13ஆம் இலக்க வீடு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 22,540 
 
 

எனக்கு எண் ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்தவர் என் தந்தை சிவராசா. உலகில் வாழும் பலரும் 13 என்ற எண்ணில் வீடுகளையோ, அல்லது வீட்டின் படிக்கட்டுகளையோ கூட அமைப்பதில்லை . சில வைத்தியசாலைகளில் ஒரு வார்ட்டில் 13 ஆம் நம்பர் கட்டில் இருப்பதில்லை. அவ்வளவுக்கு ஏன் அலுவலகங்களையும் கூட அந்த இலக்கத்தில் அமைப்பதில்லை. ஏன் என்றால் அது அபசகுன எண்ணாகவே பலரால் கருதப்படுகிறது என்று என் அப்பா சொல்லுவார். எனது பிறந்த தினத் திகதியில் வரும் எண்களின் கூட்டுத்தொகையின் எண் 3. ஆகவே 3 , 12 , 21, 30 இலக்கம் உள்ள வீடு ஒன்றை அந்தப்பகுதியில் தேடினேன்.

நான் வீடு வாங்கவேண்டும் என்று என் குடும்பத்தோடு கலந்து ஆலோசித்தபின் சுயமாக பிசினஸ் செய்து பணக்ககாரர்களான பலர் வசிக்கும் விலை உயர்ந்த வீடுகள் உள்ள லிஸ்கார்(Lisgar) வீதியில் வாங்கத் தீர்மானித்தேன். அந்த வீதிக்கு முன் லிஸ்கார் பூங்கா உள்ளது . ஆகவே அந்த வீதியில் வீடுகள், ஒரு வீதியின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருந்தன. எனது அதிர்ஷ்டம் குறைந்த விலைக்கு இலக்கம் 12 உள்ள வீடு எல்லா வசதிகளோடு எனக்கு வாங்கக் கிடைத்தது. என் வீட்டுக்குப் பக்கத்து வீடு 13 ஆம் இலக்க வீடு அதிக காலமாக பூட்டி கிடந்தது. பல தடவை அதன் உரிமையாளன் விற்பனைக்கு விளம்பரம் செய்தும் விற்பனையாகவில்லை . அந்த வீட்டின் உரிமையாளன் பீட்டர் அல்போன்சோ என்பவன் சொந்தத்தில் தொட்டத் தொழில் செய்தவன் .திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து செய்தவன். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. அவன் பிறந்தது போர்த்துகல்லில் உள்ள லிஸ்பன் நகரில். கனடாவுக்குப் பல வருடங்களுக்கு முன்பே புலம் பெயர்ந்து, தனது கைத் திறமையைப் பாவித்து சொந்த முயற்ச்சியில் வீடுகளில் மலர்த் தோட்டங்களை, உருவாக்கிக் கொடுத்து, பராமரித்து வரும் பிஸ்னஸ் செய்தவன். அதோடு GAY என்ற ஒரு பால் கேளிக்கை விடுதி ஓன்று நடத்தி வருபவன் . அதில் அவனுக்கு நல்ல வருமானம். ஆறு வருடங்கள் எனது பக்கத்து வீட்டில் வாழ்ந்து, அதன் பின் பக்கத்து ஊரான மில்டனில் பெரிய வீடு ஒன்றைத் தோட்டத்தோடு வாங்கிக் கொண்டு சென்று விட்டான். இந்த விபரம் எனக்கு வீடு வாங்கி கொடுத்த ரியல் எஸ்டேட் எஜென்ட் ரகுவரன் சொன்னார். பீட்டருக்கு மில்டன் வீடு ரகுவரன் வாங்கிக் கொடுத்ததால் அவனைப் பற்றி முழு விபரமும் ரகுவரனுக்குத் தெரியும் .

லிஸ்கார் வீதியில் உள்ள 13 இலக்க பீட்டரின் வீட்டை விற்றுத் தரும்படி பீட்டர் தன்னை கேட்டதாயும், விற்றால் தனக்கு ஐந்து விகிதம் கொமிசன் தருவதாக அவன் சொன்னான் என்றார் ரகுவரன் . அந்த வீட்டை ஒரு வருடம் விளம்பரம் செய்தும் ஒருவரும் அந்த வீட்டை வாங்க வரவில்லை என்றார் ரகுவரன்

எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இடையே ஆறடி உயரமான கம்பி வலை போட் வேலி இருந்தது . அந்த வீட்டுத் தொட்டத்தில் நடப்பது தெரியும் . எனது வீட்டின் பின் தோட்டத்திலும் பார்க்க 13 இலக்க வீட்டின் பின் தோட்டம் பெரியது. அந்தத் தோட்டத்தில் அப்பில், செரி, பீச், ப்ளம் மரங்கள் உண்டு. சிறு தண்ணீர் தடாகமும் உண்டு, புல் வெட்டும் யந்திரம்., தொட்டம் செய்யும் கத்தி, கோடாரி, அலவாங்கு போன்ற கருவிகள், உர மூட்டைகள் வைக்க ஒரு சிறு தோட்ட குடிசை (Garden Hut) அந்த தோட்டத்தில் உண்டு. அந்த வீட்டுக்கு மறுபக்கத்தில் வீடுகள் இல்லை . 13 இலக்க வீடு விற்பனைக்கு பல காலமாய் இருந்து வருகிறது பக்கத்து வீட்டில் ஒருவரும் வசிக்காத படியால் என் வீட்டில் டிவியை சத்தம் போட்டு வைத்தாலும், அடிக்கடி என் மகள் மைதிலி பியானோ வாசித்தாலும். நண்பர்களை நான் கூட்டி பார்ட்டி வைத்தலும், என் லப்றொடர் சாதி நாய் இனவா சத்தம் போட்டு குரைத்தாலும் ஏன் என்று கேள்வி கேட்பார் ஒருவரும் இல்லை. இன்வா திறமையாக மொப்பம் படிக்கும் சாதியைச்சேர்ந்த நாய். லப்றொடர் மாகாணத்தில் வேட்டை யாட அந்த நாயைப் பாவிப்பதுண்டு .

நான் என் மனைவி ரேணுக்கா. என் 16 வயது மகன் ரமேஷ் , 14 வயது மகள் மைதிலி என் மகளின் லபோரடோர் நாய் இன்வா ஆகியோர் நாள், நட்சத்திரம். நேரம் பார்த்து, பால் பொங்கி, ஐயர் வந்து பூசை செய்தபின் 12 இலக்க வீட்டுக்கு குடிபுகுந்தேன் எனது நண்பர்கள் சின்னையா, செல்லையா குடும்பஙகள். பொலீஸ்காரனாக வேலைசெய்யும் சின்னையாவின் தம்பி கண்ணனும் குடிபுகுந்த நாள் வந்திருந்தார்கள் . பகல் போசனத்தை சரவணபவனில் ஓடர் கொடுத்து எல்லோரையும் திருப்தி படுத்தி மகிழ்வித்தேன்.

இடையே ஆறடி உயரமான கம்பி வலை போட்ட வேலி இருந்தது . அந்த வீட்டுத் தொட்டத்தில் நடப்பது தெரியும் . எனது வீட்டின் பின் தோட்டத்திலும் பார்க்க 13 இலக்க வீட்டின் பின் தோட்டம் பெரியது. அந்தத் தோட்டத்தில் ஆப்பில், செரி, பீச், ப்ளம் மரங்கள் உண்டு. சிறு தண்ணீர் தடாகமும் உண்டு, புல் வெட்டும் யந்திரம்., தொட்டம் செய்யும் கத்தி, கோடாரி, அலவாங்கு போன்ற கருவிகள், உர மூட்டைகள் வைக்க ஒரு சிறு தோட்ட குடிசை (Garden Hut) அந்த தோட்டத்தில் உண்டு. அந்த வீட்டுக்கு மறுபக்கத்தில் வீடுகள் இல்லை . 13 இலக்க வீடு விற்பனைக்குப் பல காலமாய் இருந்து வருகிறது பக்கத்து வீட்டில் ஒருவரும் வசிக்காத படியால் என் வீட்டில் டிவியை சத்தம் போட்டு வைத்தாலும், அடிக்கடி என் மகள் மைதிலி பியானோ வாசித்தாலும். நண்பர்களை நான் கூட்டி பார்ட்டி வைத்தலும், என் லப்றொடர் சாதி நாய் இன்வா சத்தம் போட்டுக் குரைத்தாலும் ஏன் என்று கேள்வி கேட்பார் ஒருவரும் இல்லை. இன்வா திறமையாக மொப்பம் படிக்கும் சாதியைச்சேர்ந்த நாய். லப்றொடர் மாகாணத்தில் வேட்டையாட அந்த நாயைப் பாவிப்பதுண்டு .

நான் என் மனைவி ரேணுக்கா. என் 16 வயது மகன் ரமேஷ் , 14 வயது மகள் மைதிலி என் மகளின் லப்ரோடோர் நாய் இன்வா ஆகியோர் நாள், நட்சத்திரம். நேரம் பார்த்து, பால் பொங்கி, ஐயர் வந்து பூசை செய்தபின் 12 இலக்க வீட்டுக்கு குடிபுகுந்தேன் எனது நண்பர்கள் சின்னையா, செல்லையா குடும்பஙகள். பொலீஸ்காரனாக வேலைசெய்யும் சின்னையாவின் தம்பி கண்ணனும் குடிபுகுந்த நாள் வந்திருந்தார்கள் . பகல் போசனத்தைச் சரவணபவனில் ஓடர் கொடுத்து எல்லோரையும் திருப்திப் படுத்தி மகிழ்வித்தேன்.

அந்த குடிபுகு விழாவுக்கு எனக்கு வீடு வாங்கி கொடுத்த ரியல் எஸ்ட்டே ஏஜன்ட் ராகவன் வந்திருந்தார். அவர் அந்த வீதியில்வ் வாலழும் என் நண்பர்கள் சின்னையாவுக்கும் , செல்லையாவுக்கும் குறைந்த விலையில் வீடு வாங்கிக் கொடுத்தவர். அவர்கள் இருவரும் அந்த வீதியில் எனக்கு முன்பே குடி வந்து விட்டார்கள். அவர்கள் மூலம் எனக்கு ராகவன் அறிமுகமானவர் ராகவன் அந்த பகுதி பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்.

என் வீட்டுக்கு அருகே ஒரு கல்லூரி. பக்கத்தில் பஸ் ஸ்டாப். வீட்டுக்கு முன் ஒரு பார்க். சுமார் அரை கி மீ தூரத்தில் காரைநகரை சேர்ந்த கந்தையா என்பவர் நடத்தும் “கந்தையா குரோசரி
என்ற மளிகைக் கடை. நடந்தே போய் சாமான்கள் வாங்கலாம். இப்படி நல்ல வசதிகள் உள்ள பகுதி அது . அந்த வீதியல் வாழ்பவர்கள் சிலர் ஐரோப்பியர்கள். இரண்டு வட இந்தியர்கள். இரண்டு என் தமிழ் நண்பர்களின் குடும்பம். சின்னையயா பருதித்துறைவாசி. மற்றவர் செல்லையா கரவெட்டியை சேர்ந்தவர் , என் சொந்த ஊர் புலோலி . ஆகவே நாங்கள் மூவரும் வடமராட்சி என்பதால் எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது . அதோடு மூவரும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் படித்தோம் . அவர்கள் இருவரும் எனக்கு சீனியர்கள் . அதோடு நாங்கள் மூவரும் கொழும்பு பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவரகள். மூவரும் தனியார் அமெரிக்க. கனேடிய நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள். அவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் இரு கார்கள். எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு கார்கள். அவர்கள் வீட்டை போல் என் வீட்டுக்கும் டபுள் கராஜ்கள் உண்டு.

வீட்டுக்கு சென்ற அடுத்த நாளே எங்கள் நாய் இன்வா தன் கைவரிசையை காட்டத் தொடங்கி விட்டது.

வெளியில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேலி அருகே போய் நின்று அடுத்த வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துத் தொடர்ந்து குரைக்கும். நான் முன்பு இருந்த வீட்டுத் தோட்டத்தில் தோட்டத்தில் குருவி, முயல்.ந, அணில் ஆகியவற்றைக் கண்டு இன்வா குரைப்பதுண்டு . ஆனால் இந்தப் புது வீட்டில் அவை இல்லாத போதும் வெலிக்கு அருகே போய் நின்று. அடுத்த வீட்டுத் தோட்டத்தைப் பார்த்து ஊளை விட்டுக் குரைக்கும். இன்வாவின் செயல் எனக்கு அதிசயமாக இருந்தது. ஆட்கள் இல்லாத அந்த பக்கத்து வீட்டுத் தோட்டத்தைப் பார்த்து அப்படி ஏன் இன்வா குரைக்க வேண்டும்?. அது எனக்கும் என் மனைவிக்கும் புரியாத புதிராக இருந்தது .

ஒரு நாள் சின்னையாவின் தம்பி போலீஸ்காரனாக இருக்கும் கண்ணன், என் வீட்டுக்கு வந்தார். அவர் வந்திருந்த போது இன்வாவின் செயலை கண்டு ஆச்சரியப்பட்டார். தான் இதைப் பற்றி மொப்பம் மூலம் துப்பறியும் போலீஸ் நாய்களைப் பயிற்ச்சிப்பவரோடு இன்வாவின் நடத்தைப் பற்றிப் பேசி, அது ஊளையிட்டுக் குரைப்பதன் காரணத்தை அறிவதாகா சொன்னார்.

“கண்ணன் ஒருவரும் இல்லாத அந்த வீட்டில் பேய்

பிசாசு இருப்பதைக் கண்டு, இன்வா ஊளையிட்டுக் குரைக்கிறதாக்கும். மனித கண்களுக்குத் தெரியாத பேய் நாயின் கண்களுக்குத் தெரியலாம் அல்லவா” என்றேன்.

அவர் சிரித்தப்படி” என்ன உங்களுக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை இருக்குது போலத் தெரிகிறது “ என்றார் .

“அப்படி ஒன்றும் இல்லை கண்ணன். ஒரு ஊகம் தான்” என்று மழுப்பினேன்

****

நான் 12 இலக்க வீட்டில் குடி புகுந்த ஒரு மாதத்தில் ராகவன் பீட்டரோடு என்னைச் சந்திக்க வந்தார் . பீட்டர் வந்த காரணம் தன் வீட்டை என்னைக் குறைந்த விலைக்கு வாங்கச் சொல்லிக் கேட்பதுக்கு. பீட்டர் எல்லோரோடும் சிரித்துச் சிரித்து அன்பாகப் பேசினார். தாடி வைத்திருந்த அவருக்கு வயது சுமார் அறுபது இருக்கும். முக்கியமாக அவர் என் மகன் ரமேசை தொட்டுத் தடவிப் பேசிய விதம் என் மனைவிக்கும் எனக்கும் பிடிக்கவில்லை. முடிவில் என் மகனையும் என்னையும் ன் வீட்டுக்கு வரும் படி பீட்டர் அழைப்பு விட்டுச் சென்றார் . என் மனைவிக்கு பீட்டர் அழைப்பு விடவில்லை. அவளுக்கு அந்த மனிதனைப் பிடிக்கவில்லை .

****

பீட்டர் வந்து சென்ற சில நாட்களுக்குப் பின். சைரன் சத்தத்தோடு நான்கு போலீஸ் வாகனங்கள் 13 இலக்க வீட்டுக்கு முன் வந்து நின்றது. அன்று சனிக்கிழமை என்ற படியால் நான் வீட்டில் இருந்தேன். அந்த வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து இரு போலீஸ் நாய்களோடு வீட்டுக்குள் சென்று தேடி. அதன் பின் வீட்டின் பின் தொட்டத்துக்கு போலீஸ் நாய்களுடன் சென்றார்கள் . சிவப்பு ரோஜாக்கள் பூத்துள்ள இடத்தை சில நிமிடங்களில் தோண்டுவதைக் கண்டேன். ஒரு மணி நேரத்தில் நான்கு சிதைந்த அழுகிய உடல்களை ரோஜாச் செடிகளுக்கு அடியிலிருந்து கண்டு எடுத்தனர். அதை என் வீட்டுத் தோட்டத்திலிருந்து பார்த்த நானும் என் மனைவியும் திகைத்து நின்றோம் .

லிஸ்கார் வீதியில் வீதியில் வசிப்பவர்கள் என் வீட்டில் கூடி நின்றனர் . அந்த கூட்டத்தில் ஒருவர் என்னிடம் வந்து

“முரளி ஒரு நல்ல வீடு கிடைக்காமலா ஒரு கொலைகாரன் வீட்டுக்குப் பக்கத்தில் வீடு வாங்கி இருக்கிறீர்கள். வேறு இடம் உங்களுக்கு கிடைக்கவில்லையா”? என் வீதியில் வசிக்கும் ஜோஷி என்ற இந்தியர் என்னைக் கேட்டார்.

“என்ன ஜோஷி சொல்லுகிறீர்.

“ இக்ந்த ஊரில் இரு இந்தியர், ஸ்ரீ லங்கன் , ஒரு பாக்கிஸ்தானி காணாமல் போனது என்று எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பே தெரியும் . மறைந்த அவர்கள் ஒரே பால் ஆண் சேர்க்கையாளர்கள் என்பது போலீசின் சந்தேகம். அதனால் போலீஸ் பீட்டரின் கேளிக்கை கிளப்பை அவதானித்து வந்தனர் . பீட்டர் ஒரு கே என்பது போலீசுக்குத் தெரிய வந்தது . அவர் மேல் சந்தேகம் வலுத்தது . அதை அறிந்த பீட்டர் இந்த இடத்திலிருந்து மில்டனுக்கு வீடு வாங்கிப் போய் விட்டார் மறைந்த அவர்களின் அழுகிய உடல்களை உங்கள் பக்கத்து வீட்டுத் தோட்டத்திலிருந்து போலீஸ் இப்போது தோண்டி எடுத்து இருக்குது.

உங்கள் நாயுக்கு எங்கள் பாராட்டுக்கள்” என்றார் ஜோஷி.

“அட கடவுளே இந்த கொலைகாரன் பீட்டர் வீட்டுக்குப் பக்கத்திலா என் வீடு இருக்க வேண்டும்”? என்றது என் மனம்

“ உமக்குத் தெரியாது பீட்டர் ஒரே பால் ஆண் சேர்க்கை விரும்பி. அதனால் அவனின் மனைவி அவனைப் பல வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து விட்டாள் பீட்டருக்குத் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் மெல் ஒரு வித இனத் துவேசம் . அவர்களை சாமர்த்தியமாக அவர்களை தன் கிளப்புக்குக் கூப்பிட்டுப் பழகி அதன் பின் அவர்களை வீட்டுக்கு ஆழைத்து , குடிக்கக் கொடுத்து தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொலை செய்து தன் வீட்டில் புதைத்து இருக்கிறான். அப்போது உங்கள் வீட்டின் முன்னைய சொந்தக்காரர் வில்லியம்ஸ் ,சில மாதங்களாக குடும்பத்தோடு அமெரிக்கா போயிருந்தார் . அது பீட்டருக்குக் கொலை செய்து தோட்டத்தில் இரவில் புதைக்க ஏதுவாக இருந்தது” ஜோஷி சொன்னார் .

“நல்ல காலம் நான் அந்த வீட்டை வாங்கவில்லை.. அந்த வீட்டின் இலக்கம் என்னைத் தடுத்து விட்டது” என்றேன் நான் .

ஜோடி சொன்னதை எங்கள் குடும்பத்தால் நம்ப முடியவில்லை.

“அப்பா இதை எல்லாம் என்ன ராகவன் மாமா எங்களுக்கு சொல்லவில்லை “? ரமேஷ் கேட்டான்

“இதெல்லாம் பிஸ்னஸ். வீடு விற்கும் ரியல் எஸ்டேட் ஏஜன்ட் பக்கத்து வீட்டைப் பற்றிச் சொல்ல மாட்டார். அது எங்கள் ஊரிலை தான் பக்கத்து வீடுட் காரனின் சாதி, மதம், வேலை குடும்பம் பற்றி விசாரித்து வீடு வாங்குவோம்” என்றேன் நான்.

அடுத்த நாள் என் மனைவி ரேணுக்கா எனக்குச் சொன்னாள் “அத்தான் எனக்கு இந்த வீடு பிடிக்கவில்லை. கெதியிலை இந்த வீட்டை விற்றுப் போட்டு வேறு இடத்துக்குப் போவோம்”

“ஏன் ரேணு?

“ நாங்கள் ஒரு சுடலைக்குப் பக்கத்தில் சீவிக்க முடியாது . எனக்கு இந்த வீடு வேண்டாம்”

ரமேஷும் , மைதிலிலயும் “ஓம் அப்பா, அம்மா சொல்வது சரி” என்று அவள் பக்கம் சாய்ந்தார்கள். . இன்வாவும் தனது சம்மதத்தைத் தெரிவித்து என்னைப் பார்த்துக் குரைத்தது

நான் பின்பு அறிந்தேன் பீட்டர் கைது செய்யப்பட்டு வழக்கு சில மாதம் நடந்து கனடாவில் மரண தண்டனை இல்லாத படியால் பீட்டருக்கு நீண்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

(யாவும் உண்மை கலந்த புனைவு)

Print Friendly, PDF & Email

2 thoughts on “13ஆம் இலக்க வீடு

  1. அருமை…. தொடருங்கள்… நான் திரைப்படமொன்றை இயக்க, திகில் கதை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் உங்களது வலையை பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தத்து. உங்களது எழுத்துநடை அருமை. உங்கள கண்ணோட்டத்தில் எழுத்தியது ஒரு கதை எனில், பீட்டரின் கண்ணோட்டத்தில் சிந்தித்துப்பாருங்கள், உங்களை மேலும் எழுத தூண்டும் இதன் தொடர்ச்சியை. பின் குறிப்பு. சந்தேகப்படவேண்டாம்… நான் உங்களது கதையை படிக்க மட்டுமே செய்தேன். நன்றி. அன்புடன் சிவகாந்த் சக்கரவர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *