
இயற்பெயர்: சோ.சுப்புராஜ். படிப்பு: B.E. (Civil) கட்டிடப் பொறியாளர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். 50 வயதாகிறது. செல்ல மகள் சில்வியா மற்றும் மனைவி மேரியுடன் சென்னை புறநகரில் வசிக்கிறேன்.
சில்வியாமேரி என்கிற புனைப்பெயரிலும் அவ்வப்போது கதை கவிதைகள் எழுதுவதுண்டு.
எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கணையாழியில் முதல் கதையும் தீபத்தில் முதல் கவிதையும் பிரசுரமானது.
தமிழின் முக்கியமான வார, மாத இதழ்களில் – ஆனந்த விகடன், கல்கி, கணையாழி, உயிரெழுத்து, குங்குமம், தாய், பாக்யா, பாவையர்மலர், இனிய உதயம், புதிய கோடாங்கி, புதியபார்வை, இலக்கிய பீடம், பெண்ணே நீ, ராணிமுத்து, புதுப்புனல், மங்கையர் மலர், தினமணிக்கதிர், தினமலர் – வாரமலர் போன்ற இதழ்களில் – அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சுமார் இருபது கவிதைகளும், புதிய பார்வையில் ஒரே ஒரு குறுநாவலும் இதுவரை பிரசுரமாகியிருக்கின்றன.
துரத்தும் நிழல்கள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தின் மூலம் 2012ன் இறுதியில் ஒரே ஒரு சிறுகதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது.
பெற்ற பரிசுகள் :
- அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி-2007ல் முதல்பரிசு
- பெண்ணே – நீ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி 2008ல் முதல்பரிசு
- தினமணிக்கதிரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி 2011ல் மூன்றாம் பரிசு
- தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டி 2015ல் இரண்டாம் பரிசு மற்றும் மூன்று முறை ஆறுதல் பரிசுகள்
- இலக்கியச்சிந்தனையின் மாதப்பரிசு
- கல்கியின் பொன்விழாப் போட்டியில் ஆறுதல் பரிசு
- இலக்கியபீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு
- வெட்டி பிளாக்கர்ஸ், ஆஸ்திரேலியா இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப் பிரவாகம் என்னும் இணையதளங்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
- அன்புடன் இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு
- விளம்பரம் இணைய இதழ் 2015ல் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
எப்போதாவது பதிவிடும் என்னுடைய தமிழ் வலைப்பூ:http://silviamary.blogspot.com
அன்பு நண்பரே
உங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் காந்தி பாலாவின் வணக்கம். உங்கள் தமிழ் இலக்கிய சாதனை குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி விரைவில் சந்திக்க ஆசையுடன்…
தமாம் பாலா