காலம் மாறும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 17,520 
 
 

தலையணையில் தன் முகம் புதைத்து உறக்கம் வராமல் தவித்தாள் திவ்யா. “ஆனந்த் என்ன சொல்வாரோ நாளைக்கு? என் காதலை ஏதுக்குவரோ?”, என்று. திவ்யா 23-வயது நிரம்பிய அழகும் இளமையும் கொண்டவள். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள்.

ஆனந்த் அவளுடன் அலுவலகத்தில் பணிபுரிபவன். நல்ல நட்புடன் ஆரமித்தது அவர்கள் சந்திப்பு . நாளடைவில் திவ்யாவிற்கு ஆனந்தின் மேல் அன்பு அதிகரித்தது. எப்பொழுதும் ஆனந்த் பற்றியே நினைவு அவளுக்கு. ஆனந்தின் மேல் இருந்த அன்பு காதலாக மாறிவிட்டது என்று புரிந்துகொண்டாள். அதை மறைக்காமல் ஆனந்த்திடம் தெரிவித்தாள்.

பொழுது விடிந்ததும் அவசரமாக வேலைக்கு கிளம்பினாள். ”சாப்பிட்டு போ திவ்யா !” என்றாள் திவ்யாவின் அம்மா. “டைம் இல்லமா பஸ் போய்டும் இன்னைக்கு மீட்டிங் இருக்கு” என்று அவசரமாக கிளம்பினாள். வழக்கமாக 10- மணிக்கு செல்லும் அவள் இன்று 7-மணிக்கே புறபட்டாள்.

அலுவலகம் சென்று கணினி முன்பு தன்னையே மறந்து உட்கார்திருந்தாள் ஆனந்தின் நினைவுகளில். ஆனந்த் எப்போ வருவார் என்று அவனது இருக்கையையே பார்த்திருந்தாள். ஆனந்த் சரியாக 9 மணிக்கு வந்துவிடுவான். ஆனந்த் வருவதை பார்த்த திவ்யா அவனிடம் சென்று “ஹாய் ஆனந்த் குட் மார்னிங்” என்றாள். அவளை பார்க்காமல் கணினியை பார்த்து “குட் மார்னிங்” என்றான்.
ஆனந்தின் இப்பார்வையை திவ்யா சற்றும் எதிர்பார்கவில்லை . இருந்தும் அவனிடம் புன்னகைத்துவிட்டு “நான் போய் மீடிங்க்கு டாகுமென்ட் ரெடி பண்றேன்” என்றாள். வேலை செய்ய முடியாமல் ஆனந்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

அலுவலக நேரம் முடிந்தது ஆனந்த் திவ்யாவிடம் வந்து ” ஐ வான்ட் டு டாக் டு யு திவ்யா” என்றான். வெட்கத்தோடு “ஓகே” என்றாள்.
இருவரும் ஒரு பூங்காவில் அமர்தனர்.சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ஆனந்த் “திவ்யா நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன் “எனக்கு லவ்லலாம் இன்ட்ரெஸ்ட் இல்லன்னு .உனக்கே தெரியும். எனக்கு எல்லாம் என் மாமா தான் .ஏற்கனவே என் குடும்பத்துல நிறைய பிரச்சனை. “சாரி திவ்யா உன் காதல ஏத்துகுற நிலமையில நான் இல்ல” என்று ஆனந்த் முடிக்கவும் திவ்யாவின் கண்ணில் கண்ணீர் வழிந்தது. அழுது கொண்டே “சாரி ஆனந்த்” என்று சொல்லி கிளம்பினாள்.

மறுநாள் வழக்கமாக ஆனந்த் அலுவலகம் வந்தான் நேரம் 10.30 திவ்யாவின் இருக்கையை பார்த்தான் அவள் இன்னும் அலுவலகத்திற்கு வரவில்லை. குழம்பியவனாக இருந்தவனிடம் குமார் ஆனந்த்தின் நண்பன் ” டேய் திவ்யா வேலையை ரிசைன் பண்ணிட்டாலாம் ” உனக்கு தெரியாதா என்றான்? இல்ல எப்போ டா? என்று பதறினான் ஆனந்த். மேனேஜர் தான் சொன்னாரு என்று குமார் சொல்லவும் ஆனந்த் மேனேஜர் அறைக்கு சென்று விவரத்தை கேட்டான்.தன் இருக்கைக்கு சென்று சிலையாய் அமர்தான் “சாரி திவ்யா” என்று மனதிற்குள் வருந்தினான் அவனையும் அறியாமல் கண்களின் ஓரத்தில் வழிந்தது கண்ணீர்.

திவ்யா இன்னும் எவ்ளோ நாள் தா இப்படி இருக்க போர? என் ஆபீஸ்ல வேகன்ட் இருக்கு நான் மேனேஜர் கிட்ட எல்லாத்தையும் பேசிட்டேன் நீ நாளைக்கு ஆபீஸ்க்கு வா என்று நிர்மலா கூறினாள்.
தான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் இனி ஆனந்த் நமக்கு இல்லை என்று நினைத்துகொண்டு ஆபீஸ்க்கு வரேன் நிர்மலா என்றாள்.

மறுநாள் நிர்மலாவின் அலுவலகம் சென்றாள். அன்றே அவளை வேலையில் சேர சொன்னார்கள். இனி இது தான் நம் உலகம் என்று எண்ணி வேலையில் அதிக கவனம் செலுத்தினாள்.

நாட்கள் ஓடின திவ்யாவின் திருமண பேச்சு ஆரமித்தது அவளது வீட்டில். திவ்யா “நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்க” என்றாள் அவள் அம்மா.தலையில் இடிவிழுந்தது போல இருந்தது திவ்யாவிற்கு. நல்ல பையன், நல்ல வேலை, நல்ல குடும்பம்,உனக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம் அதான் அப்பா வர சொல்லிட்டாங்க என்றாள் திவ்யாவின் அம்மா.

வாழ்கையே முடிந்து விடும் போல இருந்தது அவளுக்கு. பீரிவந்த அழுகையை அடக்கமுடியாமல் தன் அறைக்கு சென்று அழுதாள்.ஆனந்த் ஆனந்த் துடித்தன அவளின் உதடுகள் .

மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் சிலமணி நேர உபசரிபிர்க்கு பின்னர் திவ்யாவை அழைத்து வந்தனர் . திவ்யா மாபிள்ளையை பார்த்துகோமா என்றார் அவளின் தந்தை. முகத்தை பார்க்காமல் கீழே குனித்து “ஹாய் ஐயம் திவ்யா” என்றாள். “ஹாய் ஐயம் ஆனந்த்” என்றான்.ஆனந்த் என்ற பெயரை கேட்டதும் சட்டேன்று நிமிர்த்து முகத்தை பார்த்தாள் .ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு அவளுக்கு ஆம் அதே ஆனந்த் மாப்பிளையாக வந்திருந்தான்.

அவனை பார்த்ததும் சிலையாய் நின்றாள் திவ்யா. நான் பொண்ணுகிட்ட தனியா பேசனும் என்றான் ஆனந்த் .இருவரும் மொட்டை மாடியில் “ஆனந்த் நீங்க இங்க எப்படி?” என்று வார்த்தை வராமல் கேட்டாள். திவ்யா ” ஐ லவ் யு ஆனந்த்” அப்படின்னு நீ என்கிட்ட சொன்ன போதே “ஐ லவ் யு டூ திவ்யானு ” சொல்லணும் போல இருந்துச்சு பட் அந்த டைம்ல என்னால உன் காதல அக்செப்ட் பண்ண முடியல அப்போ நான் அக்செப்ட் பண்ணிட்டு பின்னாடி உன்ன கஷ்டபடுத்த விரும்புல திவ்யா என்றான். உன்னை பற்றி என் மாமா கிட்ட சொன்னனேன் திவ்யா உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறன்னு சொன்னனேன் .உனக்கு எது விருப்பமோ அதுதான் எங்களுக்கும் பிடிக்கும்னு சொன்னாங்க.. உங்க வீட்ல வந்து பேசினோம் எல்லார்க்கும் பிடிச்சு போய்டுச்சி என்று கண்சிமிட்டினான் அவளை பார்த்து.

ரோஜா மலர் ஒன்றை பறித்து “ஐ லவ் யு திவ்யா என்றான்”. அந்த மலரை வாங்கிகொண்டு “ஐ லவ் யு டூ ஆனந்த் ” என்று சொல்லி ஆனந்த கண்ணீருடன் ஆனந்தை அணைத்துக்கொண்டாள்.

காலம் மாறின காதலும் கைக்கூடியது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *