சீதாலட்சுமி

 

திருமதி சீதாலட்சுமி B.A., M.A., M Phil., PGDE, Dip in Translation.

திருமதி சீதாலட்சுமி தமிழ் நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, நிறைநிலை ஆகிய பட்டங்கள் பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் பட்டயம் பெற்றவர். 1990-இல் சிங்கபூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, தேசியக் கல்விக் கழகத்தில் பட்டத்திற்குப் பிந்திய பட்டயக்கல்வி பயின்றவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், தற்போது தேசியக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அண்மையில், சிங்கப்பூர் மக்கள் தொடர்புச் சாதனங்களும் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சியும் தொடர்பாக முனைவர் பட்டத்துக்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்துள்ளார். “கண்ணாடி நினைவுகள்” என்னும் சிறுகதைத் தொகுப்பு இவரது படைப்பாற்றலுக்கு ஒரு சான்று. கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

– கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *