கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,634 
 

‘சார்..மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்’ -கேட்டவர் ஒரு முதியவர்.

‘டைம் கீப்பர் ஆபிஸ்ல போய்க்கேளுங்க பெரியவரே…’ சொல்லிவிட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர் சையது.

‘சார்…பைவ் பி எங்கே வரும்?’ – கல்லூரி மாணவன் கேட்டான்.

‘படிக்கத் தெரியும் இல்லே..மேல இருக்கற போர்டைப்பாரு!’ சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார்

‘’சார்..இது ராயப்பேட்டை போகுமா?’’ – இந்த முறை கேட்டது ஓர் அழகான இளம்பெண்.

இந்த வண்டி போகாது, ட்வெண்டி ஒன்ல போங்க அதோ அந்த ஃபிளாட்பார்ம்ல வந்து நிக்கும். ரங்கராஜூ…இந்தப் பெண்ணுக்கு ட்வெண்டி ஒன் நிக்கற இடத்தைக் காட்டுப்பா ‘’ – கீழே நின்ற கண்டக்டர் ஒருவரிடம் சிரத்தையாகச் சொல்லிவிட்டு விசில் கொடுத்தார் சையது.

‘அது என்னப்பா…பொண்ணுங்க கேட்டா மட்டும் பொறுமையா வழி சொல்றே?’’ – ஓட்டுநர் நக்கலாகக் கேட்டார்.

‘’என்ன பண்றது?’’ நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன். தனியா நிக்கற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காணாம போன எம் மகள் ஃபாத்திமா ஞாபகம் வரும்!’’- சையது கண்கலங்கச் சொன்னார்.

டிரைவரின் கற்பனையும் கிண்டலும் சடன் பிரேக் பிடித்தன.

– விசாகப்பிரயன் (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *