தத்தை நெஞ்சம்!!!

 

“அனி…அனி…!!!!! “

“கீக்கீ …..! என்ன வேணும் …..??? இப்போதானே உனக்கு ஆப்பிள் நறுக்கி கொடுத்தேன்…. இன்னும் பசிக்குதா டியர் …..??”

“சீஸ் … சீஸ் …!!!!” என்றது கீக்கீ..

“என்ன மாதிரி நீயும் சீஸ் பைத்தியம் ஆய்ட்டயா… ???”

அனிதா ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு சீஸ் கட்டியை எடுத்து துருவி கீக்கியின் கூண்டைத் திறந்தாள்…

அவள் கையில் லாவகமாய் ஏறி உட்கார்ந்து சீஸை சாப்பிடத் தொடங்கினாள் கீக்கீ…!!!

“தாங்யூ…. தாங்யூ …” என்றாள் கீக்கீ….

“கீக்கீ….கிரண் எங்க போனான்…. என்னாச்சு அவனுக்கு…..???? எனக்கு பயம்மா இருக்கு …. ஒரு வாரமாச்சு… ஃபோன் கூட எடுக்க மாட்டேங்கிறான்….ஐ ஹேட் ஹிம் ஐ ஹேட் ஹிம்….!!!!!!!

“ஐ ஹேட் ஹிம்….”என்றது கீக்கீ….”

“நீயுமா …? அழுகையிலும் அனிதாவுக்கு சிரிப்பு வந்தது…..

தன்னை விட்டு வேறு யாரோடாவது போய்விட்டிருப்பானோ …..????

கிரண் இவ்வளவு நாளும் தன்னை ஏமாற்றி வந்திருக்கிறானா ???

அனிதாவால் இன்னும் கிரணைப்பற்றி தப்பான முடிவுக்கு வர முடியவில்லை…

ஆனால் கடந்த ஆறுமாதமாகவே அவனிடம் சந்தேகம் வரத் தொடங்கி விட்டது…

கொஞ்ச நாளாகவே மறுபடியும் அவளிடம் ரொம்பவே ஆசையாய் இருக்கிறான்… திருமணத்துக்கு முன்னால் எப்படி இருந்தானோ அதைவிட …. என்ன காரணம் …???

அவளுக்கு பரிசுகள் வாங்கித்தருவதெல்லாம் நிறுத்தி அதிக நாளாகியிருந்தது..!!!!!

அவள் என்ன புது உடைகள் அணிந்தாலும் திரும்பி கூட பார்ப்பதில்லை…. வெளியே சாப்பிடப் போவதும் குறைந்து விட்டது…. காதல் காணாமல் போய்விட்டது ….!!

மறுபடி என்ன கரிசனம்….??? இது நிஜமா…. அல்லது நாடகமா ….??

***

“ஹை..ஹனி …. உன் கண்களை இறுக்கமாய் மூடிக்கொள்…!!!!”

“என்ன கிரண் …. என்ன ஆச்சு உனக்கு …???”

“கண்ணை மூடு சொல்றேன்….”

“ம்ம்…இப்போ திற…..’

கையில் ஒரு பவழ மோதிரம்….!!!

“பரவாயில்லையே… எனக்கு பவழம்தான் பிடிக்கும்னு ஞாபகம் இருக்கே …..!!!!

குரலில் ஒரு விரக்தி……

கிரணின் முகம் சுருங்கி விட்டது….

அவளை அப்படியே கட்டிப் பிடித்து முத்தமிட முயன்றவனைத் தள்ளி விட்டாள்…

“என்ன அனி… என்னை‌ அவ்வளவு பிடிக்காம போச்சா ….???”

அனிதா ஒன்றும் பேசவில்லை…

“சொல்லு அனி….”

“கிரண்…. இந்த கேள்விய நாந்தான் நியாயமா உங்கிட்ட கேக்கணும் ….”

***

அனிதா ஒரு Newyorker !!

அவளுடைய தாத்தா பாட்டி காலத்திலிருந்தே நியூயார்க்கில் வசிப்பவள்..

அனிதாவின் அப்பா ஜானி என்று அழைக்கப்படும் ஜானகிராமன் , கொலம்பியா யுனிவர்சிட்டியில் ஆன்ந்ரபாலஜி விரிவுரையாளர் .அம்மா சூசி ஒரு ஸ்பானிஷ் பெண்மணி..

அவள் ஜானியைத் திருமணம் செய்வதற்கு முன்னால் திருமணமாகி விவாகரத்து பெற்றவள்…

அவளுடைய பையன் அப்பாவுடன் போய் விட்டான் என்று மட்டுமே அனிதாவுக்கு தெரியும்.

தன்னுடைய சகோதரனைப் பார்க்க ரொம்ப ஆவலாயிருப்பதாய் அடிக்கடி அம்மாவிடம் சொல்வாள்…

ஜானியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக வந்தவர்கள்…

அனிதா அவர்களுடன் விடுமுறையில் நிறைய நேரம் செலவழித்திருக்கிறாள்.

இந்தியாவைப் பற்றி பாட்டி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறாள்…

இரண்டு முறை அவர்களுடன் கல்கத்தா போயிருக்கிறாள்.

அவளுக்கு கிரண் மேல் காதல் ஏற்பட்டதற்கு இது முதல் காரணம்…

இரண்டாவது காரணம் அவளுக்கு ஓவியத்தில் இருந்த ஈடுபாடு….

அனிதாவின் அம்மா சூசி சிறந்த ஓவியர்.. மூன்று வயதிலேயே அனிதா அம்மாவுடன் சேர்ந்து பிரஷ்ஷைப் பிடிக்கத் தொடங்கி விட்டாள்..

மாதம் ஒரு முறையாவது நியூயார்க்கில் உள்ள 5 வது அவென்யூவில் இருக்கும் Metropolitan museum of Arts க்கு அனிதாவைக் கூட்டிக்கொண்டு போய் விடுவாள் சூசி.

அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் , ஆளுயர ஓவியங்களும் அவளுக்கு பார்க்க பார்க்க அலுக்காது…

“Young mother sewing” என்ற ஓவியம் அவளை ரொம்பவே பாதித்தது…

ஒரு தாய் தைத்துக் கொண்டிருக்கிறாள்… அவள் செய்யும் வேலையிலேயே குறியாய் இருக்கிறாள்… .

அவளுடைய மகள் ..நாலைந்து வயது சிறுமி…. அம்மா மடியில் கையை ஊன்றிக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டு….

அம்மா அவளை ஒரு தொந்தரவாக நினைக்கவில்லை… சிறுமியின் கண்ணில் லேசான ஒரு வருத்தம் இருந்தாலும் அம்மாவுக்குத் தான் தொந்தரவு கொடுப்பதாய் எண்ணவில்லை…

தாய் … பெண்…பாசத்தை எவ்வளவு அழகாக …இயல்பாக சித்திரத்தில் கொண்டு வந்திருக்கிறாள் மேரி காஸட் என்னும் அமெரிக்க ஓவியர் என்று சூசி அனிதாவுக்கு சொல்லும் போது அனிதாவுக்கும் தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும்..

நியூயார்க் கலைக் கல்லூரியில் சேரத் தயாராக இருந்தாள் அனிதா…

திடீரென ஜானி பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார்.. சூசி முழு நேரமும் ஜானியுடன் இருக்க வேண்டிய கட்டாயம்…

அனிதா கல்லூரி கனவை மறந்தாள்..மெட்ரோபாலிட்டன் மியூசியம் அவளுக்கு அடைக்கலம் குடுத்தது..

அங்கு பகுதி நேர ஆராாய்ச்சிமாணவியாக சேர வாய்ப்புடைத்தது…

அவளுடைய வாழ்க்கையில் திருப்பு முனையும் அங்குதான் தொடங்கியது…

வாரம் ஒரு முறையாவது அந்த இளைஞன் அவள் கண்ணில் தவறுவதில்லை.. மோனேயின் ‘ வாட்டர் லில்லி ‘ ஓவியத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பான்.

“ஹாய் ! நான் அனிதா….. மோனேயின் ஓவியத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே…… அவ்வளவு பிடிக்குமா…..???

“ஆமாம்…. ரொம்பவே… என் பெயர் கிரண்… இந்தியாவிலிருந்து வருகிறேன் …….!!!

“கிரண்… அழகிய பெயர் … இங்க என்ன பண்றேன்னு தெரிஞ்சுக்கலாமா ….??? “

“ஓ..நோ பிராப்ளம் … நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்காக ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறேன் …‌!!

“நான் இந்த மியூசியத்தில் பகுதி நேர ஆராய்ச்சி மாணவி……”

“உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி ….!!!”

“ஏன்…. உனக்கும் ஓவியத்தில் அதிக ஆர்வமா…??”

“ஆமா..பைத்தியம்னு கூட சொல்லலாம்..”

“பின்ன ஏன் அதிலேயே தொடர்ந்து படிக்கலாமே ….”

“அப்பாவுக்கு நான் ஓவியக் கலையில் மேல் படிப்பு படிப்பதில் விருப்பமில்லை …”

“ஆனால் … நீதானே உன் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்…”

“நீ நினைக்கிற மாதிரி இந்தியாவில் அது அவ்வளவு சுலபமில்லை….

நிறைய வீடுகளில் பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்…”

“இன்னுமா …??? “

“ஏன் உனக்கு இந்தியாவைப் பற்றி தெரியுமா…?”

“என் தாத்தாவும் பாட்டியும் இந்தியர்கள் தான்…”

“ம்ம்ம் ஆச்சரியமாய் இருக்கிறதே..”

அனிதாவும் கிரணும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தார்கள்..

ப்ரூக்லினில் ஒரு சின்ன அபார்ட்மென்ட்டில் இருந்தான் கிரண்.அனிதா ஹோபோக்கனில் ஒரு தனி அபார்ட்மென்ட்டில் வசித்தாள்.

அவர்கள் சந்திப்பு அனேகமாய் மான்ஹாட்டனில் எதாவது ஒரு காஃபி ஹவுசிலோ அல்லது பாரிலோ இருக்கும்…

“அனிதா….நான் படிப்பை நிறுத்தலாம்னு இருக்கேன்….

என்னோடே மனசு முழுக்க மோனேயும் வான்கோவும் இருக்கும் போது என்னால படிப்புல எப்படி கவனம் செலுத்த முடியும் …???”

“உங்கப்பாவுக்கு நீ என்ன பதில் சொல்லுவ….நிறுத்திட்டு….?????”

“உன்ன மாதிரி…”

“அது அவ்வளவு சுலபமில்ல… உதவித்தொகை கிடைக்கிறது கஷ்ட்டம்….

“அனி….நீ என்ன காதலிக்கிறியா …??”

“ஆமாம்னுதான் தோணுது…!!”

ப்ரூக்லின் ஹைட்ஸ் ப்ரொமனேட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள் அனிதா … சரியாக ஆறுமணிக்கு சொன்னபடி வந்தான் கிரண்…

“என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்க …..??”

“பொறு….கையை நீட்டு….”

அவளுடைய அழகான விரலில் ஒரு வைர மோதிரத்தை அணிவித்தான்…

“அனி …I love you with my whole heart ….! Will you marry me…???”

அனிதா இதை எதிர்பார்க்கவேயில்லை..

“கிரண்… இது சர்ப்ரைஸ் இல்லை…. ஷாக் .. நாம இதைப் பத்தி இன்னும் பேச வேண்டியது இருக்கு…முதல்ல நீ எங்க வீட்டுக்கு வரணும்… அப்பா..அம்மா.. சம்மதம் வாங்கணும்… எனக்கும் இந்தியா வந்து உங்க பெற்றோரைப் பாக்கணும்…. ரொம்ப அவசரப் படாதே கிரண்…”

கிரண் இதை எதிர்பார்க்கவில்லை…

அவனுக்கு நிஜமாகவே இந்த திருமணம் அவசியம்…. அவசரம்..!!!

ஒரு வாரமாக கிரணும் அனிதாவும் சந்திக்கவில்லை…கிரணின் கோபம் அனிதாவுக்கு புரிந்தது…

“ஹலோ ! கிரண்…..கோபமா …??”

“பரவாயில்லை…. சொல்லு…”

“உனக்கொரு சர்ப்ரைஸ் !!!…”

ஒரு வேளை திருமணத்துக்கு சம்மதித்து விட்டாளோ ….??

“நாம எங்க வீட்டுக்கு போகப் போகிறோம்.. அப்பா.. அம்மா.. கிட்ட உன்னை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன்….”

இந்த முறை ஷாக் கிரணுக்கு….

“ம்ம்ம்…..எப்போ…..???”

“இந்த வாரமே…. சனிக்கிழமை.. Keep yourself free ….”

“என்ன பத்தி எல்லாம் சொல்லி விட்டியா …..”

“கொஞ்சம்…. கொஞ்சம்…”

எட்ஜ் வாட்டரில் அழகிய சின்ன வீடு….. சுசியின் சித்திரங்களும் அனிதாவின் ஓவியங்களும் மெட் மியூசியம் உள்ளே இருக்கும் உணர்வு….

ஜானியும் சூசியும் வாசலில் அவர்களை வரவேற்க தயாராய் நின்றிருந்தார்கள்…

“Welcome my son ….”

கிரண் நெகிழ்ந்து போனான்….

அருமையான உணவு…சூசியே பார்த்து பார்த்து செய்திருந்தாள்..

நிறையவே பேசினார்கள்…

கிரணை ஜானிக்கு பிடித்து விட்டதாய் தோன்றியது…சூசிக்கு லேசான ஒரு தயக்கம்…

அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்று அவன் பேச்சிலிருந்து புரிந்து கொண்டாள்…

இவனை எவ்வளவு தூரம் நம்பலாம்…..????

ஆனாலும் கிரணின் திறமை பற்றி அவளுக்கு சந்தேகமே ஏற்படவில்லை….

இருவரும் தீர்மானமாய் இருப்பதை புரிந்து கொண்டார்கள் சூசியும் ஜானியும்….

***

அனிதாவின் இருபத்தைந்தாவது பிறந்த நாள்…. திருமணத்திற்கு அப்புறம் வரும் முதல் பிறந்த நாள்..

அனிதாவுக்கு மறக்க முடியாத பிறந்த நாள்..

வீட்டிற்குள் நுழைந்த அனிதாவை வரவேற்றது ஒரு புதிய குரல்….

“ஹாப்பி பர்த்டே அனி…!!!”

யாரது …??

அழகான கூண்டு….. உள்ளே மஞ்சளும் பச்சையும் கலந்து , கழுத்தில் நீல ரிப்பன் கட்டின மாதிரி…. ஒரு பட்ஜி .. பேசும் கிளி….!!!

“Oh my my….!!!”

உள்ளேயிருந்து வந்த கிரண் அவளை அப்படியே கட்டிப் பிடித்து முத்தமிட்டான்..

“கிரண்…. love you dear.!!!!!!”

“Best birthday gift ever !!!!!”

கிரண் அவளுடைய அபார்ட்மென்ட்டுக்கு மாறி விட்டான்…

தன்னுடைய சேமிப்பு முழுவதையும் திரட்டி அவனுக்கு ஒரு ஸ்டூடியோ வைத்துக் கொடுத்தாள்…

கிரணுடைய ஓவியங்கள் அற்புதமாயிருந்தன… ஆனாலும் அவன் எதிர் பார்த்த அளவு அவை விலை போகவில்லை…

ஆனால் அனிதாவிடம் அவனுக்கிருந்த காதல் கூடிக் கொண்டே போனது…பகுதி நேரமாக ஒரு விளம்பர கம்பெனியில் ஆர்ட் டைரக்டராக ஆக வேலை பார்த்தான்..

அவளை பரிசுப் பொருட்களால் குளிப்பாட்டினான்…..

கொஞ்ச நாட்களாக அதிக நேரம் கழித்து வர ஆரம்பித்தான்…

“ஸ்வீட்டி .! இன்னிக்கு புது கிளையன்ட் மீட்டிங்…! Plum contract….!!”

“Overseas directors conference calls “

“Project launch ….”

இப்படி நாளைக்கு ஒரு காரணம்..

கீக்கீதான் அனிதாவுக்கு துணை.

“கீக்கி.. இன்னிக்கும் கிரணைப் பார் … எவ்வளவு நேரமாச்சு…”

“ஸாரி..ஸாரி..”என்றாள் கீக்கீ….

“கிரண் மாறிட்டானில்ல…நீ என்ன நினைக்கிற …??”

“யெஸ்..யெஸ்..!!” என்றது கீக்கீ..

“கீக்கீ…ஐ லவ் யூ”

“ஐ லவ் யூ.!!”

இப்போதெல்லாம் வரும்போதே நிறைய குடித்துவிட்டு வருகிறான்.. அவளுடன் வெளியே போவதெல்லாம் குறைந்து விட்டது…

“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு ஆனி…… குட் நைட்…!!!” …என்று சொல்லி விட்டு நேரே படுக்கப் போய் விடுகிறான்…

இரண்டு மூன்று தடவை இரவில் ஃபோன் வந்தபோதுதனியாகப் போய் பேசிவிட்டு வந்தான்..

அனிதாவுக்கு புரிந்து விட்டது… அவன் யார் பின்னாலோ சுற்றுகிறான்…

“கீக்கீ…. ஏதோ தப்பாத் தெரியுது….”என்றாள் அனிதா.

ஒரு நாள் கிரண் நேரம் கழித்து வந்த போது அனிதா தூங்கி இருந்தாள்.

“ஏதோ தப்பாத் தெரியுது” என்றது கீக்கீ…

கிரணுக்கு தூக்கி வாரிப் போட்டது.

நிச்சயம் அனிதாவுக்கு புரிந்து விட்டது..

இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அவளிடம் தனக்கு ஆக வேண்டிய காரியங்கள் நிறைய பாக்கி இருக்கிறது..

மறுபடியும் பழைய கிரணாக மாற தீர்மானம் செய்தான்..

“மாம் …உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்… “

நிறையவே பேசினாள்….

சூசிக்கு எல்லாமே புரிந்து விட்டது..

“அனி… நிச்சயம் அவன் உன்னை ஏமாத்துகிறான்… கூடிய சீக்கிரமே உன்னை விட்டு போய்விடுவான்…ஏற்கனவே நிறைய பணம் அவனுக்கு செலவழித்து விட்டாய்…. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு ….!”

கிரண் வீட்டைவிட்டு போய் ஒரு வாரமாகிறது. அனிதா அவனுடைய விளம்பர கம்பெனியைக் கூப்பிட்டாள்..

கிரண் அந்த வேலையை ரிசைன் பண்ணி ஒரு மாதம் ஆகிறது….! ! !!

அவனுடைய ஸ்டூடியோவுக்கு போய்ப் பார்த்தாள்…

நிறைய பெண்களின் ஓவியங்கள்…. அரைகுறை ஆடையுடன்.. சில நிர்வாணமாக….

அனிதாவுக்கு புரிந்து விட்டது…. அவன் நிச்சயம் ஏதோ ஒரு மாடலிங் அழகி வலையில் வீழ்ந்துவிட்டான்… யாரவள் ???

எப்படியும் கிரண் அவளைத் தேடி வருவான்… அவளிடம் விவாகரத்து பெறாமல் அவனால் யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது….

அனிதாவுக்கு ஒரு பிரேக் வேண்டியிருந்தது.. அவளுடைய தோழி சோஃபி வீட்டில் போய் ஒரு வாரம் தங்க தீர்மானித்தாள்…

திரும்பி வந்த போது அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது…

கிரணின் விவாகரத்து நோட்டீஸ்…. அவள் எதிர் பார்த்த ஒன்றுதான் என்றாலும் அவளிடம் அதுபற்றி பேசுவான் என்று எதிர் பார்த்தாள்..

எதையுமே சொல்லாமல் செய்வதுதானே கிரணின் குணம்…..

கீக்கீ ஒரு நாள் தீடீரென்று “லீனா…ஸ்வீட்டி லீனா….” என்றது…

அனிதா இதற்கு முன் அந்தப் பெயரைக் கேட்டதேயில்லை…..

அவள் இல்லாத போது கிரண் அவனுடைய கேர்ல் ஃபிரண்டை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான்…

எல்லாம் திட்டமிட்டு பண்ணித்தான் வீட்டைவிட்டு போயிருக்கிறான்…

வெஸ்ட் வில்லேஜில் இருந்த லீனாவின் வீட்டை சுலபமாய் கண்டுபிடித்து விட்டாள் அனிதா…. அங்குதான் கிரண் இருக்க வேண்டும்….

“அனி….நீ இங்கே…. எப்படி…???”

“அதை நான் கடைசில சொல்றேன்…நீ ஒரு கோழை……. நான் உங்கிட்ட எந்த காம்ப்ரொமைசுக்கும் வரல..என்னோட ஒரு மணிநேரம் நேரம் செலவழிக்க முடியமா…??”

அவர்கள் எப்போதும் சந்திக்கும் மெட்ரோபாலிட்டன் ஆர்ட் மியூசியம்.

மோனேயின் ‘ வாட்டர் லில்லி பாண்ட் ‘ ஓவியத்தின் முன்னால் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள்…

“அனி…. இப்ப எதுக்கு இங்க….???”

“கிரண்… இந்தியாவிலிருந்து கண்ணெல்லாம் ஓவியக் கனவுடன் நின்ற இளைஞன் நீதானா ??? உன்னை எனக்கு பிடித்ததே இரண்டு காரணத்துக்காக…உன்னோட ஓவியக் காதல்…அப்புறம் நீ ஒரு இந்தியன்..
எங்க தாத்தா பாட்டியோட இந்தியா போன போதே நான் தீர்மானம் பண்ணி விட்டேன்….ஒரு இந்தியன் தான் என்னோட கணவன் என்று…நீ அடிக்கடி சொல்வாயே …இந்தியால இதெல்லாம் சுலபமில்லைன்னு.. எனக்கு உங்க நாட்டு கலாச்சாரம், பண்பாடு பத்தி நல்லாவே தெரியும்… பார்க்ப்போனா உன்ன விட நல்லா… எங்க தாத்தா… பாட்டி … வாழ்ந்த வாழ்க்கையை அணு அணுவா ரசிச்சவ நான்… அவங்களோட விட்டுக் குடுத்து போற குணம், குழந்தைகளை வளர்த்த விதம் , அவங்க பொறுமை ….கடைசிவரைக்கும் ஒருத்தர் மேல் ஒருத்தர் வைத்திருந்த நம்பிக்கை….இதில ஒண்ணு கூட உங்கிட்ட இல்லை…தயவுசெய்து இந்திய பெருமையை எங்கிட்ட பேசாத…உன்னோட அப்பா .. அம்மா என்ன ஏத்துக்க மாட்டாங்கன்னு சொன்ன… ஏன்??. எங்கம்மா ஒரு விவாகரத்து ஆன பெண் .ஆனா எங்கம்மா உன்ன மாதிரி ஒரு சந்தர்ப்பவாதியோட வாழப் பிடிக்காம முறையா விவாகரத்து வாங்கிட்டு வந்தாங்க…!!! எங்கப்பா பரிதாபப்பட்டோ தியாக மனப்பாமையோடோ அவங்கள ஏத்துக்கல… உண்மையான காதல்…She was not riding on two horses at the same time like you !!

நீ என்ன ஏமாத்திட்டிருக்கன்னு நான் நினைக்கவேயில்லை….நீ ஒரு ஃப்ராட். உன்னை மாதிரி இளைஞர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பற்றி பேசவே தகுதி இல்லாதவர்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் வரும் காதல்தான் காலத்தால் அழியாது.. உன்னோடது marriage of convenience…. உன்னைவிட்டு பிரிந்து போவது எனக்கு மகிழ்ச்சியே..!!! நீ எனக்கு குடுத்த பரிசுகள் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டேன்…ஒண்ணைத் தவிர….கீக்கீ….அவள் உன்னைவிட எங்கிட்ட உண்மையா இருக்கா….நானில்லாத போது நீ லீனாவ வீட்டுக்குக் கூட்டி வந்ததே அவள் சொல்லித்தான் தெரியும்….நானும் உனக்கொரு பார்ட்டிங் கிஃப்ட் தரப்போறேன்…!!!”

மோனேயின் ஆளுயர ‘ Water Lilly Pond ‘ ஓவியம்….

“கிரண்….நீ என்னை மறந்தது பத்தி நான் கவலைப் படல…. ஆனால் உன் ஓவியக் கனவை மறக்காதே…நீ நிச்சயம் ஒரு நாள் பெரிய ஓவியனாய் வருவாய் …. எனக்கு நம்பிக்கை இருக்கிறது…கலைஞன் அழியலாம்…ஆனால் அவனுக்குள்ளே இருக்கும் கலை அழியக் கூடாது…. வாழ்த்துக்கள்…!!”

இப்போதெல்லாம் அனிதா ‘ Water Lilly Pond ‘ ஓவியத்தை ரசித்து பார்க்கும் ஒவ்வோரு இளைஞனிலும் கிரணைத்தான் பார்க்கிறாள்…

ஒரு துளி கண்ணீராவது அவள் கண்ணிலிருந்து வராமல் இருக்காது…!!! 

தொடர்புடைய சிறுகதைகள்
"தேவிகா…இப்போ எப்படி இருக்கீங்க… எங்கிட்ட எதையுமே மறைக்காம சொல்லுங்க…! நாம நிறையவே பேசியிருக்கோம்.அப்போ நீங்க இருந்த மனநிலை வேற… படபடன்னு மனசில இருந்தத ஒரு தயக்கமுமில்லாம கொட்டிட்டீங்க…இப்போ நீங்க நல்ல தெளிவாவே இருக்கீங்க..அதனால பேச தயக்கமா இருக்கும்…இப்போ எனக்கு ஒண்ணுதான் முக்கியமா ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். "ஒரு வாரமாக பசியே எடுக்கல.” இப்படி சொல்லிப் பாருங்கள்.. "ஸார்.இது கண்டிப்பா கேஸ் டிரபிள் ‘ தான்.நீங்க என்ன பண்றீங்க… வெறும் வயத்தில ஒரு கிளாஸ் தண்ணில.. இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அம்புஜம் பாட்டியின் தலைமாட்டில் உட்கார்ந்து விசிறிக்கொண்டிருந்தாள் வாசுகி! பாட்டியின் செல்ல பேத்தி ! உயிர் போய் நாலு மணி நேரம் ஆகிறது. முத்துச்சுடராய் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது! ராத்திரி மூன்று மணி இருக்கும். "வாசுகி … வாசுகி… என்ற குரல் கேட்டு ...
மேலும் கதையை படிக்க...
‘இன்னிக்கு சுவாமிகளின் தரிசனம் கிடைக்குமா ??' ஒரு மூதாட்டி பக்கத்தில் நிற்கும் ஒரு பெரியவரிடத்தில் மெதுவாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்… "நம்ப கைல எதுவுமேயில்லை பாட்டி… அதிர்ஷ்டம் இருந்தா இதோ இப்பவே கிடைக்கும்… இல்லையானால் தலைகீழா நின்னா கூட நாலு நாளானாலும் கிடைக்காது..” தமிழ் நாடு , கேரளா ...
மேலும் கதையை படிக்க...
"அலோ….. கோதண்டராமன் இருக்காரா ????” “இல்லியே…கல்யாணராமனும் பட்டாபிராமனும்தான் இருக்காங்க….” "ஸார்…வெளயாடாதீங்க… கல்யாணராமனெல்லாம் வேண்டாம்…. கோதண்டராமன் இருக்காரா …இல்லையா….?? அத மட்டும் சொல்லுங்க…” "ஸார்…கோவிச்சுக்காதீங்க…. என்ன நம்பர் வேணும் உங்களுக்கு…???” "சத்யன் பேக்கரிதானே…..” "ஆமா…இல்லையில்ல. மறுபடியும் தெளிவா சொல்லுங்க….” "சத்யன் பேக்கரியான்னு கேட்டேன்….” "ஸாரி… ஸார்…இது சத்யம் பேக்கரி ஸார்….” "அத முதல்ல சொல்ல வேண்டியதுதானே…!!!!” "ஸார்… ...
மேலும் கதையை படிக்க...
"டேய் ! கசுமாலம் ! எந்திரிடா ! மவனே இன்னிக்கு எங்கையாலதான் உனக்கு சாவு ! செய்யறதெல்லாம் அக்குறும்பு !" எட்டி ஒரு உதை விட்டான் முத்து ….. "ஐயோ …. அம்மா .. அம்மா …" ஐந்து வயது பாலாஜி மிரண்டு போய் எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
லாக்அப்பிலிருந்து ஒரு சின்ன சத்தம் கூட கேட்கவில்லை.. சாதாரணமாய் அதில் சந்தேகத்தின்பேரில் அடைக்கப்படுவர்கள் யாராயிருந்தாலும், "ஸார்.. ஸார்.. நான் ஒண்ணுமே பண்ணல..சத்தியமா நிரபராதி சார்.. தயவுசெய்து விட்டிடுங்க..சார்…ப்ளீஸ்.. சார்… உங்க கால்ல விழறேன் சார்…" என்று கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி வெறுப்பேத்தி விடுவார்கள்… ஆனால் இந்தப் ...
மேலும் கதையை படிக்க...
வீடு முழுவதும் கலகலப்பு, பட்டுப் புடவை, பளபளப்பு வேட்டிகள். முரமுரப்பு. பழத்தட்டுகள். இனிப்பு வகைகள். ஒரே சமயத்தில் பல குரல்கள், குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர். எல்லாவற்றையும் மீறி அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் சிணுங்கல். இன்றைக்கு என்ன விசேஷம்? சொல்விளங்கும் பெருமாள், மங்கையர்க்கரசி ...
மேலும் கதையை படிக்க...
“சவிதா..மேல என்ன சத்தம்..உலக்கையால் யாரோ இடிக்கிற மாதிரி..! இந்த காலத்தில யாராவது உலக்கையில அரிசி குத்துவாங்களா...? தலவலி மண்டைய பொளக்குது...” "அய்யோ..அப்பா..அப்பா..! மேல என்னோடே ஃப்ரண்ட் நிமிஷா வீடுன்னு தெரியாதா..? அவ ஆன்லைன்ல டான்ஸ் கத்துக்கறாப்பா.!" "ஒரு நாள் பூராவுமா...? காலைல ஆரம்பிச்சது....!” "அதுக்கப்புறம் அவ சொல்லித்தராளே..இப்ப அவளுக்கு ஏக ...
மேலும் கதையை படிக்க...
"டூ பாக்கட் பார்லிமென்ட் சிகரெட்..சாவேஜ் ஆஃப்டர் ஷேவ்..லின்ட் டார்க் சாக்லேட்…தாட்ஸ் ஆல்…" ஒருநிமிடம் திடுக்கிட்டேன்.. எனக்காக யாரோ ஒருத்தன் ஆர்டர் பண்ணுகிறானா…?? அதுவும் என் குரலில்…! எல்லாமே நான் உபயோகிக்கும் சாதனங்கள் .. இங்கே…?? யார்…?? என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்… டார்ஜீலிங்கில் மிகவும் பிரபலமான டிராகன் மார்க்கெட்டில் நானும் என் ...
மேலும் கதையை படிக்க...
மீண்டு(ம்) வருவாள்…!!!
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!
என்ன தவம் செய்தனை!
சர்வம் பிரம்ம மயம்!!!
அத மட்டும் ‘கேக்’காதீங்க…!!!
நாணயம்
அவன் தந்த தீர்ப்பு…!
சிவப்பு நாய்க்குட்டி..!!
நாலு சுவத்துக்குள்ளே நடக்குதய்யா நாடகம்..!
என்னைப்போல் ஒருவன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)