என் இயற்பெயர் ஷெண்பக ப்ரியா. ’ஷெண்பா’ என்ற பெயரில் கதைகளும், சிறுகதைகளும், பத்திரிகைகளுக்கு கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கிறேன். சொந்த ஊர் சென்னை. திருமணத்திற்கு பின் வேலை நிமித்தமாக வடஇந்தியாவில் பதின்மூன்று ஆண்டுகள் வாசம். தற்போது ராணிப்பேட்டையில் வசிக்கிறேன்.
இதுவரை பன்னிரெண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஆறு நாவல்கள் ’சுபம் பதிப்பகம்’ மூலம் புத்தகமாக வெளியாகியுள்ளது. ’இரண்டு நாவல்கள் ராணிமுத்து இதழிலும், ’நெஞ்சத்திலே’ என்ற சிறுகதை ராணி வாராந்திரியிலும் வெளியாகியுள்ளது.