முகவுரை
மனிதனின் இதயம் கணனியின் மையச் செயலாக்க அலகாக செயல் படுகிறது. இதயத்தின் செயல் உடலின் பல பாகங்களில் செயல்களைப் புரியும் பகுதிகளோடு சேர்ந்து இயங்குகிறது. படக் படக் என்று அடிக்கும் இதய துடிப்பு நிமிடதுக்கு சராசரி 72 ஆகும். இது மனிதனின் செயல் பாட்டினால் குறைந்தால் என்ன வாகும் என்பதே இந்த அறிவியல் காதல் கதை
***
இதையா ஈழத்தில் உள்ள கிளிநோச்சியில் ஒரு விவசாயி மாணிக்கத்தின் அன்பு மகள். படிப்பில் கெட்டிக்ககாரி தன் மகள் படித்து டாக்டராக வேண்டும் என்று மாணிக்கம் விரும்பினான் . தன் இருபது எக்கர வயலில் ஒரு பகுதியை விற்று இதையாவை கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படிப்பித்தான்\. அந்த கல்லூரியில் இரு வருடங்களுக்கு முன் படித்துக் கொண்டிருந்த அருனாவை இதையா ஒரு இலக்கிய விவாத மேடையில் சந்தித்தாள் . அவனின் பெச்சு அவளை கவர்ந்தது. அதுவே அருணா மேல் அவள் காதலுக்கு வித்திட்டது. இதையா கதலித்த அருணா ஒரு செல்வந்தர் மகன் அவனின் தந்தை கொழும்பில் பிரசித்தம் பெற்ற வர்த்தகர்
அருணா இதையாவை காதலிப்பது அவனின் தந்தை கணேஷுக்கு கதெரியாது அவரின் திட்டம் வேறு. அருணா படித்து டாக்டரான பின் அவனை தனது பிஸ்னஸ் நண்பன் முரளியின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போடிருந்தார் கணேஷ் ,
அருணா டாக்டர் பட்டம் பெற்றபின் இதையா படித்து முடித்து டாக்டராரகும் வரை அருணா அவளை திருமணம் செய்ய போறுமையுடன் காத்திருந்தான்,.அவனுக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் நிறுவனத்தின் 200 ஊழியர்களின் தேக நலத்தை கவனிக்கும் டாக்டர் வேலை சகல சலுகைகளுடன் கிடைத்தது.
அருணாவும் இதையாவும் தினமும் சந்தித்து பேசிக்கொள்வார்கள் . இதையா பண வசதி குறைந்தவள் என்பது அருணாவுக்கு தெரியும்.
ஒரு நாள் இருவரும் காலி முகப் பீச்சில் நடந்து செல்லும் போது மேலும் நடக்கமுடியாமல் தனக்கு தலை சுத்துகிறது என்று இதையா நிலத்தில் மூச்சு வாங்க முடியாமல் இருந்து விட்டாள்.
“என்ன இதையா என்ன இருந்து விட்டாய் என்ன செய்யுது உனக்கு?” அருணா கேட்டான்.
“என் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு போதுமான ஆக்சிஜன் போதுமைதில்லை போலும். என் தலை சுத்துது அருணா”
“இது உனக்கு எவ்வளவு காலமாக இருக்குது . முந்தி உன்னிடம் நான் இதைக் காணவில்லை. இதேன்ன புது வருத்தம் உனக்கு”
“கடந்த சில மாசமாக சில சமயம் எனக் கு இப்படி இருக்குது உனக்கு நான் சொல்லவில்லை”.
“உன் மூளைக்கு மற்றும் பிற உறுப்புகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்என நினைக்கிறேன்.
இது போல சில வேறு அறிகுறிகள் உனக்கு தெரிந்ததா”?
“என்ன அறிகுறிகள் அருணா?”
“மயக்கம். தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி. சோர்வு. மூச்சு திணறல் நெஞ்சு வலி குழப்பம் அல்லது நினைவக சிக்கல்கள் உடல் செயல்பாட்டின் போது எளிதில் சோர்வாக இருக்கும் இவை எதும் உனக்கு உண்டா இதையா?”
இதையா பெசாமல் இருந்தாள்.
“எனக்கு நீ மறைக்காமல் உண்மையை சொல் இதையா. இது இதய துடிப்பு சார்ந்தது. கவனிக்காமல் விட்டால் உன் ஊயிருக்கு ஆபத்து வரலாம்” அருணா கவலையுடம் கேட்டான்.
“எனக்கு இப்படி பல தடவை நடந்திருக்கு. இதுக்கு இருதைய ஆப்பரேசன் செய்ய வேண்டுமா அருணா “?
“இது ஒரு பெரிய இருதைய ஒப்பரேசன் இல்லை. நீ பயப்படவேண்டியது இல்லை ஆனால் இதை கொழும்பில் அப்பலோ. டர்டன்ஸ் போன்ற சில வைத்தியசாலைகளில் செய்கிறார்கள். திறமையன சத்திரசிகிச்சை செய்யும் டாக்டர்கள உண்டு”
“எனக்கு இந்த சத்திரசிகிச்சை செய் பணம் என் அப்பாவிடம் எங்கே அருணா. என்னை டாக்டருக்கு படிப்பிக்க தன் காணியின் ஒரு பகுதியை அவர் வித்து போட்டார்”
“என்ன நான் உனக்கு இல்லையா. நீ கெதியிலை என் மனைவியாகப் போகிறவள். உன் தேக நலம் எனக்கு மிக முக்கியம் இதையா”.
“எவ்வவு பணம் ஆப்பரேஷனுக்கு தேவை படும் அருணா?”
“என் கணக்குபடி சுமார் எண்ணாயிரம் டொலர்கள் மட்டில் ப்பேஸ் மேக்கர் ஒன்றுக்கு தேவை ஹோஸ்பிட்டல் செலவு சுமார் இரண்டாயிரம் டொலர்கள்” அருணா சொன்னான்.
“அடேயப்பா இது இலங்கைலயில் பெரிய தொகை ஆயிற்றே அருணா”
“ஆமாம் அதிக செலவு தான் நீரக வியாதி உள்வர்க்ளுக்கு சிகிச்சை செலவு அதிகம் உனக்கு தெரியுமா இதையா நீ கனடாவில் இருந்திருந்தால் இந்த சச்திரசிகிக்சை செலவு இலவசம்”
“நானும் கேள்விப் பட்டேன் அருணா. கனடவில் அமெரிக்க விட வைத்திய செலவு குறைவு. என் இருதய சத்திரசிகிச்சை கூட இலவசம். இதை அங்கு புலம் பெயர்ந்தவர்கள் நன்றி மறந்து விடுகிறார்கள்”
“இதையா உன் சத்திரசிகிச்சை செலவு முக்கியமில்லை. உன் உயிர் தான் எனக்கு முக்கியம் பேஸ் மேக்கரை தமிழில் இதய முடிக்கி என்பர்.”
“அப்படி என்றால் என்ன அருணா?”
“இதயமுடுக்கி என்பது சிறிய, பேட்டரி மூலம் இயங்கும் சாதனம். இது இதயத்திற்கு மின் சமிக்ஞைகளை அனுப்புகிறது. இந்த சமிக்ஞைகள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க வேலை செய்கின்றன. லீட்ஸ் எனப்படும் மெல்லிய கம்பிகள், இதயமுடுக்கிலிருந்து இதயத்திற்கு சமிக்ஞைகளை கொண்டு செல்கின்றன. ஒரு இதயமுடுக்கி மெதுவான அல்லது நிலையற்ற இதயத் துடிப்பால் ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மூச்சுத் திணறலைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
மருத்துவர் நெஞ்சில் கீறல்) செய்து இதயமுடுக்கில் வைப்பார் . அந்த இடத்தில் உங்கள் மார்பு புண் இருக்கலாம். உங்களுக்கு சிராய்ப்பு மற்றும் லேசான வீக்கம் இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக 1 முதல் 2 வாரங்களில் சிறப்பாக வரும். கீறலுடன் ஒரு பாரத்தை நீங்கள் உணரலாம். இது பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதங்களில் மென்மையாகிறது. உங்கள் தோலின் கீழ் இதயமுடுக்கியின் வெளிப்புறத்தை நீங்கள் காணலாம் அல்லது உணரலாம்”.
“அறுவை சிகிச்சிசைக்கு பின் வேலைக்கு நான் போகலாமா?”
“போகலாம், அறுவைசிகிச்சைக்குப் பிறகு 1 முதல் 2 வாரங்சலுக்கு பின் நீ வேலைக்குச் செல்லலாம் அல்லது உங்கள் வழக்கமான வாழ்க்கையை தொடரலாம்”
“பேஸ்மேக்கர் எப்பாடி ஏயல் படுகிறது அருணா பெரிய கருவியா?”
“இல்லை மிக சிறிய கருவி பேஸ்மேக்கர் பேட்டரிகள் பொதுவாக 5 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும். உங்கள் இதயமுடுக்கி சரிபார்க்க நீங்கள் எவ்வளவு அடிக்கடி தேவைப்படுவீர்கள் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவர் உங்களுடன் பேசுவார்.
மின்சார சாதனங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாதனங்களில் சில உங்கள் இதயமுடுக்கி குறுகிய காலத்திற்கு சரியாக வேலை செய்வதைத் தடுக்கலாம். எதைத் தவிர்க்க வேண்டும், எங்களது இதயமுடுக்கி தயாரிப்பாளரிடமிருந்து சிறிது தூரத்தை வைத்திருப்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் சரிபார்க்கவும். எடுத்துக்காட்டாக, வலுவான காந்த மற்றும் மின் புலங்களைக் கொண்ட விஷயங்களிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். ஒரு உதாரணம் ஒரு எம்ஆர்ஐ இயந்திரம் (உங்கள் இதயமுடுக்கி எம்ஆர்ஐக்கு பாதுகாப்பாக இல்லாவிட்டால்). நீங்கள் ஒரு செல்போன் மற்றும் பிற வயர்லெஸ் சாதனங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் அவற்றை உங்கள் இதயமுடுக்கிலிருந்து குறைந்தபட்சம் 15 சென்டிமீட்டர் தொலைவில் வைத்திருக்கலாம். பல வீட்டு மற்றும் அலுவலக மின்னணுவியல் இதயமுடுக்கி தயாரிப்பாளரை பாதிக்காது. சமையலறை உபகரணங்கள் மற்றும் கணினிகள் இதில் அடங்கும்.
“ஆப்பிரேசனுசுகு பின் நான் குணம் அடைய வேகு காலம் எடுக்குமா?”
“நீங்கள் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்த பொதுவான யோசனையை இந்த பராமரிப்பு தாள் உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு வேகத்தில் மீண்டு வருகிறார்கள். முடிந்தவரை விரைவாக முன்னேற சில முறைகளை பின்பற்றவும்
***
தனன்காதலியை காப்பாற்ற அருணாவுக்கு பணம் தேவை வங்கியில் வட்டிக்குபணம் எடுக்க வேண்டும் அவனின் நண்பனின் ஆலோசனை படி தான் வேலை செய்த நிறுவனத்தின் தலகைவர் ஸ்டீபனை என்ற அமெரிக்கரை கண்டு அருணா தன். தங்களின் பல வருட காதலை பற்றி சொன்னான், தன் பணக்கார தந்தையிடம் தன் காதலியின் ஆப்பிரெசனுக்கு பணம் கேட்க தனக்கு விருப்பமில்லை என்றான். ஸ்டீபனும் அருணாவின் கதையை கேட்டு இதையாவின் சத்திர சிகிச்சை செலவை தனது நிறுவனம் செலவு செய்யும் என்று வாக்குறுதி கொடுத்தார்
ஒரு மாத்துப் பின் இதையாவுக்கு சத்திர்கிசிச்சி நடந்தது. அவர்கள் காதல் பிழைத்தது. இதையா தன் படிப்பை முடித்து டாக்டர் ஆனாள். அருணா இதையா இருவருக்கும் ஸ்டீபன் என்ற அமெரிக்கர் தலைமையில் திருமணம் நடந்தேறியது. அருணாவின் தந்தை கணேஷ், மகனின் திருமணத்துக்கு செல்லவில்லை.
(யாவும் புனைவு)