(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு பெரிய ஜோக்கைக் கேட்டதுபோல தியாகு விழுந்து விழுந்து சிரித்தான். பத்மினியின் முகஞ்சுருங்கிப் போனது, “நான் என்ன சொல்லிவிட்டேன் என்று சிரிக்கிறாய், நான் உன்னைக் காதலிப்பது கூட ஜோக்காகவா தெரிகிறது” சூடாகவே கேட்டாள்.
“எப்பா, திரும்பவும் சிரிக்க வைக்காதே, பத்மினி வயிறு வலிக்கிறது”. என்ற வாறு அளவிற்கதிகமாய் சிரித்தான். கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுச் சொன்னான், “ஒரு மந்திரியோட மகள் சாதாரண விவசாயியோட மகனைக் காதலிக்கிற என்று சொன்னால் சிரிப்பு வராமல் என்ன செய்யும். பத்மினி, உன்னை மாதிரி உள்ள பெண்களுக்கு இது ஒரு விளையாட்டு. தயது செய்து என்னைத் தஞ்சாவூர் பொம்மையாக்கி விடாதே” என்றவாறு காப்பியை எடுத்துக் குடித்தான்.
“என்னுடைய உண்மையான அன்பைக்கூட பிரியமாக உணரமுடியாத நீயெல்லாம் ஒரு ஆண்பிள்ளை என்று சொல்வதே குற்றம்” என்றவாறு எழுந்து கான்டீனை விட்டு வெளியேறினாள் பத்மினி.
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த தியாகு பெருமூச்சு விட்டபடி எழுந்தான். ‘பத்மினி எனக்கு மட்டும் காதல் இல்லை என்றா நினைத்தாய், வீண் ஆசைகளை விதைத்து விட்டு அறுவடை செய்யப் போகும் நாளில் தீ வைத்து எரித்து என்னையும் உன்னையும் அழித்து விடும் காதல் இது என்பது உன் பெண்மனதிற்கு புரியாது’ என்று எண்ணியவாறு கிளம்பினான்.
சாயங்காலம் அவன் பஸ் ஸ்டாண்டில் காவல் இருக்கும் போது அந்த மாருதி அவளைத் தாண்டி நின்றது. கதவைத் திறந்த பத்மினி “தியாகு வாங்களேன். வீட்டிலே கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்றாள்.
“எனக்கு பஸ் வருகிற நேரம் தான் பத்மினி, நீ போ. நான் பஸ்ஸிலே போய் விடுகிறேன்” என்றான் தியாகு பஸ் வருவதையே பார்த்துக்கொண்டு.
காரிலிருந்து இறங்கிய பத்மினி “தியாகு ஸார் இந்த -மந்திரி கார் ஒண்ணும் உங்களை காதலிக்காது! வீட்டிலே இறக்கி விட்டு விட்டு அது பாட்டிற்கு போய்விடும் வாங்கசார்” என்றாள்.
பஸ் ஸ்டாண்டில் நிற்கும் மற்றவர்களுக்கு ஏன் ‘வீண் வாயில் அவல் தரவேண்டும்’ என்று எண்ணியவாறு மாருதியில் ஏறினான்.
அவள் காரை ஓட்டிக் கொண்டே கேட்டாள் “ஏன் தியாகு நான் சொன்னதை நல்லா நெனைச்சுப் பாத்தியா?”
“உங்கிட்ட விளையாடுவதற்கு எனக்கு என்ன அவசியம்.”
“சரிப்பா, நான் திரும்பக் கேட்கிறேன், டூ யூ லவ் மீ?”
”இதையே கொஞ்சம் தமிழிலே கேளேன் பத்மினி” என்றவனைத் திரும்பிப் ர்த்தவள் அவன் முகத்தில் கிண்டல் தொனி தெரிந்ததைப் பற்றியும் கவலைபடாமல் “நீ என்னை காதலிக்கிறாயா? என்று கேட்டேன்” என்றாள்.
“கேள்வி ஒரு மாதிரியில்லே இருக்குடிம்மா. பத்மினி நான் உன்னைக் காதலிக்கிறேனா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு தான் அதற்குப் பிறகு என்னைக் காதலிக்க முயற்சிப்பாயா?”
“தியாகு என் மனதை கொஞ்சம் புரிஞ்சுக்கோட்பா. என்னவோ காதலை கத்தரிக்கா மாதிரி விலைக்குக் கிடைக்கிறதா நெனச்சுட்டு வீணாக கிண்டல் பண்ணாதே. நான் சொன்னதுக்கு மட்டும் பதில் சொல்லு, புனிதமான காதலை வீணாகக் கிண்டல் பண்ணிக் கொச்சைப்படுத்தாதே”
“சரியம்மா, நீ இவ்வளவு சொன்னபிறகு நான் ஒன்றுமே சொல்லவில்லை போதுமா?”
“நான் கேட்ட கேள்விக்குப் பதில்”
“…”
“தியாகு நான் உங்களிடம்தான் கேட்கிறேன்”
“அப்படியா தெருவிலே போகிற காற்றிடமல்லவா கேட்கிறாய் என்று நினைத்தேன். சரி.. சரி அப்படிப் பத்மினி அப்புறம் எரிஞ்சே போய்விடுவேன். நீ கேட்ட கேள்விக்குத்தானே பதில் வேண்டும். என் வீட்டிற்கு பக்கத்திலே என்னை இறக்கிவிட்டபிறகு என்கூட வீட்டிற்கு வந்தால் உனக்கு பதில் சொல்லி விடுவேன் என்று நினைக்கிறேன்”
“அப்பாடா. இப்பவாவது வீட்டிற்கு கூப்பிடணும் என்று தோணியதே” என்றாள்.
தியாகுவின் அம்மா காபி கொடுத்துவிட்டு போனதும் “என்ன தியாகு இப்படி என்னைத் தவிக்க வைக்கிறீர்கள்?” என்றாள் கைகளை உதறி அபிநயம்காட்டியபடி.
“முதலிலே காபியைக் குடி. அப்புறம்தான் சொல்வேன்”
“சரி” என்றவள் வேகமாக காபியை எடுத்துக் குடித்துவிட்டு திரும்பவும் கேட்டாள்,
“பத்மினி இப்போ நான் கேள்விகளுக்கு கொஞ்சம் அமைதியாக பதில் சொல்” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு பின் கட்டிற்கு வந்தான். தியாகுவின் அம்மா பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.
“உன்னாலே இப்படி உட்கார்ந்து பாத்திரம் பூச முடியுமா?”
“கண்டிப்பாக படிச்சிக்குவேன்”
“தொழுவத்திலே நிற்கிற பசுமாட்டிலே பரல் கறக்கத் தெரியுமா?'”
“அதையும் அம்மாவிடம் படித்துக் கொண்டால் போயிற்று”
படுக்கையறைக்குள் நுழைத்து “இவ்வளவு நாளும் நீ மெத்தை கட்டிலில் தூங்கித்தான் பழக்கம். இந்தக் கயிற்றுக் கட்டிலில் தூங்க முடியுமா?” என்றான்.
“கட்டிலிலே படுக்க முடியாது என்றால் தரையில் படுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் பிரமாதமா தியாகு”
“என் அம்மா மாதிரி நெல் வயலுக்குப் போய் களைபறிக்க முடியுமா”
”எதையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது தானே”
“ஏசி அறையில் தூங்கி எழுந்து, கைதட்டி அழைத்தால் ஓடி வரும் ஆட்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இந்தக் கொசுக்கடி மத்தியிலே நீயே எல்லா வேலையையும் செய்தி கொண்டு வாழவேண்டும் என்று உனக்கு என்ன தலைவிதி பத்மினி”
“ஏன் என்றால் எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது”
“அதுதான் இல்லை, காதல் பைத்தியம் பிடித்திருக்கிறது. நிலவைப் பிடித்து தா என்று சொல்கிற சின்னப் பிள்ளை மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாய். நான் கேட்கும் போதெல்லாம் கொஞ்சங்கூட யோசிக்காமல் என்னால் கற்றுக்கொள்ள முடியும் என்றாயே….?
ஒருமுறையாவது இப்போது உள்ள உன்னுடைய வாழ்க்கையை இந்த வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாயா”
“இதிலே என்ன ஒப்பிட்டுப் பார்க்க….”
“நான் பேசும்போது, வீணாக இடையில் பேசாதே பத்மினி, ஒப்பிட்டுப் பார்த்திருந்தாயானால் கண்டிப்பாக உன் மனம் சபலப்பட்டிருக்கும். மனித மனம் என்பது மிகவும் எளிதில் மாறக்கூடிய தம்மா”
இப்போது உன்னைப் பிடித்துப் போனதா நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் போதும் என்கிற ஒரு அக்கறையே. எதையும் செய்து விடுகிறேன் என்று சொன்னாயே,
நாளைக்கு உண்மையிலேயே இந்த வேலைகளையெல்லாம் செய்யும்போது ‘அய்யோ நம்முடைய அப்பா வீட்டில் எப்படி இருந்தோம். இப்படி நம் காதல் நம் கண்ணை மறைத்துவிட்டதே’ என்று தோன்றும்”.
“நீங்கள் இருக்குமிடம் சொர்க்கம் தியாகு. இதில் என்னால் அப்படி நினைக்க ஒரு கணமும் கூட நேரமிருக்காது”
“ஸி பத்மினி இந்த மாதிரி சினிமா டயலாக் கெல்லாம் எல்லோராலேயும் சொல்ல முடியும். ஆனால் நடைமுறை வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது. நான் கடைசியாக ஒன்று மட்டும் உன்னிடம் சொல்கிறேன்.
நானும்கூட உன்னை மானசீகமாக விரும்புகிறேன். ஆனா அது பவித்ரமானது. நான் அதை வளர்த்துக் கொண்டால் நீ நாளைக்கு எந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ஒதுங்கிக் கொள்கிறேன்.
பத்மினி, நான் ஒன்றிலே ஏழையாக பிறந்தது தப்பு. இல்லை நீ பணக்காரியாக இருந்தது தவறு. காதலுக்கு கண்ணில்லாமல் காதலிக்கப் பட்டு பணம் என்ற நீரோடையால் அடிக்கப்பட்டுச் சென்றவர்கள் பலருண்டு. அதில் நானும் மாட்டிக் கொண்டு உன்னையும் சிக்க வைக்க விரும்பவில்லை.
அதனாலே இந்த காதலை முளையிலே கிள்ளி எறிந்து விட்டு நல்லதொரு வாழ்க்கைக்கு முயற்சி செய் என்றான். அவள் ஏதோ பேச முற்பட்டபோது பேசவேண்டும் என்று இனி எப்போதும் முற்படாதே என அவளைக் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தான் தியாகு. பத்மினிக்கு ஏனோ இதயம் லேசாகிப் போனது போல புரிந்தது.