எஸ்.கண்ணன்

 

Kannanஎன் பெயர் எஸ்.கண்ணன்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது ‘தாக்கம்’ சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. ‘புலன் விசாரணை’ 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது.

ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘மனிதர்களில் ஒரு மனிதன்’ பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘ஊடுபயிர்’ தேர்வாகிப் பிரசுரமானது.

வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான ‘முதன் முதலாய் ஒரு கடிதம்’, ‘திசை மாறிய எண்ணங்கள்’ மற்றும் ‘தேடல்’ ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
Leemeer Publishers & Distributors, Chennai இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நாவலையும் e-book வடிவத்தில் விற்பனைக்கு வைத்துள்ளது.

சிறுகதைகள்.காம் இணையதளத்தில் நூறு கதைகள் எழுதிய முதல் கதாசிரியர் என்பதில் இவருக்கு மிகுந்த பெருமை. இதுவரை 500இக்கும் மேற்பட்ட கதைகளை சிறுகதைகள்.காம் வெளியிட்டு உள்ளார். இதற்காக India Book of Records விருது வென்றார்.

இவரது மின்னஞ்சல் skannan15754@gmail.com
இவரது கைப்பேசி இலக்கம்: 9901 445599

மறைவு

எஸ்.கண்ணன் 2021 நவம்பர் 25இல் அகால மரணம் அடைந்தார்.

4 thoughts on “எஸ்.கண்ணன்

  1. உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி. திரு.கண்ணன் அவர்கள் சிறுகதைகள்.காம் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கு வகித்தவர். தொடர்ந்து சிறுகதைகள் தளத்திற்கு பல மாறுபட்ட கதைகளை அனுப்பி கொண்டே இருந்தார். அவருடைய இழப்பு எங்களுக்கும் மிகுந்த வருத்தத்தை தருகிறது, அவருடைய மகன் இந்த துக்க செய்தியை பகிர்ந்த போது, எங்களால் நம்ப இயலவில்லை, ஏனென்றால் அவர் இறந்த 2 நாட்கள் முன்பு தான்
    மார்க்கண்டேயன் கதை என்ற கதையை அனுப்பி இருந்தார். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

  2. சிறுகதைகள்.காம் இணையதளத்தையும் இதன் பிரமிப்பு மிக்க வாசாகர்வட்டத்தைப் பற்றியும் மணிக்கணக்கில் கண்ணன் அவர்கள் என்னுடன் உரையாடியுள்ளார்கள். பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்கள் கண்ணனின் நெருங்கிய நண்பர் என்றும் என்னிடம் தெரிவித்தார். கண்ணன் அவர்கள் தினமும் எழுத்துக்காக குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் ஒதுக்கிவந்தார். அதிகாலை நேரங்களில் எழுதுவது அவருக்குப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்த காரணத்தால் என் இளைய மகனின் திருமணத்திற்கு குடும்பத்துடன் அவசியம் கண்ணூர் வருவதாகக் கூறியிருந்த அவர் பெங்களூர் Aster Hospital இல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எனக்கு வாட்ஸ் அப்பில் 7அக்டோபர் 2021 அன்று இரவு 7.31மணியளவில் தெரிவித்தார். என்னுடைய நல விசாரிப்புக்கு அவருடையபதிலாக Thank You Chandra என்று அவர் அனுப்பிய செய்திதான் எனக்கு கடைசியாக அவர் பதிவு செய்த செய்தி என்று தோன்றுகிறது.
    கண்ணன் என்னும் இணைய எழுத்து மன்னன் பேரை சொல்லச் சொல்ல, கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.கண்ணனைப் பற்றி நினைக்க இன்னும் என் கண்கள் கலங்குவதை நான் உணர்கிறேன்

  3. உண்மையிலேயே வருந்தக்கூடிய செய்தி. ஏராளமான சிறுகதைகளை இந்த தளத்தில் எழுதியுள்ளார்.நிறைய பத்திரிக்கியகளிலும் வந்துள்ளது. வருந்துகிறேன்.

  4. It’s very shocking. He was a very good friend of mine and I always appreciated him for his style and narratives inclusive of realism. I spoke to him in October 2021 when he expressed inability to talk. I really miss him. Though a short period of association he has been so close with me. My heartfelt condolences to the family members. We have lost a very good writer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *