முன்னாள் காதலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 10,036 
 
 

சில வருடங்களுக்கு முன்பு.

‘ஹ்ஹூம் இந்த மூஞ்சிக்கெல்லாம் ஒரு அட்ட பிகர் கூட இனியும் செட்டாகாவே செட்டாகாது’னு என்று அவநம்பிக்கை நாக்குத்தள்ளி போய் இருந்த சமயத்தில்தான் அந்த அம்சமான பிகரை சந்திக்கும் வாய்ப்பொன்றும் எனக்கு அமைந்தது.

அன்று கொழும்பிலிருந்து ஊருக்கு ரயில் வண்டியினிலே பயணித்துக்கொண்டிருந்தேன். ஊரை அண்மித்த பக்கத்து ஊர் ஸ்டேஷன் ஒன்றில் பத்து நிமிடம்வரை ரயில் நிறுத்தம் பெற்று, அங்கிருந்த பயணிகளையும் அதில் ஏற்றிக்கொண்டு மறுபடியும் ஊரை நோக்கி புறப்படவும் அது தயாரானது. நான் இருந்த ரயில் பெட்டியிலயே ஒரு பெமிலியிம் ஏறிக்கொண்டனர். அவர்களோடுதான்
அந்த அம்சமான கேர்ளும் வந்திருந்தாள். ‘அநேகமாக அவளது பெமிலியாகத்தான் இருக்கவேண்டும் அந்த லந்துவிட்டபடி ஏறிய கூட்டம் என அப்போது புரிந்துகொண்டேன்.

அங்குமிங்குமாக அழைந்த என் கண்களின் ஷூம் விஷூவலோ அடிக்கடி ஒரு முறை, அவள் அழகையும், அவள் பேசி சரித்துக்கொள்வதையும் அடிக்கடி ரசிக்காமலும் இருந்ததில்லை. அவளும் அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டே என்னையும் நோக்கி வெகுளித்தனமாய் சிரிதாய் புன்னகை பூத்துக்கொண்டாள்.

ரயில் தண்டவாளத்திலிருந்தே விலகி மொத்தமாய் கடலில் படகுபோன்று மிதப்பதாய் ஒரு பீலிங்க் என் ஹார்ட்டில் கும்மாளமிட்டுக்கொண்டது. காலத்துக்கும் காதல் எனும் நம்பிக்கைக்கு டூலெட் போட்டுவைத்திருந்த என் இதயத்துக்குள் பட்டாம்பூச்சிகள் டெலிபோன் அடிக்க, ஊடறுத்துச்சென்ற மரங்களின் நிழல்களோ மென்மையான என் தேகமெங்கும் காற்றோடு மோதிச்சென்றது. (இந்த மொக்க டயளாக்குக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்துக்கும் சத்தியமாக சம்மந்தமே கிடையாது.)

இத்தனையும் நடந்து கொண்டிருக்க நடுவில் ப்ரேக் போடடது ரயில்… ரயில் வீல்கள் மாத்திரமல்ல எனது பீலிங்க் பினாத்தல்களும் கொய்யோமுய்யோனு கதறியபடி!.

‘பார்ப்பதற்கு 90களில் பாலிவுட் சினிமாவை கலக்கிய நடிகைளாட்டம் இவளும் அதே அச்சு அசலாக அம்சமாருக்காளே படுபாவி.’ ‘இவளாவது, என்னை பார்த்து சிரிக்கிறதாவது..!? ‘சரி எதுக்காக என்னைப்பார்தே சிரிக்கிறாள்!’ எனும் டவூட் ஐன்ஸ்டீன் மண்டையை குடைவது போன்று எனக்குள்ளும் குடையவே சற்று உசராகியபடி ‘நிஜமாகவே பின்னாடி ரோமியோ சாமியோ எவனாவது நின்றுகொண்டு நூல் விட்டுக்கொண்டிருக்கானோ!?’ என நெஞ்சம் பக்கு பக்குனு அடிக்க பேக்க பேக்க முழித்தபடி சுதாரித்துக்கொண்டே பின்னாடியும் திரும்பி பார்த்துக்கொண்டேன். ‘அட கருமமே நான் இருந்ததே அந்த ரயில் பெட்டியின் கடைசி சீட்டில்தான் குமாரு என்கிறதே அப்போதுதான் புரிந்துகொண்டு நிம்மதியாக பெருமூச்சு ஒன்றை விட்டபடி மறுபடியும் முன்னோக்கி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டேன்.

மறுபடியும் மனசாட்சி குடைந்துகொண்டேயிருக்க ‘அடச்சிறுக்கிமகள் இவள் கிறுக்காயிருப்பாளோ..!?, இல்லன்னே இவளது பார்வையில் ஏதாவது கோலார் கீலார் ஏதாவது இருக்குமோ!? என ஒரே குழப்பத்தில் ஸ்டேஷன் வரும்வரை தலைமுடியை கத்திரிக்கோல் இன்றி பிய்த்து பித்தானாகியே போய்ருந்தேன்.

சடாரென ப்ரேக் போட்டு நிறுத்திகொண்ட ரயில் ஊர் ஸ்டேஷன் பிலாட்பாராத்தில் வந்து நின்றுகொண்டது.

கடைசி நொடியில் நான் நினைத்த அனைத்தும் தவறென உணர வைத்தாள் மறுபடியும் அவள் சிரித்துக்கொண்டு இறங்கியபோது!.

நான் இறங்கமாலே ரயிலின் ஜன்னல் வழியாக கண் இமைக்காமல் அவளையே வெறித்தனமாக! பார்த்துக்கொண்டிருந்தேன்.

அங்கு சவாரிக்காக நின்றிருந்த ஓர் ஆட்டோவில் ஏறிக்கொண்ட அவள், மீண்டும் ஒருமுறை என்னை பார்த்து சிரித்தபடி அவ்விடத்தை விட்டும் நகர்ந்தாள் அந்த தேவதை.

ரயில் தொடர்ந்து மட்டக்களப்பை நோக்கி பயணிக்க தயாரானதையும் அறியாமல் அப்படியே பப்பரப்பானு சற்று கோமாவில் உறைந்துபோயிருந்தேன்.
ஊர் வந்ததும் புரியாமல் தேய்ந்துபோன அந்த சீட்டை மறுபடியும் எதுவெதுக்கோ தேய்த்துக்கொண்டிருந்தேன். ரயில் இஞ்சினின் உருமலும், அதன் ஆட்டமும் சொப்பனத்தில் பறந்துகொண்டிருந்த அந்த வினாடிகளை சோக்காவே டிஸ்டப் பண்ணியதுபோக, “அடேய் எருமமாடு உன்னத்தான் கேட்குதா…? ஏதாவது தேறுமா?” என டீடியாரின் அதட்டலோடும் ஏச்சுப்பேச்சோடும் அந்த சீனுக்கு எண்டு கார்ட்டும் போடப்பட்டது.

பதறியடித்து பையை தேடி எடுத்து ஓடும் ரயிலில் இருந்தே குதித்து ஒருவழியாக லாபகரமாகவே இறங்கிக்கொண்டேன்.

அந்த சம்பவத்துக்கு பிறகு அவளை ஊர்முழுக்க அங்குமிங்குமாக தேடி, பிச்சைக்கானாட்டம் அழைக்களிந்த நானோ ஒருவழியாக அதிர்ஷ்டவசமாகவே அவள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியையும் அடையாளம் கண்டுகொண்டேன். எனது ஊரை சேர்ந்தவள்தான். அடடாடா பக்கத்து ஸ்கூலில்தான் படிக்கிறாள்! என்பதையும் நீண்டநாளாக வேவு பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன். “இதெல்லாம் ஒரு புழப்புன்”னு நீங்க காறி துப்புறது புரியுது. இனிமே இதுதான் புழப்புனும் ஆகிபோச்சு…

அவள் டியூசன் போகும்போதெல்லாம் பலதடவை அவளைப்பார்த்து பரவசம் அடைந்தேன். “மறுபக்கம் அவளும்தான் என்றாள் நம்புவீங்களா? கருமம் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதே உங்கள் தலைவிதி!?.

நன்றாகவே போனது. சைக்கிள் டயர்கள் தேய்ந்து அதன் இரும்புச் சக்கரம் தெரியும் அளவுக்கு பிடிவாதமாக மாறிக்கொண்டிருந்தது என் காதல் எனும் மாயை.

அதுவரை நாங்கள் இருவரும் எந்தவொரு வார்த்தையும் பேசியதாக இல்லை. கண்களால், புருவங்களால் புதிர்கொண்ட மொழியாடாலுடன் ஊடல்களும் நீடித்தன.

நாட்களும் நகர நகர உலகத்தில்
துரதிர்ஷ்டம் என்று எதுவெல்லாம் இருக்குதோ அதுவெல்லாம் மூட்டை கட்டி என் முதுகில் ஏறிக்கொள்ள எனக்குள் அனைத்தும் நரகமாக மாறிக்கொண்டிருந்தது.

சரி எப்படியாவது பேசி என் நிலமையை புரிய வைத்துவிட்டு தொடரலாம் என்றே கோல் பண்ணுவதற்காக அவள் மொபைல் நம்பரை கேட்டு சைகையால் அம்பு விட்டேன். எதுக்கெடுத்தாளும் பைத்தியக்காரியாட்டம் சிரித்துக்கொள்வாள். அன்றும் அதுபோன்றே சிரித்துக்கொண்டே போனவள் திடிரென திரும்பிப்பார்த்து அப்புறமாகத்தான் அந்த எழவை புரிந்துகொண்டாள். தலையை ஒருமுறை அசைத்து “ஹ்ம்” என்றே நகர்ந்து சென்றாள்.

மறுநாள். வளமையாக அவள் டியூசனுக்கு செல்லும் அதே வீதியில் அவள் செல்கையில் ஓர் துண்டு பேப்பரையும் கசக்கி சுருட்டி கீழே விட்டுச்சென்றாள். சைக்கிளில் சென்ற நானும் ‘மொபைல் நம்பராகத்தான் அது இருக்கும்’ என புரிந்துகொண்டேன்.

அதை எடுப்பதற்கு பலமுறை முயற்சித்தும் அவ்வீதியில் ஜனநெரிசலோ குறைந்தபாடில்லை என்றாகிப்போனது.

பலமணிநேரம் நாய் படாத பாடாக சுற்றிச்சென்று இறுதியில் திரும்பி வருகையில் அந்த பேப்பர் துண்டும் எங்கோ காற்றில் பறந்து சென்றுவிட்டது அவள் போன்றே!.

தொடர்ந்தும் முயற்சிக்கையில் தோல்வி நிலை சிறப்புடன் செயல்படுத்திக்கொண்டிருக்க எனது வெளிநாட்டு பயணத்துகான டிக்கெட்டின் தேதி மறுமுனையில் என்னைப்பார்த்து பல்லை இழித்தபடி நக்கலாய் சிரித்துக்கொண்டது.

இதற்கிடையில் எந்தவொரு தொடர்புமே இல்லாமல் அற்றுப்போக ‘கடைசிவரை இதுதான் நிலையோ!’ என்று பல கனவுகளுடனும், கவலையுடனும் வெளிநாடு நோக்கி பறந்து சென்றேன்.
எனக்காக அவள் காத்திருப்பாள் எனும் நம்பிக்கை என்னை திடப்படுத்தவே பொறுமையோடு சில வருடங்களை கடத்தியபின் நாடு திரும்பினேன்.

அவள் உலாவிய அந்த டியூசன் சென்டர், வீதிகளென பல்வேறு இடங்களிலெல்லாம் பித்துப்பிடித்துப்போய் தேடினேன், அவளை இறுதிவரை காணவேயில்லை..!

வருடங்களுடன் அவளையும் சேர்த்து தொலைத்துவிட்டது மாத்திரம்தான் என் எதிர்பார்ப்பெங்கும் மிஞ்சிப்போயிருந்தது.

‘எப்படியும் அவள் திருமணம் முடித்துருப்பாள்… அவளுக்கு குழந்தைகளும் இருக்கலாம்’ என அவள் வயதை வைத்தே யூகிக்கையில் என் நம்பிக்கை அனைத்தும் படிப்படியாகவே அவநம்பிக்கையை நோக்கி சறுக்கிகொண்டிருந்தது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் அவளை ஒரு தடவையேனும் நான் காணும் சந்தர்ப்பம் எதுவுமே எனக்கு கைகூடவில்லை.

கடந்த மாதம் இறுதியில் ஒருநாள். ஒரு பெட்டிக்கடைக்கு நான் சென்றிருந்தேன். பின்னாடி ஒரு பெண் நின்றிருந்தாள். சற்று ஒதுங்கி அவளுக்கு இடத்தை கொடுத்தேன். எதேற்சையாக அந்த பெண்ணின் முகத்தை பார்க்கவும் நேர்ந்தது, அவளும் அதேபோன்று என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். கடைக்காரரிடம் சிரித்தபடி பொருட்களை கேட்டுக்கொண்டே நின்ற அவள் முகம் அத்தோடு மெதுமெதுவாக மாறவும்தொடங்கியது. பின்னர் அவள் ஏதும் பேசமுடியாமலே அக்கடையில் வாங்கிய பொருட்களோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். பார்ப்பதற்கோ கொஞ்சம் சதை இட்டிருந்தாள் அந்த பெண். அவள் வீடு அந்த கடையின் முன்பே இருந்ததை, பாதி திறந்திருந்த கேட்றில் இடையில் நின்றிருந்த குட்டி குழந்தை “உம்மி” என அவளை நோக்கி அழைத்ததையும் வைத்தும் அறிந்துகொண்டேன்.

அவள் உள்ளே நுழைந்து கேற்றை சாத்தும் முன்பே என்னையே பார்த்தபடி கேற்றை இழுத்து சாத்திக்கொண்டிருந்தாள். அவளின் நீலநிற கண்கள் சிவந்துகொண்டே செல்கையில் கேற் முற்றாக மூடிக்கொண்டது.

‘எனக்குள் இருந்த வலிகள்தானே அவளுக்குள்ளும் இருந்திருக்கும்’ என அவள் முகத்தை வைத்தே அவ்வினாடியில் உணர்வுகள் உடைய உறைந்துபோய் நின்றிருந்தேன்.

அன்று அவள் குரலும் என் குரலும் எசசந்தர்ப்பத்திலும் ஒலிராமலே இறுதிவரை ஊமையாகவே வாழ்ந்து – சிறு சிறு புன்னகையுடனே பேசி டாவடிச்ச அந்த காதலோ, இன்று கண்ணீருடன் அவ்வீதியில் அனாதையாகி பரிதாபமாகவே உலாவுகிறது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *