யாரென்று தெரிகிறதா..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 3,206 
 
 

டேபிள் மேலிருந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டை பார்த்தார் இன்ஸ்பெக்டர் சரவணன். 

இறந்துபோன அஷோக் அளவுக்கதிகமாக குடித்திருந்ததும் இரவு அருந்திய டின்னரில் விஷம் கலந்திருப்பதும் தெரிந்தது. 

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் என் கணவர்  ஏன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவில்லை என்று கூறினாள் ப்ரீத்தி. 

நேரிடையாக விஷம் அருந்த தைரியம் இல்லாததால் அளவுக்கதிமாக குடித்துவிட்டு விஷம் குடித்திருப்பாரோ என்று தோன்றுகிறது என்றாள் மேலும். லிமிட்டாகத்தான் எடுத்துக் கொள்வார் எப்போதும். பசி தாங்க மாட்டார் குடித்தவுடன் நிறைய சாப்பிடுவார். Mostly non veg. சாப்பாட்டு விஷயத்தில் நான் குறை வைத்ததே இல்லை அவருக்கு என்று கூறினாள் விசாரணையில். 

கொஞ்ச நாட்களாகவே மிகவும் டிஜெக்ட்டெடாக இருந்ததான் என் தம்பி. ப்ரீத்தி ரொம்ப மோசம் அக்கா. அவளை அந்தக் கோணத்தில் பார்த்ததில் இருந்து மனம் பிசைகிறது அக்கா. யாரோ கம்ப்பெல் பண்ணதால கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருப்பாளோ என்று புலம்பினான். அப்படி என்ன கோணத்தில் எதைப் பார்த்த அஷோக்? சொல்லு நான் கேட்கிறேன் ப்ரீத்தி கிட்ட என்று கேட்டதற்கு சொல்லவே கூச்சமா இருக்குக்கா. விடு. என்னை எதுவும் கேட்காதே. 

இது தான் நாங்க ரெண்டு பேரும் கடைசியா பேசிக்கிட்டது. May be ப்ரீத்திக்கு ஏதோ affair இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அதுக்காக விஷம் குடிக்கிற அளவுக்கு போயிருக்க மாட்டான்னு தோணுது இன்ஸ்பெக்டர் என்று வாக்குமூலம் தந்தாள் அஷோக்கின் அக்கா பிரியதர்ஷினி. 

எப்பவுமே பைத்தியம் பிடித்தது போல உட்கார்ந்துகிட்டு வெறிச்சி எதையோ பார்த்துகிட்டு இருப்பாரு. கல்யாணத்துக்கு முன்னாடியே ஏதோ ஹெல்த் ப்ராப்ளம் இருந்திருக்கு. மறைச்சி கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க. இது ப்ரீத்தியின் தந்தையோட வாக்குமூலம்..

ப்ரீத்தியின் கல்யாண ஆல்பத்தில் மிகவும் நெருக்கமாக எல்லா போட்டோக்களிலும் உள்ள ஒரு நபரைக் காட்டி யார் இவர் என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் சரவணன், ப்ரீத்தியிடம்.. 

எங்க ஆஃபீஸ்தான். பெஸ்ட் friend ராகுல். அவருக்கும் தெரியும். வீட்டுக்கே வந்திருக்கார் மெனி டைம்ஸ் என்று கேட்காமலேயே கூறினாள். 

இது யாரு? என்று இன்னொரு நபரைக் காட்டி கேட்க.. அது ராகுலோட சிஸ்டர் கீர்த்தி என்று பதில் வந்தது. சில போட்டோக்களை தனது பொபைலில் க்ளிக் செய்து கொண்டார். 

சாப்பாட்டு விஷயத்துல குறை வெச்சதில்லேன்னு சொன்னீங்க. வேற எதாவது விஷயத்துல குறை வெச்சிருக்கீங்களா? அஷோக்கோட அக்கா ஏதேதோ சொல்றாங்க.. 

இறந்த பிறகு அவங்கவங்க இஷ்டத்துக்கு ஏதாவது சொல்வாங்க. Anyway அவருக்கு எதிலும் interest இல்லை. அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று தீர்க்கமாக பதில் வந்தது. 

இன்ஸ்பெக்டருக்கு ஒரு ஸ்ட்ராங் டவுட்டு அந்த ஆல்பத்தை பார்த்ததிலிருந்து. அந்தக் கோணத்தில் கவனம் செலுத்தினார்.

மிஸ்டர் ராகுல் இருக்காரா.. உடனே அவர் கீழ இருக்கிற கேன்டீனுக்கு வரணும் என்று ரிசப்ஷனில் சொல்லிவிட்டு காத்திருந்தார். 

எக்ஸ்கியூஸ் மி.. சார் நான் தான் ராகுல். 

உங்களுக்கும் ப்ரீத்திக்கும் friendship ஐயும் தாண்டி.. வேற எதாவது.. ஏன் கேட்கிறேன்னா.. அஷோக்கோட அக்காவுக்கு இதுல ஒரு டவுட்டு இருக்கு. Of course எனக்கும் தான்.. 

சார் நீங்க நினைக்கிறது தப்பு. We are best friends. That’s all. அஷோக் ஏன் அப்படி பண்ணிக்கிட்டாருன்னு எனக்கும் புரியல. 

நம்பிட்டேன். ஆக நீங்களும் தற்கொலைனு சொல்ரீங்க ப்ரீத்தி சொன்னது போலவே. By the bye உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க என்று கேட்டு குறித்துக் கொண்டு,  ஆல்பத்திலிருந்து தனது மொபைலில் க்ளிக் செய்து வைத்த சில போட்டோக்களை காட்டி சில நிமிடங்கள் பேசி விட்டு.. கண்டிப்பா கண்டுபிடிக்காம விடமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றார் இன்ஸ்பெக்டர் சரவணன்..

கான்ஸ்டபிளிடம் அந்த வீட்டு விலாசத்தை் தந்து கண்காணிக்கச் சொன்னார். சில நாட்கள் கடந்தன. சார் நீங்க டவுட் பட்டது கரெக்ட்.  இந்தாங்க எவிடன்ஸ் என்று தான் மறைந்திருந்து க்ளிக் செய்த சில போட்டோக்களை தந்தார். 

இன்ஸ்பெக்டர் சரவணன் ப்ரீத்தியின் வீட்டுக்கு வர.. சார் எதுக்கு திரும்ப திரும்ப என்ன தொல்லை பண்ரீங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேனே ஏற்கனவே..

நீங்க சொல்லாம மறைச்ச ஒன்றை நாங்க கண்டு பிடிச்சிட்டோம். உங்க ஹஸ்பன்டுக்கு அதுல interest இல்லேன்னு சொன்னீங்களே அது பொய். Infact உங்களுக்குத் தான் வேற எதிலேயோ interest இருந்திருக்கு. குற்றவாளியை கைது பண்ணிட்டோம். அவரே ஒத்துக்கிட்டாரு. ஜீப்லதான் இருக்காரு. உங்க கணவரை கொலை பண்ணிருக்காங்க. ஆன இப்ப வரைக்கும் அது உங்களுக்குத் தெரியாதுங்கிறதும் எங்களுக்குத் தெரியும். 

கொலையா? யாரு?? கொலையாளிய கண்டு பிடிச்சிட்டீங்களா??? ஜீப்ல இருக்காரா..ஓடிப்போய் ஜீப்பைத் திறந்தவள் ஒரு கணம் திகைத்துப் போனாள்.. 

கீர்த்தி.. நீயா, நீயா அவர அப்படிப் பண்ண.. 

ப்ரீத்தி இதோ பாருங்க. உங்க ஆசை நாயகியோட  நீங்க இருந்த போட்டோஸ்.  கான்ஸ்டபிள் க்ளிக்கியதை காட்டினார். உங்க மேரேஜ் ஆல்பத்திலேயே அந்த நெருக்கத்த பார்த்தேன்..

So what.. இது எங்க உரிமை. சட்டம் தடுக்கலையே. அதுக்காக கீர்த்தி பண்ணத நான் நியாயப் படுத்தல.  

ஆனா உங்க privacyக்கு தடையா அவர் இருக்காருன்னு நினைச்சி, நீங்க இல்லாத சமயத்தில உங்க வீட்டுக்கு வந்து நீங்க செஞ்சி வெச்சிட்டு போன  சாப்பாட்டில் கீர்த்தி விஷம் கலந்து வெச்சிட்டு போய்ட்டாங்க. 

கீர்த்தியை ஓங்கி அறைந்தாள் ப்ரீத்தி..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *