“ப்ளாஸ்பேக்” : என் பையன் சற்குருவுக்கு சின்ன வயசுல இருந்தே மாட்டுப்பாலை விட எருமைப்பால்தான் ரொம்ப பிடிக்கும், அதுவும் சர்க்கரை போடாம குடிச்சிடுவான் அம்மா பெருமையுடன் பக்கத்து வீட்டு பெண்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
போலீஸ் கமிஷன்ர் முன் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் சற்குருவிடம் என்னய்யா போன் மேல போன் உன் “கண்ட்ரோல்ல இருக்கற ஸ்டேசன்ல” நீ பிடிச்சு வச்சிருக்கற நாலு பேரை விட்டுட சொல்லி வந்து கிட்டே இருக்கு.
“ப்ப்ளிக்கா” அவன் ஆட்கள் காலேஜ் பக்கம், ஸ்கூல் பக்கம் போதை மருந்து விக்கறாங்க, அவங்களை கூண்டோடு பிடிச்சு போட்ட்துக்கு, ஆளுங்களை வச்சு ஸ்டேசன்ல மிரட்டறான்.
பாத்துய்யா…“ஜாக்கிரதை”, அவன் உன்னை குறி வைச்சிருக்கறதா செய்தி வந்திருக்கு..யாரோ ஒருத்தனை ஏற்பாடு செஞ்சிருக்கறதா தகவல், ஆளை முடிச்சு அதை விபத்தாக கூட காண்பிச்சிடுவான், அவனுக்கு அரசியல் பலம் அதிகம்.
புரிந்து கொண்டேன் சார், ஜாக்கிரதையாக இருப்பேன்,
என்னை கேட்டால் அவன் கிட்டே அதிகமாக மோதிக்கொண்டிருக்கிறயோன்னு தோணுது.. எதுக்கும் எல்லா “எவிடென்சும்” ரெடி பண்ணிக்கோ, கோர்ட்டுல புரொடியூஸ் பண்ணும்போது அவன் பக்கம் சாதகமாகாம பாத்துக்கணும்.
சரி சார், மீண்டும் ஒரு சல்யூட் அடித்து வெளியே வந்தார்.
கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து கார் ஏறுமுன் அவர் கண்ணில் தென்பட்ட்து எருமை ஒன்று. எமனின் வாகனம் ?
சட்டென அவருக்கு தோன்றிய இந்த எண்ணத்தை உதறியவர், அவரது அலுவலகம் நோக்கி விரைந்தார்.
தன் அறையில் சென்று உட்கார்ந்தவருக்கு தன்னை கொல்ல குறி வைத்திருக்கும் ஆள் யாராய் இருக்கும்? யோசனையாய் இருந்தவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. இது என்ன அடிக்கடி இதையே நினைத்து கொண்டிருக்கிறேன். எப்படியோ இந்த கேஸ் கோர்ட்டுக்கு” சென்று விட்டால், இவர்களை இங்கு வைத்திருக்கும் தொல்லை குறையும்.
“லாக்கப்” அறையை பார்த்தார். அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு நால்வரும் இவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டென எழுந்தவர், ராசியப்பன், நாளைக்காலையில “எட்டு மணிக்கெல்லாம்” இவங்களை கூட்டிகிட்டு, கோர்ட்டுக்கு கிளம்பிடுங்க, பாதுகாப்புக்கு கொஞ்சம் “போர்சை” கேட்டு வச்சுக்குங்க, எதிரில் நின்ற ராசியப்பன் சரி சார் என்பது போல தலையசைத்தார்.
அலுவல்கத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் போது அவரது எண்ணமெல்லாம், நாளை காலையில் இவர்களை கோர்ட்டுக்கு அனுப்பி வைப்பது எப்படி என்றே யோசனையில் இருந்தது.
வீட்டில் இவருக்காக காத்திருந்தான் வேலைக்காரன் குமரன். சிறு வயது முதலே இருப்பவன், ஊரிலிருந்து இவனை அனுப்பி வைத்ததே அம்மாதான். தோட்ட்த்துல வேலை செய்துகிட்டு இருந்தவனை, அவன் “வேலை வேலைன்னு” ஓடிகிட்டே இருப்பான், நீ பக்கத்துல இருந்து கவனிச்சுக்க, சொல்லி அனுப்பி ஒரு வருடமாக இருந்து கொண்டிருக்கிறான் .
ஐயா..அம்மா போன் பண்ணாங்க, நீங்க வந்துட்டீங்களான்னு, சொல்லிக்கொண்டே அவர் கழட்டி கொடுத்த உடுப்புக்களை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
குமரா எனக்கு பசிக்கலை, ஒரு டம்ளர் பால் மட்டும் கொண்டா, அது போதும் குடிச்சுட்டு படுக்கறேன். அவனிடம் சொன்னவர் “நாளைக் காலையில்” நேரத்திற்கு அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு போகவேண்டும் என்ற எண்ணத்திலேயே சீக்கிரம் படுக்க முடிவு செய்தார்.
மாடியில் இருந்த தனது அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் அரவம் கேட்டு திரும்பி பார்க்க குமரன் பால் டம்ளரை ஒரு தட்டில் வைத்து கொண்டு வந்து அவர்து டேபிளில் வைத்தான். கையில் எடுத்து ஒரு வாய் வைத்தவர் திடீரென்று ஞாபகம் வந்தவராக குமரா கீழே என்னோட “டைரி” வச்சுட்டேன், அதை எடுத்துட்டு வாயேன், சீக்கிரம், பாலை உறிஞ்சிக்கொண்டே சொன்னார்.
ஐந்தே நிமிடத்தில் மூச்சு வாங்க டைரியை கொண்டு வந்து கொடுத்தவனை வியப்புடன் பார்த்த “குமரா தாங்க்ஸ்”எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சுட்டு படுக்கறேன், நீ காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்பி விடு.
..சரி என்று தலையாட்டிய குமரன், அவர் குடித்து முடித்து வைத்திருந்த பால் டம்ளரை எடுத்து கொண்டு கீழே சென்றான்.
இரவு ப்தினோரு மணி வாக்கில் போன் அலறியது, எடுத்து பேசிய குமரன் வந்த செய்தியை கேட்டு அப்படியே ஒரு கணம் நின்றான். “ஐயா”கிட்டே உடனே ஸ்டேசனுக்கு வர சொல்லு, இப்ப நாலைஞ்சு பேரு வந்து “ஸ்டேசன்ல” இருந்த போலீசை அடிச்ச் போட்டுட்டு லாக்கப்ப்ல இருந்த கைதிகளை கொண்டு போயிட்டாங்க..சீக்கிரம் சொல்லு. ராசியபன் பதட்ட்த்துடன் பேசினார்.
“சரிங்க” இவன் பதவிசாய் போனை வைத்தவன் மெல்ல மேலேறி சற்குரு அறையில் ஜன்னல் வழியாக பார்க்க அவர் கட்டிலில் ஆடாமல் அசையாமல் “பிணம்” போல் படுத்திருப்பது தெரிந்தது. சத்தமில்லாமல் கீழிறங்கி வந்தவன் தன் இடுப்பில் இருந்த செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.
“ஐயா” அநேகமா இவர் முடிஞ்சுட்டாருன்னு நினைக்கிறேன். அப்புறம் இன்னொரு குட் நியூஸ் நம்ம ஆளுங்க லாக்கப்புல இருந்த ஆளுங்களை கடத்திட்டு போயிட்டாங்களாம், இப்பத்தான் எனக்கு நியூஸ் வந்துச்சு.
ம்..ம்..சரி அப்படியே செய்யறேன் தலையாட்டி கொண்டே உள்புற அறைக்கு சென்றான்.
கோர்ட்டில் ஒரே சத்தம் இன்னைக்கு கோர்ட்டுக்கு கொண்டு வரவேண்டிய கைதிகளை” கடத்திட்டு போயிட்டாங்களாம் வக்கீகளுக்குள் இதை பற்றித்தான் ஒரே சலசலப்பு.
சரியாக பத்து மணி அளவில் நீதிபதி முன் அந்த நாலு கைதிகளையும் இன்ஸ்பெக்டர் சற்குரு, மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசியப்பன் கூட்டி கொண்டு
வந்து நிற்க வைத்தனர். அங்குள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம் என்னய்யா நேத்து இராத்திரி கடத்திட்டு போயிட்டானுங்க ! அப்படீன்னு நியூஸ் வந்துச்சு, இப்ப என்னடான்னா போலீஸ் கொண்டு வந்துடுச்சு
அதற்கு பின் நடந்த விவாதங்கள், தீர்ப்பு இவைகள் இந்த கதைக்கு வராது. ஆனால் குமரன் கைது மட்டும் வாசகர்களுக்கு சொல்லி விடுவோம்.
1. என் பையனுக்கு “பசுமாட்டு பாலை விட எருமைபாலுன்னா ரொம்ப புடிக்கும்” சிறு வயது முதல் குடிக்கும் பாலின் ருசி ஒரு வாய் வைத்தவுடன் சற்குருவுக்கு தெரிந்து விட்டது “பாலில் ஏதோ கலந்திருக்கிறது”அது மட்டுமில்லை, அதிசயமாய் சர்க்கரை சேர்ந்திருப்பதும் அவருக்கு சந்தேகம் வர குமரனை டைரி எடுத்து வர கீழே அனுப்பி பாலை கொட்டி விட்ட்து குமரனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
2. கீழே இருந்த போன் மட்டுமில்லாமல் சற்குருவிடம் “செல் போன்” இருப்பதும் இவனுக்கு ஞாபகம் வரவில்லையோ?
3. கைதிகளுக்கு தெரிய வேண்டுமென்றே “காலை எட்டு மணிக்கு” என்று சத்தமாய் சொல்லி, இரவே போலீஸ் இவர்களை கட்த்தி கொண்டுபோய் வேறொரு இடத்தில் அடைத்து வைத்ததும், அதன் பின்னரே ராசியப்பன் இவர் வீட்டுக்கு போன் செய்ததும்.
ஏனென்றால் எப்படியும் காலையில் இவர்கள் கோர்ட்டுக்கு போகும் போது தடுத்து கைதிகளை கடத்தி கொண்டு செல்ல அவர்கள் முற்படுவார்கள் என்பதை யூகித்து முன்னெச்சரிக்கையாய் இவர்களே அதை நடத்தி விட்டார்கள்.