நாளைக்கு நம்ம ரெண்டு பேர்லே இருத்தரே தனிமையிலே தள்ளப் போறாரு” என்று சொல்லும் போது அவள் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே” நான் போய் நீங்க தனியா இருந்தா உங்க தம்பிப் பையன் மணி வந்து உங்களுக்கு உதவியா இருந்து வரு வான்.நான் தனியா இருந்து வறது ரொம்ப கஷ்டங்க.நான் ஒரு ‘சுமங்கலி’யா போவணுங்க.நான் தினமும் இதேத் தான் அந்த கடவுள் கிட்டே வேண்டிக் கிட்டு வறேன்.ஆனா நான் வேண்டிக் கிட்டா மாதிரி நடக்கணுமே”என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.
‘இதே நினைச்சுத் தான் பாரவதி நம்மே வாசல்லே போய் எதையும் வாங்கியாறாதீங்க ன்னு சொலி வறாளா’ என்று தன் மனதில் நினைத்துக் கொண்டார் பரமேஸ்வரன்.
‘லாக் டவுன்’ முடிந்து சென்னை அரசாங்கம் ‘பஸ்’ விட ஆரம்பித்தார்கள்.
அன்று காலையில் எழுந்ததும் பார்வதிக்கு நல்ல ஜுரம் அடிச்சுக் கிட்டு இருந்தது. பார்வதி தன் கணவனிடம் “எனக்கு ரெண்டு நாளாவே ஜுரம் அடிச்சிக் கிட்டு இருந்ததுங்க. சரியாப் போயிடும்,சரியாப் போயிடும்ன்னு நினைச்சு கொஞ்சம் கஷாயம் போட்டுக் குடிச்சிப் பாத்தேன்.ஆனா என் ஜுரம் இன்னும் குறையலே.இன்னிக்கு காலையிலே கொஞ்சம் அதிகமா இருக்குங்க.கூடவே சளியும் கட்டிக் கிட்டு,மூச்சு விடறது கொஞ்சம் சிரமமா இருக்குதுங்க” என்று கொஞ்சம் கஷ்டப் பட்டுக் கிட்டு சொன்னாள்.
பார்வதி சொன்னதைக் கேட்ட பரமேஸ்வரன் மிகவும் கவலைப் பட்டார்.மணைவியின் நெத்தியைத் தொட்டுப் பார்த்து விட்டு “நல்ல ஜுரம் அடித்துதே பாரு.இப்ப தான் ‘லாக் டவுன்’ முடிஞ்சி இருக்கே.நாம மெல்லமா நம்ம தெருக் கோடிலே இருக்கிற ‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போய் காட்டி ஏதாச்சும் மாத்திரை வாங்கிக் கிட்டு வரலாம்.அங்கே இருக்கிற பெரிய டாக்டரே நம்ம ரெண்டு பேருக்கும் முப்பது வருஷத்துக்கு மேலேயே தொ¢யுமே” என்று சொல்லி விட்டு தன் ‘ஷர்ட் பாண்ட்டை’ப் போட்டுக் கொண்டார்.தன்னுடைய முக கவசத்தையும் போட்டுக் கொண்டார்.
இருவரும் சூடாக ‘காபி’யைக் குடித்தார்கள்.
பார்வதியும் தன் முக கவசததைப் போட்டுக் கொண்டாள்.மணி பத்தடித்ததும் இருவரும் முடியாமல்,மெல்ல நடந்து,தெருக் கோடியில் இருக்கும் தங்களுக்கு பழக்கமான ‘நர்ஸிங்க் ஹோ மு’க்குப் போய் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.
பஸ்கள் ஓட ஆரம்பிக்கவே மணி தன் பெரியப்பாவைப் பார்த்து வர நினைத்து அவருக்கு ‘போன்’ பண்ணினான்.அந்தப் பக்கத்தில் இருந்து ”இந்த டெலிபோன் எண் புழக்கத்தில் இல்லை” என்று பதில் வந்துக் கொண்டு இருந்ததது.மனி ஒரு பத்து தடவைக்கு மேலே ‘போன்’ பண்ணியும், அதே பதில் தான் வந்துக் கொண்டு இருந்தது.அவன் ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு பஸ் ‘ஸ்டாண்டுக்கு’ வந்தான்.
நங்க நல்லூருக்குப் போகும் பஸ்ஸே இல்லை.அங்கே இருந்த அதிகாரி இடம் மணி விசாரித்த போது அவர் “ஒவ்வொரு இடத்துக்கும் நாங்க ‘பஸ்’ விடவோம்ங்க.கொஞ்சம் பொறு மையா இருங்க” என்று சொன்னதும் மணி அங்கு இருந்த ஒரு ‘சீட்’டில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.
பெரிய டாக்டர் வந்ததது பரமேஸ்வரன் பார்வதி உடம்பைப் பற்றி சொல்லி விட்டு தள்ளி இருந்த ஒரு சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டார்.
உடனே அவர் பார்வதியின் ஜுரத்தை ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு இருந்தார்.அந்த நேரம் பார்த்து சென்னை சுகாதார இலாக்காவினர் அந்த ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு வந்தார்கள்.
பார்வதியை பா¢சோதனை பண்ணிக் கொண்டு இருந்த டாக்டரைப் பார்த்து “நாங்க ‘கரோனா ஸ்க்¡£னிங்க்’ பண்ண வந்து இருக்கோம்.உங்க ‘நர்ஸிங்க் ஹோமிலே’ ‘கரோனா வியாதி’ வந்தவங்க யாராச்சும் இருக்காங்களா” என்று கேட்டு விட்டு டாக்டர் பார்வதிக்கு பார் த்த ஜுரத்தைப் பார்த்தார்கள்.
உடனே அவர்கள் பார்வதியை இன்னும் நன்றாகப் பா¢சோதனைப் பண்ணி விட்டு டாக் டா¢டம் ரகசுயமாக “இந்த அம்மாவுக்கு ‘கரோனா சிம்டம்ப்ஸ்’ இருக்கு.நாங்க இவங்களே தனி மைப் படுத்தியாகணும்.இந்த அம்மா அவங்க வீட்டுக்குப் போனா அந்த பெரியவருக்கும் இந்த ‘இன்பெக்ஷன்’ வர ‘சான்ஸ்’இருக்குது.நாங்க இவங்களுக்கு சீக்கிரமா வைத்தியம் பண்ணி, இவங்க உடம்பே சரியாக்கி வீட்டுக்கு அனுப்பிடுவோம்” என்று சொன்னார்கள்.
அந்த பெரிய டாக்டர் பயந்துப் போய் அவர்களிடம் ரகசியமாக “ஓ.கே.அவங்க உடம்பு குணம் ஆனதும் என் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ உங்க ‘ஆம்புலன்ஸ்’லே அனுப்பிடுங்க.நான் அந்த என் பியூனை கூட அனுப்பி அந்த அம்மாவை அவங்க வீட்லே சேத்திடுவேங்க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு முப்பது வருஷத்துக்கு மேலே பழக்கம்.இவங்க ரெண்டு பேரும் இந்த தெருவிலே தான் இருக்காங்க” என்று சொன்னார்.உடனே அந்த சுகாதார இலாக்கா டாக்டர் நான் அப்படியே பண்றேன் டாக்டர்” என்று சொல்லி விட்டுப் போனார்.
உடனே அந்த சுதாதார இலாக்காவில் வந்த ரெண்டு பெண்கள் பார்வதியை அழைத்துக் கொண்டு ‘பார்கிங்க்’ பண்ணி இருந்த ‘ஆம்புலன்ஸில்’ ஏற்றினார்கள்.
ரெண்டு பெண்கள் பார்வதியை அழைத்துக் கொண்டு போவதைப் பார்த்த பரமேஸ்வரன் பயந்துப் போய் மெல்ல எழுந்து வந்து பெரிய டாக்டரைப் பார்த்து “அந்த ரெண்டு பொண்ணுங்க என் சம்சாரத்தே எங்கே இட்டுக் கிட்டு போறாங்க டாக்டர்”என்று கத்திக் கேட்டார்.
உடனே அந்த பெரிய டாக்டர் பரமேஸ்வரனிடம் அந்த சுகாதார இலக்கா டாக்டர் சொன் ன விஷயத்தை விவரமாகச் சொன்னார்.
“சார்,அவங்க பண்ணது தான் ரொம்ப ‘கரெக்ட்’.நானே உங்க எப்படி சொல்றதுன்னு யோஜனைப் பண்ணிக் கிட்டு இருந்தேன்.உங்க மணைவி க்கு நான் ஏதாச்சும் மாத்திரை குடுத்து வீட்டுக்கு அனுப்பினா,அந்த ‘கரோனா இன்பெக்ஷன்’ உங்களுக்கும் வரும்.உங்க வயசு அப்படி.உங்க இப்போ சம்சாரத்தே தனிமை படுத்தியே ஆவணும்.நீங்க பயப் படாதீங்க அவங்க உங்க சம்சாரத்துக்கு சீக்கீரமா வைத்தியம் பண்ணி,உடம்பே சரியாக்கி வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.நான் அவங்க கிட்டே ‘அவங்க உடம்பு குணம் ஆனதும் என் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ உங்க ‘ஆம்புலன்ஸ்’லே அனுப்பிடுங்க.இவங்க ரெண்டு பேரும் எனக்கு முப்பது வருஷத்துக்கு மேலே பழக்கம்.இவங்க ரெண்டு பேரும் இந்த தெருவிலே தான் இருக்காங்க’ ன்னு சொல்லி இருக்கேன்.உங்க சம்சாரம் குணம் அடைஞ்சு என் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு வந் துவுடன்,நான் என் பியூன் கூட உங்க சம்சாரத்த்தே உங்க வீட்டுக்கு அனுப்பி வக்கிறேன்.நீங்க எதுக்கும் உங்க வீட்டு ‘போன்’ நம்பரை எனக்குக் குடுங்க” என்று சொன்னார்.
பரமேஸ்வரன் டாக்டர் சொன்னதைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டார்.பிடிக்காமல் தன் வீட்டு ‘போன்’ நம்பரை டாக்டா¢டம் கொடுத்தார்.
‘ஏண்டா நாம பார்வதியே இந்த டாக்டர் கிட்டே அழைச்சுக் கிட்டு வந்தோம்.வீட்லேயே வச்சுக் கிட்டு வந்துக் கிட்டு இருந்தா,அந்தப் பாழாப் போன ‘கரோனா’ எனக்கும் தொத்திக் கிட்டு இருந்து இருக்குமே.நாமும் பாரு கூடவே அந்த டாக்டர் கிட்டப் போய் இருக்கலாமே’ என்று தன் தன் தலை விதியை நொந்துக் கொண்டு,மெல்ல முடியாமல் அந்த வேகாத வெய்யி லிலே நடந்து வீட்டுக்கு வந்து, பூட்டைத் திறந்து ஹாலில் இருந்த ‘பான் ஸ்விட்ச்சை ஆன்’ பண்ணி விட்டு,’சோபா’விலே உட்கார்ந்துக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்.
கொஞ்ச நேரம் ஆனதும் ஹாலில் இருந்த ‘டீவீ’யை ஆன் பண்ணினார்.
அப்போது வந்த செய்தியில் “இது வரை உலகத்தில் ‘கரோனா’ வியாதிக்கு உயிர் இழந்த வர்கள் எண்ணிக்கை மூனு லக்ஷத்து அறுபதாயிரத்தை கடந்து இருக்கு” என்று சொன்னதும் பரமேஸ்வரன் கோவம் வந்து ‘டீவீ’யை ‘ஆப்’ பண்ணீனார்.
அவருக்கு தாகம் அதிகமாக இருக்கவே, அவர் ‘ப்ரிட்ஜை’த் திறந்து,அதில் பார்வதி நேற்று இரவு வைத்து இருந்த தயிரை எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி,மோராக்கி அதைக் குடித்தார்.
மணி ரெண்டு மூனு பஸ் மாறி நங்க நல்லுருக்கு வந்து பெரியப்பா வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.
முடியாமல் பரமேஸ்வரன் மெல்ல எழுந்துக் கொண்டு போய் வாசல் கதவைத் திறந்தார்.
பெரியப்பாவைப் பார்த்ததும் “பெரியப்பா,நான் காத்தாலே இருந்து உங்களுக்கு ‘போன்’ பண்ணி கிட்டு இருக்கேன்.ஆனா உங்க ‘போன்’லே இருந்து ‘இந்த டெலிபோன் எண் புழக் கத்தில் இல்லை’ என்று பதில் வந்துக் கொண்டு இருந்திச்சி.ஏன் பெரியப்பா, உங்க ‘போன்’ வேலே செய்யலையா” என்று கேட்ட போது தான் பரமேஸ்வரனுக்கு தான் ‘லாக் டவுன்’ வந்த பிறகு ‘டெலிபோன் பில்லே’ கட்ட வில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது.
அவர் முடியாமல் “மணி, நான் ‘லாக் டவுன்’ வந்த பிறவு வெளியிலே போகவே இல்லே. வீட்டு ‘போன் பில்லே’ நான் கட்ட மறந்துப் போயிட்டு இருக்கேன்.அந்த கம்பனி காரங்க என் ‘போனே டிஸ்கனெக்ட்’ பண்ணி விட்டு இருக்காங்க போல இருக்கு.நானும் பார்வதியும் ‘லாக் டவுன்’ இருந்ததாலே ‘போனே’ உபயோகப் படுத்தலே” என்று வருத்ததுடன் சொன்னார்.
எல்லா பக்கமும் சுற்றிப் பார்த்து விட்டு மணி “பெரியப்பா, எங்கே பெரியம்மாவைக் காணோம்.எங்காச்சும் வெளியிலே போய் இருக்காங்களா.வெளிலே வெய்யில் கொளுத்துது.ஏன் பெரியம்மாவை நீங்க வெளிலே அனுப்பினீங்க” என்று கேட்டான் மணி.
பெரியப்பா கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.அவர் ‘சோபா’வில் இருந்து துண்டினால் துடைத்துக் கொண்டு இருந்தார்.அவர் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார். மணி பயந்து விட்டான்.
’என்னடா இது நாம கேட்டதுக்கு பெரியப்பா பதில் ஒன்னும் சொல்லாம அழுதுக் கிட்டு இருக்காரு.அன்னைக்கு பெரியப்பா சொன்னது போல ‘ஏதாச்சும்’ நடந்திடுச்சா.அந்த மாதிரி ‘ஏதாச்சும்’ நடந்து இருந்தா பெரியப்பா நமக்கு ‘போன்’லே சொல்லி இருப்பாரே” என்று நினை க்கும் போது தான் மணிக்கு ‘பெரியப்பா ‘போனு’க்கு பணம் கட்டாததால்,’போன்’ கம்பனிக் காரங்க ‘போனை’ ‘டிஸ்கனெக்ட்’ பண்ணி இருக்கும் சமாசாரம் ஞாபகத்துக்கு வந்தது.
கொஞ்ச நேரம் ஆனதும் பரமேஸ்வரன் மணியைப் பார்த்து” மணி, நான் உங்க பெரியம்மா வே எங்கேயும் அனுப்பலே…” என்று சொல்லும் போது மறுபடியும் தன் கண்களில் வழிந்த கண் ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.
பெரியப்பா சொன்னதைக் கேட்டதும் மணிக்கு இன்னும் பயம் அதிகம் ஆகி விட்டது. அவன் உடனே “அப்போ பெரியம்மா எங்கே பெரியப்பா.சொல்லுங்க பெரியப்பா” என்று தன் பெரியப்பாவைக் கெஞ்சினான். பரமேஸ்வரன் அழுதுக் கொண்டே அன்று காலையில் இருந்து நடந்த மொத்த சமாசாரத்தையும் விவரமாக மணி இடம் சொன்னார்.
கொஞ்ச நேரம் ஆனதும் பரமேஸ்வரன் “மணி,இது வரைக்கும் உலகத்திலே இந்த பொல் லாத ‘கரோனா’ வியாதிக்கு பலி ஆனவர்கள் எண்ணிக்கை மூனு லக்ஷத்து அறுபதாயிரத்தை கடந்து இருக்குதுன்னு ‘டீவீ’ லே கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னான்.அமொ¢க்கா,இங்கிலா ந்து,ரஷ்யா சைனா,இத்தாலி நாட்டிலே எல்லாம் மருத்துவ வசதி ரொம்ப நல்லா இருந்தும், அவ ங்களாலே இந்த ‘கரோனா’ வியாதி வந்தவங்களே காப்பாத்த முடியாம, சாவக் குடுத்துக் கிட்டு இருக்காங்க.இந்த நங்க நல்லூரிலே இருக்கிற ‘சுகாதார இலாக்கா காரங்கங்களா உங்க பெரிய ம்மாவை காப்பாதி என் கிட்டே திரும்ப அனுப்பப் போறாங்க.எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்லே மணி.இந்த பாழும் ‘கரோனா வியாதி’ என்னையும்,உங்க பெரியம்மாவையும் பிரிச்சிடுச் சிடுமோன்னு பயமா இருக்கு மணி “என்று சொல்லி விட்டு மறுபடியும் அழுதுக் கொண்டு இருந்தார்.
கொஞ்ச நேரம் ஆனதும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “ஆனா எனக்கு ஒரு சந்தோஷம் மணி.உங்க பெரியம்மா ஒரு ‘சுமங்கலியா’ சாவணும்ன்னு தினமும் அந்த கடவுளே வேண்டிக் கிட்டு வந்து இருக்கா.அந்த வேண்டுதல் கடவுள் காதிலே விழுந்து இருக்கு.அவர் பார்வதிக்கு கண்ணே தொறந்து இருக்கார்.இன்னும் கொஞ்ச நாள்ளே அவ பறந்து போயிடுவா ளோன்னு எனக்கு பயமா இருக்கு.அப்படிப் போயிட்டா அப்போ நான் ஒரு தனி மரம் ஆயிடு வேன் மணி “என்று தன் தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் அழ ஆரம்பித்தார்.
உடனே மணி “அழாதீங்க பெரியப்பா.பெரியம்மாவுக்கு ஒன்னும் ஆவாது.அவங்க சீக்கிர மா பிழைச்சு வீட்டுக்கு வந்து விடுவாங்க. நான் உங்க கூடவே இருந்துக் கிட்டு வறேன்.நீங்க அழுகையே கொஞ்சம் எனக்காக நிறுத்துங்க பெரியப்பா” என்று சொல்லி பெரியப்பாவின் தன் கால்ளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.ஒரு அரை மணி நேரம் போனதும் பரமேஸ்வரன் அழுகையை நிறுத்தினார்.
மணி பெரியப்பாவிடம் இருந்து ஒரு வேஷ்டியையும், துண்டையும் வாங்கிக் கொண்டு போய் குளித்து விட்டு,அவன் போட்டுக் கொண்டு இருந்த ஆடைகளை துவைத்துக் காயப் போட்டு விட்டு.‘ப்ரிட்ஜில்’ இருந்து கொஞ்சம் வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு போய் சமையல் ரூமுக்குப் போய் சாதமும் சாம்பாரும் பண்ணீனான்.பிறகு பெரி யப்பாவை பார்த்து “பெரியப்பா, சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க.மணி ஒன்னடிக்கப் போவுது.வாங்க சாப்பிடலாம்” என்று சொன்னதும் பரமேஸ்வரன் மெல்ல எழுந்துப் போய் குளித்து விட்டு ‘டைனிங்க் டேபிளி ல்’ சாப்பிட உட்கார்ந்தார்.மணி அவருக்கு சாதத்தைப் போட்டு சாம்பாரை ஊத்தினான்.
பசி மிகுதியால் பரமேஸ்வரன் ஒரு வாய் சாம்பார் சாதத்தை சாப்பீட்டார்.உடனே ஞாபகம் வந்தவராய் “மணி,நான் ரிடையர் ஆன பிறவு,இந்த 22 வருஷமா நானும்,உங்க பெரியம்மாவும் இந்த ‘டைனிங்க் டெபிள்’ளே ஒன்னா குந்திக் கிட்டு,சாப்பிட்டுக் கிட்டு வந்து கிட்டு இருந்தோ ம்.இன்னிக்கு தான் நான் தனியே சாப்பிட குந்திக் கிட்டு இருக்கேன்” என்று சொல்லி விக்கி விக்கி அழுதார்.மணி அவரை மெல்ல சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தான்.‘ஏர் டெல்’ஆபீ ஸ்க்குப் போய் ‘பைன்’ போட்டு பெரியப்பா ‘போனு’க்கு பணம் கட்டி விட்டு,மறுபடியும் ‘போனு’க்கு ‘கனெக்ஷன்’ வாங்கினான் மணி.
மணி மாம்பலம் போகாமல் பெரியப்பாவுடனே இருந்து வந்தான்.’லாக் டவுன்’ முடிந்து, பழையபடி வேலைக்காரியும்,சமையல் காரியும் வேலைகு வர ஆரம் பித்தார்கள்.மணி மாம்பலத் திற்குப் போய் ஒரு பெட்டியில் தன் துணி மணீகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து,பெரிய ப்பா வீட்டிலே அவருக்கு உதவியாக இருந்து வந்தான்.
ஒரு வாரம் ஆயிற்று.’போன்’ மணி அடித்தது.
மணி தான் ‘போனை’ எடுத்துப் பேசினான்.எதிர் பக்கத்தில் இருந்து அந்த தெருவிலே இருந்த பெரிய டாக்டர் தான் பேசினார்.”சாரி சார்.இப்போ தான் அந்த சுகாதார இலக்கா டாக்டர் பேசினார்.அவங்க வைத்தியம் பண்ணியும்,பார்வதியை காப்பாத்த முடியலையாம்.அவங்க பார் வதியின் ‘பாடியை’ அவங்க ‘ஆம்புலன்ஸ்’ லே அனுப்பறாங்களாம்.நான் என் பியூனை கூட அனுப்பி உங்க அவங்க ‘பாடியே’, உங்க வீட்லே தரச் சொல்றேன்” என்று சொல்லி ‘போனை’ வைத்து விட்டார்.மணி அழுதுக் கொண்டே டாக்டர் சொன்னதை சொன்னான்.
‘சோபா’விலே தன் கண்களை மூடிக் கிட்டு உட்கார்ந்துக் கொண்டு பரமேஸ்வரன், மணி சொன்னத்தைக் கேட்டு “நான் அன்னிக்கே சொன்னேனே மணி. உங்க பெரியம்மா பிழைச்சி வறது ரொம்ப கஷ்டம்ன்னு.கடவுள் அவ வேண்டுதலைக் கேட்டு அவர் கண்ணே தொறந்து இருக்கார்.அவ ஜெயிச்சுட்டாடா மணி.நான் தான் இப்போ ஒரு தனி மரம் ஆயிட்டேன் மணி” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
உடனே மணி “நான் இருக்கேன் பெரியப்பா உங்களுக்கு.நீங்க தனி மரம் இல்லே பெரியப் பா.அழுகையே நிறுத்துங்க பெரியப்பா” என்று சொல்லி பெரியப்பாவைத் தேத்தறவு பண்ணி விட்டு,ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து பெரியப்பாவைக் கூட அழைத்துக் கொண்டு போய் பெரியம்மாவை ‘அடக்கம்’ பண்ணி விட்டு வந்தான்.மணி அவன் பெரியப்பாவுடன் கூடவே இருந்து வந்து,அவர் காலம் முடிந்தவுடன் அவரை ‘அடக்கம்’ பண்ணிவான்.