டொமினிக் ஜீவா

 

Jeevaடொமினிக் ஜீவா (Dominic Jeeva, சூன் 27, 1927 – சனவரி 28, 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தந்தை ஆவுறம்பிள்ள; தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

 

 

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புக்கள்

 • தண்ணீரும் கண்ணீரும் (1960)
 • பாதுகை (1962)
 • சாலையின் திருப்பம் (1967)
 • வாழ்வின் தரிசனங்கள் (2010)
 • டொமினிக் ஜீவா சிறுகதைகள்

கட்டுரைத் தொகுப்புக்கள்

 • அனுபவ முத்திரைகள்[10]
 • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
 • அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்
 • நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
 • முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

மொழிபெயர்ப்பு நூல்

 • UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]

Jeeva3Jeeva2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)