எஸ்.மதுரகவி

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர்.

2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

தொண்ணூறுகளில் விளம்பரவியல் பற்றிய இவரது கட்டுரைகள் வளர்தொழில் வணிக இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையின் உள்வட்ட இதழான ரயில் கோச்சு சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளியாயின.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்புக்காக எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி இவர் எழுதிய “நல்லதோர் வீணை” சிறுபுத்தகம் 1997 டிசம்பர் மாதத்தில் குமுதம் வார இதழுடன் இணைப்பாக வழங்கப்பட்டது.

தமிழா தமிழா.காம், சென்னை.காம் போன்ற இணைய சஞ்சிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதிய அனுபவம்மிக்கவர்.

2010ஆம் ஆண்டு கலைமகள் இலக்கிய இதழ் நடத்திய கி.வா.ஜ. சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய காதம்பரி சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

முகிழ் என்ற சிற்றிதழை நடத்தினார். அனந்தபுரம் அரங்கன் என்ற புனை பெயரிலும் எழுதி வருகிறார். இவரது படைப்புகளில் மனித நேயம், சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவை அடிநாதமாக இருக்கின்றன.

இதுவரை இவர் எழுதி உள்ள நூல்கள்:

1. அழுதால் அரும்பு உதிரும் – சிறுகதை தொகுப்பு (1997) -மணிமேகலைப் பிரசுரம்

2. பாரதியின் பார்வைகள் – பாரதி பற்றிய ஆய்வு (1996) – ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

3. காதல் காவியம் – புதுக்களிதை நாடகம் (1985) – மணிமேகலைப்பிரசுரம்

4. தமிழின் வீச்சு – ஓலைச்சுவடி முதல் இன்டர்நெட் வரை – இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு (2001) – மணிமேகலைப் பிரசுரம்.

5. பெரியாழ்வார் பார்வையில் சுந்தரக்காண்டக் காட்சிகள் (2004)

6. சரித்திரம் போற்றும் சந்திப்புகள் (2013) – வரலாற்றுக் கட்டுரைகள்

7. அமைதிப் புறா (2013) – நாடகம்

8. காபி மேசையில் ஒரு புத்தகம் (2014) – காபி டேபுள் புக் பற்றிய மின்னூல்