சிறு குறிப்பு
சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும் இவர் எழுதிய நகைச்சுவை ஓறங்க நாடகம் ஆனந்த விகடனின் வைர விழாப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. இவருடைய படைப்புகள் சென்னை வானொலி, தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது.
ரேவதி பாலு எழுதிய சில கதைகளின் விவரங்கள் கீழே:
1. சின்ன முள்ளும் பெரிய முள்ளும் – மங்கையர் மலர் சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்று மார்ச் 2009 இதழில் வெளியானது.
2. சின்னஞ்சிறு பெண் போலே – அமுதசுரபி ஏப்ரல் 2011
3. ஜான்ஸி ராணிகள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2011
4. தீர்வு புலப்பட்டபோது – அமுதசுரபி தீபாவளி மலர் 2010
5. மனிதர்கள் பலவிதம் – கல்கி 21.08.11
6. மனம் ஒரு குரங்கு – கலைமகள் தீபாவளி மலர் 2010
7. அனு அப்படித்தான் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010
8. ஒன்றா இரண்டா? – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2012
இதற்கு முன்பு எழுதியிருந்ததெல்லாம் கையால் எழுதி பத்திரிகைகளில் வெளியாகி சிறுகதைத் தொகுப்புகளிலும் இடம் பெற்று விட்டன.
மின் அஞ்சல் முகவரி: revathy2401@yahoo.com