டிஜிட்டல் களவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 45,173 
 
 

சொகுயூர்டு சேலரி
ஃஃபுல் போமலி இன்சூரன்ஸ்
பிளான்டு லைப்
எஜுகேடட் பர்சனல்ஸ்

இதானே வாழ்கையின் முமு அர்தமாக்க கூடியது

இது நேற்றுவரை

இன்று இதோ கையில் காசு இல்லாமல் என்ன ஆச்சு என்பது கூட புரிந்து கொள்ளமுடியாது பேதலித்து போய் வருன்

எப்படி ஆச்சு, எல்லா அகொண்டுக்கும் செகுர்டு பாஸ்வேர்ட் போட்டு தான் இருந்தது.

வருனுக்கும் வருன் மிஸஸ் தேஜாவிற்கும் மட்டுமே தெரிந்த விஷயம் எப்படி அந்த மூன்றாமவருக்கு தெரிந்திருக்க கூடும்

தேஜாவை திரும்ப திரும்ப கேட்டு பார்தாச்சு. அவளும் யாரிடமும் சொல்லவுமில்லை

இவ்வளவு ஏன் ஃபேங்க் பக்கமே போகவே இல்லை. எடி எம்மில் கேஷ் டிராப்பண்ணி கூட பத்து நாளாச்சே. கிரிடிட் கார்டிலே தானே புரொவிஷன் வாங்கினது.

ஆங் புரொவிஷன் கடையிலே ஏதோ பம்பர் டிரா நடத்துகிட்டிருந்திச்சூன்னு அகொண்ட் நம்பர் கேட்டு கார்டை ஃபிரீ ஸ்வைப் கிப்ட் கொடுத்தாங்கன்னு சொன்னாளே

ஒருகிலோ தங்கம் பம்பர்ன்னு சொன்னாளே யாருக்கு கெடைச்சதுன்னு கேப்போம்

தேஜா அந்த கடை ஃபோன் நம்பர் கொடு

சார் புவனா சூப்பர் மார்கெட்டா

ஆமா சார் சொல்லுங்க

போனவாரம் உங்க கடையிலே ஒரு லக்கி டிரா பண்ணீங்களே யாருக்கு ஃபிரைஸ் கெடைச்சது விபரம் சொல்லுங்க

சார் அது வந்து மேனேஜரை கேக்கனும் சார்

குடுங்க கேக்கறேன்

ஹலோ சார் மேனேஜர் பேசறேன் சொல்லுங்க.

போன வாரம் உங்க கடையிலே ஒரு பம்பர் டிரா செய்தீங்களே அதிலே யாருக்கு பிரைஸ் கெடைச்சது

சார் அது சும்மாசார் ஜஸ்ட் ப்ராடக்ட் புரொமோஷனுக்கு செய்வாங்க

அதோட அவ்வளவு தான் சார்

என்ன சார் இவ்வளவு கேஷுவலா சொல்றீங்க

எங்களோட பர்ஸனல் டீடெய் ஃபுல்லா வாங்கீகறாங்க

உங்க கடைய நம்பிதானே தரோம்

அவங்களோட அட்ரஸ் கொடுங்க ஃபோன் நம்பர் கொடுங்க

அட்ரஸ் தெரியாது சார் ஃபோன்நம்பர் மட்டுமே இருக்கு சார்

என்ன சார் வெளையாடுறீங்க ஒரு அட்ரஸ் இல்லாத ஆளுக்கு ரெபரன்ஸ் குடுத்திருக்கறீங்க

என்னசார் உங்க இர்ரெஸ்பான்ஸபிளிட்டீ

அவ் டேர் யூ

சார் சார் கோபப்படாதீங்க ஃபோன் நம்பர் தரேன்

சார் நொட் பண்ணீக்கோங்க

செவன் டூ திரி ஃபைவ் ஒன் டபுள் ஃபோர் நையன் ஒன் டபுள் திரி

தேங்க்ஸ்..!! கோபமாக சொல்லி வைத்துவிட்டு

அந்த நம்பருக்கு டயல் செய்ய

ஹலோ சார் ஹவார்டு அட்வர்டைஸிங். ஹவ் கேன் ஐ எல்ப் ஸார்

போன வாரம் மன்டே புவன் சூப்பர் மார்கெட்டுலே ஒரு பம்பர் டிரா எக்ஸுகியூட் பண்ணீங்களே அதுலே அவர்டு யாருக்கு கெடைச்சதுன்னு சொல்லுங்க

அது வந்து அது வந்து உங்க நம்பர் சொல்லுங்க சார் அதுக்கு விழுந்திருக்கான்னு சொல்லறேன்

நம்பர் ஏ பி ஃபை செவன் டூ

சார் அந்த நம்பருக்கு விழலே சார்

என்னம்மா பார்காமலே சொல்றீங்க

இல்லே சார் எங்களுக்கு தெரியும்

அப்படீன்னா அவார்டு நம்பர் சொல்லுங்க

அதெல்லாம் சொல்ல முடியாது சார். வேற விபரம் மேனேஜரை கேட்டுங்கோங்க

அட்ரஸ் சொல்லுங்க

அது டீ நகர் உதய் நகர் செகன் கிராஸ்

நம்பர் சொல்லும்மா

நம்பர் சிக்ஸிடி டூ

ஏதோ டவுட்டு பொறி தட்ட வருன் ஃபிரண்ட் ரகுவை அழைத்து கொண்டு டீநகர் போய் தேடோ தேடுண்ணு தேடி ரெண்டு மணி நேரத்துக்கு பிறகு ஒரு சந்திலே மூணாவது மாடியிலே ஒரு சாதாரண ஆபிஸ் செட்டப் ரெண்டு சேர் ரெண்டு டேபிள் ரெண்டு பொண்ணுங்க அரட்டை அடிச்சிகிட்டு இருக்க

உள்ளே நொழைஞ்சதும்

எங்க உங்க மேனேஜர்

அவர் வெளியே போயிருக்காரு

எப்ப வருவாரு.

சார் அவர் ஊருக்கு போயிருக்காரு என மற்றொரு பெண்

இன்ன்மா மாத்தி மாத்தி பேசறேஎப்ப வருவாரு

சார் அந்த பொண்ணு புதுசு மேனேஜர் நாளைக்கு தான் வருவாரு

இன்னாமா மாத்தி மாத்தி பேசறே என வருன் கோபத்தின் உச்சத்திற்க்கே போக

சட்டென ரகு வருனின் கையை பிடித்து சரிம்மா நாளைக்கு வரோம் எனச்சொல்லி வருனைவெளியே அழைத்து வர

ரகு எனக்கு டவுட்டா இருக்குடா மேனேஜர் வந்ததும் பார்த்திட்டு போவோம் என வற்புறுத்த

வா வா சொல்லறேன் என பைக் ஸ்டார்ட் செய்து தெரு முனை வந்து ஒரு டீக்கடை ஓரம் வண்டிய நிறுத்திவிட்டு

வருன் நாம அங்கே இருந்தா மேனேஜர் வர மாட்டான் அதான்

அவன் வந்ததும் போகலாம் வெயிட் பண்ணு

ரெண்டு டீ ரெண்டு சிகரெட் முடிந்த நேரம் ஒரு ஆள் ஒருத்தன் சைட் பேக் மாட்டிகிட்டு உள்ளே நுழைய

பத்து நிமிஷம் கழித்து சட்டென உள்ளே நுழைய அந்த பொண்ணுங்க வியர்த்து விதிர்த்து போக

என்னம்மா ஊருக்கு போன மேனேஜர் வந்திட்டாரு போல

சார்ர்ர் அது வந்து

சட்டென மேனேஜர் விறைப்பாகி என்ன சார் தாகறாரு பண்றீங்க போலீஸை கூப்பிட வா

நீ கூப்பிட வேணாம் நாங்களே கூப்பிடறோம்

விறைப்பெல்லாம் அடங்கி சார்ர்ர்……. என்ற இழுவையோடு கெஞ்சும் குரலில்

சார் தங்கமெல்லாம் கொடுக்கறதில்லே, சும்மா அட்வர்டைய்ஸ் மெண்ட் மட்டுமே. அதுக்கு ஆசைப்பட்டு கஸ்டமர் வருவாங்க

ஒரு புரோகிராம் பண்ணினா பத்தாயிரம் கிடைக்கும் அதுலே பிளாஸ்டிக் பாக்ஸ் தான் சார் தரமுடியும்

ஆமா கலெக்ட் பண்ற டீடெய்ல் என்ன பண்ணுவீங்க

சார் அதை சில பேர் வாங்குவாங்க அவங்களுக்கு கொடுத்திடுவோம்

யாருக்கு கொடுத்தேன்னுசொல்லு

சார்ர்

சொல்றீங்களா இல்லே போலீஸ் கூப்பிடவா

சார் எந்த பிரச்சனை னையும் வராதில்லே

வராது சொல்லு

சார் நம்பர் 7653396811

பேரு அரவிந்த்

சரி கிளம்பு

சார் அதான் நம்பர் கொடுத்திட்டேனே

நாங்க அந்த பக்கம் போனதும் அவனை உஷார்க்கிட்டீனா

வா கிளம்பு அவன் இடத்தை காட்டு

சார் அவன் இடம் தெரியாது

ஒயின்ஷாப்லே மீட்பண்ணுவோம் அங்கே தான் பேசிக்குவோம்

அடடே பிசினஸ் டீலிங் பாயின்ட் சூப்பர்

ரகு அவனது பிரண்ட் ஆனந்த் எஸ்ஸைக்கு பேசி அங்கே வர சொல்லிவிட்டு இவர்களும் கிளம்ப

இரவு ஒன்பது மணி அந்த கார்ணர் டேபிளில் மேனேஜரை தனியாக உட்கார வைத்து கண்காணித்து கொண்டிருக்க

அடுத்த அரைமணியில் டிப்டாப்பாக ஒரு ஆசாமி மேனேஜரை நெருங்க. ..

சட்டென உஷாராகி அவனை அமுக்கி ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரிக்க

சார் நாங்க தான் எடுத்தோம் சார்

நாங்கன்னா ஒரு கேங்கே இருக்கும் போல

சொல்லு உண்மை சொன்னா உயிரு மிஞ்சும்

இல்லேனா சுவடே இல்லாம ஆக்கிடுவேன்

சார். சார் எனக்கு எதுவும் தெரியாது நான் ஃபேங்லே கலெக்ஷன் ஏஜென்ட் ஆ இருக்கும் போது முன்னா பழக்க மானான்

அப்போ பேங் லோன் கேக்கறவங்க டீடெய்ல் இவனுக்கு கொடுப்பேன்

இது எல்லா ஐடியாவும் முன்னா பாயி ஆளுங்க தான் செய்வாங்க

கார்டு டீடெய்ல் மட்டும் நான் கொடுப்பேன் எனக்கு டுவொன்டி பர்சன்ட் தருவாங்க

வேறெ எதுவும் தெரியாது சார்

எப்படீ டா யாரு காசுக்கு யாரு அலையறீங்க

யாரு முன்னா சொல்லு

சார் அவன் அட்ரஸ் தெரியது மாசத்துக்கு ஒரு தடவை பாம்பே இருந்து வருவான்

வேலை முடிஞ்சதும் திரும்ப போயிடுவான்

அடடே ஊரு காசுலே ஃபிளைட் டிராவல்

சூப்பர்

சொல்லு எப்ப வருவான்

சார் கமிங் மன்டே வருவான் சார்

ஒழுங்க அவன் கிடைச்சா நீ பெட்டி கேஸ் இல்லேனா ஆயுசுக்கும் ஜெயில் தான் ஞாபகம் வச்சுக்கோ

மன்டே ஃ புல் போலிஸ் டீம் ஏர் போர்டில் விரிச்ச வலையில்

முன்னா தொக்காய் மாட்ட

உரிக்க உரிக்க. உண்மை வந்து கொட்ட

சார் ஜனங்களோட பேராசைதான் சார் நம்பில் முதல்

ஆசை ஆசை அடுத்தவங்க காசுக்கு ஆசை தங்கம் கட்டி கட்டியாய் ஓசியிலே கிடைக்க ஆசை

நாங்க திருடங்கன்னா அவங்களும் திருடங்க தான்

டேய் தத்துவமா டா

அதுவும் இந்தி காரன் சொல்லி கேக்கற நிலைமை

செவிலிலே பளார் என ஒரு அறையை விட்ட இன்ஸ்பெக்டர்

சொல்லு டா எப்படி செய்தீங்க

டமார் …..என இடியாய் இன்னொரு அறை

நஹி சார் நஹி சார்

கொஞ்சம் கொஞ்சமாக வாய் திறக்க

………

கஸ்டமர் கடையில் நுழைந்ததும் அவங்களுடைய.ஃபோனுக்கு கடைபெயரில் ஒரு ஓடிபி அனுப்புவோம்

அதை கொடுத்துதானே ரிஜிஸ்டர் பண்ண சொள்ளுவோம்

அப்போ நம்பர் ஹேக் ஆகிடும். அவங்க கார்டை ஃபீரி ஸ்வைப் பண்ணும் போது கார் நம்பர் அதோட பின் நம்பர் எங்களோட சாப்ட் வேருலே ரிஜிஸ்டராகிடும்

மறுபடியும் ஏதாவது கடையிலே ஸ்வைப் பண்ணும் போது எங்களுக்கு அலர்ட் வரும் அந்த நேரத்துலே உங்களுக்கு வரும் ஓடிபி நோடிபிகேஷன் எங்களுக்கும் வரும் அதை வச்சி அவங்க அகொண்ட் கேஷ் எடுப்போம்

கொஞ்சம் கேஷ் எடுத்ததும் ஃபிளைட் வழியா மும்பை போய் அங்கிருந்து டிரெயின் வழியா உ பி போயிடுவோம்

சூப்பர்

சொல்லுடா பணத்தை என்ன பண்ணே

அது ஒரு வீடு கட்டி இருக்கேன் கொஞ்சம் நிலம் வாங்கி இருக்கேன் ஒரு ஹோண்டா சிட்டி காரு இவ்ளோ தான்

ஓகே சார் உங்களது உழைச்ச காசு போல கிடைச்சிடும் ஆனா கொஞ்சம் டைமாகும் ஆனா கெடைக்கும்

போங்க போங்க இனியாவது பம்பர் டிரா டம்பர்ன்னு போகாதீங்க

தேங்ஸ் சார் ..இன்ஸிடமிருந்து கிளம்ப

டிஜிட்டல் பிராடு@ ஹிந்திவாலா. com….!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *