கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 37,980 
 
 

கருமேகங்கள் ஒன்று கூடி இருக்க,சில்லென்ற காற்றுடன் பரவலாக மழை பெய்து கொண்டு இருந்தது. அப்பொழுது தொலைக்காட்யில் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் அவார்ட் வாங்கிய சூர்யாவின் பேட்டி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.அதில் சூர்யா என்னோட இந்த வெற்றிக்கு காரணம் என் சித்தப்பா ராஜீவ் தான் என்றார்.அனைவரும் ராஜீவை பாராட்டினர்.பரவால அவர் அண்ணன் இறந்ததுக்கு அப்புறம் இவரு தான், தன்னோட பையன் மாரி சூர்யாவை வளர்க்கிறார் என்று பெருமையாக பேசினர்.வீட்டில் ராஜீவ் அவரது மகன் சந்துருவிடம் எப்பிடி?மை டியர் சன் என்னோட ஆக்கிடிங்?ரெம்ப நேச்சுரல்லா இருந்துச்சா?என்றார். சந்துருவும்,சான்ஸ் சே இல்லை அப்பா,என்னமோ அவன் உங்க உண்மையான பையன் மாரி,அந்த சூர்யா அவார்ட் வாங்கும் போது நீங்க அழுகுறதும்,அவன் உங்களை பத்தி மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு பேசுறதும் நானே ஒரு நிமிஷம் நீங்க ரெம்ப நல்வரோனு தோணுச்சு?அப்பிடி ஒரு நடிப்பு என்றான்.கத்துகட மகனே எண்ட இருந்து,இந்த சொத்துக்காக தான் அந்த சூர்யா அப்பனையும், அம்மாவையும் கொலை பண்ணோம்,அப்ப என் அண்ணன் மூச்சிய பாக்கணுமே,நீயா?டா தம்பி என்ன கொல்லுறனு ஒரு பார்வை பாத்திட்டே செத்துடாரு.சொத்து முழுக்க சூர்யா பேரு ல இருக்கு,அதான் அவன் மட்டும் உயிரோட இருக்கான்.இல்லனா அன்னிக்கே போட்டு தள்ளி இருப்பேன்,இப்பையும் பிரச்னை இல்ல சொத்து நம்ம பேருக்கு வர மாரி எல்லா ஏற்படும் பண்ணி வச்சு இருக்கேன்,அவனை இன்னைக்கு நைட் போட்டு தள்ளிடுவேன் என்றார் ராஜீவ். ஆமா அப்பா,அவனை கொல்லுங்க, அப்ப தான் நமக்கு நிம்மதி என்றான் சந்துரு.

ராஜீவ் நினைத்ததை முடித்தார்.சூர்யாவிடம் வாங்கிய கையெழுத்து மூலம் சொத்தை தன் பேருக்கு மாற்றலாம் என நினைத்தார்.சூர்யா ஏதோ மனஅழுத்தில் இருந்தான்,என்னனு சொல்லாம இப்படி விஷம் சாப்பிட்டு செத்துடானே,என்று போலியாக கூறி,சூர்யாவின் பொணம் முன் அழுது கொண்டு இருந்தார்.அப்பொழுது சூர்யாவின் போனில் இருந்து ராஜிவ்வுக்கு கால் வர,ராஜிவ் அதிர்ந்தார்.ஒரு ஓரமாக சென்று போனே எடுத்து பேசினார். ஹலோ யார்?அது என்று ராஜீவ் கேட்க,நா சூர்யா தான் சித்தப்பா, என் போன் நம்பர் உங்க கிட்ட இருக்குல,அப்புறம் யாருன்னு கேக்குறீங்க என்றதும்,ராஜீவ் சூர்யாவின் பிணத்தை பார்த்தார்.உடனே சூரியா செத்துட்டான், அவன் போன் உன் கையில எப்பிடி?வந்துச்சு என்றார் ராஜீவ்.. சித்தப்பா,,,நா ஆவியாக வந்து போனு ல பேசுறேன் என்றதும்,டேய் ராஸ்க்கல் நீ என் கையில கிடைச்ச நீ உண்மையிலே ஆவியா தான் அலைவ என்றார்.அவர் அவ்வாறு கூறும் போதே சூர்யா வீட்டிற்குள் வந்தான்.அனைவரும் அதிர்ந்தனர்.

உடனே ராஜீவ்,நீயா?என்றதும்.சூர்யாவோ நானே தான் சித்தப்பு என்றான், சூர்யா இங்க இருக்கான அப்போ அங்க செத்து கிடக்குறது யாரு?என்று அனைவரும் பார்த்தார்கள். சூரியாவோ ராஜீவை அழைத்து கொண்டு தனியா ஒரு அறைக்கு சென்று கதவை சாத்தினான்.சூர்யா….சூர்யா…. நா என்ன சொல்லவரேன என்று ராஜீவ் கூற வர,உடனே சூர்யா, நீங்கலும் உங்க பையனும் பேசியதை நா கேட்டேன்.என் அப்பா அம்மா வா கொலை பண்ணிட்டு,எண்ட இத்தனை நாலா நடிச்சியா?என்றான். உடனே ராஜீவ் ஆமட நான் தான் ,உன்னால என்ன பண்ண முடியும் என்று திமிராக பேசினார்.உன் நல்ல நேரம் நேத்து நைட் தப்பிச்சுட என்றார்,சூர்யாவோ நா பண்ண வேண்டியதை நேத்தே பண்ணிட்டேன் என்றான்.ராஜிவ் என்ன டா சொல்லுற?என்றதும்,டேய் மக்கு சித்தப்பு, நா இங்க இருக்கேனா அங்கு செத்துகிடக்குறது யாருன்னு நீ யோசிக்கவே இல்லயா?

அது உன் மகன் சந்த்ரு, நீ ஏன் சோத்துல விஷம் வைக்க சொல்லி வேலைகாரனுக்கு பணம் குடுத்த,நா உன் பையன் சோத்துல விஷம் வைக்க சொல்லி உண்ண விட கொஞ்சம் அதிகமா பணம் குடுத்தேன்,அவனும் அப்பிடியே பண்ணிட்டான். என்னை மாரி முகம் வர,சும்மா ஒரு வேஷம் போட்டு விட்டுட்டேன்,எப்பிடி என்ன மாரி அப்பிடியே இருக்கால,நம்ம மேக்அப் அப்பிடி.இப்ப

உன் மகன் செத்துட்டான் என்றான் சூர்யா.சொத்து மேல வச்ச பாசம் உன் மகன் மேல இல்லையே சித்தப்பு,இவ்லோ நேரம் அவன் எங்கணு நீ ஏன்?டா தேடவே இல்ல,அவன் முன்னாடி தான் இவ்லோ நேரம் நீ அழகுற மாரி நடிச்ச,உன் போலி அழுகை வேஸ்டா போல சித்தப்பு என்றான், நா உண்ண சும்மா விடமாட்டேன் டா என்று ராஜிவ் சூர்யா கழுத்தை நெறிக்க,சூர்யா காப்பத்துங்க, காப்பத்துங்க என்று அலரவும் அனைவரும் கதவை உடைத்து வந்து பார்த்த போது ராஜிவ் கை சூர்யா கழுத்தில் இருந்தது.

உடனே சூர்யா,சித்தப்பா என்னை என் சொத்துக்காக கொலை பண்ண பாக்குராறு,இது எனக்கு நேத்தே தெரியும்,அதான் நா வீட்டில் இல்லை இவ்லோ நேரம்,என்னை கொலை பண்ண கூடாதுனு அவர் பையன் சந்த்ரு அவன் அப்ப கிட்ட சண்டை போட்டான், ஆன அவர் அத கேக்கலை,என்னை இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தலைமறைவாய் இருக்க சொன்னா சந்துரு அது படி நானும் போயிட்டேன்,என்னை சந்துரு அனுப்பி வச்சுடானு இவர் சந்துருக்கு விஷம் குடுத்து கொலை பண்ணிட்டு, என்னை மாரி வேஷம் போட்டு என் சொத்து மொத்தத்தையும் அவர் பேருள எழுத முடிவு பண்ணிடாரு,நா திரும்பி வர மாட்டேன்னு நினைச்சுட்டாரு,ஆன நா சந்துரு சாவுக்கு நீதி கேட்டு தான் வந்தேன்,என்கிட்ட ஒரு வார்த்தை சொத்து வேணும்னு கேட்ட குடுத்து இருப்பேன்,அதுக்கு போயி பெத்த பையனை கொன்னு அவனுக்கு என்னை மாரி வேஷம் போட்டு,இது எல்லாம் நல்லா இல்ல சித்தப்பா,என் தம்பி சந்துரு, பாவம் எப்பிடி செத்தானு அவனுக்கே தெரியாது, அவனை எனக்கு ரெம்ப பிடிக்கும், அவனை போயி கொலை பண்ணிட்டேங்களே! என்று அழுதான்.

போலீஸ் ராஜீவை கைது செய்தது.சூர்யாவோ, சிறையில் நல்லா ரெஸ்ட் எடு சித்தப்பு,உண்ண போட்டு தல்லாமா என் விட்டு வச்சு இருக்கேன் தெரியுமா, உனக்கு உயிரோட இருக்கும் போதே நரகத்தை காட்ட சொல்லி இருக்கேன்,நீ சாக மாட்ட ஆனா செத்து கூட இருகலாம்னு நீ நினைப்பை, அப்பிடி உண்ண டார்ச்சல் பண்ண சொல்லி இருக்கேன்,சித்தப்பு நீ கேடி நா,நா ஜில்லா கேடி டா என்று ராஜீவை சந்ததித்து கூறி, உதட்டு ஓரமா சிரித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *