
யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த முதல் பத்து சிறந்த வலைப்பதிவுகளில் இவரது வலைப்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதிய தலைமுறை எனும் வார இதழில் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.
உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2011ஆம் ஆண்டு இவர் இணையப் பிரிவில் பெற்றுள்ளார்.
நூல்கள்
- சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
- விஜயகாந்த்
- தேமுதிக
- சைபர் க்ரைம்
- அழிக்கப் பிறந்தவன்