கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 7,757 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

“ஆக, எல்லாப் பகுதிப் பிரச்சினைகளையும் விரிவாக ஆராய்ந்து, தீர்வுகளும் கண்டுவிட்டதால், இந்த வார கூட்டம், இத்துடன் முடிவடைகிறது. எல்லோரும் கிளம்பலாம்” என்று மோகனசுந்தரம் கூறியதும், அப்பாடா என்று இருந்தது, சாருமதிக்கு. 

அவள் அஞ்சியபடி எம்டியிடம் மாட்டிக் கொள்ளவில்லை. கடவுள் அருளால் தொல்லையின்றி தப்பிவிட்டாள். ஆனாலும் இவனிடமெல்லாம் வேலை பார்க்கும்படியான தலைவிதி, அவளுக்கு நேர்ந்திருப்பது, எவ்வளவு அநியாயம்! அப்போது, அவள் வேலையில் சேர்ந்து ஒருவாரம் ஆகவில்லை. அவள் வேலை செய்யும் மூன்றாவது தளத்துக்குச் செல்வதற்காக, முந்தைய ஐந்து நாட்களைப் போல, அன்றும் லிஃப்டில் ஏறினாள், அவ்வளவே. 

கூட நின்றவர்கள் ஏன் ஏறவில்லை என்று யோசனையோடு பார்த்தால், அதில் ஏற்கனவே ஏறியிருந்தவன் முதலாளி.

இவனைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் ‘விஃபடில் ஏறவில்லையோ? அப்படி ஓர் எழுதாத சட்டம் உண்டு என்று அவளுக்குத் தெரியாதே என்று சாருமதி யோசிக்கும்போதே “அழகாய் இருக்கிறாய், இன்றைய இரவை என்னோடு சுழிக்கிறாயா?” என்று முதலாளி கேட்டால், தலைவிதியைத்தானே, அவன் நொந்தாக வேண்டும்? 

அவன்தான், மற்றவர்கள் ‘லிஃபடில்’ ஏறாமல் எப்படியோ தடுத்திருப்பான் போல! கண்ணராவி! 

அன்று, எப்படி நடுதடுங்கிப் போய்விட்டாள்! 

போடா, நீயும் உன் வேலையும் என்று ராஜினாமாக் கடிதத்தை அவன் முகத்தில் வீசி எறிந்துவிட்டு வெளியேற முடியாத நிலையில் அவள் இருந்தது, இன்னமும் அப்படியே இருப்பது, அதை விடவும் பெரிய அனியாயமே! 

அன்று நடந்த அந்தச் சம்பவத்தால் அல்லவோ, முழுதாக ஆறு மாதங்கள் ஆன பிறகும், இன்று முழுவதும், சாருமதி இப்படிக் கலங்கிக் கொண்டே இருக்கும்படி, நேர்ந்திருக்கிறது! 

அழகாக இருக்கிறாள், உண்மைதான். ஆனால், அவளை விடவும் அழகாக பேரழகிகளாகவே இன்னும் எத்தனையோ பெண்கள் இல்லையா? அதிலும், இன்றைய நிலையில், அழகைக் காட்டிக்கொள்ள தெரியாத பெண்கள்தான் உண்டே தவிர, அழகற்ற பெண்கள் கிடையவே கிடையாது என்கிற கருத்தில், அவளுக்கும் உடன்பாடு உண்டு.

அப்படியிருக்க, அவளுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? 

அதிலும் எத்தனையோ மனவேதனை, கலக்கங்கள் எல்லாம் அனுபவித்து, காலம என்கிற மருந்தும், பெரும் முயற்சியுமாக அதையெல்லாம் தாண்டி வந்து, நல்ல வேலை, வருமானம், நிம்மதி என்று சற்றே அமைதி அடைந்திருக்கும் அந்தச் சமயத்தில், அந்தக் கேள்வி ரொம்பவே அனியாயமாக, அவளுக்குத் தோன்றியது. 

அதிர்ந்து போய் “சா…ர்… நான்… நான்” என்று முதலில் தடுமாறிய சாருமதிக்கு, முதலாளியின் முகத்தில் அமர்த்தலான சிரிப்பைக் காணவும், ஒரு திடம் வந்தது. 

கை நீட்டி, அவனிடம் சம்பளவம் வாங்குகிற பெண். எங்கே மறுக்கப் போகிறாள் என்கிற திமிர்! வாங்குகிற சம்பளம், அவளது உழைப்புக்குத்தான் என்பது கூடத் தெரியாத கர்வம்! 

நிமிர்ந்து நின்று “என்னைத் தப்பாக நினைத்து விட்டீர்கள், சார். நான் அந்த மாதிரிப் பெண் அல்ல. எனவே, இந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்!” என்றாள் அவள் அழுத்தமான குரலில்.

“விட்டு விடுவதா?” என்று, அவளை ஏற, இறங்கப் பார்த்தான் அவன்.

உடல் கூசிக் குறுகுறுத்தாலும், திடத்தை வருவித்துக் கொண்டு, அதே நிமிர்வுடன், அப்படியே நின்றாள் சாருமதி.

பார்த்து முடித்துவிட்டு, “அது. ரொம்பக் கஷ்டம். எனவே, ஒரு சரியான சந்தர்ப்பம் வருவதற்காகக் காத்திருக்கிறேன்” என்றான் அவன். 

“அப்படி ஒரு சந்தர்ப்பம் வரவே வராது” என்ற அவளது பதிலுக்கு, லேசாகத் தோளைக் குலுக்கிவிட்டு, லிஃப்ட் கதவைத் திறக்கும் பட்டனை அழுத்தி, கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் மோகனசுந்தரம்.

அப்படியானால், எப்போதோ கதவை மூடி வைக்கும் பட்டனை அழுத்தியிருக்கிறான். மற்றபடி தான், நிற்க வேண்டிய தளம் வந்ததும் லிஃப்ட் கதவு தானாகத் திறக்குமே.

எம்டியின் பின்னே லிஃப்டிலிருந்து வெளியேறியபோது, ஆங்காங்கே கண்ணில் பட்ட ஓரிருவரின் ஒரு மாதிரியான பார்வை உறுத்த, அந்த வேலைக்கு ஏற்பாடு செய்த முத்துக்கிருஷ்ணனிடம் போய் நின்றாள் சாருமதி.

