அன்று வெள்ளிகிழமை.
அந்தி சாயும் நேரம் கல்லூரி மாணவர்கள் சிலர் அவசர அவசரமாக கிளம்பி கொண்டு இருக்க, அதில் சில மாணவர்கள் கூட்டம் கூடி அரட்டை அடித்தும் கலகலத்தும் கொண்டு இருந்தனர்.
விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் தங்கள் திறமையை முடிந்த அளவு காட்டிக்கொண்டு இருந்தனர்.
ஸ்டாஃப் ரூம் வாசலில் சிவானி நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ஆசிரியர் என்ன வேணும் என்று மிரட்டல் தோணியில் கேட்க.
ரெக்கார்ட் நோட் மேம், கார்த்திக் சார் என்று உள்ளே கை காட்ட…
வெய்ட் – அ செக்கண்ட்.
(சொபா என்னா டெரர் வீட்ல இந்தம்மாவோட புருஷன் எப்டி சமாளிக்கிறோரோ!)
கார்த்திக் சார் வரதுக்கு முன்னாடி ஒரு சின்ன இன்ட்ரோ பாத்துருவோம்.
சிவானி பி.காம் மூன்றாம் வருடம் படிக்கின்றாள். மிகவும் வசதியான வீட்டுப் பெண். அழகு என்றால் கொள்ளை அழகு நம்ம நஸ்ரியா மாறின்னு வச்சி கோங்கப்பா ஓகே வா. மானே தேனே பொன்மானே லா வேணா ஒரே வரில முடிச்சு புடலாமேனு யோசிச்சேன் அதான் நஸ்ரியா மாறி பியூட்டி . அம்மா அப்பா ரெண்டு பேருமே இவக்கூட இல்ல அமெரிக்கா-ல இருக்காங்க. வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. இவர்கள் இப்படி விலகியே இருப்பதால் சிவானிக்கும் இவர்கள் மேல் அன்பு என்ற ஒன்று இல்லாமலே போனது. அவர்களிடமும் இவள் எதையும் எதிர்பார்க்கவில்லை. பெத்த கடனுக்கு அக்கௌண்ட் – ல பணத்த மட்டும் நிறைச்சிருவாங்க. இவக்கூட வீட்ல அமுதாம்மா இருக்காங்க. அவங்கதா இப்போதக்கி இவள பாத்துக்குறாங்க. மிகவும் சுட்டிப் பெண். தன்மேல் அன்பு வைக்க ஒருவரும் இல்லையே என்று இதுவரை அவள் கவலைப்பட்டதில்லை.
சரி வாங்கப்பா கார்த்திக் சார் வந்துட்டாரு.
வாட் சிவானி???
சார் ரெகார்ட் நோட்.
ஏன் கிளாஸ்ல சிக்னேச்சர் வாங்கலையா???
நோ சார். இப்பதா கம்பிளீட் பண்ணே.
ஓகே வெய்ட். பென் எடுத்துட்டு வந்துடுறே…… என்று அவர் உள்ளே சென்றார்.
ஆத்தா, மாரியாத்தா, செல்லாத்தா, முப்பாத்தா – எல்லாரும் ஏன் கூட இருங்கப்பா. எல்லார் முன்னாடியும் என் மானம் போக வச்சிராதிங்க. காலேஜ் முடிச்சிட்டு சொல்லிக்கலாம்னு சொன்னா, எங்க கேக்குறாளுக. பெட் வேற கட்டி அதுல தோத்து வேற போய் எனக்கென்ன பயம் இப்பவே கார்த்திக் சார்கிட்ட சொல்லிட்டு வரேன். வீராப்பா வேற சொல்லிட்டே. இனி ஆண்டவா நீதான் இந்த சின்ன குழந்தையை பாத்துக்கணும். (கடவுள் மைண்ட் வாய்ஸ் “யாரு நீ சின்ன குழந்தையா, பாய்சன்”)
கார்த்திக் சார் வந்துட்டாரு, “ரெகார்ட் நோட் ப்ளீஸ்”
ரெகார்ட் நோட்டை ஓபன் செய்த கார்த்திக் சார். அவளை பொசுக்கி விடுவது போல் முறைக்க….(அதில் ஐ லவ் யூ டா செல்லம்னு கிரீட்டிங் கார்டில் எழுதப்பட்டிருந்தது)
அவள் சா… ம்ம்….. சார் …. அதுவ….
வாட் நான்சென்ஸ் திஸ் சிவானி. ஐ நெவர் எக்ஸ்பர்ட் திஸ் டைப் ஆஃப் ஆக்டிவிட்டிஸ் ஃப்ரம் யு (என்னது இது சிவானி. உங்கிட்ட இந்த மாதிரி ஒரு நடவடிக்கை நான் எதிர் பார்க்கல)
யாரு அந்த பையன். ம்ம்…. சொல்லு என்று அவர் மிரட்ட.
சா …… சார்.
ம்ம் டெல் மீ.
அவள் உள்ளங்கை விரிக்க, அதில் எழுதியிருந்த பெயரை பார்த்ததும் அதிர்ச்சியில் அவன் நெஞ்சம் படபடக்க ஒரு வித நடுக்கத்துடன், கார்த்திக் யாரு?.
அவள் ஆள்காட்டி விரலினால், அவனை காட்ட,
என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தடுமாறிவிட்டான். பிறகு மூச்சினை இழுத்து விட்டு நாளைக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு விநாயகர் கோவில் வந்துரு உன்கிட்ட பேசனு என்று அவளை பார்க்காமலே சொல்லிவிட்டு சென்று விட்டான்.
ஹப்பா சாமி நா செத்தேன். பைய சுத்தமா எதிர்பார்க்கல போலயே?
எல்லாம் இவளுகளால, வரேன் டி இருங்க என்று புலம்புக் கொண்டே கேண்டீனை நோக்கி நடையை கட்ட…
அங்கு அவனோ நான் எந்த விதத்துல தப்பு பண்ணேன். மிகவும் கன்னியமாக தானே நடந்துருக்கே எல்லாரிடமும். இந்த சிறு பெண் மனதில் சலனம் ஏற்பட நான் காரணமாகி விட்டேனே! என்று தனக்குள் நொந்துக் கொண்டிருந்தான்.
அங்கு அந்த வானரப் படைகளோ இவளை சூழ்ந்து கொண்டு,
கோமதி “மச்சி என்னாச்சு டி. கார்த்திக் சார் ஒகே சொல்லிட்டாரா”.
ரஞ்சிதா ” கேக்குறா பாரு கேள்வி அந்த உம்மனா மூஞ்சியாவது ….”.
சிவானி ” ஏய் என்று எகிறி கொண்டு வர”
ரஞ்சிதா ” ஓகே மேடம் சாரி சாரி. அடி ரொம்ப பலமோ”.
சிவானி “ஈஈஈஈஈஈ இன்னு அந்த அளவுக்குலாம் என் செல்லம் போகல”.
கோமதி “அப்ப ஒகே ஆன மாறி தான சிவா”.
சிவானி, “நீ வேற கோம்ஸ். அவரு சுத்தமா இத எதிர்பார்க்கல போல மச்சி. மனுசன் விஷியத்த சொன்னது அப்புடியே உறைஞ்சு போய் டாப்புல. நாளைக்கு கோவிலுக்கு கூப்ட்ருக்காரு மச்சி”.
ரஞ்சிதா ” சூப்பர் பிளேஸ் மச்சி கடவுளோட ஆசிர்வாதத்தோட காதல் ஆரம்பிங்க”.
சிவானி அவளை தீ பார்வை பார்க்க….
கோமதி “விடு சிவா.. அவ எப்போதுமே அப்புடி தான, நான் சீரியஸ் – ஆ கேக்குறேன் என்ன பண்ணப் போற…..”
சிவானி “எல்லாத்தையும் மேல இருக்கவே பாத்துக்குவான்”.
இப்பொழுது இருவரும் அவளை முறைக்க….
விடு மச்சி, எவ்வளவோ பாத்துட்டோ இத பாக்க மாட்டமா மச்சி. இது எல்லாமே நாம எதிர்பார்த்தது தான. சிவானியா கொக்கா என்று காலர் சுடிதாரின் காலரை தூக்கி விட,
மற்ற இருவரும் தலையில் அடித்துக் கொள்ள,
வாங்க மச்சிஸ் என்று இருவர் தோலிலும் இரண்டு பக்கம் கையை போட்டுக்கொண்டு தொங்கி கொண்டே நடக்க,
ரஞ்சிதா, “ஏய் கைய எடுடி பன்னி”.
சிவானி, “என்னது நா பன்னியா கைய எடுக்க முடியாது போடி”
இவர்கள் கலாட்டாக்களை பார்த்து சிரித்தப்படியே கோமதி நடக்க., கோமதி எப்போதுமே அமைதி தான். ஆனால், தோழிகளுக்கு ஒன்று என்றால், துடித்து விடுவாள். அதனால் சண்டை போடும் இருவருக்கும் கோமதி எப்போமே ஸ்பெஷல் தான்.
இவர்கள் தங்களது சேட்டைகளை செய்தபடியே வீடு சென்று சேர,அங்கே ஒருவன்?
பாவம் கார்த்திக் சார்., உண்மையாவே ஒரு பாவபட்ட ஜீவன் தாங்க நம்ம ஹீரோ அம்மா அப்பா இல்ல ஆசிரமத்துலதான் வளந்தது படிச்சது எல்லாமே. தனக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் அவனுக்கு எப்போதும் உண்டு. அதனாலே தன்னை எப்போதும் இறுக்கமாகவே வைத்துக்கொள்வான். படிப்பு மட்டுமே தன்னை காப்பாற்றும் என்று உறுதியாக நம்பினான். இன்று காலேஜ் ஃப்ரொஃபசர் ஆகிவிட்டான். ஒரு வாடகை வீட்டில் தனியாக இருக்கிறான்.
கார்த்திக் மாநிறம், அலையலையான கேசம், நீண்ட மூக்கு, கூர்மையான கண்கள், பிரஞ்சு தாடி, சிகரெட் தீண்டாத தடியான உதடுகள். பார்க்க ரொம்ப டீசண்ட் பா. அவனுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி. அதனாலயே சிலப் பெண்கள் அவனிடம் வலிந்துக் கொண்டு பேசுவார்கள். அப்படி பேசுபவர்களிடம் இருந்து நாசுக்காக விலகிவிடுவான்.
இப்புடி ஒரு பையன் கண்முன்னாடி இருந்தா என்ன பண்ணுவாப்பா நம்ம சிவானியும்.
இரவு 10 மணி சிவானி தனது அறையில் கார்த்திக் புகைப்படத்தை செல்லில் பார்த்துக்கொண்டு, “மூஞ்சப்பாரு ஒரு பொண்ணு நானே வந்து லவ் யு சொல்றே , என்னடா மண்ணு மாரி இருக்க, டீன் ஏஜ் லவ் -னு நினைச்சிட்டியா கார்த்திக். நீ எனக்காக எனக்கு மட்டுமே சொந்தமானவன் உன்ன விட்டு எங்கவும் போக மாட்டேன் பார்த்துக்க. நாளைக்கு எதுனா பேசி என்ன டென்ஷன் பண்ண மவனே நீ செத்தடா” என்று அவனை திட்டிவிட்டு தான் எடுத்த முடிவில் உறுதியுடன் உறங்கினாள்.
இங்கே ஒருவனோ தூக்கமில்லாமல் புலம்பிக்கொண்டிருந்தான். அவனுக்கு இது போன்ற பிரச்சனைகள் புதிது. அவனிடம் வலிவார்களே! தவிர இதுவரை யாரும் அவனிடம் காதல் என்ற ஒன்றை சொன்னதில்லை. அவனும் இதுவரை காதல் கல்யாணம் என்ற ஒன்றினை இதுவரை சிந்தித்ததில்லை. அதுவும் தன் மாணவி சொல்லிவிட்டாளே! என்று புலம்பிக்கொண்டே இருந்தான். விடியலில் ஒரு முடிவுடன் துயில் கொண்டான்.
காலை எட்டு மணிக்கு அமுதாம்மா என்று கூவிக்கொண்டே சமையல் அறை சென்றாள் சிவானி.
இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?
சப்பாத்தியும், உருளைகிழங்கு மசால் மா.
ஓ., செம அம்மும்மா. சீக்கிரம் எனக்கு பசி வந்திருச்சும்மா…
இதோ முடிஞ்சிடுச்சுமா, நீங்க போய் உக்காருங்கமா எடுத்துட்டு வந்து தரேன்.
அவள் சப்பாத்தியை ஒரு கட்டு கட்டிவிட்டு, நீங்க சாப்பிடுங்க அம்மும்மா, மதியத்துக்கு கொண்டைகடலை குழம்பு வச்சிடுங்கம்மா.. எதுனா ஹெல்ப் வேணுனா என்ன கூப்டுங்கம்மா.
அட நீங்க போங்க மா, பத்து வூட்டு வேலைய ஒத்த ஆளா பார்ப்பேன். ஒரு சமையல் – க்கு இப்புடி சொல்றீங்க.
அவள் சிரித்துவிட்டு தனதறைக்கு சென்றாள்.
சிறிது நேரம் பாட்டு கேட்டுவிட்டு தனது வானரப் படைகளுக்கு கான் கால் போட்டாள்.
ரஞ்சிதா ,” மச்சி என்னடி பண்றீங்க”.
சிவானி, ” பேசிட்டிருக்கே டி”.
ரஞ்சிதா” முடில இப்பதா இங்க ஒரு குரங்கு என்ன வச்சி செஞ்சிட்டு போச்சு அடுத்து நீயா!!!! “.
சிவானி, “ஹாஹாஹா…… என்னோட சிஷ்யன் அறிவா”.
ரஞ்சிதா, ” ஆமா பேர்ல மட்டும் இருந்து என்ன பண்றது”.
சிவானி, ” உன்ன டார்ச்சர் பண்ண சொல்லி பிளான் போட்டதே நான்தான் என்கிட்டவே”.
ரஞ்சிதா, ” கோம்ஸ் இவங்ககிட்ட இருந்து என்ன காப்பாத்த மாட்டியா”.
கோமதி, ” கொஞ்சம் வேலை இருக்குடி அப்புறம் கூப்புடுறே” என்று கட் பண்ணி விட்டாள்.
ரஞ்சிதா, ” ஏய் லூசு ஏன்டி அவளுக்கு கால் பண்ண…. அவ வீட்லதா அண்ணி-னு ஒரு வில்லி இருக்குல….. இந்நேரம் அவள போட்டு என்ன காய்ச்சு காய்ச்சுதோ!!!! போடி”.
சிவானி, ” ஏய் நானு ஒரு எக்ஸைட்மெண்ட்-ல கால் பண்ணிட்டே சாரிடி பாவம்ல கோம்ஸ்”.
ரஞ்சிதா, ” ஆமா இப்ப ஃபீல் பண்ணி என்ன செய்யறது”. ஆமா மேடம்க்கு அப்படி என்ன எக்ஸைட்மெண்ட்.
சிவானி, ” ஏ லூசு மறந்துட்டியா..
என் ஆள பார்க்கப் போறே…….
பார்த்து சேதி பேசப் போறே…..
ரஞ்சிதா, ” ஏய்…. போது டி முடியல. எப்புடி இருந்தாலு பல்பு தா நீ வாங்கப் போற… அதுக்கு இவ்ளோ சீனு ஆகாது மச்சி”.
சிவானி, ” ஏய் போடி பொறாமை புடிச்சவளே!!! அவனே என்கிட்ட ப்ரோபோஸ் பண்ணுவான் பாரு”.
ரஞ்சிதா, “கனவு கனவுனு ஒன்னு இருக்கு அத நீ கேள்வி பட்டுறிக்கியா மச்சி”.
சிவானி, ” உன் மூஞ்சு போன வச்சிட்டு போய் வேலைய பாருடி” என்று போனை கட் பண்ணிவிட்டாள்.
ரஞ்சி,” என்ன இவளே போன் பண்ணுனா நாம பேச பேச கட் பண்றா பாவிங்க. நம்மள டைம் பாஸ்கே யூஸ் பண்றாங்களே என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்”.
அங்கு அவனோ விடியலில் துயில் கொண்டதால், மதியம் இரண்டு மணி வாக்கில் தான் துயில் கலைந்தான். முழித்திருந்தும் படுத்தே கிடந்தான். அவனுடைய செல்பேசி ஓசையெழுப்ப ……. பெட்டிலிருந்து எழுந்தமர்ந்து செல்பேசியை எடுத்து பார்க்கையில்….. அந்நெளன் நம்பரிலிருந்து கால் வந்தது. அவன் யோசனையுடன் காதுக்கு கொடுக்க….
ஹலோ சார். நான் சிவானி.
ம்ம்…..
(இந்த கெத்துக்கு ஒன்னு குறைச்சல் இல்லடா….)
சார் விநாயகர் கோவில் வர சொல்லிருந்திங்க சார். உங்க வீட்டு பக்கத்துல இருக்க கோவில்லா சார். இல்ல எங்க வீட்டு பக்கத்துல ஒரு கோவில் இருக்கு சார் அங்கையா சார்.
என் வீடு உனக்கு தெரியுமா????
ம்ம் தெரியும் சார். ஃப்ரெண்ட் வீடு அங்க இருக்கு சார் வரப்ப அவதான் இது தான் கார்த்திக் சார் வீடுனு சொன்னா சார்.
ஓ….ஒகே எங்க வீடு பக்கத்துல இருக்க கோவிலுகே வந்துரு.
ஒகே சார்.
நான் இன்னு டூ ஹவர்ஸ்ல அங்க இருப்பே…
ம்ம்… ஒகே சார். நான் வந்துடுறே….
சரி என் நம்பர் உனக்கெப்புடி கிடைச்சது???
(கொக்கா மொக்க எத்தனை கேள்வி டா கேப்ப முடில)
நீங்கதா சார் குடுத்திங்க. செகெண்ட் இயர்-ல கேம்ப் போனப்ப சேஃப்டிக்கு வச்சிகோங்கனு போர்ட்-ல எழுதி போட்டிங்கள சார்.
அப்புடியா…..எனக்கு நியாபகமே இல்லையே….
பின்ன என்ன சார்.நான் ஸ்டாஃப் ரூம் வந்து ஸ்டாஃப் ரெஜிஸ்டர் – ல எடுத்த மாறி பேசுறிங்க சார்.
ஓ… சாரி சிவானி. சேஃப்டியா வந்துரு என்று போனை கட் பண்ணிவிட்டான்.
கட் பண்ணிய பிறகு தான் அவள் பேசியது. அவனுக்கு புரிந்தது. ஏய்….. ஃபிராடு என்று போனை பார்த்து சொல்லிவிட்டு, சிறு சிரிப்புடன் பாத்ரூம் சென்று அவனுடைய வேலைகளை முடித்துவிட்டு கிட்சன் வந்தான். சமைப்பதற்கு நேரம் போதாது என்று ஃப்ரிட்ஜில் உள்ள மாவினில் நான்கு தோசை வார்த்தெடுத்து பொடியை வைத்து சாப்பிட்டான்.
அங்கு அவளோ அவன் சாரி சொன்னதில் கடுப்பாகி அமர்ந்திருந்தாள். போடா மக்கு மடசாம்பிராணி…. என்று அவள் போனை முறைத்து பார்க்க……
இந்த சம்பவத்திற்கு சம்மந்த மானவனோ!!!! குளித்துவிட்டு டார்க் ப்ளூ ஜீன்ஸ், ப்ளாக் கலர் ஃபுல் ஹான்ட் ஷர்ட் அணிந்து இதில் கூலர்ஸ் வேறு (உன்ன பார்த்தா பொண்ணு பார்க்க போற மாறி இருக்கேடா ராசா)
கொண்டைகடலை கொழம்பை வெளுத்து கட்டி விட்டு……செம்ம அம்மும்மா உங்க ச்சனா கொழம்புக்கு எந்த ஒரு டிஸ் – உம் போட்டிபோட முடியாது.
அட போங்கம்மா…. எனக்கு தெரிஞ்சத வச்சா அத இப்புடி பாரட்டிக்கிட்டு இருக்கிங்க….
நோ அம்மும்மா. உங்க வொர்த் உங்களுக்கே தெரில…
ஓக்கே அம்மும்மா நான் ஈவ்னிங் அஞ்சு மணிக்கு வெளிய போறேன். அப்புடியே ரஞ்சி வீட்டுக்கு போய்ட்டு வரே அம்மும்மா. நீங்க சாப்டு தூங்குங்க.
ம்ம் சரிங்கம்மா.சீக்கிரம் வந்துருங்கம்மா.
டன் அம்மும்மா. என்று கட்டை விரலை உயர்த்தி காட்ட.
அம்மும்மா எனக்கு தாவணி கட்டி விடுறிங்களா. வாங்கி ரொம்ப நாள் ஆச்சு யூஸ் பண்ணவே இல்ல. ரஞ்சி இன்னைக்கு தாவணி கட்டுறேன் சொல்லிருக்கா அம்மும்மா.
அதுக்கென்ன மா. கேட்டு கிட்டு நிக்கிறீங்க கட்டுவிடுனா கட்டிவிட போறேன்.
சோ….. ஸ்வீட்……
வாங்கமா ரூம்ல ட்ரெஸ் எடுத்து வச்சுட்டே…..
இந்த தாவணியை அவள் அணிவது இதுதான் கடைசி என்று தெரிந்திருந்தாள்.அவள் அதை அணிந்திருக்க… மாட்டாளோ!!!!!
அடர் பச்சைநிற பாவாடை மற்றும் ப்ளவுஸ். ஒரு ஜான் அளவு தங்கநிற டிசைனர் பார்டர்.
சந்தன நிற தாவணி மிகவும் மெல்லிய துணியினால் இருந்தது. அந்த தாவணியில் சிவானி தேவதை போலிருந்தாள். அமுதாம்மா அவளுக்கு நெட்டி முறித்து ராஜாத்தி மாறி இருக்கமா என்று கூற, அதில் சிவானியின் முகம் குங்குமம் பூசிக் கொண்டது.
மணி மாலை ஐந்து அமுதாம்மாவிடம் விடைபெற்று காரில் ஏறி விநாயகர் கோவிலுக்கு பயணமானாள்.
கார்த்திக் பைக்கினை ஸ்டார்ட் செய்தான் சரியாக அதே அஞ்சு மணிக்கு.
இவள் கோவிலை அடைந்துவிட்டாள். அவன் வரவில்லை….. ஒவ்வொரு பிரகாரமாக சுற்றி சாமி கும்பிட்டுவிட்டு ஒரு மரத்தடியில் அவனுக்காக காத்திருக்கலானாள்.
கார்த்திக் பைக்கில் ஏறி வந்துக் கொண்டிருந்த பொழுது, சிக்னல் விழுந்தது.
பிச்சை எடுத்துக் கொண்டு ஒரு சிறுமி ஓரமாக நின்றுக் கொண்டிருந்தாள். மின்னல் வேகத்தில் ஓர் கார் வந்து அந்த சிறுமியை அடித்து சென்றுவிட்டது.
அதைப் பார்த்த கார்த்திக் பதறிக் கொண்டு பைக்கை கீழே போட்டுவிட்டு அந்த சிறுமியை நோக்கி சென்றான். இரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை கண்டு உள்ளம் துடித்து தான் போனான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு சிறுமியை கையில் ஏந்திக்கொண்டு ஆட்டோவை நிறுத்த போராடி கொண்டிருந்தான். நம்ம மக்களுக்குதான் ரிஸ்க் எடுக்க புடிக்காதே அதான் ஒருத்தனும் நிக்கல. நல்லவேளை அந்த வழியாக கார்த்திக்-கிற்கு தெரிந்த ஒரு ஆட்டோகாரன் வந்தான் அவனாவது நின்னானே!!! கார்த்திக்- கிற்கு இப்பொழுதுதான் உயிரே வந்தது. அவன் சிறுமியோடு ஆட்டோவில் ஏறும் போது நாற்பது வயது மதிக்கதக்க பெண்மணி தலையெல்லாம் கலைந்து கையில் அலுமினிய தட்டுடன் கதறிக் கொண்டு வர, அவள் கார்த்திக்கை பார்த்து, ஐயா எம்புள்ளக்கி என்னாச்சுயா… புள்ள பசிக்குது சொன்னுச்சுயா…. பன்னு வாங்கிட்டு வரதுகுள்ள புள்ளைய எவனோ அடிச்சிட்டு போய்டானே…….கடவுளே!!! எம்புள்ளய எனக்கு காப்பாத்தி குடுப்பா என்று அவர் கதறிக் கொண்டு புலம்ப, அவர்களின் நிலையை நினைத்து கார்த்திக்-கிற்கு அழக்கூட முடியவில்லை. அவரையும் ஆட்டோவில் ஏற்றி விட்டு குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
அங்கு அவளோ அவனுடைய நம்பருக்கு முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தாள்.
(மணி 7.30 எங்கடா போன எனக்கு பயமா இருக்குடா. சீக்கிரம் வந்துடுடா என்று கடவுளை பிரார்த்தித்து கொண்டிருந்தாள்.)
அரசு மருத்துவமனையில் அந்த சிறுமியை சேர்க்க, நிறைய ஃபார்மாலிடீஸ் அது எல்லாம் முடிந்து சிறுமி பிழைத்துவிடுவாள் என்று மருத்துவர் கூறிய பிறகே அவனுக்கு மூச்சு வந்தது. சிறுமியின் அன்னை கையில் ஒரு பத்தாயிரம் பணம் கொடுத்து பார்த்துக் கொள்ளும் படி கூறிவிட்டு ஏதாவது உதவி வேண்டும் என்றால் என் அலைபேசிக்கு கூப்பிட வேண்டும் என்று அவன் அலைபேசி எண்ணை எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு, நீங்க கவல படாம இருங்க.. பாப்பா பத்திரமா வந்துருவா…… பாப்பாவ டிஸ்ஜார்ஜ் பண்ணிட்டாங்கனா நீங்க திரும்ப பிச்சையெடுக்கலா போக வேணா சரிங்களா, ஆசிரமத்துல விஷியம் சொல்லிட்டே அவுங்க வந்து உங்கள கூட்டிட்டு போவாங்க சரிங்களா,
அந்த பெண்மணி இரண்டு கைகோர்த்து கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி கூற,
அவர் கையை கீழே இறக்கிவிட்டு தலையை இருபுறமும் அசைத்துவிட்டு சென்று விட்டான்.
இப்பொழுதுதான் அவனுக்கு சிவானி நியாபகமே வந்தது. அச்சச்சோ சிவானிட நம்ம விஷியம் சொல்லயே இருக்காளா?? போய்ட்டாளா???தெரிலயே?? போன் பண்ணி பார்போம் என்று அவன் அலைபேசியை எடுக்க பாக்கெட்டில் கையை விட, அப்பொழுதுதான் போன் பைக்கில் வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்று தெரிந்தது.
உடனே ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்திற்கு சென்றான். அங்கு அவனுடைய பைக் பத்திரமாக இருந்தது. அப்பாடா என்று சென்று செல்பேசியை எடுத்துப் பார்க்க அதில் 200க்கும் மேல் சிவானியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.
உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
முதல் ரிங்கிலே எடுத்து ஹலோ என்று கூட கூறாமல், சார் உங்களுக்கு எதுவும் இல்லையே என்று அவள் துடிப்புடன் கேட்க…
ஏய் சிவா கூல் நான் நல்லாதா இருக்கேன். ஏன் இவ்ளோ பதட்டம்.
உங்கள இவ்ளோ நேரம் காணாம பயந்துட்டேன் சார். போன் அடிச்சாலு எடுக்கல சார் அதா ரொம்ப பயமாயிடுச்சு சார்.
ஓகே சிவா ஐம் ஒகே. நீ எங்க இருக்க?
கோவில்ல சார்.
வாட் டைம் 8.30 ரொம்ப லேட் ஆயிடுச்சு. நீ வீட்டுக்கு கிளம்பு.
இல்ல சார். உங்கள ஒரு தடவை பார்த்துட்டு போயிட்ரே சார். நீங்க எங்க இருக்கிங்க சொல்லுங்க சார். நானே வரேன்.
நோ சிவானி. வெயிட் ஐல் பி தர் இன் ஃபைவ் மினிட்ஸ்.
ம்ம் சார்.
அவன் மின்னல் வேகத்தில் வண்டியில் சீறி பாய…. நான்கு நிமிடத்திலே கோவிலை அடைந்துவிட்டான்.
அவன் இறங்கி கோவிலின் நுழைவாயிலில் நுழைய, சிவானி கண்ணில் நீர் கோர்க்க ஓடி வந்து, அவனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று அவனை முழுதாக பார்க்க…..
அந்த அன்பில் அவன் நெகிழ்ந்துதான் போனான்.
ஏய் என்னாச்சு….
ஏன் சார் லேட்…..
இல்ல வர வழியில ஒரு ஆக்சிடெண்ட் என்று அவன் முதலில் இருந்து கூற…..
முழுதாக கேட்ட சிவானி. அந்த பாப்பாக்கு ஒன்னு இல்லல சார்.
அவன் இல்லை என்பது போல் தலையை ஆட்ட….
அவள் நிம்மதி பெருமூச்சு விட……
சரி சார் நீங்க கெளம்புங்க.. என்று அவள் கூறி விட்டு எழுந்து நடக்க….
அவள் கையினை பற்றி அமர வைத்தான். அவன் இயல்பாக தான் செய்தான். ஆனால், அவளுக்கு தான் கூச்சமாகி போனது.
இங்க பார் சிவானி…. உனக்கு வந்திருக்கிறது காதல் இல்ல இந்த வயசுல வர ஈர்ப்பு சரியா. நான் உன்ன விட பெரியவன் அத விட உனக்கு பாடம் சொல்லி குடுக்குற டீச்சர் என்ன நீ வேற மாறி பார்க்க கூடாது. நான் உனக்கு குரு அம்மா அப்பாக்கு அடுத்து நான் தான். என்கிட்ட நீ இப்புடி நடந்துக்க கூடாது சரியா. அதுவுமில்லாம இப்ப உன் இஷ்டபடியே ரெண்டு பேரும் சேர்ந்தா, படிக்க வந்த பொண்ணை பேசி என் வலையில சிக்க வச்ச மாறி தான ஊர்ல பேசுவாங்க சிவானி. நான் என்னோட வேலைய ரொம்ப நேசிக்கிறேன். இது மாறி இழுக்கு வந்தா என்னால சுத்தமா தாங்கிக்க முடியாது சிவானி. நான் உன்ன எந்த விதத்துல எப்படி ஈர்த்தேனு தெரில. ஆனா நா எதுவும் தெரிஞ்சு செய்யல இருந்தாலும் உன்னோட இந்த நிலைமைக்கு நான் காரணமாயிட்டேன் அதுக்கு சாரி .
அவள் அவனை கூர்மையுடன் பார்த்துக் கொண்டே இருக்க,
என்னாச்சு சிவானி.
பேசி முடிச்சிட்டிங்களா சார்.
ம்ம்….
கிளம்பலாமா சார்.
நீ என்ன நினைக்கிறேனு ஒன்னு சொல்லலயே.
நான்தான் நேத்தே சொல்லிட்டேனே சார்.
அவன் அவளை முறைக்க…
அப்ப நான் இவ்ளோ நேரம் பேசுனதுக்கு பதில்…..
உங்களுக்கு என்ன ஏஜ் சார்.
ட்வெண்டி ஃபைவ்….
எனக்கு ட்வெண்டி ஒன்…..அவ்ளோ வயசு வித்தியாசம் இல்ல சார். நெக்ஸ்ட் உங்க வேலைக்கு எந்த இழுக்கும் வராம நான் பாத்துப்பேன். ஏன்னா இது தான் லாஸ்ட் வருஷம் இந்த காலேஜ் – ல நான் இருக்க போறது இன்னு 10 மாசம் தான். அப்புறம் நானும் உங்களமாதிரி ப்ரொபசர் ஆனப்புறம் தான் நமக்கு மேரேஜ் நடக்கும். அப்ப எந்த ஃப்ராப்ளம் இருக்காது நினைக்கிறேன். என்ன சொன்னீங்க அம்மா அப்பாக்கு அடுத்து நீங்களா……. நீங்க தான் எனக்கு ஃபர்ஸ்ட் அப்புறம் தான் யாரா இருந்தாலும்,
அவள் கூறியதை கேட்டவன் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
அப்ப நான் சொல்ற எதையும் கேட்க கூடாது முடிவு பண்ணிதான் வந்துருக்க..
அவள் அமைதியாக அவனை பார்க்க…..
அந்த பார்வையில் என்ன கண்டானோ!! நீ கிளம்பு என்று கூறி விட்டு அவன் சென்றுவிட்டான்.
இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. நா சொன்னத ஒரு பொருட்டாவே எடுக்காம கிளம்ப சொல்றான். ச்ச…. எவ்ளோ கஷ்டபட்டு ஆர்கியூ பண்ணே. போடா உம்மனா மூஞ்சு.
அவளை போக சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கோவில் சந்தில் மறைந்து நின்று கொண்டான். அவள் பத்திரமாக கிளம்பி விட்டாள் என்பதை உறுதி படுத்திக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய போகையில், அவனுடைய அலைப்பேசி ஒலியெழுப்ப அதனை எடுத்து காதிற்கு வைத்தான். ஆசிரமத்தில் இருந்துதான் அழைத்திருந்தார்கள். அவர்கள் மருத்துவமனை சென்று சிறுமியையும் அவள் அன்னையையும் பார்த்துவிட்டு வருவதாகவும், அவர்களை இங்கு தங்க வைக்க ஏற்பாடு பண்ணிவிட்டதாகவும் கூறினர். இவன் அவர்களுக்கு நன்றி உரைத்துவிட்டு வண்டியை கிளப்பி சென்றான்.
சாலையை கடந்து இடதுபுறம் ஒரு சந்து இருந்தது. இது அவன் வீட்டிற்கு செல்லும் குறுக்குவழி என்றுமே இந்த பாதையில் அவன் செல்லமாட்டான். ஆனால் இன்று அந்த பாதையில் செல்ல வேண்டும் என்று ஏதோ உந்த வண்டியை அந்த வழியில் விட்டான். அவன் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது இரவு நேரம் என்பதால் நிசப்தமான பயணம்.
ஒரு காரை கடந்து செல்கையில் முனகல் சத்தம் கேட்க சிறிது தூரம் சென்றுவிட்டு வண்டியை நிறுத்தி அவன் திரும்பி பார்க்க, அந்த காரிலிருந்து ஒரு பெண்ணின் கை வெளியே நீட்ட அதை ஒரு ஆணின் கை தடுத்து உள்ளே இழுத்தது.
அதனை கண்ட கார்த்திக் பைக்கை நிறுத்தி விட்டு அந்த காரின் அருகில் சென்று பார்க்க…..
இருட்டாக இருந்தது தனது மொபைலின் டார்ச்சை ஆன் செய்தான். அவன் கண்ட காட்சியில் மிரண்டு போய்விட்டான். அவன் மூளை ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்ய……
அடுத்த நொடி காரின் கண்ணாடியை நொருக்கினான். உள்ளே சிவானி பாவாடை மற்றும் ப்ளவுஸ் மட்டும் இருக்க அவளுடைய தாவணியால் அவள் வாயினை கட்டி போட்டு ஒருவன் அவளை சூறையாட முயற்சிக்க….. அவள் தன்னை காப்பாத்திக் கொள்ள போராட….. இன்னொருவன் பக்கத்தில் இருந்த கம்பியால் அவள் தலையை பதம் பார்க்க……. அவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்கும் போதுதான் கார்த்திக் கண்ணாடியை நொருக்கினான். அவனை பார்த்த நொடியில் நிம்மதி பெருமூச்சுடன் அவன் தன்னை காப்பாற்றி விடுவான் என்று கண்ணை மூடினாள்.
காலை 10 மணி கார்த்திக் கஷ்டப்பட்டு கண்விழித்தான். அவன் அருகில் சிவானி தலையில் கட்டுடன் சூடாக காப்பி கப்புடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
அவன் தலையில் ஏற்ப்பட்ட வலியுடன் முகத்தை சுறுக்கி சிவானியை பார்த்து…. நான் எங்க இருக்கே?????
சார் பயப்படாதிங்க நீங்க சேஃப் – வா என் வீட்லதா இருக்கிங்க சார்.
உன் வீடா??? சிவானி. வீட்ல யாரும் இல்லை.
நான் இங்க தனியாதா இருக்கே சார். எங்க அம்மா அப்பா ஃபாரின்-ல இருக்காங்க.
இவ்ளோ பெரிய வீட்ல எப்புடி தனியா இருக்க….
இங்க அமுதாம்மா இருந்தாங்க சார். நேத்துதா எங்கயோ போய்ட்டாங்க போல…..
ஆமா என் தலைல எப்புடி அடிபட்டுச்சு சிவானி.
அவனுங்க தா உங்களையும் அந்த கம்பியால அடிச்சுட்டாங்க சார். எவ்ளோ இரத்தம் தெரியுமா???? நான் தான் உங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் கட்டு போட்டு இங்க கூட்டிட்டு வந்தேன் சார்.
ரொம்ப தேங்க்ஸ் சிவானி.
காப்பி குடிங்க சார்.
அவன் குடித்துக் கொண்டே அவளை பார்க்க அவள் அவனைதான் விழுங்குவதுபோல் பார்க்க…..
அவன் கப்பை கீழே வைத்துவிட்டு சரி சிவானி நான் கிளம்புறேன்.
வாட்…… சார் நீங்க இப்ப எங்கயும் போகமுடியாது.
ஏன்????
உங்கள டாக்டர் பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லிருகாங்க சார்.
நா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறேன் என்று அவன் எழ முயல…..
அவன் அருகில் வந்து ஏன் சார்??????இங்க ரெஸ்ட் எடுக்க மாட்டிங்களா….நானும் தனியா தா இருக்கே சார். எனக்கு யாருமே இல்ல என்று கண்ணில் நீர் கோர்க்க அவள் கூற……
உடனே கார்த்திக் அவள் கண்ணீரை துடைத்து ஏய் எதுக்கு இப்ப அழுகுற ….. நான் இங்கயே இருக்கே போதுமா…..
(அவனும் என்ன தான் செய்வான் தனி மரமாக இவ்வளவு நாள் இருந்தாயிற்று. தன்னை மட்டும் நேசிக்கும் ஒரு உயிர் தனக்கு கிடைத்திருக்க…. அதை விடுவதற்கு அவனுக்கும் மனது வரவில்லை)
அவன் அவ்வாறு கூற அவன் நெஞ்சிலே சாய்ந்து அவள் தூங்கிவிட்டாள். அவனும் அவளது அன்பில் நெகிழ்ந்து தலை கோதி அவனும் உறங்கிவிட்டான்.
பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க …. லேசாக கண்களை திறக்கையில்…. எதிரே சிவானி கருப்பு நிற புடவையில் தலை குளித்து கையில் உணவுடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
வலி இன்னும் இருக்கா… கார்த்திக் சார்.
அவன் ஆம் என்பதுபோல் தலையாட்ட அவள் அவன் அருகில் வந்து எங்க சார் வலிக்குது.
அவளை வயிற்றோடு அணைத்துக்கொண்டான்.
சார் என்ன பண்றிங்க…. என்று அவள் நெளிய…
சார்- ஆ லவ் பண்றவங்கள உங்க ஊர்ல சார்னு – தா கூப்புடுவிங்களா சிவா.
நீங்கதா என் லவ்-க்கு ஓகே வே சொல்லலியே சார்.
அவன் அவள் வயிற்றில் ஒரு கடி கடிக்க….
அம்மா….. என்று அவள் துள்ளிக் கொண்டு விலக பார்க்க….. அவன் உடும்பு புடியாய் அவளை புடித்திருந்தான்.
இனிமே சார் சொன்னா இப்படிதா பனிஸ்மெண்ட் கிடைக்கும் சிவா.
லவ் க்கு ஒகே சொல்லாம இப்புடி பண்ணா என்ன அர்த்தம்.
ஏய் லூசு. என் பொண்டாட்டி தவிர வேற யாரையும் என் நெஞ்சுல சாயிரதுக்கு இடம் தர மாட்டேன்.
அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்து அவள் அவன் முகத்தினை நிமிர்த்த….. அவன் நிமிர்ந்து அவளை பார்த்து சிரிப்புடன் கண்ணடிக்க….. அவள் மகிழ்ச்சியில் அவனை கட்டிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அவன் பசிக்குதுடி என்று அவள் காதில் கூற…
இவ்ளோ நேரமா இப்புடி நின்னுட்டிருந்தோம் என்று அவள் தலையில் தட்டிக் கொண்டு கீழிறங்கி சென்றாள்.
ஏய் சாப்பாடு டி என்று அவன் குரல் கொடுக்க….
அங்கதான் சார் இருக்கு. போட்டு சாப்பிடுங்க.
என்னது சார்- ஆ இரு வரேன்.
அவன் கூறியதை கேட்டு வெட்க சிரிப்புடன் அவள் சமையலறை நோக்கி சென்றாள்.
இவன் ஃபிரஸ் அப் ஆகி அவள் கொடுத்து விட்டு சென்ற ப்ரேக்ஃபாஸ்ட்-யை சாப்பிட்டு விட்டு, கீழே இறங்கி சென்றான்.
அவள் சமையலறையில் இருப்பதை பார்த்து விட்டு,
சிவானி குட்டி என்ன பண்றிங்க….
மட்டன் பிரியாணி செய்றேன் சா….. கார்த்திக்.
என்னது சார்- ஆ….
இல்லயே கார்த்திக் தான் சொன்னேன்.
நீ சா சென்னலடி….
அது சாரி சொல்ல வந்தேன்.
ஏய் ஃபிராடு.
அவள் அவனை செல்லமாக முறைக்க…..
ஓகே டா நான் வீட்டுக்கு போய் என் திங்க்ஸ் எடுத்துட்டு வந்துடறேன்டா.
அவள் முகம் இருளடைய கரண்டியை அப்படியே போட்டுவிட்டு கார்த்திக் அருகில் வந்து, நீ போகக்கூடாது நீ போக கூடாது என்று கட்டிக்கொண்டாள்.
ஏன் செல்லம்.
வேணா நீ போக வேணா…அவன் சட்டையை பிடித்துக்கொண்டு அவள் புலம்ப…..
ஏய் ஒகே ஒகே கூல் நான் போகலடா போதுமா…
ம்ம் என்று அவள் அவனை பிடித்துக் கொண்டாள்.
அவன் அவளை விலக்கி நான் எங்கயும் போகமாட்டேன். சரியா போய் சமைடா.
ம்ம் என்று கூறிக் கொண்டே அவள் சமையலை பார்க்க…..
அவன் ஹாலில் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து அவள் கைவண்ணத்தில் மட்டன் பிரியாணி, மட்டன் கைமா மற்றும் தயிர் பச்சடி. அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு அவனை சாப்பிட அழைத்தாள்.
அவன் வந்து அமர அவன் அருகில் நின்று அவனுக்கு பரிமாற….. அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
என்ன சாப்டுங்க….
அவன் ஆ-வென்று வாயை திறக்க அவள் சிறு சிரிப்புடன் அவனுக்கு ஊட்டி விட்டாள்.
இது எல்லாமே நீ செஞ்சியா. சூப்பரா இருக்குடி. நீ இவ்ளோ நல்லா சமைப்பனு நான் எதிர் பார்க்கல சிவா குட்டி.
ம்ம் உங்கள பார்த்து எப்ப விழுந்தனோ அப்ப இருந்து சமைக்க கத்துக்கிட்டேன் தெரியுமா??? எப்படி இருந்தாலும் நீங்கதா சமைச்சு சாப்புட்டு இருப்பீங்க. அதான் நான் வந்து உங்களுக்கு நல்லா சமைச்சுப் போடனும் நினைச்சேன். அது இன்னக்கி தான் நிறைவேறுச்சி என்று அவன் தலையை கோதி கொண்டே உணவு ஊட்ட அவளது அன்பில் அவனுக்கு கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. அவளை மடியில் அமர வைத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
இருவரும் காதல் கதைகள் பல பேசி கலைத்து, அவன் மடியில் அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவனுக்கு விழிப்பு தட்ட….. அவள் தலையை மடியில் இருந்து தலையணைக்கு மாற்றினான். அவள் நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்.
இது தான் சரியான நேரம் வீட்டுக்கு போய் என் திங்க்ஸ் எடுக்கனு. இவ முழிச்சுருந்தா விடமாட்டா……. என்று அவன் வீட்டை நோக்கி பயணமானான்.
வீட்டிற்கு சென்றாள். அது பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அச்ச்சோ சாவி எங்கப் போச்சு தெரிலயே…….
ம்ம் ஸ்பேர் கீ காலேஜ்-ல இருக்கு என்று அவனுக்குள்ளே கூறிக்கொண்டு காலேஜ் நோக்கி சென்றான்.
அங்கு சென்றால், ஒருவரும் இவனை கண்டுக்கொள்ளவில்லை.
என்னாச்சு இவுங்களுக்கு ….. ஒருவேளை நான் சிவானி கூட இருக்குறது இவுங்களுக்கு தெரிஞ்சிரிச்சா……
இவுங்களாம் கண்டுக்கலனா கூட பரவால என் சிவானி எனக்கு போதும் என் மேல எவ்ளோ அன்பு வச்சிருக்கா…..என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு செல்கையில்,
சிவானி தோழிகள் கோமதியும், ரஞ்சிதாவும் பேசுவதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான்.
ரஞ்சி, ” ஏன் கோம்ஸ் இன்னும் அழுதுகிட்டே இருக்க, அவதான் நாமளா வேணா கார்த்திக் சார் தான் வேணும் போய்ட்டாள”.
கோமதி, ” எப்புடிடி என்னால தாங்கிக்கவே முடிலடி. அவ கார்த்திக் சார் மேல இவ்ளோ அன்பா இருப்பானு தெரியாம போச்சே டி.
ரஞ்சி,” ஆமாடி கார்த்திக் சார் செத்துட்டார்னு இவளும் போலிஸ் முன்னாடி கத்தி எடுத்து குத்திக்கிட்டாலாம் டி. நியூஸ் – ல அத பார்க்குறப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா!!! “.
ரஞ்சிதா இப்படி சொன்னதை கேட்டுதான் கார்த்திக் ஸ்தம்பித்து நின்றான்.
உடனே அவளிடம் சென்று ரஞ்சிதா என்று அழைக்க, அவள் அவனை கண்டுக்கொள்ளவில்லை. அவளை அவன் தொட முயற்சிக்க அவனால் முடியவில்லை. அப்பொழுதுதான் கவனித்தான். அவனது உடலில் நுழைந்து சிலர் சென்று கொண்டிருந்தனர்.
நடப்பது எதுவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிவானி வீட்டை நோக்கி ஒருவித பதட்டத்துடன் பயத்துடனும் ஒடினான்.
அங்கு வாசலில் இவனது புகைப்படமும் சிவானியுடைய புகைப்படமும் போட்ட நியூஸ்பேப்பர் இவன் கண்ணில் பட, ஒரு வித நடுக்கத்துடன் அதனை எடுத்து பார்த்தான்.
அது இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த நியூஸ்பேப்பர். அதில் சிவானி அந்த கயவர்களிடம் சிக்கிய இடத்தினை சொல்லி அதில் தன் கல்லூரியில் படிக்கும் மாணவியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை விட்டார் ஃப்ரொபசர் கார்த்திக் (அவனுடைய காலேஜ் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது பிராக்கேட்டில்) தனக்காக உயிர்விட்ட ஃப்ரொபசர்-யை கண்டதும் பொது இடம் என்று பாராது போலீஸ் முன்னிலையில் கத்தியால் தன் வயிற்றில் குத்தி தன் உயிரையும் மாய்த்துக்கொண்டாள் மாணவி சிவானி.
அவன் நடுக்கத்தில் நியூஸ்பேப்பர் கீழே விழுந்தது.
உள்ளே அழுகுரல் கேட்க, குரல் வரும் திசையை நோக்கி சென்றான் கார்த்திக். அங்கே கோர உருவத்துடன் தலையெல்லாம் கலைந்து அவள் இருக்க, அவன் அவளை சென்று தொட, அவள் பதுமையாக மாறினாள். கார்த்திக் புரிந்துக்கொண்டான் அவன் தான் அவளுக்கு வேண்டும் என்பதை, அழுதுவடிந்த விழிகளுடன் அவள் அவனை பார்த்து என்ன விட்டுட்டு போய்டுவியா கார்த்திக் என்று கேட்க,
அவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன்டி. நீ மட்டும் தான்டி என்னோட உலகம். இது நம்ம வீடு. யாராலயும் நம்மள பிரிக்க முடியாது என்று அவன் கட்டிக்கொள்ள கண்ணீருடன் அவளும் அவனை கட்டிக் கொண்டாள்.
இவர்கள் வாழ்க்கையில் இனி யாரும் நுழைய முடியாது.
நீங்களும் இந்த வீட்டுக்குள்ள போய்டாதிங்க…