அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2021
பார்வையிட்டோர்: 5,074 
 
 

அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26

அடுத்த நாளில் இருந்து சுந்தரம் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து சமையல் வேலையைப் பண்ணிக் கொண்டு வந்தான்.

ரமேஷ் நான்கு வருடங்களும் மிக நன்றாகப் படித்துக் கொண்டு வந்தான்.

ரமேஷ் நாலாவது வருடக் கடைசியிலே BE.’கம்ப்யூட்டர் சயன்ஸ்’ பரிக்ஷயில் மிக நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான். பரமசிவமும் சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டு ரமேஷைப் புகழ்ந்தார்கள்.

ரமேஷ் தன் அம்மா அப்பாவின் காலைத் தொட்டு தன் நன்றியைச் சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் தன் அம்மா அப்பாவைப் பார்த்து”அம்மா, அப்பா, என் ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லாம் அமெரிக்கா போய் MS பண்ணப் போறா.நானும் அவா மாதிரி அமெரிக்கா போய் MS படிக்கட்டுமா.உங்க ரெண்டு பேருக்கும் என் ஐடியா பிடிச்சி இருக்கா.நான் அமெரிக்காப் போய் MS படிக்கட்டுமா “என்று கேட்டதும் பரமசிவம்” எனக்கு உன் ஐடியா ரொம்ப பிடிச்சி இருக்கு. நீ என்ன சொல்றே சரோஜா” என்று கேட்டார்.’

“ரமேஷ்,நீ அமெரிக்கா போய் படிக்கற ஐடியா எனக்கு அவ்வளவா பிடிக்கலே.நீயோ BE. ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ பரி¨க்ஷயில் மிக நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கே. சென்னையிலே இருக்கிற ஒரு நல்ல IT கமபனியிலே உனக்கு ஒரு நல்ல வேலேக் கிடைக்கும்.நீ அந்த வேலேயேப் பண்ணிண்டு வந்து,சென்னையிலேயே ஒரு நல்ல பொண்ணா ப் பாத்து கல்யாணம் பண்ணீண்டு எங்க கூடவே இருந்து வாயேன்.நானும் அப்பாவும்,மாட்டுப் பொண்ணோடவும் பேரன் பேத்திகளு டனும் சந்தோஷமா இருந்து வந்து எங்க காலம் முடிஞ்ச பிறகு,நாங்க இந்த ‘லோகத்தே’ விட்டுப் போகணும்” என்று கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னாள் சரோஜா.

சரோஜா சொன்னதைக் கேட்டு ஆச்சா¢யப் பட்டார் பரமசிவம்.

“சரோஜா,உன் ‘தொலை நோக்கு’ ஆசையைக் கேட்டு அசந்து போய் விட்டேன்,எனக்கு அப் படித் தோணலையே” என்று பரமசிவம் கேட்டதும்,“புருஷாளுக்கு இந்த மாதிரி எல்லாம் தோணாது. எங்க அம்மா ‘என்னேப் பாத்து,சரோ,உனக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பொறந்து, அந்தப் பிள்ளைக் குழந்தையே நான் என் மடியிலே வச்சிண்டு கொஞ்சனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு’ன்னு நிறைய தடவை சொல்லி இருக்கா.ஆனா என் அப்பா அந்த மாதிரி எல்லாம் சொன்னதே ஒரு தடவைக் கூட சொன்னதே இல்லே.இந்த பேரன்,பேத்தி ஆசை எல்லாம் எப்பவும் ‘லேடீஸ்க்கு’ தான் ஜாஸ்தியா இருக்கும்.உங்களுக்கு இது தொ¢யுமா” என்று கேட்டாள் சரோஜா.

“அப்படியா.ஆனா நீ சொன்னப்புறம் அந்த ஆசை ஆணான எனக்கும் இப்போ ரொம்ப இருக்கு சரோஜா” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பரமசிவம்.

உடனே ரமேஷ்” நான் உங்க ரெண்டு பேரோட ஆசையை நிச்சியமா நிறை வேத்தறேன்.நீங்கோ ரெண்டு பேரும் நிம்மதியா இருந்துண்டு வாங்கோ.ஆனா நான் முதல்லே அமெரிக்காப் போய் ஒரு MS டிகி¡£ வாங்கிண்டு வந்தப் புறமா,சென்னைக்கு வந்து,நீங்கோ சொல்றா மாதிரி நான் சென்னையி லே இருக்கிற ஒரு நல்ல IT கமபனியிலே ஒரு நல்ல வேலைக்கு ‘அப்ளை’ பண்ணி,அந்த வேலை கிடைச்சதும், நான் அந்த வேலேயேப் பண்ணிண்டு வந்து,சென்னையிலேயே இருக்கிற ஒரு நல்ல பொண்ணா ப் பாத்து கல்யாணம் பண்ணீண்டு எங்க கூடவே இருந்து வறேன்” என்று சொன்னான்.

“ரமேஷ் சொல்ற இந்த ‘ஐடியா’ இன்னும் நன்னா இருக்கு.அவன் அமெரிக்கா போய் படிச்சா மாதிரியும் இருக்கும்.அவன் ஆசைப்பட்டா ஒரு MS டிகி¡£ வாங்கின சந்தோஷமும் இருக்கும். அவன் சென்னைக்கு வந்து நீ ஆசைப் படறா மாதிரி,அவன் இருந்து வந்து நம்ம ரெண்டு பேரையும் சந்தோ ஷப் படுத்துவான் சரோஜா.இந்த ஐடியாவுக்கு நீ என்ன சொல்றே” என்று கேட்டார் பரமசிவம்.

தன் கணவர் சொன்னது சரோஜாவுக்குப் பிடிக்கவில்லை.அவள் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீக் கொண்டு இருந்தாள்.

அதற்குள் ரமேஷ் “அம்மா நான் அமெரிக்க போய் ஒரு MS டிகிரீ வாங்கிண்டு வந்தா,ஒரு IT கம்பனிலே,எனக்கு ஒரு சாதாரண BE படிச்ச பையனே விட சம்பளம் ஜாஸ்தியாக் கிடைக்கும்.இது நமக்கு ஒரு ‘அட்வான்டேஜ்’ இல்லையாம்மா” என்று கேட்டான்

“ரமேஷ்,நீ சொல்றது எல்லாம் சா¢.நான் இல்லேன்னு சொல்லலே.அமெரிக்கா எல்லாம் வேறே காலாச்சாரம் இருக்கிற நாடு.நீ அங்கே போய் ரெண்டு வருஷம் படிச்சு,MS டிகி¡£ வாங்கறதுக்குள்ளே, உனக்கு நம்ம நாட்டோட கலாச்சாரம் மறந்துப் போய்,நீமாறி விட ரொம்ப ‘சான்ஸ்’ இருக்கு.நீ இப்போ ஒரு இள வயசுப் பையன்.நீ அங்கே போய் படிச்சு வரும் போது உன் புத்தி பேதலிக்க வாய்ப்பு இருக்கு. நீ பேசாம இங்கே எந்த ‘யூனிவர்சிட்டிலேயாவது’ சேந்து ஒரு M.Tech.பண்ணேன். நீ அந்த M.Tech. பரிஷையிலே நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணினேன்னா,இங்கே இருக்கிற IT கம்பனி BE படிச்ச பையனே விட,நிச்சியமா உனக்கு சம்பளம் ஜாஸ்தி குடுப்பா.நான் நன்னா யோஜனைப் பண்ணித் தான் சொல்றேன்.அப்படிப் பண்ணேன்” என்று சொன்னாள்.

“அம்மா,என் ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லாம் அமெரிக்கா போய் MS பண்ணப் போறா.நானும் அவா மாதிரி அமெரிக்கா போய் MS பண்ணிட்டு,சென்னைக்கு வறேனேமா.ப்லீஸ்ம்மா” என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினான் ரமேஷ்.

“சரோஜா,ரமேஷ் ஆசைப் படறா மாதிரி அவன் அமெரிக்கா போய் MS பண்ணிட்டு வரட்டுமே. ரெண்டு வருஷம் தானே.கண்ணே மூடி கண்ணேத் தோறக்கதுக்குள்ளே ஓடிப் போயிடும்.எனக்கு என்னவோ அவன் ஆசை பட்டா மாதிரி பணறது சா¢ன்னுப் படறது” என்று சொன்னார் பரமசிவம்.

“உங்களுக்குத் தொ¢யாது.இந்த வயசிலே புருஷப் பசங்க மனசு எல்லாம் ரொம்ப பேதலிக்கும். எல்லா இள வயசு புருஷப் பசங்களும்,உங்களே போல இருந்து வர மாட்டா.நீங்கோ அதிலே ஒரு ‘எக்ஸப்ஷன்’.இந்த பயத்தே என் மனசிலே வச்சுண்டு தான்,நான் ரமேஷே அமெரிக்கா போக வேணாம்ணு சொல்றேன்.எனக்கு மட்டும் என்ன அவன் ஒரு MS வாங்கக்கூடாதுன்னு ஆசையா. எனக்கும் கூட ரமேஷ் ஒரு அமெரிக்க MS டிகி¡£ வாங்கறது ரொம்ப தான் பிடிச்சு இருக்கு” என்று இழுத்தாள்.

அடுத்த அரை மணி நேரத்திற்கு மூன்று பேரும் பேசி விட்டு,ரமேஷ் அமெரிக்கா போய் ஒரு MS டிகி¡£ வாங்குவது தான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள்.சரோஜாவுக்கு அவ்வளவாக இந்த முடிவு பிடிக்கவில்லை.ரமேஷையும்,கணவரையும் சதோஷப் படுத்த ஒத்துக் கொண்டாள் சரோஜா.

அடுத்த வாரமே ரமேஷ் TOFEL, GRE ‘கோச்சிங்க் க்லாஸிலே’ சேர்ந்து படித்து வந்தான்.

’ரெண்டு பரி¨க்ஷயிலும் ரொம்ப நல்ல மார்க் வாங்கினாத் தான்,நமக்கு ஒரு நல்ல ‘அமெரிக்க யூனிவர்ஸிட்டியிலே ‘ MS படிக்க ஒரு ‘சீட்’ கிடைக்கும்.நாம கஷ்டப் பட்டு படிச்சு,ரெண்டு பரி¨க்ஷ யிலும் ரொம்ப நல்ல மார்க் வாங்கணும்’ என்று நினைத்து,ரமேஷ் இரவு பகலாக கஷ்டப் பட்டு படித்து வந்தான்.

ஒரு வருஷம் ஆனதும் அந்த ‘கோர்ஸ்’ முடிந்தது.

ரமேஷ் TOFEL, GRE பரி¨க்ஷகளை எழுதினான்.

ஒரு மாதம் ஆனதும் ரமேஷூக்கு ரெண்டு பரி¨க்ஷயிலும் மிக நல்ல மார்க் கிடைத்தது.ரமேஷ் ரெண்டு பரி¨க்ஷகளிலும் ரொம்ப நல்ல மார்க் வாங்கினதைப் பார்த்த பரமசிவமும் சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

University of Texas, Dallas காலேஜில் MS ‘பண உதவியுடன்’ படிக்க ஒரு ‘அட்மிஷன்’ கிடைத்தது ரமேஷூக்கு.பரமசிவமும்,சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

‘நெட்டில்’’அமெரிக்கன் எம்பஸியில்’ ரமேஷூக்கு ‘விசா’ வாங்க ‘புக்’ பண்ணினார் பரமசிவம்.

அந்த குறிப்பிட்ட நாளில் ரமேஷ அழைத்துக் கொண்டு பரமசிவமும்,சரோஜாவும் ‘அமெரிக்கன் ‘எம்மஸி’க்குப் போய்,ரமேஷ் உள்ளே அனுப்பி விட்டு வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆறு மணி நேரம் ஆனதும் ரமேஷ் சிரித்துக் கொண்டே,தன் கையை உயர தூக்கி தனக்கு ‘விசா’ கிடைத்து விட்டது என்று ‘சிக்னல்’ கொடுத்தான்.பரமசிவமும் சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

தன் பையன் ரமேஷூக்கு அமெரிக்காப் போய் ‘விஸா’ கிடைத்த சந்தோஷத்தை ஒரு பொ¢ய ஹோட்டலில் ‘லன்ச்’ சாப்பிட்டு கொண்டாடினார்கள் பரமசிவமும் சரோஜாவும்.ரமேஷ் அமெரிக்கா விலே படித்து வர இருந்து வர நிறைய ‘வின்டர் டிரஸ்களும்,பாண்ட் ஷர்ட்டுகளும், வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

வாத்தியாரை வீட்டு வரச் சொல்லி ரமேஷ் அமெரிக்கா போக ஒரு’நல்ல நாள்’ பார்க்கச் சொன்னார் பரமசிவம்.அந்த நல்ல நாளில் பரமசிவமும்,சரோஜாவும் ரமேஷை அழைத்துக் கொண்டு சென்னை ‘பன்னாட்டு விமான நிலையத்துக்கு’ போய் ரமேஷை விமானம் ஏற்றப் போனார்கள்.

’ப்ளேன்’ கிளம்ப இன்னும் ஒரு அரை மணி நேரம் இருக்கும் போது பரமசிவம் ரமேஷைப் பார்த்து” ரமேஷ்,நீ ரெண்டு வேளையும் தவறாம சந்தியாவந்தனம் பண்ணீண்டு வந்து,உன் பாடங்க ள்ளே நிறைய கவனம் செலுத்தி,நன்னா படிச்சு MS பரி¨க்ஷலே ஒரு ‘ஹை பஸ்ட் க்லாஸ்லே பாஸ்’ பண்ணனும் உன் கவனம் எப்போவும் பாடத்லே தான் இருக்கணும்” என்று சொன்னார்.

“அப்பா சொன்னதே நீ பண்ணீண்டு வந்து,ரெண்டு வேளையும் தவறாம சுவாமியே வேண்டி ண்டு வந்து ஒரு நமஸ்காரத்தேப் பண்ண மறக்காதே ரமேஷ்.தினமும் சுவாமியே வேண்டிண்டு வறது ரொம்ப முக்கியம்” என்று சொன்னாள் சரோஜா.

எந்த பகட்டு வாழக்கைக்கும் ஆசைப் படாமல்,வாழந்து வந்த பரமசிவமும்,சரோஜாவும் இந்த புத்திமதியைத் தவிர வேறே,எந்த புத்திமதியும் சொல்லத் தொ¢யவில்லை.
ரமேஷ் தன் அம்மா அப்பாவைப் பார்த்து கண்ணீர் மல்க “அம்மா,அப்பா,நான் அமெரிக்காலே, நீங்கோ சொன்னா மாதிரி இருந்துட்டு,என் பாடங்கள்ளே கவனத்தே செலுத்திண்டு நன்னா படிச்சு ட்டு சீக்கிரமா சென்னைக்கு வந்துடறேன்.நீங்கோ ரெண்டு பேரும் உங்க உடமபை ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வாங்கோ” என்று சொல்லி இருவர் காலையும் தொட்டு விட்டு எழுந்தான்.

“ரமேஷா,நீ சீக்கிரமா படிச்சுட்டு சென்னை வந்துடு.நீ உன் படிப்பே படிச்சு முடிச்சுட்டேன்னு சொன்னதும்,நானும்,அப்பாவும் உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாத்து வக்கிறோம். நீ சென்னை வந்து ரெண்டு மாசம் ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு,எங்க கூட இருந்துட்டு,ஒரு நல்ல வேலேயேத் தேடிண்டு ண்டப் புறம்,ஒரு ஆறு மாசம் கழிச்சு,நாங்க உனக்கும்,அந்த பொண்ணுக்கும் ‘ஜாம்,ஜாம்’ ன்னு ஒரு கல்யாணத்தே பண்ணீ வக்கறோம்.அப்புறமா நீ எங்களோட சந்தோஷமா இருந்துண்டு வரலாம்” என்று சொன்னாள் சரோஜா.

ரமேஷ் “சா¢ம்ம்மா.’ப்லேன்’ கிளம்ப நேரம் ஆயிடுத்து.நான் போய் வறேன்” என்று சொல்லி விட்டு ‘ப்ளேன்’ ஏறப் போனான்.பரமசிவமும் சரோஜாவும் ரமேஷ் தலை மறைகிற வரையில் தங்கள் கையை ஆட்டிக் கொண்டு இருந்து விட்டு,சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தார்கள்.

ரமேஷ் ‘டல்லஸ்’ போய் சேர்ந்ததும்,விஸ்தாரமான ஏர் போர்ட்டையும்,அந்த விமான நிலையத் தின் சுத்தமான சூழ் நிலையும்,’ஏர் போர்ட்டுக்கு’ வந்து இருந்த அனைவரையும் பர்த்து வியந்துக் கொண்டு இருந்தான்.’எவ்வளவு பொ¢ய போர்ட்.எத்தனை விமானங்கள் நின்னுண்டு இருக்கு’ என்று நினைத்து வியந்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

அவனுடைய ‘சீனியர்’ ‘டல்லஸ் ஏர் போர்ட்டுக்கு’ வந்து இருந்தான்.

அவன் தன் காரில் ரமேஷை ஏற்றீக் கொண்டு, ‘டல்லஸ் Down town’வழியாக காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.ரமேஷ் Down town’ ல் இருந்த மிக உயரமான கட்டிடங்களையும்,அவன் கார் வந்துக் கொண்டு இருந்த அகலமான சாலையும் பார்த்து வியந்துக் கொண்டு இருந்தான்.

அந்த ‘சீனியர்’ ரமேஷூக்கு ‘புக்’ பண்ணி இருந்த ‘ரூமி’ல் அவனை விட்டு விட்டு,ரமேஷை ப் பார்த்து “ரமேஷ் என் செல் நம்பர் 972 456 457.உனக்கு ஏதாவது அவசரம்ன்னா, எனக்கு உடனே ‘போன்’ பண்ணு.நான் உடனே வறேன்.Take Care, Bye” என்றுசொல்லி விட்டு, அவன் காரை ஓட்டிக் கொண்டு போய் விட்டான்.

அடுத்த வாரம் ரமேஷ் அந்த ‘யூனிவர்ஸிடிலே’ Computer Science ‘கோர்ஸில்’ சேர்ந்தான்.

ரமேஷ் வாரம் ஒரு தடவை அம்மா அப்பாவிடம் ‘போனில்’ பேசி வந்தான்.அவன் அப்பா சொன்னது போல,ரமேஷ் ரெண்டு வேளையும் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டு,சுவாமிக்கு மந்திரங்கள் சொல்லி நமஸ்காரம் பண்ணீ வந்தான்.

பரமசிவமும்,சரோஜாவும் அவர்கள் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள். இருவருக்கும் ரமேஷ் இல்லாத அந்த ‘ப்லாட்’ மிகவும் வேறிச்சோடினார் போல இருந்தது.அதை அதிகமாக பாராட்டிக் கொள்ளாமல்,தங்கள் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.

வரதன் அன்று காலையில் பரமசிவத்தின் வீட்டு வந்தான்.அவ அழுதுக் கொண்டு இருந்தான்.

உடனே சரோஜா ”ஏண்டா அழறே.லலிதாவுக்கு ஏதாவது உடம்பா” என்று கவலையுடன் கேட்டாள் வரதன் அழுதுக் கொண்டே”அவளுக்கு ஒன்னும் இல்லேக்கா.அவ ‘கல்’ லாட்டும் தான் இருக்கா.என் மானேஜர் கம்பனிலே ரொம்ப நஷ்டம் வந்துடுத்து.உடனே அவர் ஆறு ‘பியூன்’ இருந்த இடத்லே பழைய நாலு ‘பியூனே’ வச்சுண்டு,என்னேயும் புதுசா சேந்த இன்னொரு பியூனையும் வேலே லே இருந்து நிறுத்திட்டார்.எனக்கு நேத்தியோட ‘பியூன்’ வேலே இல்லே.இனிமே நான் எப்படி வாழ்ந்துண்டு வறதுன்னு புரியலே” என்று சொன்னான்.

உடனே பரமசிவம் வரதனைப் பார்த்து “வரதா,நீ வேறே எங்கேயும் வேலேக்குப் போக வேணாம். தினமும் ஏழு மணிக்கு இந்த ஆத்துக்கு வா.ரமேஷ் அமெரிக்கா போய் இருக்கான்.நீ இந்த ஆத்துக்கு வேண்டிய சாமாங்களை வாங்கிக் கொண்டு வா.நான் உனக்கு அந்த ‘கம்பனி மானேஜர்’ குடுத்துண்டு வந்த சம்பளத்தே மாசா மாசம் தறேன்” என்று சொன்னார்.

”ரொம்ப ‘தாங்க்ஸ்’ அத்திம்பேர்.நான் தினமும் இந்த ஆத்துக்கு வறேன்.இந்த ஆத்துக்கு வேண்டிய சாமாங்களை வாங்கிக் கொண்டு வறேன்” என்று சதோஷமாகச் சொன்னான் வரதன்.

தன் கணவன் தன் தம்பி வரதனைப் பார்த்து ‘வரதா,நீ வேறே எங்கேயும் வேலேக்குப் போக வேணாம்.தினமும் ஏழு மணிக்கு இந்த ஆத்துக்கு வா.ரமேஷ் அமெரிக்கா போய் இருக்கான்.நீ இந்த ஆத்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வா.நான் உனக்கு அந்த ‘கம்பனி மானேஜர்’ குடுத்துண்டு வந்த சம்பளத்தே மாசா மாசம் தறேன்’ன்னு சொன்னதை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள் சரோஜா.

கணவன் தனியாக இருக்கும் போது,அவருக்கு தன் நன்றியை சொன்னாள் சரோஜா.

அடுத்த நாளில் இருந்து வரதன் தினமும் அக்கா அத்திம்பேர் வீட்டுக்கு வந்து,தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

ரமேஷ் MS படிக்கும் போது,அவனுடைய அறிவுக் கூர்மையை அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்த எல்லா ‘ப்ரபஸர்களும்’ வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி வந்தார்கள்.

ரமேஷ் இந்த சந்தோஷ சமாசாரத்தை அவன் அம்மா அப்பாவுக்கு ‘போனில்’ சொல்லி வந்தான்.பரமசிவமும்,சரோஜாவும் ரமேஷ் சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

தன்னுடன் கூட படித்து வந்த மாணவர்களும் மாணவிகளும் ’ப்ரப்ஸர்கள்’ சொல்லிக் கொடு த்த பாடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை ரமேஷிடம் கேட்டு வந்தார்கள்.அப்படிக் கேட்டு வந்தவர்களில் ஒரு மாணவி பேர் ஜூலி.ரவி வர்மாவின் ஓவியத்திலும் கூட அழகு கொஞ்சம் கம்மியாக இருக்கலாம்.ஆனால் ஜூலி செதுக்கி வைத்த சிலை போல ‘தள’‘தள’ என்று, நல்ல வெள்ளை நிறத்து டன் ஒரு ‘செலுலாயிட் பொம்மை’ப் போல இருந்தாள்.

“இளம் அழகு பெண்களீடம் ஏற்படு வாலிப ‘ஈர்ப்பு’ எந்த வாலிபனுக்கு இருக்காது!!.

ரமேஷ் அதுக்கு ஒரு விதி விலக்கு இல்லையே!!

ரமேஷ் ஜூலிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ஒரு தனி சந்தோஷதை அனுபவித்து வந்தான்.’அவள் இன்னும் கொஞ்ச நேரம் தன்னுடன் இருக்க மாட்டாளா’ என்று ஏங்கியது அவன் மனம்.

இரண்டு வருட படிப்பு முடிந்ததும் ரமேஷ் முதல் மாணவனாக ‘பாஸ்’ செய்தான்.இந்த சந்தோஷ சமாசாரத்தை அம்மா அப்பாவுக்கு ‘போனில்’ சொன்னான் ரமேஷ்.

MS ‘பாஸ்’ பண்ணவர்களுக்கு ‘டிகி¡£’ கொடுக்க ‘கான்வகேஷன் விழாவை’ ஏற்பாடு பண்ணி இருந்தது அந்த கல்லூரி.

அந்த ‘கான்வகேஷன் விழா’ மிக சிறப்பாக நடந்தது.

MS ‘டிகி¡£யை’ வாங்கிக் கொண்டு வந்து தன் சீட்டில் வந்து உட்கார்ந்தான் ரமேஷ்.அந்த விழாவிலே தனக்குக் கொடுத்த MS ‘டிகி¡£யை’ வாங்கிக் கொண்டு வந்து,ஜூலி ரமேஷ் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

ரமேஷூக்கு சந்தோஷம் தாங்க வில்லை.

ஐந்து நிமிஷம் தான் ஆகி இருக்கும்.ஜூலி ரமேஷை கட்டிக் கொண்டு “ரமேஷ், ஐ ஆம் இன் லவ் வித் யூ.ஐ வாண்ட் டூ மோ¢ யூ.ஐ ஹோப் யூ லைக் மீ.ஐ வாஸ் வெயிட்டிங்க் பார் திஸ் கான்வ கேஷன் பன்ஷன் டு பி ஓவர்’” என்று சொன்னதும் ரமேஷூ க்கு ‘சொர்க்க லோகம்’ தொ¢ந்தது.

அந்த சமயத்தில் ரமேஷூக்கு தன் அம்மா அப்பா கிட்டே,அவன் சொல்லி விட்டு வந்தது துளி கூட ஞாபகத்துக்கே வரவில்லை.

ரமேஷ் ஒரு நிமிஷம் ஒன்னும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.ஜூலி உடனே ”ரமேஷ், யூ ஆர் நாட் சேயிங்க் எனி திங்க.ஆர் யூ நாட் லவ்விங்க் மீ.ஐ லவ் யூ வொ¢ மச் ரமேஷ்.ஐ வாண்ட் டு மோ¢ யூ ரமேஷ்” என்று சொல்லி அவனை இன்னும் இறுக்கக் கட்டிக் கொண்டாள்.

ஒரு நிமிஷம் ரமேஷ் தர்ம சங்கடப் பட்டான்.அவனுக்கு ஜூலியை இழக்க மனம் இல்லை.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் தன் மனதில் ‘மொள்ள நாம அப்பா அம்மா கிட்டே நம்ம ஆசையயே சொல்லி,ஜூலியை கல்யாணம் பண்ணிக் கொள்ள ‘பர்மிஷன்’ வாங்கிடலாம்’ என்று நினைத்து “நோ ஜூலி ஐ டூ லவ் யூ வொ¢ மச்.ஐ’ல் சூர்லி மோ¢ யூ”என்று சொன்னதும் ஜூலி ரமேஷை இறுக்கக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.
ரமேஷ் தன் கல்லுரியிலே நடந்த ‘கான்வகேஷன்’ விழாவைப் பற்றியும்,தனக்குக் கல்லூரி ‘டிகி¡£’க் கொடுத்ததையும் விவரமாகச் சொல்லி அம்மா அப்பாவை சந்தோஷத்தில் ஆழ்த்தினான். இருவரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.அம்மா அப்பாவிடம் ஜூலியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆசையை சொல்ல சா¢யான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

ஒரு மாசம் ஆனதும் இருவருக்கும் ஒரு நல்ல கமபனிலே ஒரு நல்ல வேலைக் கிடைத்தது. அடுத்த நாளே இருவரும் ஒரு ‘சர்ச்சுக்குப் போய் அங்கே இருந்த ‘பாதர் சுபீரியர்’ எதிரில் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

“இன்னிலே இருந்து நீங்க ரெண்டு பேரும் கணவன் மணைவி.கர்த்தர் உங்களே சதோஷமா வச்சு கிட்டு வருவார்” என்று சொல்லி ‘பாதர் சுபீரியர் ‘இருவரையும் ஆசீர்வாதம் பண்ணீனார்.

இருவரும் ஒரு ‘சிங்கல் பெல் ரூம் அபார்ட்மென்ட்டை’ வாடகைக்கு எடுத்து அதிலே தங்கி வந்தார்கள்.அந்த ‘அபார்ட்மெண்டிலும்’ ரமேஷ் நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு ‘சந்தியா வந்தனம்’ பண்ணீனான்.ஜூலி ஆச்சா¢யப் பட்டு ரமேஷைப் பார்த்து “என்ன,நீ உன் நெத்திலே ஒரு white stuff smear பண்ணின்டு,உன் கண்ணே மூடிண்டு ஏதோ சொல்லிண்டு வறே.Its funny to watch” என்று கிண்டல் பண்ணீனாள்.

இந்த மாதிரி காத்தாலேயும்,சாயங்காலமும் பண்ண வேண்டியது எங்க family habit. அதான் தான் நான் தினமும்பண்ணீண்டு வறேன்” என்று ரமேஷ் சொன்னதும் ஜூலி வெறுமனே சிரித்துக் கொண்டு சும்மா இருந்தாள்.

ரமேஷ் அன்று காலையிலே எழுந்ததும் ‘நாம ஜூலியே கல்யாணம் பண்ணீண்டு ஒரு மாசம் ஆயிடுத்தே.இனிமே நாம ‘டிலே’ பண்ணக் கூடாது.அப்பா,அம்மாவுக்கு ‘போன்’ பண்ணி,நாம ஜூலியே கல்யாணம் பண்ணீண்டு இருக்கிற விஷயத்தை சொல்லியே ஆகணும்.நாம ஜூலியே கல்யாணம் பண்ணிண்டு இருக்கிற சமாசாரத்தே அவா எப்படி எடுத்துப்பாளோ’ என்று பயந்துக் கொண்டு இருந்தான்

அன்று காலை மணி ஏழு இருக்கும்.

‘படிப்பு முடிந்து,’கான்வகேஷன்’ முடிந்து ‘டிகி¡£’யும் கிடைத்து ஒரு மாசம் ஆகியும் ரமேஷ் இன்னும் சென்னைத் திரும்பி வரவில்லையே’என்று நினைத்து,ரமேஷூக்கு ‘போன்’ பண்ணி “’கான்வகேஷன்’ முடிஞ்சு,உனக்கு MS டிகி¡£யும் கிடைச்சு ஒரு மாசம் ஆயிடுத்தே. நீ இன்னும் சென்னைக்குக் கிளம்பலையா.உனக்கு அமெரிக்காலே இன்னும் ஏதாச்சும் வேலே பாக்கி இருக்கா ரமேஷ்” என்று நாசூக்காகக் கேட்டார் பரமசிவம்.

ரமேஷ் ஒரு நிமிஷம் யோஜனைப் பண்ணினான்.’இப்ப சொல்லலாமா,இன்னும் ரெண்டு மாசம் போனப்புறமா சொல்லலாமா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தது அவன் மனம்.

அவன் உள் மனம் மனம் மட்டும் ‘நம்ம அம்மா,அப்பா நாம ஜூலியே கல்யாணம் பண்ணீக் கொண்டதே இப்போ சொன்னா நிச்சியமா ஒத்துக்க மாட்டா.ரெண்டு மூனு மாசம் ஆனதும் மெல்ல அவா கிட்டே சொல்லி,நாம அவா ‘பர்மிஷனே’ வாங்கிக்கலாம்’ என்று ஆசைப் பட்டுக் கொண்டு வந்தது.

அதனால் ரமேஷ் இப்போதைக்கு நாம் ஒரு ‘பொய்யே’ சொல்லலாம்,என்று நினைத்து “ஆமாம் ப்பா,எனக்கு அமெரிக்காவிலே இன்னும் ரெண்டு மூனு வேலே இருக்கு.அதை முடிச்சுட்டு நான் சீக்கிரமா சென்னைக்கு வறேன்” என்று ஒரு பொய் சொன்னான்.”சா¢டா,நீ எல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சுட்டே வா” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணினார் பரமசிவம்.

’பொய்யை’ சொன்ன அவன் மனம் வேதனைப் பட்டு கொண்டு வந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

அலாரம் அடித்தவுடன் அலாரத்தின் தலையிலே தட்டி,அதை ஓயப் படுத்தி விட்டு,மெல்ல எழுந்து தன் இரண்டு கைகளையும் நன்றாக உரசி விட்டு,தன் கண்ணீல் ஒத்திக்கொண்டு,மெல்ல படுக்கையை விட்டு எழுந்து ‘பாத் ரூமு’க்குப் போய் பல்லைத் தேய்த்துக் கொண்டு,கால்களை நன்றாக கழுவிக் கொண்டு சுவாமி ‘ரூமு’க்குப் போய், விபூதி டப்பாவில் இருந்து விபூதியை இட்டுக் கொண்டு,பஞ்ச பாத்திரத்தில் ஜலத்தை எடுத்துக் கொண்டு,சந்தியாவந்தனம் பண்ண உட்கார்ந்துக் கொண்டார் பரமசிவம்.

‘காலிங்க் பெல்’ அடித்தது.பரமசிவம் எழுந்துக் கொண்டு வாசல் கதவைத் திறந்து சுந்தரத்தை வீட்டுக்கு உள்ளே விட்டு விட்டு,மறுபடியும் கதவைத் தாழ் போட்டுக் கொண்டு,சந்தியாவந்தனம் பண்ண உட்கார்ந்தார்.சந்தியாவந்தனைத்தை முடித்துக் கொண்டு,பரமசிவம் ’டைனிங்க் டேபிளில்’ வந்து உட்கார்ந்துக் கொண்டார்.
பத்து நிமிஷம் ஆனதும் வரதன் வீட்டுள்ளே வந்தான்.

பரமசிவம் எழுந்து ஒரு அரை மணி நேரம் நிமிஷம் கழித்து சரோஜா எழுந்துக் கொண்டாள். சரோஜா அம்பாளை வேண்டிக் கொண்டு விட்டு மெல்ல எழுந்து ‘பாத் ரூமு’க்குப் போய் பல்லை நன்றாகத் தேய்த்துக் கொண்டு வந்து சுவாமி ‘ரூமு’க்கு ஒரு நமஸ்காரம் பண்ணி விட்டு,பரமசிவத் தின் பக்கத்தில் ‘டைனிங்க் டேபிளில்’ வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
உடனே சமையல் கார மாமா சுந்தரம் ரெண்டு பேருக்கும் பில்டா¢ல் இறங்கி இருந்த முதல் ‘டிக்காக்ஷணையை’ விட்டு,ஆவி பறக்க பறக்க ‘காபி’யையும்,’ பிஸ்கெட் டப்பாவை’யும் எடுத்துக் கொண்டு ‘டைனிங்க் டேபிள்’ மேலே வைத்தார் ‘பவ்யமாக’ வைத்தார்.

பரமசிவமும்,சரோஜவும் ‘பிஸ்கெட் டப்பாவை’த் திறந்து ஆளுக்கு நாலு ‘பிஸ்கெட்டை’ச் சாப்பிட்டு விட்டு சுந்தரம் கொண்டு வந்து ‘காபி’யை ரசித்துக் குடித்தார்கள்.
ரெண்டு நிமிஷம் தான் ஆகி இருக்கும் பரமசிவம் சுந்தரத்தைப் பார்த்து “சுந்தரம் எனக்கு இன்னும் ஒரு ‘கப்லே’ கால் வாசிக்கு இப்போ போட்ட மாதிரி ‘காபி’யை போட்டுக் கொண்டு வா. எனக்கு என்னவோ இன்னும் கொஞ்சம் ‘காபி’ குடிக்கணும் போல் இருக்கு.சில நாள் இந்த மாதிரி ஆசை எனக்கு வறது.உனக்கும் அந்த மாதிரி ஆசை வறதா சரோஜா” என்று கேட்டார்

“எனக்கு அந்த மாதிரி ஆசை எல்லாம் வற்தே இல்லே” என்று சொன்னாள் சரோஜா.

சுந்தரம் சமையல் ரூமுக்குப் போய் வேறே ஒரு ‘கப்’லே ஒரு கால் பாகத்துக்கு முன்னம் போட்டு வந்த ‘காபீ’யைப் போலவே போட்டுக் கொண்டு வைத்தார். பரமசிவம் அந்த கால் ‘கப் காபியே ரசித்துக் குடித்தார்.சுந்தரம் ‘டைனிங்க் டேபிளு’க்கு வந்து, ’பிஸ்கெட் டப்பாவையும்,’ எல்லா காபி ‘கப்’ களையும் எடுத்துக் கொண்டு தேய்க்கப் போட்டு விட்டு ‘பிஸ்கெட் டப்பாவை’ அலமாரியில் வைத்தார்.

இது வரை அப்பாக் கிட்டே ஒரு பொய் கூட சொல்லாத ரமேஷ் அனலில் விழுந்த புழு போகத் துடித்தான்.அவனால் அந்த ‘துடிப்பை’ தாங்கிக் கொண்டு வர முடியவில்லை.

’நாம அம்மா,அப்பா கிட்டே நடந்த உண்மையைச் சொல்லி விடலாம்.இனிமே மறச்சு வக்கக் கூடாது.நாம ஜூலியே கல்யாணம் பண்ணீண்ட சமாசாரத்தை இப்ப சொல்லியே ஆகணும்’ என்று நினைத்து, ரமேஷ்’ போனை’ எடுத்து அப்பா,அம்மாவுக்கு ‘போன்’ பண்ணினான்.

‘போன்’ மணி அடிந்தது.சரோஜா ‘போனை’ எடுத்துப் பேசினாள்.

’போனில்’ தன் அம்மா குரல் கேக்கவே ரமேஷ் கொஞ்சம் ¨தா¢யத்தை வழைத்துக் கொண்டு “அம்மா,நீங்களும்,அப்பாவும் என்னே தயவு செஞ்சி மன்னிக்கணும்.நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன். என்னோட கூட படிச்சு வந்த ஜூலியே நான் ரொம்ப காதலிச்சு வந்தேன்.அவளும் என்னே உயிருக்கு உயிரா காதலிச்சு வந்தா.நான் அவ அழகிலே என்னே பறி கொடுத்து அவளே கல்யாணம் பண்ணிடு ட்டேன். . . .” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரோஜா வெறி வந்தவள் போல “என்னடா சொல்றே ரமேஷ்.நீ ஒரு அமெரிக்கப் பொண்ணையா கல்யாணம் பண்ணீண்டு இருக்கே.நீ ‘ப்லேன்’ ஏறும் போது எங்க கிட்டே என்னடா சொல்லிட்டுப் போனே…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரோஜா மயக்கம் வந்து ‘சோபா’வில் ‘பொத்’ என்று உட்கார்ந்துக் கொண்டாள்.

சரோஜா மயக்கம் வந்து ‘சோபா’வில் ‘பொத்’ என்று உட்கார்ந்துக் கொண்டதைப் பார்த்த பரமசிவம் பயந்துப் போனார்.

பரமசிவம் மணைவி கையிலே இருந்து போனை வாங்கி “என்னடா சொல்றே ரமேஷா,நீ ஒரு அமெரிக்கப் பொண்ணையா கல்யாணம் பண்ணீண்டு இருக்கே,உனக்கு புத்தி கெட்டுப் போச்சா. என்ன.‘ஆசாரமான குடும்பத்லே பொறந்த நீ,இப்படி ஒரு ‘கேவலமான காரியத்தே’ பண்ணுவேன்னு நாங்க கனவிலே கூட நினைக்கலே.நீ எங்களுக்குப் பொறந்த பிள்ளையே இல்லேடா.இந்த ‘போன்’ காலோட’ நமக்கு இருந்த உறவு முறிஞ்சிப் போச்சுடா.இனிமே எங்களே உன் அப்பா, அம்மான்னு கூப்பிடாதே.எப்போ எங்களேக் கேக்காம நீ கல்யாணத்தே பண்ணீண்டு இருக்கியோ,இனிமே இந்த ஆத்துக்கு உள்ளேயே நீ வறாதே” என்று சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட்’ பண்ணினார்.

பரமசிவம் சரோஜா பக்கத்திலே வந்து உட்கார்ந்துக் கொண்டார்.அவர் சரோஜவின் கைகளைப் பிடித்து கொண்டு “சரோஜா,மொள்ள உன் கண்ணே முழிச்சு என்னே பாரு.உனக்கு உடம்பு ஒன்னும் இல்லையே.நான் உன்னே ஒரு ‘ஹாஸ்பிடலுக்கு’அழைச்சுண்டுப் போய் காட்டறேன்” என்று சொல்லி விட்டு சரோஜாவையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

சுந்தரம் சமையல் ‘ரூமில்’ இருந்து வெளியே ஓடி வந்து,பரமசிவத்தின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தார்.வரதனும் ‘வாஷிங்க் மெஷினில்’ அழுக்கு துணீகளைப் போட்டுக் கொண்டு இருந்ததை விட்டு விட்டு,அத்திம்பேர் பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டான்.இருவரும் சரோஜா மயக்கமாக படுத்து இருப்பதை பார்த்து பயந்தார்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *