அப்பத்தா

 

டெல்லி மத்திய அலுவலகம், தன் தந்தை அனுப்பிய மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருந்தான்.பாலு என்கிற பாலசுப்ரமணியன், தன் தந்தை அனுப்பிய எழுத்து நடை அழகான ஆங்கிலத்தில் இருந்தது.ஆனால் தகவல் தன் மனதை பாதிக்கக்கூடியதாக இருந்தது. மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.அவரை பெற்றவளை நல்ல வசதியான காப்பகத்தில் சேர்த்திருப்பதாக பெருமையுடன் எழுதியிருந்தார்.

அப்பா உங்களுக்கு தெரியுமா? நான் உங்களிடம் வளர்ந்ததை விட உங்களை பெற்ற அப்பாருவிடமும் அப்பத்தாவிடமும் தான் வளர்ந்தேன், அவர்களின் அரவணைப்பும்,ஆசியும்,நான் பத்தாவது ப்டிக்கும் வரை கிடைத்துக்கொண்டே இருந்தது. என்னுடைய முரட்டுத்தனத்துக்கு,தன் முரட்டுத்தனத்தால் பதில் சொல்வாள் ஆத்தா. அவ்வப்போது எனக்கும்,ஆத்தாளுக்கும் நடக்கும் சண்டையை “அப்பாரு” மூக்கையா தன் மீசையை முறுக்கிவிட்டு இரசிக்கும் அப்பாரும், அப்பத்தாவும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள், ஒருவிதத்தில் உறவு முறை கூட, இரண்டு பேர் குடும்பமும், சந்தையிலிருந்து ஆடு வாங்கி வந்து வாரத்தில் முன்று அல்லது நான்கு நாட்கள் “கறிக்கடை” போடுவது,அப்பத்தா அவங்கப்பாவிற்கு ஒரே பெண்ணாகையால் கல்யாணத்துக்கு முன்னாலேயிருந்து அவங்கப்பாவுடன் சந்தைக்கு சென்று ஆடு “வகை” பார்த்து வாங்கி வந்து அவங்கப்பா வெட்டிக்கொடுக்க ஒற்றையாளாக தோலை உரிக்கக்கூடியவள். நல்ல பலசாலி,அவளுக்கு கல்யாணம் ஆகும் முன் அவள் அப்பாவுக்கு எல்லாமுமாய் இருந்தாள், அவள் அப்பா அவளை ஒரு ஆண் பிள்ளை போல் வளர்த்திருந்தார்..அப்பத்தாவை அப்பாரு கல்யாணம் பண்ணியவுடன் அப்பத்தாவின் அப்பா அப்பத்தா இல்லாததால் தொழிலையே விட்டுவிட்டு மாப்பிள்ளையின் தொழிலுக்கு உதவியாக வந்துவிட்டார். அப்பத்தா தன் தந்தைக்குப்பின் தன் கணவனுடன் தனியாக தொழில் ஆரம்பித்துவிட்டாள்.சந்தைக்கு செல்வது முதல் கறிக்கடை போடுவது, வியாபாரம் செய்வது வரை தன் கணவனுக்கு சரிசமமாக உதவி செய்தாள்.

பொ¢ய வருமானத்தை அவர்கள் சம்பாதிக்காவிட்டாலும்,அவர்களுக்கு பிறந்த ஒரே பையனான அப்பா படிப்பில் படு சுட்டியாக வள்ர்ந்தார். அவருடைய ஆரம்ப பள்ளி ஆசிரியரே அவனது அறிவாற்றலைப் பற்றி அப்பாருவிடம் பெருமையாக சொல்வார். “மூக்கையா” உன் பையன் பெரிய ஆளா வருவான், நீ எப்படியாவது அவனை கண்டிப்பாக படிக்க வச்சுரு என்பார், அப்பாரு பெருமையுடன் மீசையை முறுக்கி சிரிப்பார்.

அப்பாருவின் குடும்பமும், அப்பத்தாவின் குடும்பமும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்தனர். இவர்கள் இருவரும் எந்த துன்பம் வந்தபோதும் தன் பையனின் படிப்பை நிறுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே போல் அப்பாவும் பள்ளி இறுதிவகுப்பில் மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்தார். அதன் பின் அவர் அரசாங்கம் தந்த கல்வி உதவியால் அவருடைய பெயருக்கு பின்னால் பல பட்டங்கள் வந்து சேர்ந்து அவரை அரசாங்கத்தில் பொ¢ய அதிகாரி என்று பதவிக்கு உரியவரானார். அப்போதும் அப்பாருவும், அப்பத்தாவும் தன் மகனின் தன் மகனின் உயர்வு கண்டு சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தனரே தவிர அவர்களால் மகனின் சமூககால கூட்டத்துக்குள்ளும், பெரிய பெரிய விழாக்கள், பாராட்டுக்கள், போன்றவற்றில் கலந்துகொள்ளவிலை, காரணம் கூச்சமாகவும் இருக்கலாம், அல்லது அப்பாவும் அவர்களை இந்த உலகத்திற்கு காட்ட விருப்பமில்லாமல் இருக்கலாம், ஏனெனில் அப்பா ஊர் ஊராய் நாடு, நாடாய், அலுவலக விசயமாக சுற்றுபவராக இருந்தார்.

அப்பாவின் திருமணம் கூட அவருடைய இலாகாவின் அமைச்சராக இருந்தவரின் உறவினர் மகளையே மணமுடித்தார்.திருமணத்தின்போது கூட அமைச்சா¢ன் ஆரவாரமே அதிகமாக இருந்ததே தவிர அப்பாரும், அப்பத்தாவும் ஒரு அறையிலேயே இருந்தனர், இதற்கும் அவர்களின் கூச்சமே காரணமாக் இருந்தது. அப்பாவும் வருபவர்களை வரவேற்பதிலும், அவர்களை கவனிப்பதிலும் கவனம் இருந்ததே தவிர பெற்றோரின் கூச்சத்தை போக்கி, அவர்களை வெளிச்சத்துக்கு காட்ட முடியவில்லை. திருமணம் முடிந்த உடனேயே அப்பாரும்,அப்பத்தாவும் தன் கிராமம் சென்றுவிட்டனர்.அதன் பின்னர் ஐந்து வருடங்கள் தன் தொழிலை தொடர்ந்து செய்தனர்.ஒரு நாள் அங்கு வந்த அப்பா “அம்மா” என் பையன் உங்கிட்ட இருக்கட்டும், உன் ம்ருமகளுக்கு கல்கத்தாவுக்கு ட்ரன்ஸ்பர் ஆகிவிட்டது, நானும் மாற்றல் வாங்கி செல்கிறேன்,என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் இருந்து தன் கிராமத்து வீட்டை தன் மகன் இருப்பதற்காக வேண்டிய வசதிகள் செய்து ஊரிலிருந்து பதினைந்து மைல் தள்ளி நல்ல ஆங்கில கல்விப்பள்ளியில் சேர்த்தார், தினமும் பள்ளி செல்ல ஒரு கார் வசதியும் செய்து கொடுத்துவிட்டு அப்பாவும் அம்மாவும் கிளம்பிச்சென்றனர்.

அதன் பின்னர் பாலுவின் வாழ்க்கை அப்பாருவுடனும், அப்பத்தாவுடனும் சந்தோசமாக கழிந்தது.அப்பத்தா முரட்டு ஆளாக இருந்தாலும் தன் பேரன் மீது அலாதியான அன்பாய் இருந்தாள்.அப்பத்தாவுக்கு கடலைமிட்டாய் என்றால் உயிர், அவன் தினமும் அப்பத்தாவின் கடலை மிட்டாயை பிடுங்கி சாப்பிட அப்பத்தா அவனுடன் சண்டை போடுவாள், அப்பாரு வழக்கம்போல் தன் மீசையை முறுக்கி சிரிப்பார்.பள்ளி விடுமுறை நாட்களில் தாத்தாவும் பேரனும், கிராமத்துக்குள் சுற்றி வருவார்கள், கிராமத்து பையங்களுடன் இவன் விளையாட சென்றாலும், அவர்கள் இவன் வசதியை பார்த்து மிரண்டு போய் ஒதுங்குவார்கள்.இதைவிட இவர்களின் உறவினார்கள் கூட அப்பாருவின் வீட்டை பார்த்து கூச்சப்பட்டு ஒதுங்குவார்கள்,அப்பத்தாவுக்கு இதில் வருத்தம் என்றாலும் தானே வலியப்போய் உறவினர்களுடன் எல்லா விசேசங்களுக்கும் கலந்து கொள்வாள், அப்பாருவையும், இவனையும் கலந்து கொள்ள வைப்பாள்.

வருடங்கள் மகிழ்ச்சியாக ஓடியது அவர்கள் மூவருக்கும், தந்தையைப்போலவே அவனும் நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதியில் தேறினான், அத்துடன் அவன் கிராம வாழ்க்கை முடிவுக்கு வந்தது.அதன் பின் அவன் அப்பா அம்மா வந்து அவனை சென்னையிலேயே ஒரு உறைவிடப்பள்ளியில் சேர்த்தனர். அவனுடைய கிராம வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு, பின் தந்தையைப்போலவே மத்திய அரசாங்கத்திலேயே நல்ல பதவிக்கும் வந்து விட்டான், அப்பாரு இறந்து விட்டார் என்பதை அவன் அப்பா தொ¢வித்தும் அவனால் செல்ல முடியாத சூழ்நிலையில் சிக்கியிருந்தான்.

பெருமூச்சுடன் பாலு தன் பழைய நினைவுகளில் இருந்து மீண்டான், தன் “மேலாளரை” காண உள் அறைக்கு சென்றான்.

“அன்னை இல்லம்” அன்று பரபரப்புடன் காணப்பட்டது, அன்று உதவி கலெக்டர் அன்னை இல்லத்துக்கு வருவதாக தொ¢விக்கப்பட்டிருந்தது. அதனால் அதன் நிர்வாகி ஒருவித எதிர்பார்ப்புடன் காணப்பட்டார். அலுவலகம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு கார் வந்து நின்றது, அதிலிருந்து உதவி கலெக்டர் இறங்கிவந்து நிர்வாகியிடம் கைகுலுக்கி என் பெயர் பாலசுப்ரமணியன், நான் இங்கு உதவி கலெகடராக் உள்ளேன், எங்கு எனது பாட்டி “செல்லாயம்மாள்” தங்கி உள்ளார், அவர்களை பார்க்கவேண்டும், என்றார். நிர்வாகி ஒரு நிமிடம் யோசித்து ஓ’ செல்லாயி பாட்டியா? வாங்க கூட்டிட்டு போறேன் என்று அழைத்துச்சென்றார்.

ஒரு கட்டிலில் ஓரத்தில் பாலுவின் அப்பத்தா உட்கார்ந்திருந்தார், அவருடய முரட்டு உடல் காணாமல் போயிருந்தது, உடல் சுருங்கியிருந்தது, முகத்தில் வரி வரியாய் கோடுகள் அவள் அனுபவத்தை பறை சாற்றியன.பார்வை நேர்கோட்டில் இருந்தது, நிர்வாகி அவர் அருகில் வந்து ‘பாட்டி’ இவர் யாரென்று தெரிகிறதா? என்று கூறிக்கொண்டே பாலுவை நோக்கி கையை காட்டினார், பாட்டி கண்ணைச்சுருக்கி பாலுவை பார்த்துக்கொண்டே இருந்தார், நிர்வாகி சூழ்நிலையை உணர்ந்து வெளியேறினார், பாலு தன் அப்பத்தாவை அணைத்துக்கொண்டான், அந்த அணைப்பின் சூட்டில் அப்பத்தாவின் கண்ணில் நீர்த்துளிகள் பாலுவின் கையில் உருண்டு விழுந்தன.அப்பத்தா தன்னை தொ¢ந்துகொண்டாள் என்பதை உணர்ந்து கொண்டான், தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலம் எடுத்து பிரித்து அப்பத்தாவின் கையில் வைத்து அழுத்தினான், பாட்டி கையை விரித்து பார்த்தவள் முகம் பிரகாசமானது, “கடலை மிட்டாய்” தன் பொக்கை வாயை திறந்து வாய்விட்டு சிரித்தாள், அவனுடைய பழைய அப்பத்தாவை பார்க்க முடிந்தது, இந்த கடலை மிட்டாய்க்காகத்தான், பாட்டிக்கும், பேரனுக்கும் அப்படி ஒரு சண்டை நடக்கும், தாத்தனுக்கு அது ஒரு வேடிக்கையாய், மீசையை முறுக்கி இரசிக்கும்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த பாலு,நிர்வாகியின் அருகில் வந்து ஐயா எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும், நான் என் அப்பத்தாவிற்காகத்தான் டெல்லியிலிருந்து மாற்றல் வாங்கி இங்கு வந்திருக்கிறேன்,எனக்கு ஒரு இடத்தில் பணி இருக்காது,அலைந்து கொண்டிருப்பேன் என் அப்பத்தாவை நான் தினமும் வேலைக்கு செல்லும்போதும்,வேலை விட்டு வரும்போதும் பார்த்துச் செல்ல அனுமதிக்க வேண்டும், என் அப்பத்தா இருக்கும் வரை நான் தமிழ்நாட்டுக்குள்தான் இருப்பேன், எங்கே இருந்தாலும், கண்டிப்பாக என் அப்பத்தாவை பார்க்க வருவேன், அதற்கு தயவு செய்து நீங்கள் அனுமதி தரவேண்டும், கண்கலங்க வேண்டினான். நிர்வாகி அவனுடைய ஏக்கத்தை புரிந்துகொண்டு, தாரள்மாக வாருங்கள், ஆனால் தவறாக நினைக்க வேண்டாம், ஒரு விண்ணப்பத்தை இப்பொழுதே எழுதி கொடுத்து விடுங்கள், “இப்பொழுதே எழுதித்த்ருகிறேன்’ என்ற பாலு விண்ணப்பம் எழுத நிர்வாகியுடன் அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வரவேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக்கொண்டிருந்த்தை கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்த சாமிநாதனை இதோடு எத்தனை ...
மேலும் கதையை படிக்க...
"படக்"கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என நினைத்து இருந்த செருப்பு தன் ஆயுளை முடித்திருந்தது, இன்னொரு காலில் இருந்த செருப்பையும் கழட்டி புதரில் ...
மேலும் கதையை படிக்க...
இடம்: பம்பாய் நாள்: 01.01.1970 எழுத்தாளர் கமலனாதன் அவர்களுக்கு உங்கள் “கற்பனையில் வாழும் மனிதர்கள்” என்னும் சிறு கதையை படித்தேன். மேலாக வாசித்ததில் நன்றாக இருந்தது. ஆனால்.அந்த சிறு கதையில் நீங்கள் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று என்னை போல வாசகர்களுக்கு புரியும்படி இருந்திருந்தால் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் பேப்பரை விரித்த எனக்கு ஒரு செய்தியை பார்த்தவுடன் வியப்பாய் இருந்தது. போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார், என்று அவரின் படத்தை போட்டிருந்தார்கள். அவரை பார்த்தவுடன் எனக்கு அன்று நடந்த நிகழ்ச்சி நினவுக்கு வநதது. பள்ளி முடிந்தவுடன் நண்பன் ...
மேலும் கதையை படிக்க...
காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது நின்று போனதில் உடல் கொஞ்சம் சூடாய் இருப்பது போல் பட்டது. இருந்தாலும் மூச்சை இழுப்பதில் சிரமம் ஏற்படத்தான் செய்கிறது. இளமை ...
மேலும் கதையை படிக்க...
டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது. இது என்னங்க சத்தம் ? கணவன் முருகேசனிடம் கேட்டாள். பக்கத்துல மோல்டிங் வேலை நடக்குது. இராத்திரி பத்து மணிக்குமா? இராத்திரி பகல் அப்படீன்னு கிடையாது. காலையில ...
மேலும் கதையை படிக்க...
மரகதபுரி மன்னர் நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்தார். அவருக்கு பின் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் மகேந்திரன் தனக்கு இராஜ்ய பரிபாலனை வேண்டாம் என்றும் தான் ஒரு வைத்தியராக இருக்கவே விருப்பம் தெரிவித்தார். இதனால் மரகதபுரிக்கு அடுத்து யாரை மன்னனாக்க போகிறார்கள் என்று மக்கள் ...
மேலும் கதையை படிக்க...
இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது, ராமசாமியும், அவன் அப்பா, அம்மா, தங்கை, நால்வரும் அவர்கள் ஊருக்கு பேருந்தில் வந்து இறங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் போதும், அவர்கள் வீட்டுக்கு போய் விடலாம். நால்வரும் வேகமாக ...
மேலும் கதையை படிக்க...
மேடையில் முக்கிய விருந்தாளியான என்னை பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள் நான் உற்சாகமாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னை பற்றி பேசும்போது எனக்கு கூச்சமாக இருக்கும். இப்பொழுது அந்த மாதிரி உணர்வுகள் மறைந்து விட்டன. இவர்கள் என்னை பற்றி பேசாவிட்டால்தான் எனக்கு மிகுந்த ...
மேலும் கதையை படிக்க...
பாலக்காட்டிலிருந்து ஒரு கார் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அட்டகட்டி என்னும் இடத்தில் வண்டி நின்றது, வண்டியில் இருந்து ஒரு அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தகுந்த ஒரு பெரியவர் இறங்கினார், நல்ல க்ருத்த உருவம், பார்த்த ...
மேலும் கதையை படிக்க...
குற்ற உணர்ச்சி
இவனும் ஒரு போராளி
வாசகனும் எழுத்தாளனும்
அவனின் நாணயமே அவனுக்கு எதிரி
தன்னையே நினைத்து கொண்டு
ஓசை
மன்னர் தேவை
பள்ளியில் திருட்டு
மடுவும் மலையும்
முனியனும் அவனுக்கு மனைவியான மலைசாதிப்பெண்ணும் சந்தித்த கதை

அப்பத்தா மீது 4 கருத்துக்கள்

 1. RAMAMOORTHY KUMARAVEL says:

  அருமையான கதை ……..வழ்த்துகள்………….

 2. DHAMOTHARAN.S says:

  உங்கள் கருத்துக்கு நன்றி

 3. paulraj says:

  இன்றைய நாகரிகத்தில் எங்கோ ஓரிடத்தில் நடக்கும் நெகிழ்ச்சியான கதை

 4. rmariadevadoss raj says:

  நல்ல கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)