சங்கிலித் தொடர் போல, நகரத்தில் ஒன்பது கிளைகள் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட் ‘உங்களுக்காக! ஒவ்வொன்றிலும் ஆறு தளங்கள், ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு வகையான பொருட்கள்! 

‘அங்கே இல்லாதது இல்லை’ என்பது போல, விளம்பரம் கூட வந்தது. அது மெய்யே என்கிற அளவுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய அனைத்தையும் விற்பனை செய்யும் பல்பொருள் அங்காடி, அது. அது கொட்டித் தந்த வருமானத்தை முழுதாகத் தானே சுருட்டிக் கொள்ளாமல் பணி புரிகிறவர்கள் திருப்தியோடு பணியாற்றும் விதமாக, அவர்களுக்கும் நல்ல ஊதியமே அளிக்கப்பட்டு வந்தது, எனவே, அங்கே வேலைக்குப் போட்டி அதிகம்.

அதில் சாருமதிக்கு வேலை கிடைத்தது என்பது, பெரிய விஷயம் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், வெளிப் பார்வைக்கு உயர்வாகத் தோன்றிய போதும், அத்திப் பழத்தைப் பிட்டு பார்த்தது போல, உள்ளிருக்கும் பெரிய சொத்தை, அன்றுதானே, அவளுக்குத் தெரிய வந்திருக்கிறது! 

அவளுடைய தந்தைக்கு நண்பர் கூட்டம் பெரிது என்றாலும். நெருக்கமான நண்பர் முத்துக்கிருஷ்ணன்தான். 

ஓர் விபத்தில், சற்றும் எதிர்பாராத விதமாகப் பெற்றோர் இருவரும் மறைத்துவிட மலங்க விழித்துக் கொண்டு நின்ற பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ததும், அவரேதான். 

பெண்கள் வயது வந்தவர்கள் என்பதாலோ, என்னவோ மற்றவர்கள் எல்லோரும், கல் விழுந்த காக்கைக் கூட்டம்தான். 

“இந்தக் கூட்டத்துக்கு செலவு செய்வது வீண். செய்யாதே என்றால், சிவா கேட்கவே இல்லை. இப்போது பார், ஒரு வித சேமிப்பும் இல்லாமல் நீங்கள் தவிக்கும்படி ஆகிவிட்டதே!” என்று வருந்தியவர் முத்துக்கிருஷ்ணன். அத்தோடு நில்லாமல், நண்பனுக்கு,எங்கெங்லிருந்து என்னென்ன பணம் வரக்கூடும் என்று தேடிப் பிடித்து, அவை அனைத்தையும் வசூல் செய்து சேர்த்தார். 

பெரிதாக ஒன்றும் சேர்ந்து விடவில்லை என்றாலும், பெண்கள் இருவரும் படிப்பை முடிக்கவும், தொடர்ந்து ஏதோ ஒரு வேலை செய்வதற்கான பயிற்சி பெறவும், அவ்வளவு காலமும் அவர்களது செலவுக்கும் சேர்த்து அந்தப் பணம் போதுமானதாக இருந்தது. 

பெரியவன் சாருமதி புத்திசாலி என்பதோடு, படிப்பில் ஈடுபாடும் இருந்ததால், கல்லூரிப் படிப்பை முடித்ததோடு, அலுவலக நிர்வாகம் பற்றிய பயிற்சியும் எடுத்து, அதில் சிறந்த முறையில் வெற்றியும் பெற்றாள். 

அவளது தகுதியைக் காட்டி, அவரும், தான் பணி புரியும் ‘உங்களுக்காக’ சூப்பர் மார்க்கெட்டிலேயே, அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். 

எனவேதான், இந்தப் பிரச்சினை வந்ததும், முதலாளிக்கு எதிராக அவர் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், “அங்கிள்… ” என்று அவள் முத்துக்கிருஷ்ணனிடம் போய் நின்றாள். 

ஆனால், பெரியவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “சின்னவர் குணம், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் ஒரு மாதிரிதான் என்றாலும், சாரும்மா. நிறையப் பெண்கள், தானாகப் போய் யாரையும் எந்த வகையிலும் விழுகிறவர்கள்தான். அவர், கட்டாயப்படுத்தியதாகவோ, விரட்டித் திரிந்ததாகவோ, கேள்வியில்லை. எனவே, நீ ஒதுங்கிப் போனால், அதுவே போதும். ஆனால் அவசரப்பட்டு வேலையை விட்டுவிடாதே. இது போல நல்ல சம்பளத்தோடு, வேறு வேலை கிடைப்பது பெரும் கஷ்டம், அப்படியே ஒரு வேலை கிடைத்து வெளியே போனாலும் போகிற இடத்திலும் பிரச்சினைகளே வராது என்றும்தான், நமக்கு என்ன நிச்சயம்? எதற்கும் உன்னை என் பிரிவிலேயே, என் செயலாளராகப் பணியில் வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறேன். அதிலேயே. எம்டி புரிந்து கொள்வார்” என்றார் அவர். 

அவர் சொன்னதும் சரியே.

முத்துக் கிருஷ்ணன் சொன்னது போல, எம்டி ஓர் எல்லையில் இருந்தால், தான் மறு எல்லையில் இருக்கும் விதமாகச் சாருமதி கவனத்துடன் நடத்து கொண்டாள்.

அதிலேயே அவளது தன்மை புரிந்து விட்டதோ. என்னவோ, அன்றைய முதல் அதிர்ச்சிக்குப் பிறகு, இந்த ஆறு மாதங்களாகச் சாருமதிக்கு எந்தவிதமான பிரச்சினையும் வரவில்லை. 

எம்டியிடமிருந்து மட்டுமல்ல. 

இந்த விஷயம் எப்படியோ கசிந்து பரவியதாலோ, அல்லது மூத்த அலுவலரான முத்துக்கிருஷ்ணனின் பாதுகாப்பு காரணமாகவோ. பொதுவாக இது போன்ற எல்லாப் பெரிய நிறுவனங்களிலும் சில்லுண்டித்தனம் செய்வதற்கென்றே வேலைக்கு வரும் ஒரு சில புல்லுருவிகள் கூட, அவள் பக்கம் வராமல் ஒதுங்கியே போனார்கள். 

அவளும் பெருமளவு நிம்மதியாகவே வேலையைப் பார்க்கலானாள்.

அந்த நிம்மதிக்கு முதல் சோதனை, இன்றுதான் நேர்ந்திருந்தது. நேர்ந்தது என்றுகூடச் சொல்ல முடியாது. நேர்ந்துவிடுமோ என்ற அச்சம்தான் அதிகம் இருந்தது!

அதற்கு அவசியம் இல்லை என்று, ஒரு வழியாக இப்போது நேர்ந்தாலும், இந்தக் கூட்டத்திற்கு அவள்தான் செல்ல வேண்டும் என்று முத்துக்கிருஷ்ணன் அங்கிள் சொன்னதிலிருந்து, அவள் உள்ளுர நடுங்கிக் கொண்டல்லவா, இருந்தாள்! 

ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை, மதிய உணவு முடிந்ததும், அனைத்துத் தளங்களுடைய நிர்வாகிகளின் கூட்டம், ஒன்று நடக்கும். எம்டியின் தலைமையில், பொது நிர்வாகி, கூட இருப்பார். சில தருணங்களில், எல்லாக் கிளைகளுடைய பொது நிர்வாகிகளும்கூட, அந்தக் கூட்டத்துக்கு வருவார்கள். 

ஒவ்வொரு தளத்திலும் நடக்கும் விற்பனையை மேம்படுத்துவதுதான், கூட்டத்தின் முக்கிய நோக்கம். அந்தந்த ‘கால தேச வர்த்தமானங்க’ளுக்கு ஏற்ப, புதுப் புது திட்டங்கள், உத்திகளைப் பயன்படுத்துவது பற்றிக் கலந்து பேசுவார்கள். மற்ற பிரிச்சினைகள் ஏதாவது இருந்தால், அதையும் அலசி ஆராய்ந்து, தீர்வு காண்பார்கள். 

ஊக்கப் பரிசுகள், தள்ளுபடி விற்பனைகள், பாதுகாப்பு, திருட்டு என்று தொழில் பற்றி, அங்கே பேசப்படாத விஷயமே கிடையாது எனலாம். 

டீ அல்லது காஃபி பிஸ்கட்டுடன் கூட்டம் நடந்து முடியும்.

வழக்கமாக, தளங்களின் தலைமை நிர்வாகிதான் இந்தக் கூட்டத்தில் பங்கெடுப்பது, அவருடைய செயலாளர், இன்னும் தேவையென்றால், குறிப்பெடுப்பதற்காகக் கூட ஒருவரும் செல்வதுண்டு

ஆனால், எந்தக் காரணம் கொண்டும், சாருமதி, இந்தக் கூட்டங்களுக்குச் சென்றதே கிடையாது. அவள்தான் மோகனசுந்தரம் இருக்கும் இடத்துக்கு, நேர் எதிர் எல்லையில் இருப்பது வழக்கமாயிற்றே! அவன் தலைமை தாங்கும் கூட்டத்துக்கு, அவள் ஏன் செல்லப் போகிறாள்?

அவர் சொன்ன ஆலோசனைதானே? எனவே, முத்துக்கிருஷ்ணனும், இந்தக் கூட்டங்களுக்குச் சாருவை அழைப்பது கிடையாது. அவள் குறித்துக் கொடுப்பதை வைத்துக்கொண்டு, அவரே பார்த்துக் கொள்வார்.

அந்தத் தளத்தில், முத்துக்கிருஷ்ணனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவள் சாருமதி என்பது, மோகனசுந்தரத்துக்குத் தெரியாமல் இராது. கூட்டிப் பெருக்கும் துப்புரவுத் தொழிலாளர் வரை. பெயர் நினைவு வைத்திருப்பவன் அவன். அவளை மறந்திருப்பான் என்று சொல்ல வழியில்லை. 

ஆனால், முதலில் முத்துக்கிருஷ்ணன் சொன்னது போலவே, அவளது ஒதுக்கத்தை ஏற்று, முதலாளியும் ஒதுங்கிக் கொண்டான் என்பது, சாருவின் இதமான நம்பிக்கை.! 

இப்படி இருக்கையில், உடல் நலம் கெட்ட தாயாரைப் பார்க்கப் போவதாக சொல்லி, முத்துக்கிருஷ்ணன் ஒருமுறை வெளியூர் போனார். வெள்ளிக்கிழமைக் கூட்டத்துக்கு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுத்தான், அவர் சென்றார்! 

ஆனால், வெள்ளியன்றும் அவரது இருக்கை தொடர்ந்து காலியாகவே இருக்கவும், சாருமதிக்குப் பகீரென்றது. 

அவர் வரவில்லை என்றால், அவரது இடத்தில் அவளல்லவா, கூட்டத்துக்குச் செல்ல நேரும்! அந்த எம்டி இருக்குமிடம் தேடிப்போய், அவன் கண்களில் பட்டு, மறுபடியும் ஏதாவது பூதம் கிளம்பிவிடக் கூடாதே! 

முத்துக்கிருஷ்ணனுக்கு டெலிஃபோன் பண்ணி, அவரது வரவு பற்றிக் கேட்கலாமா என்று சாருமதி யோசிக்கும்போது, அவரே, அவளை ஃபோனில் அழைத்துப் பேசினார். 

தாயின் உடல்நிலை காரணமாக, வார இறுதி வரை, அன்னையுடனேயே இருந்துவிட்டு, திங்களன்று வேலைக்கு வரப் போவதாகவும், அதனால், அன்றைய கலந்துரையாடல் கூட்டத்துக்கு அவருக்குப் பதிலாக, அவருடைய செயலாளரான சாருமதி செல்ல வேண்டும் என்றார், அவர். 

சாருமதி அஞ்சிக் கொண்டிருந்தாலும், இதற்காகத்தானே? எல்லா விலாமும் அறிந்த அவரே, இப்படிக் கூறலாமா என்று முன்பு, நடந்ததை மறைமுகமாக, அவருக்கு நினைவுறுத்தினாள். 

ஆனால் முத்துக்கிருஷ்ணனுக்கு, இப்போது வாராந்திரக் கூட்டம்தான், பெரிதாகப் பட்டது போலும்.

“எல்லாம் அவரவர் நடந்துகொள்கிற விதத்தில்தான் இருக்கிறது என்று, இத்தனை மாதங்களில் அவள் புரிந்து கொள்ளவில்லையா?” என்று, சற்றுக் கண்டிக்கும் தொனியில் என்றாலும். அவரும் குறிப்பாகவே கூறிவிட்டு, அன்றைய கூட்டத்தில் காட்டப்பட வேண்டிய கணக்குகள், பிற பிரச்சினைகளைப் பற்றிப் பேசலானார். 

தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது, சாருமதிக்கு. ஏனெனில் அப்போது பார்த்துதான் அவளது தளத்தில் ஒருத்தி திருமணத்துக்கு ஒருவாரம் விடுமுறை கேட்டிருந்தாள். அடுத்த மாதம் ரிட்டையர் ஆகும் ஒருவர், பல ஆண்டுகளாகக் சேர்த்து வைத்திருந்த விடுமுறையை, இப்போது மொத்தமாக எடுத்துக் கொள்ள விரும்பினார். பிரசவ விடுமுறை மட்டும் எடுப்பதாக இருந்த ஒரு பெண், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக, நிரந்தரமாக வேலையை விடுவதாகக் கடிதம் எழுதியிருந்தாள். 

இவர்களுக்குப் பதில் ஆள் போட வேண்டும். 

இதற்கும் மேலாக, சில தங்கிவிட்ட பொருட்களின் விற்பனையைக் கூட்டுவதற்காக, சில உத்திகளை எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது.

அத்தனையையும் மோகனசுந்தரத்தின் கவனத்தைத் தன் பேரில் ஈர்க்காமல், அவள் எப்படிச் செய்வது?’ 

கஷ்டகாலம் இப்படி வந்து சேர வேண்டுமா? 

ஆனால், மனம் இருந்தால், மார்க்கம் உண்டு என்பது போல, இதையே யோசித்துக் கொண்டே இருந்தவள், சட்டென துள்ளிக் குதித்தாள். 

சூப்பர்மார்க்கெட்டின் அலுவலர்களுக்காக, அங்கே ஒரு தனிக் குழுவே இருந்தது. தனி இலாகா, மனிதவளம் பற்றிப் பயின்று பட்டம் பெற்ற ஒரு பெண் அதிகாரியின் தலைமையில் அது இயங்கியது.

சரியாக சொல்லுவது என்றால், அவளது தளத்தின் பிரச்னை திருட்டோ, சோம்பேறித்தனமோ, சண்டைச் சச்சரவுகளோ அல்லது நியாயமான சில காரணங்களுக்காகப் பதில் ஆட்களை நியமிப்பது மட்டுமே.

இதைச் சாகுமதி. கூட்டத்தில் பேச வேண்டியதே இல்லை. தேவையான குறிப்புகளை எடுத்துப்போய் அலுவலர்களுக்கான துறை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு வந்தால் விஷயம் முடிந்தது.

அதேபோலக் கொடுத்துவிட்டும் வந்தாள். இனி அந்த அதிகாரியின் தலைவலி!

விற்பனை விஷயத்தையும் அவை போன்ற மற்ற தளத்தினர் பேசி ஆராய்ந்து முடிவு கண்டபோது கும்பலோடு கோவிந்தா’வாக சத்தத்தை அடக்கிப் பேசி, அவள் சேர்ந்து கொள்ள, தனிப்படத் தெரியாமலே கூட்டத்தைச் சமாளித்துவிட்டாள். 

கூட்டம் முடிந்ததும், டீ, பிஸ்கட்டுக்காகப் பயன்படுத்திய தட்டு, கப்புகளை மற்றவர்களோடு சேர்ந்து ஒதுக்கிவிட்டு, அவர்களுடனேயே சேர்ந்து, அரவமின்றி அங்கிருந்து வெளியேறிவிட முனைந்தால், “சாருமதி!” என்று அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். “உன்னுடன் பேச வேண்டும், எனவே, நீ பிறகு போகலாம்” 

ஒருகணம், அவளோடு சேர்ந்து எல்லோருமே அசைவற்று நின்றார்கள் என்றாலும், மறு கணமே அது மாறிவிட்டது. 

கால்கள் வேரோடியது போல, சாருமதி மட்டும் அப்படியே நிற்க, மற்றவர்கள் வழக்கம்போல அவர்களுள் பேசியபடி, எம்டியிடம் ஒரு மரியாதை விடைபெறலுடன் அங்கிருந்து வெளியேறலானார்கள். 

அவளும் அங்கே நின்று கொண்டிராமல், சக அலுவலர்கள் முகத்தில் இது வழக்கம்தானே என்பது போன்ற ஒரு அறிந்த பாவனையும் இல்லாதிருக்குமானால், ஒரு வேறுபாடும் தெரிந்திராது. 

ஆனால், இரண்டுமே இருந்ததால், சாருமதி உள்ளூரக் கூசிக் குறுகிக் கொண்டிருந்தாள். 

எல்லாம் அவரவர் நடந்து கொள்கிற விதத்தில் இருக்கிறதாமே! இப்போது அவள் என்ன மாதிரி நடந்ததில், இவன் அவளை இப்படித் தாமதிக்க வைத்திருக்கிறானாம் என்று, அவளுக்கும் தங்கைக்கும் எத்தனையோ உதவிகள் செய்திருக்கும் பெரியவர் முத்துக்கிருஷ்ணனிடமே, அவளுக்கு எரிச்சல் வந்தது. 

எரிச்சலும் அவமானமுமாக உள்ளூரக் கனன்றாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கும் முயற்சியாக இருந்தவளிடம், மோகனசுந்தரம் வந்து நின்றான். 

“நீ ஏதாவது என்னிடம் சொல்லை வேண்டுமா?” என்று சன்னக் குரலில் வினைவினான்.

ஒருகணம் சாருமதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் என்ன சொல்லக் கூடும் என்று இவன் எதிர்பார்க்கிறான்?

திகைத்து விழித்தவளுக்கு, சற்று முண் வெளியே சென்ற சக அலுவலர்களின் முகபாவனை நினைவு வர, சட்டெனக் கன்றி சிவந்தாள். 

அத்தியாயம்-2

குன்றலும் கோபமுமாகக் கன்றிச் சிவந்தபோதும், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றும் அவளுக்குத் தோன்றியது.

அவனால் எப்படி இப்படி நினைக்க முடியும்? 

மோகனசுந்தரம் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று, ஓரளவு இலகுவாகவே சாருமதியால் ஊகிக்க முடித்தது. ஆனால், இப்படி ஒரு கருத்து, அவனுக்கு எப்படி வத்தது என்றுதான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த நிறுவனத்தின் வாராந்திரக் கூட்டம்! அவளுக்கு மேல் அதிகாரி ஊரில் இல்லாததாலேயே, அவள் பங்கேற்றிருக்கிறாள். அதுவும் பட்டப் பகலில், பதினைந்து பேரோடு சேர்த்து.

என்னவோ, அவன் தனியாக இருக்கும் மதன மாளிகையில், கிறக்கத்துடன் அவனை நாடி, அவள் வந்தது போல, இது என்ன பேச்சு? ஒருநாள், முதலாளியைப் பக்கத்தில் பார்த்தால், உடனே காலடியில் விழுந்து விடுவாளாமா? 

இந்த ஆறு மாதங்களாக, அவள் எப்படி ஒதுங்கிப் போனாள் என்று, இந்த மகா மன்மதனுக்கும் தெரியும்தானே? அதிலேயே, அவளது மனம், அவனுக்குப் புரிந்திருக்க வேண்டுமே! 

ஆனால், அவனையும், அவளையும் தனியே விட்டுப் போனவர்களின் எண்ணம்? அதுவும், இதேதானே? 

அப்படியானால்… 

இந்தப் பெரிய ஹாலில், அவனும், அவளும் மட்டும் தனியாக இருக்கும்போது, இப்படித்தான் நடக்கும் என்று. அவர்கள் எல்லோருக்குமே நிச்சயமா?

முதலாளி மோகனசுந்தரத்திடம் அவ்வளவு நம்பிக்கை போல!

என்னவோ, முத்துக்கிருஷ்ணன் அங்கிள் பெரிதாக சொன்னாரே. யாரையும் எம்டி விரட்டிப் பிடித்ததாகவோ, கட்டாயப்படுத்துவதாகவோ கேள்வி இல்லை என்றாரே! 

மற்றவர்களின் பார்வைக்கும், இவனது கேள்விக்கும் வேறு என்ன பொருள்? 

அதிலும், என்ன நகாசாகக் கேட்கிறான்? அவள் வந்து, அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று? 

அதாவது, அவள், தானாக வந்து காலில் விழ வேண்டுமாம்! அப்போதுதானே, கட்டாயப்படுத்தியது இல்லை என்கிற நற்சான்று, அங்கிள் சொன்னது போலப் புகழ் கிடைக்கும்!. 

பெண்கள், தானாகவே வந்து விழுகிறார்களாம்! எப்படி என்று, இப்போதல்லவா, தெரிகிறது! ரொம்பவே கெட்டிக்காரன்தான்! 

ஆனால், கெட்டிக்காரத்தனம், அவனுக்கு மட்டும் சொந்தமானது அல்லவே! 

எனவே அவனை நிமிர்ந்து நேராகப் பார்த்து “எதுவும் சொல்ல வேண்டியது இல்லை, சார்” என்று நிரடற்ற குரலில் தெளிவாகப் பதில் சொன்னாள். 

மோகனசுந்தரம் எதிர்பாராத பதில் போலும், ஆனாலும் அப்படி யாருமேவா இவனை எதிர்த்து நின்றிருக்க மாட்டார்கள்? நம்பக் கடினமாகத்தான் இருந்தது, சாருமதிக்கு. 

அவனுக்கும் அதே நிலைதான் போலும், லேசாகப் புருவம் சுருக்கி யோசித்தவன் முகம் உடனே தெளிந்தது. 

“நீ தவறாக, வேறு மாதிரி எண்ணிவிட்டாய் என்று தோன்றுகிறது, இது நம் விஷயம் அல்ல. ஆனால் எப்படி… முதலில் இதைச் சொல். நீ, உன் சகோதரியுடன், கடைசியாக எப்போது பேசினாய்!” என்று விசாரித்தான் மோகனசுந்தரம். 

இப்போது இன்னொரு விதமாகத் திணறிப் போனாள், சாருமதி. இவன் எதற்குத் தங்கையைப் பற்றிக் கேட்கிறான்? அவள் என்ன பண்ணி வைத்தாள்? இப்போதெல்லாம் ஒழுங்காகத்தானே, வேலைக்குப் போகிறாள்? 

முதலில், அவனது கேள்விக்குப் பதிலைத் தேடினாள். பாலாவுடன், அவள் கடைசியாக எப்போது பேசினாள்? 

அன்று காலையில்தான், சாருமதி, தங்கை சாருபாலாவுடன் பேசியது. 

பேசியது என்று சொல்வதை விட, தூக்கத்திலிருந்து அவளை எழுப்ப, மூத்தவள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் எனலாம். 

ஏற்கனவே, வேலைக்கு மட்டம் போடுகிறாள். தாமதமாக வருகிறாள் என்று பாலா மீது குற்றச்சாட்டு இருந்தது. பாலா வேலை செய்த தளத்து நிர்வாகி. சாருமதியிடமே இது பற்றி விசாரிக்குமாறு கூறியிருந்தார்! 

அப்போது தமக்கை கேட்டதற்கு, பாலா சொன்ன பதில் இதுதான். “என்ன செய்வது? உனக்கு சுயநலம்! நீ மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று, என்னை எழுப்பி விடாமலே, சீக்கிரமாக எழுந்து, கிளம்பி வேலைக்குப் போய்விடுகிறாய். அன்றைக்குத் தாமதமாக விழித்துவிட்டு, அவசர அவசரமாகக் கிளம்பிப் போயும், திட்டுத்தான் வாங்கிக் கட்டிக்கொண்டேன். அதனால்தான், தாமதமாக வேலைக்குப் போவதற்குப் போகாமலே இருந்துவிடுவது மேல் என்று, திரும்பப் படுத்துத் தூங்கிவிடுகிறேன்!”

எங்கே போய் முட்டிக் கொள்வது? 

அன்றிலிருந்து, தங்கையை எழுப்பி விடுகிற வேலை ஒன்று, சாருமதிக்கு வந்து சேர்ந்தது. குறைந்த பட்சமாக பொன்னான பதினைந்து நிமிஷங்களை, இதற்காக ஒதுக்கி கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனாலும் பாலா ஒழுங்காக வேலைக்குப் போவதற்காகக் கஷ்டப்பட்டேனும், சாருமதி அதைச் செய்து கொண்டிருக்கிறாள். அவளும் போகிறாள்.

எனவே, அந்த வகையில், பாலாவைக் குறை கூற வழியில்லை.

ஆனால், இதில் வேறே ஏதோ இருக்கிறது. இந்த எம்டி, பாலாவை எப்போது பார்த்தாய் என்று கேட்கவில்லை. எப்போது பேசினாள் என்கிறான்.

பேசியது எப்போது என்றால்… அதுவும் அப்போதுதான். 

இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடுங்குகிறவள், சாருபாலா.

தமக்கை தனக்காகப் பார்க்கிறாள் என்று தெரிந்ததும், அதை இயன்ற அளவு பயன்படுத்திக் கொண்டாள்.

பல் துலக்கும் பிரஷ்சிலிருந்து, குளித்துவிட்டுப் போட உள்ளாடை. தலை வாரும் சீப்பு, எல்லாம் தமக்கையே எடுத்து வைக்கச் செய்வாள்.

அன்றைக்கு எதை அணிவது என்று, ஒவ்வொன்றாக உடம்பில் வைத்துப் பார்த்து, மடித்ததை மீண்டும் கலைத்து வீசுவது வேறு. உபயோகித்துவிட்டு, எடுத்த இடத்தில் வைக்காமல், அங்கங்கே போட்டுவிடுவது… 

இதற்குமேல், அறையை ஒழுங்குபடுத்துவது வேறு! 

ஒழுங்குபடுத்தாமல் விடவும், சாருமதிக்கு மனம் வராது, அவளுக்குத் தான் இருக்குமிடம் சுத்தமாக, அழகாக இருக்க வேண்டும். தங்கையிடம் முட்டிக் கொள்வதற்குப் பதிலாகத்தானே செய்து விடுவாள். 

எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்காலத்தில் பயன்படக் கூடும் என்று இருவருமே முடிந்த அளவு சேமிக்க வேண்டும் என்று, சாருமதி, பாலாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். சொல்லும்போது, சரிசரி என்று சாருபாலா தலையாட்டத்தான் செய்வாள். 

ஆனால், சின்னவளுக்கு, வாரத்துக்கு ஒரு நாளாவது, சினேகிதப் பட்டாளத்தோடு, வெளியே சுற்றியாக வேண்டும். 

செலவை எல்லோரும் பங்கு பிரித்துக் கொள்வதுதான். ஆனால் அப்படிச் சுற்றும்போது, வாங்கித் தின்கிற தீனி, சும்மா கௌரவத்துக்காக எல்லோருடனும் சேர்ந்து வாங்குகிற பொருட்கள், போக்குவரத்துச் செலவு… எல்லாம் கணக்கிட்டால், அக்கா, தங்கை இருவருக்கும் பத்து நாட்களுக்குக் கட்டி வருகிற தொகை செலவாகி இருக்கும். 

எடுத்துச் சொன்னால், “அம்மா, அப்பா இருந்தால்…” என்று அழுவாள். 

“அம்மா, அப்பா நினைவாகவே இருக்கிறது. வேதனையை மறக்கத்தான். சினேகிதர்களோடு சுற்றப் போனேன்” என்று அவள் கூறும்போது, பெரியவளுக்கே, பாவம் என்று தோன்றிவிடும். 

அவள் இரண்டு வயது மூத்தவள், பொறுப்புத்தெரிந்தவள். அவளுக்கே, பல சமயம் பெற்றோர் நினைவு வந்து, பாடாய்ப் படுத்தி விடும். ஏதாவது ஒரு வேலையில் மனதை ஈடுபடுத்தி, சமாளிப்பாள். 

பாலா வீட்டுக்குக் கடைக்குட்டி. பெற்றோருடைய செல்லம்! அவளுக்கு எப்படி இருக்கும்? பாவம்தானே! 

சாருமதி அளவு புத்தி இல்லை என்று, முத்துக்கிருஷ்ணன் விரைவிலேயே கண்டுபிடித்து விட்டதால், அவளைக் கம்ப்யூட்டரில் பில் போட்டுப் பணத்தை வாங்கிப்போடும் வேலையில்தான் சேர்த்துவிட்டார். 

இருவரும் தங்குவதற்காக, பணி புரியும் இடத்துக்கு அருகிலேயே, வேலை பார்க்கும் மகளிர் தங்கும் விடுதி ஒன்றில், சாருமதி ஓர் அறை ஏற்பாடுசெய்தது குறித்து அவருக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், அறையின் வாடகை, உணவுக்கான செலவு எல்லாவற்றையும், இருவரும் சமமாகவே பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர் திட்டம் செய்திருந்தார். 

அப்போதைக்கு தலையாட்டியபோதும், சாருபாலா ஒருபோதும், தன் பங்கை முழுதாகக் கொடுத்ததே கிடையாது எனலாம். 

பலமுறை இட்டு நிரப்பிக் கொடுத்தபோதும், சின்னவளின் பொறுப்பற்ற தன்மை தாங்காமல், வெகு சில சமயங்களில், பெரியவள் பொறுமையிழந்து கத்தி விடுவதும் உண்டு.

அன்று, அப்படிப்பட்ட நாளாக இருந்திருந்தது. 

விடுதிக்குப் பணம் கட்டுவதற்குப் பத்தாம் தேதிதான் கடைசி நாள். தன் பங்கை, இன்று தருகிறேன். நாளை தருகிறேன் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்த சாருபாலா, காலையில் வழக்கமாக அடிக்கிற கூத்தையெல்லாம் அடித்து முடித்தாள்.

அறையை விட்டுக் கிளம்புமுன், விடுதிக்குக் கட்டப் பணத்தைக் கேட்டபோது, ஏதோ பெரிதாகக்கதை சொன்னாள்.

ஓர் அழகான கைப்பையாம், விட்டால், மறுபடியும் அதுபோலக் கிடைக்கவே கிடைக்காதாம். அதனால், இருந்த பணத்தையெல்லாம் போட்டு, அதை வாங்கி விட்டாளாம். இப்போது அந்த மாதத்தில் மிச்ச நாளை ஓட்டவே, கடன் வாங்குகிற நிலையாம்!

“இதில் விடுதிக்கு வேறு கட்டு என்றால், பணத்துக்கு எங்கே போவது? சும்மா, முழுதும் நீயே கட்டிவிடு” என்று மேம்போக்காகச் சொன்னது மட்டுமின்றி “நான் அலங்காரம் செய்து முடிக்கும்முன், என் பழைய கைப்பையில் உள்ளதை எல்லாம் இதற்கு மாற்றி வைக்கா நீதான் தயாராகிவிட்டாயே!” என்றாள் பாலா சர்வசாதாரணமாக. 

‘ஒட்டகத் துரும்பு’ போல ஆகிவிட, சாருமதி பொங்கிவிட்டாள்.

பொறுமையில்லாதவள், முன்பின் யோசியாத முட்டாள், அது இது என்று திட்டிவிட்டு, “இது கடைசித் தடவை. இன்னொரு தரம் இப்படிச் செய்தால், நான் வேறு அறை பார்த்துக்கொண்டு போய்விடுவேன். அப்புறம், முழுசும் நீதான் கட்ட வேண்டியிருக்கும், ஜாக்கிரதை” என்று மிரட்டினால், அதைக் கொஞ்சமும் லட்சியமே பண்ணவில்லை சின்னவள். 

“ஐயோ! சும்மாச் சும்மாக் கத்தாதேக்கா. நீ போடுகிற இறைச்சலில் எனக்கு வேகமாக நகங்களுக்குப் பாலீஷ் போட முடியவில்லை. நீ வாயை மூடிக் கொண்டிருக்காவிட்டால், நான் வேலைக்குத் தாமதமாகத்தான் போக நேரும்” என்று ஒரு மறைமுகமான மிரட்டலுடன் அவள் நிதானமாக நகத்துக்குச் சாயம் தீட்ட, தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் சாருமதி. 

அதுதான், பாலாவுடன் அவள் கடைசியாகப் பேசியது.

இதில் முதலாளி மனிதனிடம் சொல்வதற்காகப் பெரிதாக என்ன இருக்கிறது?

அவளிடம் இருந்தே வரட்டும் என்பதுபோல, அவளது முகத்தில் பார்வையைப் பதித்து அசையாமல் நின்றவனிடம்தான், இப்போது சாருமதிக்குக் கோபம் வந்தது. 

ஒன்றுமில்லாத, உப்புப் பெறாத விஷயத்துக்கு அவளை நிற்க வைத்து, மற்றவர்கள் அவளை மட்டமாக நினைக்கும்படி செய்திருக்கிறான். 

இது, அவனது எண்ணம் நிறைவேற, ஒரு வித்தியாசமான அணுகுமுறை போலும்! ஆனால், அதற்கு, அவன் வேறு ஆளைப் பார்க வேண்டும்!. 

குரலை உணர்ச்சியற்றதாகச் செய்துகொண்டு “வழக்கம்போலக் காலையில்தான், சார். அவளை எழுப்பி விட்டபோது பேசியதுதான். அவ்வளவுதானே, சார்? நான் போகலாம் அல்லவா?” என்று கேட்டாள் அவள். 

என்னதான் மரக்கட்டைத்தனமாகப் பேச முயன்ற போதும், குரலில் சிறு ஏளனம் கலப்பதை, அவளால் தவிர்க்க முடியவில்லை. 

இப்படியெல்லாம் பெயரைக் கெடுப்பதன் மூலம், என்னை மடக்கிவிட முடியும் என்று நினைத்தாயாக்கும் என்ற ஏளனம். 

அவனும் புரிந்து கொண்டான் என்பது கண்களின் சிறு சலனத்தில் புரிய, சற்றே படபடப்பாய் உணர்ந்தாள் அவள். 

அவள் கண்டுகொண்டாள் என்பதற்காகத் திட்டத்தை மாற்றுவானா? அல்லது அதையே தொடர்வானா? 

வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளாமல், மோகனசுந்தரம், தன் விசாரணையைத் தொடர்ந்தான். “அது, நீங்கள் தங்கும் விடுதியில், பிறகு இவ்வளவு நேரத்தில்? மறுபடி பேசவே இல்லையா?” 

என்ன விடாத தொணதொணப்பு என்று எரிச்சல் வந்தது, சீக்கிரமாக இங்கிருந்து வெளியே போய், ஓரிருவர் கண்ணில் அவளுக்கு. பட்டாலும், அனைவரின் தப்பு எண்ணமும் நீங்கிவிடும். ஆனால் அதற்கு, இவன் இடம் கொடுக்கக் காணோமே! 

அதுதான் நோக்கம் என்கையில், வேறெதை எதிர்பார்ப்பது? பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு, “வேலைக்கு வந்தால், மதியம் ஒரு மணி வரை, எங்களுக்கு வேலை நேரம், சார், வேலை நேரத்தில், நானோ, தங்கையோ, ஒருவரையொருவர் சந்திக்க முயன்றதில்லை. உணவு நேரத்தில் அவள் கூடச் சேர்ந்தவர்களுடன் காண்டீனுக்குப் போய்விடுவாள். நான் விடுதியில் கட்டித் தருவதைக் கொண்டு வருவதால், தளத்து அலுவலர்களின் தனிப் பகுதியிலேயே சாப்பிட்டு விடுவேன். அதனால், அப்போதும் பேச இயலாது. வேலை முடிந்து, விடுதிக்குச் சென்ற பிறகுதான். எதுவானாலும் பேசுவோம்” என்று வேகமாக விளக்கம் கொடுத்தாள் சாருமதி.

அப்போதும் “நேரில் பேச முடியாதுதான், ஆனால் செல்ஃபோனில்? அப்படி உரையாடுவது உண்டுதானே? இன்னும் பேசியிருப்பீர்களே?” என்று விடாமல் வினவினான் மோகனசுந்தரம்.

வேலை நேரத்தில் செல்ஃபோனில் சொந்தப் பேச்சு பேசுவது தடை செய்யப்பட்டிருக்கையில், இது என்ன அசட்டுக் கேள்வி என்று இருந்தது.. சாருமதிக்கு. எப்படியாவது, அவளை மாட்டி வைக்க நினைக்கிறானா? 

ஆனால், மற்றவர்களுக்கு மறைத்து, பாலா பேசுவது, அவளுக்கும் தெரியும், அது பற்றி எச்சரிக்கை செய்தால், அலட்சியமாக ‘உச்’சுக் கொட்டுவாள். அவளையெல்லாம் யாராலும் பிடிக்க முடியாதாம்! ஆனால் விதியை உடைப்பது தமக்கைக்குப் பிடிக்காது என்பதால், அவளோடு பேசுவதில்லை.

இவனது கேள்வி, சகோதரிகள் இருவரும் பேசுவது பற்றித்தானே?

“இல்லவே இல்லை சார். அப்படிப் பேசக் கூடாது என்று நிறுவனக் கட்டுப்பாடு இருப்பது எனக்குத் தெரியும், சார். அத்தோடு அடிக்கொரு தரம் பேசிக் கொண்டிருக்கிற பழக்கமும், எங்களுக்குக் கிடையாது. அதுதான். இரவு முழுதும் ஒரே அறையில்தானே இருக்கப் போகிறோம். அதற்குள், பேசத் தேவை என்ன, சார்? ஒன்றுமில்லையே” 

“இருக்கிறதே!” என்று ஒற்றை வார்த்தையாய் அவன் சொன்ன விதத்தில், சட்டென மிரண்டுபோனாள் சாருமதி. 

“சா..ர்?”

அவளது முகத்திலிருந்து, இப்போதும் அவனது பார்வை விலகவில்லை. 

பார்வையை அகற்றாமல் “நன்றாக யோசித்துச் சொல்லு, சாருமதி நேரிலோ, ஃபோனிலோ சாருபாலா உன்னிடம் பேசலே இல்லைதானா? காலையில் அலுவலுக்கு வந்த பிறகு, நீ அவனைப் பார்க்கவே இல்லையா?” என்று கேட்டான் அவன். 

பேச்சா? பார்வையா? 

இவன் வேறு என்னவோ கேட்கிறான். தப்பாக எதையும் சொல்லிவிடக் கூடாது!

யோசித்து, “பார்த்தேன், சார்” என்றாள் சாருமதி. 

முதலாளியின் பார்வையில் கூர்மை கூடுவது, நன்றாகவே தெரிந்தது. ஆனால், காரணம் புரியாது, “மதியம் நான் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவிவிட்டு, எட்டிப் பார்த்தபோது, கான்டீனில் உணவு முடிந்து, பாலா… என் தங்கை சாருபாலா திரும்பிப் போவதைப் பார்த்தேன். எங்கள் தளத்து ஜன்னல் வழியே, கீழே கான்டீன் வாசல் தெரியும்” என்று முடித்தாள். 

சாப்பிடப் போன இடத்தில், பொழுது போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விடாமல், பாலா சரியான நேரத்துக்கு வேலைக்குப் போகிறாளா என்று, சாருமதி அவ்வப்போது கவனிப்பது உண்டு. ஆனால், அந்த விளக்கம் இவனிடம் சொல்லத் தேவையில்லைதானே? 

“ஓ!” என்றான் அவன். “அதாவது, அவள் உன்னுடன் பேச முயற்சிக்கவே இல்லை… பேசவுமில்லை என்கிறாய்!” 

பாவி, பாவி! அதைத்தானேய்யா, இவ்வளவு நேரமும், திரும்பத் திரும்பச் சொல்லித் தொலைத்திருக்கிறேன்.. இன்னும் எத்தனை தரம் இதையே கேட்டு, என் நேரத்தை வீணாக்குவாய்? ஆனால், என்ன விதமாக நீ கேட்டாலும், என் பதில் இது ஒன்றேதான் என்று ஆத்திரத்துடன் நினைத்தாலும், அதை அப்படியே சொல்ல முடியாமல், “ஆமாம், சார்” என்றாள் சுருக்கமாக. 

“ம்ம்ம்..” 

இன்னமும் ஒத்துக் கொள்ள முடியாதவன் போல, அவன் யோசிப்பது போலக் காட்டவும் சாருமதி பொறுமையிழந்தாள். 

இவன் இப்படியே இன்னும் எவ்வளவு நேரத்தை, வீணாக்கப் போகிறான்? மற்றவர்கள், அவளை ஒரேடியாகக் கழிசடை என்று எண்ணுமளவுக்கா? 

சட்டென முடிவு செய்து “விஷயம் இதுதான் என்றால், என் பதிலைச் சொல்லியாயிற்று, சார். உண்மை அதுதான் என்பதால், இன்னும் எத்தனை தரம் கேட்டாலும் மாறாத பதில். அதனால், நான் போகிறேன்” என்று கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புப் புத்தகம், பேனா, போன்ற பொருட்கள் அடங்கிய பையை எடுத்தாள். 

“பொறு…” என்று முதலாளி கை நீட்டித் தடுக்கவும், சாருமதி விதிர்விதிர்த்துப் போனாள். 

‘என்ன இது? இவன் இப்படி நடக்க மாட்டான்’ என்ற அங்கிள் சொன்னாரே! 

விழியகல அவள் நோக்கும்போதே, அவன் சொன்னான் “உன் தங்கை ஒரு பெரிய தப்பு செய்திருக்கிறாள். அது பற்றி உண்மையறியத்தான், இத்தனை கேள்விகளும் ” என்றவன், தொடர்ந்து சாருபாலா செய்த பிழை பற்றிக் கூறினான்.

கண்ணை இருட்டிக் கொண்டு வர, சற்று நேரம். பேச்சு மூச்சு எல்லாம் நின்றுபோயிற்று, சாருமதிக்கு!

– தொடரும்…

– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *