கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 7,620 
 
 

நிலாச்சோறு – 2

“அம்மா , அம்மா ” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான் ஸ்ரவன்.

அவன் தாய் யசோதா சற்றே பதறிவிட்டாள். “ஸ்ரவன் கண்ணா, என்னப்பா என்னாச்சு.” என்று கேட்டபடியே சமையலறை விட்டு அவளும் வேகமாக வெளியே வர.

தாயும் மகனும் முட்டிக்கொண்டனர்.. அறை வாயிலில். அவன் கீழே விழப்போக. ஸ்ரவனை தாங்கிப்பிடித்தான் கிரிஷ் .. ஸ்ரவனின் தந்தை.

“எதுக்கு இப்படி அம்மாவும் பையனும் முட்டி மோதிக்கறீங்க. ? ” என்று இருவரையும் அவன் வினவ.

“இவன் தாங்க கத்திகிட்டே ஓடி வந்தான். நான் பதறி போய் என்னவோ ஏதோனு வந்தேன். அதுதான் இப்படி.” என்றாள் யசோதா.

“ம், ஸ்ரவன் கண்ணா ஏன்டா கத்தினே . ” என்று அவனிடம் விசாரிக்க..

“அப்பா, அம்மா வாங்க போலீஸ் ஸ்டேசன் போகலாம்.” என்று ஸ்ரவன் கூறவும் இருவரும் பதற்றத்தின் உச்சத்தை தொட்டனர்.

“போலீஸ் ஸ்டேசனுக்கா ? எதுக்கு ஸ்ரவன். என்ன ஆச்சு. காரணம் இல்லாம அங்க எல்லாம் போக முடியாது. ” என்று கிரிஷ் விளக்க.

“எனக்கும் தெரியும் அப்பா. காணாம போனதை அவங்க தானே கண்டுபிடிச்சி தருவாங்க. அதுக்கு தான் போகலானு சொல்றேன்.” என்றான் அந்த சுட்டி.

“என்னடா காணாம போச்சு. எதை கண்டுபிடிக்கனும். உன்னோட திங்ஸ் ஏதாவது தொலைஞ்சிடுச்சா. சொல்லு நாம வேற வாங்கிக்கலாம். அதுக்கெல்லாம் அங்க போகக்கூடாது. ” என்றாள் யசோதா.

“ஹைய்யோ அம்மா, என்னோட திங்ஸ் எல்லாம் நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். இது வேற.. அதை கண்டுபடிக்க சொல்லனும். அப்போ தான் நாம இன்னிக்கி சாப்பாடே சாப்பிட முடியும்.”

“என்ன டா சொல்ற.. எதை காணோம். உன்னோட தட்டு கூட இருக்கே. எதடா காணோம்னு சொல்றே. ” என்றாள் யசோதா அலுப்புடன்.

இருவரையும் மாறி மாறி பார்த்த ஸ்ரவன் குட்டி “இரண்டு பேரும் மாடிக்கு வாங்க. நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.” என்று அவர்களின் கையை பிடித்து இழுத்து சென்றான் ஸ்ரவன்.

இருவரும் ஏதும் புரியாமல் அவன் பின்னே செல்ல. மாடிக்கு சென்றவன் வானத்தை காட்டி.. ” அம்மா , அப்பா பாருங்க நிலாவே காணோம். எங்க போச்சுனே தெரியலே. மேகம் கூட இல்ல தானே. நான் எல்லா சைடும் பார்த்துட்டேன். எங்கையுமே தெரியலே. இப்போ என்ன பண்ணறது. அதுதான் போலீஸ் ஸ்டேசன் போகலானு சொன்னேன். அவங்க இன்னிக்கே கண்டுபிடிச்சி தந்துடுவாங்க இல்ல. ஏன் கேட்கறேனா இன்னிக்கு ஸ்ஷன்டே .. நாம நிலாச்சோறு சாப்பிடற நாள். நிலா இல்லாம எப்படி நிலாச்சோறு சாப்பிட முடியும். ” என்று கூற இருவரும் வாயை பிளந்து ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிய நின்றனர்.

பிறகு அவனிடம் இன்று ” ஸ்ரவன் கண்ணா, இன்னிக்கி அமாவாசை. அதனாலே தான் நிலா வரலே. ” என்று அவர்கள் கூற

“அமாவாசை யா அப்படினா.. ? ”

“அப்படினா .. பூமியோட நிழல் நிலா மேல படறதாலே இன்னிக்கி நிலா தெரியாது. ” என்று கிரிஷ் அறிவியல் விளக்கம் கொடுக்க.

“நிழல் விழுந்தா நிலா எப்படிப்பா தெரியாம போகும். நம்ம நிழல் கூட பூமியிலே விழுது.. அதுக்காக பூமி தெரியாமையா போய்டுச்சு.” என்று எதிர் கேள்வி கேட்க..

“அது.. வந்து.. நாம குட்டியா இருக்கோம். பூமி பெருசா இருக்கு. நிலாவைவிட பூமி பெருசா இருக்கறதாலே பூமியோட நிழல் நிலைவை மறைக்குது. ”

“இல்ல, அது எப்படி மறைக்கும்.” என்று ஸ்ரவன் வாதம் செய்ய.. கிரிஷ் ஏதேதோ சொல்லி அவனுக்கு புரியவைக்க முயலே.. அவனோ மீண்டும் மீண்டும் கேட்டதையே திருப்பி திருப்பி கேட்க… இதில் கடுப்பான யசோதா…

“கிரிஷ், விடுங்க அறிவியல் விளக்கம் எல்லாம் பெரிய பையனானா அவனே புரிஞ்சிப்பான். இப்போ அவனுக்கு புரியற மாதிரி சொன்னா போதும். ” என்று கிரிஷ்சின் காதை கடித்துவிட்டு மகன் ஸ்ரவனிடம் திரும்பி..

“ஸ்வரன் கண்ணா, உனக்கு வீக்லி ஒன் ஆர் டூ டேஸ் லீவ் விடுறாங்க தானே. அது மாதிரி நிலாவுக்கும் மன்த்திலி டூ ஆர் திரி டேஸ் லீவ் விடுவாங்க. அதனாலே தான் நிலா அவங்க அம்மா அப்பாவை பார்க்க போய் இருக்கு. இன்னும் மூனு நாள் கழிச்சி தான் வரும். நாம அடுத்த வாரம் நிலாச்சோறு சாப்பிடலாம். இன்னிக்கி வீட்டுக்குள்ளையே உட்காந்து உருண்டை சோறு சாப்பிடலாம். ஓகே வா. ” என்றாள் யசோதா.

“உருண்டை சோறா… ? அப்படினா ? ”

“வா.. காட்டறேன். ” என்று கூறி ஸ்ரவனை சமாளித்து உள்ளே அழைத்து வந்தனர் இருவரும்.

( ஏன் மூனு நாளுனு யசோதா சொன்னான, அமாவாசை முடிஞ்சி இரண்டாவது நாள் மூனாம் பிறை கொஞ்ச நேரம் தான் தெரியும். ஒரு வேலை அன்னிக்கு நிலாவை பார்க்க முடியலையினா.. மீண்டும் கேள்வி கேட்டு மகன் கொல்லுவான். அதுதான் முன்னாடியே மூனுநாளுனு சொல்லிட்டா.. பயபுள்ளீங்க என்ன ஸ்சார்ப்பு…இன்றைய பெற்றோரின் நிலை கவலைக்கிடம் தான்).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *