வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சில கடந்த கால நிகழ்வுகள் இனிமையாக இருக்கும். அது போலவே எனக்கும் ஒரு அழகான கடந்த கால நினைவுகள் உள்ளன. ஆம் அதை என் காதல் என்று கூட சொல்லலாம். அவள் பெயர் கவிதா.
பெயருக்கு ஏற்றாற் போல் அழகிய கவி போன்ற குரல். படிப்பில் அவள் என்னை விட முன்னிருப்பவள். அவ்வளவாக அவள் அழகாக இல்லையெனினும் என் கண்களுக்கு என்னவோ அவள் அழகாகவே தெரிந்தால். நாங்கள் இருவரும் இனைபிரியா தோழிகள் ஆனோம்.
நான் எனது ஊருக்கு அருகில் உள்ள எகாட்டூர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவியாக படித்துகொன்டிருந்தேன். எனது பள்ளி நடுநிலை பள்ளியாக இருப்பினும் அழகான மரங்கள், பூக்கள் என அழகு கொஞ்சும் சோலையாக இருந்தது எனது மனதில் பசுமை மாறா நினைவாக பதிந்துள்ளது.பூத்துகுலுங்கும் பூக்களும் பரந்து விரிந்த மணற்பரப்புகளிடையே எனது பள்ளி காலம் அருமையாக தொடர்ந்தது. எனது ஊரிலிருந்து வரும் அக்காங்களுடன் நானும் பள்ளிக்கு வருவேன். வரும் வழியில் மரத்து நிழலில் ஆங்காங்கே அமர்ந்து கதைத்து கொண்டே வருவோம்.. எங்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு பூ பறித்து கட்டிகொன்டு வந்து தருவோம். இப்படியே ஒரு வருடம் கழிய .. மூன்றாம் வகுப்புக்கு சென்றேன்.
ஒரு நாள் எங்களது ஆசிரியர் தலைமை அலுவலகத்தில் எங்களுக்கு அறிவியல் பாடம் நடத்திக்கொன்டிருந்தார். அப்போது புதிதாக ஒரு மாணவி ஒருத்தி வந்து சேர்ந்தாள். அவள் தான் எனது ஆருயிர் தோழி கவிதா. அன்று தான் அவளை முதல் முதலாக பார்த்தேன். வந்தவள் என்னருகில் அமர, அவளிடம் பாட புத்தகங்கள் இல்லாத்தினால் எனது புத்தகத்தை அவளிடம் பகிர்ந்து கொன்டேன். எங்களது நட்பும் அன்று தான் ஆரம்பித்தது. நாங்கள் இனை பிரியா ஜோடிகள் ஆனோம். வகுப்பில் முதல் மாணவியாக அவளும் இரண்டாம் மாணவியாக நானும் திகழ்ந்தோம்.
படிப்பில் நல்ல ஆர்வமுள்ள பெண் அவள். அமைதியான அடக்கமான பெண்ணும் கூட அவள். நாங்கள் இடைவேளை நேரத்தில் நிறய பேசுவோம். அவளது அம்மா பெயர் வரலக்ஷ்மி , அப்பா பெயர் கஜேந்திரன். அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. அவனது பெயர் மோனிஷ்குமார்.
நாட்கள் செல்ல செல்ல நாங்கள் எங்கள் நட்பினை மிகவும் நேசித்தோம். எனது அப்பா பெயர் மோகன். அவளது அப்பா பெயரோ கஜேந்திரன் . எனவே நாங்கள் எங்கள் அப்பாவின் பெயரின் முதல் எழுத்துகளை கொன்டு எங்களுக்கென ஒரு புதிய பெயரை வைத்து கொன்டோம். அதாவது நான் G.M என்றும் அவள் M.G என்றும் வைத்துகொன்டோம். நாங்கள் மிகவும் அழகாக படம் வரைவோம். அதில் நானும் என் தோழி கவியும் இருவர் மட்டுமே இருப்போம். இப்படியே ஆறாம் வகுப்பு வரை வந்து விட்டோம். சில நாட்களில் நாங்கள் பள்ளிக்கு முன்னதாக வந்து விட்டால் நன்பர்களின் வீடுகளுக்கு சென்று வருவோம். ஒரே ஒரு முறை அவளது வீட்டிற்கு சென்று வந்துள்ளேன்.
படிப்பில் எப்போதுமே எங்களுக்குள் போட்டி தான். ஆனால் அது எப்போதும் பொறாமை ஆனதில்லை. போட்டி போட்டு நானும் அவளும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்போம். நாங்கள் வரையும் ஓவியம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் வரைந்த ஓவியத்தில் ஹார்டீன் வரைபடம் வரைந்த அவளிடம் கான்பித்தேன். அதற்கு அவளோ அதயெல்லாம் வரையாதே அவ்வாறு வரரைந்தால் நம்மை தவறாக நினைப்பார்கள் என்று கூறினால். ஆனால் எனக்கு ஒன்றும் அது பெரிய தவறாக தோன்றவில்லை. ஏனெனில் நான் தான் அவளை காதலிக்கிறேனே. எங்கள் நட்பின் ஆழம் ஆசிரியர் முதற்கொன்டு அனைவராலும் பாராட்டப்பெற்றன. அவள் என்னை தவிர்த்து வேறு யாரிடமாவது பேசினால் எனக்கு வரும் கோபத்திற்கு அளவில்லாமல் போகும். அந்த அளவு எனது கவியை நான் நேசித்தேன். அவள் என்னுடன் மட்டுமே பேசி பழக வேன்டும் என்று என்னுவேன். ஆனால் அவளோ சகஜமாக அனைவரிடமும் பழகுவாள். நானும் அப்படி தான் என்றாலும் அவளிடம் மட்டும் ஏனோ நான் மற்றவர்களிடம் அவள் அவ்வாறு பழகுவதை விரும்பவில்லை.
அருகில் இருக்கும் போதே ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதுவோம். அவளது கையெழுத்தில் மயங்கிய நான் என் கையெழுதையும் அவள் போல் மாற்றிக்கொன்டேன். முத்து பதித்தாற்போல இருக்கும் அவளது கையெழுத்து. எங்கள் நட்பு உயிரை போல் ஆனது. எனக்காக பலவிதமான கதைகளையெல்லாம் சொல்லுவாள் எனது கவி. ஒரு நாள் எங்களது ஆசிரியர் பெயருக்கான காரணங்களை சொல்லி கொன்டிருக்கையில் எனது கவியின் பெயருக்கு அர்த்தம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் கவிகளின் அரசி என்று பதிலுறைத்தார். ஆம், உன்மையில் அவள் அன்று என்னவோ எனக்கு அரசியாகவே தோன்றினாள்.
ஆறாம் வகுப்பு முடிந்து எழாம் வகுபிற்கு செல்லும் போது கவியின் தந்தை உடல் நிலை சரி இல்லாத காரனத்தால் அவள் தனது சொந்த ஊருக்கு போகும் நிலை வந்தது. என்னை விட்டு கவி பிரிய போகிறாள் என்பதை என்னால் என்னி பார்க கூட முடியவில்லை. எனது முதல் ஆழமான நட்பு அன்பான நட்பு என் உயிரான நட்பு என்னை விட்டு பிரிந்து போக போகிறது என்றதும் அதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இருப்பினும் பிரிந்தாக வேண்டிய சூழ்நிலை என் கவிக்கு.
எனது வாழ்நாளில் வசந்த காலம் அவள். அவளை பிரிந்ததும் எனக்கு பூஞ்சோலையாக இருந்த எனது பள்ளி கூடம் எனக்கு அன்னியமாகி போனது . அவளில்லாத பள்ளி அறைகள் எனக்கு வெறும் கல் கட்டிடமாகவே தான் தெரிந்தன. நான் நேசித்த பள்ளியில் இப்போது எனக்கு நாட்டமிலாமல் இருந்தது. அவளின் நினைவாக அவள் எனக்கு அளித்த கடிதங்கள் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை பார்கும் போதெல்லாம் அவளின் நினைவு எனக்கு பீறிட்டு எழும். அழுகையாய் வரும்.
நான் நேசித்த பெயர் கவிதா…
நான் வாசித்த பெயர் கவிதா…
எனது நட்பின் பெயர் கவிதா….
எனது மகிழ்வின் பெயர் கவிதா….
கவி நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இன்றளவும் கூட எனக்கு உன்னை போல் ஒரு தோழி ஏனோ கிடைக்கவே இல்லை. கவிதா என்ற பெயரை கேட்கும்போதெல்லாம் எனக்கு உனது நினைவொன்றே எழுகிறது தோழி. எனது இன்ப துன்பங்களை உன்னுடனே நான் அதிகம் பகிர்ந்துள்ளேன். நீ இல்லாத நாட்களில் எனது அழுகையை கட்டுபடுத்த தெரியாமல் நிறைய அழுதுள்ளேன். நீ மட்டும் தான் கவி எனது மிகச்சிறந்த தோழி.
இன்றோடு உன்னை பிரிந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. உன்னை முதல் முதலாக சந்தித நாளும் கடைசியாக சந்தித நாளும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது எனதருமை தோழியே… ஏனோ… உன் நினைவுகள் நெஞ்சில் வருபோதெல்லாம் மனம் கனக்கிறது. கண்கள் கண்ணீர் சிந்துகிறது. மௌனமாய் உள்ளம் குமுருகிறது… என்று உன்னை மீண்டும் கடவுள் எனது கண்களில் காட்டுவாறோ என்று காத்திருக்கிறேன் கவி…
எனது பள்ளி வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெறும் பொக்கிஷம் நீ ….
எனது மனதில் நீங்கா இடம் பெரும் மலரும் நினைவுகள் நீ….
நீ எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என இறைவனை வேண்டிகொள்கிறேன்.
இக் கவிதையை வாசித்தில் எனக்கு நிகழ்ந்ததைப் போல உள்ளது…
அருமை…
நெருக்கமான நினைவலைகளுக்கு என்றும் நெகிழ்வு உண்டு.அவை இங்கே கவிதையாக மலருகிறது.
அருமை. இன்னும் எழுதுங்கள் . வாழ்த்துக்கள் .
தங்களின் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றி தோழரே …
Aaaga yenna oru kadantha kaala ninaivugalin arbuthamana thoguppuu.. Eruvarumey oru naal kandipaga santhithu ungal natbai meendum thodara vendum yendru nan kadavulidam vendikekurenvendikekuren thozhiyeh
தங்களின் விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றி தோழரே … நிச்சயம் ஒரு நாள் நாங்கள் சந்திப்போம் …