ண்ணா ..கிங்க்ஸ் ஒன்னு கொடுங்க !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 16,665 
 

விடியற்காலை ஆன்ட்ராய்டை தடவியவாறே மணியை பார்க்கின்றான் ராம், பிறகுதான் தெரிகிறது அது விடியற்காலை இல்லை விடிந்தகாலை என்று, அப்போதும் எந்த ஒரு பரபரப்பும் இன்றி எழுந்து பேஸ்புக்,ட்விட்டர் எல்லாவற்றிலும் ஒரு அரைமணி வேடிக்கை பார்த்து ஒரு காலை வணக்கம் ஸ்டாடஸ் போட்ட பிறகு மற்ற வேலைகளை செய்ய தொடங்கினான் .

தம் அடித்தல்-காலை கடன் முடித்தல்-பல்விலக்குதல்-குளித்தல்-சாப்பிடுதல் போன்ற மிகவும் கடுமையான வேலைகளை தவிர வேறு எந்த வேலையும் இல்லை ராமிற்கு ,எழுந்ததும் ஸ்மார்ட்போனில் செய்ததை இப்போது கணினியில் தொடர்ந்தான் இன்னொரு தம்முடன் இது காலை உணவிற்காக !

கூடவே வேலை தேடுகிறேன் என்று நாக்குரி,மான்ஸ்டர் போன்ற வலைத்தளத்தில் இருந்த வரும் மெயில்கலை சரிபார்த்து முடித்தான் மதியமாயிற்று ,இப்போது எழுந்திருப்பது மதிய உணவிற்கு அருகிலுள்ள சிற்றுண்டியில் கிடைக்கும் புளியோதரை அல்லது தயிர் சாதத்தை ஒரு ரெண்டு கட்ட்டி அறைக்கு வந்து தின்றுவிட்டு தம்மடித்ததும் திரும்பவும் ஒரு தூக்கம் .

மாலை எழுந்து புத்துனற்சியுடன் ஒரு டீ தம் அக்கவுண்டில் முடித்தவுடன் அப்படியே அருகில் உள்ள பேருந்துநிலையத்தில் ஒரு மணி நேரம் கழிப்பான் திவ்யாவிர்காக …(அது வேறு கதை பின்னாடி சொல்லுறேன்),அதை முடித்து மீண்டும் அறையில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பான் ,அப்போது ஒரு 2 தம் போகும் 2மணியில் ,திரும்பவும் உணவிற்கு முன் பின் என தவறாமல் ஒரு தம், உண்டபிறகு கணினியில் ஒரு படம் தூங்குவதர்க்கு முன் ஒரு தம் ,இப்படியாக ஒரு நாளைக்கு 7 அல்லது 8 ஓடியிருக்கும் .

பின்னாடி…அதாங்க திவ்யா கதை
கல்லூரியில் இருந்தே திவ்யாவை லவ்வுகிறான் ராம்,லவுன்னா ஒரு லவ்வு அவ்ளோ லவ்வு(நீ சொன்னா இந்த பில்டிங் மேல இருந்து கூட குதிப்பேன் மச்சி ன்னு ஒரு படத்துல வருமே அதுபோல்),திவ்யாவும் செமையா இருப்பா(கல்லூரி பட தமண்ணா போல்), இவனை போய் லவ் பண்றாளான்னு எல்லாரும் ஷாக் ஆகி போனாங்க இந்த விஷயம் கல்லூரியில் தெரிஞ்சதும் .என்ன செய்ய குறு பகவான் ராமின் ரூமிற்கு பக்கத்தில் ரூம் போட்டு அவனுக்கு உதவுவது போல இருந்துது இருவரின் லவ் மேட்டர்.

இவனின் அணைத்து அசைமென்ட்,ரெகார்ட் மற்றும் எல்லா எழுத்து வேலைகளையும் முடிப்பது திவ்யாதான் .வார இறுதின்னா ரெண்டுபேரும் மெரீனா கடற்கரையை நடந்தே அளப்பார்கள் ,மெரினாவில் தனியாக அல்லது பசங்களோட வந்த எல்லாரும் சொல்லுற இல்ல பேசிக்கிற ஒரே வசனம் இதுதான் “நச்சு கேர்ள்லுக்கு அட்டு பாய் தான் கெடைபான் போல”ன்னு .

இதெல்லாம் காதுல விழுந்தாலும் எதுவும் நடக்காத மாதிரியே போவ்வாங்க இருவரும் பேசிகிட்டே ,ராமின் வீட்டிற்கு இது தெரிந்தாலும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் , திவ்யா,ராமின் குடும்பம் என அனைவரும் எதிர்நோக்குவது ராமின் வேலையைத்தான் .

திவ்யா படித்த கல்லுரியிலேயே பாடம் நடத்த கிளம்பிவிட்டாள் ,அதன்பிறகு ராமின் செலவுக்கும் வழி பிறந்து விட்டது ,

“எழுந்ததும் அடிக்கும் தம்மிலிருந்து இரவு தூங்குவதற்கு முன் அடிக்கும் கடைசி தம் வரை ” இப்போ திவ்யாவின் தயவில் .

ராமின் புகையை வன்மையாக கண்டித்த திவ்யாவிடம் எப்பொழுதும் கூறும் ஒரே பதில் “ஒரு வேலை கிடைக்கட்டும் சத்தியமா விட்டுர்றேன்” இப்போ கூட கம்மி பண்ணிட்டேன் திவ்யா உனக்காக “4லு தான் ஒரு நாளைக்கு” ,திவ்யாவும் வேறு வழியின்றி சில மணி நேரம் பேசிவிட்டு வீடிற்கு கிளம்பிடுவாள் .

ராமின் வீட்டிற்கும் புகைவிஷயம் தெரியும் அவர்களும் மறைமுகமாக சொல்வார்கள் அதற்க்கு நேரடியாக அதே பதிலை கூறி விட்டு சென்றிடுவான் !

ராம் கிங்க்ஸ் ரசிகன் பணமில்லாதபோது காஜா பீடி கூட பிடிப்பான் ஆனால் கிங்க்ஸ் தான் மிகவும் பிடித்தது,மத்த பிராண்டுகளில் இல்லாத ஒரு சுகம் கிங்க்சில் இருப்பதாக நம்புவான்,கல்லூரி முதல்வருட ஆரம்பித்த இந்த புகைநட்பு நாலு வருடம் தொடர்ந்து 5ஆவது வறுடத்தை நோக்கி சென்றுகொண்டிருகிறது ,அதுவும் பரிச்சை நேரத்தில் கணக்கிலாமல் புகைப்பான், நைட்ஸ்டடியில் தீவிரமாக படிப்பவனை போல் உக்காந்திருபான்,ஆனால் புகைப்பதர்க்கு நடிவில் கொஞ்சம் கொஞ்சம் படித்திருப்பான், ராம் அடிக்கடி புகைப்பதை குறைப்பதுண்டு குறிப்பாக வெளியில் செல்லும்போது படி ஏற நேர்ந்தால் மூச்சிரைக்கும் போது ஒரு பயம் அவனை தொற்றிக்கொள்ளும் ஒரு வாரத்திற்கு மொத்த கணக்கில் 5% சதவீதம் குறைத்திடுவான்,அது போக படம் பார்க்க செல்லும்போது அங்கே ஒளிபரப்பும் முகேஷின் கதை அறவே பிடிக்காது ராமிற்கு,அதுவும் அந்த குரல் கர கரவென்று ராமை பயமுறுத்தும் (நான் தான் முகேஷ்…. ),அல்லது திவ்யா எப்போதாவது ரொம்ப திட்டிநாலோ இல்ல கவலை பட்டாலோ இந்த புகை குறைப்பு படலம் நடக்கும்.

படிப்பு முடிந்த பிறகு ராம் அதிகம் புகைப்பது வேலை இல்லையே என்ற சோகத்தில் தான்,புகைப்பவனுக்கு காரணமா சொல்லித்தரவேண்டும் தடுக்கி விழுந்தாலும், டென்ஷன்ஆனாலும் ,சும்மா இருந்தாலும் ,வேலையாக இருந்தாலும் என ஏதாவது காரணம் கிடைத்திடும். சிகரெட்,சுருட்டு,பீடி என எல்லா வகையான புகையையும் டேஸ்ட் பார்த்திடுவான் லோக்கல் கடையில் கிடைக்கும் பீடி(பணவீக்க நேரங்களில்),கிங்க்ஸ்(பஞ்சு வச்சதில் இது மட்டும்தான்,ப்லேவர்கள் தவிர்த்து),பெசன்ட் நகர் பீச்சில் கிடைக்கும் சாக்லேட் சுருட்டு(பெருசா லட்சுமி வெடி போல இருக்கும் ),ஆப்பில்,ஸ்ட்ராபெர்ரி இப்படி எண்ணற்ற சிகரெட் வகைகளை அடித்திருக்கிறான் .

இப்படியாக சென்ற ராமின் வாழ்க்கை திரும்புவர்க்கான நேரம் வந்தது ….

அனைவரும் எதிர்பார்த்தது போல் ராமிற்கு ஒரு வேலை கிடைத்தது, அதுவும் ஒரு பிரபல மென்பொருள் கம்பெனியில்,நல்ல வருமானத்துடன், மாதமாதம் வீட்டிற்கு அனுப்புவது இல்லாமல் கையில் ஒரு கனமான தொகை நின்றது ராமிற்கு,அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர் .

திவ்யாவிற்கு இன்னமும் கோபம் ராமிடம், முன்பைவிட இப்போது ராம் இன்னும் அதிகமாக தம்மடிக்க ஆரம்பித்துவிட்டான்,திவ்யாவை சந்திக்கும் போதெல்லாம் சண்டைதான் சாரி ஊடல்தான்(அப்டித்தான சொல்லுவாங்க ?)

கோபத்துடன் கவலையும் அதிகரித்தது திவ்யாவிற்கு , அதற்காக அவளின் ஆயுதம்தான் “முகேஷ் விளம்பரம் “அந்த அருவருப்பான காட்சிகள் ராமிற்கு துளியும் பிடிக்காது ,அடிக்கடி படத்திற்கு அழைத்து செல்வாள்(நம்ம ஆள்தான் அவ சொன்னா பில்டிங் மேல இருந்து கூட குதிப்பானே ) திவ்யாவின் நோக்கமறிந்தும் அவன் மறுக்கவில்லைஅவளுடன் செலவிடும் ஒவ்வொரு நொடியும் ராமிர்க்கு சொர்கம்தான், ஒரு படம் விடாமல் இருவரும் பார்த்தார்கள் குறிப்பாக இடைவேளையின் போது ராமை அடித்து திட்டி துன்புறத்தி என்னனோவோ செய்து அந்த விளம்பரத்தை பார்க்கவைத்தாள் (ஆனா சோகம் என்னன்னா முகேஷ எங்களால காப்பாத்த முடியல),ஒரு கட்டத்தில் ராமிற்கு அருவருப்புடன் பயமும் சேர்ந்து புகைப்பதை வெறுக்க ஆரம்பித்தான் ஆனால் அதற்காக ராம் புகிப்பதை நிறுத்தவில்லை ,திவ்யாவிர்காக நிறுத்தினான் , அது அவ்வளவு சுலபம் இல்லை ,ஒரு வாரம் கழித்து ஒன்று பிறகு ஒருமாதம் கழித்து ஒன்று திரும்ப எப்போதும்போல் 4,5 என சில நாட்களில் இப்படியே ஆறு மாதம் 7 மாதம் என கடைசியாய் அவனையறியாமலே புகைப்பதை நிறுத்தியிருந்தான் .

எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வேகம்,சுறுசுறுப்பு தனக்குள் வந்ததாக கருதினான், சோதித்து பார்க்க லிப்ட் இல்லாமல் நடந்தே போவான் ,இப்போது முன்பளவிற்கு இல்லன்னு மகிழ்ச்சியானான்.

அனைத்தும் நலம் பிறகென்ன திருமணம்தான் (இப்பவும் பக்கத்து ரூமில் குரு பாய் கால் மேல் கால் போட்டு உதவிகொண்டிருகிறது ராமிர்க்கு) திவ்யா வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டனர் .

இனி புகையாது !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *