கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 10,335 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுப்பங்கூடத்தின் வடமேற்கு முக்கில் குரிய வெளிச்சம் படாத ரப்பரப்பில் அமைத்திருந்தது அங்கணம்; சாப்பிட முன்றும் சாப்பிட்ட பின்னாலும் கைகழுவுகிறது, முகம் கைகால் கழுவுகிறது. கொப்பளித்துத் துப்புகிறது, ஏனங்கள் கமுவுகிறது, சர்க்கஸ் கம்பெனி போல பெரிய்ய எங்கள் குடும்பத்தின் தயர்கள் சங்கிலித் தொடராய்க் குளிக்கிறது, கொள்கிறது எல்லாமே அதில்த்தான், இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒரு HD அல்லது அஞ்சி மணி நேரமே இய்வாக இருக்கும் அங்கணம்

பிறந்ததிலிருந்து எங்களை அங்கணத்துக்கும் அங்கணத்தை எங்களுக்கும் ரொம்பப் பழக்கம். அதில் எந்த இடத்தில் கால் வைக்கிறது என்று எங்களுக்கு மட்டுமே தெரியும்.

விருந்தாளிகள் வந்துவிட்டால் பட்டக சாலையில் அவர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

அடுப்பங்கடத்திலிருந்து அழைப்பு வந்தாலுங்கூட பேசிக் கொண்டேதான் இருக்கத் தோன்றும், அம்மாவின் ‘அவசரநிலைப் பிரகடனம்’ வந்தபிறகு தான் எழுந்திருக்கிறது. அப்பவும் பேசிக் கொண்டே விருந்தாளிக்குக் கைகால் கழுவ சொம்பில் தண்ணீர் மொண்டு போய் கொடுப்போம். எங்களுடன் பேசிக்கொண்டே அங்கணத்தில் விருந்தாளி கால் வைக்கப் போகும்போது “வழுக்கும், பார்த்து…” என்று சொல்வதற்கு வாய் திறப்பதற்கும் விருந்தாளி சரட்டென்று ஒரு பொம்மைபோல் விழுந்து கிடப்பதற்கும் சரிய்யாய் ருெக்கும்.

இந்த அங்கணத்தில் ஒரு கஷ்டம். விழுந்தவர் எழுத்து நிற்க முடியாது; எழுத்து அடியெடுத்து வைத்ததும் திரும்பவும் சரட்! எழுத்திருக்க எழுத்திருக்க அதே வேகத்தில் விழுந்து கொண்டே இருப்பார்.

விருத்தானிக்கு அப்படிக் கஷ்டமா; நமக்கு, அவரது நிலைமையைக் கண்டு சிரிக்கமுடியாத கஷ்டம்.

இப்படித்தான் ஒரு நாள், வந்த விருந்தாளி அங்காளத்துக்குள் விழுந்து கிடக்கிறார். விழுந்தவர் அப்பாவுக்கு ரொம்ப சினேகிதர்; அதோடு கௌரவமானவர். வேகமாய் எழுந்திருக்க முயன்றபோது அதைவிட வேகமாய் கீழே விழுந்ததோடு ஆடையத்தளையும் பாழாகியது. பெரியண்ணா , அவரது நிலை கண்டு அவசரமாய் உதவிக்குப் போனார். போன வேகத்தில் அவரும் அந்தப் பிரமுகர் பேரில் விழுந்தார்.

மின்சார ‘ஷாக்’கில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவப் போனால் அவர்களையும் சேர்த்து இழுத்துக் கொள்ளும் என்று கேள்வி. அப்படிக்கண்டு இதுக்குள் என்னமும் இருக்குமோ என்னவோ?

இப்போது இருவராலும் எழுந்து நிற்கமுடியலை. யார் உதவிக்குப் போகிறது. ஒன்றும் செய்ய முடியலை. எங்கள் குடும்பத்தில் அதை ஒரு கருப்பு நாள் என்றுதான் சொல்ல வேணும்.

அந்த சமயத்தில் ஒரு விஷயம் அம்மாவுக்குப் பளிச்சென்று ஞாபகத்துக்கு வந்தது. வேலையானை சத்தம் காட்டி, “சீக்கிரம் வண்டிக் கயிறு எடுத்துட்டு வா” என்று கூப்பாடு போட்டான்.

இந்த வாடிக் கயிறு போசனை அம்மாவுடையதல்ல. எங்க வீட்டுக்கு ஒருநாள், தனது மருமகளோடு கோவித்துக்கொண்டு கிணற்றில் விழுந்து சாகப் போவதாகச் சொல்லிவிட்டு வந்த ஒரு அததையம்மாவுடையது. அது சாயத்திர தேரம். அவளுக்குக் குளிப் பதற்கு வெத்தீர் எடுத்து வைத்திருந்தது. வீட்டில், அங்கங்கே பல வேலை கள் காரணமாக – வெளியே போயிருந்தார்கள். சின்னத் தாகச்சி மட்டுமே இருந்தான். மாடியில் பெரியண்னா மட்டும் எழுதிக் கொண்டோ படித்துக்கொண்டோ இருந்தார்.

கோவித்துக்கொண்டு வந்த அத்தையம்மா வந்ததிலிருந்து பேசிக்கொண்டே இருந்தாள், பேசிப் பேசித் தீராது போலிருந்தது அவன் கதை பேசிக்கொண்டே அங்கணத்துக்குள் இறங்கினாள்

எங்களுக்கும் புத்தி கிடையாது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். விருந்தாளிகள் அங்கணத்துக்குள் இறங்குவதற்கு முன்னாடியே சொல்ல ஒருநாளும் எங்களுக்கு ஞாபகம் வந்ததே இல்லை, அது என்னவோ அங்கணத்துக்குள் அவர்கள் கால் வைப்பதும் நாங்கள் எச்சரிக்க வாய் திறப்பதும் அதற்குள் அவர்கள் விழுந்து கிடக்கவும் சரியாய் இருக்கும்.

அப்புறமென்ன, வழக்கம் போல் தான். இச்சுக் குரலில் தங்கச்சி சொன்னாள்; -அத்தையம்மா எழுத்திருக்காதீங்க.”

எழுத்திருந்து எழுந்திருந்து சோர்ந்துபோன அத்தையம்மா, “எள்ளடி பொண்ணே, என்னை இப்படியே கிடக்கச் சொல்றயா?”

விழும்போதே விருந்தாளி ஆஸ்திகராய் இருந்தால் பகவான் பெயரைச் சொல்லிக்கொண்டேதான் விழுவார்கள். அந்த அத்தை யம்மர் பழுத்த பக்தை என்பதோடு தீவிர வைஷ்ணவி என்பதை சொல்லத் தேவை இல்லை இங்கே, அப்படி அவள் மட்ட மல்லாக்கக் கிடத்தது பார்க்கப் பாவமாய் இருந்ததாக பிறகு சின்னத் தங்கச்சி சொன்னாள்.

“யன்னா, யள்ளா” என்று பெரியண்ணாவைக் கூப்பிட்டபோது, ‘அட பைத்தியக்காரப் பொண்ணே புத்தியிருந்தா என் நிலையில் ஆண் பின்னைகளைக் கூப்பிடுவாயா” என்று கேட்டதும் தங்கச்சிக்கும் தெரித்தது.

ஒன்றும் செய்யமுடியாத இத்திலையில் அத்தையம்மா, “ஆதிமூலம்; ஆதிமூலம்” என்று உருக்கமாக கஜேந்திரக் குரலில் அழைக்க மட்டுமே முடிந்தது.

அப்புறம் என்ன தோன்றியதோ “வண்டிக் கயிறு இருக்கா என்று சின்னத்தங்கச்சியிடம் கேட்டாள். கையைப் பிசைந்துகொண்டு இருந்த சின்னத்தங்கச்சி கயிறு எடுத்துவர ஓடினாள். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி நடந்ததைப் பதைபதைப்போடு சொல்லி முடித்தவுடன் அம்மா மாடியைப் பார்த்து, “ஓரெய்! பெத்தாண்டா; பெத்தாண்டா” என்று கூப்பாடு போடவும், படப்பில் தான் யாரோ தீ வைத்துவிட்டார்களோ என்று வேகமாக இறங்கி பெரியண்ணா ஓடி வந்தார்.

விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டதும், பளிச்சென்று கைகளைப் பின்பக்கமாகக் கட்டிக்கொண்டு திமிர்ந்து ஒரு புன்னகை செய்தார். – பிறகென்ன! வண்டிக் கயிற்றின் ஒரு துனியை அண்ணா மறைவில் இருந்து கொண்டு பிடித்துக்கொள்ள, மறுநுனியைக் கொண்டுபோய் அத்தையம்மாவின் யோசனைப்படி அவனிடமே கொடுக்கப்பட்டது. எல்லோரும் பிடித்து இழுக்க, அத்தையம்மாள் ‘கரை சேர்ந்தாள்’ இதுக்குள் காட்டில் வேலைக்குப் போயிருந்த குடும்பத்தார் வந்து எள்ள, என்ன என்று கூடிவிட்டார்கள். அவிழ்த்து வைத்திருந்த சேலையை எடுத்துக் கட்டிக்கொண்ட அத்தையம்மா, எவ்வளவு மன்றாடியும் கேட்காமல், சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்து கோவித்துக்கொண்டு போயே போய்விட்டாள்,

கிணற்றில் விழுந்து சாகப்போவதாகச் சொல்லிவிட்டு வந்தவள்; இங்கிருந்தும் கோவித்துக்கொண்டு போகிறாளே என்று சின்னத் தங்கச்சிக்கும் அம்மாவுக்கும் பயமும் திகிலும்; பெரியண்னாதான் அவர்களுக்கு அப்படியெல்லாம் ஏற்படாது என்று தைரியம் சொன்னார்.

அப்போதுதான் அம்மா சொன்னாள் கோபத்தோடு -துெ என்ன அங்காளம்ன்று உங்க அப்பா வச்சிட்டிருக்கார்; இடிச்சித் தள்ளச் சொல்லு இதை எப்படியெல்லாம் புதுமாதிரியாக குளிப்பறைகள் வத்திருக்கு, இந்த தாப்பாதாமாண்டு அங்கணத்தைக் கட்டி அளுதுக்கிட்டு..”

இதைக் கேட்டதும் சின்னண்ணா கோபத்தோடு கடப்பாரையை எடுத்துக்கொண்டு வந்து அங்களளத்தை இடிக்கப் போனபோது, தாத்தா கைத்தடியை ஊன்றிக்கொண்டு வேகமாய் வத்து, “ஒரேய், ஒரேய்” என்று சொல்லித் தடுத்து, இந்த அங்கணம் தனது அப்பா பிரியமான தன் மனைவிக்குக் கட்டிக்கொடுத்தது என்றும் கிராமத்தில் பெண்டுகள் குனிப்பதற்குப் படுகிற அவஸ்தையை விளக்கி, திறந்த வெளிமுற்றத்தில் அவர்கள் குளிக்க, இருட்டுகிறவரை காத்திருந்ததையும், அதன்பிறகு மூடாக்கு இல்லாத கம்மந்தட்டை மறைசலில் நிம்மதியாக அமுக்குத் தேய்த்துக் குளிக்கமுடியாத நிலைமையையும் விளக்கிச் சொல்லி, தனது தகப்பனார் அம்மாவுக்கு அடுப்பங்கூடத்தின் கதவை மூடிக்கொண்டு திம்மதியாகக் குளிப்பதற்கென்தே கட்டிக்கொடுத்ததாக்கும் இது. குளிப்பறை வேறுமானால் தனியாகக் கட்டிக்கொள்வோம். அதுக்காக இதை இடிக்கணும்ன்று எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு’ என்று சொல்லி நிறுத்தினார்.

அந்த ஆண்டு குடும்பப் பட்ஜெட்டில் ஒரு குளியல் அறை சுட்டுவது என்று தீர்மானம் செய்து, வீட்டுக்கு வருகிற விருத்தானிக்கு நிகழும் ஒரு பரம்பரை அவமானம் துடைக்கப்படும் என்று கருதப்பட்டது. புதிய குளியல் அறை ‘ஜிஞ்சாமிர்தமாக’ அமைத்து விட்டது. அதன் அமைப்பு அப்படி, துழைத்தவர்கள் சீக்கிரம் வெளியே வர மனசு வருவதில்லை. அந்த மொசைக் செங்கல் பதித்த தரையில் உட்கார்ந்து கொண்டே குளித்தால், ராக ஆலாபனை, பல்லவி எல்லாம் வரும்!

எங்கள் அங்கணத்துக்கு இத்தனை தலைமுறைகள் அயிற்றே, அதில் நாங்கள் யாரும் கால் வழுக்கினோம், விழுத்தோம் உண்டா? இத்தச் சண்டாளக் குளியல் அறை வந்தது; ஒரு சில மாசங்களுக்குள் எங்கள் தாத்தாவின் இடுப்பு எலும்பை முறித்துவிட்டது. அதில் படுத்தவர் தேறவே இல்லை.

இந்தச் சம்பவம் எங்களையும் முக்கியமாக அம்மாவை ரொம்ப பாதித்துவிட்டது.

தாத்தா இருக்கும் போது சுடேசியாகச் சொன்ன வார்த்தை, “அடேய், அங்கணத்தை இடிச்சிராதிங்கடா”

இப்போ தாங்கள் யாருமே குளியலறைப் பக்கம் போகிறது கிடையாது.

வருகிற விருந்தாளிகளுக்கே அதை நிரந்தரமாக்கிவிட்டோம். எங்களுக்கு எங்கள் அங்கணம் இருக்கிறது.

– அமுதாரம் அக்டோபர் 1961

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *