போதிபாலன்

 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கிளிமானூரில் 1970-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் ஹரிக்குமார்.

ஹவி, போதிபாலன் என்ற பெயரில் தொண்ணூறுகள் தொடங்கி, கடந்த முப்பதாண்டுகளாக கவிதை, கதை, கட்டுரை எழுதிவருகிறார்.

கணையாழி தொடங்கி இன்றைய நவீன இணைய இதழ்கள் வரை இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அப்பா – சுப்பிரமணியன், அம்மா – லட்சுமி. மனைவி – இந்திராகாந்தி.

இடறல், தொரட்டி, புதியதடம் ஆகிய இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

புதிய காற்று மாத இதழ் மற்றும் மாலை முரசு, தின மலர், தினகரன், தின மணி ஆகிய நாளேடுகளில் முதுநிலை உதவி ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

இசைக்குமிழி என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்புக்கு, 2011ஆம் ஆண்டின், நெய்தல் அமைப்பின் ராஜமார்த்தாண்டன் விருது வழங்கப்பட்டது.

இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பாக “முடிவற்ற கோடை” 2021 இல் வெளிவந்துள்ளது.

மாரி. மகேந்திரன் இயக்கத்தில் இவரது ஒளிப்பதிவில் வெளியான “அறையின் தனிமை” என்ற குறும்படம் கடந்த 2006 இல் திருப்பூர் அரிமா சுதாமா கோபால கிருஷ்ணன் விருது பெற்றது.