சிலோன் விஜயேந்திரன்

 

Ceylon_Vijayendran2சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்படும் இ. விஜயேந்திரன் (1946 – ஆகத்து 2004) ஈழத்து எழுத்தாளரும்,[1] கவிஞரும், நாடக, மற்றும் திரைப்படத் துணை நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் ஆவார். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரன்.[2] யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்தவர்.[2] தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர், மனைவி இசுலாமியர். இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார்.[3] கல்லடியாரைப் போலவே விஜயேந்திரனும் நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.

நடிப்பு

1960 இல் கோப்பாய் கலைவளர்ச்சிக் கழகம் மேடையேற்றிய “கட்டபொம்மன்” நாடகத்தில் முதன் முதலில் வில்லன் பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து காதலா கடமையா, மலர்ந்த வாழ்வு போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தார். இவரது முதல் திரைப்படம் பைலட் பிரேம்நாத். இதில் வில்லனாக நடித்தார். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர் சிவாஜி கணேசன் உட்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 77 திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.

எழுத்துத் துறை

Ceylon_Vijayendranசிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். 1950களிலேயே எழுதத் தொடங்கிய இவர் ஏராளமான சிறுகதைகளையும், நாடகங்களையும், புதினங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய வரலாற்று நூல்களில் “ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை” எனும் நூல் பெரிதும் பாராட்டுப் பெற்றது. ‘வைகறை’, ‘விஜயா’, ‘நடிகன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழகத்தின் மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர்[4]. கவிஞர் கம்பதாசனை ஆய்வு செய்து நூல்கள் எழுதினார்.

சிலோன் விஜயேந்திரன் இராஜீவ் காந்தி கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர்.

விபத்தில் இறப்பு

2004, ஆகத்து 26 வியாழக்கிழமை திருவல்லிக்கேணியில் இடம்பெற்ற ஒரு தீவிபத்தில் படுகாயமடைந்து[5], மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் தனது 58வது அகவையில் காலமானார்.

எழுதிய நூல்கள்

 • ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள்
 • விஜயேந்திரன் கவிதைகள் (1968)
 • அவள் ( நாவல்) (1968)
 • அண்ணா என்றொரு மானிடன் (1969)
 • செளந்தர்ய பூஜை (சிறு கதைகள்)(1970)
 • பிரேம தியானம் (வசன காவியம்) (1971)
 • ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (வரலாறு) (1973)
 • விஜயேந்திரன் கதைகள் (1975)
 • பாரதி வரலாற்று நாடகம் (1982)
 • நேசக் குயில் (கவிதைகள்) (1984)
 • உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும் (1985)
 • கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் (1986)
 • சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 2) (1990)
 • ஈழத்துக் கவிதை விமர்சனம் (1992)
 • மூன்று கவிதைகள் (1993)
 • சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 3) (1994)
 • இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும் கவிதைகளும் (1994)
 • அல்லாஹு அக்பர் (1996)

தொகுத்த நூல்கள்

 • கல்லடிவேலன் நகைச்சுவை கதைகள் (1987)
 • கம்பதாசன் கவிதைத் திரட்டு (1987)
 • கம்பதாசன் திரை இசைப்பாடள்கள் (1987)
 • கம்பதாசன் காவியஙள் (1987)
 • கம்பதாசன் சிறுகதைகள் (1988)
 • கம்பதாசன் நாடகங்கள் (1988)
 • கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)
 • கலைஞர் திரை இசைப் பாடல்கள் (1988)
 • ஈழத்துக் கவிதைக் கனிகள் (1990)
 • அறுபது காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும் (1992)

ந.உதயகுமார் – சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்

இலக்கிய ஆற்றலென்பது – எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டிருக்கிற எல்லாரிடத் திலும் அமைந்து விடக் கூடிய ஒன்றல்ல

ஆயிரம் எழுத்தாளர்களில் ஒருவரே உண்மையான எழுத்தாளராக இருக்கமுடியும். அத்தகைய ஆற் றல் வாய்ந்த இலக்கிய சிற்பியா லேயே காலத்தை வென்று நிற்கக்கூடிய இலக்கியங் களைப் படைக்க முடியும்.

திரு. விஜயேந்திரன் அவர்கள் அத்தகைய ஒரு இலக்கிய சிற்பி, உண்மை எழுத்தாளர்.

அவர் எழுத ஆரம்பித்துப் பத்து வருடங் கள் தான் ஆகின்றது என்றாலும் அந்தப் பத்து வருட காலத்துக்குள் அவர் படைத்திருக்கும் பனடப்புக்களைப் பார்க்கின்ற பொழுது எமக்குப் பிரமிப்பே ஏற்படுகிறது.

பத்து வருட கால எல்லைக்குள் விஜயேந் திரா அவர்கள் முப்பத்தைந்து நீண்ட நாவல்களை எழுதியிருக்கிறார். நூற்துக்கதிகமான சிறுகதை கள் தீட்டியிருக்கிறார். சுமார் நாற்பது நாடகங் கள் படைத்திருக்கிறார். இவை மட்டுமின்றி நானூறு இலக்கிய, சமய ஆய்வுக் கட்டுரைகளை யும், ஆயிரத்துக்கும் அதிகமான கவிதைகளையும் எழுதியிருக்கிறார்

அவர் பிறவி எழுத்தாளர்: இலட்சிய கலை ஞர். அவரது நினைவுங் கனவும் வாழ்வும் எல் லாமே இலக்கியந்தான். தன் வாழ்வையே எழுத் துக்காக அர்ப்பணித்து விட்ட இந்த இலக்கியப் பித்தரின் மேதா விலாசத்தைக் காலம் மேலும் நன்றாகக் காட்டும்.

தெல்லியூர் லோகு – விஜயேந்திரன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1976, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம்

அழகான சொற்களை நேர்த்தியாகக் கையாளுந் திறன், இணையற்ற மொழி நடை, சுதந்திரமான இலக்கியச் சிந்தனை இம்மூன்றும் விஜயேந்திரனை ஈழத்தின் தனித்துவ எழுத்தாளராக இனங் காட்டப் போதுமானவை. உலகப் புகழ் பெற்ற பேரறிஞர் சுத்தானந்த பாரதியார் தொட்டு ஈழத்தின் சிறந்த அறிஞர்கள் வரை அவரின் ஆற்றலைப் பாராட்டியுள்ளார்கள்.

எழுத்தைத் தன் வாழ்வோடு பின்னிப் பிணைத்துக் கொண்ட அவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற எழுத்தின் சகல துறைகளிலும் தம் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயேந்திரன் எழுதிய “நிலவைப் போல சிரிக்கும் பெண்ணே” என்ற கவிதை, அமுதன் அண்ணாமலை குரலில், கண்ணன் இசை அமைப்பில் இசைத்தட்டாக வெளியிடப் பட்டுப் பலரையும் பரவசப்படுத்தி வருகிறது.

எழுத்தாளராகப் பிரபல்யம் பெற்ற விஜயேந்திரன், ஒரு பண்பட்ட நடிகர். சர்வதேசரீதியிற் பல பரிசில்களைப் பெற்ற சிங்கள டைரக்டரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ், “விஜயேந்திரன் காத்திரமான பாத்திரங்களைத் திறம்படச் செய்யவல்ல நடிகர்” என்று பாராட்டித் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மற்றும் ஜோ தேவ் ஆனந் டைரக்ஷனில் ஒரு சிங்களப் படத்திலும், செல்வரத்தினத்தின் டைரக்ஷனில் ஒரு தமிழ்ப் படத்திலும் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிட்டியுள்ளன. கலையரசு சொர்ணலிங்கத்தால் “என்ளை வியப்பிலாழ்த்திய சிறந்த நடிகர்” எனப் போற்றப்பட்ட விஜயேந்திரன் எழுத்துலகிற்பெற்ற தனித்துவத்தைச் சிங்கள, தமிழ்த்திரை யுலகிலும் பெறும் நாள் மிக சமீபத்திலேயே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *